கடவளை எங்கே தேடுவது? (Post.10,976)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

 Post No. 10,976

 Date uploaded in London – –   13 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் 70

Kattukutty 

கடவளை எங்கே தேடுவது?

 நம்மிடம் ஒரு ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம், ‘கை, கால் நல்ல தானே இருக்கு, உழைத்து சாப்பிடு’, என்று அறிவுரை கூறும் நாம், கோவிலுக்குச் சென்று 100 ரூபாயை கடவுளின் உண்டியலில் போட்டு விட்டு ‘எனக்கு பணம் கொடு, வீட்டை கொடு, சொத்தை கொடு’ என்று கேட்கிறோம். பூசாரிகளையும் வளர்த்து விடுகிறோம்.

நாம் அவர்களிடம் சொல்வது போல கடவுள் நம்மிடம் சொன்னால் என்ன ஆகும்? உனக்கும் கை, கால் இருக்கு, உழைச்சு சம்பாதிச்சு வாங்குனு சொல்லிட்டா…

 இல்லாதவன் இல்லை என்று கேட்கும் போது இருப்பவன் கொடுத்தால் அவனும் ஒரு வகையில் கடவுள் தான்…

கடவுளைக் கோவிலில் தேடாதே. உன்னில் உருவாக்கித் தேடு!

 **

பார்வைகள் பலவிதம்!

எனக்குத் திருமணமான வருடம்.

தினமும் அலுவலகம் செல்ல சைக்கிளைப் பயன்படுத்துவேன்.

வாசல் வரண்டாவில் சைக்கிளை வைத்திருப்பேன். கீழே ரோட்டிற்கு இறங்க மொத்தம் நான்கு படிகள். தினமும் அலுவலகம் செல்ல சைக்கிளை கீழே இறக்க வேண்டும். காலில் செருப்போது சைக்கிளை இறக்கினால் சறுக்கி விட்டு விடும். எனவே காலில் செருப்பு இல்லாமல் சைக்கிளை கீழே இறக்குவேன்.

என் மனைவி, என் செருப்புகளை கையில் எடுத்து, கீழே வந்து தருவாள். நான் செருப்பை காலில் மாட்டிக் கொண்டு சைக்கிளில் அலுவலகம் செல்வேன்.

இது தினசரி நடக்கும் நிகழ்ச்சியாகும். ஒரு நாள் என் மைத்துனன், எங்கள் வீட்டிற்கு மூன்று நாட்கள் தங்குவதற்குவ் வந்தான். நான் தினமும் அலுவலகம் செல்ல சைக்கிளை எடுப்பதையும், என் மனைவி என் செருப்புகளை எடுத்து, கீழே வந்து கொடுப்பதையும் கவனித்து வந்தான்.

மூன்று நாட்கள் கழித்து, ஊருக்குப் போனவனை, என் மாமனார், “மாப்பிள்ளை எப்படி?” என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவன் சொன்ன பதில் :” மாமா மற்ற விஷயங்களில் நன்றாகத் தான் இருக்கிறார். ஆனால், அக்கா கையில் செருப்பை எடுத்தால் தான், மாமா ஆபீஸ் போகிறார்.:

 இப்படித் தான் எல்லோருக்கும் தகவல்கள் பரிமாற்றப்படுகிறது.

 **tags-  பார்வைகள்,எங்கே தேடுவது, கடவுள்

Leave a comment

Leave a comment