முன்னாள் வெளிநாட்டு தூதரின் கேள்விகள்! (Post.10,956)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,956

Date uploaded in London – –     9 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

முன்னாள் வெளிநாட்டு தூதரின் கேள்விகள்!

ச.நாகராஜன்

முன்னாள் ராஜீய தூதரான திரு ஜி.பார்த்தசாரதியை அனைவரும் அறிவர். அவர் கேட்கும் சில கேள்விகள் அர்த்தமுள்ளவை.

இந்தக் கேள்விகளுக்கு முற்போக்கு மன்றங்களும், ‘மனித உரிமை’ காக்கும் கழகங்களும், திராவிட ஸ்டாக்குகளும், இஸ்லாமிய கழகங்களும், கிறிஸ்தவ ஏசப்பா மீட்புக் குழுவினரும் கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டு இருக்கின்றனர்.

ஹிந்து மதத்தில் ஒரு சிறுமி வாழைப்பழத் தோல் மீது கால் வைத்து வழுக்கி விழுந்தால் கூட அவன் ஏன் ‘வழுக்கியவள்’ ஆனாள் என்று தொடர்ந்து பல நாட்கள் திராவிட ஸ்டாக்குகளையும், ‘பேரறிஞர்களையும்’ வைத்து டிபேட் நடத்தும் சூப்பர் டிவி திராவிடீயர்களும் கப் சிப்!

சரி, சரி, கேள்விகளைப் பார்ப்போம்.

ஏன் முஸ்லீம்கள் ஆப்கானிஸ்தானத்தை விட்டு ஓடுகிறார்கள்?

அவர்களுக்கு ஷரியா என்றால் பிடிக்கும்.

அவர்களுக்கு மாட்டு மாமிசம் என்றால் உயிர்.

அவர்களுக்கு ஜனகனமண கீதத்தையோ வந்தேமாதரம் கீதத்தையோ இசைக்கப் பிடிக்காது. அந்த கீதங்கள் ஆப்கானிஸ்தானத்தில் இல்லவே இல்லை!

மூர்த்தி பூஜை என்றால் முஸ்லீம்களுக்கு கசக்கும். ஒவ்வொரு கோவிலையும் (முகலாயர் ஆட்சியில்) முடிந்த மட்டும் இடித்தாயிற்று. அந்த மூர்த்தி பூஜை அங்கே கிடையாது.

பர்க்கா என்றால் முஸ்லீம்களுக்குப் பிடிக்கும். அது அங்கே கடைப்பிடிக்கப்படுகிறது.

‘ட்ரிபிள் தலாக்’ – மூன்று முறை தலாக் சொன்னால் கட்டியவளை அந்தக் கணமே உதறித் தூக்கி எறிந்து விடும் முறை முஸ்லீம்களுக்கு மிகவும் பிடிக்கும். அந்த முறை அங்கே நடைமுறையில் உள்ளது.

இப்படி முஸ்லீம்கள் விரும்பும் எல்லா அம்சங்களும் அங்கே இருந்தும் கூட ஏன் இஸ்லாமியர்கள் அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்?

கம்யூனிஸ்ட் தோழர்கள் தினமும் காலை முதல் இரவு வரை கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள், ஒவ்வொருவரையாகப் பார்த்துச் சொல்கிறார்கள் – டிரம்ப் மோசம், ஜோ பைடன் பிரமாதம் என்றெல்லாம். வீர தீரமாக அன்றாட நடப்புகளை விமரிசிக்கும் தோழர்கள் எங்கே ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்? முஸ்லீம்கள் ஓட்டத்தைப் பற்றி ஒரு வார்த்தை – ஊஹூம் – மூச்சு விடவில்லையே!

‘முஸ்லீம்களுக்கு ஒன்று’ என்றால் எல்லா விஷயத்திலும் சம்மன் இல்லாமல் ஆஜர் ஆகும் திராவிட ஸ்டாக்குகளைக் காணவே காணோமே!

மனித உரிமைக் கழகவாதிகள் பங்களாதேஷ் வழியே பர்மா வழியே வரும் இஸ்லாமியர்களை நீங்கள் யார் என்று கேட்டால் குய்யோ முறையோ என்று கூச்சல் போட்டு ஐயையோ இவர்கள் தகாத கேள்விகளைக் கேட்கிறார்கள் என்று உலகளாவிய அளவில் கூச்சல் போடுவார்களே, அவர்களில் ஒருவரைக் கூடக் காணோமே!

நமது அமீர்கான் எங்கே? இந்தியாவில் இருப்பது பாதுகாப்பாக இல்லை என்று முழங்கினாரே, தீரர், அவர் ஆப்கானிஸ்தானத்தை விட்டு முஸ்லீம்கள் ஓட்டமாகக் கூட்டம் கூட்டமாக ஓடுவதைப் பற்றிக் கண்டுகொள்ளவே மாட்டேன் என்கிறார். ஆப்கானிஸ்தான் இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பானது தான், நானும் அங்கே வருகிறேன் என்று முழங்கவில்லை, ஏன்?

ஜாவேத் அக்தர், பப்பு, ஒவையாசி – அட தினமும் முஸ்லீம்களுக்குத் தீங்கு என்று வாய் ஓயாமல் பேசும் இந்த அன்பர்கள் தங்கள் திரு வாயைத் திறக்கவே மாட்டேன் என்கிறார்களே, ஏன்?

தங்கள் இஸ்லாமியப் பெண்களை அந்த நாட்டிற்கு அனுப்பி எப்படி இஸ்லாம் அங்கு இவர்கள் விரும்பும் அனைத்துடன் கொடி கட்டிப் பறக்கிறது என்பதைப் பார்க்கவாவது அனுப்பலாம், இல்லையா!

அட, ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட கூட்டவில்லையே! இது அவர்களின் அன்றாடப் பொழுது போக்கு அம்சம் ஆச்சே!

அதைக் கூடச் செய்யவில்லை!!

ரோஹின்யா அகதிகளுக்காக – இஸ்லாமியருக்காக – வரிந்து கட்டிக் கொண்டு வந்த பத்திரிகையாளர்கள், நலம் விரும்பிகள் ஒருத்தரைக் கூடக் காணோமே!

வரிந்து கட்டிக் கொண்டு ‘காலம் காலமாக’ பத்திரிகையில் சென்டர் பேஜை ஆக்கிரமிக்கும் முற்போக்குவாதிகள் – அது தாங்க நம்ம  செகுலரிஸ்டுகள் – திடீர் விடுமுறை எடுத்து விட்டார்களா என்ன? ஒரு கட்டுரையைக் கூடக் காணோம் அவர்களிடமிருந்து!

பேனாவில் இங்க் இல்லையோ, கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லையா?

அட ஒரு இஸ்லாமிய நாடும் கூட ஆப்கானிஸ்தானத்தில் வசிக்கும் முஸ்லீம்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்க முன்வரவில்லையே!

சோகமடா சோகம்!

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

***

ஜி.பார்த்தசாரதியின் கட்டுரையை ஒட்டி எனது ஓரிரு கருத்துக்களையும் சேர்த்து இந்தக் கட்டுரையைத் தந்துள்ளேன். இது அவரது கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பு அல்ல!

tags- ஜி.பார்த்தசாரதி, கட்டுரை,

Leave a comment

Leave a comment