PLEASE JOIN US ON MONDAY 30-8-2021

PLEASE JOIN US ON MONDAY 30-8-2021

30 -8– 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -7  MTS

PRAYER –  MRS ANNAPURANI PANCHANATHAN

Talk by Sri Lakshmi from Singapore- 20 mts

Song  BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT Madhvacharya- 12 mts

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -8

MANGALAM – 3 MTS

TOTAL TIME- APPR. 60 MINUTES

XXXXXXXXXXXXXXXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.

WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME ; BST;

 6-30 PM INDIAN TIME.

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

XXXX

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- publicity3082021

PLEASE JOIN US ON SUNDAY 29-8-2021

29-8-2021 SUNDAY PROGRAMME

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer –

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON  Brindhavan of Lord Krishna10 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND GROUP–  10 mts

***

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY RANI SRINIVASAN

–25 MINUTES

Talk by Sri Thirukkudal Mukuntharajan on Life History of Alvars

DURATION-  Appr. 60 minutes 

Xxxx

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.

WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME ; BST;

 6-30 PM INDIAN TIME.

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

XXXX

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags – publicity2982021

சங்கப் புலவர் மாமூலனார் ரிக் வேதத்தை ‘காப்பி’ அடித்தாரா? (Post 10,029)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,029

Date uploaded in London – 28 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மாமூலனார் என்ற சங்கப் புலவர் காலத்தினால் மிகவும் முந்தியவர் என்று கருதுவோரும் உண்டு. காரணம் என்னவெனில் இவர் தமிழ் நாட்டின் மீது மௌரியர் படையெடுத்து வந்ததைக் குறிப்பிடுகிறார். ஆயினும் இந்தக் கட்டுரையில் நாம் காணப்போவது வேறு விஷயம் ஆகும். அகநானூற்றுப் பாடலில் இவர் ஒரு அபூர்வ விஷயத்தை உவமையாகக் கையாள்கிறார் . இதை எகிப்திலும் ரிக் வேதத்திலும் காண முடிகிறது. இவர் பழங்காலப் புலவர் என்பதற்கு இதுவும் சான்றாக அமையலாம்.

அகநானூறு பாடல் 101

1. களிற்றியானை நிரை

பாடல்: 101 (அம்மவாழி)

அம்ம வாழி, தோழி! ‘இம்மை

நன்றுசெய் மருங்கில் தீதுஇல்’ என்னும்

தொன்றுபடு பழமொழி இன்றுபொய்த் தன்றுகொல்?-

தகர்மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு சுரிந்த

சுவல்மாய் பித்தைச் செங்கண் மழவர் 5

வாய்ப்பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்

தீப்படு சிறுகோல் வில்லொடு பற்றி,

நுரைதெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து,

அடிபுதை தொடுதோல் பறைய ஏகிக்,

கடிபுலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர், 10

இனம்தலை பெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட்டு,

அகல் இரு விசும்பிற்கு ஓடம் போலப்,

பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற்று

உருப்பு அவிர்பு ஊரிய சுழன்றுவரு கோடைப்

புன்கான் முருங்கை ஊழ்கழி பன்மலர், 15

தண்கார் ஆலியின், தாவன உதிரும்,

பனிபடு பன்மலை இறந்தோர்க்கு,

முனிதகு பண்புயாம் செய்தன்றோ இலமே! 18

xxxxx

அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல 

பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற்று

என்பதன் பொருளை மட்டும் எடுத்துக் கொள்வோம்

4 முதல் 11 வரிகளில் மழவர்கள், இருமல் வராமல் இருப்பதற்காக,  வாயில் புற்று மண்ணை அடக்கிக்கொண்டு , தீ அம்புகளுடன் சென்று பசுமாடுகளைக் கவர்ந்து கொண்டுவந்து பங்கிட்டுக் கொள்ளுவர் என்ற பொருள் வருகிறது

இதையும் ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம்; மறைத்து வைக்கப்பட்ட ஆநிரைகளை மீட்க இந்திரன் உதவியதாகப் பல பாடல்களில் காண்கிறோம்

11 முதல் 15 வரிகளில்

அகன்ற வானமாகிய கடலில் இயங்கும் தோணி போல் பகற்போதில் நின்ற பல கதிர்களையுடைய  கதிரவனுடைய வெப்பம் விளங்கிப் பரவச்  சுழன்று வரும் மேல் காற்றால் முருங்கை மலர்ப் பூக்கள் உதிரும். அது கார் கால ஆலங்கட்டி மழை போல இருக்கும் . இந்த சூழ்நிலையில் பல மலைகளையும் தாண்டிச் சென்ற தலைவருக்கு நான் வெறுக்கத்தக்க செயல் எதையும் செய்யவில்லையே!

சூரியனை வானத்தில் செல்லும் படகு என்று வருணிப்பதை ரிக் வேதத்திலும் எகிப்திலும் மட்டுமே காணலாம். தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியங்களில் ‘ஓராழித் தேருடையோன் , 7 குதிரைகள் பூட்டிய ஒரு சக்கர தேர் உடையவன்’ என்றே பெரும்பாலும் வருணிப்பர். இவ்வாறு ஆகாயத்தில் செல்லும் படகு என்பது, மாமூலனார் வேதம் கற்ற பார்ப்பான் என்பதைக் காட்டுகிறது.

xxxx

எகிப்தில்

எகிப்தில் சூரிய தேவனை ‘ரா’ (Ra, Re) என்ற பெயரில் வணங்குகின்றனர். இந்துக்களைப் போலவே மூன்று வடிவில் வணங்குகின்றனர். ரிக் வேதம் முழுதும் அக்கினியையும், சூரியனையும் மூன்று எண்ணுடன் தொடர்பு படுத்துகின்றனர். 1.மின்னல், 2.அக்கினி, 3.சூரியன் என்பது ஒரு விளக்கம் . எகிப்தில் காலையில் குழந்தை அல்லது கேப்ரி என்றும் பகலில் ரா ஹரக்தி என்றும் மாலையில் ரா ஆதம் என்றும் சூரிய தேவனை வழிபடுகின்றனர். பிராமணர்களும் இதே போல மூன்று வேளைகளில் சூரியனை தினமும் இன்றும் வழிபடுகின்றனர்.

‘ரா’ என்ற பெயரே சம்ஸ்க்ருத வேர்ச் சொல் – ‘ஒளி’- என்பதிலிருந்து வந்ததே .

இரவு  நேரத்தில் அது ஒரு படகில் பயணம் செய்து இறந்தோர் வாழும் உலகத்தைக் கடப்பதாகவும் அப்போது  தீய ஆவிகளிடமிருந்து சூரியனை நல்ல ஆவிகளும் சேத் (Seth)  என்னும் தெய்வமும் காப்பதாகவும் எகிப்திய புராணம் கூறும் .

xxxx

ரிக் வேதத்தில்

ரிக் வேதத்தில் பல கடவுளரைப் புகழும் போது வானத்தைக் கடலாகவும் அந்த தேவதையை படகு அல்லது கப்பலாலாவும் வருணிக்கின்றனர். வேதம் படித்த ,மாமூலனார் இந்த ‘ஐடியா’வை ரிக் வேதத்தில் இருந்து எடுத்து சூர்ய தேவனுக்குச் சூட்டினார் போலும் .

இதோ ரிக்வேதப் பாடல்:-

RV.1-46-7

துதிகளான கடலின் மீது எங்களைக் கடத்திச் செல்ல கப்பலைப் போல வாருங்கள் .

இது அஸ்வினி தேவர்களை நோக்கி ரிஷி பிரஸ் கண்வ காண்வன் பாடியது

திருவள்ளுவர் கடலை நீந்திக் கடப்பது பற்றிப் பாடுகிறார்.(பிறவிப்  பெருங்கடல்………..). வேதம் முழுதும் கப்பல் அல்லது படகில் கடப்பது பற்றியே வருகிறது. அதிலும் வானத்தை- ஆகாயத்தை — கடலாக வருணிப்பது வேதத்தில் பல இடங்களில் வருகிறது.

xxx

My old articles –

Tagged with எகிப்திய அதிசயங்கள் -14 – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › எ…

  1.  

4 Mar 2017 — எகிப்திய அதிசயங்கள் -14 (Post No.3689) … மற்றொன்று சூரியனின் படகு என்றும் …


Tagged with வட திசை -2 – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › வ…

  1.  

2 Oct 2020 — சூரியன் மறையும் இருண்ட திசை; … சூரியனை வானத்தில் ஓடும் படகு/ ஓடம் என்ற …

–subham—

tags-  மாமூலனார், அகநானூறு பாடல் 101,சூரியன், படகு, வானம், ரிக் வேதம் 

கேள்விகள்! ஆலயப் பாதுகாப்புக் கேள்விகள் ஆயிரம்!(Post.10,028)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,028

Date uploaded in London –  28 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கேள்விகள்! ஆலயப் பாதுகாப்புக் கேள்விகள் ஆயிரம்!

ச.நாகராஜன்

ஸ்வாமி விவேகானந்தர் கூறியது நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் சரி தான்! ஹிந்துக்களுக்கு Organizing திறன் அவ்வளவாக தற்காலத்தில் இல்லை என்றார்.

உண்மை தான்! அடிமேல் அடி அடித்து நம்மை மழுங்க வைத்து விட்டனர் முகலாயர்கள், போர்த்துக்கீசியர்கள், வெள்ளைக்காரர்கள்!

சரி, சுதந்திரம் பெற்ற பின்னராவது நமது ஆலயங்களுக்கு விடிவு காலம் பிறக்குமா என்று எண்ணிப் பார்த்தால், அது மிக மோசமாக அல்லவா போய்க் கொண்டிருக்கிறது! ஸ்வாமிஜி கூறியது போல நமக்கு அனைத்து ஹிந்துக்களையும் ஓரிழையில் இணைக்கு Organizing Capacity இல்லை என்பது நிதரிசனமாகத் தெரிகிறது.

இதைப் புரிந்து கொண்டுள்ள நாசகார சக்திகள் நம் ஆலயங்களையும் அதன் மூலம் வேர் விட்டு வளர்ந்த நம் பண்பாட்டிற்கும் குறி வைத்து அவற்றைச் சிதைக்க முயல்கின்றன; சிதைக்கின்றன!

இன்று ஹிந்து ஆலயங்கள் இருக்கும் நிலை பற்றி நம்மில் 99 சதவிகிதம் பேருக்கு உண்மை நிலை என்னவென்றே தெரியாது. (இதில் என்னையும் சேர்த்துக் கொள்ளலாம்)

சரி கேள்விகளாகவது தொகுத்துப் பார்க்கலாம் என்று நினைத்தால் மளமளவென அருவியாகக் கொட்டுகிறது கேள்விகள்!

இந்த நேரத்தில் 1968 முதல் ஹிந்து ஆலயப் பாதுகாப்புக் கமிட்டியை உருவாக்கி அதற்காக உழைத்து உயிரையும் ஈந்த சேலம் திரு எம்.ராமசாமி அவர்களை நினைத்துப் பார்க்கிறேன். மானனீய கோபால்ஜி ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்த்தின் சஹ பிராந்த ப்ரச்சாரகராக இருந்ததோடு ஆலயத்தின் மீது கொண்ட அக்கறையையும் அதற்காக இரவு பகலாக அவர் உழைத்ததையும் நினைத்து வியக்கிறேன். ஹிந்து முன்னணி இயக்கம் தொடங்கி இந்துக்களின் விழிப்புணர்ச்சிக்காக் அல்லும் பகலும் அனவரதமும் அவர் உழைத்த பான்மையை எண்ணிப் பார்க்கிறேன். அணில் போல மதுரை மாவட்ட ஆலயப் பாதுகாப்புக் கமிட்டிச் செயலாளராக இருந்து மதுரையில் விக்டோரியா எட்வர்ட் ஹாலில் மாபெரும் மதுரை மாவட்ட மாநாட்டை நடத்தியதை எண்ணிப் பார்க்கிறேன்.

என் மேல் திரு ராமசாமி, மானனீய கோபால்ஜி கொண்டிருந்த அன்பை நினைத்துப் பார்க்கிறேன்.

அவர்களின் ஆன்மா ஹிந்து ஆலயங்கள் விடுதலை அடையும் வரை நம்முடன் இருந்து வழி நடத்தும். இதில் ஐயமே இல்லை.

சரி இனி கேள்விகளுக்கு வருவோம். ஆயிரம் கேள்விகளையும் தொகுக்க ஆசை தான்.

முதலில் ஆரம்பத்தையாவது செய்வோமே!

பாரதத்தில் இருக்கும் கோவில்களை மொத்தமாகத் தொகுத்துப் பார்ப்பது இமாலய வேலை .ஆகவே முதலில் பிள்ளையார் சுழியாக தமிழகத்தைப் பற்றி மட்டும் நாத்திகர் கும்பல் செய்யும் நாசவேலைகளுக்கு இடையில் தமிழகக் கோவில்களைப் பற்றி சில கேள்விகளைக் கேட்போம்.

விடைகளைச் சேகரிக்க முயற்சிப்போம். குறைகளைப் போக்க எல்லோரும் இணைந்து ஆலோசித்து வழிகளைக் கண்டு அவற்றைக் கடைப்பிடிப்போம்.

பழைய மகோன்னதமான காலத்திற்கு ஆலயங்களைக் கொண்டு செல்வோம்.

கேள்விகள் இதோ:-

தமிழகத்தில் மொத்தம் எத்தனை ஆலயங்கள் உள்ளன?

இவற்றில் மன்னர்கள் கட்டியவை எத்தனை?

மன்னர்கள் ஆலயங்களுக்குக் கொடுத்த மானியங்கள், நகைகள், சொத்துக்கள் எவ்வளவு?

இவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளனவா?

அப்படியானால் ஆவணங்கள் எங்கே? கல்வெட்டுக்கள் முறையாகப் படி எடுக்கப்பட்டுள்ளனவா? அவை எங்கே?

மன்னர்கள் அல்லாமல் பின்னாளில் எழுந்த ஆலயங்கள் எத்தனை?

இவற்றை இந்து அறநிலையத் துறை எடுத்துக் கொண்டதா?

இந்து அறநிலையத் துறை பற்றி அரசியல் சட்டமும், தமிழக அரசுச் சட்டங்களும் என்ன சொல்கின்றன?

அறங்காவலர் எத்தனை கோவில்களுக்கு உள்ளனர்.

150 கோவில்களுக்கும் மேலாக அறங்காவலர்கள் இல்லை என்று ஆலய ஆர்வலர்கள் சொல்வது தெரிகிறது. ஏன் இல்லை?

இதற்கு அரசு கூறும் பதில் என்ன?

ஒரே அறங்காவலர் இன்னொரு கோவிலில் தக்கார். ஒரே தக்கார் இன்னொரு கோவிலில் அறங்காவலர்! இந்த இழிநிலை ஏன்? (உதாரணம் சமயபுரம் – திருச்சி கோவில்)

திருநெல்வேலி நாதஸ்வரக்காரரை ஏன் வெளியில் போகச் சொல்ல வேண்டும். பத்து வருடங்களுக்கும் மேலாக வெறு 1500 ரூபாய் சம்பளம் பெறும் இந்த பக்தரை ஏன் வெளியில் அனுப்பி இன்னொருவரை அங்கு நியமிக்க முயல வேண்டும்? லஞ்சம் பெற்று இன்னொருவரை அதிக சம்பளத்தில் நிறுவ நடக்கும் முயற்சியா?

அறங்காவலரின் சம்பளம் கோவில் வாரியாக எவ்வளவு?

அதே சமயம் கோவில் அர்ச்சகரின் சம்பளம் எவ்வளவு?

கோவில் உண்டியல் வருமானம் எவ்வளவு – கோவில் வாரியாக?

கோவிலின் அசையாச் சொத்துக்கள் எவ்வளவு? அது யார் வசம் இருக்கிறது? அதன் வருமானம் என்ன?

வந்தது என்றால் எவ்வளவு?

அதற்கு ஆடிடிங் உண்டா? (External Auditing இல்லவே இல்லை)

வரவில்லை என்றால் ஏன் வசூல் செய்யவில்லை?

ஆக்கிரமித்தோரை அகற்றினோம் என்றால்  அவர்கள் யார்? அவர்கள் செய்த குற்றத்திற்கு தண்டனை என்ன? அவர்களால் ஆலயத்திற்கு ஏற்பட்ட இழப்பை அவர்கள் ஈடு செய்தார்களா? இல்லை எனில் அவர்களின் சொத்துக்களை முடக்க முடியுமா?

சுப்ரீம் கோர்ட் சேஷம்மாள் வழக்கிலும், சிதம்பரம் தீக்ஷிதர் வழக்கிலும் தீர்க்கமாக வழங்கிய தீர்ப்பு என்ன?

அவற்றை அனைவரும் அறியும் வகையில் வெளியிட அரசு முயற்சிகள் எடுத்தனவா?

அவற்றை மீறினால் மீறியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்.

அது அரசு எனில் தண்டனை என்ன? பாரத ஜனாதிபதியால் அரசு கலைக்கப்படலாமா – ஏனெனில் கோடானு கோடி மதிப்புள்ள ஆலயங்களை நிர்வகிக்காத குற்றத்தோடு, ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்திய பெரும் அவலமும் இதில் சேர்ந்துள்ளதே?

75க்கும் மேற்பட்ட வழி காட்டு நெறிகளை சென்னை உயர்நீதி மன்றம் கொடுத்ததா?

அவை என்ன? ஏன் ஹிந்துக்கள் அனைவருக்கும் தெரியும்படி அது விளம்பரப்படுத்தப்படவில்லை?

எந்த சைட்டில் அதைப் பார்க்கலாம்?

கோவில்களில் இந்த சட்ட நெறிகள் ஏன் போர்டுகளாக வைக்கப்படவில்லை?

தான் தோன்றித் தனமாக குருக்களையும் கோவில் பணியாளர்களையும் அற நெறிக்கு மாறாக சட்டத்திற்கு புறம்பாக வெளியில் தள்ளும் அல்லது ஒதுக்கும் அறங்காவலர்/ ஈ.ஓ.வை எந்தச் சட்டத்தின் படி போலீஸ் பிடிக்கும்? அவர்களிடம் பக்தர்கள் புகார் கொடுக்கலாமா?

திருவண்ணாமலைக்குச் சொந்தமாக சென்னையில் மலர் ஹாஸ்பிடல் எதிரே உள்ள அருணாசலம் காலனியில் எப்படி இரு சர்ச்சுகள் ஆலய நிலத்தில் எழுப்பப்பட்டுள்ளன? அதை அகற்ற யார் முயற்சிக்க வேண்டும்?

மயிலை ஆதி கேசவப் பெருமாள் கோவிலுக்கு உரிய கோடம்பாக்கம் அருகே உள்ள நிலத்தில் மசூதி எழுப்பப்பட்டுள்ளதா? எப்படி? ஏன்? யாரால்? எப்போது?

அதை அகற்ற யார் முயற்சி எடுக்க வேண்டும்? அரசா, அதிகாரிகளா? ஏன் செய்யவில்லை?

இப்படி தமிழகம் முழுவதும் எத்தனை இடங்களில் கிறிஸ்தவ, இஸ்லாமிய ஆக்கிரமிப்புகள் சட்ட விரோதமாக உள்ளன?

பட்டியலை தமிழக அரசு தயாரித்துள்ளதா? எப்போது வெளியிடும்? என்ன நடவடிக்கையை எப்போது எடுக்கும்?

கோவில்களில் உள்ள உண்டியலில் போடும் பணத்தைக் கொண்டு அண்ணாதுரை திவசத்திற்கு ஆலயங்களில் சோறு போடுவதா? இது என்ன நியாயம்? தில்லை நடராஜரையும் ஸ்ரீரங்கநாதரையும் பீரங்கி வைத்துப் பிளப்பது எந்நாளோ என்று பாடிய இவர்களுக்கான தவச நாளில் பக்தர்கள் பணத்தில் சோறு போடுவதா? அப்படி எனில் கோவில்களைத் தகர்த்த மாலிக்காபூர் தினத்தையும் இவர்கள் கொண்டாடுவார்களோ? அறநிலையத் துறை அல்ல இது; கோவில் கொள்ளைத் துறை அல்லவா இது!

இப்படி கேள்விகள் சாமான்யனான ஹிந்து ஒருவரின் மனதில் எழுந்தால் அது இயல்பே!

விடைகளைக் காண தற்போது யூ டியூப் பதிவுகள் ஒரு அளவுக்கு உதவுகின்றன – முழுதுமாக இல்லாவிட்டாலும் கூட!

திரு சுப்ரமணியம் சுவாமி

திருமதி உமா ஆனந்த்

திரு ரங்கராஜன் நரசிம்மன்

திரு ஆர். குருராஜ்

திரு ரமேஷ்

திரு ரங்கராஜ் பாண்டே

திரு கார்த்திக் கோபிநாத்

திரு பிரபாகரன்

திரு ஓமாம்புலியூர் ஜெயராமன் Shree TV

Infomedia

உள்ளிட்டோரின் பதிவுகள் தெளிவானவை – மேலே உள்ள சில கேள்விகளுக்குப் பதில் அளிப்பவை!

இவர்களைப் பாராட்டுவோம். இவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்! ஆலயம் அழிப்போரை நிந்தனை செய்வோம்.

ஆலயம் பாதுகாப்போரை வந்தனை செய்வோம்!

பழமையையும் பாரம்பரியத்தையும் கடைப்பிடிப்போம். அந்தப் பண்பாட்டை அழிக்க முயல்வோருக்கு அரசியல் சட்ட ரீதியாகப் பாடம் கற்பிப்போம்!

ஹிந்துக்களே எழுக! விழிப்புணர்வு பெறுக! ஓரணியில் திரள்க!

பல பல பல கோடி எண்ணிலடங்கா கோடி சொத்து உடைய ஆலயம் கொள்ளை அடிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவோமாக!

**

tags- கேள்விகள், ஆலயப் பாதுகாப்பு, ஆயிரம், 

September 2020 London Swaminathan Articles, Index-94 (Post No.10,027)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,027

Date uploaded in London – 27 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 10000 PLUS POSTS.

SEPTEMBER 2020;  INDEX-94

Herbal Medicine will kill Chinese Virus,8614,September 2, 2020

My Great Discoveries So far- Part 1; 8628, 4/9

My Great Discoveries So far- Part 2; 8639, 6/9

Climatic change led to fall of Indus Valley Civilization, 8649, 8/9

Two Hindu Wonder Ovens, 8653, 9/9

History Flash News-Sati Stone and Sivalinga

Discovered, 8660, 10/9

Bharati’s 260++ Poems in English, 8666, 11/9

Bharati Treasure in English, 8667, 11/9

Hindu man performs for a Muslim Friend 8677, 13/9

Einstein Theories smashed by Hindus? 8688, 15/9

More on Sumukan, Sumerian, Indus Mystery- 8709, 19/9

21-9-2020 World Hindu News Roundup in English, 8721, 22/9

28-9-2020 World Hindu News Roundup in English, 8749, 28/9

Tamil Sanskrit English Dictionary- 4; 8723; 22/9

Where the Mind is without Fear, 8728, 23/9

31 Quotations on India, 8752, 29/9

Swami’s Crossword24920, 8732, 24/9

Swami’s Crossword30920, 8756, 30/9

Semen Power- Sperm Power in Hindu and

Greek literature, 8737, 25/9

Index 21 of London Swaminathan Articles,8627;4/9

Index 22, 8638,6/9

Index-23, 8655, 9/9

Index – 24, 8678, 13/9

Index -25, 8699, 17/9

Index -26, 8712, 21/9

Index – 27 (Feb.2015), 8745, 27/9

xxxxxxxxxxxxxxxx

செப்டம்பர் 2020 லண்டன் சுவாமிநாதன் கட்டுரைகள்

முத்து பற்றிய 6 பழமொழிகள் ,8610, செப்.1, 2020

18 எண் மஹிமை- 3, 8609, 1/9

கள் , குடி , சாராயம்   பற்றிய பழமொழிகள் 8621,3/9

செருப்பு  பற்றிய 6 பழமொழிகள் ,,8615, செப்.2, 2020

வரலாற்றுப் புதிரும் இரண்டு புதிய கல்வெட்டுகளும், 8622; 3/9

காது பற்றி 6 பழமொழிகள்; 8626, 4/9

கால்  பற்றி 6 பழமொழிகள்; 8633, 5/9

புல்  பற்றி 4 பழமொழிகள்; 8637, 6/9

100 போன் கிடைக்க எழுதிய கவிதை /மாதவ

சிவஞான சுவாமிகள்;8632;5/9

கிரகங்களும் ராசிகளும், 8642, சீனிவாசன், 7/9

நூறு என்ற எண் வரும் ஆறு பழமொழிகள் என்ன?,8643, 7/9

வாய் பற்றி 6 பழமொழிகள் , 8647, 8/9

பருவநிலை மாற்றத்தால் அழிந்தது சிந்து தீர நாகரீகம், 8648,8/9

சுக்கு பற்றிய  6 பழமொழிகள், 8654, 9/9

மலை பற்றி 6 பழமொழிகள், 8659, 10/9

சுகம் பற்றி 5 பழமொழிகள், 8664, 11/9

பாரதியின் ஜாதகம், 8665, 11/9

எண் 40,50,60 பற்றிய 5 பழமொழிகள் என்ன?8671,12/9

தமிழ் மொழியின் அண்ணன் கிரேக்க மொழி, 8672, 12/9

எண் 70,80,90 பற்றிய 5 பழமொழிகள் என்ன?8676,13/9

தமிழ் மொழியின் அண்ணன் கிரேக்க மொழி-2, 8682, 14/9

தமிழ் மொழியின் அண்ணன் கிரேக்க மொழி-3, 8693, 64/9

கெட்டிக்காரன் பற்றிய 5 பழமொழிகள் என்ன?8683,14/9

ஐன்ஸ்டைன் சொன்னது தப்பு: நம்மாழ்வாரும்

சொல்கிறார்,8687,15/9

எண் 8 பற்றிய 6 பழமொழிகள் என்ன?8692,16/9

1000 பற்றிய 7 பழமொழிகள் என்ன?8697,17/9

ஆண்டி  பற்றி 7 பழமொழிகள் என்ன?8703,18/9

ஐயர் பற்றி 7 பழமொழிகள் என்ன?8707,19/9

தமிழ்-சம்ஸ்க்ருத ஆங்கில அகராதி -1, 8708, 19/9

தமிழ்-சம்ஸ்க்ருத ஆங்கில அகராதி -2, 8713,20/9

தமிழ்-சம்ஸ்க்ருத ஆங்கில இலக்கண அகராதி -3,8717,21/9

தமிழ்-சம்ஸ்க்ருத ஆங்கில இலக்கணஅகராதி -4,8723, 22/9

தமிழ்-சம்ஸ்க்ருத ஆங்கில இலக்கணஅகராதி -5; 8727,23/9

தமிழ்-சம்ஸ்க்ருத ஆங்கில இலக்கணஅகராதி -6,8731,24/9

தமிழ்-சம்ஸ்க்ருத ஆங்கில இலக்கணஅகராதி -7,8736, 25/9

தமிழ்-சம்ஸ்க்ருத ஆங்கில இலக்கணஅகராதி -8,8741, 26/9

தமிழ்-சம்ஸ்க்ருத ஆங்கில இலக்கண அகராதி -9, 8748, 28/9

கோவில் கோபுரம் எதற்காக?, 8704, 18/9

ரசாயன மூலகம் டெல்லூரியத்தின் கதை 8698,17/9

மழை பற்றிய 7 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் , 8714, 20/9

தோட்டம் பற்றிய 7 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் , 8720, 22/9

சங்கீதம்  பற்றிய 7 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் , 8726, 23/9

பெருமாள்  பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் , 8735, 25/9

சிவன்  பற்றிய 6 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் , 8740, 26/9

கோவில்  பற்றிய 6 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் , 8744, 27/9

சிரிப்பு  பற்றிய 6 பழமொழிகள் என்ன  , 8753, 29/9

அன்னம் / உணவு   பற்றிய 7 பழமொழிகள் என்ன  , 8773, 30/9

21-9-2020 உலக இந்து சமய செய்திமடல் ,8722, 22/9

28-9-2020 உலக இந்து சமய செய்திமடல் ,8750, 29/9

தகுதி திறமை பற்றிய 31 பொன்மொழிகள், 8755,30/9/2020

Xxxx

THROUGHOUT THIS YEAR/UP TO SEPTEMBER ,  MR R NANJAPPA ALSO CONTRIBUTED ARTICLESEVERYDAY  IN ENGLISH

சீனிவாசன் கட்டுரைகள் SEPTEMBER 2020

மூன்று கிரகம் உச்சம், மந்திரி பதவி நிச்சயம்,

8619, 3/9/2020, சீனிவாஸன் 14,

மூன்று கிரகம் உச்சம்-2, 8625, 4/9

5 கிரகம் உச்சம், பின்னர் ஏன் ராமன் கஷ்டப்பட்டான் 8646, 8/9

5 கிரகம் உச்சம்-2; 8652, 9/9

பிரும்ம இலை ரகசியம், 8663, 11/9

மச்ச கன்னியும் மங்கையர் திலகமும், சீனிவாசன் கட்டுரை, 8608, 1/9

உலக நாடுகளின் ஜாதகங்கள், சீனிவாசன்,8614,2/9

குழந்தை பாக்கியம் இல்லையா? -1,8631, 5/9

குழந்தை பாக்கியம் இல்லையா?-இதோ பரிகாரங்கள் -2, 8636,6/9

வாஸ்து வீடு, சீனிவாசன், 8658, 10/9

நாங்க முன்னாடியே சொல்லியாச்சு, 8670, 12/9

ட்ரிங்கர்ஸ் கிளப் வாரம் -1 8675, 13/9

ட்ரிங்கர்ஸ் கிளப் வாரம்-2, 8681, 14/9

ட்ரிங்கர்ஸ் கிளப் வாரம்-3, 8686, 15/9

பாரதியார் ஜாதகம்- ஓர் அலசல், 8691, 16/9

கோகர்ணம், கஜகர்ணம், அஜகர்ணம் வித்தைகள் 8696,17/9

மரமண்டையும் மரத்தின் மகிமையும், 8702,18/9

சங்கே முழங்கு , 8706, 19/9/2020

மசாலா க்விஸ் கேள்வி, 8711, 20/9

காசு, பணம், மணி, துட்டு – மகாலெட்சுமி கேள்வி பதில், 8716,21/9

குங்குமம் – மங்கல மங்கையர் குங்குமம், 8719, 22/9/2020

ருத்ராட்சம் 1, 8725, 23/9

ருத்ராட்சம் 2, 8730, 24/9

அடடா தப்பாப் போச்சே ,8734, 25/9

குபேரன் கேள்வி பதில், 8739, 26/9

தெய்வீகத் தாமரை -1, 8743, 27/9

தெய்வீகத் தாமரை -2, 8747, 28/9

–subham–

tags- Index 94, September 2020, London Swaminathan,

கிரேக்க புலவர் ஹெசியாட் Hesiod (Post No.10,026)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,026

Date uploaded in London – 27 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஐரோப்பா கண்டத்தில் பெயர் தெரிந்த புலவர்களில் மிகவும் பழங்காலத்தவர் ஹோமரும் (Homer) ஹெசியாட்(Hesiod) என்னும் புலவரும் ஆவார்கள்; யார் முதலாமவர் என்பதில் கிரேக்கர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தது. பின்னர் இருவரும் சமகாலத்தவர் என்றும் அவர்களிடையே கவிதைப் போட்டி நடந்ததென்றும்  கதைகள் உலவின. இவரது வாழ்க்கை பற்றியும்,வாழ்ந்த காலம் பற்றியும், எழுதிய நூல்கள் பற்றியும் உள்ள தகவல்கள் அனைத்தும் கேள்விக்குறியுடன் தொக்கி நிற்கின்றன.

XXX

எல்லோரும் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயங்கள்:

இவர் கிரேக்க புராணத்திலுள்ள கடவுளரின் கதைகளை தொகுத்து கவிதை வடிவில் தந்தார்.

ஹோமர் காலத்தில் அல்லது அவரை அடுத்து வாழ்ந்திருக்கக் கூடும்.

வெறும் கதைகளாக இல்லாமல் அறநெறி போதனைகளுடன் கூடிய கவிதைகளை எழுதினார்.

இவர் எழுதியதாகக் கருதப்படும் நூல்களில் Theogony தேவ ஜனி (தேவர்களின் ஜனனம்) என்னும் நூல் முக்கியமானதாகும். இது தவிர ‘வேலையும் நாட்களும்’ WORKS AND DAYS என்ற நூலும் இவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.

இவர் பற்றி உலவும் கதைகள்

கிரேக்க நாகரீகம் உச்சகட்டத்தை  எட்டுவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது கிரேக்க நாகரீக காலத்திலேயே இவரைப் பழங்காலப் புலவராக கருதினர். அது மட்டுமல்ல அவரைப்போல எழுத வேண்டும் என்று ஆசை கொண்டனர் .

பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா குறிப்பிடும் உசனஸ் என்ற புலவர் ரிக் வேத காலத்திலேயே புராண புருஷராகக் கருதப்பட்டார் . அவருடைய கவிதைகள் நமக்குக் கிடைக்காவிடினும் கிருஷ்ணர் தன்னைப் புலவர்களில் நான் உஷனஸ் கவி என்று சொல்லுவது போன்றது இது.

வேலையும் நாட்களும் என்ற அவரது நூலில் இருந்து கிடைக்கும் குறிப்புகளைக் கொண்டு இவரைப் பற்றி ஓரளவு அறிய முடிகிறது

ஹெசியாட்டின் தந்தை ஒரு சிறு பண்ணை வைத்திருந்தார். அது வறுமையில் வாடிய குடும்பம். தந்தை இறந்தவுடன் அவருக்கும் சகோதரர் பெர்ஸிஸ் PERSES என்பவருக்கும் இடையே பாகப் பிரிவினை தகராறு ஏற்பட்டது; ஹெசியாட்டின் பங்கையும் சகோதரர் பறித்துக் கொண்டார். இதனால் வெறுப்புற்ற ஹெசியாட் குடும்பத்திலிருந்து வெளியேறினார்.

வேலையும் நாட்களும் என்ற கவிதை நீண்ட, அழகான கவிதை . இதில் தான் செய்த பண்ணை வேலைகளை புலவர் எழுதியுள்ளார். விவசாய விஷயங்கள் அடங்கிய முதல் புஸ்தகம் இது. இவருடைய கவிதை மூலம் அக்கால கிரேக்கர்களின் வாழ்க்கை குறித்தும், மத நம்பிக்கைகள் குறித்தும் அறிய முடிகிறது ;எப்போது எப்படி பயிர் செய்ய வேண்டும் என்ற விவசாய தகவல்களுக்கு இடையே கடின உழைப்பின் பலாபலன்கள் குறித்த சிறப்புகளையும் போதிக்கிறார். அவ்வகையில் இது ஒரு ஒப்பற்ற நூல்.கடவுளர்க்கு கிரேக்க மக்கள் கொடுத்த மரியாதையையும் அறிய முடிகிறது. சகோதரர் பெர்ஸிஸ் மீதான வன்மத்தையும் கவிதையில் காணலாம்.

நாட்டைப் பிடுங்கிய துரியோதனனையும் , அவனுடன் சண்டை போட்ட பஞ்ச் பாண்டவரையும் நாம் நினைவு கூறலாம்.

தேவ கனி (தேவ ஜனி) என்ற நூலில் தேவர்களின் ஜனனம், அவருடைய வரலாறு, ஒரு கடவுளருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள தொடர்ப்பு ஆகியன காணக் கிடக்கின்றன .

ஹோமர் எழுதியதை இதிகாசம் என்றால் இவர் எழுதியதை புராணம் என்று சொல்லலாம்.

வாழ்ந்த காலம் – கி.மு .650-க்கும் 800க்கும் இடையே இருக்கலாம்.

எழுதிய நூல்கள்

தியோகநி THEOGONY (தேவ ஜனி )

வேலையும் நாட்களும் WORKS AND DAYS

இன்னும் சில நூல்களை இவர் எழுதியதாகச் சொல்லுவார்கள் ஆயினும் அவை உறுதி செய்யப்படவில்லை

–subham–

tags – கிரேக்க புலவர், ஹெசியாட், Hesiod,

அர்ச்சகர் அர்ச்சனை பற்றிய ஊடக செய்திகள்! (Post No.10,025)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,025

Date uploaded in London –  27 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அர்ச்சகர் அர்ச்சனை பற்றிய ஊடக செய்திகள்!

ச.நாகராஜன்

சமீப காலத்திய யூ டியூப் மற்றும் இதர ஊடகங்கள், செய்தித் தாள்கள் உள்ளிட்டவற்றில் சூடான விவாதம் நடந்து வருகிறது. அர்ச்சகர் அர்ச்சனை பற்றிய தமிழக அரசை விமரிசித்து.

அவற்றில் உள்ள சில செய்திகளின் தொகுப்பு இதோ:-

  1. கொடுத்த வாக்குறுதிகளை (மொத்தம் சுமார் 505 – அச்சடித்துக் கொடுக்கப்பட்டுள்ளது) நிறைவேற்ற வக்கில்லாத, திராணியில்லாத அரசு, மக்களைத் திசை திருப்பச் செய்யும் நடவடிக்கைகளில் ஒன்று இந்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சனை செய்யலாம் என்பது.
  2. கடவுள் மறுப்பைக் கொள்கையாக வைத்த ஈவெரா சிலை முன்னர் அர்ச்சகர் நியமனம் பெற்றவர்கள் மாலை போட்டு போட்டோ எடுத்துக் கொண்டது கடவுளை அர்ச்சனை செய்யும் மனப்பான்மையைக் காண்பிக்கிறதா அல்லது கடவுள் வழிபாட்டைத் திட்டமிட்டு அழிக்கும் மனப்பான்மையை உணர்த்துகிறதா?
  • கிறிஸ்தவ சர்ச்சுகளிலும் முஸ்லீம்களின் மசூதிகளிலும் அரசு தமிழ் பரப்ப நடவடிக்கை எடுக்காத போது கோவில்களில் தமிழ் பரப்ப அப்படி என்ன அவசரம்? கோவில் வழிபாட்டை அழிக்கவும் தகர்க்கவும் எடுக்கப்பட்ட மறைமுக முயற்சி தானே இது.
  • பிராமணர்கள் அனைத்துக் கோவில்களிலும் வழிபாடு செய்பவர்கள் அல்லர். திருப்பித் திருப்பி இதை எத்தனை முறை தான் சொல்வது?
  • பிராமணர்களே கோவில்களில் அர்ச்சனை செய்ய முடியாது. குறிப்பிட்ட ஆகம விதிகளின் படி குறிப்பிட்ட கோவிலுக்கான அர்ச்சனை செய்ய தகுதி வாய்ந்தவர்கள் மட்டுமே கர்பக்ருஹத்தினுள் செல்ல முடியும்.
  • ஏன், ஆசார்யர்களே கூட உள்ளே செல்ல முடியாது.
  • வைஷ்ணவ கோவிலில் குலசேகரப்படியைத் தாண்டி தகுதி வாய்ந்த அர்ச்சகர் தவிர வேறு யாரும் செல்ல முடியாது.
  • ஒரு கோவிலின் அர்ச்சகர் இன்னொரு கோவிலுக்குச் சென்று அர்ச்சனை நடத்த முடியாது.
  • 150 கோவில்களுக்கு அறங்காவலர்களே கிடையாது.
  • அறங்காவலர்களுக்கு நியமன ஆணையே தரப்படுவதில்லை
  • அறநிலையத் துறை அமைச்சர் கோவிலில் நுழையும் போது, அறங்காவலர் உண்டா, உண்டு எனில் அரசு ஆணை எங்கே என்று அதை வாங்கி சரி பார்த்த பின்பு தான் பேச வேண்டும். வெற்றாக  திட்டங்களை அறிவிக்கக் கூடாது.
  • ஒரு அறங்காவலருக்கு கோவில் பணிகள் சரியாக நடத்தப்படுகின்றனவா என்று மேற்பார்வை பார்க்க மட்டுமே அதிகாரம்.

ஆணைகள் வழங்கவோ உள்ளே இருப்பவரை வெளியே போகச் சொல்லவோ அதிகாரம் இல்லை.

13)E.O. எனப்படும் Executive Officer அரசு அதிகாரி. அதில் சம்பளம் பெறுபவர். அவருக்கு தர்ம சாஸ்திரம் தெரியவில்லை எனில் தெரிந்தவ்ர்கள் சொல்படி கேட்க வேண்டும்.

14) EO எங்கே என்றால் இதோ இருக்கிறார் தக்கார் – Fit person –  என்கிறார்கள். தக்கார் எங்கே என்றால் ஈ.ஒ. இருக்கிறார் என்கிறார்கள். அவர் எங்கே, அவர் தான் இவர், சரி இவர் எங்கே, இவர் தான் அவர்! கரகாட்டக்காரன் வாழைப்பழ காமெடி போலத் தான் அரசு அதிகாரிகள் பேச்சு இருக்கிறது.

15) ‘அப்பனே, உனது வேல என்ன?”

“எனது அப்பாவுக்கு உதவியாக இருக்கிறேன்.”

“உன் அப்பாவுக்கு வேலை என்ன?”

“சும்மாதான் இருக்கார்!”

இதே கேலிக் கூத்து தான் இன்று கோவிலில் நிலவும் நிலையும், கேள்விகளுக்கு அவர்கள் தரும் பதில்களும்!

16) மைலாப்பூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான ஏராளமான பலகோடி மதிப்புள்ள நிலங்களை ‘ஆட்டையை’ போட நினைப்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்க ஏன் முடியவில்லை எனில் எல்லாம் எழுத்து மூலமாக இல்லாமல் ‘ஒரலாக’ வாய்மொழியாக கபளீகரம் செய்ய அவர்கள் மிரட்டுவதால் தான்!

17) எல்லாவற்றிற்கும் மேலாக சுப்ரீம் கோட் தீர்ப்பை மீறிய செயல் இது என்பதை விஷயம் தெரிந்தவர்கள் கூறி விட்ட போதிலும் அரசு திருத்த நடவடிக்கை இன்னும் எடுக்காமல் இருப்பது வியப்பைத் தருகிறது.

18) ஒரு கேஸ் நடக்க பல ஆண்டு காலம் ஆகும், யார் கேஸ் போட வரப் போகிறார்கள் என்ற நினைப்பு இருந்தால் அது தவறு. பழைய காலம் போல இந்துக்கள் இனி கோவில் சொத்துக்கள் கொள்ளை போவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்.

19) மதம் மாற்றும் கிறிஸ்தவ மிஷனரிகளின் தூண்டுதல்கள் இதில் இருக்கிறதா என்று இந்துக்கள் பார்க்க வேண்டும்.

20) வெறும் கல் பொம்மைக்கும் , விக்ரஹத்திற்கும் உள்ள வெறுபாடு கூட இந்த அரசுக்குப் புரியவில்லை. ஆகம விதிகளின் படி செய்யப்பட ஒரு கற்சிலை அதே விதிகளின் படி அமைக்கப்பட்ட கோவிலில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட பின் ஜீவன் உள்ளதாக ஆகிறது. ஒரு கோவில் கும்பாபிஷேகத்தின் போது அந்த சக்தியை கலசத்தில் ஏற்றி தனியே வைப்பார்கள். திருப்பணிகள் முடிந்த நிலையில் மீண்டும் சிலைக்கு அந்த சக்தி ஊட்டப்படும்.

21) பல கோவில்கள் பாழடைந்து இருக்கின்றன. அறநிலையத் துறை அதைச் சரி செய்ய என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? வருவாய் அதிகம் உள்ள கோவில்களிலிருந்து இந்தக் கோவில்களில் பூஜை நடத்த வழி செய்யப்பட்டதா?

22) ஒரு கோவில் என்றால் நிச்சயமாக அதற்கு ஒரு ஆகம் விதி உண்டு. பாழடைந்த கோவில் என்றாலும் கூட எந்த ஆகமத்தின் படி அந்தக் கோவில் வடிவமைப்பு செய்யப்பட்டது என்று பார்க்க வேண்டும்.

23) எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கையற்றவர்கள் கோவிலுக்குள் சென்றால் விலை மதிப்புள்ள நகைகள் எடுக்கப்படும்; மாற்று நகைகள் வைக்கப்படும்; சிலைகள் திருடப்படும்; சில சமயம் சேதப்படுத்தப்படலாம் என்ற பயம் இப்போது ஏற்பட்டுள்ளது.

24) கடவுள் மீது நம்பிக்கை இருப்பதாக உறுதி கூறி நற்சான்றிதழ்கள் பெற்றவர்கள் எனில் கடவுள் மறுப்பு ஈவெரா சிலையிடம்  ஏன் செல்கின்றனர். முரண்பாடு உள்ளங்கை நெல்லிக்கனி எனத் தெரிகிறது.

25) என்ன படிப்பு படித்தனர்? சிலபஸ் எங்கே? அதை ஆகம அறிஞர்கள் ஒப்புக் கொண்டார்களா?

26) இந்துக்கள் ஆங்காங்கே அந்தந்தக் கோவிலுக்கான பக்தர்கள் குழு ஒன்றை அமைக்க வேண்டும்; ஏதேனும் பங்கம் ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று யார் தப்பு செய்தாலும் அது ஈ ஓ ஆகட்டும் தக்கார் ஆகட்டும் அறங்காவலர் ஆகட்டும் உடனே ஒரு புகார் மனு அளிக்க வேண்டும்.

27) இந்துக்கள் உடனடியாக ஓரிழையில் சேர வேண்டிய காலம் இது. எந்த அரசியல் கட்சியையுமோ அல்லது எந்த ஊடகத்தையுமோ முழுதுமாக நம்பி இராமல் தாங்களே ஒன்று சேர்ந்து கோவில்களையும் கோவில் உடைமைகளையும் பாதுகாத்து நமக்கு நம் முன்னோர்கள் தந்தது போல அவற்றைப் பாதுகாப்பாக நமது சந்ததியினருக்குத் தர வேண்டும்.

28) கோவிலை பாழ்படுத்துவோரை சட்டப்படி பிடித்து விசாரணைக்கு உட்படுத்தி மிக கடுமையான் அதிக பட்ச தண்டனையை சட்டப்படி உடனே வழங்க வேண்டும்.

29) ஹிந்துக் கோவில்களின் நிதியை மட்டும் கோவில் பூஜை மற்றும் பராமரிப்பு அல்லாத இதர விஷயங்களில் செலவழிப்பது ஏன்? இதே போல கிறிஸ்தவ சர்ச், முஸ்லீம்களின் மசூதி நிதிகள் தொடப்படுவதில்லை. இந்துக்களுக்கு மட்டும் இப்படி பாரபட்சமான ஒரு நிலை ஏன்?

இன்னும் ஏராளமான கருத்துக்களை பக்தர்கள் பதிவிட்டுள்ளனர். அன்பர்கள் அவற்றை யூ டியூபிலும் நல்ல பதிவுகளிலும், நல்ல செய்தித்தாள்களிலும் பார்க்கலாம்.

திரு சுப்ரமண்யம் சுவாமி, திரு ரங்கராஜன் நரசிம்மன், திரு ரங்கராஜ் பாண்டே, திரு ரமேஷ், திரு பிரபாகரன், திரு குருராஜ், திரு ஓமாம்புலியூர் ஜெயராமன் உள்ளிட்டோர் கூறிய தகவல்களில் சில இவை. முழுவதையும் அறிய இவர்களது தளங்களை கோவில் பாதுகாப்பில் அக்கறை உள்ள, உண்மை நிலையை அறிந்து கொள்ளத் துடிக்கும் பக்தர்கள் அணுக வேண்டும்.

BRAHMINS IN 1930S

***

tags- அர்ச்சகர், அர்ச்சனை,  ஊடக செய்திகள்,

Tamil and English Words 2700 Years Ago- Part 61 (Post No.10,024)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,024

Date uploaded in London – 26 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;

FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ஆங்கில சொற்கள் – பகுதி -61

Tamil and English Words 2700 Years Ago- Part 61

பாணினி சூத்திர எண்கள்:–

6-2-5

Dhaayaatha is used by Panini to mean ‘ward’

Dhayaathi is used by Brahmins to denote close relatives.

தாயாதி = ஆண்/தந்தை  வழி உறவினர்

Dhaayaathi = male descendants of same ancestors; agnates

Xxx

6-2-8

Nivatha is used by Panini to denote protected from wind, protected by wind with slight changes

Extended meaning

Raajanivathe = protected by the king

Sukham maathru nivaatham = mother’s protection is sweet

I am reminded of Nevada in USA.( What we find in modern encyclopaedias linking Nevada to Spanish word is not correct. All names are of Red Indian origin;not Spanish )

நெவாடா – அமெரிக்க மாநிலம்

Xxxx

6-2-10

Kashaya is used by Panini

Kashaaya = decoction

People use it in native medicine preparations.

கஷாயம் = மருத்துவ உபயோகத்திலுள்ள சொல்

Xxx

6-2-13

Panini used Vaanija for Business, selling, commerce

வணிக, வாணிப , வாணிக = சங்கத் தமிழ் நூல், திருக்குறள் காண்க

பாணி என்ற ரிக் வேத சொல்லுடன் தொடர்புடையது; பணம் என்னும் சொல்லும் இதிலிருந்து வந்ததே

Vanika, vaanika are used in Sangam Tamil literature and Tirukkural.

Xxxx

6-2-18

Pathi is used by Panini, meaning owner, leader of

This is in use for several thousand years.

Ganapathi, grahaPathi, brhaspathi, senaapathii are used by all Indian languages

Amazing thing about pathi is , it has been used even by the seers of Rigveda

பதி = உரிமையாளர், தலைவர்; சென்ற கட்டுரையில் விளக்கப்பட்டது.

ரிக் வேத காலத்தில் இருந்து இன்றுவரை 6000 ஆண்டுகளாக புழக்கத்திலுள்ள சொல் ;கணபதி

Xxx

6 2 14

Maathraa

Means certain quantity

Maathrai is used by authors; grammarians.

மாத்திரை = அளவு; இலக்கண நூல்களில் காண்க

Xxxc

6-2-15

Gamana = going

Gamana siddha for sky bound mystics is used in Kutraala kuravanji.

கமன சித்தர் – திரிகூடப்ப ராஜப்ப கவிராயரின் குற்றாலக் குறவஞ்சி காண்க

Xxx

6-2-16

Pria, Preeti (Dear)

That which gives happiness

Both are used in feminine names throughout India.

ப்ரியா, பிரீதி = பெண்களின் பெயர்கள் (விரும்பக்கூடிய  குணம், அழகு உடையவர்கள்)

Xxx

6-2-17

Swaamini , swamin = one who owns ,owner

Swami becomes Saami in Tamil and used by Tamils in names; also addressing

கந்தசாமி,அய்யாச்சாமி துரைசாமி

Kanthasaami, Ayyaasaami, Duraisaami

Saami,give me some kaasu

சுவாமி, சாமி ஐயா, சாமி, தருமம் செய்யுங்க , காசு கொடுங்க

Xxx

6-2-20

Bhuvana

Bhu,bhuvana means earth

Bhuvaneswari,bhuvana are common female names

Bhu,Bhu I, bhuvana for earth are used in Tamil.

Bhuvi,bhoomi becomes Puvi in Tamil

M=V

புவனா, புவனேஸ்வரி, பூமி= புவி ; பூபதி /அரசன்

Xxx

6-2-21

Aabhaatha is used by Panini to denote hurdle,hindrance,obstruction

Aapaththu is used by Tamil s to mean dangerஆபத்து

Netheeyas is in this Sutra means very near

English Near is derived from it

Xxx

6-2-22

Poorva

Before, long ago

Poorveekam =Ancestry,ancestor is used

பூர்வ காலம், பூர்வீகம்

Xxx

6-2-26

Kumaaras cha is Panini’s sutra

Kumaara = young,youth is used in Tamil Kumaran

Kumaran= Murugan; Kumara sambhava of Kalidasa

குமரன் ; குன்று தோறும் ஆடும் குமரன் வடிவேலன்

குமார சம்பவம் = முருகன் பிறப்பு= காளிதாசனின் புகழ்பெற்ற காவியம்.

Xxx

6-2-29

Kaphaala =Skull ,pot; பானை

Bhakaala = skull; மண்டை ஓடு

Bowl is derived from this /skull shape; also Copra in Coconut

Kaphaala becomes cephalo in Latin

கபால; லத்தீன் மொழியில் செபாலஸ்

Xxx

TO BE CONTINUED………………………….

Tags- Panini in Tamil 61

பாரதி பாடல்களில் மந்திரச் சொற்கள் (Post No.10,023)

Bharatiyar statue, Madurai Setupati High School

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,023

Date uploaded in London – 26 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதம் போலவே பாரதி பாடல்கள் முழுதும் ஆக்கபூர்வ எண்ணங்களையும், சிந்தனையையும் தூண்டும் வரிகளையும், சொற்களையும் அடைமொழிகளையும் காணலாம் . அவரே வேதம் பற்றி அக்கினி என்ற நூலையும் எழுதியுள்ளார். ‘வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே, வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே’ என்றும் பாடுகிறார். ரிக் வேத மந்திர எண்களையும் அவை உள்ள பாரதி பாடல் வரிகளையும் தனியே தருகின்றேன். இங்கு பாரதி சொல்லும் நேர்மறைச் சொற்களைக் காண்போம் (Positive words and thoughts) . பாரதி பாடலில் எதிர்மறைச் சொற்கள் (negatives) மிகவும் குறைவு. அப்படி இருந்தாலும் அவை அதர்மத்திற்கு எதிரான சொற்களாகவே இருக்கும் .

இதோ பாரதியின் பாசிட்டிவ் (Positive words)  சொற்கள்-

இவற்றில் பெரும்பாலான வரிகள் ரிக் வேதத்தில் இந்திரன் மற்றும்  அக்னீ பற்றிய துதிகளில் உள்ளன:–

‘வேதங்கள் சொன்னபடிக்கு  மனிதரை

மேன்மையுறச் செய்தல் வேண்டும்’

‘நூறு வயது புகழுடன் வாழ்ந்து உயர்

நோக்கங்கள் பெற்றிட வேண்டும்’ 

‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் – அவன்

எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக’ ( காயத்ரீ மந்திரம்)

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா

உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா

களிபடைத்த மொழியினாய் வா வா

கடுமைகொண்ட தோளினாய் வா வா

தெளிவுபெற்ற மதியினாய்

ஏறு போல நடையினாய்

நோய்களற்ற உடலினாய்

நொய்மையற்ற சிந்தையாய்

இளைய பாரதித்தனாய்

எதிரில்லா வலத்தினாய்

வெற்றி கொண்ட கையினாய்

விநயம் கொண்ட நாவினாய்

முற்றி நின்ற வடிவினாய்

முழுமை சேர் முகத்தினாய்

எல்லாரும் ஓர் குலம்

எல்லாரும் ஓர் இனம்

எல்லாரும் ஓர் நிறை

எல்லாரும் இந்நாட்டு மன்னர்

‘எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறை

இந்தியா உலகிற்களிக்கும்’

‘எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல் வேண்டும்’

‘அச்சமில்லை, அச்சமில்லை ‘

‘பொறுத்தாரன்றே பூமி ஆள்வார்’

‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல்

இமைப்பொழுதும் சோரா திருத்தல்’

‘ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்

உலகு இன்பக் கேணி’

‘ஓம் சக்தியால் உலகில் ஏறு’

‘ஓம் சக்தி சக்திஎன்று சொல்லு – கெட்ட

சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு’

‘சக்தி சக்தி என்பார் சாகார்’

சக்தியருள் வாழ்கவென்று வாழ்த்து

‘பின்னை ஒரு கவலையுமிங்கில்லை

பிரியாதே விடுதலையைப் பிடித்துக்கொள்வாய்’

‘செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்

சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும்

கல்வியிலே மதியினை நீ தொடுக்கவேண்டும் ‘

‘மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்’

‘திண்ணிய நெஞ்சம்  வேண்டும்

தெளிந்த நல்லறிவு வேண்டும்’

‘வல்லமை தாராயோ – இந்த மாநிலம்

பயனுற வாழ்வதற்கே’

‘விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்

வேண்டியபடி செலும் உடல்’

நசையறு  மனம்

சுடர்தரும் உயிர்

அசைவறு  மதி

சக்தியைப் பாடும் நல் அகம் 

‘பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப் பாலித்திடல் வேண்டும்’

‘தெண்டமிழ் பாடல் ஒரு கோடி மேவிட ச் செய்குவையே’

‘யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய!’

‘பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்

பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்’

‘பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம்’

‘வானவர் விழையும் மாட்சியார் தேயம்’

‘கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்’

‘அருவிபோலக் கவிபொழிய

எங்கள் அன்னை பாதம் பணிவேனே ‘

‘வாழிய செந்தமிழ்  வாழ்க நற்றமிழர்

வாழிய பாரத மணித்திரு நாடு

இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க

நன்மை வந் தெய்துக  தீதெலாம் நலிக’

‘அறம் வளர்ந்திடுக , மறம் மடிவுறுக’

‘சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக’

‘கிருத யுகம் எழுக மாதோ’

‘தெள்ளு கலைத்தமிழ் வாணி ! நினக்கொரு

விண்ணப்பஞ் செய்திடுவேன்

எள்ளத்தனைப் பொழுதும்   பயனின்றி

இராதென்றன்  நாவினிலே

வெள்ளமெனப் பொழிவாய் சக்தி வேல் சக்தி

வேல், சக்தி வேல், சக்தி வேல் ‘

Xxxx

எல்லினைக் காணப் பாயும் இடபம் போல் முற்படாயோ

இறப்பின்றித் துலங்குவாயே

இறவாய் , தமிழோடிருப்பாய்  நீ

இன்று புதிதாய்ப் பிறந்தோம்

தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா

கடமை புரிவார் இன்புறுவார்

உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்

வாழ்க வையம், வாழ்க வேதம்

அன்பென்று கொட்டு முரசே – மக்கள் அத்தனை பேரும் நிகராம்

ஒன்றென்று கொட்டு முரசே

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

உயிர்களிடத்தில் அன்பு வேணும் – தெய்வம்

உண்மையென்றுதானறிதல் வேண்டும்

காக்கை குருவி எங்கள் ஜாதி

நிமிர்ந்த நன்னடை

நேர்கொண்ட பார்வை

நிமிர்ந்த ஞானச் செருக்கு

மங்கும் தீமை, பொங்கும் நலமே

நல்ல காலம் வருகுது! நல்ல காலம்  வருகுது !

மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும்

வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ் மொழி

xxxx

இது ஒரு சாம்பிள் sample தான். இன்னும் நூறு  வரிகள் உள .

ரிக் வேதமும் பாரதியும் என்ற கட்டுரையில் மேலும் தருகிறேன்

–சுபம்-

tags – பாரதி பாடல்,  மந்திரச் சொற்கள், 

அனைத்து வழிபாடும் சிவனையே சேர்கிறது!(Post 10022)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,022

Date uploaded in London –  26 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அனைத்து வழிபாடும் சிவனையே சேர்கிறது!

ச.நாகராஜன்

இந்து மதத்தின் உன்னதமான இறை கொள்கையால் உலகிலுள்ள அனைத்து அறிஞர்களும் அதை வியந்து பாராட்டிப் போற்றுகின்றனர்.

ஏகம் ஸத்! விப்ரா: பஹுதா வதந்தி!!

உண்மை ஒன்றே; அதை அறிஞர்கள் பலவாறாகக் கூறுகின்றனர்.

ஆக இந்த ஒரே பிரம்மம் என்ற கொள்கையே வேதக் கொள்கை.

இதிலிருந்து விரிந்து பரந்த பல கொள்கைகளை இன்று க்வாண்டம் மெகானிக்ஸ், க்வாண்டம் பிஸிக்ஸ் போன்ற நவீன அறிவியல் துறைகளும் கூட அங்கீகரிக்க ஆரம்பித்துள்ளன; விஞ்ஞானிகள் வியக்கின்றனர்.

ஸ்வாமி விவேகானந்தர் சிகாகோவில் சர்வமத மாநாட்டில் 1893ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி உரையாற்றினார்.

அவர் தனது உரையில் புஷ்பதந்தர் இயற்றி அருளிய சிவ மஹிம்ன ஸ்தோத்ரத்தில் வரும் ஏழாம் ஸ்லோகத்தின் அர்த்தத்தை எடுத்துரைத்தார் இப்படி:-

 I will quote to you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings:

“As the different streams having their sources in different places all mingle their water in the sea, so, O Lord, the different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to Thee.”

சிவமஹிம்ன ஸ்தோத்ரத்தில் வரும் ஸ்லோகமும் அதன் அர்த்தத்தையும் கீழே காணலாம். (ஆதாரம், நன்றி :- https://www.sanskrit-trikashaivism.com/en/shiva-mahimna-stotram-normal-translation/597)

 त्रयी साङ्ख्यं योगः पशुपतिमतं वैष्णवमिति प्रभिन्ने प्रस्थाने परमिदमदः पथ्यमिति च।
रुचीनां वैचित्र्यादृजुकुटिलनानापथजुषां नृणामेको गम्यस्त्वमसि पयसामर्णव इव॥७॥
Trayī sāṅkhyaṁ yogaḥ paśupatimataṁ vaiṣṇavamiti prabhinne prasthāne paramidamadaḥ pathyamiti ca|
Rucīnāṁ vaicitryādṛjukuṭilanānāpathajuṣāṁ nṛṇāmeko gamyastvamasi payasāmarṇava iva||7||

“The three Veda-s (trayī), Sāṅkhya (sāṅkhyam), Yoga (yogaḥ), the doctrine (matam) of Paśupati (paśupati) –i.e. the Śaiva doctrine– (and) the Vaiṣṇava (doctrine) –pertaining to Lord Viṣṇu– (vaiṣṇavam iti)”; in (these) different (prabhinne) source(s) (prasthāne) (there are) thus (iti ca) this (idam) and that (adas) way (pathyam) toward the Highest (State) (param) –i.e. there are various ways of realizing the Supreme Self or Śiva–. For the men (nṛṇām) who are devoted (juṣām) to multiple (nānā) paths (patha), straight and crooked ones (ṛju-kuṭila), in accordance with the variety (vaicitryāt) of their appetites (rucīnām), You (tvam) are (asi) the only (ekaḥ) goal to be attained (gamyaḥ), just as (iva) the ocean (is) (arṇavaḥ) with regard to the waters (payasām) –i.e. the water of rivers, rain, etc. ultimately flows into ocean–||7||

த்ரயீ ஸாங்க்யம் யோக: பசுபதி மதம் வைஷ்ணவ மீதி

ப்ரபின்னே ப்ரஸ்தானே பரமித மத: பத்ய மிசி ச |

ருசீனாம் வைசித்ர்யாத் ருஜுகுடில நானாபத ஜுஷாம்

ந்ருணாமேகோ கம்யஸ் த்வமஸி பயஸாமர்ணவ இவ || (ஸ்லோகம் 7)

பொருள் :- வைதிக மதம், கபிலரின் ஸாங்க்ய மதம், பதஞ்சலியின் யோக மதம், சைவ மதம், பாஞ்சராத்திர மதம் என்று சாஸ்திர மார்க்கம் பலவிதமாக இருக்கும் போது இது தான் சிறந்தது அது தான் இதமானது என்றபடி (முன் வாசனையின் படி) விருப்பங்கள் வேறுபடுவதால் நேராயும் கோணலாயும் உள்ள பற்பல மார்க்கங்களில் (அல்லது மதங்களில்) செல்லுகின்ற மனிதர்களுக்கு நேராகவும் வளைவாகவும் செல்லுகின்ற நதிகளுக்கு (அடையும் ஒரே இடமாக அமையும்) கடல் போல பரமேஸ்வரனாகிய நீர் ஒருவரே புகலிடமாக இருக்கிறீர்!

இந்த மந்திரக் கருத்தையே தனது சிகாகோ உரையில் ஸ்வாமி விவேகானந்தர் எடுத்துரைத்தார்; உலகையே தன் வசம் ஈர்த்தார்.

தினமும் காயத்ரி மந்திரம் ஜெபித்து சந்தியாவந்தனம் செய்யும் போது கூறும் மந்திரம் இது:

ஆகாஸாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம்

ஸர்வ தேவ நமஸ்கார: ஸ்ரீ கேசவம் ப்ரதி கச்சதி

ஆகாஸாத் – ஆகாயத்திலிருந்து

பதிதம் தோயம் – கீழே விழும் நீர்த்துளியானது

யதா கச்சதி ஸாகரம் – எப்படிக் கடலைச் சென்று அடைகின்றதோ (அதே போல)

ஸர்வ தேவ நமஸ்கார: – அனைத்து தேவர்களுக்கும் செய்யும் நமஸ்காரம் (வழிபாடு)

ஸ்ரீ கேசவம் ப்ரதி கச்சதி – ஸ்ரீ கேசவனையே சென்று அடைகிறது.

இதையும் இங்கு நினைத்துப் பார்த்து மகிழலாம்.

கச்சியப்ப சிவாசாரியார் தமிழில் இயற்றிய கந்த புராணம் ஆறு காண்டங்களைக் கொண்டது.

  • உற்பத்தி காண்டம் 2) அசுர காண்டம் 3) மகேந்திர காண்டம் 4) யுத்த காண்டம் 5) தேவ காண்டம் 6) தக்ஷ காண்டம்.

10345 செய்யுள்களைக் கொண்ட அற்புத நூல் இது.

தக்ஷ காண்டத்தில் 24 படலங்கள் உள்ளன. இதில் மட்டும் 2067 செய்யுள்கள் உள்ளன.

அவற்றுள் முதல் படலமாக அமைவது உபதேசப் படலம். அதில் வரும் 17வது செய்யுள் இது:-

“யாதொரு பொருளை யாவர் இறைஞ்சினும் அதுபோய்  முக்கண்

ஆதியை அடையும் அம்மா அங்கது போலத் தொல்லை

வேதம துரைக்க நின்ற வியன்புகழ் அனைத்தும் மேலாம்

நாதனை அணுகும் எல்லா நதிகளுங் கடல்சென்றென்ன”

இதன் பொருள் எளிதில் விளங்கக் கூடிய ஒன்றே.

கடலை எல்லா நதிகளும் சென்று அடைவது போல பழம்பெரும் வேதம் உரைக்கும் மேலான புகழ் அனைத்தும் சிவனையே சேரும். எந்த ஒரு பொருளை யார் இறைஞ்சிடினும் அது முக்கண் ஆதி பிரானையே அடையும்.

ஆதிப் பரம்பொருள் ஒன்றே. அதை யார் எப்படி வழிபட்டாலும் அது அந்தப் பரம்பொருளையே சென்று சேரும்.

இதுவே வேதம் கூறும் கொள்கை!

எத்துணை அற்புதமானது!

வாழிய வேதம்! வாழிய பாரதம்!! வாழ்க வாழ்க இணையிலா இந்து மதம்!!!

****

INDEX

ஸ்வாமி விவேகானந்தா சிகாகோ உரை

சிவ மஹிம்ன ஸ்தோத்ரம்

சந்தியாவந்தன மந்திரம்

கந்த புராணம் உபதேசப் படலச் செய்யுள்

tags – வழிபாடு, சிவ, மஹிம்ன ஸ்தோத்ரம்