ஆலயம் அறிவோம்! காசி (Post.9034)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9034

Date uploaded in London – –14 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் 13-12-2020 அன்று ஒளிபரப்பான உரை. இதை www.facebook.com/gnanamayam தளத்திலும் youtubeலும் எப்போதும் காணலாம்.

ஆலயம் அறிவோம்!    

வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது  ஏழு மோக்ஷபுரிகளில் நடு நாயகமாகத் திகழும் காசி ஸ்தலமாகும். இதன் புனிதத்தன்மையையும்  மஹிமையையும் யாராலும் முழுவதுமாக விளக்க முடியாது. 1800 கோவில்கள் உள்ள நகரம் உலகிலேயே காசி ஒன்று தான் என்று சரித்திர ஆசிரியர்கள் வியந்து கூறுகின்றனர். அன்னபூரணி,விசாலாட்சி, துண்டி கணபதி, துர்க்கா, சங்கட விமோசன ஹனுமான், கால பைரவர், பசுபதிநாதர், பிந்து மாதவர் என மஹிமை வாய்ந்த ஆலயங்கள் பல இங்கு உள்ளன. ஆகவே இரவும் பகலுமாக பக்தர்கள் கூட்டத்தை ஆங்காங்கே கண்டு கொண்டே இருக்கலாம்.

அத்துடன் மிக அதிகமான புண்ணிய ஸ்நான கட்டங்கள் கங்கைக் கரை ஓரம் அமைந்திருக்கும் இடமும் காசி தான்.

க்ருதே த்ரிசூலவத் ஞேயம் த்ரேதாயாம் சக்ரவத்ததா |

த்வாபரம் து ரதாகாரம் ஷங்காகாரம் கலௌ யுகே ||

கிருத யுகத்தில் திரிசூல வடிவத்திலும், திரேதாயுகத்தில் சக்கர வடிவத்திலும், துவாபர யுகத்தில் தேர் வடிவத்திலும் கலி யுகத்தில் சங்கு வடிவத்திலும் காசி க்ஷேத்திரம் இருப்பதாக காசி ரகஸ்யம் கூறுகிறது.

காசி என்றால் ஒளி தரும் இடம் என்று பொருள்.

காசி என்றவுடன் கங்கை நதி நம் மனதிலே எழுந்தருளுவாள்.

அரிய தவம் செய்து பகீரதன் கங்கையை பூமிக்குக் கொண்டு வந்த வரலாற்றை நாம் அனைவரும் அறிவோம். அனைத்துப் பாவங்களையும் போக்கும் புனித நதி கங்கை.

கங்கைக் கரை ஓரமாகச் சென்றால் காசியின் நீளம் சுமார் நான்கு மைல்கள். இந்தப் பகுதியில் 64 ஸ்நான கட்டங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானவை ஐந்து.

அஸி கட்டம் என்பது காசியின் தொடக்கத்தில் இருப்பது. இங்கு தான் அஸி நதி கங்கையுடன் கலக்கிறது. தச அசுவமேத கட்டம் என்பது பத்து அசுவமேத யாகங்களைச் செய்வதால் கிடைக்கும் பலனைத் தரும் கட்டம்.வருணாகட்டம் என்பது வருணா நதி சங்கமம் ஆகும் இடம் ஆகும். அடுத்து பஞ்ச கங்கார கட்டம் என்பது ஐந்து நதிகள் கங்கையுடன் சங்கமம் ஆகும் இடத்தில் அமைந்துள்ள கட்டமாகும். எல்லாவற்றையும் விட மிக முக்கியமான கட்டம் மணிகர்ணிகா கட்டம். இதுவே பிரதான ஸ்நான கட்டமாகும். இந்த ஐந்து கட்டங்களில் நீராடியவர்கள் பித்ரு காரியங்களைச் செய்வது மரபு.

மணிகர்ணிகா கட்டத்தில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ளது அரிச்சந்திரா காட்! இங்கு தான் சந்திரமதி தன் மகன் லோகிதாசனை எரிக்க வரும் போது அரிச்சந்திரன் வெட்டியானாக வந்து பார்த்த இடம்.

இந்த ஸ்நானத்தை முடித்தவுடன் மணிகர்ணிகா கட்டத்திற்கு அருகில் உள்ள தாரகேஸ்வரர் ஆலயம் சென்று ஸ்வாமியைத் தொட்டு பூஜிக்கலாம். கங்கை நீரை எடுத்துக் கொண்டு வந்து அபிஷேகமும் செய்யலாம்.  மேலே துர்க்கையம்மன் ஆலயம் உள்ளது. இந்த தரிசனத்தை முடித்த பின்னரே காசி விஸ்வநாதரைத் தரிசிக்க வேண்டும் என்பது பாரம்பரிய பழக்கமாகும்.

     காசி விஸ்வநாதர் ஆலய பிரகாரம் வழவழப்பான சலவைக் கல்லால் அமைந்துள்ள பிரகாரமாகும். மையத்தில் விஸ்வநாதரின் கர்பக்ருஹம் உள்ளது. கங்கை நீர், பால் ஆகியவற்றால் பக்தர்கள் விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகும்.

இந்த ஆலயத்தை ராணி அகல்யாபாய் கட்டியதாக வரலாறு கூறுகிறது. கோவிலில் இருபத்தி இரண்டு மணங்கு தங்கத் தகடுகள் பயன்படுத்தப்பட்டன. ஆகவே இதை தங்க ஆலயம் என்றே அனைவரும் அழைக்கின்றனர்.

       தேவியானவள் காசி ஈஸ்வரருக்கு உணவு அளித்த இடம் இது.

இங்குள்ள அன்னபூரணி கோவிலை மராட்டிய மன்னர்கள் பயபக்தியுடன் வடிவமைத்துள்ளனர். கோயிலின் நடுவில் எண்கோண வடிவத்தில் மண்டபம் உள்ளது. அதை பன்னிரெண்டு கல் தூண்கள் தாங்குகின்றன. பலவித ரத்தினங்கள், மணிகள் பதிக்கப்பட்ட மணிமகுடத்துடன் அழகிய  ரூபத்தில் காட்சி தரும் அன்னபூரணிக்கு கீழே ஸ்ரீ சக்ர மேரு யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

       இடது கரத்தில் தங்கக் கிண்ணம், வலது கரத்தில் தங்கக் கரண்டி இவற்றுடன் பிட்சை ஏந்தி நிற்கும் இறைவனுக்கே அன்னம் அளிக்கிறாள் லோகமாதா.

அம்பாளின் அருகே இரு புறமும்  தங்கத்தினால் ஆன ஸ்ரீ தேவியும் பூதேவியும் கொலுவிருந்து கையைத் தூக்கி ஆசீர்வதித்து அருள்கிறார்கள்.

அன்னபூரணி ஆலயத்திற்குச் சற்றுத் தொலைவில் விசாலாட்சி ஆலயம் அமைந்துள்ளது. குத்துவிளக்கு எரிய கர்பக்ருஹத்தில் தேவியை தரிசித்து குங்கும அர்ச்சனையையும் செய்யலாம்.

கங்கா ஸ்நானம் செய்து காசி விஸ்வநாதரையும் அன்னபூரணியையும் தொழுதால், பாவம் தொலையும், புண்ணியம் சேரும், முக்தி கிடைக்கும். வாழ்நாள் முழுவதும் அன்னத்திற்கு பஞ்சமில்லை, எப்போதும் எதிலும் வெற்றியே கிடைக்கும்.

காசியின் முக்கியமான மூர்த்திகளைச் சொல்லும் ஒரு ஸ்லோகம் உண்டு.

விஸ்வேஸம், மாதவம், துண்டிம், தண்டபாணிஞ்ச, பைரவம் – வந்தே

காசிம், குஹாம், கங்காம், பவானிம், மணிகர்ணிகாம் என்பதே அது.

துளஸிதாஸர், கபீர் தாஸர் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் வாழ்ந்த இடம் இது. இன்றும் ஏராளமான மகான்களும் சித்தர்களும் இருந்து வரும் தலம் காசி! காலம் காலமாக கோடிக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் புனித காசி யாத்திரை மேற்கொண்டு கங்கையில் ஸ்நானம் செய்து வணங்கி வரும் காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி, அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.     நன்றி

——-

திரைப்படங்களில் பாரதியார்! – 1 (Post 9033)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9033

Date uploaded in London – – 14 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழாவினை ஒட்டி லண்டனிலிருந்து வாரம்தோறும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் பல சிறப்பு ஒளிபரப்புகள் இடம் பெறுகின்றன. 13-2-2020 அன்று ஒளிபரப்பான உரை இது.

ஒளிபரப்பை facebook.com/gnanamayam & youtube ஆகிய தளங்களில் எப்போதும் காணலாம்.

திரைப்படங்களில் பாரதியார்! – 1

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

பாரதியார் நினைவு நூற்றாண்டு விழாவிலே பாரதியாரை நினைத்துப் போற்றுவதே தமிழர் செய்த பெரும் பாக்கியமாகும்.

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் என்ற் ஒரு நூலை எழுதி 2014ஆம் ஆண்டு நான் வெளியிட்டேன். இது நிலாச்சாரல் இணையதள் இதழில் 52 வாரங்கள் தொடர்ந்து வந்த ஒரு தொடர் ஆகும்.

அச்சுப் பதிப்பாக வந்துள்ள இந்த நூலுக்கு அணிந்துரை அளித்துள்ள பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார்  எல்லாத் துறை வாசகர்களுக்கும் ஒரு ஆர்வத்தைத் தூண்டுவதாக எழுதப்பட்டுள்ள நூல் இது என்று பாராட்டியுள்ளார். இதே நூல் மின்னணு வடிவில் www.nilacharal.com வெளியீடாக வந்துள்ளது.

இதில் மூன்று அத்தியாயங்கள் மகாகவி பாரதியாரின் பாடல்கள் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளதை விவரிக்கின்றன. அந்த மூன்று அத்தியாயங்களின் அடியொட்டி இந்த உரையை இங்கு ஆற்றுகிறேன்.

தமிழில் திரைப்படங்கள் தோன்றி வெளிவர ஆரம்பித்து ஆண்டுகள் பல கடந்து விட்டன. திரைப்படங்களின் வளர்ச்சியோடு கூட பல்வேறு புதிய நல்ல விஷயங்கள் தமிழ் உலகிற்குக் கிடைத்தன.

அந்த நல்ல விஷயங்களுள் முக்கியமான ஒன்று பாரதியார் பாடல்கள்.

1947ஆம் ஆண்டு வெளியான பைத்தியக்காரன் திரைப்படத்தில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய பாடல் ஒன்று இடம் பெற்றது. பாடியவர் பி.ஏ.பெரியநாயகி. சிறந்த பாடகர்.

பாடல் இது தான்:

பாட்டுக்கொடு புலவன் பாரதி அடா – அவன்

   பாட்டைப் ப்ண்ணோடொருவன் பாடினான் அடா

கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனே அடா – அந்தக்

   கிறுக்கில் உளறு மொழி பொறுப்பாய் அடா

சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே அடா கவி

 துள்ளும் மறியைப் போலே துள்ளும் அடா

கல்லும் கனிந்து கனியாகுமே அடா – பசுங்

கன்றும் பால் உண்டிடாது  கேட்குமே அடா

குயிலும் கிளியும் பாட்டில் கூவுமே அடா – மயி’

  குதித்துக் குதித்து நடம் ஆடுமே – அடா

வெயிலும் மழையுமதில் தோன்றுமே அடா – மலர்

 விரிந்து விரிந்து மணம் வீசுமே அடா

அலைமேலே அலை வந்து மோதுமே அடா – அவை

  அழகான முத்தையள்லிக் கொட்டுமே அடா

மலைமேலே மலை வளர்ந்தோங்குமே அடா

  வனங்கள் அடர்ந்தடர்ந்து சூழுமே அடா

இது ஒரு நீண்ட பாடல். இந்தப் பாடலின் சில சரணங்கள் மட்டும் பைத்தியக்காரன் படப் பாடலில் இடம் பெற்றது. இன்னும் சில சரணங்களை மேலே காணலாம்.

அமரகவி என்ற இந்தப் பாடல் எட்டயபுரம் பாரதி மண்டபத் திறப்பு விழாவின் போது கல்கி 12-10-1947 தேதியிட்ட இதழில் வெளி வந்த பாடல்.

பல அரும் பாடல்களை கலைமகள் இதழ் முன்பேயே வெளியிட ஆரம்பித்து விட்டது.

பாரதியாரின் பாடல்களைப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து ஏ வி எம் மெய்யப்ப செட்டியார் வாங்கி இருந்தார். பின்னர், அப்போது தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பாரதியாரின் கவிதைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பாரதியாரின் பாடல்கள் பல்வேறு திரைப்படங்களில் இடம் பெற ஆரம்பித்தன.

நாம் இருவர் என்ற படம் 1947 ஜனவரி  மாதம் 14ஆம் தேதி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

அதில் சோலை மலர் ஒளியோ என்ற அரிய பாடல் இடம் பெற்றது.

சுதர்ஸனம் இசையமைப்பில் டி.ஆர்.மகாலிங்கம் தனது கணீர் குரலில் பாடிய அற்புதப் பாடல் இது.

சுட்டும் விழிச்சுடர் தான் என்ற பாரதியாரின் கவிதையிலிருந்து,

சோலை மலரொளியோ – உனது

சுந்தரப் புன்னகை தான்?

நீலக் கடலலையே

உனது நெஞ்சில் அலைகளடீ

என்ற வரிகளை டி.ஆர். மகாலிங்கம் அற்புதமாகப் பாடுகிறார்.

இதைத் தொடர்ந்து ‘ஆசை முகம் மறந்து போச்சே’ என்ற பாரதியாரின் கவிதையிலிருந்து,

‘கண்ணில் தெரியுதொரு தோற்றம் -அதில்

கண்ணன் அழகு முழுதில்லை

நண்ணு முகவடிவு காணில் அந்த

நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்

என்ற பெண் குரல் ஒலிக்கிறது.

அடுத்து ‘பாயும் ஒளி நீ எனக்கு’ என்ற கவிதையிலிருந்து,

‘வெண்ணிலவு நீ எனக்கு – மேவு கடல் நான் உனக்கு’

பண்ணு சுதி நீ எனக்கு – பாட்டினிமை நான் உனக்கு

எண்ணி எண்ணிப் பார்த்திடில் ஓர் எண்ணமில்லை நின் சுவைக்கே

கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!

என்ற வரிகள் ஒலிக்கின்றன.

கவிதையின் சுவையை எண்ணி எண்ணிப் பார்த்திடில் அதன் சுவைக்கு ஒர்ர் ஒப்புவமையே இல்லை.

அதற்கு அற்புதமாக இசை அமைக்கப்பட அதை டி ஆர் மகாலிங்கம் பாடுவதை எத்தனை முறை கேட்டாலும் அலுப்புத் தட்டாது.

அடுத்து வந்தது வேதாள உலகம். அதில் இடம் பெற்ற பாரதியாரின் கவிதைகளை அடுத்த உரையில் காண்போம்.

வாழ்க பாரதி நாமம். வாழ்க தமிழ்! வாழிய பாரத மணித் திருநாடு!

நன்றி வணக்கம்.

***

PLEASE JOIN US TODAY 14-12- 2020 MONDAY

PLEASE JOIN US TODAY 14-12- 2020 MONDAY

WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH BY

MRS SUJATHA RENGANATHAN

AND IN TAMIL BY

MRS VAISHNAVI ANAND

XXXX

KATTUKUTY SRINIVASAN ON PLANET SUKRA/VENUS

DR NARAYANAN KANNAN  ON TAMIL VAISHNAVAM

MISS LAYASHRI SPEAKING

xxxx

MRS Karpagam iyer, Mrs Nirmala Natarajan , Mrs. Annapurani Panchanathan, Mr Balasubrhmanyan  are singing

Xxx

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

NOW WE HAVE EXTENDED IT ON ONE MORE DAY, ON SUNDAYS.

BOTH OUR BROADCASTS ARE NON POLITICAL AND NON COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS A ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM

SUNDAYS  FOR TAMIL LANGUAGE

WHO DOES THIS?

I  (LONDON SWAMINATHAN) DO IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM  AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM / GNANAMAYAM

PLEASE VISIT FACEBOOK.COM / GNANAMAYAM FOR THE PRODUCTIONS OF PAST WEEKS.

ALSO ON YOUTUBE / GNANAMAYAM

XXX

ANNOUNCEMENTS

ON CHRISTMAS DAY WE DO A SPECIAL BROADCAST FOR SCHOOL STUDENTS.

STUDENTS UP TO GCSE LEVEL ARE WELCOME TO SING, SPEAK , DANCE AND DO YOGA DEMOS. MAXIMUM FIVE MINUTES PER PERSON. NO FILM SONGS ARE ALLOWED, LANGUAGE NO BAR.

XXX

A GLOBAL RUDRA RECITATION IS ORGANISED FOR THE WELFARE OF HUMANITY- PLEASE JOIN US ON 2, 3 rd JANUARY, 2021

XXX

BHARATI MEMORIAL CENTENARY CELEBRATIONS

WE HAVE BEEN BROADCASTING 54 BHARATI SONGS IN NEW RAGAS.

Mrs Harini Raghu of London, Mrs Lakshmi Ramesh of Chennai, Mr Suryanarayanan of Chennai have been presenting Bharati songs in the newest Ragas. Please hear them every Sunday

Mrs Vidhya is presenting Bharati episodes from Dubai.

PLEASE JOIN US AND PRESENT YOUR VERSION.

LIVE PRESENTERS GET PREFERENCE OVER RECORDED CLIPS.

WE WILL SEND YOU THE ZOOM LINK WHEN U R READY.

YOU MAY CONTACT GNANAMAYAM OR swami_48@yahoo.com

Xxx

What is New?

GLOBAL RUDRA PARAYANA IN JANUARY 2021

ஶிவமயம்

அகண்ட ருத்ர பாராயண வழிபாடு

எல்லாம் வல்ல மாதொருபாகன் திருவருளும் குருவருளும் துணை நிற்க நிகழும் மங்களகரமான ஶார்வரீ வருஷம் மார்கழி மாஸத்தில் (02&03.01.2021) சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு தினங்களும் ஶ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஶ்ரீஶ்ரீஶ்ரீ ஸ்வாமிகளின் அனுக்ரஹத்துடன் உலகத்தில் உள்ள ஐந்து கண்டங்களிலில் உள்ள ஆஸ்தீகபெருமக்கள் ஒருங்கிணைந்துஅகண்ட ருத்ர பாராயணம் செய்ய திருவருள் கூட்டியுள்ளது.

வஸுதைவ குடும்பகம் என்பதே ஸனாதன தரமத்தின் தாரக மந்திரம். உலகெங்கும் தற்போது நோய்தொற்றினால்  அசாதாரண

சூழல் நிலவி வருகின்றது.இந்த வெப்பு நோயிலிருந்தே மீண்டு உலக மக்கள் அனைவரும் நோயற்ற வாழ்வோடு இனிதே வாழ அகண்ட ஶ்ரீருத்ர பாராயண ப்ரார்த்தனையானது ஏற்பாடாகி உள்ளது

அகிலமெங்கும் ஆஸ்தீக தர்ம் தழைக்க அரும்பாடு ஆற்றிவரும்

அனைவருக்கும் ஈஸ்வரானுக்ரஹத்தால் சகல க்ஷேமங்களும் உண்டாக ப்ரார்த்திக்கின்றோம்.

 நடக்கவிருக்கும் இந்த ஜபயக்ஞத்தில் கலந்துகொள்ள

விரும்புபவர்கள் 

தங்களது விபரங்களை பதியுமாறு ப்ரார்த்திக்கின்றோம்

Xxx

INDEX 38 FOR LONDON SWAMINATHAN’S ENGLISH & TAMIL ARTICLES (Post 9032)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9032

Date uploaded in London – –13 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

JANUARY  2016 posts

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9000 PLUS POSTS.

INDEX 38 FOR LONDON SWAMINATHAN’S  ENGLISH & TAMIL ARTICLES 

2016  JANUARY TAMIL ARTICLES

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! (Post No. 2494);31-1-2016

பேனா முனையும், கத்தி முனையும்! சொல் வீச்சும்

வாள் வீச்சும்! 2 சம்பவங்கள் (Post No. 2490);30/01

அண்டப்புளுகன், ஆகாசப் புளுகன், கச்சந்திப் புளுகன்,

 பீப்பாய் புளுகன் கதை (Post No. 2487); 29/01

காளிகோவில் பூசாரி : வாரியார் சொன்ன கதை (Post No. 2486);13/01

வாரியார் சொன்ன ஸஜ்ஜன சாருகர் கதை

: ‘அவ்வினைக்கு இவ்வினை’ (Post No. 2483); 12/01

மர்தனம் குணவர்தனம்: குணங்கள் பற்றிய

சம்ஸ்கிருத பழமொழிகள் (Post No. 2479);11/01

பழைய ஜோக்குகள்:ஸ்ரீதேவிக்கும், மூதேவிக்கும் சம்வாதம்! (Post No. 2476)10/01

எல்லாம் நன்மைக்கே’- சுவாமி ராமதாஸ் சொன்ன கதை (Post No. 2474); 9/1

விஷ்ணு ஓடி ஒளிந்த இடம்! நாரதர் கேள்வி!!(Post No. 2470);8/1

வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க………….

. தீயினில் தூசாகும் – ஆண்டாள் (Post No. 2467);7/1

துப்பறியும் கதை நிபுணரை அசத்திய டாக்ஸி டிரைவர்! (Post No. 2465);6/1

யாழ்ப்பாணத் தமிழறிஞர் செய்த “100 செயல்” அற்புதம்! (Post No. 2461) 5/1

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! வசுதைவ குடும்பகம்!! (Post No. 2458)14/1

ஒரு குட்டிக் கதை: “நுணலும் தன் வாயால் கெடும்”(Post No. 2455);3/1

சென்னை மழையில் உலராத மன ஈரம் (Post No. 2454)

மாணாக்கராற்றுப்படை: பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்2/1

அன்பென்று கொட்டு முரசே!’– புத்தாண்டு சிந்தனைகள்! (Post No. 2448);1-1-2016

XXXX

2016  JANUARY ENGLISH ARTICLES

S NAGARAJAN’S ARTICLES ALREADY LISTED HERE:-2493, 2491, 2488,2484, 2481, 2478, 2475, 2472, 2469, 2466, 2463, 2460, 2450, 2447,

Better go to Heaven in rags than to Hell in embroidery! (Post No. 2495);31-1-2016

Put Fire in the Poem or Poem in the Fire! (Post No. 2492); 30/01

Pen is mightier than sword! (Post No. 2489);29/01

Conversation teaches more than Meditation (Post No. 2485);13/01

Nature has given us 2 eyes, 2 ears, 2 nostrils, 2 legs, 2 hands, but ONE MOUTH! Why? (Post No. 2482);12/01

Words cut more than Swords! (Post No. 2480)11/01

SPEECH PROVERBS: Tongue talks at Head’s cost! (Post No. 2477);10/01

God does everything for good! (Post No. 2473); 9/1

A proverb is an ornament to language (Post No. 2471); 8/1

Where was Vishnu hiding? (Post No. 2468); 7/1

Tamil Genius! 100 tasks done simultaneously! (Post No. 2462); 5/1

Nude woman running down the street! Police and

Detectives Anecdotes!!( Post No. 2464);6/1

What is Dance, Drama?-1 (Post No. 2459)

natyashastr2 -4/1

God forgives sins, otherwise heaven would be empty! (Post No. 2456);4/1

One Hundred Quotations on God!—Part 1 (Post No. 2453)

Four Interesting Speech Anecdotes! (Post No. 2449)1-1-2016

A Novel Fortune-Teller (Acche Din aane waale hain)! (Post No. 2446); 1-1-2016

tags- index-38, January 2016, swaminathan posts, 

——SUBHAM——

வேதத்தில், பெரிய புராணத்தில் குங்கிலிய மர்மம்!- Part 2 (Post No.9031)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9031

Date uploaded in London – –13 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அதர்வண வேதத்திலும் யஜுர் வேதத்திலும் உள்ள குங்கிலிய மர்மத்தை கட்டுரையின் முதல் பகுதியில் கண்டோம் , வேத காலத்திலேயே குக்குல், குல்குலு , குக்குலு என்று பல பெயர்களால் அழைக்கப்பட்ட குங்கிலியத்தை இந்தியா பாபிலோனியாவுக்கும் அங்கிருந்து எகிப்துக்கும் ஏற்றுமதி செய்தது.

XXX

குங்கிலியக் கலய  நாயனார் செய்த அற்புதங்கள்

குங்கிலியத்தின் பெயர்கொண்ட ஒரு சிவபக்தர் 1400 ஆண்டுகளாக குங்கிலியத்தின் பெருமையைப் பரப்பி வருகிறார். அவருடைய பெயர் குங்கிலியக் கலய நாயனார். அவருடைய முழு வரலாறு பெரிய புராணத்தில் உள்ளது. அவர் வாழ்க்கையில் நடந்த இரண்டு அற்புதங்களைக் காண்போம்.

திருக்கடவூர் என்னும் தலம் அபிராமி அம்மனாலும் அமிர்தகடேஸ்வரராலும் புகழ்பெற்றது. அங்கு அந்தணர் குலத்தில் அவதரித்தார் கலய நாயனார்

வாய்ந்த நீர் வளத்தால் ஓங்கி மன்னிய பொன்னி நாட்டின்

ஏய்ந்த சீர் மறையோர் வாழும்  எயில்பதி நீர்க் கங்கை

என்று  புகழ் பாடுகிறார் சேக்கிழார் பெருமான். மார்கண்டேயனை க் காப்பாற்றுவதற்காக, சிவ பெருமான்  யமனைக் காலால் உதைத்து ஒடுக்கிய தலம் என்பதையும் சொல்லத்  தவறவில்லை.

அங்கு ‘அருமறை முந்நூல் மார்பின் அந்தணர் கலயர்’ என்பார் அவதரித்தார் . அவர்

காலனார் உயிர் செற்றார்க்கு — சிவனுக்கு — கமழ்ந்த குங்கிலியத் தூபம் சாலவே நிறைந்து விம்ம இடும்பணி தலை நின்றுள்ளார்.

இவ்வாறு சிவனுக்கு குங்க்லிய தூபப் பணியில் ஈடுபட்ட அவர் குடும்பத்தை வறுமை வாட்டியது.

எந்த அளவுக்கு வறுமை என்றால், இரண்டு நாட்களுக்கு அவர் குடும்பத்தினர் உண்ணவே ஒன்றுமில்லாமல் தவித்தனராம் — உடனே மனைவி தன்னுடைய  தங்கத் தாலியைக் கொடுத்து  நெல் வாங்கி வாருங்கள் என்று அனுப்பினார்

யாதும் ஓன்றும் இல்லையாகி

இருபகல்  உணவு மாறிப்

பேது உறு மைந்தரோடும் பெருகு

சுற்றத்தை நோக்கிக்

காதல் செய் மனைவியார் தம்

கணவனார்க் கலயனார் கைக்

கோது  இல் மங்கள நூல் தாலி

கொடுத்து நெல் கொள்ளும் என்றார்.

அப்போது அவர் செல்லும் வழியில்

 ஒப்பு இல் குங்கிலியம்  கொண்டு ஓர்

வணிகனும்  எதிர் வந்துற்றான்

குங்கிலியத்தை சிவபெருமானுக்குத் தரும் என்றவுடனே

பொன் தரத் தாரும் என்று

புகன்றிட  வணிகன் தானும்

என் தர இசைந்து என்னத்

தாலியைக் கலயர் ஈந்தார்

கோவிலுக்கு மகிழ்சசியுடன் சென்று வேண்டும் மட்டும் குங்கிலியப் புகைபோட்டு இறைவனை வணங்கினார் . மனைவி மக்களை மறந்து கோவிலிலேயே தூங்கியும் விட்டார் . அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

குபேரன் செல்வம் போன்ற மிகப் பெரிய செல்வத்தை சிவ பெருமான்  கலயர் வீட்டில் பொழிந்தார். இந்த அற்புதத்தை கலயர் கனவிலும் செப்பினார் . இது நமக்கு கண்ண பிரான்- குசேலர் கதையை நினைவுபடுத்தும். சுதாமா என்னும் குசேலர் கொணர்ந்த ஒரு பிடி அவலை கிருஷ்ண ன் சாப்பிட்ட அடுத்த நொடியில் அந்த ஏழை சுதாமாவின் குடிசை எப்படி அரண்மனை ஆயிற்றோ அப்படி கலயரின் குடிலும் மாளிகை ஆயிற்று ; மளிகைப் பொருட்களும் குவிந்தன .

இதோ சேக்கிழார் சொற்கள்

அன்பர் அங்கு இருப்ப நம்பர்

அருளினால் அளகை வேந்தன்

தன் பெரிய நிதியம் தூர்த்துத்

தரணிமேல் நெருங்க எங்கும்

பொன்பயில் குலையும் நெல்லும்

பொரு இல்  பல் வளனும்  பொங்க

மன் பெரும் செல்வம் ஆக்கி

வைத்தனன் மனையில் நீட .

அளகை வேந்தன் = குபேரன்

இது முதல் அற்புதம்.

xxx

இரண்டாவது அற்புதம் என்னவென்றால், திருப்பனந்தாள் என்னும் தலத்தில்  சாய்ந்து போன இலிங்கத்தை தனது கழுத்தில் கட்டிய கயிற்றின் பலத்தால் நிமிர்த்திய செய்கையாகும். அவருக்கு முன்னதாக, சோழ மன்னன் பல யானைகளைக் கொண்டு லிங்கத்தை நிமிர்த்த முயற்சி செய்து தோல்வியுற்றான்.

யானைகளாலும் நிமிர்த்த முடியாத சிவலிங்கத்தை அன்பு எனும் பாசக்கயிற்றால் நிமிர்த்தினார் கலயர்  என்று சேக்கிழார் புகழ்கிறார்.

மானவன் கயிறு பூண்டு

கழுத்தினால் வருந்தல் உற்றார்

கயிற்றை சிவலிங்கத்தில் கட்டி மற்றோர் புறத்தை தன கழுத்தில் மாலை போலாக கட்டிக்கொண்டு பலம் முழுதையும் செலுத்தினார் . அது வெறும் கயிறு அல்ல. அன்பெனும் கயிறு. சிவ பெருமான் ‘ அன்பெனும் வலையில் அகப்படும் மலை ‘ அல்லவா !

நண்ணிய ஒருமை அன்பின்

நார் உறு  பாசத்தாலே

திண்ணிய தொண்டர் பூட்டி

இளைத்த பின் , திறம்பி நிற்க

ஒண்ணுமோ கலயனார் தம்

ஒருப்பாடு கண்டபோதே

அண்ணலே நேரே நின்றார்

அமரரும் விசும்பில் ஆர்த்தார் .

அன்பின் மிகுதியால் சிவன் நேரே நிற்க வானத்தில்  இருந்து தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

தேவர்களும் வியந்து போற்றிய இந்த இரு அற்புதம் மூலமாக நாயனாரின் பெருமை மட்டுமின்றி குங்கிலியத்தின் பெருமையும் இலக்கியத்தில் அழியா இடம்பெற்றது.

tags — குங்கிலிய,  கலய  நாயனார், அற்புதங்கள்

XXXX SUBHAM XXXX

PLEASE JOIN US TODAY / SUNDAY 13-12-2020

PLEASE JOIN US TODAY / SUNDAY 13-12-2020

13-12-2020 SUNDAY  AGENDA FOR THAMIZ MUZAKKAM (TAMIL THUNDER)

TALK ON BHARATI

INTRODUCING A NEW TEMPLE

THIRUPPUGAZ SONGS

KALYANA/ NALUNGU SONG

TAMIL DEVOTIONAL SONGS

PLUS BHARATIYAR SONGS

XXX

MONDAYS FOR HINDUISM

SUNDAYS  FOR TAMIL LANGUAGE

BOTH OUR BROADCASTS ARE NON POLITICAL AND NON COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS A ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

WHO DOES THIS?

I  (LONDON SWAMINATHAN) DO IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM  AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

PLEASE VISIT FACEBOOK.COM/GNANAMAYAM FOR THE PRODUCTIONS OF PAST WEEKS.

XXX

ANNOUNCEMENTS

ON CHRISTMAS DAY WE DO A SPECIAL BROADCAST FOR SCHOOL STUDENTS.

STUDENTS UP TO GCSE LEVEL ARE WELCOME TO SING, SPEAK , DANCE AND DO YOGA DEMOS. MAXIMUM FIVE MINUTES PER PERSON. NO FILM SONGS ARE ALLOWED; LANGUAGE NO BAR.

XXX

A GLOBAL RUDRA RECITATION IS ORGANISED FOR THE WELFARE OF HUMANITY- PLEASE JOIN US ON FIRST JANUARY, 2021

XXX

BHARATI MEMORIAL CENTENARY CELEBRATIONS

WE HAVE BEEN BROADCASTING 54 BHARATI SONGS IN NEW RAGAS.

PLEASE JOIN US AND PRESENT YOUR VERSION.

LIVE PRESENTERS GET PREFERENCE OVER RECORDED CLIPS.

WE WILL SEND YOU THE ZOOM LINK WHEN U R READY.

YOU MAY CONTACT GNANAMAYAM OR swami_48@yahoo.com

–SUBHAM–

tags — publicity131220

இசையும் இசையின் கதையும்! – Part 2 (Post.9030)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9030

Date uploaded in London – – 13 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

picture posted by Lalgudi Veda

இசையின் பெருமை

தெய்வமாக வணங்கும் கடவுளான கண்ணன், தன் குழலிசையால்

அனைவரையும் வசப்படுத்தினான்.பசுக்களும் கறக்காமலே. பால்

சுரந்தன!!! மக்கள் மதி மயங்கி அவனைத் தலைவனாக ஏற்றனர்.

சிவன் மற்றும் மகா விஷ்ணு, துர்க்கையம்மன கையில் உள்ள சங்கு

இசையை கடவுளும் இசைக்கின்றனர் என்று பறை சாற்றுகின்றது . மேலும் கல்வி மற்றும் இசைக் கடவுளான , வீணையைக் கையில் உடைய சரஸ்வதி அனைவராலும் இசை ஆரம்ப தினத்தன்று வணங்கப்படுகிறாள்!! போற்றப்படுகிறாள்!!!

இசையோடு இணைந்தது தான் நாட்டியம், இசை இல்லாமல் நாட்டியம் இல்லை எனபதை உணர்த்தும் வடிவமே நடராஜர்!!!

2000 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில்

“குரவைக்கூத்து” நடப்பதாக எழுதியிருக்கிறார் இளங்கோவடிகள்.

ஒவ்வொரு பௌர்ணமி இரவிலும் தெய்வீகப் பாட்டுகளும் கதைரூபத்தில் மக்கள் மனதை ஆட்கொண்டன..பின்னர் தெருக்கூத்தாகவும், நாடகங்களாகவும் உருப்பெற்றன.

இசைதான் இதற்கெல்லாம் ஆணி வேர்!!!

தான்சேன் என்ற வட இந்தியப் பாடகர் “தீபக்” என்னும் ஒரு ராகத்தைப்பாடி விளக்கை எரிய வைத்தாராம்!!!

“அமிர்த வர்ஷினி” என்ற ஒரு ராகத்தைப் பாடி மழையையே

வருவித்தார் முத்து சாமி தீட்சிதர்.

“உடுக்கை” அடித்துப் பாட்டுப் பாடி தெய்வங்களை மானிட உடலில்

வரவழைத்து “குறி” கேட்டனர் பூசாரிகள்.

மேலும் அந்த காலத்தில் தெய்வங்களின் திருவிளையாடல்களைப் பாடுவதும் கடவுளின் அடியார்களின் பாடல்களை பாடுவதும்

மக்களை நல் வழிக்கு செலுத்தின.

இசைக்கு வடிவம் தருவது எது???

மனிதன்

மனிதனின் தொண்டை- குரல்வளை.

நரம்புக்கருவிகள்( CHORDO PHONES)

யாழ், வீணை, தம்பூரா,வயலின்,கோட்டு வாத்தியம், மாண்டலின்

தோல் / மற்றம் சில கருவிகள்(MEMBRANO PHONES,)

பறை, மிருதங்கம், தவில், கடம், முகர்சிங், ஜால்ரா, சிப்ளாக்கட்டை

காற்றுக்கருவிகள்(AERO PHONES)

புல்லாங்குழல், நாதஸ்வரம், கிளாரிநெட், மகுடி

இயற்கை இசை

வண்டுகளின் ரீங்காரம்,

குயில் போன்ற பறவைகளின் கூவல்

மயிலின் அகவல்,

யானைகளின் பிளிறல்,

ஏன் கழுதைகளின் கத்தல் கூட ஒரு வகை இசைதான்!!!

மக்கள் அதை ஒரு நல்ல சகுனமாக எடுத்து கொள்வதிலிருந்து இது தெரிகிறதல்லவா!

இராகம்

இசைக்கு இன்றியமையாதது இராகம். ராகம் பல ஸ்வரங்களின் சேர்க்கையால் உண்டாகிறது.உலக இசையிலேயே இந்திய

இசைதான் இராக வளர்ச்சியில் முழுமை கண்டுள்ளது என்பதே

அறிஞர் கண்ட உண்மை.

ஆதாரங்களின்படி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் உள்ள “முல்லைத் தீம்பாவணி” என்ற இராகத்தில் ஆய்ச்சியர்கள் குரவைக் கூத்தில் பாடினார்கள். அதில் கையாளப்பட்ட சுரங்கள் “ச,ரி,க,ப,த,ச “ இதுதான் மோகனத்தின் ஸ்வரம். இதுதான் உலகிலேயே முதலில் தோன்றிய இராகம் என ஆய்வாளர்கள் அறுதியிட்டு உறுதி கூறுகின்றனர்!!!

8 – ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “திவாகரம்” என்ற சங்கீத நூலில்

“ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ”எனும் இவ்வேழு எழுத்தும் இசைக்குரியன”

என்ற தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த ஏழும் தமிழிசையான

ஸ ரி , க, ம , ப , த , நி என்னும் ஏழு ஸ்வரங்களாகும்.

ஏழிசையாவன :-

ஸ – ஸட்ஜம் , ரி – ரிஷபம் , க – காந்தாரம் , ம – மத்யம ம் , ப – பஞ்சமம்

த – தைவதம் , நி – நிடாதம்

இந்த ஏழு ஸ்வரங்களை 12 பிரிவுகளாக்கி ராகங்கள் அமைத்து பாடினர் பண்டிதர்கள்.

இந்த இசையை அந்தந்த கால, தேச, வர்த்தமானத்திற்கு தகுந்த

மாதிரி, தமிழிசை முறை் கர்நாடக இசை முறை,இந்துஸ்தானி இசை

முறை, பார்சீய இசை முறை முதலியவை தோன்றி , அததற்குரிய பல்வேறு சிறப்பு அம்சங்களையும் அதனுள் கொண்டு இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.

ஐரோப்பிய இசையும், ஹிந்துஸ்தானி இசையும்……….

அன்னிய ஆதிக்கத்தினால், நம்நாட்டிற்குள் நுழைந்த ஐரோப்பிய

இசையின் அன்பளிப்பும், வேண்டாத அம்சங்களும் நிறைய உண்டு.

உதாரணமாக இசையை கற்க ஆரம்பிக்கும் எவரும் முதன்முதலில்

உபயோகிப்பது “ஹார்மோனியமே”!!!!! இதை ஒரு இசைக் கருவியாகவே ஒத்துக்கொள்ளவில்லை எவரும்!!! பிறகு நாடக மேடைகளுக்கும், முதன் முதலில் இசை பயில்வோருக்கும் இன்றியமையாததாக ஆகிவிட்டது!!! மேலும் “கிளாரினெட்” என்ற கருவி நாதஸ்வரத்திற்கு இணையாக போட்டி போட ஆரம்பித்தது!!!

நிறைய மாற்றங்கள் இந்துஸ்தானி இசையால் தமிழிசை, கர்நாடக

இசைக்கும்……. வந்தது.

இசையும், பஜனைப் பாடல்களும்

வட இந்திய இசை தமிழ் நாட்டில பக்தி பூர்வமாக வெகுவாக வேகமாக பரவலாயிற்று………மீரா பஜன், துக்காராம், சூர்தாஸ், கபீர்தாஸ், பாட்டுக்கள் மூலமாக இசையும், பக்தியும் சேர்ந்தே வளர்ந்தது!!! கதா காலட்சேபம் என்ற பெயரில் சகி, திண்டி டொகரா, ஓவி, கட்கா, சவாயி போன்ற மராட்டிய இசை வகைகள் நமது இசையுடன் சேர்ந்து ஒலிக்க ஆரம்பித்தது. வட இந்திய இசைக்கருவிகளும் தமிழ் நாட்டில் தாண்டவமாடத் தொடங்கியது.

இவ்விதமாக வளர்ந்த இசை தமிழ் நாட்டிலும் மட்டுமல்ல உலெகெங்கும் பரவி புகழ் முரசு கொட்ட ஆரம்பித்தது.

இன்றைக்கும் அது ஒலித்துக் கொண்டிருக்கிறது.

என்னன்ன ராகங்களினால் என்னன்ன வியாதிகள் தீரும், என்பது பற்றி திரு.சந்தானம் நாகராஜன் எழுதிய அருமையான கட்டுரையை (கட்டுரை எண் 9017 வெளியான தேதி 10-12-2020)timeanndvedas இல் காணலாம்.

மேலும் கோவில்களில் என்னன்ன ராகங்கள் எந்தந்த பூஜா காலங்களில் பாடவேண்டும் என்ற கட்டுரையையும் tamilandvedas.com இல் (கட்டுரை எண் 9009 வெளியான தேதி 8-12-2020) திரு.சந்தானம் நாகராஜன் அருமையாக விளக்கியிருக்கிறார். தயவுசெய்து படித்து மகிழுங்கள்.

tags- இசையின் கதை-2

***

ராஜ ராஜ சோழன் ஆதரித்த வீர சைவர்கள்! (Post.9029)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 9029

Date uploaded in London – – 13 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

கொங்குமண்டல சதகம் பாடல் 55

ராஜ ராஜ சோழன் ஆதரித்த வீர சைவர்கள்!

ச.நாகராஜன்

ராஜராஜ சோழனின் பெருமையை நாளுக்கு நாள் தமிழர்கள் நன்கு உணர்ந்து வருகின்றனர்.

தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்த இவனது காலம் கி.பி.985 முதல் 1012 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கீழ் நிலையில் தாழ்ந்திருந்த சோழ ராஜ்யத்தை பெரும் சாம்ராஜ்யமாக உருவாக்கிய பெருமை இவனையே சேரும்.

பெரும் நீதிமான். மாபெரும் வீரன். பல கலைகளைக் கற்றவன். சைவ சமயத்தைச் சார்ந்திருந்த போதிலும் பௌத்தர்களுக்கும் ஆதரவளித்தவன்.

இவன் கங்கபாடி, நுளம்பபாடி, வேங்கி நாடு, குடகு, ஈழம் முதலிய ராஜ்யங்களை தன் வீர வலிமையினால் வென்றான்.

மூவேந்தர் தமிழ் நாட்டுக்கும் அதிபர் என்பது விளங்குமாறு ‘மும்முடிச் சோழன்’ என்ற பட்டத்தையும் பெற்றான்.

உலகின் மாபெரும் கோவிலை உருவாக்க வேண்டும் என்று எண்ணம் கொண்ட இவன் பிரஹதீஸ்வரர் ஆலயத்தை உலகோர் வியக்கும் வண்ணம் அதிசய ஆலயமாக அமைத்தான்.

தனது நாட்டில் எங்கெல்லாம் ஆலயங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் ஆகம விதிப்படி பூஜைகள் நடக்க வேண்டும் என்பதிலே கண்ணும் கருத்துமாக இருந்த ராஜராஜன் அதற்கென தேர்ந்த வல்லுநர்களான பிராமணர்களை வட நாட்டிலிருந்தும் வரவழைத்தான்.

அவர்களுக்கு உரிய காணி நிலங்களைக் கொடுத்து அவர்களை மிகவும் கௌரவித்தான்.

இவனுக்கு ஏராளமான பட்டங்கள் உண்டு.

இவன் காலத்துக் கல்வெட்டுகள் கூறும் செய்திகள் மிக அற்புதமானவை. அவை தனியே ஆராயப்பட வேண்டியவை.

இவன் ஆளுகையில் கொங்கு மண்டலமும் உட்பட்டிருந்தது.

கொங்கு மண்டல சதகம் பாடல் 55 இவனது பெருமையைப் போற்றிப் புகழ்கிறது.

பாடல் இதோ:

குலசே கரன்குலோத் துங்கசீர்ச் சோழர்கள் கொங்கிடைமெய்த

தலபூசை நன்குறத் தன்னாட் டுளாரிற் சமர்த்தர் கண்டு

நிலையான காணியு மேன்மையு மீய நிதானமுறு

வலவாதி சைவர்கள் வாழ்வதன் றோகொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : –

குலசேகர சோழன், குலோத்துங்க சோழன் ஆகிய மாமன்னர்கள் கொங்கு நாட்டில் ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தில் அந்நாட்டிற் சிறந்த தலங்களில் ஆலய பூஜை ஆகமம் கூறிய படி நடத்த வேண்டும் என்று கருதி தன்னாட்டில் உள்ள வல்லவர்களை அழைத்து அவர்களுக்கு காணி பூமி கொடுத்து அவர்களை நன்கு கௌரவப் படுத்தினான். அப்படிப்பட்ட ஆதி சைவர்கள் விளங்குவது கொங்கு மண்டலமே ஆகும்.

tags — ராஜ ராஜ சோழன், வீர சைவர், 

***

இசையும் இசையின் கதையும்! – Part 1 (Post 9028)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9028

Date uploaded in London – – 12 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இசையும் இசையின் கதையும்!

                                                    BY Katukutty

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை.

பொய்யா மொழிப்புலவர், தெய்வப்புலவர், திருவள்ளுவர் ஒரு் செய்தியைச் சொல்ல ஒரு வார்த்தையை ஐந்து முறை உபயோகப்படுத்தியுள்ளார் என்றால் அதன் பெருமை தான் என்னே!!!

ஐம்புலன்களில் மிகவும் நுட்பமானது “செவி”.

மற்ற நான்கு புலன்களான மெய் – அதிகம் வேலை செய்தால் உடலில்

வலி உண்டாகும். கண் – வெகு நேரம் பார்த்தால், கண் எரியும்.

வாய் – பேசினால் தொண்டை வலிக்கும். மூக்கு – வெகு நேரம் வாசனை அல்லது

துர் நாற்றம் பிடித்தாலோ, கேட்கவே வேண்டாம்.

மூக்கு எரியும், தொண்டை கமரும்.

காது – எவ்வளவு நேரம் கேட்டாலும் சோர்வடையாது.!!!

இந்தக் காதினால் நாம் ஒருவருக்கொருவர் விஷயங்களை பரிமாறிக்

கொண்டு தான் உலகமே நடக்கிறது!!!

காதினால் கேட்டு பயனடையும், வழியை இன்பமடையும் வழியை, நமது முன்னோர்கள் முதன் முதலில் கண்டு பிடித்தார்கள் 5000 வருடங்களுக்கு முன் “வேதம்” மூலமாக!!! இதுதான் இசையின்ஆரம்பம்!!! . மிகப்பழமையான

“ரிக்”வேதம், “உதாத்தம்”,”அனுதாத்தம்”, “ஸ்வரிதம்”, தீர்க்க ஸ்வரிதம் என்று நான்கு உச்சரிப்பு அளவினைக் கொண்டு ஓதப்பட்டது..பின்னர் அந்த ரிக் வேதத்தை வைத்து “சாம வேதம்”பாடப்பட்டது. இப்படியாக வளர்ந்தது தான் “இசை”!!!

ஒலி எப்படி உண்டாகிறது???

”ஒலி”ஒரு பொருளின் அசைவினால், காற்று மூலமாக உண்டாவதாகும்.

இதை இரண்டாக பிரிக்கலாம்.

ஒன்று இசை, மற்றொன்று இரைச்சல்.

இசை என்றால் என்ன ???

இசை என்றால் கட்டுப்பாடான, ஒழுங்கான, இனிமையான “ஒலி”ஆகும். உள்ளத்திற்கும், உணர்விற்கும் இன்பத்தை செவி மூலமாக கிடைக்கும் ஒலியையே “இசை “என்கிறோம்.. இந்த இசைக்கு

ஒரு ஒழுங்கு, கட்டுப்பாடு, ஏற்றத்தாழ்வுகள், மேலும் அழுத்தமும் உண்டு.

இரைச்சல் – ஒழுங்கற்ற, கட்டுப் பாடில்லத , அதிகமான ஒலியுடன்

செவிக்கும், உணர்வுக்கும் எரிச்சல் உண்டாக்குவதே “இரைச்சல்”

(NOISE) ஆகும்.

MUSIC – விளக்கம்

இந்த “MUSIC” என்ற சொல் கிரேக்க இசை தேவதையான “ MUSES”என்ற பெயரிலிருந்து வந்தது. பின்பு அது ஆங்கிலத்தில்

“MUSIC” என்று ஆயிற்று.

நம் வாழ்க்கையும் இசையின் பலன்களும்

நம் வாழ்க்கையே தாயினுடைய தாலாட்டு பாடலுடன் தான் ஆரம்பிக்கிறது.

பள்ளியில் பாடங்களுடன் இசையும்,சில சமயம் பாடங்களையே இசை மூலமாகவும் சொல்லிக் கொடுக்கும் பழக்கமும் உள்ளது்

இசை மூலமாக நினைவாற்றல் பெருகுகிறது.

மாணவர்களின் மனது ஒருமைப்படுகிறது.

கடினமான வேலை செய்பவர்களும், இசையினால், தங்கள் வலியை

போக்கிக் கொள்கிறார்கள்

மன இறுக்கம் கொண்டவர்களுக்கும், உடல் நலம், மனநலம், குன்றியவர்களுக்கும், இசை ஒரு அருமையான மருந்தாகும்.

இரவு தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இசையே மருந்து.

மனைவியை விட்டு பாடச்சொல்லி, மன அமைதி பெற்று

தூங்குவார்கள் பெரியவர்கள். தூங்காமல் அடம்பிடிக்கும்

குழந்தைகளையும் தூங்க வைக்கும் பாட்டு.

எல்லா மதத்தினரும் இறை வழிபாட்டிற்கென்றே பாடல்களும்

தோத்திரங்களும் வைத்திருக்கிறார்கள்

காலையில் கடவுளை சுப்ரபாதம் முதல், மதியம் பூஜை, இரவு

பள்ளியறை பூஜை முடிய,பிரார்த்தனை,வேண்டுகோள்,பதிகங்கள்

பாடி இறை வழிபாட்டுடனேயே வாழ்க்கை முடிகிறது.

“இறை வணக்கம்” பாடாத கூட்டங்களே கிடையாது!!!

கல்யாணம் என்றால் கேட்கவே வேண்டாம்……பெண்பார்க்க

வந்தவர்கள் முதலில் கேட்கும் கேள்வி “பெண்ணுக்கு பாடத்

தெரியுமா”???கல்யாணப் பாட்டுக்கள் ஏராளம்! ஊஞ்சல், நலுங்கு

சாந்தி முகூர்த்தம் வரை ஒரே நக்கலும் கேலியும் தான்……

கற்பனையின் எல்லைக்கே போய்விட்டார்களோ என்று தோன்றும்

அளவுக்கு அந்தபாடல்களில் ராகங்களும், அர்த்தங்களும்

இருக்கும். சீமந்தம், வளைகாப்பு, முதலியவற்றிலும் பொருள் செறிந்த பாடல்கள் உண்டு.

இறந்தாலும் இறந்தவரின் புகழைப்பாடும் “ஒப்பாரி”, பாடி,

கொட்டுடனேயே அடக்கம் செய்வார்கள்.

பெண்களுக்கென்றே இசையைப் படைத்தது போன்று பெண்களின் குரல் வளையை அப்படி படைத்திருக்கிறான் ஆண்டவன்!!!!

பாடுவதற்கென்றே உண்டான விழா தான் “நவராத்திரி” !!!

கொலுவுக்கு வரும் பெண்களோடு துணைக்கு வரும்ஆண்களும்

வித்யாசமின்றி பாடக்கூடிய பாடல் திருவிழா தான் “நவராத்திரி”

மார்கழி மாதமென்றால் கேட்கவே வேண்டாம், குளிரை பொருட்படுத்தாமல்  அதி காலையில் தெருவெங்கும் பஜனை பாடல்கள்.இரவு எல்லா சபாக்களிலும் பாட்டுக்கச்சேரி……. பாட ஆரம்பித்தவர் முதல் பத்ம பூஷன் வாங்கியவர்களின் கச்சேரி வரை நடக்கும்!!!

அதில் பாட்டு கேட்க வந்தவர்கள் பாதி, விதம் விதமான பண்டங்கள்

விற்கும் ஓட்டல்களில் சாப்பிட வந்தவர்கள் மீதி!!!

இன்றைய இசையின் “மெயின்” காரணமே சினிமா!!! திரைப்படம்

தோன்றிய நாட்களிலிருந்து இன்று வரை இதை ஆட்டிப் படைப்பது இசைதான்!!!ஆரம்பத்தில 50 அல்லது 60 பாடல்களுடன்

ஆரம்பித்த சினிமா தற்சமயம் 7 அல்லது 8 பாடல்களுடன் நிற்கிறது. பாட்டே பிரதானம் என்று ஆரம்பித்த சினிமா இப்போது நடனத்தையும் சேர்த்துக் கொண்டது. கர்நாடக இசையில்ஆரம்பித்த சினிமா,வட இந்திய இசைக்குசென்று, மேற்கத்திய இசைக்கு சென்று “ஆட்டம்” போட்டது. சாதாரண பாடல்களை விட்டு

“குத்தாட்டத்தையே “ மக்கள் ரசிக்கின்றனர்!!! குடித்துவிட்டு ஆடும் பாடல்கள்

“யு ட்யூபில் ”ஒரு கோடி ஹிட்ஸ்” என்று. பெருமையுடன் பீற்றிக் கொண்டிருக்கிறது!!!

தெருவுக்குத் தெரு காளியம்மன், மாரியம்மன் போன்ற

தெய்வங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கஞ்சி ஊற்றும் திருவிழாவில்

குத்தாட்ட பாடல்கள் இல்லாமல் நடை பெறுவதே கிடையாது.!!!

பாவம் தெய்வங்கள்!!!! எப்படித்தான் பொறுத்துக் கொள்கின்றனவோ ???

ஒவ்வொரு திருமண ரிஸப்ஷன்களிலிலும், கட்சி மீட்டிங் ஆரம்பகளிலும் இந்த “குத்தாட்ட கச்சேரி”நடக்கிறது!!! சில சமயங்களில் “குடி மகன்கள்”, காரணமாக போலீஸ் தடியடியும் உண்டு!!!

TO BE CONTINUED…………………………..

tags —  இசை, கதை, 

வேதத்தில், பெரிய புராணத்தில் குங்கிலிய மர்மம்!- Part 1 (Post No.9027)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9027

Date uploaded in London – –12 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அதர்வண வேதத்திலும் யஜுர் வேதத்திலும் குங்கிலியம் குறிப்பிடப்படுகிறது. பெரிய புராணத்தில் குங்கிலியக் கலய நாயனார் கதை வருகிறது . உலகெங்கிலும் யூத , கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களில் குங்கியப் புகை போடப்படுகிறது. உடலுக்குப் பூசும் வாசனைப் பொருட்களில் குங்கிலியம் இருக்கிறது. இதன் மருத்துவப் பயன்களோ சொல்லி மாளாது. மூட்டு வலியிலிருந்து இருதய நோய் வரை அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் சர்வ ரோக நிவாரணி குங்கிலியம் ஆகும்.

இதுபற்றிய மர்மம் என்ன?

சம்ஸ்கிருதத்தில் குக்குலு ! தமிழில் குங்கிலியம்!!

அதர்வண வேதம் கி.மு. 1000க்கு முந்தியது. அப்போது வேறு எந்தமத நூல்களும் கிடையாது. இந்து மத நூல் மட்டுமே உலகில் இருந்தது.

பெரிய புராணத்தில் குங்கிலியக் கலய  நாயனார் பற்றி இரண்டு அபூர்வ நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர் திருஞான சம்பந்தர் காலத்தவர். அதாவது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். ஆக 3000 ஆண்டுகளுக்கும் மேலாக இமயம் முதல் குமரி வரை குங்கிலியம் பயன்படுத்தப்பட்ட நாடு பாரதம். அந்தக் காலத்தில் பாரதம் போல பெரிய நாடு எதுவும் உலகில் இல்லவும் இல்லை. பெயரோ தமிழும் சம்ஸ்கிருதத்திலும் ஒன்று !

சம்ஸ்கிருதத்தில் குக்குலு !தமிழில் குங்கிலியம் !

இரண்டும் நெருக்கம் என்பதை பெயரிலும் காண்கிறோம். கிமு.600-ல் அதாவது இற்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்த சம்ஸ்க்ருத மருத்துவ நூல்கள் இதை விதந்து ஒதுகின்றன.

இன்றும் பூஜையின் கடைசியில் தூப, தீபம் காட்டுகையில் ‘தசாங்கம் குக்குலோ பேத’மென்ற மந்திரத்தைச் சொல்லி குங்கிலியப் புகை  போடுகிறோம் .

இது இந்தியாவிலிருந்து உலகம் முழுதும் ஏற்றுமதியானதை 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கிரேக்க நூலும் செப்புகிறது. அதன் பெயர்  பெரிப்ளூஸ் ஆப் எரித்ரியன் ஸீ  (Periplus of Erythrean sea )என்பதாகும். இது கப்பல் பயண அட்டவணை. சிந்து நதித் துறைமுகமான பார்பாரிகத்தில்  இருந்து ஆப்ரிக்க நாடுகளுக்கும் , பாபிலோனியாவுக்கும் குங்கிலியம் சென்றது. 

இப்போது இதுபற்றிய மர்மத்தைத் துலக்குவோம். இந்தப் பெயர் சம்ஸ்க்ருதம் போல இல்லையே என்று சில வெள்ளைத் தோல்கள் வழக்கம்போல ஒரு சந்தேகத்தை எழுப்பின. ஏனெனில் அவர்கள் மத வழிபாட்டுத் தல ங்களில் அதர்வண வேதம் சொல்லும் பொருள், பெரிய புராணம் சொல்லும் பொருள் இருப்பதை ஒத்துக்கொள்ள அவர்கள் மனம் இடம் தரவில்லை. ஆயினும் குங்கிலியம் என்ற தமிழ் பெயரும் நமக்குத் துணை வருகிறது .

குங்கிலியம் என்றால் என்ன ?

குங்கிலியம் என்பது ஒரு மரப் பிசின். அதாவது கோந்து. அந்தச் சொல்லும் ‘குங்’ என்பதிலிருந்து வந்ததே .

மரத்தின் பட்டையில் ரப்பர் பால் எடுப்பதற்கு வெட்டு (cut) போடுவது போல வெட்டுவார்கள் அதிலிருந்து வரும் பாலை வடித்துக் காய்ச்சி குன் மற்றும் கற்பூர தைலம், டர்பன்டைன் முதலியன எடுப்பர். இது பல வகையான மரங்களில் இருந்து கிடைக்கின்றன. ஆயினும் தேவதாரு(Deodar, Sal) மற்றும் குங்கிலிய மரத்தில் இருந்து கிடைப்பது சிறப்பு வாய்ந்தவையாகும்

குங்கிலியம் அல்லது எருமைக் கண் குங்கிலிய மரத்தின் பெயர் காமிப்போரா விக்கட்டி.

Commiphora wightii, Commiphora mukul

இது பெருமளவு விளையும் இடம் ராஜஸ் தான் , குஜராத் முதலிய மாநிலங்கள் .

இந்தியாவுக்கு வெளியே, அரேபியா ஆப்பிரிக்காவின் கிழக்கில் உள்ள சோமாலியா முதலிய நாடுகளாகும். பூகோள ரீதியில் பார்த்தால் ஒன்றையொன்று கடல் வழியாக அணுகுவது மிக சுலபம் என்பதைக் காணலாம். ஆக இந்தியாவில் இருந்து இது பல நாடுகளுக்கும் சென்றிருக்கலாம்.

வெவ்வேறு   தாவரக்  குடும்பங்களைச் சேர்ந்த மரங்களில் இருந்து இது கிடை ப்பதையும் மறந்து விடக்கூடாது. ஆகையால் ஒருவரைப் பார்த்து மற் றொருவர் கற்றுக் கொண்டிருக்கும் வாய்ப்பும் உண்டு.

இந்துக்களைப் போல உலகில் நறுமணப் புகையைப் பயன்படுத்துவோர் கிடையாது. அகில் புகை பற்றிய குறிப்புகள் 2000 ஆண்டு சங்க இலக்கியத்தில் நிறையவே உண்டு. சாம்பிராணி, குங்கிலியப் புகையும் இன்றுவரை பயன்படுகிறது

Bdellium

இதற்கு எபிரேய/ ஹிப்ரு மொழியில் பிடெல்லியம்(Bdellium) என்று பெயர். ஆனால் அவர்களுடைய பழைய நூலில் உள்ள இச் சொல் இது  குங்கிலியம் போன்ற ரத்தினைக் கல்லைக் குறிக்கிறதா அல்லது குங்கிலியத்தைக் குறிக்கிறதா என்ற சர்ச்சை இன்றுவரை நீடித்து வருகிறது. நாமோ சம்ஸ்கிருத மந்திரத்திலும் பெரிய புராணப்பா டலிலும் இன்று வரை சொல்லி வருகிறோம்.

ப்ளினி  (Pliny) என்பவரும் சிறந்த குங்கிலியம் இந்தியாவிலிருந்து வருகிறது என்கிறார்

இந்த மரத்துக்கே (Indian Bdellium Tree) இந்திய பிடெல்லியம் மரம் என்று கலைக்களஞ்சியங்களும் சொல்லும்

குக்குலு பற்றி அதர்வ வேதத்தில் வரும் இடங்கள் :-

AV 19-38-2

AV 2-36-7

தைத்ரீய சம்ஹிதையிலும் / யஜுர் வேதம் இருக்கிறது. இது அதர்வண வேதத்துக்கும் முன்னதாவும் இருக்கலாம் YV 6-2-8-6 பின்னர் பல வேத நூல்களில் வருகின்றது.

அதர்வண வேதக் குறிப்புதான் சிறப்புமிக்கது. ஏனெனில் ‘குக்குலு கடல் மூலமும் நதி மூலமும் வருகிறது’ என்பதால் ஏற்றுமதி பற்றிய குறிப்பு தொனிக்கிறது. கடல் என்பதால் இது ஆம்பர்  (Ambergris??) எனப்படும் தென் மெழுகையும் குறிக்கலாம். அதுவும் சென்ட் (Scent, Perfume)  முதியலிய வாசனைத் திரவியங்களில் பயன்படுகிறது 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி வேதத்தில் இருப்பது நமது கடல் வணிகத்தையும் ஆயுர்வேத , வாசனைத் திரவிய தொழில்  (Perfume Industry) அறிவையும் காட்டுகிறது

1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த குங்கிலியாக் கலய நாயனாரின் வாழ்க் கையில்  இரண்டு  அற்புதங்கள் நிகழ்ந்தன . அவற்றைக் கட்டுரையின் இரண்டாவது பகுதியில் காண்போம்

தொடரும் …….. Tags –
Tags – குங்கிலியம் அதர்வண வேதம், பாபிலோனியா , குக்குலு