நாச்சியார் வைபவம் (Post No.9918)

WRITTEN BY LONDON POET DR A. NARAYANAN

Post No. 9918

Date uploaded in London – 1 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

  ஆண்டாள் திருவடிகளே சரணம்

 நாச்சியார் வைபவம்

ஆடிப்பூரத்தி  லவதரித்த ஆண்டாள்

அரங்கனின் புகழ் பாடி அகமகிழ்ந்தாள்

சூடிக் கொடுத்த சுடர் கொடியோ இவள்

சொல்லில் பிறந்ததுத் திருப்பாவையன்றோ

மார்கழி நீராடி மதுசூதனன்  பேர் பாடி

மாதர்  குழுவினை வீதியில் கூட்டி

வீடு வீடாய்ச் சென்றுத் தேடுவோ மாயனை

நாடும் நம்மை நழுவுவானோ இந்நந்தன்

மையிடாக்கண்களும் மலர் சூடாக்கூந்தலு

மாய் பொய்யும் புறங்கூறலைப் புறந்தள்ளி

வாயும் வயிறும் வருந்தியோர்க்கன்னமிட்டதே

மாயனுக்கிம் மங்கையரின் மார்கழி நோன்பு

ஒங்கி உலகளந்த உத்தமனுக்குத் தலை

தாங்கிய பால் குடம் சுமந்தத் தாய் குலம்

நீங்காத நடமாடும் செல்வமீன்ற நெடியோனுக்

கீன்றது அவன் விரும்பிய வெண்ணெயே

ஆழி ஏந்தா அரவணைத்துயிலோன் முன்

தாழி வெண்ணெய் ஏந்திய தோழியர்கள்

வேண்டினதோ பட்டர் பிரான் கோதையைப்

பிடித்தக் கார்வண்ணன் பித்து விட்டு விடவே

வேண்டுதல் கேட்டுத் தன்னுள் பூரித்த

வேய் குழலோன் நினைத்ததோ திவரறி

யாரோ இக்கோதையே நித்தம் துதித்தென்

சித்தம் கவர்ந்த சிந்தாமணியெனவே

பக்திமணம் கமழும் பாமாலையயேப் பூமாலையாய்

முக்திபெற முகுந்தனையே முந்தணயில் முடிந்திவள்

மூச்சுக் காற்றால் வாடிச்  சூடிய மாலையையணிய

பட்டர்பிரான் வர துயில் நீத்துக் காத்திருந்தானரங்கன்

மகள் தோள் சார்ந்த மாலை மாயனுக்கொவ்வாவென

மனம் நொந்த ஆழ்வான் மகளிழைத்தப் பிழையை

மன்னிக்க மன்றாட அசரீரி ஒலித்ததோ “கோதை சூடிய

மாலை வாடினினு மெம் வைசயந்தியிலுமுன்னதமே

வாடியவள் சூடிய மாலையின் வாசம் தென்றலாய்

பாடிய பாமாலையில் வீச நாடிய நாராயணனைத்

தேடிய கோதையின் பக்தியே கீதையாக, தருவீரோ?

ஆழ்வானே! எனை ஆண்ட இவளை முத்தாரமாக.”

கன்னி கண்ட கனவு நினைவான நாளோ நாயகன்

நந்த கோபன் குமரன் கோயில் தோரண வாயில்

வந்த கோதையை கதிரொளி தீபம் கலசமுடனேந்திச்

சதிரள மங்கையர் எதிர்கொண்டழைத்த நன் நாளே

மத்தளம் கொட்டி வரி சங்கம் முழங்க முத்தும்

மணியும் மலரும் நிறைந்த பந்தர் கீழ் மதுசூதனன்

மங்கைக் கரம் பற்றித் தீ வலம் வந்து அவள் தாள்

பற்ற சிந்தியதவள் கண்ணிர் வெந்நீராயவன்மீது

கண்ணீர் கசிந்த கோதையின் கண்கள் விழித்ததோ

உரியவளாயினு முயர்ந்தவர் நீர் என் தாள் பற்றியதில்

பாவியானேனப், பாவியிலும் பாவி இக்கண்ணனே! கை

பிடித்தவளைக் கண் கலங்க வைத்ததிலென்றான்.

ஓங்கிய பக்தியில்  ஒன்றிய உள்ளத்தால்

அன்றிவ்வுலகள ந்தானைத் தாங்கிய

இத்தாரகையக்குரிய மார்கழி மாதத்

திலுமொன்றியவனோ மதுசூதனன் .     

—A. நாராயணன்

tags- நாச்சியார் வைபவம், A. நாராயணன்

புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் (Post No.9917)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9917

Date uploaded in London – 1 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தேசிய விநாயகம் பிள்ளையின் வெய்யிற்கேற்ற நிழலுண்டு  வீசும் தென்றல் காற்றுண்டு கவியால் தமிழர்களின் மனம் கவர்ந்த பாரசீகப் புலவர் உமர் கய்யாம் (OMAR KHAYYAM) ஆவார்.

உலகின் மிக முக்கியமான கவிதைத் தொகுப்புகளில் இவருடைய ரூபாயத் (RUBAIYAT) கவிதை படைப்பு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தற்காலத்தில் ஈரான் என்று அழைக்கப்படும், பாரசீக நாட்டில் நிஷாபூர் ன்னும் ஊரில் பிறந்தார். அப்போது முஸ்லீம்கள் ஆட்சி நடந்த காலம். அந்தக்கால ஐரோப்பாவைவிட ஈரான் மிக முன்னேறிய நாடகத் திகழ்ந்தது. இதற்குக் காரணம் இந்தியாவிலிருந்து வேதகாலத்தின்  முடிவில் அங்கு குடியேறிய  இந்துக்களே.

இளம் வயதிலேயே உமர் கய்யாம் , பல சாத்திரங்களைக் கற்றார். கணிதம், வானியல், தத்துவம், மருத்துவம் ஆகியவற்றில் புலமை பெற்றார். அவருடைய நண்பர் ஒருவருக்கு அரசாங்கத்தில் முக்கிய பதவி கிடைத்தபோது அவர் அரசவையிலேயே அமர்ந்து கற்கும் வாய்ப்பு கிட்டியது.

கிரக நிலைகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு புதிய இஸ்லாமிய காலண்டரைப்/ பஞ்சாங்கத்தை உருவாக்கினார். இது  பொது ஆண்டு 1074(CE) முதல் 1079 (CE) க்குள் நடந்தது

நான்கு வரிகள் கொண்ட சுமார் 200 வெண்பாப் பாடல்களை இவர் இயற்றினார். இவைதான் அவருக்கு இலக்கிய உலகில் அழியாப்புகழ் வாங்கித் தந்தது. இதன் காரணமாகவே முஸ்லீம் அல்லாத மக்களிடையேயும் இவர் புகழ் பரவியது. அவர் இறந்து 700 ஆண்டுகளுக்குப் பின்னர் எட்வர்ட் பிட்ஜெரால்ட் என்பவர் உமருடைய பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். மக்கள் இதை விரும்பிப் படித்தனர். பழங்கால மக்களின் ஞானமும், மகிழ்ச்சியான வாழ்வும் இவர் கவிதைகள் மூலம் எல்லோருக்கும் தெரிந்தது . அழகான தோட்டங்கள், பர்தா அணிந்த முஸ்லீம் பெண்மணிகள் ஆகியவை மனக்கண்கள் முன் நிழலாடின . இதைத் தொடர்ந்து உலகின் முக்கிய மொழிகள் அனைத்திலும் ரூபாயத் கவிதைத் தொகுப்பு மொழிபெயர்க்கப்பட்டது.

ஆங்கிலப் பதிப்பு  வெளியான ஆண்டு – 1859

உமர் பிறந்த தேதி – மே  18, 1048

இறந்த தேதி – டிசம்பர் 4, 1131

வாழ்ந்த ஆண்டுகள் – 83

வெய்யிற்கேற்ற நிழலுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வகீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு
வையந் தருமிவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ!

கள்வனின் காதலி திரைப்படத்திலும் இந்தப் பாடல் இடம்பெற்றது.

உமர் கய்யாம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › உ…

  1. 11 Nov 2019 — ஹோமர், உமர் கய்யாம், ஷேக்ஸ்பியர் (Post No.7202). Blind Poet Homer of Greece. Compiled by London swaminathaan.

–சுபம்-

tags – பாரசீகக் கவிஞர், உமர் கய்யாம்,

ஜூலை 2021 இல் வெளியான ச.நாகராஜன் கட்டுரைகள் (Post.9916)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9916

Date uploaded in London –  1 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜூலை 2021 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு!

2021

July

1-7-21    9798   ராஜ்வேதம் கூறுகிறார்: இந்திய சரித்திரம் திருப்பி எழுதப்பட  

            வேண்டும் என்று!

2-7-21    9802   ஜூன் 2021இல் வெளியாகியுள்ள S.நாகராஜன் கட்டுரைகள்

3-7-21    9807    புராணத் துளிகள் 3ஆம் பாகம் அத்-11 (30-33) ஓம் தோன்றியது    

           எப்படி,ஓம் எனும் பிரணவத்தின் மஹிமை, ஓம் உச்சரிப்பால்  

           ஏற்படும் நன்மைகள்,அருணாசல மஹிமை

4-7-21    9811  பகவான் ரமண மஹரிஷி வாழ்வில் அற்புத சம்பவங்கள்!

4-7-21    9813    உலகத்தோரின் துன்பத்தைக் கண்டு உருகி அழுத உத்தமர்! 

5-7-21    9816   நடந்தவை தான் நம்புங்கள் – 18 – விதவிதமான பதில்கள்!        

6-7-21    9819/B  சைதன்ய மஹா பிரபு – 5-7-2021 ஞானமயம் உரை

7-7-21    9824   பிறரிடமும் தன்னைப் போன்ற குணங்கள் இருப்பதைக் கண்டு

           மகிழ்பவன் அரிது!

8-7-21    9827   தரித்திரமே, இன்று  மட்டும் என்னோடு இரு! (தொண்டை

            மண்டல சதகம் பாடல் 6)

9-7-21    9831    கொரானா பற்றி அறிய வேண்டிய சில உண்மைகள்!  – 

            ஹெல்த்கேர் ஜூலை 2021 கட்டுரை

10-7-21  9834   நடிகையின் காலில் சுட்ட பின்னர் கூறப்பட்டது – இது இந்தியா

            இல்லை!

11-7-21  9837   எதிர்க் கட்சிகள் தேவையே, எதிரிக் கட்சிகள் கூடாது!

12-7-21  9841    புராணத் துளிகள் 3ம் பாகம் அத் 12 (34 – 40)

13-7-21  9845     பகவந் நாம போதேந்திராள் – ஞானமயம் 12-7-21 உரை

14-7-21  9849   திருவாசகம் என்னும் தேன் – 1 13-7-21 சிவஞான சிந்தனை

              மணிவாசகர் குருபூஜை விழாவில் உரை

15-7-21  9852    திருவாசகம் என்னும் தேன் – 2 13-7-21 சிவஞான சிந்தனை

              மணிவாசகர் குருபூஜை விழாவில் உரை

16-7-21  9855   பிருகதீஸ்வர மாஹாத்மியம் நூல் தரும் 16 சோழ மன்னரிகளின்   

             விவரம்

17-7-21  9859  செப்புமொழி பத்து : பொன்னொளிர் பாரதம்!

18-7-21 9862   எவன் உண்மையான சாது?(சுபாஷிதம் T S கௌரி சாஸ்திரி 16-20)

18-7-21 9867   காஷ்மீர், நமது காஷ்மீர், நடப்பது என்ன? நல்லவை தான்

            நடக்கிறது!

19-7-21 9869    காடுகளைப் பாதுகாப்போம் – AIR உரை எண் 1 16-7-21 உரை

20-7-21 9873     சமர்த்த ராமதாஸர் – 1 19-7-21 ஞானமயம் உரை

21-7-21 9877     சமர்த்த ராமதாஸர் – 2 19-7-21 ஞானமயம் உரை

22-7-21 9880    பாகிஸ்தான் பற்றி மஹாத்மா காந்திஜியும் மஹரிஷி

             அரவிந்தரும்!

23-7-21 9883    தட்பவெப்ப மாற்றத்தால் ஏற்படும் ஆரோக்கிய சீர்கேடு!

                              AIR உரை எண் 2 17-7-21 உரை

24-7-21 9887     சுற்றுப்புறத்தைக் காக்கும் வழிகள் AIR உரை எண் 3 18-7-21 உரை

25-7-21  9890  உத்வேகமூட்டும் தகவல்கள்! AIR உரை எண் 4 19-7-21 உரை

26-7-21  9894    சூரிய சக்தியைப் பயன்படுத்துவோம் – AIR உரை எண் 5 20-7-21

27-7-21  9899    பகவான் ‘ஸ்ரீ ரமண மஹரிஷி – 1 ஞானமயம் 26-7-21 உரை

28-7-21  9902    பகவான் ‘ஸ்ரீ ரமண மஹரிஷி – 2 ஞானமயம் 26-7-21 உரை

29-7-21 9905    கழிவுப் பொருள்களைக் குறைப்போம்! AIR உரை எண் 6 21-7-21

30-7-21  9909     ’ஸ்வச்ச பாரத்’ உருவாக்குவோம் – AIR உரை எண் 7 22-7-21

31-7-21  9913    மஹரிஷி உதங்கர்!  

***

tags- ஜூலை 2021, .நாகராஜன்,  கட்டுரைகள்

PLEASE JOIN US TODAY SUNDAY 1-8-2021

1-8-2021 SUNDAY PROGRAMME

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON UPPILIAPPAN TEMPLE8 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND GROUP–  10 mts

***

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY NITHYA SOWMY

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL  BY RANI SRINIVASAN

–25 MINUTES

***

TALK BY  SRI THIRUKOODAL MUKUNTHA RAJAN ON ALVARKAL  SARITHTHIRAM -15 MTS

DURATION-  Appr. 65 minutes 

XXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.

WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- 2 PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

XXXX

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.

XXX

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME; 6-30 PM INDIAN TIME.

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

XXXX SUBHAM XXXX

TAGS-  PUBLICITY182021