


WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9848
Date uploaded in London –13 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your
40 வயதுக்குள் 50 புஸ்தகம் எழுதிய அமெரிக்க நாவல் ஆசிரியர் ஜாக் லண்டன்
இயற்கையின் கோர தாண்டவத்தையும் எதிர்த்து நின்று மனிதர்களும் மிருகங்களும் எவ்வாறு வெற்றிபெறுகின்றன என்பதை கதைகளில் சித்தரித்தவர் JACK LONDON ஜாக் லண்டன். இவர் வெள்ளைக்காரர்கள்தான் உயர்ந்தவர்கள் என்றும் , கடவுள் இல்லை என்றும் நம்பியவர் . ஆயினும் இவை இரண்டும் இவரது புகழுக்குத் தடைக் கற்களாக நிற்கவில்லை. 40 வயதுதான் வாழ்ந்தார். அதற்குள் 50 புஸ்தகங்களை வெளியிட்டு புகழுடன் மறைந்தார் .
பிறந்த தேதி – ஜனவரி 12, 1876
இறந்த தேதி – நவம்பர் 22, 1916
வாழ்ந்த ஆண்டுகள் – 40
பனி மூடிய அலாஸ்கா ALASKA போன்ற இடங்களிலும் மனிதர்களும் ஓநாய் போன்ற பயங்கர நாய்களும் குன்றாத உற்சாகத்துடன் எப்படி முன்னேறுகின்றன என்று தி கால் ஆப் தி வைல்ட் THE CALL OF THE WILD முதலிய நாவல்களில் காட்டுகிறார்.
எவருக்கு உடலிலும் உள்ளத்திலும் பலம் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே வாழ வேண்டும் FITTEST SHOULD SURVIVE , வெள்ளை நிற தோல் உடையோர் WHITE PEOPLE ARE SUPERIOR மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்ற கொள்கையுடையவர். அமெரிக்காவில் குடியேறிய சீனர்களை மஞ்சள் ஆபத்து YELLOW PERIL என்று வருணித்தார்.
சான்பிரான்சிஸ்கோ SFC நகரில் பிறந்தார். கலிபோர்னியாவில் ஓக்லாந்தில் OAKLAND வளர்ந்தார்.அவருடைய தாய் முறையான திருமணம் இன்றி இவரை ஈன்றெடுத்தார் ; தந்தை வீட்டைவிட்டு ஓடிப்போனார். உள்ளத்தில் கதைகள் ஊற்றெடுத்தாற் போல வரவே 50 புஸ்தகங்களை எழுதித் தள்ளினார்,
ஓக்லாண்ட்டில் துறைமுக தொழிலாளர் கும்பலில் சேர்ந்து பணிபுரிந்து 17 வயதில் கப்பல் ஏறினார். இந்த கடல் பயண அனுபவம் இரண்டு நாவல்களுக்கு அடித்தளமாக அமைந்தது. வீடற்றோர் போல HOBO பொது இடங்களில் தூங்கும் நாடோடி போலவும் வாழ்ந்தார். இதனால் அடிக்கடி சிறை செல்ல நேரிட்டது. இறந்த சிறைவாசங்கள் , தன் வாழ்க்கையில் முன்னேற உதவுவதாவும் எழுதினார் .
பள்ளிக்கல்வி முடிப்பதற்குள் உணவுப் பொருள்களை டின்களில் அடைக்கும் ஆலைகளிலும் CANNERIES , லாண்டரிகளிலும் LAUNDERIES வேலைசெய்தார். 24 வயதான போது , முதல் கதைத்தொகுப்பை வெளியிட்டார்
1897-98-ம் ஆண்டுகளில் தங்கம் கிடைக்கும் இடங்களை நோக்கி மக்கள் கூட்டம் வெறி பிடித்தார் GOLD RUSH போல ஓடியது. அந்த தங்க வேட்டைக்காக இவரும் கனடாவுக்குச் சென்றார். மக்கள் எளிதில் வசிக்கமுடியாத இடங்களில் போராட்ட வாழ்வு நடத்தியது, பின்னர் இரண்டு புகழ் மிகு படைப்புகளுக்கு அடித்தளமாக அமைந்தது . உடல் வலு உள்ளோரே வாழத் தகுதி உடையோர் மற்றவர்கள் செத்து மடியட்டும் என்ற கொள்கை உடையவர் என்றாலும் ஏழைகள் படும் துன்பத்தினையும் ஒரு (PEOPLE OF THE ABYSS) சில நாவல்களில் வடித்தார். சமூகத்தில் தீண்ட தகாதவர்கள் போல ஒதுக்கப்பட்டவர்களைப் பற்றி இவர் எழுதி வெற்றி பெற்றது பிற்கால எழுத்தாளர்களுக்கு கருப் பொருளாக அமைந்தது. கடலோடியாக இவர் நடத்திய வாழ்வு SEA WOLF ஸீ வுல்ப் என்ற நாவலுக்கு வழிவகுத்தது. எழுத்து மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு வெற்றிகரமாக வாழ்ந்த எழுத்தாளர் என்று பெயர் எடுத்த போதிலும் அற்பாயுசில் உயிர் நீத்தார்; ஜான் லண்டன், கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதினார்.
அவரது படைப்புகள்:
1900 – THE SON OF THE WOLF
1902 – CRUISE OF THE DAZZLER
1903 – CALL OF THE WILD
1903- PEOPLE OF THE ABYSS
1904- SEA WOLF
1906 WHITE FANG
190 – THE ROAD
1908 – IRON HEEL
1909 – MARTI EDEN
1910- BURNING DAY LIGHT
இவரது நாவல்களையும், கதைகளையும் வைத்து பல திரைப்படங்கள் , டெலிவிஷன் தொடர்கள் வந்துள்ளன. கானகத்தின் குரல் என்ற தலைப்பில் ஜாக் லண் டனின் கால் ஆஃப் தி வைல்ட் நாவலும் வெளியிடப்பட்டுள்ளது.




–SUBHAM-


tags -40 வயது, 50 புஸ்தகம், நாவல் ஆசிரியர், ஜாக் லண்டன் ,Jack London,