எங்குமுள்ள பிள்ளை யார்? (Post No.10077)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 10,077

Date uploaded in London – 10 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

POEMS WRITTEN BY DR A NARAYANAN, LONDON

எங்குமுள்ள பிள்ளை யார்?

அம்பிகையின் மைந்தனே

தும்பிக்கைத் துணைவனே

கணங்களுக்கு அதிபதியே

குணங்களுக்குக்  கணபதியே

கந்தனுக்கு முந்தியவனே

சதுர்த்தியில் தோன்றியவனே

சங்கடங்களை நீக்குபவனே

ஆனை முகத்தோனே

பானை வயிறோனே

பல கலைகளுமவனே

பரம குருவுமவனே

மூஞ்சூறு வாகனனே

மோதகப் பிரியனே

விக்ன விநாயகனே

வினையறுப்பவனே

அரசமரத்தடிப் பிள்ளையாரே

ஆழ் கடல் தாண்டிவந்து

ஏழு கண்டம் கோயில் கொண்ட

வேழ முகத்தோனே சித்திக்கு

எத்திக்கும் கோயில் கொண்ட

சித்தி விநாயகனே

நாராயணன், ஸ்ரீ கணபதி துணை

DR A NARAYANAN Ph.D. London

XXX

ONE MORE POEM ON KRISHNA- VISHNU

மாமாயன்  மாதவன்

நீட்டிய காலால் நீணில மளந்தோன்

எட்டியுதைத்து  எறிந்தானோ மாயச்சகடனை

கட்டிய உரலுடனிணைந்தவன் கவிழ்ந்து செல்ல

தட்டிய உரலால் இரு தருக்கள் தரை சரிய

மீட்டியதோ முனிவர் சாபத்தால் தருவான

தேவரிருவரை காட்டியதோ தாமோதரன் மாயயை

 நாராயணன்

DR A NARAYANAN Ph.D. London

–subham–

TAGS- நாராயணன், DR A NARAYANAN ,  பிள்ளை யார், மாமாயன் , மாதவன்,

Leave a comment

Leave a comment