பதார்த்த குண சிந்தாமணி! (Post No.8931)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8931

Date uploaded in London – – 15 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹெல்த்கேர் நவம்பர் 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

பதார்த்த குண சிந்தாமணி!

ச.நாகராஜன்

12 கோடி நூல்கள்!

பாரத தேசத்தில் இயற்றப்பட்ட நூல்களில் 12 கோடி நூல்கள் உலகின் பல்வேறு இடங்களில் உள்ளன என்றும் இவற்றில் பெரும்பாலானவை சுவடிக் கட்டே திறக்கப்படாமல் உள்ள நிலை நிலவுகிறது என்றும் அறிஞர் பெருமக்கள் கூறுகின்றனர். டாக்டர் வி.ராகவன் பெரு முயற்சி செய்து உலகின் பல இடங்களுக்கும் சென்று சம்ஸ்கிருத நூல்களின் பட்டியல் ஒன்றைத் தயார் செய்தார்.

தமிழ் நூல்களை எடுத்துக் கொண்டோமெனில் உ.வே.சாமிநாதையர் அரு முயற்சி செய்து தன் ஆயுள்காலத்தில் பல நூல்களை ஆராய்ந்து வெளியிட்டார்.

சரஸ்வதி மஹாலில் உள்ள சுவடிகளை ஆராய்ந்து பதிப்பிக்கும் பணி அங்கு நடைபெற்று வருகிறது. என்றாலும் இப்பணிக்கு உரிய நிதி உதவி போதுமானதாக இல்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

பதார்த்த குண சிந்தாமணி

இந்த நூல்களில் வைத்திய நூல்கள் ஏராளம். அவற்றில் ஒன்று பதார்த்த குண சிந்தாமணி. பிரமிக்க வைக்கும் ஆய்வுத் தகவல்களைத் தருவதால் இது அற்புத சிந்தாமணி என்ற பெயரையும் பெறுகிறது.

1508 பாடல்களைக் கொண்டுள்ள இந்த நூலில் விளக்கப்படாத பதார்த்தமே இல்லை என்று சொல்லலாம்.

தேரையர் இயற்றிய நூல்

இதை இயற்றியவர் தேரையர் என்னும் மாபெரும் சித்தர். மன்னன் ஒருவனின் காது வழியே புகுந்த தேரை ஒன்று அவன் தலையை அடைந்து அவனைப் பாதித்தது என்றும் அதை இவர் எடுத்ததால் தேரையர் என்ற பெயரைப் பெற்றார் என்றும் வரலாறு கூறுகிறது.

மருத்துவன் யார்? இதோ இலக்கணம்!

ஒரு மருத்துவனுக்கான இலக்கணம் தெளிவாக வரையறுக்கப்படுகிறது இப்படி:-

தெய்வ உபாசனை பலநூல் எல்லை காண்டல்

   திரிகரணசுத்தி பன்னோய் தீர்த்தனாளு

நைவகன்ற தீரமதி நுட்பம் சான்றோர்

   நட்பொழுக்க மேன்மை குணம் அன்புள்ளானாய்

மெய்வசுதை விகலையணங் குறை பதார்த்த

   விதியுடற்காதாரமடலங்கி மாந்தல்

கைவருமெண் பேதம் எலாம் உணர்ந்துற்றானாய்க்

 காணிலந்த மருத்துவன்கைக் கரணி யுண்ணே

பொருள் ; பல நூல்களை தீர ஆராய்ந்து நுணுகிக் கற்றல், மனம் வாக்கு, காயம் ஆகிய திரிகரணத்தால் பல நோய்களைத் தீர்த்தல்,, தீரம், புத்தி கூர்மை, சான்றோர் நட்பு, மேன்மை, நற்குணம், அன்பு ஆகிய நல்ல குணங்களை உடையோனாக உடல், நாடு, காலம், நோய், மருந்து, பொருள்களின் பண்பு, உடல் ஆதாரம், மடலம், உடல் பலம், பணிவு, எண் வகை பேதங்கள் இவற்றை உணர்ந்தவனே மருத்துவன் எனலாம்.

ஓஷதிகள் நான்கு

இந்த பூமியில் ஓஷதி என்பது நான்கு வகைப்படும். அவையாவன மரம், செடி, கொடி, புல் ஆகியன. இவற்றை விரிவாக எடுத்துரைக்கிறது இந்த அற்புத சிந்தாமணி.

நவரத்தினங்கள் தீர்க்கும் வியாதிகள்

நவரத்தினங்களை எடுத்துக் கொண்டால் மாணிக்கம் சுரம் சன்னி தோஷங்கள், திரிதோஷம் தாக நோய், வாதப் பிரமேகம், கண் நோய் ஆகியவற்றைப் போக்கி உடலுக்கு நல்ல் அழகைத் தரும்.

வைரங்களில் ஆறுவகை உண்டு. இவை கண் நோய்களைப் போக்கி உடலுக்கு அழகு தரும்.

வைடூரியம் சிலேஷ்ம வாதம், சிலேஷ்மம், புளியேப்பம், காது சூலை, குஷ்டம், பித்தம் ஆகியவற்றைப் போக்கும்.

கோமேதகம் வாத பித்தம், மலக்கட்டு, மந்தாக்கினி, சுரத்தால் ஏற்பட்ட கெட்ட குணம் ஆகியவற்றைப் போக்கும்; உடல் அழகைத் தரும்.

புஷ்பராகம் சுக்கில விருத்தி, நல்ல அறிவு ஆகியவற்றைத் தரும். மேகம் முதலான நோய்களையும் போக்கும்.

பவளம் சுரம், ஜன்னி, இருமல், ருசியின்மை, சுக்கில நஷ்டம், அதிக தாகம், நாவறட்சி ஆகியவற்றைப் போக்கும்.

முத்து அத்திசுரம், சோபை, ருசியின்மை, பல

மின்மை, கண் நோய், பித்து, விஷம், சீதளம், கபம், தாது நஷ்டம் ஆகியவற்றைப் போக்கும்.

மரகதம் விந்துவைத் தரும். பதினெட்டு வகை பூத கப காசங்கள், விரணம், பல் வகை விஷங்கள், மது மேகம் ஆகியவற்றை நீக்கும்.

நீலம் குதி கால் வலி, மேக நீர், பித்தம், பாண்டு, அயர்ச்சி ஆகியவற்றைப் போக்கும்; நல்லறிவைத் தரும் சுக்கிலப் பெருக்கத்தை உண்டாக்கும்.

நீருக்கு உள்ள நோய் தீர்க்கும் சக்தி

நீர் என்று எடுத்துக் கொண்டால் ஆற்று நீர், கிணற்று நீர், அருவி நீர், ஓடை நீர் என்று சொன்னது போய் கார்பரேஷன் குழாய் நீர், கேன் நீர் ஆகிய இரண்டு மட்டுமே இன்றைய வாழ்க்கையில் காணப்படுபவை என்று சொல்லும் நிலை உருவாகி விட்டது.

ஆனால் பதார்த்த குண சிந்தாமணியோ காவிரி நீர், வைகை நீர், தாமிரபரணி நீர், கங்கை நீர், யமுனை நீர் என்று வரிசையாகப் பட்டியலிட்டு ஒவ்வொரு நீர் குணத்தை விவரித்து அது போக்கும் வியாதிகளையும் பட்டியலிடுகிறது.

மரம் என்று எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு மரத்தையும் அலசி ஆராய்ந்து அந்த மரத்தின் மருத்துவ குணத்தை விரிவாக அழகாக விளக்குகிறது.

மாதர் தம் முலைப் பால் மகிமையை விளக்குவதோடு பற்பல வகை மாதரின் முலைப் பால் பண்பையும் விவரிக்கிறது.

பசுவின் மூத்திரம் தரும் நற்பயனில் ஆரம்பித்து ஒரு பெரிய பட்டியலையே காணும் போது வியப்படைகிறோம்.

சமையல் வகையில் உள்ள ஒவ்வொரு பதார்த்தத்தையும் எடுத்து அதன் மருத்துவப் பண்புகளை அக்கு வேறு ஆணி வேறாக அலசும் இது போல் ஒரு நூல் இன்னொன்று இல்லை என்று கூறும் அளவு நுட்பமான விஷயங்கள் பதார்த்த குண சிந்தாமணியில் உள்ளன.

65 தலைப்புகளில் அரிய விஷயங்கள்

பாயிரம், பஞ்ச பூதம், திணை, நீர், பால், மோர், நெய், மதுரம், பாகு, வெல்லம், மது, தேன், மரம், செடி, கொடி, புல், மரத்தின் சமூலம், செடியின் சமூலம் கொடியின் சமூலம், மரத்தின் கிழங்கு,செடியின் கிழங்கு, கொடியின் கிழங்கு, புல்லின் கிழங்கு, மரத்தின் வேர், மர இலை, கொடியின் இலை, கீரை வகை, மரத்தின் மலர், கொடியின் பூ, மரத்தின் பிஞ்சு, மரத்தின் காய், செடியின் காய், கொடியின் காய், மரத்தின் பழம், செடியின் பழம், மரத்தின் வித்து, செடியின் வித்து, கொடியின் வித்து, தானியம், புன்செய் தானியம்,   

இறைச்சி, பறவை இறைச்சி, மீன் கறி, கடைச்சரக்கு, பாசாணம், உலோகம், நவரத்தினம், மருத்துவன், பத்தியம், தினக் கிரமாலங்காரம், எண்ணெய் முழுக்கு, துணி வகை, புசிப்பு, உண்கலம், சோறு, கஞ்சி, சித்திரான்னம், பலகாரம், பரிமளப்பூச்சு, தாம்பூலம், வாகனம், விசிறி, புணர்ச்சி, பதார்த்த ஜீரண கால அளவை, நோயணுகா விதி என இப்படி 65 தலைப்புகளில் பிரமிக்க வைக்கும் அரிய தகவல்களைத் தருகிறது இந்த நூல்.

சித்தர் அருளிய அருமையான ஆய்வு நூல்

ஒரு பிரம்மாண்டமான பல்கலைக் கழகம் பல கோடிகள் செலவழித்து பல நூறு பெயரைப் பணியில் அமர்த்தினாலும் இப்படிப்பட்ட நுணுக்கமான விஷயங்களைத் திரட்ட முடியுமா என்பது சந்தேகமே.

மருத்துவத்தில் ஆர்வமுள்ளவர்களோ, சாமான்யரோ, எவரானாலும் சரி இந்த நூல் அனைவருக்குமே ஒரு அரிய வரபிரசாதம். அல்லோபதி வைத்தியரோ, ஹோமியோபதி வைத்தியரோ, சித்த வைத்தியரோ யாராக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவருக்கும் பயன்படும் நூல் பெரும் சித்தரான தேரையர் அருளிய அற்புத சிந்தாமணி.

படிப்போம்! பதார்த்த குணம் அறிவோம்!! பயன் பெறுவோம்!!!

***

முக்கியக் குறிப்பு : இணைய தளத்தில் இந்த நூலை இலவசமாக டவுன் லோட் செய்து கொள்ளலாம்.

tags– பதார்த்த குண சிந்தாமணி, தேரையர்,

–subham–

PLEASE JOIN US TODAY– SUNDAY 15-11-2020

PLEASE JOIN US TODAY– SUNDAY 15-11-2020

EVERY SUNDAY FOR TAMIL

EVERY MONDAY FOR HINDUISM

XXX

SAME TIME ONE PM LONDON TIME

6-30 PM INDIAN TIME

WHERE ?  AT FACEBOOK.COM/GNANAMAYAM

Facebook.com/gnanamayam

XXX

TODAY 15-11-20, SINGER YOGESWRAN FROM BERLIN JOINS US AND EXPLANIS HOW HE DID THE MARVELLOUS, GIGANTIC WORK OF SINGING 1330 KURAL COUPLETS OF TAMIL VEDA TIRUKKURAL IN DIFFERENT RAGAS.

MRS PAVITHRA MAHESH FROM CHENNAI JOINS US TO RENDER A SONG ON MAHATMA GANDHI

ALONG WITH MR YOGSWARN OF BERLIN, GERMANY, JOINS OTHER ARTISTES WTH THEIR DIVINE TAMIL SONGS AND SECULAR – KALYANA NALUNGU SONGS.

MR NAGARAJAN AND DR KANNAN PRESENT THEIR USUAL FEATURES.

XXX

Tomorrow Monday 16-11-2020

WORLD FAMOUS HISTORIAN AND ARCHAEOLOGIST DR R NAGASWAMI EXPLAINS THE MEANING OF ‘UDAIYA’ IN “TENNAATTUDAIYA SIVANE POTRI” OF SAINT MANIKKAVASAGAR PLUS THIRUPPUGAZ, NEWS AND VIEWS AND OTHER DEVOTIONAL MATTERS.

WE R THERE EVERY SUNDAY, EVERY MONDAY; PLEASE JOIN US LIVE

IF U MISS OUR LIVE BROADCAST, VISIT OUR SITE AFTER ONE OR TWO HOURS ON THHE SAME DAY, U CAN WATCH US.

SAME PLACE, SAME TIME  EVERY SUNDAY, EVERY MONDAY

WE WELCOME U ALL TO BECOME BROADCASTERS AND TELECASTERS, PRESENTERS AND READERS.

IF U R INTERESTED, WE WILL SEND U ZOOM LINK.

TAGS- YOGESWARAN

–SUBHAM—

TAMIL WORDS IN ENGLISH – PART 25 (Post No.8930)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8930

Date uploaded in London – –14 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part –25

WORDS BEGINNING WITH ‘P’ continued…………………………

P.101.PATIENT – PATHTHIYA, VAITHTHIAM FOLLOWER; P=V பத்தியம், வைத்தியத்தில் இருப்பவன்

P102. PILLAGE – PIY- PIYTHTHU ERI; பிய் , பிய்த்து எறி

IN SPANISH ‘LL’ MEANS Y; ALSO KOLLAI கொள்ளை

P.103.PRISE OFF – PIRI, PIRITHTHEDU பிரி, பிரித்தெடு,

P.104.PROVOKE- URUVAAKKU ; P=V ;THUUNDU, உருவாக்கு , தூண்டு

P.105.PLANK – PALAKAI பலகை

P.106.PUFF –  UPPU; UPPIVITTATHU P=V; உப்பு, உப்பி விட்டது

P.107.PACT- PATTAYAM பட்டயம், உடன்பாடு

P.108. PREACH, PREACHER- PIRACHAARA, ; பிரசார, P=V; VIRIVURAI விரிவுரை; பிரச்சாரகர்

P.109.PAY, PAID – PEYTHAL பெய்தல்,

P.11O. PHOBIA /GREEK– BAYA, PEETHEE பயம், பீதி,

P.111.PARTICLE – PAATHA DHUULI பாத தூளி

P.112. PROPEL, PROPELLANT – PIRAPALAM AAKKU பிரபலம் ஆக்கு,

P.113. PRO – UURU, ஊறு

P.114. PROFOUND – PARANTHA, BROAD, பரந்த

P.115. PARAGON (OF VIRTUE) – VARA GUNA வர குண

P.116.PARODY – PAKADI IN TAMIL, VIKATA IN SKT; P=V பகடி; விகட ; ப=வ

P.117.PINK – PAING KILI ; GREEN AND PINK OVERLAPPING IN PARROT, பைங்கிளி ; கிளியின் கழுத்தில் பசுமை; பிங்க்/PINK பார்க்கலாம்

P.118.PALMYRA – PANAI MARA; BALA RAMA MARA/TREE; FLG OF BALA RAMA பனை மரம்; பலராமன் (கொடியில் உள்ள) மரம்

P.119.PORK – VARAAGA IN SKT FOR PIG; PANDRI IN TAM. P=V வராக ;ப=வ ; பன்றி

P.120. PORCUPINE- P=V;  VARAAGA- PIG WITH PINES பன்றி,  முள்ளம் பன்றி, 

P.121.PIPE /WHISTLE – PI PI IN TAMIL; EVEN NADASWARA PIPE IS CALLED PEE PEE பீ பீ /நாயனம்

P.122. PARACHED – VARANDA ; P=V, , வறண்ட

P.123. PESHER/HEBREW- INTERPRETATION OR SOLUTION TO A DREAM MAY BE RELATED TO PUZZLE IN ENG. AND PISI, PUTHIR IN TAMIL, பிசிர், புதிர்

P.124. PASTE – PASAI, PISIN, பிசின் , பசை,

P.125. PORRIDGE – PURKAI/ GRUEL IN SANGAM TAM. LIT. புற்கை/ கஞ்சி

P.126.PA(T) PILLIO/ LATIN –  PATTUP PUZU/ PULU பட்டுப் புழு

P.127.PHONE, PHONEME – D WANI, THONI IN TAM. போனி = த்வனி ??

P.128. PERU- IN SOTH AMERICA HAS BIG LINE DRAWINGS LIKE OUR MAHABHARATA VYUHA/ ARMY FORMATIONS; READ MY RESEARCH ARTICLE ON HOW DID THEY DO IT ; PERU IS PER URU- BIG FIGURES/ DRAWINGS

PER= BRHA IN SKT, URU= RUPA IN SKT. பெரு- பேர் உரு = பிருஹத் ரூப ; மர்மமான 300 பெரிய உருவங்கள் கொண்ட நாடு ; என் ஆய்வுக் கட்டுரையில் மேல் விவரம் காண்க

P.129.PYRAMID – PURA MEDU= HILL OUTSIDE CITY; PITRU MEDU = RAISED PLACE FOR PITRS= DEPARTED SOULS; MANIMAGALAI SAYS SUDU MAN ONGIYA NEDU NILAIK KOTTAM புற  மேடு, பீர்மேடு, சுடு மண் ஓங்கிய  நெடு நிலைக் கோட்டம்= மணி மேகலை

P.130.PANHAS /FANS – PANAI OLAI VISIRI பனை ஓலை விசிறி

P.131.PHOLAS/LATIN – PALLAM/PIT IN TAM; BHILA/ CAVE IN SKT. பள்ளம் / பிளவு, பிலம்

P.132.PARA ‘CHUTE’ – PARAAKKUM KUDAI/UMBRELLA; KUUDAI= BASKET, பறக்கும் chute குடை

P.133. PAHANDI – PAGAN; VARAHAMIHIRA USED THIS பஹந்தி; வராஹமிஹிரர் பயன்படுத்தும் சொல்

P.134. PANIS IN RIG VEDA; PHOENICIAN COMMERCE – VANIKS/ BUSINESS MEN WHO EXTRACT MONEY FROM PEOPLE BY PROFITEERING பாணி, பினிஷியன்- வணிகன்; கொள்ளை லாபம் அடித்த மக்கள் ; ப=வ

P.135.PRETTY – PRIYA, PREETHI ; P=V; VIRUMBU – LIKE ப்ரித்தி – ப்ரியா – விரும்பு ; ப=வ

P.136.PINE COME IN SUMERIAN / IRANIAN SCULPTURES – PANNEER SOMBU LIKE WATER SPRINKLERS பன்னிர் சொம்பு

tags- tamil words-25, ஆங்கிலச் சொற்கள் – Part -25

–subham–

வார்த்தை பழசு, அர்த்தம் புதுசு!! – 2 (Post No.8929)

COMPILED  BY KATTUKKUTY

Post No. 8929

Date uploaded in London – – 14 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வார்த்தை பழசு, அர்த்தம் புதுசு!! – 2

Compiled by Kattukutty

மதம்

மனிதனுக்கும், யானைக்கும்,தவிர்க்க இயலாத பிரச்சினை!!!

தபால்

1)லகம் சுற்றும் வாலிபன்!!!

2)நலமறிய நாடிச்செல்லும் பறவைகள்

மறுவாழ்வு

வாழ்விழந்த சாலைகளுக்கு மறுவாழ்வு தர வந்தது தேர்தல்!!!

நெருப்பு

நீ  இல்லாமல் சோறும் வேகாது, உடலும் வேகாது!!!

டைரி

முடிந்த வாழ்க்கையின் முகவரி…….

காற்று

என் “உயிர்”தோழன்!!!

பேன்

தலைக்கு” மேலே வேலை இருக்கிறது……..

நாக்கு

உண்ணும் பொருளை சோதனை செய்யும் சோதனைச் சாவடி!!!

வியர்வை

உழைப்பாளியின் உதிரம் உப்பாகும் விந்தை!!!

பூங்கா

இங்கு ஜோடிகளைத் தவிர தாடிகள் தான் அதிகம்!!!

ஜாதி

1 )காதலுக்கு தேவை இல்லை, கல்யாணத்திற்கு மட்டும் தேவை.

2) கருவிலும், கல்லறையிலும் இல்லாத வார்த்தை!!!

முகப்பரு

பருவத்தோட்டத்தில், பதியம் போடாமல் பூத்த

மல்லிகை மொட்டுகள்!!!

காதல் தோல்வி

 ஓர விழியால் பார்த்து என்னை ஈர விழியாக்கி விட்டாயே……

பெண்

1) பிறந்த வீட்டில் சுமையும் அவளே, புகுந்த வீட்டின் சுமை தாங்கியும் அவளே!!!

2) ஆண்கள் என்னும் ஈக்கள் மொய்க்கும் பலாப்பழம்!!!

3) புரிந்தவர்களுக்கு புத்தகம் ,புரியாதவர்களுக்கு புதிர்!!!

தாவணி

1) ருவக்கட்டித்தின் அஸ்திவாரம்!!!

2) பருவத்திற்கு மட்டும்போடவில்லை,பாவிகளின் பார்வைக்கும் போட்ட வேலி!!!

காதல்

1 ) கற்பில் ஆரம்பித்து,தப்பில் முடிந்தது…….

2) கண்கள் மோதிக்கொண்டன, இதயம் விபத்திற்குள்ளானது!!!

அரசாங்க வேலை

கிடைக்கும் வரை துக்கம்,

கிடைத்த பின் தூக்கம்!!!

இலையுதிர் காலம்

கிளைகளுக்கும் இலைகளுக்கும் இடையே நிகழும் விவாக ரத்து!!

மழை

வந்தால் சகதி, வராவிட்டால் அவதி !!

பசி

தனது ஓலைக் குடிசை பற்றிக் கொள்ளுமோ என பயந்தான்

ஏழை, ஏனென்றால் வயிற்றில் பசித் தீ!!!

காலண்டர்

ஆறிரண்டு மாதம் ஆணியில் தொங்குவது யாரிட்ட சாபம்???

வாய்

 மின்சாரம் இல்லாத ஒலி பெருக்கி!!!

அரசியல்வாதிகள் 

 1) தேர்தல் நேரங்களில் உலா வரும் உஜாலா பொம்மைகள்!!!

 2) அன்று நாட்டுக்காக, இன்று வீட்டுக்காக !!!

சட்டம் இவர்கள் கைக்கு வரும்போது மட்டும் பட்டமாகிவிடுகிறது!!!

கண்கள் 

காதல் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு நடக்குமிடம்!!!

அம்மா 

திதி செய்ய மனமில்லை, இன்னும் வாழ்கிறாள்,

மனதில் அம்மா!!!!

முரண்பாடு

ண்டியாய் முருகன், கையில் தங்க வேல்!!!!

வர்க்கங்கள் 

பாடியில் தெம்பிருந்தால் , தொழிலாளி.

பர்ஸில் தெம்பிருந்தால் முதலாளி !!!

தொட்டில் – கட்டிலின் தம்பி !!!

தொட்டில் குழந்தை – லைசன்ஸ் பெறாத டிரைவரால் வந்த விபத்து!!!

கடன் – கடலில் மூழ்கினால் முத்து, கடனில் மூழ்கினால் பித்து…..

மூக்கு – ஒருவீடு, இரு வாசல்!!!

டீக்கடை – ஏழைகளின் மீட்டிங் பாயிண்ட்-தொடர்பு மையம் !!!

வண்டு – பூக்கள் பூப்பெய்தியதை கண்டு பிடிக்கும் விஞ்ஞானி!!!

திருப்பதி – எந்த நாட்டு மன்னரும் இங்கு முடி இழப்பர்……….

மேளம் – மனிதனின் இன்ப, துன்பங்களுக்கெல்லாம் அடி வாங்கும் அப்பாவி!!!

சொந்தம் – வசதியில் வருவது, வறுமையில் போவது !!!

விவசாயி 

சோற்றுப் பருக்கையில் கை வைக்க

சேற்றுப் படுகையில், காலை வைப்பவன்!!!

வறுமை. – ஏழைகளை வாட்டி வதக்கும் வில்லன்!!!

கலவரம் – சமூக விரோதிகள் மக்களுக்கு அருளும் “வரம்”!!!

ஓர் குலம் ஒரே கட்சி – லஞ்சம் கேட்பதில்!!!

லாட்டரி – 1) குலுக்கினார்கள் குலுங்கியது பலர் வாழ்வு…..

2) கோடிக்கு ஆசைப்பட்டு குடிசையை விற்றார்கள்……….

செருப்பு – ஆயுள் முழுவதும் ஆதாயம் தேடாத நண்பன்!!!

குழந்தை – இருவர் இருட்டில் எழுதிய புத்தகம், சிற்பம்!!!

ஸ்டவ் 

 1) மரு மகளுக்காக மாமியார் வைத்திருக்கும் சயனைடு குப்பி!!!

2) வீட்டுகுள் இருக்கும் சுடுகாடு……..

பிராந்தி – கவர்ச்சிகரமான மது பானம் !!!!

சிகரட் – இழுத்தேன் அன்று, இளைத்தேன் இன்று……..

லஞ்சம் – வாங்கினேன், கைது செய்தார்கள்,

கொடுத்தேன் விட்டு விட்டார்கள் !!!

சிலை கடத்தல் – செய்யும் தொழிலே தேய்வம்!!!

பிரச்சினை 

ஓட்டு கேட்ட தலைவருக்கு வருமான வரி பிரச்சினை!!!

ஓட்டுப் போட்ட எங்களுக்கோ வாழ்க்கையே பிரச்சினை!!!

வாக்காளர்கள் – அறியா “மை”க்கு விரல் நீட்டும் அறியாமைகள்!!!

ரேஷன் – நியாய விலைக் கடையில் அநியாய எடை……..

சகவாச தோஷம் – யானையும் பிச்சை கேட்டது கோவில் வாசலில்

எல்லாம் சகவாச தோஷம்!!!

மாணவர்கள் – எந்தப் பெண்ணும் எங்களுக்கு கிடைக்கவில்லை,

மதிப்’பெண்’ணும் தான்!!!#

 tags- வார்த்தை பழசு-2, அர்த்தம் புதுசு-2

****

உடல் ஒரு மரம்? அருணகிரிநாதரின் வர்ணனை (Post No.8928)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8928

Date uploaded in London – – 14 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

உடல் ஒரு மரம்? அருணகிரிநாதரின் வர்ணனை! உடலே கோயில் – அப்பரின் சிந்தனை!!

S NAGARAJAN

1

அருணகிரி நாதர் அருளியுள்ள ஒரு அற்புதமான பாடல் ‘எழுபிறவி நீர் நிலத்தில்’ எனத் தொடங்கும் பாடல்.

இதில் அவர் உடலை ஒரு மாமரமாக வர்ணிக்கிறார்.

ஏழு பிறவிகள் என்னும் நீர் கொண்டது நிலம். இந்த நிலத்தில் நல்வினை மற்றும் தீவினை ஆகியன வேர்களாகும். அவற்றில் ஊன்றிக் கொண்டு துன்பம் என்னும் முளைகள் முளைத்து வளர்கின்றன. மாயை எனப்படும் பொய்த்தோற்ற உணர்ச்சிகள் கிளைகளாக செழிப்புற்று வளர்கின்றன. அவற்றில் காமம் என்னும் தளிர்கள் துளிர்கின்றன. அஞ்ஞானம் என்னும் இலைகள் மிகப் பெரிதாக வளர்கின்றன. கேடு என்னும் பூ மொட்டுகள் விட்டு அரும்புகின்றன. விளைவு. மரணமே பழமாகப் பழுத்து வருகிறது. கடைசியில் முறிந்து அழிகின்ற மாமரமாக உடல் இலங்குகிறது. அந்த மரத்தின் அருமையான நிழல் அதன் பண்பை இழந்து அழிகிறது.

ஆக இப்படிப்பட்ட நிழல் தரும் உடல் என்னும் குடை அழிந்து போகும் முன்னரேயே எனக்கு உபதேசத்தைத் தந்து அருள்வாயாக.

தவறான (வழுவு) நெறி பேசிய தக்ஷன் அமைத்த யாகசாலைக்குச் சென்று சந்திரன் சூரியன் இந்திரன் உள்ளிட்ட தேவர்களையும் திருமாலின் நாபியில் உதித்த பிரமன், சக்ரம் ஏந்திய திருமால் ஆகியோரது வலிமை மறைந்து ஒடுங்க அவர்களை எதிர்த்து அடக்கிய உக்ரமான சிவபிரானின் புதல்வனே, அழகிய கலாபமயில் மீது ஏறி எட்டு மலைகளையும் வென்று வலம் வந்த வேலனே!

வலிமை கொண்ட அசுரர் தம் சேனை அழிபட்டு முறியும்படியாக அவர்களை மோதி வெட்டி அழித்து தேவர்களை சிறையிலிருந்து மீட்ட பெருமாளே!

பாடல் இது தான்:-

எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேர்பிடித்து

     இடர்முளைக ளேமுளைத்து …… வளர்மாயை

எனுமுலவை யேபணைத்து விரககுழை யேகுழைத்து

     இருளிலைக ளேதழைத்து …… மிகநீளும்

இழவுநனை யேபிடித்து மரணபழ மேபழுத்து

     இடியுமுடல் மாமரத்தி …… னருநீழல்

இசையில்விழ ஆதபத்தி யழியுமுன மேயெனக்கு

     இனியதொரு போதகத்தை …… யருள்வாயே

வழுவுநெறி பேசுதக்க னிசையுமக சாலையுற்ற

     மதியிரவி தேவர்வஜ்ர …… படையாளி

மலர்கமல யோனிசக்ர வளைமருவு பாணிவிக்ர

     மறையஎதிர் வீரவுக்ரர் …… புதல்வோனே

அழகியக லாபகற்றை விகடமயி லேறியெட்டு

     அசலமிசை வாகையிட்டு …… வரும்வேலா

அடலசுரர் சேனைகெட்டு முறியமிக மோதிவெட்டி

     அமரர்சிறை மீளவிட்ட …… பெருமாளே.

*

2

அருணகிரிநாதர் உடலை மரமாக வர்ணித்தார் எனில் அப்பர் பிரான் உடலை வேறு விதமாகச் சொல்கிறார்.

உடலை ஒரு வீடாகக் கொள்கிறார் அப்பர் பிரான். அந்த வீட்டில் உள்ளம் என்பது ஒரு அகல் விளக்கு – தகளி!

அந்த தகளியில் தீபம் ஏற்ற நெய் வேண்டுமே! அது தான் நமது இறை உணர்வு.

நெய் விளக்கிற்கு திரி நமது உயிரே தான். இப்படி உயிர் என்னும் திரியுடன்  உணர்வு என்னும் நெய் ஊற்றி உள்ளம் என்னும் அகல் விளக்கை ஏற்றினால் திருக்கடம்பூர் தாதையின் கழல் அடியைக் காணலாம்.

திருக்கடம்பூர் கடலூர் மாவட்டத்தில் உள்ள கரக்கோயில் ஆகும். கரக்கோயில் என்பது தேர் போன்ற வடிவை உடையதாக இருக்கும்.

பாடலைப் பார்ப்போம்:-

உடம்பு எனும் மனை அகத்து உள்ளமே தகளி ஆக

மடம் படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி

இடம் படு ஞானத் தீயால் எரி கொள இருந்து நோக்கில்

கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணலாமே!

அவரே உடலைக் கோயிலாகச் சித்தரிக்கும் பாடலும் ஒன்று உண்டு.

காயமே கோயில் ஆகக் கடி மனம் அடிமையாக

வாய்மையே தூய்மையாக மன மணி இலிங்கமாக

நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய  ஆட்டிப்

பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே – நான்காம் திருமுறை

உடம்பே கோயில்

நல்ல மனமே அடிமை.

வாய்மையே தூய்மை (சுத்தம்)

மனதினுள் மணி என ஜொலிக்கும் ஆன்மாவே இலிங்கம்

அன்பே நெய்யும் பாலும்,

இப்படி அன்பை வைத்து பக்தியுடன் பூஜை செய்து இறைவனைப் போற்றினோம்.

இப்படி உடலை இன்னும் பல்வேறு விதமாக உருவகப்படுத்தியுள்ளனர் அருளாளர்கள்.

அனைத்துமே அருமையானவை; அரிய உண்மைகளைப் புலப்படுத்துபவை!

tags-  உடல் ஒரு மரம்,  அருணகிரிநாத, வர்ணனை, 

***

YESTERDAY IN LONDON 12 -11- 2020(Post No.8927)

 


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.8927

Date uploaded in London – –13 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘THAMIZ MUZALKKAM’–  TAMIL BROADCASTING FROM LONDON –WAS BROADCAST YESTERDAY 12TH NOVEMBER 2020. IT IS PART OF GNANAMAYAM WHICH IS ALREADY BROADCASTING ON MONDAYS FROM THE FIRST WEEK OF AUGUST 2020.

FROM NEXT WEEK

SUNDAYS FOR TAMIL MATTERS!

AND MONDAYS FOR HINDU CUURE!!

IT IS BROACAST VIA ZOOM AND FACEBOOK.COM/GNANAMAYAM

Time 1 pm London time, 6-30 pm Indian time

Highlights of yesterday’s Programme from London

London Swaminathan, Producer Gnanamayam and Thamiz Muzakkam announced the Programme for the day.

Prayer was recited by Sri Balasubrahmanyan from London

Co Producer Mrs Vaishnavi Anand introduced the Thiruppugaz Group and conducted programme till end.

Mrs Jayanthi Sundar was followed by Mr Natarajan and Mrs Nirmala Natarajan of Amersham, Mrs Bhanumathy Chandrasekaran and Mrs Madhumitha Srikant from Romford in reciting Thiruppugaz (Tiruppugal).

Then Swaminathan introduced the main speaker of the day Dr Chitra from Hong Kong .  She spoke in Tamil about her research in Kolam/ Rangoli. She compared the Hindu Kolams with religious symbols found in Judaism, Islam and Christianity

Following Dr Chitra, Mrs Daya Narayanan and Mrs Sarasvathy Chandrasekaran from London and Guildford respectively presented Nalungu songs.

Miss Mahisha from Paris rendered a Sindhu song on Lord Murugan. Miss Varshini and Miss Mahalakshmi, daughters of Sankara Kurukkal and Aditi Annamalai, Miss Tushara Kalluri and Miss Shatakshi Kaluri  sang some songs before concluding remarks given by Co Producer Mrs Vaishnavi Anand.

xxx

See You all on Sund

ays and Mondays. Don’t forget 1 PM London Time and 6-30 PM IST. Just log in to facebook.com/gnanamayam .

If u want to participate we will send you zoom link; for watching you go to facebook.com/gnanamayam.

Thanks for supporting our broadcasts. We have 1700 followers.

Gnanamayam Team Wishes You all A Very Happy Deepavali.

Dr Chitra Profile

Topic: கோலங்கள் காட்டும் மெய்யியல் – 8 minutes

Post graduate in Computer Applications MCA and Mathematics M.Sc in University of Madras and Ph.D in Information Systems from City University of Hong Kong. Presently Archaeological student of Tamil Nadu Open University. 

Entrepreneur doing App developments, part-time Lecturer of SCOPE, City University of Hong Kong. 

Interest in writing lead to publishing 12 books, research papers, honorary reporter of Dinamalar, freelancing of articles and series for magazines like Chitti Vikadan, Thina Thandhi Manavar pakkam, Virakesari, Gokulam and Internet magazines, drama script writing. 

Media interest led to being sports reporter for All India Radio, 13 productions (each 13 weeks) for CIBS Radio Television Hong Kong about India and its culture. Have youtube channel as well. 

Plans to encourage the next generation to know more about Tamil and its heritage.  

t

tags– Thamil muzakkam ,121120,

–Subham —

TAMIL WORDS IN ENGLISH – PART 24 (Post No.8926)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.8926

Date uploaded in London – –13 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part -24

WORDS BEGINNING WITH ‘P’ continued…………………………

P.71.PERI – AROUND – PARITHI/SUN THAT WHIICH IS ROUNDபரி – வட்டம் , பரிதி- சூரிய வட்டம் ,

PARI VATTAM IN TEMPLE – ALREADY GIVEN

P.72. PRAISE – POTRU, PAARAATTU IN TAM. போற்று, பாராட்டு ,

P.73. PYRE, PYRO TECHNICS- ERI=BURN ;  P-YRE=ERI; MIRRPR IMAGE எரி 

P.74.POLTERGEIST- PEY; KUTTI SATHAAN பேய், குட்டி ஷைத்தான் ,

P.75.PROFILE – PRUVIL= URUVA= RUPA IN SKT உருவ-ரூப

P.76.PROBABLY – ORU VELAI IN TAM.; ஒரு வேளை PRO= ORU, VAVLY= VELAY; B=V

P.77.POWDER – PODI பொடி

P.78.PARA DISE – PARA=BEYOND, DESA= PLACE, பர தேச =சுவர்க்கம்

P.79.PAN-GREEK GOD OF MUSIC – PAN/SONG பண் ,

P.80.PEWTER = PAATRAM= VESSEL, CONTAINER பாத்திரம் ,

P.81.PATHOS/GREEK- PATHYAM/DIETING; VAIDYAM= MEDICAL TREATMENT/SCIENCE பத்தியம், வைத்தியம்

P.82.PLANET – P=V; ULAVUM, ULAA VARUM உலவும், உலாவரும்

P.83.PHENOMENAL – VINOTHAMAANA/SKT

P.84.PHALANX/GREEK – PATAI/ARMY; PAALAYA IS ARMY CAMP; THIS TELEGU WORD IS IN MANY TAMIL TOWN NAMES

P.85.PUNK – CONSUMING PANGI/DRUGS வினோதமான பங்கி அடிக்கும்

P86.PLANTAIN – P/VLAI= VAAZAI IN TAM. வாழை

P.87.PREY- IRAI – BAIT, இரை

P.88.PATCHOULI – PACHAI/GREEN, பச்சை

P.89.PEGASUS/GREEK – PAAI MA= FLYING HORSE; PAAI- ASVAபாய் மா; பாயும் அஸ்வ ,

P.90.POISON – P/VOISON= VISHAM விஷம்

P.91. PASSION – PAASAM பாசம்

P.92.PRIVATE- PRATYEKA பிரத்யேக 

P.93.PROOF – URUSU, RUSU உருசு , ருசு, 

P.94.PRAWN – IRAAL; VIRAL SHPED இறால் / விரல் போன்ற

P.95. PRIZE- PARISU; PARISIL பரிசு, பரிசில்

P.96.PROTECT – PAATHU KAR; PAAHI MAAM/SKT. பாதுகார், பைசல்,

P.97. PYTHON – PAANTHAL பாந்தள்

P.98.PEACE – PAISAL, பைசல் செய்

P.99.PLACE – P/VLACE= VILAASA; YOUR STAYING PLACE விலாச/முகவரி, விலாஸ்; SEVERAL BUILDINGS ARE NAMED VILAS

P.100.PRACTICAL- PRATYAKSHA பிரத்யக்ஷ

TO BE CONTINUED…………………

TAMIL WORDS -24, ஆயிரம் , ஆங்கிலச் சொற்கள்-24, 

–SUBHAM—

அ(ம்)மாவாசை பெயர் அற்புதம்! (Post No.8925)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8925

Date uploaded in London – –13 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வேதத்தில் அற்புதமான வானியல் செய்திகள் உள்ளன. ஒரு வருஷத்தை 12 மாதங்களாகப் பிரித்து மாதத்தை இரண்டு பட்சங்களாகப் பிரித்து,  அதை 30 நாட்களாக்கி , ஒரு நாளை 60 நாழிகை ஆக்கி சாதனை செய்தது வேறு எந்த கலாசாரத்திலும் இல்லை . ஆண்டையும் தக்ஷிணாயணம், உத்தராயணம் என்று பிரித்ததும் வேறு எங்கும் காணக்கிடக்கில. அதுமட்டுமல்ல ; ஒரு வருஷத்தை மேலை நாட்டினர் நான்காகப் பிரித்தகாலையில் நாம் மட்டும் வேத காலத்திலேயே ஆறு பருவங்களாகப் பிரித்த அற்புதமும் வேறு எங்கும் இல .  இதில் மிகப்பெரிய அதிசயம் என்னவன்றால் வேதங்களுக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் எழுந்த தமிழ் இலக்கியமும் அப்படியே ‘ஆறு பருவம்’, ‘நாற்படை’ என்று பேசுவதாகும் . நாம் உண்டாக்கிய நாற்படை  இன்று உலகெங்கும் செஸ் என்ற பெயரில் கோடி கட்டிப் பறப்பதைக் காண்கிறோம் . பிரம்மாண்டமான எண்கள் யஜுர்வேதத்தில் இருப்பதும் அதை அப்படியே தமிழர்களும் சங்கம், சமுத்திரம், பதுமம் என்ற சம்ஸ்கிருதத் சொற்களோடு பயன்படுத்துவதும் வியப்பிலும் வியப்பு.

பாணினிக்கு பதஞ்சலி  எழுதிய பேர் உரை — மஹா பாஷ்யத்தைப் – படிக்கையில் இப்படியும் ஒருவர் உரை எழுத முடியுமா என்று வியந்து குன்றின் மேல் நின்று கூச்சல் போடத் தோன்றுகிறது! ஆந்தை வடிவ வியூகம், ஆந்தை வடிவ கட்டிடம் பற்றி பாணினி க்கு காத்யாயனர் எழுதிய விளக்கக் குறிப்புகளை படிக்கையில் “அம்மாடியோவ், அப்படியோவ்” என்று கத்தும்படி தோன்றும். மின்னல் வர்ணத்தை வைத்து பருவக்குறிப்புகளைத் தரும் பதஞ்சலியை என்னவென்று வியப்பது. இளம்பூரணரும் பேராசிரியரும் பதஞ்சலியைக் கரைத்துக் குடித்ததால் அதெ பாணியில் உரை எழுதியது மகா அதிசயம். பதஞ்சலி வாழ்ந்ததோ அவர்களுக்கெல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்.

இப்படி சூப்பர்லேட்டிவ் (SUPERLATIVES- LARGEST, OLDEST, BEST, MOST ANCIENT) உரிச் சொற்களைப் போட்டு எழுதியவுடன்

“சரிதாம்ப்பா , உன் வாயை மூடு , இனி வரப்போகும் , கண்டுபிடிப்புகளை சொல்லு. இன்டர்நெட் பற்றி இந்துக்கள் கதைத்தார்களா? அல்லது கம்ப்யுட்டர் ,மொபைல் போன், பேஸ்புக் , கூகிள் மேப் , ஜூம் ZOOM , கிரெடிட் கார்டு , ஈ மெயில் , E MAIL இணையம் பற்றி ஏதேனும் செப்பினர்களா? என்ற கேள்விகளுக்கு ஏற்கனவே பதில் எழுதிவிட்டேன். இனி வரப்போகும் கண்டுபிடிப்புகளையும் மகா பாரத மருத்துவ அற்புதங்களையும் எழுதி இருக்கிறேன் .

இப்போது ‘சப்ஜெக்ட்’டுக்கு வருவோம்

அமா + வாஸ்யை என்றால் என்ன?

ஒரு மாதத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரித்த இந்துக்கள் சூரிய, சந்திரன் இயக்கத்தை நன்கு அறிந்ததால் கிரஹணம் ஏற்படுவதைக் கூட முன் கூட்டி அறிந்தனர். இதை அறிந்த கிருஷ்ண பரமாத்மா சூரிய கிரஹணத்தைப் பயன்படுத்தி ஜெயத்ரத்தனை  வீழ்த்திகியதை நாம் அறிவோம் ; எனது பழைய கட்டுரையில் காண்க

ஒவ்வொரு பவுர்ணமி நாளன்றும் சந்திரன் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு அருகில் வருகையில் அதை  மாதத்தின் பெயர் ஆக்கி அதை மிகப்பெரிய திருவிழா ஆக்கியதையும் காஞ்சிப் பெரியவரின் அற்புதமான உரையில் காண்க. அத்தனையும் பரிபாடல், சிலப்பதிகார காலம் முதல் தமிழர்கள் அப்படியே பின்பற்றியதையும் காண்க.

நிலவு 15 நாள் வளரும் – அது சுக்கில/ வெள்ளை பக்ஷம்

நிலவு 15 நாள் தேயும் ; அது கிருஷ்ண/ கருப்பு  பக்ஷம்

தமிழர்கள் மஹா கெட்டிக்காரர்கள் சுக்ல/ கிருஷ்ண என்ற ‘கலர்’களைத் தூக்கி எறி ந்துவிட்டு  வளர் பிறை , தேய்  பிறை என்று அழகாகப் பெயர் சூட்டினர். . தமிழர்கள் எவ்வளவு பெரிய விஞ்ஞானிகள் என்பதை வாய்மை உண்மை, மெய்மை (Mano, Vaak, Kaaya) என்று சொன்னதிலும் ஒளி/ஒலி (Light and Sound) என்று சொல் உண்டாக்கியத்திலும் புலிக்குப் பிறந்தது (Cat and Tiger belong to same family) பூனையாகுமா? என்ற பழமொழியில் இருப்பதையும் நெல்லும் புல்லும் ஒரே பேமிலி (Paddy, Grass belong to same family) என்று சொன்னதிலும், அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் (Macrocosm is in Microcosm)  உளது , உள்ளது போகாது, இல்லது வாராது (Energy can neither be created nor destroyed)  என்று சொன்னதிலும்,  இருப்பதை ஏற்கனவே காட்டிவிட்டேன்

நிலவைக் காணாத நாளுக்கு ‘அமா வாசை’ என்று நாமகரணம் செய்தனர் இந்துக்கள் .

அமா வாஸ்ய என்றால் ‘சேர்ந்து வசிப்பது’ என்று பொருள்.

வசிப்பது என்ற சம்ஸ்கிருதச் சொல்லை தமிழர்கள் இன்றும் பயன்படுத்தி வருகிறோம்

சூரியனும் சந்திரனும் சேர்ந்து வசிக்கும் நாள் அமா வாசை;  அமா என்றால் ‘சேர்ந்து’ என்று பொருள்.

வெள்ளைக்காரர்களுக்குப் பெயர் கிடைக்காததால் அதை நியூ மூன் new moon  என்று பெயர் சூட்டினர் . அங்கு நியூ new எதுவும் இல்லை. அரேபியர்களோ மூன் moon – நிலவு பற்றி கணக்குத் தெரியாததால் ரம்ஜான் நாள் எது என்று கூட அறிவிக்க முடியாமல் வா னத்தைப் பார்த்துக் கொண்டிருப்பர். நாமோ கிரஹண ம் ஏற்படும் நிமிடத்தை, வினாடியை கூட பல நுற்றாண்டுகளுக்கு முன்னரே பஞ்சாங்கத்தில் எழுதி வருகிறோம்.

சூரியனுக்கு மிக அருகில் சந்திரன் இருப்பதை “சேர்ந்து= அமா”என்று சொல்கிறோம். அதாவது சந்திரனும் சூரியனும் ஒரே நேர் கோட்டில் வருகின்றன சந்திரனின் நிழல் பூமியில் பட்டால்  அதன் பெயர் சூரிய கிரஹணம் . அதாவது நிழல் விழும் பகுதியில் வாழும் மக்கள் சூரியனைப்  பார்க்க இயலாது.

சந்திர கிரஹணம் பவுர்ணமி  அன்றுதான் நிகழும் ;

சூரிய  கிரஹணம் அமாவாசை   அன்றுதான் நிகழும்; .

ஒரு அமாவாசை முதல் மறு அமாவாசை வரை  ஒரு மா தம் என்று கணக்கிடும் வழக்கம் தெலுங்கர், கன்னடியர் இடையே உண்டு .

வாழ்க ஜோதிடம், வளர்க வானியல்

tags- அமாவாசை, அம்மாவாசை

Xxx  subham xxxx

Tamil Article- CONSULT ME TO INSULT (Post No.8924)

COMPILED  BY KATTUKKUTY

Post No. 8924

Date uploaded in London – – 13 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நான் படித்ததில் மிக மிக ரசித்தது “கடுகு”வின் டைரியும்

அவரது மறக்க முடியாத கட்டுரைகளும்- இதோ அவருடைய

ஜோக் ,மிக நன்றியுடன் !!!

பாராட்டிப்பேசுவது ஒரு கலை என்றால் இன்ஸல்ட் செய்வதும்

ஒருகலைதான்!!! “லூயி சஃப்பியன்” தொகுத்துள்ள” இரண்டாயிரம்

இன்ஸல்ட்கள்” என்ற புத்தகத்திலிருந்து சில – கடுகு

அவனுக்கு தன் அழகைப் பற்றி ரொம்ப கர்வம். X- ray எடுக்கப்பட்ட

போது நெகட்டிவை “டச்” செய்யும்படி டாக்டரிடம் சொன்னான்!!!

அவன் காதலுக்குப் போட்டி கிடையாது அவனை அவனே நேசிப்பதினால் !!!!

சென்ஸார்காரர் கேட்டபோது தன் வயது நாற்பத்திரண்டா, நாற்பத்திமூன்றா என்று ஞாபகம் இல்லை.ஆகவே முப்பத்தி

ஐந்து என்று சொல்லிவிட்டாள்!!!

அவன் ஒரு சரியான குடிகாரன்…… கொசு கூட அவனைக்

கடித்தால் அதற்கும் போதை ஏறும்!!!

அந்த விருந்தாளி ஆயிரம் வார்த்தைகளைக் கொட்டிக்

கொண்டிருக்கிறான், ஒரே ஒரு வார்த்தையைத்தவிர,

அது “போய் வருகிறேன்”…….

அவன் வீட்டைக் காலி செய்தபோது கண்ணீர் விட்டார்….

ஆறு மாத வாடகை பாக்கி ஆயிற்றே……..

அவன் எல்லா விஷயத்திலும தலைகீழ்தான்…….அவன் செய்யும்

காரியங்கள் “கூடா ஏடாமாகவோ”,”மாறு ஏறாகவோ”தான்

இருக்கும்……

அவன் தலையில் பத்து செகண்டுகளுக்கு மேல் எதுவும் நிற்காது. தலை வலியைத் தவிர!!!

அவன் பைத்தியக்காரன் மாதிரி பேசுகிறானே, பைத்தியக்காரன்

மாதிரி நடந்து கொள்கிறானே என்று தவறாக எண்ணிவிடாதீர்கள்,

அவன் பைத்தியக்காரன்தான்!!!

யாரோ அவனைப் பார்த்து சில்லறை ஆசாமி என்கிறார்கள்

சில்லறைக்கு இப்போது அதிக மதிப்பு இருக்கும்போது தனக்கும்

அதிக மதிப்பு கிடைக்கும் என நினைத்தான்!!!

அந்த நாடகத்திற்கு வந்தவர்கள போர் என்று சொல்லாதற்கு

காரணம், அவர்களுக்கு தூங்கிக் கொண்டே பேசி பழக்கமில்லை!!!

அவன் ஒரே தவற்றை இரண்டு முறை செயவதில்லை, அவ்வப்போது

புதிது புதிதாக கண்டுபிடிப்பான்!!!

அவனிடம் எல்லா தீர்வுகளுக்கும் பிரச்சினை இருக்கும்!!!!

பணத்திற்கும் அவனுக்கும் ஒத்துக் கொள்வதில்லை…..

அவனுக்கு பணம் கடனாக கொடுங்கள், அவ்வளவுதான், அவன்

ஞாபக சக்தி சேதமடைந்துவிடும்!!!

அப்பா அவனுக்கு சொத்து சேர்த்து வைத்தினால்தான், கல்யாணம்

செய்து கொண்டான் என்பதை அவன் மறுக்கிறான்……அப்பாவிற்கு

பதிலாக யார் சொத்து வைத்துப்போயிருந்தலும் அவனுக்கு

சம்மதமே !!!

சினிமா நடிகை தன் வயது 19 என்று கூறினால் சந்தேகப்படக்

கூடாது. ஐந்து வருடங்களாக எல்லோரிடமும் இதையே அவள்

சொல்லிவரும்போது எப்படி பொய்யாய் இருக்கும்??.

kattukuty image

consult, insult ,

xxxsubhamxxxxx

மஹரிஷிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல் – 3 (Post No.8923)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8923

Date uploaded in London – – 13 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

இந்தக் கட்டுரையுடன் 277 ரிஷிகளின் பெயர்கள் உள்ளன.

மஹரிஷிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல் – 3

ச.நாகராஜன்

214 மஹரிஷிகளின் பெயர்களைப் பார்த்தோம். இனி தொடர்வோம்.

வேத காலத்தில் பல பெண்கள் ரிஷிகளாக விளங்கியுள்ளனர். இவர்களை ரிஷீகா என்ற சொல்லால் குறிப்பிட்டுள்ளனர்.

சில ரிஷீகாக்களின் பெயர்கள் வருமாறு

215) லோபா முத்ரா

    216) ரோமசா

    217)விஸ்வவாரா

    218) ஸஸ்வதி

    219) அபாலா

    220) யமீ வைவஸ்வதீ

    221) ச்ரத்தா காமாயனீ

    222) வசுக்ரபத்னி

    223) கோஷா

    224) சூர்யா

  • இந்த்ராணீ
  • ஊர்வசீ
  • ஸரமா
  • ஜுஹூ
  • வாக்
  • சசி
  • ராத்திரி
  • சிரத்தா காமாயனி

                         ****

II ஜோதிட மஹரிஷிகள் 18 பேர் பட்டியல்

  1. சூர்யா
  2. பிரம்மா
  3. வசிஷ்டர்
  4. அத்ரி
  5. மனு
  6. புலஸ்த்யர்
  7. ரோமசர்
  8. மரீசி
  9. ஆங்கிரஸர்
  10. வியாஸர்
  11. நாரதர்
  12. சௌனகர்
  13. ப்ருகு
  14. ச்யவனர்
  15. யவனர்
  16. கர்கர்
  17. கஸ்யபர்
  18. பராசரர்

இவர்கள் தவிர இன்னும் மூவரும் ஜோதிட ரிஷிகளாகக் குறிப்பிடப்படுகின்றனர்

  1. ஆத்ரேயர்
  2. ஜைமினி
  3. அகஸ்த்யர்

               ***

III ஸ்ரீ தேவியால் பிரலாபிக்கப்பட்ட மஹரிஷிகள் 24 பேர்கள் ஆவர்.

   அவர்கள் வருமாறு:-

  1. வாமதேவர்
  2. கபிலர்
  3. அத்திரி
  4. வசிஷ்டர்
  5. சுக்கிரர்
  6. கண்வர்
  7. பராசரர்
  8. விஸ்வாமித்ரர்
  9. ஸௌனர்
  10. யாக்ஞவல்க்யர்
  11. பரத்வாஜர்
  12. ஜமதக்னி
  13. கௌதமர்
  14. முக்லவர்
  15. வியாஸர்
  16. லோமசர்
  17. அகஸ்தியர்
  18. வத்ஸர்
  19. புலஸ்தியர்
  20. மண்டூகர்
  21. துர்வாசர்
  22. நாரதர்
  23. காசியபர்
  24. கமல முனிவர்

இந்த இருபத்திநால்வரும் சக்தி வாய்ந்த பிரம்ம ரிஷிகள். இவர்கள் அனைவரும் சக்தி உபாசக முனிவர்கள்.

TAGS —  மஹரிஷிகள் -3 பட்டியல் -3

****