
Post No. 8924
Date uploaded in London – – 13 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நான் படித்ததில் மிக மிக ரசித்தது “கடுகு”வின் டைரியும்
அவரது மறக்க முடியாத கட்டுரைகளும்- இதோ அவருடைய
ஜோக் ,மிக நன்றியுடன் !!!
பாராட்டிப்பேசுவது ஒரு கலை என்றால் இன்ஸல்ட் செய்வதும்
ஒருகலைதான்!!! “லூயி சஃப்பியன்” தொகுத்துள்ள” இரண்டாயிரம்
இன்ஸல்ட்கள்” என்ற புத்தகத்திலிருந்து சில – கடுகு
அவனுக்கு தன் அழகைப் பற்றி ரொம்ப கர்வம். X- ray எடுக்கப்பட்ட
போது நெகட்டிவை “டச்” செய்யும்படி டாக்டரிடம் சொன்னான்!!!
அவன் காதலுக்குப் போட்டி கிடையாது அவனை அவனே நேசிப்பதினால் !!!!
சென்ஸார்காரர் கேட்டபோது தன் வயது நாற்பத்திரண்டா, நாற்பத்திமூன்றா என்று ஞாபகம் இல்லை.ஆகவே முப்பத்தி
ஐந்து என்று சொல்லிவிட்டாள்!!!

அவன் ஒரு சரியான குடிகாரன்…… கொசு கூட அவனைக்
கடித்தால் அதற்கும் போதை ஏறும்!!!
அந்த விருந்தாளி ஆயிரம் வார்த்தைகளைக் கொட்டிக்
கொண்டிருக்கிறான், ஒரே ஒரு வார்த்தையைத்தவிர,
அது “போய் வருகிறேன்”…….
அவன் வீட்டைக் காலி செய்தபோது கண்ணீர் விட்டார்….
ஆறு மாத வாடகை பாக்கி ஆயிற்றே……..
அவன் எல்லா விஷயத்திலும தலைகீழ்தான்…….அவன் செய்யும்
காரியங்கள் “கூடா ஏடாமாகவோ”,”மாறு ஏறாகவோ”தான்
இருக்கும்……
அவன் தலையில் பத்து செகண்டுகளுக்கு மேல் எதுவும் நிற்காது. தலை வலியைத் தவிர!!!
அவன் பைத்தியக்காரன் மாதிரி பேசுகிறானே, பைத்தியக்காரன்
மாதிரி நடந்து கொள்கிறானே என்று தவறாக எண்ணிவிடாதீர்கள்,
அவன் பைத்தியக்காரன்தான்!!!
யாரோ அவனைப் பார்த்து சில்லறை ஆசாமி என்கிறார்கள்
சில்லறைக்கு இப்போது அதிக மதிப்பு இருக்கும்போது தனக்கும்
அதிக மதிப்பு கிடைக்கும் என நினைத்தான்!!!
அந்த நாடகத்திற்கு வந்தவர்கள போர் என்று சொல்லாதற்கு
காரணம், அவர்களுக்கு தூங்கிக் கொண்டே பேசி பழக்கமில்லை!!!
அவன் ஒரே தவற்றை இரண்டு முறை செயவதில்லை, அவ்வப்போது
புதிது புதிதாக கண்டுபிடிப்பான்!!!
அவனிடம் எல்லா தீர்வுகளுக்கும் பிரச்சினை இருக்கும்!!!!
பணத்திற்கும் அவனுக்கும் ஒத்துக் கொள்வதில்லை…..
அவனுக்கு பணம் கடனாக கொடுங்கள், அவ்வளவுதான், அவன்
ஞாபக சக்தி சேதமடைந்துவிடும்!!!
அப்பா அவனுக்கு சொத்து சேர்த்து வைத்தினால்தான், கல்யாணம்
செய்து கொண்டான் என்பதை அவன் மறுக்கிறான்……அப்பாவிற்கு
பதிலாக யார் சொத்து வைத்துப்போயிருந்தலும் அவனுக்கு
சம்மதமே !!!
சினிமா நடிகை தன் வயது 19 என்று கூறினால் சந்தேகப்படக்
கூடாது. ஐந்து வருடங்களாக எல்லோரிடமும் இதையே அவள்
சொல்லிவரும்போது எப்படி பொய்யாய் இருக்கும்??.

consult, insult ,
xxxsubhamxxxxx