திருவாசகம் என்னும் தேன்! -1 (Post No.9849)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9849

Date uploaded in London – 14 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 ஞானமயம் ஆனி மக நாளன்று (13-7-2021) மாணிக்கவாசகரின் குருபூஜை நாளையொட்டி சிவஞான சிந்தனை மணிவாசகர் குருபூஜை தினத்தை உலகளாவிய விதத்தில் சிறப்பாக இணையதள வழியே கொண்டாடியது. இந்த விழாவில் திருவாசகம் என்னும் தேன் பற்றி ஆற்றிய உரை:-

திருவாசகம் என்னும் தேன்! -1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.நமஸ்காரம்.

SPEAKER BENGALURU S. NAGARAJAN

இன்று மாணிக்கவாசகரின் குரு பூஜை நாள். சிவஞான சிந்தனையை  உலகெலாம் உள்ள அனைவரும் பெறவும், தரவும் ஒரு அருமையான வாய்ப்பை இணைய வாயிலாக வழங்கி இருக்கிறார் லண்டன் சிவ ஸ்ரீ கல்யாண்ஜி. அவர்களுக்கு எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். திருவாசகத்திற்கு விளக்கமோ அர்த்தமோ கூறுவதற்கு எனக்குத் தகுதி இல்லை என்பது நிதர்சனமான உண்மை. ஏனெனில் பண்டு தொட்டு பெரியோர்கள் திருவாசகத்தை விளக்க பெரும் ஆதீனகர்த்தர்களும், சைவப் பெரியோர்களும், குறிப்பாக அதைப் பாடம் கேட்டுப் பொருளுணரும் சைவப் பெரியோர்களும் மட்டுமே தகுதியானவர்கள் என்று சொல்லி வந்திருக்கின்றனர்.

மஹாமஹோபாத்யாய உ.வே.சுவாமிநாதையர் ஒரு சுவாரசியமான சம்பவத்தை தனது நல்லுரைக் கோவை நூலின் நான்காம் பாகத்தில் குறிப்பிடுகிறார். திருச்சியில் இருந்த பட்டாபிராம பிள்ளை என்ற டெபுடி கலெக்டர் தமிழின் பால் மிக்க பற்றுள்ளவர். தக்க பண்டிதர்களை பல நூல்களுக்கும் உரை எழுதச் சொல்லி வேண்டுவது அவர் பழக்கம். இப்படி அவரது அரும் முயற்சியினால் பல உரை நூல்கள் வெளி வந்தன. அப்போது திருவானைக்காவில் பெரும் தமிழறிஞர் திரு தியாகராஜ செட்டியார் வாழ்ந்து வந்தார்.   தியாகராஜ செட்டியார் மீதுள்ள மதிப்பின் காரணமாகவும் அவரது ஆழ்ந்த தமிழறிவின் மீது கொண்ட வியப்பினாலும் அவரை திருவாசகத்திற்கு உரை எழுதச் சொல்லி பல முறை பட்டாபிராம பிள்ளை வற்புறுத்திய போது அவர் மறுத்தார். மீண்டும் மீண்டும் அவர் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்.. ஒரு நாள் காவிரி ஆற்றில் குளித்து விட்டு பாலத்தின் மீது களைப்புடன் அவர் நடந்து வருகையில் எதிரில் வந்த அந்த நண்பர் திருவாசக உரை எழுத வேண்டும் என்பது பற்றி வழக்கம் போலக் குறிப்பிடவே, தியாகராஜர், “அதற்குப் பெரும் தகுதி அல்லவா வேண்டும், வேதம், உபநிடதம், யோக சாஸ்திரம் உள்ளிட்ட அனைத்தும் அல்லவா படித்திருக்க வேண்டும், இன்னும் வற்புறுத்தினால், இதோ இந்த ஆற்றில் குதித்து விடுவேன். பட்டாபிராம பிள்ளை வற்புறுத்தியதால் தியாகராஜ செட்டியார் ஆற்றில் வீழ்ந்து உயிரை விட்டார் என்ற அவப் பெயர்  உமக்கு வரும்” என்று சொல்ல நண்பர் பயந்து போய், இனிமேல் இது பற்றி உங்களிடம் கேட்க மாட்டேன் என்றாராம். ஆக பெரும் பண்டிதர்களும் கூட விளக்க முடியா மாணிக்க வாசகரின் திருவாசகம் எப்படிப்பட்ட அரிய இறை நூல் என்பது நமக்குத் தெரிய வருகிறது.

 மணிவாசகர் சொல்லச் சொல்ல திருச்சிற்றம்பலமுடையான் தன் கையால் எழுதிய பெரும் வாசகத்தை மனம் உருகிப் படிக்கலாம்; அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அவன் அருளைப் பெறலாம்!

ஆனால் திருவாசகத்தின் விளக்கவுரையை மேற்கொள்ளாது அதன் பெருமையை எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பேசலாம் அல்லவா!

அந்தத் தொண்டர் தம் திருக்கூட்டத்தில், சிவனடியாரின் அடியானாக, திருவாசகத்தின் அருமை பெருமை பற்றிப் பேச யானும் ஒருவன் என்று இங்கே உங்கள் முன் வந்துள்ளேன். இணையம் வழியாக உலகத்தை எட்டிப் பார்த்து அவர் தம் பெருமையைப் பேச, இன்று மணிவாசகப் பெருமானின் குருபூஜை தினத்தை விட வேறு எந்த நாள் தான் சிறப்பாக இருக்க முடியும்.

திருவாசகப் பெருமை

திருவாசகப் பெருமையைப் பற்றி சிவப்பிரகாச சுவாமிகள் அருளியுள்ள அருளுரையைப் படித்தாலேயே நமக்கு அந்தப் பெருமை புரியும்.

விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கண்

காரணன் உரையெனும் ஆரண மொழியோ

ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல்

மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ

யாதோ சிறந்தது என்குவீர் ஆயின்

வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி

நெஞ்சு நெக்கு உருகி நிற்பவர் காண்கிலேம்

திருவாசகம் இங்கு ஒரு கால் ஓதின்

கருங்கல் மனமும் கரைந்து உகக் கண்கள்

தொடுமணற் கேணியின் சுரந்து நீர் பாய

மெய்ம்மயிர்ப் பொடிப்ப விதிர்விதிர்ப்பு எய்தி

அன்பர் ஆகுநர் அன்றி

மன்பதை உலகில் மற்றையர் இலரே!

ஆக ‘வேதத்தை ஓதி  நெஞ்சுருகி விழி நீர் பெருக்கும் அன்பரைக் காணேன்; ஆனால் திருவாசகம் ஓதி உளம் உருகும் நல்லோரைப் பார்க்கிறேன். ஆகவே திருவாசகம் அன்பர்க்கு எளிது; யார் வேண்டுமானாலும் அதை ஓதலாம்’ என்கிறார் அவர்.

அடுத்து அருட்பிரகாச வள்ளலார் திருவாசகத்தை அனுபவித்து ஓதி அதன் பொருளை உணர்ந்து ஆனந்தம் அடைந்தவர். அவர் கூறுகிறார்:

வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை

நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ் சுவை கலந்தென்

ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

என்கிறார் அவர்.

திருவாசகத்தை ஓதும் முறையை அவர் மிக அருமையாக இப்படி விளக்கியுள்ளார்.

பாடுபவர், தான் கலந்து பாட வேண்டும்; ஊன் கலந்து, உயிர் கலந்து பாட வேண்டும். அப்போது தான் திருவாசகப் பெருமை புரியும்.

பழைய காலம் போல ஓரிடத்திற்குச் சென்று தினமும் பாடம் கேட்டுப் பொருளுணரும் வசதி இன்றைய உலகில் உலகெங்கும் பரவியுள்ள தமிழ் அன்பர்களுக்கு இல்லை; ஆகவே தான் இணைய வழியாகப் பொருளுணர்ந்த பெரியோர் தம் உரை கேட்க விழைகிறோம். காலப் போக்கில் சுவடிகள்  படிப்பது மாறி அச்சுப் பதிப்புகள் வரவே கற்றறிந்த பெரியோர் பலர் உரைகளைத் தர ஆரம்பித்தனர்.

திருவாசகத்தை நன்கு உணர்ந்த பெரியோர்கள் நாற்பது பேர் உரைகளை எழுதியுள்ளனர். அவர்களது உரைகள் நமக்குப் பொருள் விளங்க உதவி புரியும்.

1835ஆம் ஆண்டில் செந்தமிழ்ப் புலவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் கற்றறிந்த சில வித்வான்களுடன் மூலத்தைப் பரிசோதித்து முதல் பதிப்பை வெளியிட்டார். பின்னர் பல நல்ல பதிப்புகள் வந்து விட்டதால் திருவாசகம் எங்கும் கிடைக்கும் ஒன்றாக ஆகி இருக்கிறது.

 GNANAMAYAM FOUNDER SRI KALYANASUNDARA SIVACHARYA

1897இல் ப.வாசுதேவ முதலியார் பல வித்வான்கள் எழுதிய உரையை வெளியிட்டார். 1933இல் கா.சுப்பிரமணியப் பிள்ளை ஒரு உரையை எழுதினார். 1954இல் சீகாழித் தாண்டவராயர் ஒரு உரையை வெளியிட அதன் அருமையையும் பெருமையையும் உணர்ந்த அன்பர் பலர் அதைப் படித்து திருவாசகத்தை நன்கு அனுபவித்தனர்.  திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ச.தண்டபாணி தேசிகர் 1964இல் ஒரு அற்புதமான உரையை வெளியிட்டார். அதன் பின்னர் 1968இல் சுவாமி சித்பவானந்தர் ஒரு உரையை வெளியிட்டார். மிக விரிவான இந்த உரை இன்றளவும் அனைத்து அன்பர்களாலும் வாங்கப்பட்டு படிக்கப்பட்டு வருகிறது.

இந்த உரைகளை இன்று படிக்க வேண்டிய அவசியம் ஒன்று உள்ளது. ‘சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார், செல்வர் சிவபுரத்தினுள்ளார் சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்தப் பணிந்து’ என்று மணிவாசகப் பெருந்தகை சொல்வதால் சொல்லிய பாட்டில் உள்ள, அந்தப் பொருளை உணர பெரியோர்களின் உரையை நாட வேண்டி இருக்கிறது. முடிந்த போதெல்லாம் இன்று இப்போது இங்கு கேட்பது போல் அவர் தம் உரைகளைக் கேட்க வேண்டியிருக்கிறது.

வடமொழியும் தென்மொழியும் கற்று அதில் வல்லார்கள் வேதக் கருத்தையும் உபநிடதக் கருத்தையும் பிட்டுப் பிட்டு வைக்கும் போது திருவாசகத்தில் இல்லாதது ஒரு வாசகத்திலும் இருக்காது என்ற அனுபவ உண்மையை அவர்களின் விளக்கம் நமக்குத் தருகிறது.

__தொடரும்

TAGS-

tags- திருவாசகம்-1, தேன்  

40 வயதுக்குள் 50 புஸ்தகம் எழுதிய நாவல் ஆசிரியர் ஜாக் லண்டன் (Post No.9848)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9848

Date uploaded in London –13 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your

40 வயதுக்குள் 50 புஸ்தகம் எழுதிய அமெரிக்க நாவல் ஆசிரியர் ஜாக் லண்டன்

இயற்கையின் கோர தாண்டவத்தையும் எதிர்த்து நின்று மனிதர்களும் மிருகங்களும் எவ்வாறு வெற்றிபெறுகின்றன என்பதை கதைகளில் சித்தரித்தவர் JACK LONDON ஜாக் லண்டன். இவர் வெள்ளைக்காரர்கள்தான்  உயர்ந்தவர்கள் என்றும் , கடவுள் இல்லை என்றும் நம்பியவர் .  ஆயினும் இவை இரண்டும் இவரது புகழுக்குத் தடைக் கற்களாக நிற்கவில்லை. 40 வயதுதான் வாழ்ந்தார். அதற்குள் 50 புஸ்தகங்களை வெளியிட்டு புகழுடன் மறைந்தார் .

பிறந்த தேதி – ஜனவரி 12, 1876

இறந்த தேதி – நவம்பர் 22, 1916

வாழ்ந்த ஆண்டுகள் – 40

பனி மூடிய அலாஸ்கா ALASKA போன்ற இடங்களிலும் மனிதர்களும் ஓநாய் போன்ற பயங்கர  நாய்களும் குன்றாத உற்சாகத்துடன் எப்படி முன்னேறுகின்றன என்று தி கால் ஆப் தி வைல்ட் THE CALL OF THE WILD முதலிய நாவல்களில் காட்டுகிறார்.

எவருக்கு உடலிலும் உள்ளத்திலும் பலம் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே வாழ வேண்டும் FITTEST SHOULD SURVIVE , வெள்ளை நிற தோல் உடையோர் WHITE PEOPLE ARE SUPERIOR மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்ற கொள்கையுடையவர். அமெரிக்காவில் குடியேறிய சீனர்களை மஞ்சள்  ஆபத்து YELLOW PERIL என்று வருணித்தார்.

சான்பிரான்சிஸ்கோ SFC நகரில் பிறந்தார். கலிபோர்னியாவில் ஓக்லாந்தில் OAKLAND வளர்ந்தார்.அவருடைய தாய் முறையான திருமணம் இன்றி இவரை ஈன்றெடுத்தார் ; தந்தை வீட்டைவிட்டு ஓடிப்போனார். உள்ளத்தில் கதைகள் ஊற்றெடுத்தாற் போல வரவே 50 புஸ்தகங்களை எழுதித் தள்ளினார்,

ஓக்லாண்ட்டில் துறைமுக தொழிலாளர் கும்பலில் சேர்ந்து பணிபுரிந்து 17 வயதில் கப்பல் ஏறினார். இந்த கடல் பயண அனுபவம் இரண்டு நாவல்களுக்கு அடித்தளமாக அமைந்தது. வீடற்றோர் போல HOBO பொது இடங்களில் தூங்கும் நாடோடி போலவும் வாழ்ந்தார். இதனால் அடிக்கடி சிறை செல்ல நேரிட்டது. இறந்த சிறைவாசங்கள் , தன் வாழ்க்கையில் முன்னேற உதவுவதாவும் எழுதினார் .

பள்ளிக்கல்வி முடிப்பதற்குள் உணவுப் பொருள்களை டின்களில் அடைக்கும் ஆலைகளிலும் CANNERIES , லாண்டரிகளிலும் LAUNDERIES வேலைசெய்தார். 24 வயதான போது , முதல் கதைத்தொகுப்பை வெளியிட்டார்

1897-98-ம் ஆண்டுகளில் தங்கம் கிடைக்கும் இடங்களை நோக்கி மக்கள் கூட்டம் வெறி பிடித்தார் GOLD RUSH போல ஓடியது. அந்த தங்க வேட்டைக்காக இவரும் கனடாவுக்குச் சென்றார். மக்கள் எளிதில் வசிக்கமுடியாத இடங்களில் போராட்ட வாழ்வு நடத்தியது,  பின்னர் இரண்டு புகழ் மிகு படைப்புகளுக்கு அடித்தளமாக அமைந்தது . உடல் வலு உள்ளோரே வாழத் தகுதி உடையோர் மற்றவர்கள் செத்து மடியட்டும் என்ற கொள்கை உடையவர் என்றாலும் ஏழைகள் படும் துன்பத்தினையும் ஒரு (PEOPLE OF THE ABYSS) சில நாவல்களில் வடித்தார். சமூகத்தில் தீண்ட தகாதவர்கள் போல ஒதுக்கப்பட்டவர்களைப் பற்றி இவர் எழுதி வெற்றி பெற்றது பிற்கால எழுத்தாளர்களுக்கு கருப் பொருளாக அமைந்தது. கடலோடியாக இவர் நடத்திய வாழ்வு SEA WOLF ஸீ வுல்ப் என்ற நாவலுக்கு  வழிவகுத்தது. எழுத்து மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு வெற்றிகரமாக வாழ்ந்த எழுத்தாளர் என்று பெயர் எடுத்த போதிலும் அற்பாயுசில் உயிர் நீத்தார்; ஜான் லண்டன், கவிதைகளையும், கட்டுரைகளையும்  எழுதினார்.

அவரது படைப்புகள்:

1900 – THE SON OF THE WOLF

1902 – CRUISE OF THE DAZZLER

1903 – CALL OF THE WILD

1903- PEOPLE OF THE ABYSS

1904- SEA WOLF

1906 WHITE FANG

190 – THE ROAD

1908 – IRON HEEL

1909 – MARTI EDEN

1910- BURNING DAY LIGHT

இவரது நாவல்களையும், கதைகளையும் வைத்து பல திரைப்படங்கள் , டெலிவிஷன் தொடர்கள் வந்துள்ளன. கானகத்தின் குரல் என்ற தலைப்பில் ஜாக் லண் டனின்   கால் ஆஃப் தி வைல்ட் நாவலும் வெளியிடப்பட்டுள்ளது.

–SUBHAM-

tags -40 வயது, 50 புஸ்தகம், நாவல் ஆசிரியர், ஜாக் லண்டன் ,Jack London, 

LONDON CALLING (HINDUS) 12-7-2021 (Post No.9847)

WRITTEN BYLONDON SWAMINATHAN

Post No. 9847

Date uploaded in London –13 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

12-7- 2021 MONDAY PROGRAMME as broadcast

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -6 MTS

PRAYER – MRS ANNAPURANI PANCHANATHAN

ASHTAPATHI -22 BY LONDON SRI BALA SUBRAHMANYAN -8 mts

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT Bodhendral

– 12 MTS

ABHANGAM BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -8

London swaminathan Talk read by Sri Kalyanasundaram, Producer, Gnanamayam- 5 mts

TOTAL TIME- APPR. 60 MINUTES

XXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags-  broadcast1272021

LONDON CALLING (TAMILS) 11-7-2021 (Post No.9846)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9846

Date uploaded in London –13 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

11-7-2021 SUNDAY PROGRAMME as broadcast

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 5 MTS

Prayer

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON MumbaiSri Siddhi Vinayakar Temple10 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND GROUP–  15 mts

Kumari Hiranmayi Raghavan

Mrs Kavitha Subramanian 

Mrs Latha Murthy

Mrs Radhika Shrikanth recite Thiruppugaz.

***

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN,London

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL  by RANI SRINIVASAN

–25 MINUTES

***

TALK BY  SRI THIRUKOODAL MUKUNTHA RAJAN ON ALVARKAL  SARITHTHIRAM -15 MTS

DURATION-  Appr. 70 minutes 

XXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- broadcast 1172021

பகவந்நாம போதேந்திரர் (Post No.9845)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9845

Date uploaded in London – 13 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 12-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!

போதேந்திரர்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். புண்ய பூமியான பாரதத்தில் தெற்கே நாயன்மார்களும், ஆழ்வார்களும் பதிகங்களாலும் பாசுரங்களாலும் பக்தி மழை பொழியச் செய்தனர். அதே போல வடக்கே, சைதன்ய மஹா பிரபு, மீராபாய், ஜெயதேவர், துளஸி தாஸர், சமர்த்த ராமதாஸர், பத்ராசல ராமதாஸர் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான மகான்கள் தோன்றி பக்தி மார்க்கத்தைப் பரப்பினர்.

இஸ்லாமியரின் படையெடுப்பால் பல கோவில்கள் அழிக்கப்பட்டன ; என்றாலும் இந்து தர்மத்தைப் பாதுகாத்து இன்றைய தலைமுறையினர் வரை அப்படியே அந்த தர்மத்தை வழுவாது வழங்கியவர்கள் இந்த அருளாளர்களே. இவர்களில் குறிப்பிடத் தகுந்த பெரும் மகானாக அவதரித்தவர் பகவந் நாம போதேந்திர சுவாமிகள்.  ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 58வது பட்டம் பெற்று அந்தப் பீடத்தை அலங்கரித்தவர்  ஸ்ரீ விஸ்வாதிகேந்த்ர ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் ஆவார். அவரிடம் கேசவ பாண்டுரங்கர் என்ற ஒரு பிராமணர் கைங்கரியம் செய்து வந்தார். அவருக்கு வெகுகாலம் வரை மகப்பேறு இல்லாமல் இருந்தது. இறைவனை வேண்ட, இறைவனின் திருவருளால் அவருக்கு ஒரு ஆண் குழந்தை 1610 ஆம் ஆண்டு பிறந்தது. காஞ்சியில் மண்டனமிஸ்ரர் அக்ரஹாரத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு புருஷோத்தமன் என்ற பெயர் சூட்டப்பட்டது. குழந்தையை கேசவ பாண்டுரங்கர் தம் குருநாதரிடம் காட்டக் கொண்டு வந்தார். குழந்தையை ஆசீர்வதித்த ஆத்ம போதேந்திரர் அந்தக் குழந்தையை  ஸ்ரீமடத்திற்கு அர்ப்பணம் செய்யும்படி கேசவரிடம் கூறினார். அவரும் அதற்கு இசைந்தார். ஆனால் தன் மனைவியைக் கேட்கவில்லையே என்ற அவர் மனதில் ஒரு தவிப்பு ஏற்பட்டது. வீட்டில் வந்து நடந்ததைச் சொன்ன போது பதிவிரத சிகாமணியான அவரது மனைவி சுகுணா, ‘அது நமது பாக்கியமே என்று கூற அவர் மிகவும் மகிழ்ந்தார்.

குழந்தை புருஷோத்தமன் பக்தியோடு வளர்ந்தது; தனது சேவையைச் செய்ய ஆரம்பித்தது. 15 வயதிற்குள் வேத, தர்ம, சாஸ்திரங்களை முற்றுமாகக் கற்றுத் தேர்ந்தார் புருஷோத்தமர்.

சில வருடங்கள் கழிந்தன. அப்போது  ஸ்ரீஜகத்குரு காசிக்கு யாத்திரையாகச் சென்றார். புருஷோத்தமனும் காசிக்கு யாத்திரை சென்று குருநாதரை தரிசிப்பது என்று தீர்மானம் செய்து கொண்டார். தனது நெருங்கிய நண்பரான ஞானசாகரனையும் காசிக்கு அழைத்தார்; அவரும் உடன் வர இணங்கினார். அவர்கள் இருவரும் ஒரு சங்கல்பம் செய்து கொண்டனர். “காசிக்குச் செல்லும் போது இருவரில் யாரேனும் ஒருவர் இறந்து விட்டால், அடுத்தவர் அவருக்கு ஈமக்கிரியைகளைச் செய்து விட்டு தானும் தனது உயிரைத் தியாகம் செய்து விட வேண்டும் – இப்படி இருவரும் முடிவு செய்தனர். துரதிர்ஷ்டவசமாக செல்லும் வழியிலேயே ஞானசாகரன் இறந்து விடவே, அவருக்கு உரிய கிரியைகளைச் செய்த புருஷோத்தமன் காசி சென்று தன் குருநாதரை தரிசித்து நடந்ததைச் சொல்லி தான் தனது உயிரை கங்கை நதியில் தியாகம் செய்யப் போவதாகவும், அதற்கு குருதேவரின் அனுமதி வேண்டும் என்றும் வேண்டினார்.

ஆசார்யாள், புருஷோத்தமன் சொல்வது அனைத்தையும் கேட்டு விட்டுப் பின்னர், “நீ பிராண தியாகம் செய்ய வேண்டாம். எப்போது ஒருவன் சந்யாசம் வாங்கிக் கொள்கிறானோ அப்போதே அவன் மறு ஜென்மம் எடுத்ததாக ஆகி விடுகிறது. அப்போது தர்ம சாஸ்திரத்தை ஒட்டி உனது சத்தியத்தைக் காப்பாற்றியதாக் ஆகி விடுகிறது என்று கூறி அருளினார். உடனே புருஷோத்தமனும் அதை ஏற்று சந்யாசம் மேற்கொண்டார். அவர் பகவன் நாம போதேந்திராள் என்ற யோகபட்டத்தையும் பெற்றார்.

ஆசார்யரின் ஆக்ஞைப் படி அவர் காஞ்சிக்குத் திரும்பிச் சென்றார்.

போதேந்திரரின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத் தகுந்த சம்பவம் அந்தக் காலத்தில் நடைபெற்றது. இஸ்லாமியரின் ஆதிக்கமும் அட்டூழியமும் நிறைந்த காலம் அது. தக்ஷிண தேசத்திலிருந்து ஒரு பிராமணர் தன் மனைவியுடன் வட தேச யாத்திரைக்குக் கிளம்பினார். வழியில் அவர்கள் இருவரும் ஒரு கிராமத்தில் இரவு தங்கினர். நள்ளிரவில் பிராமணரின் மனைவியாகிய அந்த அழகிய பெண்ணை இஸ்லாமியன் ஒருவன் வாயைப் பொத்தி கூக்குரலிட முடியாதபடி செய்து தூக்கிச் சென்று விட்டான். காலையில் மனைவியைக் காணாது திகைத்து அழுது புலம்பிய பிராமணர் தன் யாத்திரையைத் தொடர்ந்தார்; காசிக்குச் சென்றார். முரடர்களிடம் உள்ள பயத்தினால் அந்தக் கிராம மக்கள் எதையும் அந்த பிராமணரிடம் சொல்லவில்லை. காசிக்குச் சென்று தன் யாத்திரையை முடித்த அந்த பிராமணர் மீண்டும் திரும்பி வரும் போது அதே கிராமத்திற்கு வந்தார். அந்த ஊரில் காலையில் ஒரு குளத்தில் குளித்து விட்டு குளக்கரையில் தனது அனுஷ்டானங்களைச் செய்ய ஆரம்பித்தார்.

அப்போது  அங்கு முஸ்லீம் ஆடை அணிந்து வந்த ஒரு பெண்மணி அவரிடம் வந்து கதறி அழுதாள். “நான் தான் உங்கள் மனைவி. ஒரு மஹாபாவி என்னை இந்த கதிக்கு ஆளாக்கி விட்டான். அவன் வருவதற்குள் நாம் தப்பி ஓடி விடலாம் என்றாள் அவள். அத்தோடு தன்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் ஒரு வேலைக்காரியாகவாவது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவள் அழுது புலம்பினாள். அவளது நிலையைக் கண்டு வருந்திய பிராமணர், இந்த பாவத்திற்கு பிராயச்சித்தம் ஏதேனும் உண்டா என்று பார்க்கலாம் என்றார். அங்குள்ள சிலர் அதே ஊரில் இருக்கும் ஜகந்நாத கவியைச் சந்தித்துக் கேட்டால் அவருக்கு தக்க விடை கிடைக்கும் என்றனர். ஜகந்தாத கவியைச் சந்தித்த தம்பதி நடந்ததைக் கூற, ஜகந்நாதர் மூன்று  முறை ராம ராம ராம என்று கூறினால் போதும், அவளை ஏற்றுக் கொண்டு விடலாம் என்றார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜகந்நாத கவியின் அன்னையார் அங்கு வந்தார். அவர் அத்வைத மகரந்தம் உள்ளிட்ட பல நூல்களை எழுதிப் புகழ் பெற்ற பண்டிதரான லக்ஷ்மிதரர் என்னும் பிரசித்தமான கவிஞரின் மனைவி. அவர் தனது மகனான ஜகந்நாத கவியிடம், “ மூன்று முறை வேண்டாமே! எத்தனை பாவமானாலும் ஒரு முறை ராம நாமத்தை உச்சரித்தாலே போதுமே, அனைத்துப் பாவங்களும் தீருமே என்றார்.

வழிப்போக்கராக அந்த கிராமத்திற்கு வந்து இதையெல்லாம் திண்ணையிலிருந்து கேட்டு கொண்டிருந்த பகவந்நாம போதேந்திரர் ஜகந்நாதரிடம் இதற்கு ஆதாரம் உள்ளதா என்றார்.

உடனே ஜகந்நாதர் தனது தந்தையான லக்ஷ்மிதரர் இயற்றிய ‘பகவந்நாம கௌமுதி என்ற நூலை ஆதாரமாகக் காட்டினார்.

பொழுது விடிந்தது. அங்கு வந்த பிராமணர் தனது மனைவியைக் குளத்தில் இறங்கி ராம நாமத்தை உச்சரிக்கச் சொன்னார். அவரது மனைவியும் ஸ்நானம் செய்து கொண்டே ராம நாமத்தை உச்சரித்தார். என்ன ஆச்சரியம்!  முன்போலவே காதில் தோடு அணிந்தும், நெற்றியில் குங்குமப் பொட்டுடனும், பழையபடி புடவையை உடுத்தியும் அவரது மனைவி காட்சி அளித்தாள். கண் எதிரே பிரத்யக்ஷமாக ராம நாமத்தின் மஹிமையைப் பார்த்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அன்றே அவள் கையினாலேயே பிக்ஷையை வாங்கிக் கொண்ட போதேந்திரர் பகவந்நாம கௌமுதி நூலின் பிரதி ஒன்றையும் வாங்கிக் கொண்டு காஞ்சி வந்து சேர்ந்தார்.

குருவான ஆத்ம போதேந்திரர் தனது சீடரான பகவந்நாம போதேந்திரரை பீடாரோகணம் செய்வித்தார். அவர் ஸ்ரீ காஞ்சி பீடத்தின் 59வது ஆசார்யராக பீடம் ஏறினார். சுமார் 50 வருடங்கள் பகவந்நாம மஹிமையை உலகெங்கும் உபதேசித்து அனைவரையும் நாம சங்கீர்த்தனம் செய்யச் செய்தார் போதேந்திரர்.

ஸ்ரீஜகத்குரு போதேந்திராளும் அவரது குருவும் இராமேஸ்வர யாத்திரையை மேற்கொண்டனர். அப்போது கெடில நதி தீரத்தில் குரு சித்தி அடைந்தார். அவரது சமாதி இருப்பதை வடவாம்பலம் கிராமத்தில் காஞ்சி காமகோடி பெரியவாள் 68வதுபீடாதிபதி  ஸ்ரீ சந்த்ர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தனது தீர்க்க திருஷ்டியால் கண்டு பிடித்து 1927ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிருந்தாவன பிரதிஷ்டை செய்வித்தார்.

போதேந்திரர், தனது குருவின் மனோரதமாகிய இராமேஸ்வர யாத்திரையை பூர்த்தி செய்தார். திரும்பி வரும் போது திருவிடைமருதூர் க்ஷேத்திரத்தில் இருந்து கொண்டு திருவிசைநல்லூர் ஐயாவாளின் மஹிமையை அறிந்து கொண்டார். அவருடன் அறிமுகம் ஏற்பட இருவரும் பகவன் நாம கீர்த்தனையை செய்து ஆனந்தமாய் அதைப் பரப்பிய வண்ணம் இருந்தனர்.

பிறகு இருவரும் ஒரு முறை பிரம்பூர் என்ற கிராமத்திற்குச் சென்று சில நாட்கள் தங்கினர். அங்கு ஒரு ஊமைப் பையன் இருந்தான். அவனைப் பேசும்படி அருள் பாலித்து அவர், அவனைப் பேசச் செய்தார். அந்தப் பையனும் இராம பஜனை செய்யத் துவங்கினான். அந்த ஊரில் அவர் ஒரு ஆஞ்சனேயரையும் பிரதிஷ்டை செய்தார்.

ஸ்வாமிகள் சில கட்டுப்பாடுகளுடன் கூடிய  ஸ்ரீமடத்தின் பொறுப்பை தனது சீடரான அத்வைதாத் பிரகாசகரிடம் ஒப்படைத்து அவரை 60வது பீடாதிபதியாக ஆக்கினார். நாம சங்கீர்த்தன மஹிமையை உலகிற்கு போதிப்பதில் அதிகம் ஈடுபட்டார்.  ஸ்வாமிகள்  ஸ்ரீதர ஐயாவாளின் மறைவுக்குப் பின்னர் அதிகம் பேசுவதை நிறுத்திக் கொண்டார். திருவிடைமருதூரில் சில காலம் வசித்தார். அருகிலுள்ள கோவிந்தபுரமும் அவரைக் கவர்ந்தது. ‘பகவன் நாம ரஸோதயம் உள்ளிட்ட எட்டு நூல்களை அவர் இயற்றியுள்ளார். தினமும் லட்சத்திற்கும் மேற்பட்ட முறை ராம நாமத்தை உச்சரிப்பது அவரது அன்றாடப் பழக்கம்.

ஸ்வாமிகள் காலத்தில் பல அபூர்வ நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஸ்வாமிகள் எப்போதும் தனிமையில் இருப்பார். மாலை நேரத்தில் காவேரிக் கரையில் சிறுவர்களுடன் சேர்ந்து தாமும் விளையாடுவார். அந்தச் சமயத்தில் பல அதிசயங்களை அவர் செய்வார். அதைப் பார்த்து சிறுவர்கள் மகிழ்வர்.

கோடை காலத்தில் குழி தோண்டி மண்ணை வண்டி வண்டியாக எடுப்பது மக்களின் வழக்கம். அப்போது அந்தக் குழியில் அமர்ந்து சிறுவர்களை விட்டு மண்ணைப் போட்டு மூடச் சொல்வது போதேந்திரரின் வழக்கம். ‘யாரிடமும் சொல்லாதீர்கள், நாளை வந்து பாருங்கள் என்று அவர், அந்தச் சிறுவர்களை அனுப்பி விடுவார். மறுநாள் சிறுவர்கள் குழியிலிருந்து மண்ணை எடுத்து அப்புறப்படுத்த போதேந்திரர் வெளியே வருவார். அடிக்கடி இப்படி நடந்தது. ஒரு நாள் ஸ்வாமிகளைக் காணாத ஊர் மக்கள் அவரைத் தேடத் தொடங்கவே சிறுவர்கள் முதல் நாள் நடந்த நிகழ்ச்சியைக் கூறி ஆற்றுக்கு அழைத்துச் சென்றனர். ஊர் மக்கள் குழியிலிருந்த மண்ணை அகற்ற முற்பட்டனர். ஆனால் அப்போது ஒரு ஒலி எழுந்தது: “நாம் இவ்விடத்திலேயே ஞானமயமான சித்த சரீரத்தில் இருந்து கொண்டு ஜீவன் முக்தராக யோக சக்தியால் உலக நலனுக்காக பகவன் நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டே இருப்போம். இதற்கு விக்னம் செய்ய வேண்டாம். இந்த இடத்தில் எவர் ஒருவர் தினமும் லட்சத்து எண்ணாயிரம் தரம் நாம ஜபத்தைச் செய்கிறாரோ அந்த பக்குவமுடைய பக்தருக்கு நாம் தரிசனம் தருவோம். இந்த இடத்தில் பிருந்தாவனம் அமைத்து ஆராதித்தும் வரலாம்.

இந்த அருளுரைப்படியே அவர் பிருந்தாவனம் அமைக்கப்பட்டது.

கோவிந்தபுரம் கிராமத்தில் சாலிவாஹன சகாப்தம் பிரஜோத்பத்தி வருடம் ப்ரோஷ்டபத மாதம் பௌர்ணமி அன்று ஸ்வாமிகள் நிர்விகல்ப சமாதி அடைந்து  பிரம்ம ஸ்வரூபமாய் விளங்க ஆரம்பித்தார். அது 1692ஆம் ஆண்டாகும்.

புரட்டாசி மாதம் மாளய பக்ஷத்தில்  ‘யதி மஹாளயம் என்று கூறப்படும்  கிருஷ்ண பக்ஷ துவாதசியில்  வருடந்தோறும் போதேந்த்ராளின் ஆராதனை இன்றளவும் நடை பெற்று வருகிறது. பக்தர்கள் அவருடைய ஆராதனையை அங்குள்ள பிருந்தாவனத்தில் கூடி சிறப்பாக இன்றளவும் நடத்தி வருகின்றனர்.

இன்று அங்குள்ள அதிஷ்டானத்திற்கு செல்வோர் பாரம்பரிய முறைப்படி மேலாடை இன்றி பயபக்தியுடன் உள்ளே சென்று வணங்குவது மரபாக இருக்கிறது.

இந்த அதிஷ்டானத்தில் அருகில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பிரம்மாண்டமான ஸ்ரீ விட்டல் ருக்மிணி மந்திர் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.சேங்காலிபுரம் ப்ரஹ்ம ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதரின் பேரனும் ஸ்ரீஹரிதாஸ் கிரி ஸ்வாமிகளின் சீடருமான ப்ரஹ்ம ஸ்ரீ விட்டல் தாஸ் ஜயகிருஷ்ண தீக்ஷிதர் அவர்களின் அரும் முயற்சியால் இந்த பிரம்மாண்டமான ஆலயம் அமைக்கப்பட்டது. இந்தக் கோவிலையும் அதிஷ்டானத்தையும் தரிசிக்க கோவிந்தபுரத்திற்கு பக்தர்கள் திரளாக வருகை புரிகின்றனர். ‘கலௌ சங்கீர்த்ய கேசவம் என்ற அருள் மொழிக்கு இணங்க கலியுகத்தில் கடைத்தேற நாம சங்கீர்த்தனம் ஒன்றே சுலபமான வழி என்பதை போதிக்க அவதரித்துள்ள மகான்களில் போதேந்திரர் மிகவும் பூஜிக்கத் தகுந்த சிறப்பான மகான். அவரை வணங்கி நாம ஜபம் செய்வோம்; நலம் பெறுவோம்

நன்றி வணக்கம்!

ஸர்வ லோக சரண்யாய போதேந்த்ர குரு மூர்த்தயே!

ஸ்ரீதரார்ய ஸ்வரூபாய நாமோத்ராய மங்களம் ||

நன்றி, வணக்கம்!

***

OLD ARTICLES IN THE BLOG ON BODHENDRAL



Do Saints’ Samadhis have Divine Power? Can They do …

https://tamilandvedas.com › 2014/06/11 › do-saints-sa…

  1.  
  2.  

11 Jun 2014 — Shirdi Baba Shrine with Samdhi Written by London Swaminathan Post No.1099; Dated 11th June 2014. Hindus believe that by visiting the …

tags- பகவந்நாம, போதேந்திரர், 

இந்தியாவில் பிறந்து நோபல் பரிசை வென்ற ஆங்கில சிறுவர் கதை ஆசிரியர் (Post.9844)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9844

Date uploaded in London –12 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜங்கிள் புக் JUNGLE BOOK  என்ற கதையையும் அதை எழுதிய ஆங்கில எழுத்தாளர் ரட்யார்ட் கிப்ளிங்கையும் RUDYARD KIPLING அறியாதோர் வெகு சிலரே. அவர் பம்பாயில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், ஆங்கில தம்பதிகளுக்குப் பிறந்தார். ஐந்து வயதுக்குப் பின்னர் இங்கிலாந்தில் கல்வி கற்றார். இந்தியாவில் பல பதவிப் பொறுப்புகளில் இருந்தார்.

பிறந்த தேதி – டிசம்பர் 30, 1865

இறந்ததேதி – ஜனவரி 18, 1936

வாழ்ந்த ஆண்டுகள் – 70

1907ம் ஆண்டில் அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. அதிலிருந்தே அவர் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர், இந்திய சுதந்திர எதிர்ப்பாளர் என்பது விளங்கும் . அதுமட்டுமல்ல கதா பாத்திரங்கள் பேசும் வசனங்களிலும் இந்தக் கருத்துக்களும் இனவேற்றுமையும் காணப்படும். ஆயினும் கதை சொல்லுவதில் வல்லவர் என்பதில் ஐயமில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக்  காலத்தில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் தம்பதிகளுக்குப் பிறந்தார் என்பதால் இதில் வியப்புமில்லை. இந்தியா  பற்றி எழுதிய கதை, கவிதைகளில் தான் நேசித்த விஷயங்களையும் சொல்கிறார். 17 வயது வரை இங்கிலாந்தில் இருந்துவிட்டு இந்தியாவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

24 வயதில் அமெரிக்கா, இங்கிலாந்து சுற்றுப் பயணத்தைக் துவக்கி தனது கதைகளையும், கவிதைகளையும் வெளியிடத் துவங்கியவுடன் புகழ் பரவியது. 29ஆவது வயதில் அமெரிக்காவில் இருந்தபோதுதான் ஜங்கிள் புக் JUNGLE BOOK என்னும் காட்டு மிருகங்கள் பற்றிய கதை எழுதினார். இது அவரது மகளுக்குச் சொல்லிய கதையின் அடிப்படையில் அமைந்தது.  காட்டு விலங்குகளிடையேயே வாழ்ந்த ஒரு சிறுவன் பற்றிய கதை இது . 1899ல் அவரது மகள் இறந்தவுடன் குடும்பம் இங்கிலாந்துக்கே திரும்பிவந்தது.

இந்தியாவில் நடக்கும் துணிகர, சாகசச் செயல்களை அடிப்படையாகக் கொண்டு கிம் KIM  என்ற நாவல் எழுதினார். இது நேருஜிக்கு மிகவும் பிடித்த  நாவல். ‘இப்போது’ மிருகங்கள் ஏன் இப்படி இருக்கின்றன என்பதை 37 வயதில் நகைச் சுவையுடன் எழுதினார்.

வன விலங்குகள் பற்றி இவர் எழுதியதையே சிறியோரும் பெரியோரும் விரும்பிப் படித்தனர். ஆங்கிலேயர்கள் தொலைதூரப் பிரதேசங்களில் செய்த சாகசங்களை எழுதியதால் ஆங்கிலேயரும் விரும்பிப் படித்தனர். முதல் உலகப் போரில் கிப்ளிங்கின் 18 வயது மகன் இறந்தான். இதற்குப் பின்னர் அவர் எழுதியவற்றில் இந்த சோகம், துயரத்தின் தாக்கத்தை காணலாம்.

-சுபம்–

Publications

1888 – SOLDIERS THREE

1888 – BAA, BAA, BLACK SHEEP

1890 – WEE WILLIE WINKIE

1892- BARRACK ROOM BALLADS

1894- THE JUNGLE BOOK

1899- STALKY AND CO

1901- KIM

1902 – JUST SO STORIES

1906- PUCK OF POOK’S HILL

–SUBHAM—

tags- நோபல் பரிசு, ரட்யார்ட் கிப்ளிங், ஜங்கிள் புக்  , ஆங்கில,  சிறுவர் கதை ஆசிரியர், Rudyard Kipling

August 2019 London Swaminathan Articles; Index 81 (Post No.9843)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9843

Date uploaded in London –12 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9700 PLUS POSTS.

August 2019 Index 81

Women in 100 Hindu Law Books,6711;1 August, 2019

My visit to Chennai museum-8;6712; 1/8

Swami s Mahabharata Puzzle 1819;6714;1/8

Swastika Mystery, Not found in the Middle East,6717;2/8

My visit to Chennai museum-9; 6719;2/8

My visit-10;6724; 3/8

Animal Medicines and anAmulets in Tamil and Shakespearean works , 6721;3/8

Greatness of Number Six in Hinduism and Judaism, 6729;4/8

My visit -11;6730;4/8

Where is God? One orange if you tell me, 6733; 5/8

My visit-12; 5/8; 6735

Number 6 means Brahmins 6737;6/8

Swami s Idea corner- Quotations on currency notes and Missing Cauldron,6738;6/8

Doctors Anecdotes, 6742; 7/8

Swami s crossword 7819;

Largest and Longest Stone Inscription in tho world, 6746;8/8

What is the true meaning of Sloka? Did Sholapur become Sloka? 6752;9/8

Number Six in the oldest Tamil Book, 6757;10/8

More about Music Pillars in Hindu temples, 6759;10/8

Roll on the road and get rid of your sins,6762;11/8

List of 150 Great Hindu Astronomers &300 Sanskrit books

on Astronomers ,6763;11/8

Swami s crossword 12819;6767:12/8

Is he gone yet? Newspaper phone call to a sick VIP,6768;12/8

Sickness in the guise of a lady,6772;13/8

Archbishop s Strange Disease, 6779;14/8

Swami s crossword 15819;6884;

Story of Golden Bowl in Lalita Vistara and Borobudur 6882;15/8

The Story of the Greedy Merchants,6888;16/8

Swami s crossword 16819;6889

Sacred Number Seven,6893;17/8

World Wonder in Chennai- Oldest working Steam Engine,

6896;18/8

More about Holy Seven,6901;19/8

Swami s crossword 19819;6902

Chennai Sea Wonder, 6905;20/8

Seven Worst Sins and Seven Virtue s, 6906;20/8

The Mystery of Hindu skeleton Lake gets deeper, 6909;21/8

Hindu Wonder near Madurai,6910;21/8

Swami s crossword 21819;6912

Train went back for an old lady, 6916;22/8

Tirupati Temple Wonder and Tamil Wonder,6922;23/8

Horse and Husband! Medical Jokes!6926;24/8

Number Seven in Rigveda, Greece, Australia,China and

Middle East ,6928;24/8

London Mahalakshmi Templ e Ratha Yatra,6932;25/7

Swami s crossword 25819;632;

Astrology Dictionary, Tamil English Dictionary from

Sri Lanka ,6936;26/8

Four Wives of Krishnadevaraya, 6937;26/8

Swami s crossword 26819;6938

Notting hill Carnival in London,6940;27/8

Krishnadevaraya s visit to Kumbakonam Mahamakam, 6941;27/8

List of Sexy Plants,6946;28/8

Swami s crossword 29819;6950

Sweeter than liquor is Love,6953;30/8

Seven Valued Logic in Jainism, 6957;31/8

Xxx

TAMIL ARTICLES FROM AUGUST 2019

நூறு சட்ட புஸ்தகங்கள்! ஸ்ம்ருதிகள், 6709; ஆகஸ்ட் 1, 2019

கொண்டுவந்து போட்டு கொளுத்து , 6710; 1/8

தமிழ்ப் புதிர் 1819; 6713

சுவஸ்திகா இல்லாத இடம் எது?6716; 2/8

த.கு.போ. 2819, 618

த.கு.போ . தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி

சென்னை அருங்காட்சியக  வளாகத்தில் அரிய மரங்கள் ;6722; 3/8

இரண்டாம் உலக மஹா யுத்தம் – மலே சியாவில்

ஜப்பானியர் அட்டூழியம்- 1 , 623, 3/8

அலகாபாத் கல்வெட்டில் அதிசய சம்ஸ்க்ருதம், 6726, 4/8

இரண்டாம் உலக …. 2, 6727; 4/8

த.கு.போ 4819; 6728

ஆறாம் நம்பர் அகிசயங்கள் ! இந்துமத-யூத மத ஒற்றுமை; 6732; 5/8

த.கு.போ 5819; 6734

800 ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுப் புலவர்கள்- மேலும் சுவையான செய்திகள் ,6739, 6/8

கல்வெட்டுகளில் ஜோதிடமும் சங்கீதமும், 6741, 7/8

ஆறு கால பூஜை,அருகலாஉற்சவம், 6 THOLIL 6751

வாளும் குண்டூசியும் – காந்திஜியும் நாதிர்ஷாவும்

தமிழ் டமாரம் பற்றிய அதிசயச் செய் தி, 6756,

துலுக்கப்  படைகளை விரட்டிய அனுமன் பாடல் 6758,19/8

த .கு.போ.8819; 6747

75 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமா, 6748, 8/8

ஹிட்லரும் முசோலோனியும் , 6749, 8/8

தொல்காப்பியத்தில் உயிரியல் விஞ்ஞானம்,6761, 11/8

லண்டன் சாலையில் உருண்ட பக்தர்கள் , அதிசயக் காட்சி ,6765,12/8

150 இந்திய வானிலை விஞ்ஞானிகளும் 300 சம்ஸ்க்ருத நூல்களும், 6766, 12/8

ஐயர் குடுமி அவிழத்தது ஏன் ?6770, 13/8 (சாணக்கியன் )

150 இந்திய ….2 (6773), 13/8

டாக்டரிடம் நோயாளியின் கடைசி வேண்டுகோள், 6776, 14/8

150 இந்திய …..3, 6773, 14/8

ஆகஸ்ட் 15ம் அரவிந்த மகரிஷியும் (பாரதிதாசன் கவிதை , 6778, 14/8

பெண் வடிவில் நோய் போனது, 6881, 15/8

த.கு.போ 15819,6883

சுஜாதா கொடுத்த தங்கக் கிண்ணம், 6886, 16/8

ஐயோ பாதிரியாரே ! அது என் கால், பெண் வெட்கம்; 6887, 16/8

வியாபாரிகளின் பேராசை- பழைய கதை, புதிய வியாக்கியானம், 6891, 17/8

த.கு.போ.17819, 6892

தில்லை சிதம்பரத்தில் 75 மரம், செடி , கொடிகள் ,6897, 18/8

த.கு.போ.18819, 6892

அதிசய எண் ஏழு , புனித எண் 7, 6900, 19/8

தமிழ் இலக்கியத்தில் எண் ஏழு, ,6904, 20/8

த.கு.போ.20819, 6907

இமயமலை ஏரி அதிசயம்,- உலகப் பத்திரிகைகள் அலசல், 6911, 21/8

மதுரை அருகில் அதிசய நந்தி உருவம் கண்டுபிடிப்பு, 6915,22/8

த.கு.போ.21819, 6913

இலங்கைக்கு இலவச  சுற்றுலா -1, 6917, 22/8

த.கு.போ.23819, 6923

த.கு.போ.24819, 6929

த.கு.போ.27819, 6942

கோவில் செங்கலில் வெளிநாட்டுக்காரர் உருவம், ,6919,23/8

கால் முறிவுக்கு அதிசய சிகிச்சை !கிழவிக்காக

திரும்பிப்போன ரயில் 6920,23/8

இலங்கைக்கு இலவச  சுற்றுலா -2, 6921, 23/8

திருப்பதியில் அதிசயம் ! உலகிலேயே அதிகமான கல்வெட்டுகள் ,

6925, 24/8

தமிழ் இசையில் எண் ஏழு ,6927, 24/8

தமிழ் தமாஷ் : உ.வே.சா.  ஐயங்கார் ஜோக்ஸ் , 6931, ,25/8

குதிரையா, கணவனா ? எது முக்கியம்?6935, 26/8

மாமன்னர்  கிருஷ்ணதேவராயரின் 4 மனைவி மர்மம், 6943, 27/8

தசரா யானைகள் பற்றிய சுவையான செய்தி! அர்ஜுனா  5800 கிலோ

6945, 28/8

மன்னர் வருகிறார் , கும்பகோணத்தில் பலத்த பாதுகாப்பு ; மதுரையில்

3 நாள் தங்கல், 6947, 28/8

த.கு.போ.29819, 6951,29/819,6951

பாம்பும் வசம்பும்,6949, 29/8

விநாயக சதுர்த்தி வழிபாட்டின் இரகசியங்கள், 6948, 29/8

கச்சேரியில் டிங்கிள் , டிங்கிள் , லிட்டில் ஸ்டார் ,6954, 30/8

த .கு.போ.31819, 6960

தமிநாட்டுப் போர்க்களங்கள், 6958

நூறு கோண் – ஒரு அணு- தமிழ் ரகசியங்கள் , 6959, ஆகஸ்ட் 31, 2019

–subham—

Tags- Index August 2019, Index 81

ஆலயம் அறிவோம் – மும்பை சித்தி விநாயகர் ஆலயம்(Post No.9842)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9842

Date uploaded in London – –   12 JULY   2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 11-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்

விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனே

விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுமாந் தன்மையினால்

கண்ணிற் பணிமின் கனிந்து

கபில தேவ நாயனார் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது பாரதத்தின் வணிகச் சிறப்பு நகரான மும்பையிலிருந்து அருள் பாலிக்கும் சித்தி விநாயகர் ஆலயமாகும்.

மும்பை நகரில் மிகுந்த போக்குவரத்தும் ஜன நடமாட்டமும் உள்ள பிரபா தேவி பகுதியில் காகாசாஹிப் காட்கில் ரோடு, எஸ்.கே, போலே ரோட் சந்திப்பில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் தோன்றியது பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு. டியூபாய் படீல் என்ற பணக்காரப் பெண்மணி மாதுங்காவில் வசித்து வந்தார். ஆர்ய சமாஜத்தைச் சேர்ந்தவர் அவர். அவருக்குக் குழந்தைப் பேறு இல்லை. அவர் விநாயக பக்தர். தனக்கு குழந்தைப் பேறு வேண்டி விநாயகருக்கு இந்த ஆலயத்தை அமைத்தார். ஆனால் அவருக்குக் குழந்தைப் பேறு இல்லாமல் போயிற்று. என்றாலும் இங்கு வந்து வழிபடும் பெண்மணிகளுக்குக் குழந்தைச் செல்வத்தை அருள வேண்டுமென அவர் மனமுருகப் பிரார்த்தித்தார். அவரது பிரார்த்தனை பலிக்கும் விதமாக இங்கு வந்து வழிபடும் அனைவருக்கும் தடைகள் நீங்கின. வளங்கள் ஓங்கின. குழந்தைச் செல்வம் உள்ளிட்ட அனைத்து நலன்களும் வரவே சித்தி விநாயகர், வரம் தரும் வர சித்தி விநாயகராகப் பிரசித்தி பெற்றார். பக்தர்களும்,அரசியல் வாதிகளும், திரைப்பட நடிக, நடிகையரும், கலைஞர்களும், சாமான்யர்களும் காலை ஐந்தரை மணி முதல் இரவு வரை கூட்டம் கூட்டமாக இங்கு வந்து விநாயகரை வழிபட்டு அவர் அருள் கிடைக்கப் பெற்று ஆனந்தத்தில் திளைக்கின்றனர். இவரை நவசாலா பவனர கணபதி என்று சிறப்புப் பெயரிட்டு அழைக்கின்றனர். தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் உள்ள இந்தக் கோவில் ஐந்து அடுக்கு கட்டிடமாக அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேலே சுமார் 12 அடி உயர தங்க முலாம் பூசப்பட்ட கலசமும் உள்ளது.

விநாயகர் இரண்டரை அடி உயரமும் இரண்டடி அகலமும் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட விநாயகராக அமைகிறார். சாதாரணமாக விநாயகரின் தும்பிக்கை இடப்புறமே வளைந்து இருக்கும். இந்த விநாயகருக்கு உள்ள தனிச் சிறப்பு இவரது துதிக்கை வலப்புறமாகத் திரும்பி இருப்பது தான். இவருக்கு சிவபிரான் போல நெற்றியிலும் ஒரு கண் உண்டு. நான்கு கரங்களை இவர் கொண்டிருப்பதால் சதுர் புஜ விநாயகர் என்று அனைவரும் இவரை அழைக்கின்றனர். மேற்புற வலது கையில் தாமரை மலரையும் இடது கையில் கோடாரியையும் ஏந்தி இருக்கிறார். கீழே உள்ள கரங்களில் வலது கரத்தில் ஜபமாலையையும் இடது கரத்தில் மோதகத்தையும் கொண்டுள்ளார். பூணூலுக்குப் பதிலாக ஒரு நாகம் வலது தோளில் ஆரம்பித்து வயிற்றின் இடது பக்கம் வரை செல்கிறது.

விநாயகரின் இன்னொரு முக்கியமான சிறப்பு அம்சம் இவரது இரு பக்கங்களிலும் ஸித்தி, புத்தி ஆகிய இருவரும் இருப்பது தான். புத்தியை ரித்தி என்று வடக்கே சொல்வது பழக்கம் என்பதால் இவரை ஸித்தி, ரித்தி விநாயகர் என்று அனைவரும் குறிப்பிடுகின்றனர்.

இன்றைய நவீன யுகத்திற்கேற்ப அமைக்கப்பட்டுள்ள மடப்பள்ளியில் தயாரிக்கப்படும் நைவேத்தியம் ஒரு பிரத்யேகமான லிஃப்ட் மூலம் கர்பகிரஹத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விநாயகருக்கு படைக்கப்படுகிறது.

பழைய காலத்தில் விநாயகரின் அருகே ஒரு பெரிய ஏரி இருந்தது.  இதர கட்டிடங்களும் இருந்தன. ஆனால் காலப் போக்கில் ஏரி இல்லை; கட்டிடங்கள் மாறி விட்டன. என்றாலும் விநாயகர் தனது இடத்தில் அப்படியே இருந்து அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார்; அவ்வப்பொழுது கோவில் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

1952ஆம் ஆண்டில் மும்பையில் எலிஃபின்ஸ்டன் சாலை அருகில் உள்ள சயானி சாலையை விரிவு படுத்தினர். அப்போது சாலையைத் தோண்டிய போது ஒரு அனுமார் சிலை கண்டெடுக்கப்பட்டது. அந்த அனுமார் இந்த சித்தி விநாயகர் ஆலையில் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆக இங்கு அநுமாருக்கும் தனி சந்நிதி ஒன்று உண்டு. மஹராஷ்டிரத்திற்கே உரித்தான முறையில் இங்கு விநாயக சதுர்த்தி உள்ளிட்ட பல விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன. மஹராஷ்டிரத்தை ஆண்ட பேஷ்வாக்கள் விநாயக சதுர்த்தியைப் பெரும் விழாவாக ஆக்கிக் கொண்டாடினர். பால கங்காதர திலகர் நாட்டு மக்களை ஒன்றிணைக்க இந்த பண்டிகையை மக்கள் பண்டிகையாக மாற்றினார். வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து சுதந்திரம் பெற மக்கள் சக்தியை ஒருங்கிணைத்தார்.

1891இல் இப்படி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட விழா இன்று தேசிய அளவில் தேசீய விழாவாக மாறி விட்டது. விநாயகர் பாரத தேசத்தைக் காக்கும் தெய்வமாக, தடைகள் அகற்றும் தெய்வமாக இமயம் முதல் குமரி வரை கொண்டாடப்படுகிறார். அதற்கு மும்பை சித்தி விநாயகர் கோவிலில் கூடும் திரளான பக்தர்களே சாட்சி!ஏராளமான அளவில் பக்தர் கூட்டம் திரள்வதால் அனைவரும் கியூவில் நின்று விநாயகரை தரிசிக்கின்றனர்.  பாராட்டும் விதமான கட்டுப்பாட்டை அனைவரும் அனுஷ்டிக்கின்றனர்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மும்பை சித்திவிநாயகர், அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.       

அருள் பிரகாச வள்ளலார் பெருமானின் அருள் வாக்கு இது :

                                                             முன்னவனே யானை முகத்தவனே முத்தி நலம்

சொன்னவனே தூய் மெய்ச் சுகத்தவனே – என்னவனே

சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே

தற்பரனே நின் தாள் சரண்!

நன்றி வணக்கம்!     

  ***

Tags- மும்பை சித்தி விநாயகர் ஆலயம்

சரணாகதியே சகலமும் தரும்: புராணத்துளிகள் (Post No.9841)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9841

Date uploaded in London – 12 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures

புராணத்துளிகள் மூன்றாம் பாகம்-அத்தியாயம் 11 கட்டுரை எண் 9807 வெளியான தேதி

3-7-2021

புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 12

(34 முதல் – 40 முடிய)

ச.நாகராஜன்

34. எது சிறந்த செயல்?

தத் கர்ம ஹரிதோஷம் யத் ஸா வித்யா தன்மதிர்யயா |

தத் வர்ணம் தத் குலம் ச்ரேஷ்டம் ததாஸ்ரமம் சுபம் பவேத் ||
                              ஸ்ரீமத் பாகவதம் 4/29/49           

எது ஹரிக்குத் திருப்தியாக இருக்கிறதோ அதுவே சிறந்த செயல். அவனை நோக்கி பக்தி செலுத்தச் செய்வது எதுவோ அதுவே சிறந்த வித்யா. அவனது பாதகமலத்தை நோக்கி எந்த ஜாதி மனதை இட்டுச் செல்கிறதோ அதுவே சிறந்த ஜாதி. எந்த குலம் அவனை நோக்கி இட்டுச் செல்கிறதோ அதுவே சிறந்த குலம். எந்த ஆஸ்ரமம் (வர்ணாசிரம தர்மங்கள்) அவனை நோக்கி இட்டுச் செல்கிறதோ அதுவே புனிதமானது.

*

35.சரணாகதியே சகலமும் தரும்

ஹரிதேஹப்ருதாமாத்மா ஸ்வயம் ப்ரக்ருதிரீஸ்வர: |

தத்பாதமூலம் சரணம் யத: க்ஷேமோ ந்ருணாமிஹ ||

                                   ஸ்ரீமத் பாகவதம் 4/29/50       

ஸ்ரீஹரியே ஆத்மா. ப்ரக்ருதியும் (இயற்கை) ஈஸ்வரனும் (எங்கும் நிறைகின்ற இறைவன்) உடல் சார்ந்தவை. அவனது பாத கமலங்களில் சரணடைவது எல்லா க்ஷேமத்தையும் (நலத்தையும்) தரும்.

*

36. எவனை வித்வான் என்று கூறலாம்?

ஸ வை ப்ரியதமஷ்சாத்மா யதோ ந பயமன்வபி |

இதி வேத ஸ வை வித்வான்  யோ வித்வான் ஸ குருர்ஹரி: ||

                                           ஸ்ரீமத் பாகவதம் 4/29/51

அவரே (ஸ்ரீஹரியே) அனைவருக்கும் பிரியமானவர். அவரிடமிருந்து கிஞ்சித்தும் பயம் எழாது. எவன் ஒருவன் இதை அறிகிறானோ அவனே வித்வான் (அனைத்தும் அறிந்தவன்). அவனே அவனுக்கு குரு கடவுளும் அவனும் ஒன்றாகிறான்.

*

37. ஆயிரம் ஜன்மம் கழித்து வருவது எது?

ந்ருணாம் ஜன்ம ஸஹஸ்ரேன பக்தௌ ப்ரீதிர்ஹி ஜாயதே |

கலௌ பக்தி: கலௌ பக்திதர்பக்த்யா க்ருஷ்ண: புரஸ்தித: ||

பத்ம புராணம் (உத்தர காண்டம்) 194/19

பக்திக்கென ஆயிரம் ஜன்மங்கள் கடுமையான முயற்சி செய்த பின்னரே ஒருவனுக்கு இறைபக்தி வருகிறது. கலியுகத்தில் பக்தி ஒன்றே நமக்கான புகலிடம். பக்தியினால் ஸ்ரீகிருஷ்ணரின் தரிசனம் கிட்டுகிறது.

*

38. பக்தர்களில் சிறந்த பக்தர் யார்?

யே மே பக்தஜனா: பார்த்த ந மே பக்தாஸ்ச தே ஜனா: |

மத்பக்தானாஞ்ச யே பக்தா: தே மே பக்ததமா மதா: ||

ஆதிபுராணம் – 112/91

என்னிடம் மட்டுமே பக்தி செலுத்துபவர் எனது பக்தனாக மாட்டார். என்னிடம் பக்தி செலுத்தும் பக்தனிடம் பக்தி செலுத்துபவரே எனது சிறந்த பக்தராவார்.

*

39. எந்தப் பாவம் போகவே போகாது?

அத்யுக்ரோ வைஷ்ணவத்ரோஹோ வேதாதிஷு ஸுவிஸ்ருத: |

ந சக்யதே வாரயிதும் கல்பகோடிஷதரைபி: ||

ஆதிபுராணம் – 112/91

வைஷ்ணவர்களுக்கு துரோகம் இழைப்பவர்களின் பாவமானது கோடி கோடி கல்பங்கள் ஆனாலும் போகாது, தீர்க்க முடியாது என்று வேதங்கள் அறைகின்றன. (வைஷ்ணவன் – தூய பக்தன்)

*

40. மூவுலகங்களிலும் துன்பப் படுபவர் யார்?

பக்தித்ரோஹகரா யே ச தே சீதந்தி ஜகத்ரயே |

துர்வாஸா துக்கமாபன்ன: புரா பக்திவிநிந்தக: ||

பத்ம புராணம் (உத்தர காண்டம்) 194/20

பக்திக்கு எவர் ஒருவர் தீங்கு இழைக்கிறாரோ அவர் மூவுலகங்களிலும் துன்பப் படுவார். ஒரு பக்தனைத் தூற்றியதால் துர்வாஸர் துக்கத்திற்குள்ளானார்.

(குறிப்பு : துர்வாஸரின் கதை அனைவரும் அறிந்த ஒன்று. அம்பரீஷனை அவர் அவமதித்ததால் அவர் பெரும் அல்லலுக்கு உள்ளானார்)

***

INDEX

ஸ்ரீமத் பாகவதம்,ஆதிபுராணம்,பத்ம புராணம் (உத்தர காண்டம்) ஸ்லோகங்கள்

சிறந்த செயல் ஹரி பக்தியே

ஹரி சரணாகதியே சகலமும் தரும்

ஹரியை அறிபவனே வித்வான்

பக்தர்களிடம் பக்தி செலுத்துபவனே சிறந்த பக்தன்

வைஷ்ணவ துரோகம் என்ற பாவம் கோடி கல்பமானாலும் போகாது

பக்தனை அவமதிப்பவன் மூன்று உலகங்களிலும் துன்பப்படுவான்

நன்றி : Truth Vol89, No 2 Dated 23-4-21 (Slokas taken from this issue)

***

tags –  சரணாகதி, புராணத்துளிகள், 

PLEASE JOIN US TODAY SUNDAY 12-7- 2021

12-7- 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -6 MTS

PRAYER – MRS ANNAPURANI PANCHANATHAN

ASHTAPATHI -22 BY LONDON SRI BALA SUBRAHMANYAN -8 mts

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT Bodhendral

– 12 MTS

ABHANGAM BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -8

London swaminathan Talk read by Sri Kalyanasundaram, Producer, Gnanamayam- 10 mts

TOTAL TIME- APPR. 50 MINUTES

XXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags-publicity1272021