அயோத்யா – சில உண்மைகள்! – 1 (Post No.8874)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8874

Date uploaded in London – – 31 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

அயோத்யா – சில உண்மைகள்! – 1

ச.நாகராஜன்

ராம ஜென்ம பூமியைப் பற்றிய ஏராளமான உண்மைகள் உலகினருக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி.

ராமஜென்ம பூமியைப் பற்றிய முக்கியமான தினம் இது.

இந்த தினத்தில் நடந்த சம்பவம் அனைவரும் அறிந்த ஒன்று.

ஆனால் இதற்கு முன்னர் 77 தடவைகள் ராம ஜென்ம பூமியில் உரிய வழிபாட்டை ஆரம்பிக்க ஹிந்துக்கள் முயற்சி செய்துள்ளனர்.

தொடர்ந்த இந்த முயற்சிகளை யாரும் வெளி உலகிற்குச் சொல்வதில்லை.

இந்த 77 முயற்சிகளில் 4 முயற்சிகள் பாபர் காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.

10 முயற்சிகள் ஹுமாயூன் அரசாண்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.

30 முயற்சிகள் அவுரங்கசீப் காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.

5 முயற்சிகள் ஷாகத் அலி (Shahadat Ali) காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.

3 முயற்சிகள் நாசுருத்தீன் (Nasir-ud- din) காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.

2 முயற்சிகள் பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், ஒரே ஒரு முயற்சி நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த போது மேற்கொள்ளப்பட்டது.

இந்த முயற்சிகளைப் பற்றி எல்லாம் மக்களுக்குச் சொல்லாமல் சில ஹிந்து விரோத சக்திகள் உண்மைகளை மறைத்தும் திரித்தும் எழுதி வந்துள்ளன.

உதாரணத்திற்குச் சொல்லப் போனால் ஆர்.எஸ்.சர்மா, விபுன் சந்திரா, ரோமிளா தாபர், இர்ஃபான் ஹபிப் (R.S.Sarma. Vipan Chandra, Romila Thapar, Irfan, Habib)  போன்றோரைச் சொல்லலாம்.

ஆனால் இந்திய அகழ்வாராய்வு நிறுவனம் (ASI) உண்மையை வெளி உலகிற்குக் கொண்டு வந்து விட்டது.

அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் (Alexander Cunningham) லக்னோ கெஜட்டில் (Lucknow Gazatteer) ஒரு  முக்கிய உண்மையைக் குறிப்பிடுகிறார்.

பாபரின் அரசாட்சி காலத்தில் கவர்னராக இருந்த மீர் பங்கி (Mir Banki) பீரங்கிகளை வைத்து அயோத்யா கோவில் முன்னர் குழுமி இருந்த ஒரு லட்சத்து எழுபத்திநான்காயிரம் பேர் மீது குண்டு மழை பொழிந்தான். பிணக்குவியல்கள் மலை மலையாய்க் குவிந்தன.

அந்த அயோக்கியன் ராமர் கோவிலின் மீதும் பீரங்கி மழை பொழிந்து அதை தரை மட்டமாக்கினான்.

ஹாமில்டன் (Hamilton – Barabanki Gazetteer) பாராப்ங்கி கெஜட்டில் ஜலால் ஷா (Jalal Shah) ஹிந்துக்களின் ரத்தம் தோய்ந்த கற்களைக் கொண்டு லாகூரில் மசூதியைக் கட்டினான் என்று குறிப்பிடுகிறார்.

காஜல் அப்பாஸ் முஸா அஷிகான் கலாந்தர் ஷாஹிப் (Kajal Abbas Musa Shikan Kalandarsahib) என்ற முஸ்லீம் பக்கீரே இந்தக் கோவிலை இடித்து மசூதி ஒன்றைக் கட்ட “உத்வேகம்” ஊட்டியவர் என்பதை வரலாறு கூறுகிறது.

தனது நினைவலைகளில் பாபர் ராமர் கோவிலை இடிக்க அப்பாஸ் முஸா அஷிகான் கலாந்தர் ஷாஹிப் கொடுத்த ஆணையைக் குறிப்பிடுகிறார்.

கோவிலை இடித்தவுடன் அதிலிருந்து கிடைத்த பொருள்களை வைத்து எப்படி மசூதி அதே இடத்தில் கட்டப்பட்டது என்பதையும் பாபர் குறிப்பிடுகிறார்.

ஆயிரக்கணக்கானோரை ஹிந்து விரோதிகள் கொன்று குவித்த போதும் ஹிந்துக்கள் பின்வாங்கவில்லை; மனம் தளரவில்லை.

பாபருக்குப் பின் அரசாளவந்த ஹுமாயூன் காலத்திலும் தங்கள் முயற்சியைத் தொடர்ந்தனர். அயோத்திக்கு அருகில் இருந்த சிர்சிந்தா மற்றும் ராஜேபூர் (Sirsinda and Rajepur) ஆகிய இடங்களிலிருந்து 10000 சூரியவம்சி க்ஷத்திரிய போர் வீரர்கள் ஒன்று திரண்டனர். இஸ்லாமியர் மீது போர் தொடுத்தனர். கோவிலைச் சுற்றிக் கட்டப்பட்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளை இடித்துத் தள்ளினர். பாப்ரி மஸ்ஜித்தின் வாயிலைக் கூட அவர்கள் இடித்தனர். மூன்று நாட்கள் கழித்து அங்கு வந்த முகலாயர் சேனை அவர்களுடன் போர் செய்து அவர்களை அழித்தது. அது மட்டுமல்ல, இந்த க்ஷத்திரிய போர் வீரர்கள் எந்த கிராமத்திலிருந்தெல்லாம் வந்தார்களோ அந்த கிராமங்களுக்கெல்லாம் சென்று தீ வைத்து அவற்றை அந்த சேனை அழித்தது.

சில காலம் சென்றது.

ஹிந்துக்கள் மனம் தளராமல் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். அக்பர் காலத்தில் இன்னும் ஒரு போர் மூண்டது.

இந்த முறை நேருக்கு நேர் சண்டை நிகழ்ந்தது.

கோவிலுக்கு எதிரே ஒரு மேடையையும் அவர்கள் அமைத்தனர்.

ராஜா பீர்பலும் ராஜா தோடர்மாலும் அக்பரிடம் பேசி அந்த மேடையை அப்படியே இருக்குமாறு செய்தனர்.

tags- அயோத்யா,  உண்மைகள்! – 1,

to be continued………………………………………….

***

Leave a comment

Leave a comment