
WRITTEN BY KATTUKKUTY
Post No. 9075
Date uploaded in London – – 25 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Kattukutty
(கோகுலம் கதிர் -2001 இதழ் மற்றும் பல பழைய இதழ்களில் வெளி வந்தவை)

சொல் பாரதி
ஜகத்தினை அழிக்கலாமா?
எனக்கு உணவில்லை?
xx
தேர்தல் திருவிழா!
முக்கிய அறிவிப்பு
திருடர்கள்
ஜாக்கிரதை!!!
xx
மற்றவர் வீடு கட்ட
ஜாதகம் பார்த்தார்
மரத்தடி ஜோஸ்யர்
xxx
குரங்கிலிருந்து மனிதன்
மனிதனிடமிருந்து
மதம் – ஜாதி
xxx

நடசத்திரக் கூட்டணியால்
நிலா ஆட்சி கவிழ்ப்போ?
அமாவாசை……
xxx
நடக்க விருப்பமின்றி
அந்தரத்தில் தொங்கும் சிலந்திக்கு
எதுக்கு எட்டு கால்கள்?
xxx
உப்பு கரித்து விட்டதால்
கடல் நீரை துப்பி
விட்டதோ வானம்?
xxx
கல் எறிந்தேன்
கைது செய்ய நீளுகிறது
குளத்தின் வளையங்கள்
Xxxx
எடுக்க எடுக்க
முளைக்கிறது
சாலையோரக் கடைகள்!!!
xxx

கட்டடங்கள் உயர
காணாமல் போனது
மரங்கள்…….
xxx
ஓட்டையாகுமோ
ஓசோன் மண்டலம்?
என் மனைவியின்
பெரு மூச்சால்?
xxx
நாற்பது ஆண்டுகளாய்
உழைத்தும் உயர வில்லை
உழைப்பாளிகளின் சிலை?
xxx
அவள் ஊரிலில்லை
தகவல் தந்தது
கோலமிடாத வாசல்!
xxx
வேலை நிறுத்தம்
குழப்பம் தான்
நின்று போன கடிகாரம்……
xxx
பிழைக்கத் தெரியாதவன்
என்ற முத்திரை
நேர்மையாளனான
என் முதுகில்!
xxx
தலையில் கிரீடம்
வீதியில் உணவு
குப்பையைக் கிளறும் சேவல்!
xxxx
யார் சொல்லுவார்
என் எதிர்காலம்?
ஆசைப்பட்டது கிளி…….
xxx
வெளியே இருந்து
சிரித்தது கொசு!
வலைக்குள் மனிதன்!
xxxx
கட்சி மாறி, கொடி மாற்றினான்
வெட்கத்தால் வண்ணம்
மாறியது கம்பம்……
xxx
தரையைத் தொடவில்லை
ஆல விழுதுகள்
கிள்ளி எறியும் கைகள்!
xxx
விதையொன்று போட்டோம்
சுரையொன்று முளைத்தது
சுதந்திரம்!
xxxx

கடவுள்
இருக்கிறாயோ இல்லையோ
உன்னை தேடுவதிலே ஒரு சுகம்
இருக்கின்றது……..
அந்த “சுகம்” ஒன்றே
உனது இருப்புக்கு
ஆதாரமாகின்றது !!!
xxx
பெண்களே யோசியுங்கள்!!!
பாரதி யோசித்தார்,
விடுதலை கவிகள் தோன்றியது!!!
காந்தி யோசித்தார்
ஆயுதங்கள் தாழ்ந்து
அமைதி தோன்றியது!!!
காமராஜர் யோசித்தார்
மதிய உணவு தோன்றியது!!!
பெண்களே நீங்கள் யோசியுங்கள்.
வரதட்சிணைப் பேய் ஒழியட்டும்,
சிசுக் கொலை ஒழியட்டும்,
ஆடைக் குறைப்பு ஒழியட்டும். செ.ஜின்னா,
பூலங்குடி

xxx
அம்மா எப்போது கேட்பேன் ………..
பெண்ணுடன் ஸ்நேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்ணைக் குத்தும் என்றாய்
தின்பதற்கு ஏதும் கேட்டால்
வயிற்றுக்கு கெடுதல் என்றாய்
ஒரு முறை தவிட்டுக்காக
வாங்கினேன் என்னை என்றாய்
எத்தனை பொய்கள்
என்னிடம் சொன்னாய் அம்மா
அத்தனை பொய்கள் சொன்ன நீ
எதனாலின்று நிறுத்திக் கொண்டாய்
தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய்விட்டதன்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லை என்றெண்ணிணாயா?
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய் பொய் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தை
சார்ந்ததாக கருதினாயா?
தாய்பாலை நிறுத்தினார் போல
தாய் பொய்யை நிறுத்தலாமா?
உன் பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்களை???
கவிஞர். ஞானக் கூத்தன்

Tags- பெண்களே யோசியுங்கள், பிடித்த கவிதைகள் 4,
***