
Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 9353
Date uploaded in London – –7 MARCH 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலக இந்து சமய செய்தி மடல் 7-3-2021
இன்று மார்ச் 7-ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும் .
Xxxxx
ராமாயண கலைக்களஞ்சியம் வெளியீடு

ராமாயண கலைக்களஞ்சியத்தை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் நேற்று வெளியிட்டார். இது E BOOK ‘இ புஸ்தக‘ வடிவில் உள்ளது. இதை அயோத்தியிலுள்ள ராமாயண ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டது.
அயோத்தி நகரில் ராமர் கோவில் கட்டும் தருணத்தில் இது வெளியா வதால் இதன் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. இதுவரை தெரியாத பல விஷயங்களை உள்ளடக்கி இருப்பதால் இதைப் படிப்போருக்கு அயோத்தி நகரத்தைக் காண ஆவல் மிகும். இந்தியாவின் இரண்டு இதிஹாசங்களான ராமாயணமும் மகாபாரதமும் ஒளிமயமான பாரத நாட்டை வருணிக்கின்றன. நல்ல வருங்கால இந்தியாவை இவை அறிவிக்கின்றன என்றார் யோகிஜி.
இந்தியாவின் ஏழு புனித நகரங்களில் அயோத்யா, மதுரா, காசி ஆகிய மூன்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருப்பது தனக்கு பெரு மகிழ்சசி தருகிறது என்றும் யோகி ஆதித்ய நாத் விளம்பினார்.
ராமர் கோயிலுக்கு கூடுதல் நிலம்
அயோத்தியில், ராமர் கோவில் வளாகத்தை விரிவுப்படுத்தும் வகையில், 7,285 சதுர அடி நிலத்தை, 1 கோடி ரூபாய்க்கு, ‘ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ அறக்கட்டளை வாங்கியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, மத்திய அரசு, ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைத்தது. அயோத்தியில், 1,100 கோடி ரூபாய் செலவில், ராமர் கோவில், அருங்காட்சியகம், நுாலகம் உட்பட பலவற்றை கட்ட, அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
இதற்காக, நாடு முழுதும் மக்களிடமிருந்து, அறக்கட்டளை சார்பில் நிதி வசூலிக்கப்பட்டது. இதில், 2,100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலானது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, மத்திய அரசு, ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைத்தது. அயோத்தியில், 1,100 கோடி ரூபாய் செலவில், ராமர் கோவில், கட்ட, அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
இதற்காக, நாடு முழுதும் மக்களிடமிருந்து, அறக்கட்டளை சார்பில் நிதி வசூலிக்கப்பட்டது. இதில், 2,100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலானது.
Xxxx
அமேசான் தாண்டவ் மன்னிப்பு

‘’வீடியோ ஸ்ட்ரீமிங்’ தளமான அமேசான் பிரைம் வீடியோ இன்று தனது தாண்டவ் வெப் சீரீஸுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது. மேலும் பார்வையாளர்களால் ஆட்சேபிக்கத்தக்கதாகக் காணப்படும் காட்சிகளை ஏற்கனவே அகற்றிவிட்டதாகவும் கூறியுள்ளது.
சைஃப் அலி கான் மற்றும் முகமது ஜீஷன் அயூப் ஆகியோர் நடித்த அரசியல் சகா, கல்லூரி நாடக நிகழ்ச்சியை சித்தரிக்கும் ஒரு காட்சிக்கு பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்த நிகழ்ச்சி இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருந்த நிலையில் இது தொடர்பாக பல எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டது.
“சமீபத்தில் தொடங்கப்பட்ட தாண்டவ் என்ற கற்பனையான தொடரில் பார்வையாளர்கள் சில காட்சிகளை ஆட்சேபிக்கத்தக்கது என்று கூறியதால் அமேசான் பிரைம் வீடியோ மீண்டும் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது. இது எங்கள் நோக்கம் அல்ல, மேலும் ஆட்சேபிக்கப்பட்ட காட்சிகள் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபோது அவை அகற்றப்பட்டன அல்லது திருத்தப்பட்டன.” என அமேசான் பிரைம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“நிபந்தனையின்றி மன்னிப்பு கோருகிறோம் என்று நிறுவனம் மேலும் கூறியது.
இந்து சமய தொண்டர்களும் இந்து சமய அமைப்புகளும் இந்தத் தொடருக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் ஆறு வழக்குகளைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது
Xxxxx

2021 பிப்ரவரி 26ம் தேதிமுதல் வழிபாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது இதற்கு வித்திட்டவர் ஆசார்ய பிருகு கிரி மஹராஜ்.
சிவலிங்க வடிவிலான கோபுர உயரம் – 126 அடி சுற்றளவு -56 அடி
2003ம் ஆண்டில் கட்டிடவேலை துவங்கியது. 2021ல் கோவில் உருவானது .
ஆதிகாலத்தில் சுக்ராச்சார்யார் தவம் செய்த இடம் இது.
5000 பேர் இடம்பெறும் பெரிய பரப்பு கொண்டது இந்தக் கோவில்.
***
நவகான் அல்லது பெர்பெரி என்னும் இடத்திலுள்ள இந்த ஆலயத்தின் பெயர் மகா மிருத்யுஞ்சய ஆலயம் ; அதாவது மரணத்தை வெல்ல வழிகாட்டும் சிவ பெருமானின் ஆலயம்.
250 தமிழ்நாட்டு புரோகிதர்கள், அர்ச்சகர்கள் வந்து இந்தக் கோவில் கும்பாபிஷேக யாக சாலை பூஜைகளை நடத்தினர். நாட்டின் உட்துறை அமைச்சர் அமித் ஷா இந்தக் கோவில் பூஜைகளில் கலந்து கொண்டார்.
xxxx
வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் 10-ந்தேதி தொடங்குகிறது
கல்குளத்தை சுற்றியுள்ள 12 சிவாலயங்களுக்கும் சிவராத்திரி தினத்தன்று பக்தர்கள் “கோபாலா, கோவிந்தா” என்ற கோஷத்துடன் நடந்தும், ஓடியும் சென்று வழிபடுவார்கள். இந்த வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் 10-ந் தேதி தொடங்குகிறது.
சைவ-வைணவ ஒற்று மையை வலியுறுத்தும் வகையில் குமரியில் நடைபெறும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு சிவாலய ஓட்டம் ஆகும். இவ்வழிபாடு மாசி மாதம் நடைபெறுகிறது. சிவராத்திரியின் முதல் நாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, பத்மனாதபுரத்தைச் சுற்றியுள்ள பன்னிரு சைவத் திருத்தலங்களையும் 24 மணி நேரத்தில் ஓடி வலம் வருகின்றனர்.
சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். மேலும் இவ்வோட்டத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். கையில் ஓலை விசிறியுடனும் ஒரு சிறிய பண முடிச்சுடனும் ஓடுகின்றனர்.
கல்குளத்தை சுற்றி
1. திருமலை மகாதேவர் கோவில்
2. திக்குறிச்சி மகாதேவர் கோவில்
3. திற்பரப்பு மகாதேவர் கோவில்
4. திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில்
5. பொன் மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில்
6. திருப்பன்றிப்பாகம் சிவன் கோவில்
7. கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில்
8. மேலாங்கோடு சிவன் கோவில்
9. திருவிடைக்கோடு சடையப்பமகாதேவர் கோவில்
10. திருவிதாங்கோடு மகாதேவர் கோவில்
11. திருப்பன்றிக்கோடு மகாதேவர் கோவில்
12. திருநட்டாலம் சங்கர நாராய ணர் கோவில்
உள்பட 12 சிவாலயங்கள் உள்ளன.
இந்த 12 சிவாலயங்களுக்கும் சிவராத்திரி தினத்தில் பக்தர்கள், ‘கோபாலா….. கோவிந்தா….’ என அழைத்தவாறு நடந்தும், ஓடியும் சென்று வழிபடுவார்கள். சிலர், சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், வேன் போன்ற வாகனங்களில் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த சிவாலய ஓட்டம் புதுக்கடை அருகே உள்ள முன்சிறை, திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்குகிறது.
xxxxxx
11 மாதங்களுக்கு பிறகு வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி

கோவையை அடுத்த பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் தென்கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி ஆகிய நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.
அவர்கள் மலையடிவாரத்தில் இருந்து மூங்கில் தடி உதவியுடன் செங்குத்தான 6 மலைகளை கடந்து 7-வது மலையில் சுயம்புவாக எழுந்தருளி உள்ள சிவலிங்கத்தை வழிபடுவார்கள். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக மார்ச் மாதம் 19-ந் தேதி முதல் வெள்ளியங்கிரி மலையேற வனத்துறையினர் தடை விதித்தனர்.
கொரோனா பரவல் குறைந்ததால், வெள்ளியங்கிரி மலையேற அனுமதி அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக இருட்டுப் பள்ளம் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் ஆலோசனை நடத்தினர்.
அப்போது வருகிற மே மாதம் 31-ந் தேதி வரை வெள்ளியங் கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது என்றும், மலையேறும் வழியில் பழங்குடியினர் 40 கடைகள் அமைக்க அனுமதி அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் மூங்கில் தடியுடன் மலையேறினர். 11 மாதங்களுக்கு பிறகு வெள்ளியங்கிரி மலையேற அனுமதி அளிக்கப்பட்டதால், பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
Xxx

மகா சிவராத்திரி: ராமேசுவரம் கோவிலில் கொடியேற்றம்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருக்கல்யாண திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டின் மாசி மகாசிவராத்திரி திருவிழா 4-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கிய து.
இதை தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.
திருவிழாவின் 8-வது திருநாளான வருகின்ற 10-ந்தேதி வெள்ளி தேரோட்டம் நடைபெறுகின்றது. 11-ந்தேதி அன்று சுவாமி அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
xxxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

tags- tamilhindu, newsroundup7321