பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு; சோமரசம் பற்றிய அபூர்வ தகவல்கள் -3 (Post 10,106)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,106

Date uploaded in London – 18 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு

மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன

மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற்

பார்ப்பான் பசு ஐந்தும் பாலாச் சொரியுமே” – திருமந்திரம் 2883

****

சோம ரசம் பற்றிய அபூர்வ தகவல்கள் -3

ஐன்ஸ்டைன் சொன்னது பாதி சரி, டார்வின் சொன்னது முழுதும் சரி  என்ற தலைப்பில் இரண்டாவது பகுதியைக் கண்டோம். இதோ மூன்றாம் பகுதி

ரிக் வேதம் 9-97- 33 ஆவது மந்திரம்

சோம லதா மூலிகையே , நீ ஒரு கழுகு /ஸூபர்ணன் EAGLE.  சொர்க்கத்திலிருந்து பார்க்கிறாய் .

மந்திரம் 34 முதல் 58 வரை ……..

இடையனிடம்/கோபாலன்  பசுக்கள் வருகின்றன. துதி பாடுவோர் சோமனிடம் வருகின்றனர்

சோம ரசம் = கோ பாலன் COW HERD

அவன் மூன்று மொழிகளை/ 3 வேதங்களைக் கூறுகிறான் ; பிரம்மத்தின் மனதைப்  புலப்படுத்துகிறான் .

பசுக்கள் சோமனை விரும்புகின்றன ; எங்களுடைய ‘த்ருஷ்டு’ப் மந்திரங்கள் சோமனுடன் சேருகின்றன .

சோமனே , எங்களுக்கு மிகுந்த அறிவைக் கொடு

நீ சாத்தியமான மொழிகளை அறிபவன் ; விழித்திருப்பவன் .

சோமன் தன்  ஒளியால்  வானத்தையும் பூமியையும் நிரப்புகிறான் சூரியனை அணுகும் வருடம் போல இந்திரனை அணுகுகிறான்  அவன் தன் ஒளியால் இருளை அகற்றுகிறான்.

வேண்டுவதை எல்லாம் அளிப்பவன் சோமன்.

****

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு

எங்களுடைய முன்னோர்கள், பசுக்களின் கால் சுவடுகளைப்  பார்த்து அவை மறைத்து வைக்கப்பட்ட இடத்திலிருந்து அவைகளை மீட்டனர்

(குகையில் மறைத்து வைக்கப்பட்ட பசுக்களை வேத கால ரிஷிகள் மீட்ட சம்பவம் ரிக் வேதம் முழுதும் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகிறது பாணி என்றும் வரலாற்றில் பினீஷியர்கள் PHOENICIANS  என்று அறியப்பட்டோருமான ஒரு இனம் , பயங்கரக் கருமிகள் MISERS  ; பணப் பிசாசுகள் MONEY MINDED . அவர்கள் செல்வங்களை கைப்பற்றி குகைகளில் மறைத்து வைத்தனர் என்றும் அதை வேத கால இந்துக்கள் மீட்டனர் என்றும் ஒரு  சிலர் தற்கால வியாக்கியானத்தில் சொல்கின்றனர். சுருக்காமாகச் சொல்ல வேண்டும் என்றால் பசுக்கள் என்பது மாடுகள் அல்ல. தமிழிலும் ‘மாடு’ என்றால் செல்வம் என்ற அர்த்தம் உண்டு. ‘பார்ப்பான் அகத்திலே பால் பசு ஐந்து உண்டு’ என்று திருமூலர் பாடுவதில் ஐம்புலன்கள் என்ற பொருளில் பசுக்கள் வருகின்றன!)

சோமனே  நீ செழிப்பவன்; செழிப்பிப்பவன்; சொரிபவன் .

உன் ஒளியால் எங்களைக் காத்திடு

டார்வின் சொன்னது

கடலும் OCEAN நீயே, அரசனும் நீயே ; உயிரினங்களை பிறப்பிக்கிறான் ; எங்கும் ஆக்ரமிக்கிறான். வளமாக்குகிறான் ;

இந்து / சோமன்  சூரியனுக்கும் ஒளியைத் தந்தான்  அவன் நீரிலுள்ள கரு (உயிரினது தோற்றம்) ; இந்திரனுக்கு பலத்தைத் தந்தான் ; தேவர்களை வரவழைத்தான் ; சக்தியை அளித்தான்

சோமா , எங்கள் உணவுக்கும் செல்வத்துக்கும் வாயு தேவனை வசப்படுத்து ; மித்திரன், வர்ணன், மருத் தேவர்களைக் குஷிப்படுத்து  வானத்தையும் பூமியையும் உற்சாகப்படுத்து

நீ நேர் வழியில் செல்பவன் ; பாதகம் செய்வோரைக் கண்டால் பாய்ந்து மிதித்து விடுபவன் ;

நீ நோயையும் பகைமையையும் அகற்றுவாயாக.

நாங்கள் உன் நண்பர்கள் ; நீயோ இந்திரனின் நண்பன்

ரிக் வேதம் முழுதும் உள்ள உலக மஹா அதிசயம், வேறு எந்த சமய நூல்களிலும் இல்லாத அதிசயம் ; கடவுளர் எல்லோரையும் ரிஷிகள் “நண்பர்கள்” FRIENDS என்று அழைப்பதாகும் ; எல்லா ரிஷிகளும் சேர்ந்து பாட வரும்போது COMRADES ‘காம்ரேட்ஸ்’ வாருங்கள் நாம் எல்லோரும் சேர்ந்து பாடுவோம் LET US SING TOGETHER என்று அழைப்பதாகும் . எனக்கு என்று தனக்கு மட்டும் வேண்டாமல் மனித சமுதாயத்துக்கே வேண்டுவதாகும் ‘மழை பொழிக ! வளம் சிறக்க !’ என்று பாடுவதிலிருந்து இதை அறிகிறோம்.

ஐங்குறுநூறு என்னும் சங்க இலக்கியத்தில் ஓரம் போகியார் பாடிய வேட்கைப் பத்தில் ரிக் வேத வரிகள் அப்படியே வருகின்றன :

ஐங்குறு நூற்றில் வேதக் கருத்துகள் | Tamil and Vedas

https://tamilandvedas.com › ஐங்க…

· 

17 Mar 2013 — மருதத் துறை பற்றி ஓரம் போகியாரும் நெய்தல் துறை பற்றி அம்மூவனாரும் ..

XXX

மகானான சோமன் இந்த மகத்தான செயலாய் நடாத்தினான்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

மந்திரம் 9-97-44ல் வரும் அதிசயச் செய்தி

‘கடற் பயணம் செய்து செல்வங்களைக் கொண்டு குவிப்பீர்களாகுக’ என்று ரிக் வேதம் கட்டளை இடுகிறது. இதை மேற்குப் பகுதில் குஜராத்தி படேல்களும் பணியாக்களும் , கிழக்குப் பகுதியில் நாட்டுக் கோட்டை செட்டியார்களும் செய்ததை வரலாறு காட்டுகிறது சாதவாஹனர் முத்திரைகளில் கப்பல் படமும் பிராமி லிபியும் தமிழ் லிபியும் இருப்பதை நாம் அறிவோம்; வேத கால இந்துக்கள் துருக்கி சிரியா வரை சென்றது கி.மு.1340ம் ஆண்டு பொகாஸ் கோய் (துருக்கி) கல்வெட்டில் பதிவாகி உள்ளது . கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதிப் பாடலும் வியட்நாமில் உள்ள இரண்டாம் நூற்றாண்டு திருமாறன் கல்வெட்டும் (ஸ்ரீமாறன், சம்பா, வியட்நாம்) கல்வெட்டும் பறை சாற்றுகின்றன.

இதோ மந்திரம் 9-97- 44

சோமனே !  இனிய செல்வ ஊற்றினை நல்குவாயாகுக !

எங்களுக்கு வீரம் மிக்க புதல்வர்களையும் செல்வத்தையும் அளிப்பாயாகுக ;

நீ சுத்தமானவுடன் இந்திரனிடம் இனிமையாக இருப்பாயாகுக ;

எங்களுக்கு சமுத்திரத்திலிருந்து செல்வங்களைப் பொழிவாயாகுக RV.9-97-44

(இந்த ஒரு துதியில் இன்னும் 14 மந்திரங்கள் உள்ளன ; அவற்றை கடைசி பகுதியில் காண்போம் )

—தொடரும் TO BE CONTINUED……………………

 tags- பார்ப்பான் அகத்திலே ,பாற்பசு,  சோமரசம் -3, திரைகடல் ஓடியும்

Leave a comment

Leave a comment