INDEX 12 FOR LONDON SWAMINATHAN’S ENGLISH & TAMIL ARTICLES (Post No.8544)

KISHKINDA KANDA PICTURES CONTINUE

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8544

Date uploaded in London – 20 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டன் சுவாமிநாதன் கட்டுரைகள் 2013

June 2013 TAMIL ARTICLES

ஐம்பூத்வீபம் = நாவலந் தீவு  29 ஜூன் 2013

அதிசய தமிழ் முனிவர் வால்மீகி 27/6

ராமனின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது? 22/6

குருவின் வீட்டோ அதிகாரம் 21/6

அலெக்சாண்டரும் பட்டினத்தாரும் 19/6

பட்டப்பகலில் விளக்குடன் போன தத்துவ ஞானி  17/6

எதையும் நம்பாதே  யாரையும் நம்பாதே 16/6

தொல்காப்பியத்தில் இந்திரன் 14/6

1800 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக கோவில்கள் 13/6

பாகவதம் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம் 11/6

அதிசய அனுமார் சிலை – 9/6

ஒரு தாய் ஆயிரம் தந்தைகளை  விடப் பெரியவள் 11/6

 செய்யும் தொழில் தெய்வம் : கதை மூலம் பகவத் கீதை

2000 ஆண்டுகளாக பெண்கள் செய்யும் வியாபாரம் 2/6

தமிழ்நாட்டின் கிளியோபாட்ரா

*****

JULY 2013

வள்ளுவன் சொன்ன புராண , இதிஹாஸக் கதைகள் ஜூலை 30, 2013

ஆரிய ஹிட்லரும் ஹிந்து ஸ்வஸ்திகாவும் 28/7

சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு 26/7

வள்ளுவரும் வன்முறையும்  24-7

திராவிட காகமும் ஆரிய கொக்கும் 23/7

வள்ளுவன் சொன்ன சுவையான கதைகள் 20/7

திராவிடர்கள் யார் ? 17/7

சோழர்கள் தமிழர்களா ? 15/7

அருகம்புல் ரகசியங்கள் 12/7

பஜனை செய்வது நல்லது : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு10/7

தொல்காப்பியத்தில் வருணன் 8/7

சிவனுக்கும் தமிழர்களுக்கும் மரங்கள் சுவீகார புத்திரர்கள் 6/7

ஆரியமா ? தி ராவிடமா ? நீங்களே சொல்லுங்கள் 2/7

*****

JUNE 2013 ENGLISH ARTICLES

Jambudwipa in Tamil Literature and Kalidas, 29, June 2013

Valmiki in Tamil Sangam Literature 27/6

Why do Hindus Worship Bell? 26/6

How did Rama fly his Pushpaka Vimana/ Plane? 22/6

Gurus’ Veto Power over God 21/6

Alexander and Tamil Saint Pattinathar 19/6

Philosopher who carried Lantern in day time 17/6

Megasthanes didn’t know Buddha 16/6

Indra in the oldest Tamil book 14/6

Om Boosts Brain Power: US University Research 12/6

Saraswathi Statue in Washington DC,USA 12/6

Maruti Miracle: 660 Kms per hour ( Ramayana Wonders- part 7) 11/6

Superman of India: Anjaneya 9/6

Madurai Chennai Pictures 8/6

One Mother is Greater than 1000 Fathers 7/6

Bhagavad Gita through a Story 5/6

Who is a Brahmin? 4/6

Bhagavad Gita in Tabular Columns 3/6

45 Commentaries on Bhagavad Gita 3/6

Madurai Temple Vahana Pictures 2/6

Cleopatra of Tamil Nadu 1/6

******

JULY 2013

Why do Hindus Worship Moon? 31 July 2013

Why do Hindus Worship God of Death Everyday? 29/7

Aryan Hitler and Hindu Swastika 28/7

Sex Worship in Indus Valley 267

Who was Tiruvalluvar? 24/7

Were Moses and Jesus Aryans?- Part 2 ,23/7

Who are Dravidians? 17/7

Sibi Story in Old Tamil Literature 15/7

Tons of Gold : 400,000 Bars 14/7

Power of Holy Durva Grass 12/7

Prayers Good for Heart say Scientists 10/7

Vedic God Varuna in Oldest Tamil Book 8/7

Lord Shiva and Tamils adopted Trees 6/7

Role of Dreams in Tamil Saivite Literature 4/7

Are these customs Aryan or Dravidian? 2/7

xxxxxxxxxxxxxxxxxxx

INTRODUCTION

I started blogging in tamilandvedas.wordpress.com and swamiindology.blogspot.com from June 2011, I am giving above the INDEX for  JUNE and JULY,  2013

 I did not give the date of loading or number for the article in the beginning. But all articles are available in both the blogs in the name of

 ‘London Swaminathan’.

Like you did with S Nagarajan’s articles INDEX, get the articles by googling.

Following  is the method:-

Paste the title of the article in the google (space)and add ‘from tamilandedas.com or ‘from swamiindology.blogspot.com’

 Here is an example :

Is Brahmastra a Nuclear Weapon? from tamilandvedas.com

Or

Is Brahmastra a Nuclear Weapon? From swamiindology.blogspot.com

Since I am going to give nearly 6000 titles, you may not find time to read all the articles/ posts at once.

So, please take a printout of the Index or note down the titles and dates of your favourite posts.

Thanks for all your support. We are reaching two million hits now.

If you have any difficulty in getting the articles, please let us know.

Be careful about the spelling of the title. Even a small mistake will take you somewhere and waste your precious time.

TAMIL TITLES ARE GIVEN SEPARATELY.

***

IN THE BEGINNING I UPLOADED MY ARTICLES IN

1.THE SPEAKING TREE OF TIMES OFINDIA

2.TAMIL HERITAGE FOUNDATION SITE

3.TAMIL BRAHMINS.COM etc.

So you may find the same articles on different days on different blogs

*****

To be continued…………………….

Tags- சுவாமிநாதன், கட்டுரை இன்டெக்ஸ் 12, INDEX 12, S.SWAMINATHAN,  ARTICLES

தாமிரம் பற்றிய சுவையான விஞ்ஞான, வரலாற்று விஷயங்கள் (Post No.8543)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8543

Date uploaded in London – 20 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com      ச்

தாமிரம் பற்றிய சுவையான விஞ்ஞான , வரலாற்று  விஷயங்கள்

பிரபஞ்சத்திலுள்ள 118 மூலகங்களில் ஏற்கனவே 26 மூலகங்கள் பற்றி எழுதினேன். இன்று 27 ஆவது ,, மூலகமாக தாமிரத்தை எடுத்துக் கொள்வோம் . தமிழில் இதை செம்பு (COPPER) என்று கூறுவோம். நாணயங்களிலும் மின்சாரக் கம்பிகளிலும்,,பிராமணர்கள் கோவில்களில் புழங்கும் பாத்திரங்களிலும் தாமிரம் இருப்பதால் இதை அறியாதோர் எவருமிலர். தங்கத்தில் இதைக் கலக்கக்கலக்க அதன் ‘காரட்’  குறைந்து கொண்டே வரும் .

முதலில் ஒரு சுவையான விஷயம். ஏழையானாலும் பணக்காரன் ஆனாலும் எல்லோருக்கும் ரத்தம் சிவப்பு நிறமே என்று  வசனம் பேசுவோம்.அது உண்மைதான். ஆனால் நீல வர்ண ரத்தம் உண்டு என்பது பலருக்கும் தெரியாது. கடலில் வாழும் ராட்சச பிராணி ஆக்ட்டோபஸ் (OCTOPUS) . இதற்கு எட்டுக்கால்கள் இருக்கும். இதன் ரத்தம் நீல நிறத்தில் இருப்பதைப்  பார்த்து விஞ்ஞானிகள் வியந்தனர். ஆக்சிஜன் என்னும் உயிர்வாயுவை எல்லா ‘செல்’களுக்கும் எடுத்துச் செல்ல ஹிமோக்ளோபின் (HAEMOGLOBIN) என்னும் சிவப்புப் பொருள் தேவை. இதனால்தான் மனிதர்களின் ரத்தம் சிவப்பாக இருக்கிறது. மனிதனை விட பலமடங்கு பெரிதாகவுள்ள ஆக்டொபஸுக்கும் ஆக்சிஜன் தேவைதான் . அதன் உடலில் ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் பணியை ஹீமோசயனின் (Hemocyanin) என்னும் நீல வர்ண ரசாயனப் பொருள் செய்கிறது .

இரண்டாவது சுவையான விஷயம் நாணயம் பற்றியது. அமெரிக்காவில் தங்கம் போன்று ஜொலிக்கும் ஒரு தாமிர நாணயத்தை வெளியிட்டனர். எவரும் அதை பயன்படுத்தாமல் பெட்டிக்குள் பூட்டிவைத்து பதுக்கிவிட்டனர்.

இதை 88 சதவிகித தாமிரம், 6 சதவிகித துத்தநாகம், 4 சதவிகித மாங்கனிஸ்  2 சதவிகித நிக்கலில் தயாரித்தனர் ; அட்டகாச ஜொலிப்பு!  தங்கத்துடன் போட்டா போட்டி!!1500 கோடி நாணயங்கள் அச்சடித்தனர் . ஒரு சில மட்டும் வெளியே புழங்கின ; மற்றவை எல்லாம் ஒளிந்துகொண்டன !

மூன்றாவது சுவையான விஷயம் ஏற்கனவே எழுதியதுதான். தாமிரத்துக்கு பாக்டிரியாக்களைக் கொல்லும் சக்தி அதிகம் என்பது ஆஸ்பத்திரிகளில் உள்ள பித்தளை, வெண்கல கைப்பிடிகள் முதலியவற்றை மாற்றியதில் தெரிய வந்தது (கீழேயுள்ள பழைய கட்டுரை இணைப்பில் காண்க)

****

உடலுக்கு தாமிரம் தேவை

நமது பூத உடலுக்கும் தாமிரம் தேவைதான். ஆனால் எல்லா உணவுகளிலும் அது இருப்பதால் பஞ்சமே இல்லை. நமது உடலில் பத்து வகையான ஹார்மோன்களில் இது உள்ளது . உடலுக்கு ஒரு நாளைக்கு 2 மில்லி கிராம் போதும். தாமிரச் சத்து குறைந்தால் என்ன ஆகும் என்று சில தொண்டர்களை வைத்து ஆராய்ந்தனர். அவர்களுக்கு கொலஸ்ட்ராலும் , ரத்த அழுத்தமும் அதிகரித்தது; குளுகோஸை ஜீரணிக்க முடியவில்லை.

கடல் பிராணிகள், மாமிச உணவு எல்லாவற்றிலும் இது இருக்கிறது. சூரிய காந்திச் செடியின் விதைகள், பாதாம் பருப்பு , வால்நட், மற்றும் பிரேசில்நட் வகைளிலும் இது அதிகம் இருக்கிறது.

வில்சன் நோய், மெங்கே நோய் (Genetic Disease : Wilson’s Disease, Menke’s Disease)முதலிய மரபியல்/ பரம்பரை நோய்கள் உடையோருக்கு தாமிர ஏற்பு சக்தி இல்லை அல்லது குறைவு என காணப்பட்டது. எகிப்தியர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே கண் நோய்களுக்கு தாமிர உப்புக்களை மருந்தாகப் பயன்படுத்தினர்.

****

வரலாற்றில் தாமிரம்

உலக வரலாற்றில் இது சிறப்பிடம் பெற்றுள்ளது. 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே இராக் நாட்டில் இதை பயன் படுத்தினர். இயற்கையாகவே இது உலோகமாக கிடைத்த இடங்களும் இருந்தன. மின்னசோடாவில் (USA) 420 டன் எடையுள்ள தாமிரக் கட்டி 1857ல் கண்டு எடுக்கப்பட்டது இதை உருக்குவதும், கம்பியாக நீட்டுவதும் எளிது என்பதால் நகைகள், ஆயுதங்கள், பாத்திரங்கள் செய்வதில் அதிகம் பயன்படுத்தப்பட்டது.

வெண்கலம் (Bronze) என்னும் கலப்பு உலோகத்தில் தாமிரம்தான் அதிக அளவு இருக்கும். ஆதி மனிதர்கள் கற்கால நாகரிக்கத்தில் இருந்து உலோக காலத்துக்கு முன்னேறினர்  இதை வெண்கலம்  காலம்  (Bronze  Age) என அழைப்பர்.கி .மு. 3000 முதல் கி.மு. 1000 வரையான காலம் இது; சிந்து-சரஸ்வதி, எகிப்திய, மெசப்பொட்டேமியா நாகரிக மக்கள் வெண்கலத்தைப் பயன்படுத்தினர்

கி.மு .280-ல் ரோட்ஸ் (The Colossus of Rhodes)  நகர துறைமுக வாயிலில் சூரிய தேவனின்  (Apollo)  35 மீட்டர் உயர வெண்களைச் சிலை இருந்தது. உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது ஒரு பூகம்பத்தில் கீழே விழுந்தவுடன் மக்கள் அதை வெட்டி எடுத்து பழைய பாத்திர, பழைய இரும்புக் கடைகளில் விற்றுவிட்டனர்.

சீனாவில் கி.மு 1000 முதல் மணிகள் (BELLS) செய்ய வெண்கலம் பயன்பட்டது. ஆனால் அது மேலை நாடுகளுக்கு வர 2000 ஆண்டுகள் ஆயின.

தாமிரக் கம்பிகளை வினிகர் என்னும் புளிச்சகாடியில் தொங்கவிட்டால் அதில் நீல நிற காப்பர் அசிட்டேட் படியும் . இதை நிறம் ஏற்றவும், களிம்பாகவும் மேலை நாட்டினர் பயன்படுத்தினர்

வெப்பத்தையும் மின்சாரத்தையும் விரைவில் கடத்துவதால் கெட்டில்கள், மின்சாரக் கம்பிகள் செய்யவும் பயன்பட்டன. இந்தியாவில் தாமிர சாசனங்கள் எழுதியது போல மேலை நாட்டில் இதில் வரைபடங்கள் தயாரித்தனர். வெள்ளி, தங்கத்துடன் கலந்து நாணயங்கள் உண்டாக்கினர்.

பச்சை   நிறமுள்ள மாலகைட்  (Malachite) என்னும் தாமிர தாது சலவைக்கல் போல பாலிஷ் செய்யப்பட்டு மேஜைகள், தூண்கள் ஆகியவற்றை அலங்கரிக்கின்றன. அதிகமான அளவு மின்சாரக் கருவிகள், கட்டுமானப் பணிகளுக்கும், வெண்கலம் தயாரிப்புக்கும் போய்விடும்.

தற்காலத்தில் இதை நிக்கல் உலோகத்துடன் கலந்து குப்ரோ நிக்கல் (Cupro-Nickel)  நாணயங்களை அச்சடிக்கின்றனர்.

தாமிரம் கிடைக்கும் இடங்கள்

பிரிட்டனில் கார்ன்வால், அமெரிக்கா , கனடா , ஜாம்பியா, ஜைர் , ரஷ்யா , சிலி ஆகிய  நாடுகளில் அதிகம் செம்பு கிடைக்கிறது  இந்தியாவில் பல மாநிலங்களில் தாமிர தாது இருந்தாலும் ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் அதிகம் வெட்டி எடுக்கப்படுகிறது.

இதன் பெயர் உடைய நாடு சைப்ரஸ் (Cyprus) தீவு ஆகும். அந்த நாட்டை கிரேக்கர்கள் குப்ரோஸ்(Kupros)  என்று அழைத்ததால் அதிலிருந்து குப்ரம், காப்பர் (Cuprum – copper) என்ற சொற்கள் உருவாயின .

தென் அமெரிக்காவின் சிலி (Chile)  நாட்டில் பாக்ட்டீரியாக்களை பயன்படுத்தி இந்த உலோகத்தை எடுக்கின்றனர். தாமிர தாதுவை அரைத்து தூள் போல, பெரிய தொட்டிகளில் வைத்து வெப்பப்படுத்துவர். இரண்டு வகை பாக்டிரியாக்கள் அதை ஜீரணம் செய்து உலோகத்தைப் பிரித்துக்கொடுக்கும்.

அலுமினியத்தையும் தாமிரத்தையும் கலந்தால் தங்கம் போல பளபளப்பதால் அலங்காரப் பொருட்களில்  அது இடம் பெறும் .தாமிரத்தையும் நிக்கலையும் கலந்தால் கடல் உப்பு நீர் அரிக்காது ஆகையால் கடலில் செல்லும் குழாய்களுக்கு உபயோகமாகிறது.

உங்களுடைய வீட்டை ஒரு சுற்றுச் சுற்றிப் பார்த்தால்  இந்த உலோகமோ அல்லது இது கலந்த கலப்பு உலோகமோ,   பையில் ஒலிக்கும் காசுகளிலோ, பெண்களின் தங்க நகைகளிலோ இது ஒளிந்து கொண்டு இருப்பதை உணருவீர்கள் .மின்சாரக் கருவிகளைத் தவிர பூச்சி கொல்லி மருந்துகளிலும் இது இருக்கிறது

ரசாயன வகையில் இது ஒரு (Metal) உலோகம் . இதை எளிதில் கம்பியாக இழுக்கலாம்; தகடாகத் தட்டலாம். நாம் இழுத்த இழுப்புக்கு வரும் நமது நண்பன் இது.

ரசாயன குறியீடு – Cu

அணு எண்  29

கொதி நிலை- 1084 டிகிரி C

ஊருக்கு நிலை – 2567

இரண்டு ஐசடோப்புகள் இருக்கின்றன

தாவரங்களுக்கும் இது அவசியம் ;நோய்களைத் தடுக்கவும், விதை உற்பத்திக்கும் தேவைப்படுகிறது .

செப்பு என்னும் தமிழ்ச் சொல் சைப்ரஸ், குப்ரோஸ் என்பதிலிருந்து வந்ததா செம்மை நிறம் காரணமாக வந்ததா தாம்ர பரணி நதி , தம்பப்பண்ணி /இலங்கை)  நாடுகளின் பெயர்கள் தாமிரத்திலிருந்து வந்தனவா என்பன ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.



Hindu Wisdom: Copper kills bacteria! | Tamil and Vedas

tamilandvedas.com › 2012/05/27 › h…

  1.  
  2.  

27 May 2012 – Hindu saints have been using copper vessels for thousands of years. They keep water in it for drinking purposes. When Aluminium vessels …

tags -தாமிரம், வெண்கலம், செம்பு ,செப்பு 

தலை பற்றிய 6 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8542)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8542

Date uploaded in London – 20 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பல பழமொழிகளில் தலை என்ற சொல் மீண்டும் மீண்டும் வரக்கூடும்; ஒருமுறை வந்த சொல் மீண்டும் கட்டத்தில் இராது ; கொண்டு  கூட்டிப்  பொருள் கொள்க.

1.தருமம் தலை காக்கும் ‘

2.தலைக்குத் தலை நாட்டாண்மையாய் இருக்கிறது

3.தலை இருக்க வால் ஆடுமா ?

4.தலை எழுத்திற்கு தலையைச் சிரைத்தாற்  போகுமா?

5.தலை அளவும் வேண்டாம் , அடி அளவும் வேண்டாம் , குறுக்கே அள அடா படியை

6.தலை  இடியும் காய்ச்சலும் தனக்கு  வந்தால்  தெரியும்

Tags – தலை, வால்

—subham–

பஞ்சாங்க ரகசியங்கள் – 4, விஷூ புண்ய காலம் (Post No.8541)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8541

Date uploaded in London – 20 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பஞ்சாங்க ரகசியங்கள் – 4

kattukutty


ஷடசீதி

ஷடசீதி, விஷ்ணு பதி , விஷு- என்றால் என்ன ??


நாம் பார்க்கும் பஞ்சாங்கத்தில், உதாரணமாக ஆனி மாதத்தை
எடுத்துக் கொள்வோமே….ஆனி 1 ம் தேதி ஷட சீதி எனப் போட்டிருக்கும் 

(பார்க்க சார்வரி வருட பாம்பு பஞ்சாங்கம் ஆனி மாதம் (15-07-2020) ஒன்றாம் தேதி)

அப்படி என்றால் என்ன ???
சிவனுக்கு “ஷடாங்கன்”என்று பெயர். ஒவ்வொரு ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதம் முதல் தேதியில் சிவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்.
பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதம் முதல் தேதிகளிலும் ஷட சீதி புண்ய காலம் என்று போட்டிருக்கும்.

அதாவது அன்று சிவனையும் பாரவதியையும் வணங்கினால் சகல புண்ணியமும் கிடைக்கும்


விக்ஷ்ணு பதி


ஒவ்வொரு வருஷம் வரும் வைகாசி, கார்த்திகை, மாசி மாத முதல் தேதியில் விஷ்ணு பதி புண்ய காலம் என்று போட்டிருக்கும்.
அன்று விஷ்ணுவையும் லக்ஷ்மியையும் சேர்த்து வணங்கி வேண்டினால், மிக மிக புண்ணியமாம். ஏகாதசி விரதம் இருந்த புண்ணியமாம். கோ பூஜை செய்த விசேஷம்


விஷூ புண்ய காலம்


ஓவ்வொரு ஆண்டும் சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாதம் முதல் தேதி விஷு புண்ணிய காலம் என போட்டிருக்கும்.

மிக விசேஷமாக கொண்டாடுவது சித்திரை அதி காலை மூடிய கண்ணுடன் வந்து “கண்ணாடி மூலமாக” தெய்வத்தையும், பணம், வெள்ளரி பழம், ஆரஞ்சு, வாழை, பறங்கிக்காய் மற்றும் தேங்காய் காய்கறிகள் எல்லாவற்றையும் பார்ப்பார்கள். பார்த்து பெரியோர்களை வணங்கி பணம் பெறுவது வழக்கம்.
இதற்கு “விஷூக்கனி நோட்டம்”என்பார்கள். மற்ற ஆடி ஐப்பசி, மாதம் தெய்வதரிசனம் செய்வார்கள்.



தை மாதம் முதல்நாள் ஐயப்பனை சபரிமலை சென்று தரிசிப்பார்கள்;


இந்த மூன்று புண்ணிய காலங்களும் ஒவ்வொரு மாதமும் காலை 1.30 முதல் 10 மணி வரை மட்டுமே.



ரஜஸ் வலை நாள்

பெண்களுக்குப் போல நதிகளுக்கும் “வருடத்திற்கு மூன்று” நாட்கள் விலக்கு உண்டாம்.

அது ஒவ்வொரு வருடமும் ஆடி முதல் மூன்று நாட்களாம். அந்த மூன்று நாட்களில் யாரும் நதிகளில் குளிப்பதில்லை ,

பூஜை, திதி செய்வதற்கும் நீர் எடுப்பதில்லை.
எல்லா நதிகளுக்கும் இந்த தீட்டு உண்டு,

ஆனால் பிரும்மபுத்ரா நதிக்கும் கங்கைக்கும் மட்டும் தீட்டு கிடையாது.
உதாரணம்- பாம்பு பஞ்சாங்கம் சார்வரி வருடம் ஆடி மாதம்
வியாழக்கிழமை 1 ம்தேதி, (16-07-2020)பார்க்கவும்,
ரஜஸ் வலை நாள் என்று போட்டிருக்கும்


கர்ண வேதை


சனி, செவ்வாய் கிரகங்கள் நின்ற நட்சத்திரங்களுக்கு 2, 15, 16, உள்ள நட்சத்திரங்கள் கர்ண வேதை எனப்படும்.
இந்த நாட்களில் காது குத்தக் கூடாது. அந்தக் காலத்தில் காது குத்தும் பழக்கம் இருந்தது.

சிறந்த முறையில் கல்வி பயில காது குத்துதல் மிக மிக அவசியம். உதாரணம் தற்சமயம் வரும் 10 ம், 12ம், வகுப்புப் பெண்களே முதலிடம் வருகிறார்கள்.
இப்போதாவது புரிகிறதா இரகசியம், நீங்கள் சொல்லலாம் அவர்கள்
அழகுக்காக தோடு போட்டுக் கொள்வதாக.

கேரளாவில் தான் இந்தியாவிலேயே அதிகம் படித்தவர்கள். அங்கே ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, பிறந்த 28 ம் நாள் காதை குத்தி விடுவார்கள்


அமிர்த கடிகை (உத்திர காலாம்ருதம்)

ஒவ்வொரு நாளும் ஒரு நட்சத்திரம் வருகிறது. வியாதி வந்தவர்கள் மருந்து சாப்பிடவென்றே சில நேரம் உண்டு. அந்த நேரம் பார்த்து மருந்து உண்டு பூரண குணமடைந்து நீண்ட நாள் வாழ்ந்தார்கள்
அந்த நல்ல நேரம் தான் இது. எல்லாம் நாழிகையில் இருக்கும்.
இதை சூரியோதயத்திலிருந்து கணக்கிட வேண்டும்.
(ஒரு நாழிகை எனபது 24 நிமிடம் )

இஷ்டி(குமார சாமியம்)


இஷ்டி என்றால் யாகம் எனப் பொருள்.
இது அமாவாசை அல்லது பவர்ணமி கழிந்த இறுதிப் பகுதி
அதாவது 4 வது பாகம் ஆகும். இது பிரதமை முதல் மூன்று பாகத்தைச் சேர்த்து ஹோமம் செய்யச் சிறந்த நேரம். சிறந்த பலனும் கிடைக்கும்!

****

                                            ரகசியங்கள் மேலும் தொடரும்

tags –பஞ்சாங்க ரகசியங்கள் – 4, விஷூ

BOOKS INDIANS SHOULD READ- 21 (Post No.8540)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8540

Date uploaded in London – – – 20 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

                               BOOKS INDIANS SHOULD READ- 21

                                            Chapter 8 Part 2

                THE COLLECTED WRITINGS OF DHARAMPAL-3
 

Figures Speak

We may now see some statistics.
1. No of Schools in the various areas. Madras Presidency,1823

Area                                       Schools         Students
Ganjam (Oriya)                       255                 2977

Telugu speaking
Vizagapatnam                          914                 9715
Rajhamundry                           291                 2658
Masulipatam                           484                  5083
Guntoor                                   574                  7724
Nellore                                     697                  7621
Cuddapah                                494                   6000

Kannada speaking
Bellary                                     510                   6641
Seringapatam                             41                    627
Malayalam Speaking
Malabar                                   759                 14,153

Tamil Speaking
North Arcot                              630                     7326
South Arcot                               875                 10,523
Chingleput                                508                   6845
Tanjore                                      884                 17.582
Trichinopoly                              790                  10.331
Madura                                      884                  13,781
Tinnevelly                                   607                   9377
Coimbatore                                763                    8206
Salem                                          333                   4326
Madras                                        322                   5699  

Caste representation among male students (%)
In Tamil Speaking areas.


District                Brahmins  Vysee     Sudra        Others
North Arcot             9.60        8.66       66.76           7.40
South Arcot             9.57        3.55       76.19            8.72
Chingleput             12.75       6.30        71.47           6.72
Tanjore                   16.16       1.27        61.17           13.32
Trichinopoly           11.76       2.25        76.00            3.23
Madura                     8.67       8.18        52.99          21.77
Tinnevelly               21.78                       31.21          38.42
Coimbatore             11.30       3.56         78.52            2.78
Salem                      10.75       7.59         39.15          32.38
Madras
Ordinary Schools     7.01       15.44       68.62            6.13
Charity Schools       12.56      11.11        41.55          32.37

IT is evident from the above that Brahmins did not dominate or monopolise

The education scene. The main beneficiaries were the Sudras.


 The reports and the statements attached to them drawn up by the collectors under 

instruction from the Governor are comprehensive, and also reveal qualitative aspects.

They cover the qualification of the teachers, how and how much they were paid, how the

poor students managed, the subjects covered , the number and types of books taught, etc. 
It has to be remembered that at that time people mostly followed their traditional

occupations, which they freely  learnt at home  (much as the apprentices did in England).

They did not have to pay for learning the trade or craft which was the means of livelihood.

Thus the nature of even indigenous schooling was academic, and did not affect their

professions. Only the Brahmins went on to study their religious literature because

they earned their bread thereby.



Why did this system disappear?

The British altered the general economic and financial arrangements drastically. The

village communities lost their financial independence due to centralisation. They lost

their cohesiveness and organic nature. They were unable to maintain the schools.

The economy and along with it the old professions declined, and could no more provide

sustenance. The Indian schools were left to die.


At the same time, the schools introduced by the British were unaffordable for most.

Gandhiji pointed this out in his 1931 address.

” The village schools were not good enough for the British administrator, so he came out

with his programme. Every school must have so much paraphernalia, building, and so forth.

Well, there were no such schools at all. There are statistics left by a British administrator,

which show that, in places where they have carried out a survey, ancient schools have

gone by the board, because there was no recognition….and the schools established after

the European pattern were too expensive for the people.

Too expensive for the people!  That is why large sections of people (including Brahmins)

could not afford formal education in the schools run by the government. To this day, the

schools we have established after the European pattern remain expensive!

There are many qualitative aspects of the indigenous schools and interesting information

that the reports bring out. We may see them separately. In the meantime every educated

Indian ought to study these reports to know the truth first hand, and become free from the

falsehoods that have been dished out to us in our system, by the politicians, and through

the media. 


Many Brahmins themselves have developed a  defensive complex- a guilty conscience-

as if their forefathers had done something wrong by denying education to the other

communities. Dharampal’s book contains all the original reports which are full of actual

statistics. And they show that Brahmins did not control or dominate or monopolise

education, and that Sudras derived the maximum benefit  under the indigenous

system. Brahmins mainly concentrated on religious education. General education was open

to all, and was supported by common village funds and charity, as we will see. 

Indians in general were neither uneducated nor illiterate as the politicians and false

historians have been claiming. Indians should study this material in the original and

really understand things as they were. Only then can we call the bluff of the propagandist

elements.                                                               ***                      Chapter 8 concluded

விசுவகன்மியருக்கான ஒரு சாசனம்! (Post No.8539)

KARUR TEMPLE PICTURE FROM WIKIPEDIA

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8539

Date uploaded in London – – –20 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

கொங்கு மண்டல சதகம் பாடல் 90

விசுவகன்மியருக்கான ஒரு சாசனம்!

ச.நாகராஜன்

முற்காலத்தில் கம்மியர்கள் குடியிருக்கும் வீட்டுக்கு காரை போட்டுக் கொள்ளக் கூடாது, நன்மை தீமை காலங்களில் இரட்டைச் சங்கு ஊதக் கூடாது, வெளியில் போகும் போது காலுக்குச் செருப்பு போட்டுக் கொள்ள கூடாது என்ற கடுமையான விதிகள் இருந்தன.

ஆனால் இந்த அநியாயத்தைப் பொறுக்காத கோனேர் மெய்கொண்டான் என்ற சோழன் இவற்றை நீக்கினான்.

நீக்கியதோடு மட்டுமல்லாமல் சாசனமாகப் பொறித்தான்.

கரூர் பசுபதி ஈஸ்வரர் கோவிலில் இந்த சாசனம் இருக்கிறது.

ஸ்வஸ்தி  ஸ்ரீ  திரிபுவன சக்ரவர்த்திகள்  ஸ்ரீ கோனேரின் மெய்கொண்டான் வெங்கால நாட்டுக் கண்மாளற்கு கரு-வது ஆடி மாதம் முதல் தங்களுக்கு நன்மை தீமைகளுக்கு இரட்டைச் சங்கும் ஊதி பேரிகை உள்ளிட்டவை கொட்டுவித்துக் கொள்ளவும் தங்கள் வீடுகளுக்குச் சாந்து இட்டுக் கொள்ளவும் சொன்னோம். இப்படி இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு சந்திராதித்தவரை செல்வதாகத் தங்களுக்கு வேண்டின இடங்களிலே கல்லிலுஞ் செம்பிலும் வெட்டிக் கொள்க. இவை விழுப்பாதராயன் எழுத்து.

இது தான் சாஸனம்.

S.I.I. V. III. P.I.P. 47 கோயமுத்தூருக்கு அடுத்த பேரூரிலும் இந்த சாஸனம் இருக்கிறது.

இந்தச் சமபவத்தைப் பெருமையாக கொங்கு மண்டல சதகம் தனது 90வது பாடலில் கூறுகிறது.

பாடல் இதோ:

இருப்புற்ற வீட்டுக்குச் சாந்திட்டுக் கொள்ள விரண்டுசங்கு

விருப் புற்ற வாழ்விலுஞ் சாவிலுமூத வெளிநடைகாற்

செருப்பிட்டுச் செல்லப் பெறுவீர்க ளென்னவச் செம்பியனால்

வரைப் பத்தி ரம் பெற்ற கம்மாளருங் கொங்கு மண்டலமே

பொருள் : குடியிருக்கும் வீட்டுக்குக் காரை போட்டுக் கொள்ளவும், நன்மை மற்றும் தீமை காலங்களில் இரட்டைச் சங்கு ஊதவும், வெளியில் போகும் போது காலுக்குச் செருப்பு அணிந்து செல்லவும் இராஜ கட்டளை பெற்ற கம்மாளர் வாழ்வதும் கொங்கு மண்டலமே.


TAGS — கம்மியர், சாசனம், கரூர் பசுபதி ஈஸ்வரர் கோவில்

***

INDEX 11 FOR LONDON SWAMINATHAN’S ENGLISH & TAMIL ARTICLES (Post No.8538)

PICTURE RAMAYANA – KISHKINDA KANDA PICTURES

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8538

Date uploaded in London – 19 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டன் சுவாமிநாதன் கட்டுரைகள் 2013

 ஏப்ரல் 2013

மழை வர பிரார்த்தனை 30 ஏப்ரல் 2013

கற்பூரம் ஏற்றுவதை ஏன்? 28/4

பாண்டிய மன்னனின் அளவற்ற பக்தி 26/4

இன்பம் எங்கே, இன்பம் எங்கே என்று தேடு 23/4

ஸ்வர்கத்துக்கு நேரடி விமான சர்விஸ் 20/4

காஞ்சீபுரம் கோவில்கள் 14/4

தூதர்கள் படுகொலை 14/4

*****

மே 2013

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது மே 31, 2013

21 லிட்டர் கொழுக்கட்டை எதற்காக? 30-5

சோம பானமும் சுரா பானமும் 10/5

இரண்டு சாமியார்கள் இடையே அடிதடி 10/5

காளை வாகனம் எப்படி கிடைத்தது ? 6/5

முத்துசுவாமி தீ ட்சிதர் செய்த அற்புதங்கள் 3/5

****

APRIL  2013

Shiva’s Help in Wrestling and Fencing 30 April 23

Lord Shiva’s Favourite Number 8, 28/4

The King who saw God in Everything 26/4

The Sandals 24/4

G for Ganga……Gayatri………Gita…….Govinda 23/4

Free Charter Flight to Heaven 20/4

Miracle of Entering into Another Body 17/4

Ancient Indian Ambassadors 13/4

Can Humans Communicate with Animals? 10/4

Birds for Finding Direction: Sumerian to Tamil Nadu via Indus Valley 8/4

*****

MAY 2013

Tirupparangkundram Temple Pictures 31 May 2013

Madurai Temple Photos 31/5

God is Nowhere 29/5

Why do Holy Men Suffer? 28/5

King and Eight Ministries in Vedic Period 27/5

Temple Visit Good for Health 15/5

Ramanuja and Non Brahmins 13/5

Acoustic Marvel of Madurai Temple 12/5

Musical Pillars in Hindu Temples 12/5

Two Fighting Sadhus 9/5

2 stories to introduce Swami Vivekananda 8/5

Confusion about Vedic Soma Plant 5/5

Hindu Gods and Animals 5/5

xxxxxxxxxxxxxxxxxxx

INTRODUCTION

I started blogging in tamilandvedas.wordpress.com and swamiindology.blogspot.com from June 2011, I am giving above the INDEX for  APRIL and MAY,  2013

 I did not give the date of loading or number for the article in the beginning. But all articles are available in both the blogs in the name of

 ‘London Swaminathan’.

Like you did with S Nagarajan’s articles INDEX, get the articles by googling.

Following  is the method:-

Paste the title of the article in the google (space)and add ‘from tamilandedas.com or ‘from swamiindology.blogspot.com’

 Here is an example :

Is Brahmastra a Nuclear Weapon? from tamilandvedas.com

Or

Is Brahmastra a Nuclear Weapon? From swamiindology.blogspot.com

Since I am going to give nearly 6000 titles, you may not find time to read all the articles/ posts at once.

So, please take a printout of the Index or note down the titles and dates of your favourite posts.

Thanks for all your support. We are reaching two million hits now.

If you have any difficulty in getting the articles, please let us know.

Be careful about the spelling of the title. Even a small mistake will take you somewhere and waste your precious time.

TAMIL TITLES ARE GIVEN SEPARATELY.

***

IN THE BEGINNING I UPLOADED MY ARTICLES IN

1.THE SPEAKING TREE OF TIMES OFINDIA

2.TAMIL HERITAGE FOUNDATION SITE

3.TAMIL BRAHMINS.COM etc.

So you may find the same articles on different days on different blogs

*****

To be continued…………………….

Tags- சுவாமிநாதன், கட்டுரை இன்டெக்ஸ் 11, INDEX 11, S.SWAMINATHAN,  ARTICLES

காசிக்குப் போயும் கருமம் தொலையவில்லை (Post No. 8537)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8537

Date uploaded in London – 19 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பெரும்பாலான தமிழ் மக்கள் இரண்டு பழமொழிகளை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துவர்; என்ன செய்தாலும் கஷ்டம் நீங்கவில்லை என்பதைக் குறிக்க ,

‘காசிக்குப் போயும் கருமம் தொலையவில்லை’ ;

 ‘ராமேஸ்வரம்  போயும்  சனீஸ்வரன் விடவில்லை’ –

என்று முனகுவர். இவை  ஆழமான பொருள் உடைய பழமொழிகள்.

முதலில் ஒரு திருத்தம் ; சனீ’ஸ்வரன்’ என்று அவருக்கு ஈ’ஸ்வரன்’ பட்டம் கிடையாது ; சனை: +சரன் = மெதுவாக செல்பவன் என்று சம்ஸ்கிருதத்தில் சொல்லுவார்கள். சூரியனை பூமி சுற்றுவதற்கு 365 + கால் நாட்கள் ஆகும். ஆனால் சனிக் கிரகம் சூரியனைச் சுற்றி வருவதற்கு 30 ஆண்டுகள் ஆகும்.  ஜோதிட சாஸ்திரம் கணக்கில் எடுத்துக் கொள்ளும் கிரகங்களில் மிகவும் ‘மந்த கதி’ உடையது சனிக் கிரகம் . ஆதி காலத்திலேயே இந்துக்களுக்கு வானியல் (astronomy) அத்துபடி ; ஆகையால் இப்படிப் பெயரிட்டனர்.

விதிகளில் மூன்று வகையான விதிகள் உண்டு. அவற்றில் ஒன்றை எல்லோரும் அனுபவித்தே தீர வேண்டும்; அதை ‘பிராரப்த கர்மா’ என்பர். ஆனால் கடவுளைக் கும்பிடுவோருக்கு அதை அனுபவித்தாலும் அதன் கஷ்ட நஷ்டம் பெரிதாகத் தோன்றாது. பெரிய சன்யாசிகளுக்கு பெரிய நோய்கள் வந்ததை நாம் அறிவோம். வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு அவர்கள் கஷ்டப்படுவது போலத் தோன்றும்; அவர்களோ பிரம்மானந்தத்தில் திளைத்துக் கொண்டு இருப்பர்.

Long Q in Kasi/ Benares /varanasi

இப்போது பழமொழிகளுக்கு விளக்கம் காண்போம் –

கங்கை நதி புனிதமானதுதான்; அப்படியானால் அதில் வாழும் மீன்கள் எல்லாம் புனிதம் செய்தவையா ? அவை எல்லாம் சுவர்க்கத்துக்குப் போய் விடுமா? இல்லை என்கிறார் ராமகிருஷ்ண  பரம ஹம்சர்.

சிலர் என்னதான் செய்தாலும் அவர்களின் கர்ம வினைகள் விடுவதில்லை. யார் அந்த சிலர் ?

ஐந்து வகையான பாவங்களைச் செய்தவர்கள் தீர்த்த யாத்திரை செய்தும் பயனில்லை. எத்தனை புனிதக் கடல்களில், ஆறுகளில் குளித்தாலும் அவர்கள் பாவம் தொலைவதில்லையாம்.

****

“Here’s the smell of blood still.  All perfumes of Arabia will not sweeten this little hand.” 

  • Lady Macbeth in Shakespeare’s Macbeth
  •  

சேக்ஸ்பியர் எழுதிய புகழ்பெற்ற ‘மாக்பெத்’ (Macbeth) நாடகத்தில் ஒரு மேற்கோள் வருகிறது ; திருமதி மாக்பெத் , டங்கன் (Duncan) என்னும் மன்னனையும் பலரையும் கொன்ற பின்னர் அவள்  கையில் ரத்தக் கரை படிந்துள்ளது ; அவள்  உறக்கமின்றி  கையில் ஒரு மெழுகுவர்த்தியுடன் அலையும் பொது சொல்லும் வாசகம் –

“இன்னும் என் கைகளில் ரத்த நாற்றம் வீசுகிறது. அரேபியா நாட்டிலிருந்து வரும் அத்தனை வாசனைத் திரவத்தை ஊற்றினாலும் இது நல்ல மணமாக மாறாது” – என்று சொல்லி வருத்தப்படுகிறாள்.

இது போல கீழ்கண்ட ஐந்து வகையான பாவங்களைச் செய்தோர் கங்கை, காவிரியில் மூழ்கும்போது வருத்தப்பட்டு பாவ மன்னிப்பு கேட்டாலும், போகாதாம். யார் அந்த ஐவர்?

“1.வாழ்நாளில் பாவங்களை மட்டுமே செய்தவர்கள், 2.கடவுள் நம்பிக்கையற்றோர் , 3.சந்தேகப் பேர்வழிகள், 4.கடவுளை எதிர்த்துப் பேசும் நாஸ்தீக வாதிகள் , 5.எதையும் தவறான கண்ணோட்டத்தில் காண்போர்-  ஆகிய இந்த ஐந்து வகையினரும் எந்தத் தீர்த்தத்தில் போய் நீராடினாலும் பலனில்லை!” — வாயு புராணம் 77-127

இது வாயு புராணம் சொல்லும் விஷயம் .

புரியவில்லையா?

சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

முழுக்க முழுக்க பாவங்களை மட்டும் செய்துவிட்டு, கங்கையில் போய் குளித்தால் பாவம் போய்விடும் என்று நினைப்பது மூடத்தனம் ; பாடங்களையே படிக்காமல் பரீட்சை எழுதப் போகும் நாளன்று பிள்ளையார் கோவிலைச் சுற்றப் போனால், அவனுடைய நண்பர்களே, ‘சாகப்போகும் நேரத்தில் மட்டும் சங்கர சங்கரா என்று சொல்கிறாயே’ என்று கிண்டல் செய்வார்கள்.

அது சரி, மேலேயுள்ள ஐந்தில் நம்பிக்கையற்றோர், நாஸ்தீக வாதிகள் என்று இரண்டு வகை உள்ளதே ; இரண்டும் வேறு வேறா ? ஆமாம் வேறுதான்; கடவுள் இல்லை என்று பிரசாரம் செய்பவன் (Atheist) நாஸ்தீகன் ; அதிலும்கூட புத்தரைப் போல கடவுள் பற்றி ஒன்றுமே சொல்லாமல் ‘கமுக்க’மாக இருக்கும் பேர்வழிகளை ஆக்நேய வாதிகள் (Agnostic) என்பர். தன் மீதே எந்த நம்பிக்கையும் இல்லாதவர்கள் மற்றொரு வகை. ‘நான் உருப்படவே மாட்டேன்’ என்று நினைப்போர். அர்ஜுனன் இப்படி நினைத்தபோது, ‘சம்சய  ஆத்மா விநஸ்யதி’ – என்று பகவான் கிருஷ்ணர் கீதையில் எச்சரிக்கிறார். அதாவது ‘சந்தேகப் பேர்வழிகள் அழிந்தே போவார்கள்’.

கடைசி வகைக்கு வருவோம். எதையும் தவறாககே காண்போர். இது துரியோதனன் வகை. தர்மனையும் துர்யோதனனையும்  அனுப்பி, தம்பிகளா! ஊரை ஒரு சுற்று சுற்றிப் பார்த்துவிட்டு நல்லவர், கெட்டவர் லிஸ்ட் (List) டைக் கொடுங்கள் என்று கிருஷ்ணர் கேட்டார். “இந்த ஊரில் ஒரு பயல் கூட நல்லவன் இல்லை. I am sorry; no list is available ‘ஐ ஆம் ஸாரி ; நோ லிஸ்ட் ஐஸ் அவைலபிள்’  என்று சொல்லிவிட்டான் துரியோதனன்” (ஒரு ஆளும் நல்லவன் இல்லை. எல்லோரும் கெட்டவர் ; ஆகையால் பட்டியலுக்கு அவசியமில்லை ).

தர்மன் என்னும் யுதிஷ்டிரன் சொன்னான்; “கண்ணா, நான் எப்படி லிஸ்ட் (How can I give you a List?) கொடுக்க முடியும்? எல்லோரும் நல்லவர்கள். எதற்கப்பா List  லிஸ்ட்? யாரிடம் நல்ல குணம் இல்லை? உபநிஷத்துகள் சொல்லுவது போல ‘எல்லோரும் அம்ருதஸ்ய புத்ராஹா’  (அமிர்தம் உண்ட தெய்வீக மனிதர்கள்) என்று சொல்லிவிட்டான். நம் நண்பர்களினிடையேயும் அரசியலிலும் பார்க்கிறோம். எதைச் சொன்னாலும் ‘அதை எதிர்ப்பதே எம் தொழில்’ என்போர். இது போல தெய்வீக காரியங்களிலும் துசுக்கு சொல்லுவோர் உண்டு. அதை ஐந்தாவது வகை எனலாம்..

தீர்த்த யாத்திரை செய்யாமலேயே பலன் பெறும் ஒரு வகை பற்றியும் ஒரு செய்தி உள்ளது. காசி காண்டம் என்னும் சங்கிரசம்ஹிதை பகுதியில் ஒரு செய்யுள் சொல்கிறது —

நிக்ருஹீதேந்திரியக்ராமோ  யத்ரைவ  வஸதே  நரஹ

தஸ்ய தத்ர குருக்ஷேத்ரம் நைமிஷம் புஷ்கரம்  ததா

இதன் பொருள்–

“ஐம்புலன்களையும் அடக்கியவனுக்கு அவன் வீடுதான்  குருக்ஷேத்ரம், நைமிசாரண்யம் , புஷ்கரம் போன்ற புனித தீர்த்தங்கள் ஆகும்”.

சம்ஸ்கிருதத்தில் இன்னொரு வாசகமும் உண்டு:–

“ஸ ஸ்நாதோ யோ தமஸ்நாதஹ  ஸ்ரத்தா சுத்த மனோமலஹ” –  என்று.

இதன் பொருள் —

“யார் நன்றாகக் குளித்தவன் என்றால், புலனடக்கம் என்னும் தீர்த்தத்தில் குளித்து, மன அழுக்கை , நம்பிக்கையால் கழுவுபவனே நன்றாகக் குளித்தவன் ஆவான்”.

அதாவது புலன் அடக்கம் நதி; கடவுள் நம்பிக்கை நல்ல ‘சோப்பு’ (Soap).

மன அழுக்கு நம் உடலில் இருக்கும் அழுக்கு . அதைத் தேய்த்துக் கழுவுக ..

*******

பாரதியார் இன்னும் அழகாகச் சொல்லி விட்டார் –

“துணி வெளுக்க மண்ணுண்டு – எங்கள் முத்து

மாரியம்மா , எங்கள் முத்து மாரி .

தோல் வெளுக்கச்  சாம்பருண்டு -எங்கள் முத்து

மாரியம்மா , எங்கள் முத்து மாரி

மணி வெளுக்கச் சாணையுண்டு -எங்கள் முத்து

மாரியம்மா , எங்கள் முத்து மாரி

மனம் வெளுக்க வழியில்லை -எங்கள் முத்து

மாரியம்மா , எங்கள் முத்து மாரி “

என்று பாடிவிட்டு இதனால்தான் உன்னை அடைக்கலம் புகுந்தோம் என்று பாடி முடிக்கிறார் பாரதியார்.

******

அப்பரும் ‘கங்கை ஆடிலென்’…. என்ற தேவார பதிகத்தில் சொல்வார்–

கங்கை யாடிலென் காவிரி யாடிலென்

கொங்கு தண்குமரித்துறை யாடிலென்

ஓங்கு மாகடல் ஓத நீராடிலென்

எங்கும் ஈசனெனா தவர்க்கில்லையே

–ஐந்தாம் திருமு றை

அதாவது சிவனை மனதில் ஆழமாகப் பதித்து பக்தி செலுத்தாமல்,

மேம்போக்காகப் பலன் கிடைத்தால் கிடைக்கட்டும் என்று அரைகுறை மனதுடன் செல்வோருக்கு தீர்த்த யாத்திரை  பலன் தராது.

*******

பட்டினத்தாரும் வியந்து பாடுகிறார்

ஆரூரர் இங்கிருக்க

அவ்வூர்த் திருநாளென்

றூர்கள்தோறும்

உழலுவீர்; — நேரே

உளக்குறிப்பை நாடாத

ஊமர்காள்! நீவீர்

விளக்கிருக்கத் தீத்தேடுவீர்!.

Tags – கங்கை யாடிலென், காசிக்குப் போயும், ராமேஸ்வரம், சனீஸ்வரன், தீர்த்த யாத்திரை 

Xxx  SUBHAM XXX

ஆறு (நதி) பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8536)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8536

Date uploaded in London – 19 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.ஆறு நிறைய நீர் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்

2.ஆறு நீந்தின எனக்குக் குளம் நீந்துவது அரிதோ?

3.ஆறு போவதே கிழக்கு, அரசன் சொல்வதே தீர்ப்பு

4.ஆறு கெட நாணல் இடு , ஊரு கெட நூலை  இடு , காடு கெட ஆடு விடு , மூன்றும் கெட முதலையை விடு

5.ஆறு காதம் என்கிறபோதே கோவணத்தை அவிழ்த்து குடுமியில் கட்டிக்கொண்டானாம் .

tags – ஆறு ,நதி ,பழமொழி,

பஞ்சாங்க ரகசியங்கள் – 3 (Post No.8535)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8535

Date uploaded in London – 19 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

என்னை நீ கிழித்தாய் இன்றைக்கு!


நீ என்ன கிழித்தாய் நேற்றைக்கு?

kattukutty

என்னை நீ கிழித்தாய் இன்றைக்கு!


நீ என்ன கிழித்தாய் நேற்றைக்கு?

தினசரி நாட்காட்டியில் நாம் தேதியையும் நல்ல நேரம் கெட்ட
நேரம் மட்டும் படித்துவிட்டு இன்று நல்ல நாளா, கரிநாளா,

நான் சட்டை துணி மணி வாங்கலாமா???கடைக்குப் போகலாமா??.?.
என்று மட்டுமே பார்த்து கொள்கிறோம்.

இதற்குமேல் இன்று அஷ்டமி, நவமி ,பிரதமை, இல்லாமல் இருக்கறதா என்றும் சிலர் பார்த்துக் கொள்கிறார்கள்.

ஆனால் தியாஜ் என்று போட்டிருக்கிறதே, அஹஸ் என்று போட்டிருக்கிறதே திரு தினஸ் ப்ருக், அவமா ஏன்

போட்டிருக்கிறதே என்று கவலைப்படுவதில்லை.

(இதையெல்லாம் எனது “பஞ்சாங்க ரகசியங்கள்” (Parts 1, 2, 3, 4, 5 )என்ற கட்டுரையில் பார்த்துக் கொள்ளவும்)


மேலும் நான் செய்யப்போகும் வேலைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை…..
அமிர்த யோகம், சித்த யோகம் என்றெல்லாம் பார்த்து விட்டுத்தான்
பால் கார்டு வாங்கவே போகிறோம் அல்லது வேலை செய்கிறோம்.

மரண யோகம், கரி நாள் என்றவுடன் பயந்து  நடுநடுங்கி தினசரி செய்ய வேண்டிய

வேலையெல்லாம் செய்யாமல் விட்டு விடுகிறோம்.

ஒன்றே ஒன்றை மட்டும் பார்த்து சந்தோஷப்படுகிறோம்.
இன்றைய ராசி பலன் மேஷம்- வெற்றி, ரிஷபம்-சந்தோஷம்,
மிதுனம்-பண வரவு …. அர்த்தம் புரியாமலே அந்த தேதியைக்
கிழித்து விடுகிறோம்.

அது கேட்கிறது
ஏ மனிதா! நீ என்னைக் கிழித்தாய் இன்றைக்கு ???
ஆனால்
நீ என்ன (வேலை செய்து) கிழித்தாய் நேற்றைக்கு???
24 மணி நேரத்தை வீணடித்து விட்டு, எனக்கு நேரம் சரியில்லை,
காலம் சரியில்லை, நாட்காட்டியில் போட்டிருக்கிறதே இன்று
மரண யோகம் என்று??? நான் என்ன செய்ய???? என்று புலம்பும்
மனிதா,

அவைகள் என்னென்ன எதற்காகப் போட்டிருக்கிறார்கள்
என்று நீ நினைத்துப் பார்த்தாயா, தேரிந்து கொண்டாயா??


சரி விஷயத்திற்கு வருவோம்.
ஒரு நாட்காட்டி பக்கத்தில் என்னன்ன போட்டிருக்கிறது
என்றால் ஏராளம் ஏராளம்…… ஒவ்வொன்றாகப் பார்ப்போம்
முக்கிய முதல் விஷயம்
நல்ல நாள் பார்ப்பது எப்படி??? என்பதை மட்டும் இன்று பார்ப்போம்

1)செவ்வாய், சனி, கிழமைகள் இருக்கக்கூடாது.
2)அஷ்டமி, நவமி பிரதமை திதிகள் ,கரிநாள் கூடாது.
3)சிலர் பரணி, கார்த்திகை நட்சத்திரங்களையும் தவிர்ப்பார்கள்
4)மரண யோகம் என்று இருந்தால் தவிர்க்கவும்
(சித்த யோகம், அமிர்த யோகம் மிக நல்லவை)
5)ராகு காலம், யமகண்டம் நேரங்களை அட்டவணையில் பார்த்து ஒதுக்கவும்
6)ஹோரை அட்டவணையைப் பார்க்கவும்


நல்ல ஹோரைகள்—சந்திரன், புதன், குரு, சுக்கிரன்
கூடாத ஹோரைகள்—சூரியன், செவ்வாய், சனி
7)நாட்காட்டியில் அன்றைய நட்சத்திரத்தைப் பார்த்து
சந்திராஷ்டம நாளை தவிர்க்கவும்
(சில நாட்காட்டியில் “சந்திராஷ்டம தினம்” என்றே
போட்டிருப்பார்கள்).


நான் குறிப்பிட்ட ஹோரை, ராகு கால, யம கண்ட அட்டவணையும்
காலண்டரின் பின்புறமே போட்டிருப்பார்கள்
அவ்வளவு தான் நல்ல நாள் குறித்தாகி விட்டாயிற்று!!!

இது பார்ப்பது மிக மிக முக்கிய காரியங்களுக்கே……
உதாரணமாக இடம் வாங்க அட்வான்ஸ் கொடுக்க,புது கட்டில் ,TV,

பணம் துணி, உடைகள் வைக்க பீரோ வாங்க
புது வாகனம் வாங்க………..
சும்மா பால் கார்டு வாங்க எலக்ட்ரிக் பில் பணம் கட்ட
கை பேசி ரீ சார்ஜ் செய்ய, பேங்க் பாஸ் புக் அப்டேட் செய்ய
உபயோகப்படுத்த வேண்டாம்.

வெற்றிகரமான வாழ்க்கை உங்களுக்கே !!!


காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலம் கருது பவர் – திருக்குறள் எண் 485 அதிகாரம் : காலமறிதல்

நன்றி!  வணக்கம்!

tags- பஞ்சாங்க ரகசியங்கள்-3,