கம்பன் காட்டும் புதிய கவிதை உத்தி! (Post No.11,322)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,322

Date uploaded in London – –    4 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 கம்பன் காட்டும் புதிய கவிதை உத்தி!

ச.நாகராஜன்        

     “வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்; மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்”, என்று தன்னை இனம் காண்பிக்கப் புகுந்த மகாகவி பாரதியார் விண்ணில் திரிகின்ற மீனெலாம் நான்; அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்; அவை பிழையாமே சுழற்றுவோன் நான் என்று தன் அகண்ட தன்மையை விவரித்துச் சொல்லுகையில், “கம்பன் இசைத்த கவியெலாம் நான்” என்று கூறுகிறார். கம்பனின் கவிதையையும் அகண்டத்தன்மையில் சேர்த்துக் கொள்கிறார்.

(முழு கவிதைக்கு பாரதியாரின் நான் என்ற கவிதையைப் பார்க்கவும்)

      கம்பனின் எல்லையற்ற தன்மையை இன்னும் விளக்கமாகக் கூற விரும்பிய மகாகவி பாரதியார் தமிழச்சாதி பாடலில், “எல்லையொன்றின்மை” எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும் என்று குறிப்பிட்டுத் தன் எண்ணத்தை உறுதிப் படுத்துகிறார்.தமிழ்ச் சாதி அமரத்தன்மை வாய்ந்தது என்ற தனது உறுதிக்குக் காரணமாக சிலப்பதிகாரத்தையும், திருக்குறளையும் கம்பனின் ராம காதையையும் மகாகவி சுட்டிக் காட்டும்போது அவற்றின் பெருமை நமக்குப் புலப்படுகிறது.

   கம்பனின் எல்லையற்ற தன்மை இன்னும் உலகாளவிய அளவில் ஆராயப்படவில்லை; உலக கவனத்தை ஈர்க்கும் வகையில் உலகின் முன் எடுத்துச் சொல்லப்படவில்லை. தமிழன் செய்ய வேண்டிய முக்கியமான கடமை இது.

    கம்பனின் எல்லையற்ற தன்மையைக் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் உலகளாவிய அளவில் பரவுவதற்கு முன்னர் “நாமமது தமிழரெனக் கொண்டு வாழும்” நம்மவர் அந்த எல்லையற்ற தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    கம்பனின் எல்லையற்ற உத்திகளில் ஒரே ஒரு உத்தியை மட்டும் இங்கு பார்ப்போம்.

   தன் காவிய நாயகனின் சொந்த நாடான கோசலத்தை வர்ணிக்க வந்த மகாகவி கம்பன், பெரும் பீடிகையுடன் கோசல நாட்டை வியந்து, “வரம்பெலாம் முத்தம் (கழனிகளின் வரம்புகளில் எல்லாம் முத்துக்கள்); தத்து மடையெலாம் பணிலம் (தாவிப் பாயும் தன்மையுள்ள மதகுகளில் எல்லாம் சங்குகள்)மாநீர் குரம்பெலாம் செம்பொன் ( பெரிய நீர்ப்பெருக்கையுடைய வாய்க்கால்களின் செய்கரைகளில் எல்லாம் செவ்விய தங்கக் கட்டிகள்)” என்று வர்ணிக்கத் தொடங்குகிறான். கவிதைச் சுவையில் ஆழ்ந்து அவனைத் தொடர்ந்து கோசல நாட்டைச் சுற்றத் தொடங்க நாம் எண்ணும் போது நம்மிடம் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போடுகிறான்!

 கோசல நாட்டில் தானம் செய்வோர் யாருமே இல்லையாம்! வண்மை இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்கிறான் .மனத்தில் ஈரம் இல்லா நாட்டவர் வாழும் நாடும் ஒரு நாடா? ராமனின் கோசலமா இப்படி? மனம் குடைகிறது. அடுத்து கம்பன் சொல்வது இன்னும் நம்மை திடுக்கிடச் செய்கிறது.அந்த நாட்டவருக்கு திண்மையும் இல்லையாம். அதாவது பராக்கிரமும் இல்லையாம்.அங்கு உண்மையும் இல்லையாம்;  ஒண்மை அதாவது அறிவுடைமையும் இல்லையாம்.

       கம்பனின் இந்த கோசல நாட்டின் வர்ணனையைக் கேட்டு நாம் திகைக்கும் போது, அவனே அதற்கான காரணத்தையும் தருகிறான்.

    வண்மை ஏன் இல்லை தெரியுமா? யாராவது எனக்குக் கொடு என்று கேட்டால் தானே கொடுக்க முடியும்? அங்கே இரப்பவர் யாருமே இல்லை!

திண்மை இல்லை; யாராவது அந்த நாட்டின் மீது போர் தொடுத்தால் தானே பராக்கிரமத்தைக் காண்பிக்க முடியும்!

    உண்மை இல்லை; ஏனெனின் பொய் என்று சில பேர் சொன்னால் தானே உண்மை என்ற ஒன்றைப் பற்றி உரைக்க வேண்டி வரும். யாருமே பொய் பேசுவதில்லை என்னும் போது உண்மை என்ற சொல்லே அங்கே இல்லாது இருப்பது இயல்பு தானே!

     எல்லோரும் கல்வி அறிவும் கேள்வி அறிவும் மிக்கவராய் இருக்கும் போது ஒண்மை எனும் அறிவுடைமை அங்கு சிறந்து தோன்றவில்லையாம்!

கம்பனின் பாடலை முழுவதுமாகப் பார்ப்போம்:

“வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்

திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்

உண்மை இல்லை ஓர் பொய் உரை இலாமையால்

ஒண்மை இல்லை பல் கேள்வி மேவலால்”

கம்பனின் புதிய உத்தி இது. நம்மை திடுக்கிட வைத்து அந்த திகைப்பை போக்க அவன் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகும் போது பிரமிப்பின் உச்சத்திற்கே சென்று விடுகிறோம்.

   இன்னொரு பாடலைப் பார்க்கலாம். ராவணனின் மைந்தன் அட்சகுமாரன் பெரும் படையுடன் அனுமனுடன் மோதக் கிளம்புகிறான். மூன்று கோடி தெருக்களை உடைய இலங்கையில், தங்கமாய் மின்னும் இலங்கையில், வைரமும் முத்தும் சிதறிக் கிடக்கும் இலங்கையில் சூரியனும் நுழையப் பயப்படுகிறான். அதிகமாக வெயில் அடித்து அது ராவணனுக்குப் பிடிக்காவிட்டால் என்ன செய்வது என்பது சூரியனின் கவலை. அப்படிப்பட்ட இலங்கையில் அட்சகுமாரனின் படையை யாராவது விளக்க முடியுமா?

    விளக்க முடியும் என்கிறான் கம்பன். யாரால் தான் விளக்க முடியும் என்று நமக்கே சந்தேகம் வருகிறது.

    அட்சகுமாரனின் யானைகளின் எண்ணிக்கையைச் சுலபமாகச் சொல்லி விடலாம். பெரிய கடலில் உள்ள சுறாமீன்களை எண்ண முடியுமானால்!

     அட்சகுமாரனின் தேர்களின் எண்ணிக்கையைச் சுலபமாகச் சொல்லி விடலாம். பெரிய கடலில் உள்ள மீன்களை மட்டும் சரியாக எண்ண முடியுமானால்!

    அட்சகுமாரனின் காலாட் சேனையில் உள்ள வீரரின் எண்ணிக்கையைச் சரியாகச் சொல்லி விடலாம். கடலில் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்து  உள்ள மணலின் எண்ணிக்கையை மட்டும் எண்ணிச் சரியாகச் சொல்லிவிட முடியும் என்றால்!

அட்சகுமாரனின் தாவிச் செல்லும் குதிரைகளின் எண்ணிக்கையைச் சுலபமாகச் சொல்லி விடலாம். கடலில் எழுந்து வந்து கொண்டே இருக்கும் அலைகளின் எண்ணிக்கையை மட்டும் எண்ணிச் சொல்லி விட முடியுமானால்!

   பாடலை கம்பன் வாயிலாகக் கேட்போமா?

 “பொரு கடல் மகரம் எண்ணில் எண்ணலாம் பூட்கை; பொங்கி

திரிவன மீன்கள் எண்ணில் எண்ணலாம் செம்பொன் திண் தேர்

உருவுறு மணலை எண்ணில் எண்ணலாம் உரவுத் தானை

வருதிரை மரபின் எண்ணில் எண்ணலாம் வாவும் வாசி”

(பூட்கை-யானை; உரவுத் தானை – வலிமை பொருந்திய காலாட் சேனை; வாவும் வாசி- தாவிச் செல்லும் குதிரைகள்)

“எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனதிடர் பிறவி அவதாரம்” என்று பிறவிகளின் எண்ணிக்கையைப் பின்னால் வந்த அருணகிரிநாதர் கடல் மணலின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார். கம்பனோ காலாட்படை வீரரின் எண்ணிக்கைக்கு அதை முன்னமேயே பயன்படுத்தி விட்டான். தாவி வரும் குதிரைளுக்கு தாவி வரும் அலைகளை உவமையாக அவன் கூறுவது சிந்திக்கச் சிந்திக்க களிப்பைத் தரும் ஒன்றாகும்.

      நம்மை திகைக்க வைத்து பின்னர் காரணங்களைச் சொன்ன பின்னர் வியக்க வைக்கும் கம்பனின் உத்தி இலக்கிய உலகிற்குப் புதிது.

       வடமொழியில் ஸம்பாவநாலங்காரம் என்று வழங்கப்படும் இந்த உத்தி வேறொறு பொருள் சித்திப்பதற்காக ‘இப்படி இருந்தால் இன்னது ஆகும்’ என்று வாய்பாடு படக் கூறுவது ஆகும்.

      உலகின் இலக்கியங்கள் அனைத்தையும் எடுத்துப் பார்த்தால் இப்படிப்பட்ட ‘திகைக்க வைத்து வியக்க வைக்கும்’ உத்தியைத் திறம்படக் கையாண்ட மகாகவிஞன் கம்பன் ஒருவனே என்பது தெரிய வரும்.

       கம்பன் கவிதையைக் கற்போம்; இதயம் களிப்போம்; உலகிற்கு அதைப் பரப்புவோம்

                             ******************** 

  Tags- கம்பன், அட்சகுமாரன்

புத்தக அறிமுகம் – 76

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 2)

நூலில் உள்ள அத்தியாயங்கள்

பொருளடக்கம்

01.சுற்றுப்புறச் சூழ்நிலை மேம்பட இணையத்தைபயன்படுத்துவோம்

02. இணையத்தால் சுற்றுப்புறச் சூழல் கேட்டைத் தவிர்க்கலாம்!

03. ஓஜோன் உறையின் அவசியம்!

04. பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்போம்!

05. கடல் நீர் சூடாகும் அபாயம்!

06. ஆர்க்டிக் உருகுகிறது!

07. பழைய காடுகளைக் காப்போம்!                                         08. ஓஜோன் துளை

09. சுத்த நீர் சேமிப்போம்        

10. கடல் வளம் காப்போம்!                                                11. கணிணிகளால் ஏற்படும் மாசுகளைத் தவிர்ப்போம்!                             12. மழைக்காடுகள் மனிதரின் செல்வம்!                                         13. மழைக்காடுகள் தரும் செல்வம்!

14. மரங்களை வெட்டாதீர்கள்!

15. கரியாலும் காகிதத்தாலும் பாதிக்கப்படும் சுற்றுப்புறச் சூழல்!

16.  மழைக்காடுகள் என்னும் இயற்கை அதிசயம்!

17. மழைக்காடுகளின் பாதுகாப்பு!

18. காடுகள் இல்லாத எதிர்காலம்!

19. புவி வெப்ப உயர்வு!

20. துருவக்கரடிகளுக்கு அபாயம்!

21. உலகின் ஒப்பற்ற ஒரு கிராமம்

22.  சிந்தனை செய்வோம்!

23. சுற்றுப்புறச் சூழலைப் பற்றிய சில உண்மைகள்!

24. புதிய கோஷம் : குறைவாகப் பயன்படுத்துவோம்!

25. சின்னச் சின்ன செயல்கள்!

26. பெட்ரோலுக்கு மாற்று

27. சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கும் சில மாற்று எரிபொருள்கள்

28. ஹைட்ரஜன் வாகனங்கள்

29. வியாதிகளைப் போக்கும் வேப்ப மரம்! -1

30. வியாதிகளைப் போக்கும் வேப்ப மரம் – 2

31. நீரைச் சுத்தமாக்க சுலபமான வழி!

32. பூமி கிரகத்தின் சர்வதேச ஆண்டு!

33. விஞ்ஞானிகளின் எச்சரிக்கை

34. நீர்ப் பாதுகாப்பு

35.சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவோம்!

35. சுத்த நீர் தட்டுப்பாடு

36. நீரை வீணாக்காமல் இருக்க வழிகள்!

37. சுற்றுப்புறச் சூழல் காக்க உபயோககரமான குறிப்புகள்

38. நமது சுற்றுப்புறச் சூழல் உரிமைகள்

*

இந்த நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-

This book emphasizes the importance of environmental protection. While the world has been falling apart due to environmental degradation, it is important for its inhabitants to understand the significance of protecting and safe-guarding our environment. This book consists of several interesting discussion on this topic, all of which are taken from an environmental program broadcasted on All India Radio. While environmental enthusiasts would definitely enjoy this book, it is also a necessary read for today’s younger generation who will make a societal impact tomorrow.

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் நூல். சுற்றுச்சூழல் சீர்கேட்டால் உலகமே அழிந்து வரும் இவ்வேளையில் அது பற்றிய விழிப்புணர்வை ஒவ்வொருவரிடமும் ஏற்படுத்த வேண்டியது இன்றியமையாதது! அவ்வகையில் சுற்றுச்சூழல் ஆர்வர்லர்கள் மட்டுமின்றி அனைவருமே, குறிப்பாக நாளைய தலைமுறையினரான மாணவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல் இது! சென்னை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகளின் இரண்டாம் பாகமாக இந்நூல் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் படிப்பீர்! பிறருக்கும் பரிசளிப்பீர்!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் – 2 நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

HINDU PURANIC SCENES IN SANGAM TAMIL LITERATURE -2 (Post No.11,321)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,321

Date uploaded in London – 3 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 2

Let us look at more scenes from the Puranas (purana) as seen by the Sangam period Tamil poets.

When the world famous poet Kalidasa saw blue Yamuna and white Ganges water , he immediately  remembered bluish black Krishna and white skinned Balarama. Tamils were well versed in Kalidasa (kaali daasa), who lived in the first century BCE or slightly earlier. Sangam Tamil poets used more than 200 of Kalidasa’s  (out of1500) imageries. So Tamil poet also used the same simile when he saw a blue hill and white waterfall. It is in Natrinai verse 32 sung by Brahmin poet Kabilar. He was well versed in Sanskrit literature, and he was the one who used highest number of Kalidasa’s similes in Tamil. His famous Kurinjippattu (paattu) is an imitation of Meghaduta of Kalidasa. Rev.G U Pope also mentioned it.

Kabilar said,

The hill is like Maayon (Vishnu/ Krishna)

The white waterfall is like Vaaliyon (Balaraamaa)

–Natrinai verse 32

Xxx

But a more beautiful description of a scene from Bhagavata is found in Sangam book Akananuru verse 59 composed by Maruthan Ilanagan (naagan). In the same poem he used another episode from Skaantham (in Tamil Kantha Puraana) also.

First episode

An elephant bends the branches of the Yaa tree so that its female companion could easily feed herself with the leaves. The poet says it is like Krishna bending the branches of Kuruntha tree on the banks of the river Yamuna to enable the Gopikas to use its branches for hiding their semi naked bodies from the sight of Balarama who came there while they were bathing.

Balarama, elder brother of Krishna was a strict guy and Krishna new that he would not tolerate his pranks.

Tamils used a strange name for Yamuna – Tholunai. It may mean a river running near Thozu/ cattlesheds of Brindhavan or where Krishna was worship (thozu)ed by the Gopis.

The second episode in the same verse is about Lord Kartikeya (Murugan) killing the demon Surra padma (soorapathman). So Maruthan Ilanagan has brought two episodes from two puranas in one verse. Tamils were so familiar with Puranas.

Skanda/ Kartikeya killing demon Soorapathman is enacted every year during Skanda Shashti festival.in Tiruchendur , lakhs of devotees gather on the sea shore every year to watch this divine act.

To be continued………………

 Tags- Sura samharam, Gopi, Krishna, Balarama, Yamuna, Bathing, Gopika

மாறன் சடையன், சடையன் மாறன் , மூன்றாம் சார்லஸ் (Post 11,320)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,320

Date uploaded in London – 3 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பாண்டிய மன்னர்களின் பெயர்களைப் பார்த்தால் ஒரு அற்புதமான ஒழுங்கு (order) முறை காணப்படும். அதாவது ஒரு மன்னன் பெயர் மாறன் என்றால் அதற்கு அடுத்து வரும் மன்னனின் பெயர் சடையன் என்று முடியும். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வழக்கத்தை அவர்கள் பின்பற்றினார்கள். இதிலிருந்து அவர்களுக்கு எவ்வளவு வரலாற்று உணர்வு (HISTORICAL SENSE) இருந்திருக்கிறது என்பது புலனாகும். வேறு எந்த ஒரு வம்சத்திலும் இப்படி ஒழுங்கு முறை (ORDER) பின்பற்றப்பட்டதாகத் தகவல் இல்லை.

இங்கு பிரிட்டனில் இது போன்ற ஒரு வழக்கத்தை கடந்த சில தினங்களாக பத்திரிக்கைகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால் அது 200 ஆண்டு வழக்கம்தான்.பாண்டியர்களோ 800 ஆண்டுக்கும் மேலாக அவ்வழக்கத்தைப் பின்பற்றியதற்கு நமக்கு தக்க சான்றுகள் உள்ளன .

பிரிட்டனில் யார் ஆளுகிறார்களோ அந்த ராஜா  அல்லது ராணியின் படம்தான்  ரூபாய் நோட்டு, தபால் தலை, நாணயங்களில் இடம்பெறும்  .அது மட்டுமல்லாமல் காமன்வெல்த் நாடுகளிலும் இந்தியா போன்ற குடியரசு ஆகாத நாடுகளிலும்  பிரிட்டிஷ் ராஜா  அல்லது ராணியின் படமே ரூபாய் நோட்டு, தபால் தலை, நாணயங்களில்  இருக்கும்.

கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக ரூபாய் நோட்டு, தபலத்தலை, நாணயங்களில் ஒரு ராஜாவோ ராணியோ இடது புறம் பார்க்கும் படி உருவம் இருந்தால், அடுத்த ஆட்சியாளர் வலது புறம் பார்த்திருப்பார்.

செப்டம்பர் எட்டாம் தேதி இறந்து போன பிரிட்டிஷ் மஹாராணி இரண்டாம் எலிசபெத்தின் படம் வலது புறம் பார்க்கும்படி தபால் தலை நாணயங்களில் இருக்கிறது. அடுத்ததாக வரும் சார்லஸின் படம் இடது புறம் பார்ப்பதாக அமைக்கப்பட்டுள்ளது . இந்தப் படத்தை மஹாராஜா ‘ஓகே’ OK என்று சொல்லிவிட்டார். புதிய நாணயங்களுக்காக பிரிட்டிஷ் மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதுவரை உலகிலேயே அதிக அளவு உருவம் அச்சிட்டப்பட்டவர் பிரிட்டிஷ் மஹாராணி . அவரை மிஞ்ச எவராலும் இனி முடியாது. ஏனெனில் அவர் நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர்! பிரிட்டனில் இப்போது பதவி ஏற்பவர் மூன்றாம் சார்லஸ் (CHARLES iii) என்று அழைக்கப்படுவார். 1952 முதல் கோடானு கோடி நாணயங்களிலும் தபால்தலைகளிலும் இடம்பெற்றவர் எலிசபெத் மஹாராணி. புதிதாக வெளியாகப்போகும் 5 பவுண்டு நாணயங்களில் மட்டும் நாணயத்தின் மறு பக்கத்தில் அவர் உருவம் இருக்கும்.

XXX

பாண்டிய மன்னர் பட்டியல்

கடுங்கோன் (இடைக்காலம்) (560–590)

மாறவர்மன் அவனி சூளாமணி (590–620)

செழியன் சேந்தன் (620–640)

அரிகேசரி மாறவர்மன் நின்றசீர் நெடுமாறன் (670–710)

கோச்சடையன் ரணதீரன் (710–735)

அரசகேசரி பராங்குச மாறவர்மன் இராசசிங்கன் I (735–765)

பராந்தக நெடுஞ்சடையன் (765–790)

இராசசிம்மன் II (790–800)

வரகுணன் I (800–830)

சீர்மாற சீர்வல்லபன் (830–862)

வரகுண வர்மன் (862–880)

பராந்தக வீரநாராயணன் (880–900)

மூன்றாம் இராசசிம்மன் (900–920)

பல பாண்டியர்களின் முழுப்பெயர்களும் நமக்குக் கிடைக்கவில்லை அவைகள் கிடைத்தால் பிற்காலத்திலுமிந்தப் பெயர்கள் இருப்பதைக் காணலாம்.

பிற்காலப் பாண்டியர்கள் (10– 13 நூற்றாண்டுகள்)

சுந்தர பாண்டியன் I

வீர பாண்டியன் I

வீர பாண்டியன் II

அமரபுசங்க தீவிரகோபன்

சடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன்

மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியன்

மாறவர்மன் பராக்கிரம சோழ பாண்டியன்

சடாவர்மன் சோழ பாண்டியன்

சீர்வல்லப மணகுலச்சாலன் (1101–1124)

மாறவர்மன் சீவல்லபன் (1132–1161)

பராக்கிரம பாண்டியன் I (1161–1162)

குலசேகர பாண்டியன் III

வீர பாண்டியன் III

சடாவர்மன் சிறீவல்லபன் (1175–1180)

விக்கிரம பாண்டியன் (1180-1190)

முதலாம் சடையவர்மன் குலசேகரன் (1190–1216)

பராக்கிரம பாண்டியன் II (1212–1215)

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216–1238)

இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1238–1240)

இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1238–1251)

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1251–1268)

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268–1308)

சுந்தர பாண்டியன் IV (1309–1327)

வீர பாண்டியன் IV (1309–1345)

ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்கு இந்த வழக்கத்தைப் பின்பற்றியதால், இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வே இல்லை என்ற வெள்ளைக்காரன் ஏச்சுப்பேச்சு அடிபட்டுப்போகிறது. மேலும் ஒரு மாறனுக்கு அடுத்தாற்போல் இன்னொரு மாறன் பெயரே நமக்கு இன்று கிடைத்தாலும் இடையே ஒரு சடையன் பெயர் இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் ஊகிக்க முடிகிறது.

வாழ்க பாண்டியர்கள்! 

-SUBHAM-

tags – மூன்றாம் சார்லஸ் , மாறன், சடையன், பாண்டியர், மன்னர் 

காந்தி வந்தாராம், பூந்தி தந்தாராம், சாந்தி தின்னாளாம்………………… (Post No.11,319)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,319

Date uploaded in London – 3 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

(எச்சரிக்கை ; கட்டுரையின் உள்ளே என் சுய சரிதையும் உள்ளது )

65 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரையில் வடக்கு மாசி வீதியிலுள்ள யாதவாஸ் ஸ்கூலில் (யாதவர் ஆரம்பப் பள்ளி) படிக்கும்போது ஒரு அசட்டுப் பிசட்டு Nursery Rhyme நர்சரி ரைம் பாடுவோம். குறிப்பாக பெண் களை நோக்கி.!.

காந்தி வந்தாராம் பூந்தி தந்தாராம்

சாந்தி தின்னாளாம்  வாந்தி எடுத்தாளாம்

இப்போது அதையே  கொஞ்சம்  மாற்றிப்படலாம்

காந்தி வந்தாராம்  நம்ம  நாட்டுக்கு

சாந்தி தந்தாராம்

ஏந்தி  வந்தாராம் அஹிம்சை கொள்கையை

ஏந்தி  வந்தாராம்

சந்தி சந்தி இடமெல்லாம் சிலையாய் நின்றாறாராம்

சுற்றிச் சுற்றிப் பார்த்தாலும்

காதி’யணிந்த மக்களைக் காணவில்லையாம்.

(என்னுடைய தந்தை தினமணி வெ . சந்தானம், தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமன் ஆகியோர் எப்போதும் கதர் (காதி) ஜிப்பாதான் போடுவார்கள். இப்போது ‘காதி’ மறைந்துவிட்டது.)

அப்படியென்ன காந்திஜி சேவை செய்தார்? என்போருக்கு ஓரிரு பதில்கள்.

அரசியலில் காந்தீஜி படு தோல்வி அடைந்தார். அவர் முழு zero ஜீரோ . மற்ற துறைகளில் அவர் ஒரு Hero ஹீரோ . சுய வாழ்வில் உள்ளதைச் சொல்வேன்சொன்னதைச் செய்வேன்; வேறொன்றும் தெரியாது (சினிமாப்பாடல்) என்று பாடினார் . மற்றவர்களையும் பாட வைத்தார். முதலில் ஓரிரு சம்பவங்களைப்  பார்ப்போம் . அவர் படித்ததோ வக்கீல் தொழிலுக்கு; அவருக்குப் பிடித்ததோ ‘அனைவருக்கும் சம உரிமை’.

தென் ஆப்பிரிக்காவில் சம உரிமைகளுக்குப் போராடியவர்தான், இந்தியாவுக்கு வந்தவுடன் தேச விடுதலைப் போராட்டத்தில் சேர்ந்து கொண்டார்.

HAIR CUT

காந்தி, தலை முடி அதிகம் வளர்ந்ததால் ஹேர்கட்டிங் சலூனுக்குப் (Hair cutting Saloon) போனார்.  அங்கு  முடிவெட்டும் தொழிலில் வேலை செய்த நாவிதர்கள் கறுப்பர்கள்தான். அவர்கள் காந்திஜியை உள்ளே அனுமதிக்கவில்லை. பழுப்பு நிறத் தோல் உடைய இந்தியர்களுக்கு முடிவெட்டினால், வெள்ளையர்கள் விரட்டி விடுவார்களே என்று அஞ்சி , ‘போ  , போ வெளியே போ’ என்று விரட்டிவிட்டனர். அவர் என்ன செய்தார்? தனக்குத் தானே முடி வெட்டிக்கொண்டார். பின்புறம் சரியாக வெட்ட முடியவில்லை. மறுநாள் வெளியே சென்ற போது வெள்ளைக்காரர்கள் கிண்டல் செய்தனர்.

“என்ன, காந்தி ? வீட்டில் எலிகள் அதிகமோ ? ராத்திரி தின்று மென்று விட்டது போல் இருக்கிறதே” என்று. அவர் கொஞ்சமும்  திருப்பித் திட்டவில்லை ; உங்கள் நாட்டு கறுப்பர்கள் கூட எனக்கு முடிவெட்டப் பயப்படுகின்றனர் என்று உண்மையைச் சொல்லி அவர்கள் வாயை மூடினார். பின்னர் எப்போதும் தனக்குத் தானே முடிவெட்டிக்கொண்டார் (நல்ல  வேளை ! பிற்காலத்தில் வழுக்கைத் தலை ! முடிவெட்டும் தேவையே இல்லை )

xxx

காந்திஜி சிறை செல்வதும் வீட்டுக்குத் திரும்பி வருவதும் தென் ஆப்பிரிக்காவிலேயே துவங்கிவிட்டது. அவருக்கு மிகவும் பிடித்தது — தானே ‘தக்ளி’யில் நூல் நூற்று ஆடை நெய்வது ஆகும். இப்படி நெய்த ஆடைகளை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அன்பளிப்பாகவும் கொடுத்தார்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்துவிடல் (குறள்  314)

கெட்டது செய்த ஒருவர், வெட்கப்படும்படி, அவருக்கு நன்மை செய்து விடு — என்ற வள்ளுவன் வாக்கினை வாழக்கையில் பின்பற்றினார் .

நான் மதுரையில், மஜூரா காலேஜில் (Madura College) பி.யூ.ஸி படித்தபோது ஒரு ஆங்கிலப் பாடம் இருந்தது. அதில் படித்தது இன்றுவரை மறக்கவில்லை . அது லூயி பிஷர் Louis Fisher என்பவர் காந்திஜி பற்றி எழுதிய கட்டுரை ; அவர் சொன்னார் ; 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டில் காந்திஜி மட்டும் பிறந்திருந்தால் இந்துக்கள் இவ்வளவு நேரம் அவருக்கு கோவில் கட்டி இருப்பார்கள் ; ஏனெனில் அவர் சொன்னதைச் செய்தார்; செய்ததை சொன்னார் .

Had Gandhi born in this country 2000 years ago, Hindus would have built him a temple by this time; because he practised what he preached and preached what he practised.

இது முற்றிலும் உண்மை ; இன்றைய அரசியல்வாதிகளுக்கு முற்றிலும் நேர்மாறாக அவர் வாழ்ந்தார். வள்ளுவனும் இதை ஆதரிக்கிறான்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும் (குறள்  50)

உலகத்தில் நேர்மையாக வாழ்பவன் மேலுலகத்தில் உள்ள கடவுளுக்கு சமம் அல்லது கடவுள் ஆகிவிடுவான் என்பது வள்ளுவன் கண்ட உண்மை.

அரசியலில் காந்தி சொன்னதை யாரும் கேட்கவில்லை. காங்கிரஸ் கட்சியைக் கலை என்றார் ; அதைச் செய்யாததோடு அதை வைத்து இன்று பிழைப்பே நடத்துகின்றனர். பசுக்களை ரட்சியுங்கள்; இந்தி படியுங்கள் என்றார் ; அதையும் பலரும் பொருட்படுத்தவே இல்லை. பாகிஸ்தான் உண்டானால் செத்துப்போவேன் என்று உண்ணாவிரதம் இருந்தவர் பாகிஸ்தான் கொடுக்காவிட்டால்  செத்துப்போவேன் என்று உண்ணாவிரதம் இருந்தார் ; ஆக அரசியலில் அவர் சொல்லுக்கு மதிப்பில்லை. 1948-ல் இறக்காமல் இன்னும் பத்து, இருபது  ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் அவரை யாரும் மதிக்காமல், ஆஸ்ரமத்தில் வைத்து ‘கும்பிடு மட்டும்’ போட்டு வைத்திருப்பார்கள் (வினோபாஜி போல).

போகட்டும் அரசியலை மறந்துவிட்டு அவர் வாழ்ந்த விஷயங்களை மட்டும் — வாழ்ந்த முறையை –மட்டும் பின்பற்றுவோம். தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்றார் ; நாமோ அடுத்த வீட்டுக் காரனைவிட இன்னும் விலை உயர்ந்த கார் வாங்க வேண்டும் என்று நினைக்கிறோம்; சொந்தக்காரனைவிட பெரிய சொகுசு வீடு கட்டவேண்டும் என்று நினைக்கிறோம்; அந்த நினைப்பையாவது கைவிடலாமே; எளிமை என்பதை கைக்கொள்ளலாமே !

(என் வாழ்க்கையில் நடந்த ஓரிரு சம்பவங்களையும் எழுதி வைக்கிறேன் ; என் மகன் என்னைக் காரில் அழைத்துச் செல்லும்போது DAD, DAD டாட் டாட் எதிரே வரும் காரைப் பாருங்கள். இதைப் போலத்தான் வாங்க எனக்கு ஆசை; ஆனால் இது வாங்கலாமா ? அல்லது அது (வேறு ஒரு  மிக உயர்ந்த காரின் பெயரைச் சொல்லி) வாங்கலாமா ? What do you think? வாட் டூ யூ திங்க் ? என்பான் ; நான் சிரித்துக்கொண்டே,’ மகனே நாலு சக்கரம்; ஒரு கூரை ; நிற்காமல் போகவேண்டும்; டப்பா கார் ஆனாலும் பரவாயில்லை’ என்பேன்.

உண்மையில் இது நடக்கவும் நடந்தது..

20 ஆண்டுகளுக்கு முன்னர்

இலங்கையின் புகழ்பெற்ற அறிஞர் (காலம்சென்ற ) பேராசிரியர் . கைலாசநாத குருக்கள் வந்திருக்கிறார் ;டாக்டர் சுவாமிநாதன் வீட்டில் தங்கியிருக்கிறார். அவரை நீங்கள் அவசியம் தரிசிக்க வேண்டும் என்று ஒரு இலங்கைத் தமிழ் அன்பர் டெலிபோன் செய்தார். அடடா, அவர் எழுதிய வட மொழி இலக்கிய வரலாறு புஸ்தகம் என் தந்தை வைத்திருந்தார். அதை இப்போதும் லண்டனில் படித்து அவ்வப்போது கட்டுரைக்கு குறிப்புகள் எடுக்கிறேன். அவசியம் சந்திக்கவேண்டும் என்று சொன்னேன். ஒரு குறிப்பிட்ட லண்டன் ஸ்டேஷன் (Underground)  வாசலில் குறிப்பிட்ட நேரத்துக்கு என் நண்பர் கார் வரும் ஏறிக்கொள்ளுங்கள் என்கிறார். அப்படியே காரும் வந்தது. அது கார் அல்லதகர டப்பா தான் ; பத்து முறை கதவை தடால், தடால் என்று அடித்த பின்னர் மூடிக்கொண்டது ; கட்டை வண்டி வேகத்தில் சென்றது. தடால், படால் சப்தத்தோடு இலக்கை அடைந்தது; இப்போது நினைத்தாலும் ஒரே சிரிப்பு. இது போன்ற சுவையான சம்பவங்கள் இருப்பதால்தான் மனத் தொய்வு இல்லாமல் வாழ முடிகிறது. இன்னொரு சம்பவம் .

எச்சரிக்கை 2

போர் (bore) அடித்தால் மேலே படிக்காமல் நிறுத்தி விடுங்கள்

லண்டனில் க்ராய்டன் Croydon  பகுதியில் தமிழர்களுக்கு கோவிலே இல்லை ; ஒன்று துவங்க வேண்டும் என்று சிலர் முடிவு செய்தனர். (இப்போது அப்பகுதியில் கோவில்கள் வந்து விட்டன ).  நான் உலக இந்து மஹா சங்கம்(WHMS) , தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation) , லண்டன் சத் சங்கம் (LSS), சவுத் இந்தியன் சொசைட்டி (SIS) எல்லாவற்றிலும் இருந்ததால் என்னையும் அந்தக் கமிட்டியில் போட்டனர். மாதத்துக்கு இரண்டு முறையாவது சந்திப்போம் .Croydon க்ராய்டன் அதிக தூரம் என்பதால் என்னை ஒரு டாக்டர் அவருடைய மிக விலை உயர்ந்த காரில் (Luxury Car) அழைத்துச் செல்லுவார்.

அவர்கள் (Doctors) சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்படி விலை உயர்ந்த கார் வாங்கினால் வரி கொடுப்பதில் தள்ளுபடி (Tax discounts)  உண்டு. ஆகையால் அவர்களுக்கு விலை உயர்ந்த காரை வாங்குவதும் ‘பழைய’ கார்களை நண்பர் – உறவினருக்கு விற்பதும் சகஜம். அது மிக விலை உயர்ந்த கார் என்பதை அறியாத நான், ஒவ்வொரு முறையும் காரின் கதவைக் கையால் இழுத்து ‘தடால்’ என்று மூடினேன். அவர் பேச்சு வாக்கில் தனது காரின் மதிப்பு , அது என்ன கார் என்றெல்லாம் கார் புராண பிரவசனம் செய்து பார்த்தார். அப்போதும் என் டியூப் லைட் (Tube light- fluorescent bulb) போன்ற மூளையில் அது ஏறவில்லை. அடுத்த முறை அவரது காரின் கதவை தடால் என்று மூடியபோது அவருக்குப் (He lost his patience) பொறுக்கவில்லை.

‘நான் சொன்னேனே; இது அல்ட்ரா மாடர்ன்  (Ultra modern features) அம்சங்களைக் கொண்டது . இது ஆட்டோமேட்டிக் டோர் (automatic door). நீங்கள் இறங்கிய பின்னர் கதவைத்  தொட்டாலே போதும் அது தானாகவே மூடிக்கொள்ளும்’ என்று  சொன்னார் ; நான் அவரிடம் அபால்ஜிஸ் (apologies)  கொடுத்துவிட்டு, என் மகனிடம் அடிக்கும் டப்பா கார் ஜோக் Joke கைச் சொல்லி ஒருவாறு மழுப்பி சமாளித்தேன் .

எளிமை வாழ்க!!

— subham —-

Tags- காந்தி, பூந்தி, முடி, நூல் நூற்றல் , என் சுய சரிதை , டப்பா கார்

எஸ். நாகராஜன் செப்டம்பர் 2022 கட்டுரை இண்டெக்ஸ் (Post No.11,318)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,318

Date uploaded in London – –    3 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

SNR Article Index : SEPTEMBER 2022

 SEPTEMBER 2022

  1-9-2022   11230    எதிரிகளை ஒழிக்க வழி! – புத்தக அறிமுகம் 43 உலக

               வலத்தில் ஒன்பது நாடுகள் (சியோல் முதல் ரோம்.     

               வரை)             

 2-9-2022   11232    டயபடீஸ் சம்பந்தமான 5 ஊட்டச்சத்து பற்றிய சர்ச்சை

              கருத்துக்கள் முடிவுக்கு வந்து விட்டன- 1 – ஹெல்த்கேர்    

              ஜூலை 22 கட்டுரை- புத்தக அறிமுகம் 44 சம்ஸ்கிருதச்

              செல்வம் பாகம் 2 (132 நியாயங்கள் பற்றிய விளக்கம்)

  3-9-2022 11235        டயபடீஸ் சம்பந்தமான 5 ஊட்டச்சத்து பற்றிய சர்ச்சை

               கருத்துக்கள் முடிவுக்கு வந்து விட்டன- 2 ஹெல்த்கேர்

               ஜூலை 22 கட்டுரை- புத்தக அறிமுகம் 45 –

               ஸம்ஸ்கிருத சுபாஷிதம் 200                                

  4-9-2022   11237     SNR Article Index AUGUST 2022  – புத்தக அறிமுகம் 46 – உலகின்

               ஒப்பற்ற நூல் யோக வாசிஷ்டம்!

 5-9-2022 11239       ஹிந்து ராஷ்டிரத்தின் தலைநகரம் வாரணாசி!       

               – புத்தக அறிமுகம் 47 அறிவியல் துளிகள் பாகம் 7        

 6-9-2022 11241       வேத கணிதம்! – ஒரு பார்வை! –  புத்தக அறிமுகம் 48

               அறிவியல் துளிகள் பாகம் 8

 7-9-2022 11244       வரலாற்றில் சரியான தருணத்தில் ஒரு பாடம்-1    –

               புத்தக அறிமுகம் 49 அறிவியல் துளிகள்  – பாகம் 9

 8-9-2022 11247      வரலாற்றில் சரியான தருணத்தில் ஒரு பாடம்-2    –

               புத்தக அறிமுகம் 50 அறிவியல் துளிகள் – பாகம் 10

   9-9-2022 11249  அறிவியல் அறிஞர் வாழ்வில் – 4 – புத்தக அறிமுகம் 51

               அறிவியல் துளிகள் – பாகம் 11

10-9-2022 11252    பாரதம் பற்றிய மஹாகவி பாரதியாரின் 4 பாடல்கள் : 

              ஒரு பார்வை! – புத்தக அறிமுகம் 52 அறிவியல் துளிகள்

              பாகம் 12

11-9-2022 11255     பாரதம் பற்றிய மஹாகவி பாரதியாரின் 5வது பாடல்!

                                   புத்தக அறிமுகம் 53 அறிவியல் துளிகள் பாகம் 13

12-9-2022    11258      பாரதம் பற்றிய மஹாகவி பாரதியாரின் 6 மற்றும்

                                       7வது பாடல்! – புத்தக அறிமுகம் 54 அறிவியல் துளிகள்

                பாகம் 14

13-9-2022   11261        அறிவியல் அறிஞர் வாழ்வில் – 5 புத்தக அறிமுகம் 55

                அறிவியல் துளிகள் பாகம் 15

14-9-2022 11264         அறிவியல் அறிஞர் வாழ்வில் -6  புத்தக அறிமுகம்

                57 –  அறிவியல் துளிகள் பாகம் 17

15-9-2022 11267     அறிவியல் அறிஞர் வாழ்வில் – 7 – புத்தக அறிமுகம்

                56 –  அறிவியல் துளிகள் பாகம் 16

16-9-2022 11269         செப்புமொழி முப்பத்தி ஒன்று – புத்தக அறிமுகம்

                58 –  தெய்வீக இரகசியங்கள்!

17-9-2022  11271        கண்ணாடி பிரதிபலிப்பு யுக்தியைக் கையாண்டு  

                எதிரியை செயலிழக்கச் செய்! – புத்தக அறிமுகம் 59

                இது தான் இந்தியா!

18-9-2022  11274       மற்றவரை உனக்காக வேலை செய்ய விடு! புகழை  

               உனக்கு வரச் செய்! – புத்தக அறிமுகம் 60 –

               பொன்னொளிர் பாரதம்

19-9-2022 11276   அறிவியல் அறிஞர் வாழ்வில் – 8 – புத்தக அறிமுகம்  61

               தனிப்பாடல்களில் தமிழின்பம்

20-9-2022 11279   அறிவியல் அறிஞர் வாழ்வில் – 9  புத்தக அறிமுகம் 62

                சம்ஸ்கிருத இலக்கியத்தில் சில புதிர்க் கவிதைகளும்

                அறிவுரைகளும்

21-9-2022   11283       அறிவியல் அறிஞர் வாழ்வில் – 10 – புத்தக அறிமுகம் 63

                                        – வெற்றிக் கலை

22-9-2022   11286       செயலில் இறங்கும்போது துணிவுடன் இறங்கு –   புத்தக

                அறிமுகம் 64 சிறுவர் புராணக் கதைகள்

23-9-2022 11288        காளிம்பன் வாழ்ந்த தொண்டை மண்டலம் –

               தொண்டைமண்டல சதகம் பாடல் 28 புத்தக அறிமுகம்

               65 விந்தை மனிதர்கள்

24-9-2022 11290       சக்தி பெற 48 விதிகள் ராபர்ட் க்ரீன் நூல் ஒரு

               அறிமுகம் – 1 புத்தக அறிமுகம் 66 அதிரடி மன்னன்

                ஜாக்கிசான்

25-9-2022 11293        சக்தி பெற 48 விதிகள் ராபர்ட் க்ரீன் நூல் ஒரு

               அறிமுகம் – 2  புத்தக அறிமுகம் 67 உலகின் அதிசய

               இடங்கள்

26-9-2022 11296   சரணாகதி உத்தியைக் கையாள் : பலவீனத்தைச்

               சக்தியாக மாற்று! 22வது விதி! – புத்தக அறிமுகம் 68 –   

               நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

27-9-2022 11299         கென்னடி – மிட்சுபிஷி – செர்னோபில் – பிரமிக்க

               வைக்கும் கர்ம பலன் சம்பவங்கள் மூன்று! புத்தக

               அறிமுகம் 69 :  ஆங்கிலம் அறிவோமா?

28-9-2022 11302        கடவுளைக் காட்டு – 1  –   புத்தக அறிமுகம் 70 : பிரமிட்

               மர்மங்களும் அதீத புலனாற்றல் அதிசயங்களும்! 

29-9-2022 11305        கடவுளைக் காட்டு – 2  – புத்தக அறிமுகம் 71 : 

               விஞ்ஞானத்தை வியக்க வைக்கும் மெய்ஞானம்!

30-9-2022 11309          கடவுளைக் காட்டு என்போருக்கு பதில் கேள்வி! –   புத்தக

               அறிமுகம் 72 :  நாக நங்கை             

***

புத்தக அறிமுகம் – 75

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 1) 

நூலில் உள்ள அத்தியாயங்கள்

 01) நீர் ஆதாரம் காப்போம்! 

02) மரங்கள் அளிக்கும் நன்மைகள்

03) காற்று மாசு படக் காரணங்கள்

04) மரங்களின் பெருமை

05) மாசுக்கான காரணங்கள்

06) பூங்காக்களின் சேவை

07) ஓஸோனில் துளை

08) பேராழி அலைகளிலிருந்து காத்த மரங்கள்                             

09) நமது கடமை-நம்மால் என்ன செய்ய முடியும்? – 1                          

10) நமது கடமை-நம்மால் என்ன செய்ய முடியும்? – 2

11) சுற்றுப்புறச்சூழல் மேம்பாட்டினில் நிறுவனங்களின் பங்கு                      

12) வீடுகளில் சுற்றுப்புறச்சூழ்நிலை மேம்பாடு               

13) காடு வளர்ப்போம், கடனை அடைப்போம்              

14) ஆபத்தில்லாத ரசாயனம்                             

15) சுற்றுப்புறச்சூழ்நிலை மேம்படுத்த உலக சுகாதார

   நிறுவனத்தின் முயற்சிகள்                             

16)  சுற்றுப்புறச்சூழ்நிலை மேம்பாட்டில் இந்திய நிலை         

17)  சுற்றுப்புறச்சூழ்நிலை மேம்படுத்த பிரச்சார வழிகள்        

18)  சின்னச் சின்ன செயல்கள்                             

19)  காட்டுச் செல்வம்                                

20)  வீடுகளில்ன் மாசு அகற்றுவோம்!                     

21)  மஹாத்மா காந்தியும் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பும்      

22) அனைத்து உயிரினங்களும் தாவர வகைகளும்

   வாழட்டும்                                         

23)  சுற்றுப்புறச்சூழல் மாடு படும் வகைகள்                 

24) தோரோவும் இயற்கைப் பாதுகாப்பும்                    

25) டாக்ஸிக் (நச்சூட்டும்) மாசுகள்                        

26) மரம் நடுவோம்; நம்பிக்கை விதை விதைப்போம்!          

27) மறு சுழற்சிப் பொருள்கள்                            

28) புவி வெப்பமாவதைத் தடுப்போம்!                    

29) சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்ச்சி

   பெறுவோம்                                       

30) சுற்றுப்புறம் காக்க சிறிய செயலையேனும் செய்வோம்!    

31) புவி வெப்பமாகும் ஏற்படும் அபாயத்தால் ஏற்படும்

   விளைவுகள்                                       

32) மரங்கள் செய்யும் நன்மை!                           

33) புவி வெப்பமாதலால் ஏற்படும் அபாயங்கள்             

34) புவி வெப்பமாதலால் புராதனச் சின்னங்கள் பாதிப்பு      

35) பேப்பரின் உபயோகத்தைக் குறைப்போம்               

36) கூரைத் தோட்டங்களை அமைப்போம்                 

37) நச்சுவாயுவே நாசத்திற்குக் காரணம்                    

38) ஆர்க்டிக் பனி மறையும் அபாயம்                    

39) நீர் பற்றிய சில உண்மைகள்                         

40) பவளப்பாறைகளைக் காப்போம்                       

*

இந்த நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-

சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. எனவே இது பற்றிய விழிப்புணர்வைக் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் ஏற்படுத்துவது இன்றைய தலையாய கடமை! பல்வேறு தலைப்புகளில் சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளை முன்வைக்கிறது இந்த நூல். ஒவ்வொருவரும் படித்துப் பின்பற்ற வேண்டிய அரிய தகவல்கள் நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இவை சென்னை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பானவை என்பது குறிப்பிடத்தக்கது. புவி வெப்பமயமாதல், மரங்கள் அளிக்கும் நன்மைகள், டாக்சிக் மாசுகள், வீடுகளில் சுற்றுப்புறச் சூழல் மேம்பாடு போன்ற நம் உயிர்ப் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் அடங்கிய இந்த நூலை ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது இன்றியமையாதது!

* 

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் – 1 நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

** 

HINDU PURANIC SCENES IN SANGAM TAMIL LITERATURE -1 (Post No.11,317)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,317

Date uploaded in London – 2 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

Two thousand year old Sangam Tamil books have  lot of references to anecdotes and stories from the Hindu Mythology (Purana). It is amazing to see that Tamils were well versed in Hindu mythology in those remote days. We see scenes from the Bhagavata Purana, Skanda Purana and Siva Purana.

Lord Krishna’s pranks with Gopi girls, Siva drinking poison to save the goody goody Devas and baddy baddy Asuras, Siva’s burning of the three Space Stations (Hanging Forts of Iron, Silver and Gold in the sky), Skanda’s birth in the Saravana Lake and raising by six Kartika women, Lord Krishna’s bull fighting and Dancing on the Snake Kaaliya etc etc.

There are 18 books running to approximately 30,000 lines in Sangam Tamil Corpus. Of the 18 books Kalittokai, Paripatal (paripaatal) and Tirumurukatruppatai (tirumurukaatruppatai) have more references to Puranas and Itihasas. If anyone tries to remove either the Sanskrit words or the references to Hindu Gods from them , Tamil literature would look like virus affected software or books damaged by white ants. But ancient Tamils considered both Tamil and Sanskrit as two eyes. And ancient Tamils were predominantly Hindus. Not even the great Buddha and Mahavira are referred to in the Sangam books.

 I will list some anecdotes:-

We know that the figure of Gaja Lakshmi, i.e Lakshmi, Hindu Goddess of Wealth, flanked by two elephants pouring water, is available from Denmark (Gundestrup Cauldron)  to the southernmost end of Sri Lanka. All the old houses, in particular houses of Nattukkkottai Chettiyar community in Tamil Nadu , have Gaja Lakshmi on the doors or at the entrance.

Brahmin Poet Kabilar, who contributed the highest number of Tamil verses in Sangam books, saw a beautiful scene in the hills and at once he compared it to Gaja Lakshmi.

He saw a blossomed Venkai tree at a place of height where two hills meet and two streams fall down. It looked like Goddess Lakshmi seated on a very beautiful red lotus flower while two elephants pour water from their trunks one on each side of the goddess (See Kalittokai verse 44 by Kabilar).

Xxx

Another Brahmin poet by name Nakkirar (nakkeerar) saw a beautiful scene in the sky. Bird were migrating from south to the north. Those who study ornithology or amateur ornithologists would have noticed that birds fly in V shape to make the flight easier. They follow the rules of aerodynamics. Stronger bird in the forefront will fly against the wind and the weaker birds will ill follow them using less energy. Immediately the poet described it as a pearl necklace on the neck of Lord Murugan (Skanda/ Kartikeya).

 It is in Akanauru verse 120. Nakkirar was the poet who sang a full length poem on Lord Skanda/ Murugan. The poem is known as Tiru murukaatruppatai. Actually he imitated Kalidasa who lived in the second century BCE or slightly later.

Xxx

Let us look at a third scene.

Venkai in Tamil has two different meanings: Tiger and a a particular tree. Since it has got yellow flowers it looked like tiger, particularly when it sheds its flowrers on a rockunder the tree. So all Tamil poets punned on this word Venkai. The most celebrated poet Kabilar sings in Kalittokai (38):

An elephant in rut mistakes a Venkai tree fully in blossom to a tiger and in great anger it gores into its trunk with its tusks but the poor animal was unable to take off its tusks from it like Ravana who attempted to lift up the Kailas mountain with his arms but shrieked and suffered, when caught under pressure.

Ravana lifting Mount Kailash while Uma and Siva are there is portrayed in many places like Halabidu and Ellora. 1400 years ago, Gnana Sambandar, the miracle boy of Tamil devotional poems, sung about this episode in all his Tevaram decads.

The above incidents are from the Puranas.

To be continued………………………

 Tags- Sangam Literature, Puranic episodes, Ravana, Gaja Lakshmi, Venkai, Pearl necklace

Q & A கந்தர்வர் பெயர் வைக்கலாமா?(Post No.11,316)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,316

Date uploaded in London – 2 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

 வணக்கம் ஐயா.

எனது பெயர் செ . மோ.  நான் தமிழ்நாடு –  கோ………….தில் வசித்து வருகிறேன். எனக்கு சமீபத்தில் இரண்டாவது மகன் பிறந்திருக்கிறான். அவனது பிறந்த நட்சத்திரம் சதயம்.

அவனுக்கு பெயர் வைப்பது தொடர்பாக தேடிய பொழுது, வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று ‘சித்திரதன்’ எனும் பெயர் குறித்து தேடினேன். 

1. சித்திரதன் ஒரு கந்தர்வர்;  

2. சனீஸ்வர பகவானுடைய மாமனார்;

3. ‘கந்தர்வர்களில் நான் சித்திரதன்’ என்று பகவத் கீதையில் விஷ்ணு கூறியது 

ஆகிய மூன்று தகவல்கள் மட்டுமே கிடைத்தன.

தங்களுடைய வலைப்பக்கத்தில் சித்திரதன் பற்றி இருந்ததால் உங்களிடம் எனது கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று நம்பிக்கையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன். சித்திரதன் என்பவர் யார்?

அவரது பெயரின் அர்த்தம் என்ன? 

குழந்தைக்கு இந்தப் பெயரை வைக்கலாமா?

பகவான் விஷ்ணு பகவத் கீதையில் கந்தர்வர்களில் நான் சித்திரதன் என்று கூறி இருப்பதால் சித்ரதன் என்பவர் ஒரு மகத்தானவராகத்தான் இருந்திருக்க வேண்டும். அவர் எந்த வகையில் மகத்தானவர்.

தங்களது மிகுந்த பணிச்சுமைக் கிடையில் எனக்காக உங்களது நேரத்தை கோருவதற்கு மன்னிக்கவும். தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பதில் எழுதவும். மிக்க நன்றி ஐயா.

இப்படிக்கு,

செ……………………….ன்.

MY ANSWER

NAME IS OKAY.

PLEASE USE CORRECT SPELLING.

சித்ரரதன் யார்?

மஹாபாரதத்தில் சித்ரரதன் பற்றி இரண்டு விஷயங்கள் வருகின்றன. இவன் கந்தர்வ இனத் தலைவன். இவன் தலைமையில் இருந்த படைகள் கௌரவர் படையைத் தாக்கவே கர்ணன் போன்ற பெருந் தலைவர்கள் உயிருக்குப் பயந்து ஓடி விட்டனர். துரியோதனனை கந்தர்வர்கள் கைது செய்தனர். அர்ஜுனன் போய் சமாதானம் பேசி மீட்டு வந்தான். ஏனெனில் சித்ரரதன் அர்ஜுனனின் நண்பன்.

கந்தர்வர்கள், ஒரு குறிப்பிட்டவகை போர்ப் பயிற்சியில் வல்லவர்கள். இசைக் கலையிலும் மன்னர்கள். அவர்களுடைய மனைவியரான அப்சரஸ் என்னும் அழகிகள் நாட்டியக் கலையில் வல்லவர்கள் ஆகவே இந்தியாவில் இசை-நடனக் கலைக்குப் பெயர் கந்தர்வ வேதம். இது ஆய கலைகள் 64-இல் ஒன்று. சிந்து சமவெளியில் கிடைத்த நாட்டியப் பெண்ணின் சிலை, கந்தர்வர் தொடர்பை உறுதி செய்கிறது.

இப்போது ஒரு சந்தேகம் எழும். தேவ லோக கந்தர்வர்களுக்கும் பூலோக கந்தர்வர்களுக்கும் என்ன தொடர்பு? இதற்கு விடை என்னவென்றால் கந்தர்வர் என்னும் சொல்லும் கின்னரர் என்ற சொல்லும் பூவுலகில் வேறு பொருள் உடைத்து. இந்தியாவில் உள்ள எல்லா ஜாதிகளும், தாங்கள் கடவுள் அல்லது தேவர்களிடம் தோன்றியதாகக் கூறும். அதாவது தேவலோகம் வேறு, அவர்களுடன் தங்களை அடையாளம் காண விழையும் பூலோக வாசிகள் வேறு. இதனைப் புரிந்து கொண்டு இரு மட்டங்களில் – இரு வேறு தளங்களில் இந்தச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைத் தெளிதல் வேண்டும். தமிழ் மன்னர்கள் கூட சூரியகுலம், சந்திர குலம் என்று சொல்லி தங்களை தேவலோகத்துடன் தொடர்பு படுத்துகின்றனர்.

Xxxxxx

From one of my  Posts:-

But in the Bhagavad Gita Krishna mentions Chitraratha whom we know.

Chitraratha tried to stop Pandavas on their way to Punjab, but Arjuna defeated him and later released him at the request of his wife Kumbhinasi. Chitraratha thanked him by teaching him the art of Gandharva style of warfare and gave him divine horses. This is in the Adiparva of Mahabharata. Another chief of Gandharvas, Chitrasena taught Arjuna music in the heaven where he stayed for sometime before the great war. Later it helped him to become a music teacher during the 13th year of his stay (incognito) in the forest. This is in the third section of the epic. The same section adds one more bit of information about the fight between the armies of Kauravas and the Gandharvas. Duryodhana was captured alive and Karna ran for his life. Arjuna came and released Duryodhana through his good offices with his old friend Chitraratha.

கந்தர்வர் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › க…

WRITTEN BY LONDON SWAMINATHAN. Post No. 10,636. Date uploaded in London – – 6 FEBRUARY 2022. Contact – swami_48@yahoo.com. Pictures are taken from various …

You’ve visited this page 3 times. Last visit: 31/08/22


கந்தர்வ கானம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › க…

·Translate this page

14 Feb 2013 — உலகத்தை முதலில் வலம் வந்தவர் யார்? கந்தனா? யூரி ககாரினா?

Swami
020 8904 2879
07951 370 697

Blog: swamiindology.blogspot.com

  tags- கந்தர்வர் பெயர், சித்ரரதன்

ஒரு நல்ல மருத்துவ நூல் அறிமுகம் (Post No.11,315)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,315

Date uploaded in London – 2 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

நூல்களை சேகரித்து, தேவையானவர்களுக்கு அவற்றை விநியோகிக்கும் ஒரு நல்ல வழக்கத்தைக் கொண்டவர் லண்டன் பத்மநாப ஐயர் . இலங்கைத் தமிழர் வட்டாரத்தில் இவர் பெயரை அறியாதவர்கள் குறைவு. வீட்டிற்குள் நுழையமுடியாத அளவுக்குப் புஸ்தகங்கள் இருக்கும் அவைகளை நீந்திக் கடந்தால் ஒரே ஒரு நாற்காலி மட்டும் இருக்கும். அவர் எழுந்திருந்து நின்றுகொண்டு நம்மை உட்காரச் சொல்லி (இலங்கை த் தமிழ் பாஷையில் நம்மை இருக்கச்சொல்லி ) இந்தப் புஸ்தகங்களைப் பாருங்கள் என்று அடுக்கு அடுக்காக நம் முன்னேவைப்பார் . இடையிலே தேநீரும்  கிடைக்கும் .

நான் எழுதிய 59 புஸ்தகங்களில் ஒரு பதினைந்து புஸ்தகங்களை அவருக்கு கொடுக்கச் சென்றபோது வழக்கம்போல புஸ்தகங்களை என் முன்னே அடுக்கினார். அவைகளில் நான் எடுத்த ஒரு நல்ல மருத்துவ புஸ்தகம் பற்றிய மதிப்புரை இதோ:-

நூலின் பெயர் தமிழர் மருத்துவம்

ஒரு வரலாற்றுப் பார்வை

ஆசிரியர் -முனைவர் பால .சிவ கடாட்சம்

முதல் பதிப்பு – டிசம்பர் 2021

பக்கங்கள் 224

விலை 250 ரூபாய்

வெளியீட்டாளர் – பட்டினம்

SALES OFFICE

AAZHI PUBLISHERS,

5, K K SALAI, KAVERI RANGAN NAGAR,

SALIGRAMAM , CHENNAI 600 093

aazhipublishers@gmail.com

கனடாவிலுள்ள டொரண்டோ நகரிலிருந்து அவர் எழுதிய புஸ்தக முன்னுரையில் பணிவோடு சொல்கிறார் —

“தமிழ் மக்களின் மருத்துவப் பாரம்பரியம் பற்றிய வரலாற்றை எழுதுவதற்குத் தகுதியான பலர் இருத்தல் கூடும் . எனினும் அவர்கள் இத்துறையில் பெரிதும் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை மருத்துவம், தமிழ், வரலாறு ஆகிய பல துறைகளில் பரிச்சயம் உடைய வர்கள் மட்டுமே இது தொடர்பான முயற்ச்சியில் இறங்க முடியும் . இத்துறைகளில் எனக்குள்ள ஆர்வம் மட்டுமே எனது இம்முயற்சிக்கு உந்து கோலாய் இருந்தது .கடந்த 40 வருடங்களாக எனது தேடுதலில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இச்சிறிய நூலை எழுதியுள்ளேன் இது தமிழர் மருத்துவத்தின் முழுமையானதோர் வரலாற்று நூலாக இல்லாவிடினும் வருங்கலத்தில் இது தொடர்பான விரிவான நூல்களுக்கு இந்நூல் அனுசரணையாக இருக்கும் என்பது என து நம்பிக்கையாகும்” 

முன்னுரையில் கிடைக்கும் இன்னும் ஒரு தகவல்- கனடாவில் இருந்து வெளிவரும் தாய்வீடு என்னும் பத்திரிக்கையில் 2016 முதல் 2018 வரையான கட்டுரைகள் அடங்கியது இந்நூல்.

யாழ்ப்பாண பல்கலைக் கழக தகைசார் வாழ்நாட் பேராசிரியர் முதுமுனைவர் அ . சண்முகதாஸ் அணிந்துரையில் இந்த நூலின் சிறப்பு அம்சங்களை எடுத்துக் காட்டியுள்ளார்.

xxx

என் கருத்துக்கள்

தமிழர்களுக்கு உயர்வு நவிற்சி அணியில் ஆர்வம் அதிகம். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி நாங்கள் என்று எல்லாவற்றையும் சூப்பர்லேட்டிவ் டிகிரியில்(Superlative Degree) எழுதுவார்கள் . அப்படி யில்லாமல் நிதானமாக உள்ளது உள்ளபடி எழுதியுள்ளார் ஆசிரியர்.

அஸ்வினி தேவர்கள் செயற்கை கால் பொருத்திய செய்தி,  ருக்கு வேதத்திலேயே இடம்பெறுவதைக் குறிப்பிட்டு, அதர்வண வேதத்தின் உப வேதமாகக் கருதப்படுவது ஆயுர்வேதம் என்று கூறி இந்திய மருத்துவத்தின் துவக்கத்தை முதல் அத்தியாயத்தில் காட்டுகிறார்.

முன்னர் ஒரு காலத்தில் ஒரு லட்சம் சுலோகங்களுடன் இருந்த ஆயுர்வேத நூல் பின்னர் 10,000 சுலோகங்களைக் கொண்ட எட்டுப் பாடங்களாக தொகுக்கப்பட்டது . இதனை ஈழத்தில் எழுந்த ஆயுள்வேத பரராசசேகரம் பின்வருமாறு கூறுகிறது

உன்னரும் கிரந்தம் எட்டிலக்கம் உள்ளதாம்

அன்ன நூல் முழுவது,ம் அறிந்து கற்றிட

உன்னருங் கலியுகத்து உணர்வின்றாதலிற்

பின்னதிற் சுருக்கமாய்ப் பிரித்துக்காட்டினான்

— பரராசசேகரம் , முதலாம் பாகம், பாடல் எண்  18

எட்டு பாடங்கள்

1.காயசிகிச்சா தந்திரம் (பொது மருத்துவம்) General Medicine

2.கெளமாரப்ரிய தந்திரம்  (குழந்தை மருத்துவம் ) Paediatrics

3.பூதவிதிய தந்திரம் (மனநலக் கோளாறு மற்றும் தொற்றுவியாதி மருத்துவம் ) -the disease caused by evil spirits (psychiatry and infectious diseases

4.அ கத தந்திரம் (நஞ்சுமுறிப்பு) மருத்துவம் Toxicology

5.இரசாயன தந்திரம்( ஆயுள் நீட்டிப்பு மற்றும் உடல்வலு மேம்பாட்டு மருத்துவம் ) promoting longevity and stregth

6.வஜீகரண தந்திரம் (மலட்டுத் தன்மை மற்றும் ஆண்மைக்குறைவு மருத்துவம் ) sterility and aphrodisiacs

7.சலாக்கிய தந்திரம் (கண் மற்றும் தொண்டை , மூக்கு, காது நோய் மருத்துவம் )  Ophthalmology and the diseases of ear, nose and throat

8.சல்லிய தந்திரம் (அறுவை மருத்துவம் ) surgery

பின்னர் சரகர், தன்வந்திரி ஆத்ரேய புனர்வசு பற்றிய, நாம் அறியாத பல புதிய செய்திகளைத் தருகிறார் நூலாசிரியர்

நான் தினசரி சொல்லும் தன்வந்திரி மந்திரத்தையும் ஆசிரியர் முதல் அத்தியாயத்திலேயே கொடுத்திருப்பது என்னைக்கவர்ந்து இழுத்தது – (புஸ்தகத்தை நோக்கி.)

இது அனைவரும் சொல்ல வேண்டிய மந்திரம். இதைச் சொன்னால் நோய்கள் வாரா ; வந்த நோய்களும் அகலும்

ஓம் நமோ பகவதே  வாசுதேவாய

தன்வந்த்ரயே  அம்ருத கலச ஹஸ்தாய

சர்வ ஆமய விநாசாய

த்ரை லோக்ய நாதாய

மஹா விஷ்ணவே நமஹ

பொருள்

எல்லோர்க்கும் வரம் தருபவரும் வாசுதேவராக இருப்பவரும், அமிர்த கலசத்தைக் கையில் ஏந்தியிருப்பவரும் , சகல வித நோய்களைத் தீர்க்க மூவுலகத்தைக் காண்பவரும், மகாவிஷ்ணுவாக அவதரித்திருப்பவரும் ஆகிய தன்வந்திரிக் கடவுளே உன்னை வணங்குகிறேன்.

ஒவ்வொரு அத்தியாய இறுதியிலும் அவர் எடுத்தாண்ட நூல்களின் பெயர்களையும் சேர்த்துள்ளார். நூலாசிரியர் . 40 ஆண்டுக்காலத்தில் சேர்த்த தகவல்கள்  என்பதற்கு இது சான்று பகரும்.

மதிப்புரையை முடிப்பதற்கு முன்னர் 20 அத்தியாயங்களில் என்ன இருக்கிறது என்பதைச் சொல்லி விடுகிறேன் :-

1. இந்திய துணைக்கண்டத்தில் தோன்றி வளர்ந்த மருத்துவக் கலை

2.ஆயுள்வேத மருத்துவத்தின் வளர்ச்சியில் பெளத்தத்தர்களின் பங்கு

3.சங்க கால தமிழகத்தில் மருத்துவக் கலை

4.பழந்தமிழ் இலக்கியத்தில் அறுவைச் சிகிச்சை பற்றிய குறிப்புகள்

5.வள்ளுவர் காலத்து மருத்துவ மரபு

6.ஆயுள்வேத மருத்துவப் பெயர்களில் அறநூல்கள்

7.ஆயுள்வேத மருத்துவத் துறையில் சம்ஸ்கிருத மொழி ஆதிக்கம்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் இயங்கிய ஒரு

ஆயுள்வேத ஆஸ்பத்திரி

8.ஆயுள்வேத மருத்துவத்தின் வளர்ச்சியில் தென்னிந்தியரின் பங்களிப்பு

9.தீதிலா வாகடம் செந்தமிழ் செய்திட

10. தமிழ் மக்களின் பாரம்பரிய மருத்துவம்

11.நோய்களைத் தோற்றுவிக்கும் காரணிகள்

12. நோய்களும் அவற்றின் குறிகுணங்களும்

13.இரசாயன தந்திரமும் இரச சாஸ்திரமும்

14. சித்தர்களின் சீனத் தொடர்பு

15.திருமூலரின் இரச சித்த பாரம்பரியம்

16. சித்த மருத்துவத்தின் தோற்றமும் அடையாளமும்

17. போகர் ஏழாயிரம்

18. வித்தியாசமான சித்தர்கள் சிலர்

19.பிற நாட்டவர்கள் பார்வையில் சித்தர்கள்

20.ஆயுள்வேதமும் சித்த மருத்துவமும்

ஒரு கலைக் களஞ்சியம் அளவுக்குத் தகவல் தரும் இந்த நூல், மருத்துவத்தில் – குறிப்பாக மருத்துவ வரலாற்றில் – ஆர்வம்கொண்ட  அனைவரிடமும் இருக்க வேண்டிய நூல் ஆகும் 

-சுபம்–

 tags- ஆயுள்வேதம் , சித்த மருத்துவம், தமிழர் மருத்துவம், தன்வந்திரி, மருத்துவ நூல்

மஹாத்மாவின் இறுதி நாள் : ஜனவரி 30, 1948! (Pot No.11,314)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,314

Date uploaded in London – –    2 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 அக்டோபர் 2. காந்தி ஜெயந்தி!

மஹாத்மாவிற்கு அஞ்சலி!

மஹாத்மாவின் இறுதி நாள் : ஜனவரி 30, 1948!

ச. நாகராஜன்

ஜனவரி 30, 1948. வெள்ளிக்கிழமை.

வழக்கம் போல அதிகாலை மூன்று முப்பது மணிக்கு காந்திஜி விழித்தெழுந்தார். வேப்பங்குச்சியால் பல் துலக்கினார்.

தனது அறையில் தனது பணியைத் துவக்கினார். காங்கிரஸுக்கு ஒரு புதிய சட்டத்தை வகுக்க ஆரம்பித்தார். அது தான் அவரது தேசத்திற்கான கடைசி உயில்.

மணி 4.45 வெந்நீரில் எலுமிச்சை சாறை தேனுடன் கலந்து அருந்தினார்.

அரை மணி நேர நடைப் பயிற்சி! தனது கடிதத் தொடர்பு ஃபைலைப் பார்க்க ஆரம்பித்தார்.

அன்று கிராம்பு பொடி தீர்ந்து விட்டது. ஆகவே அதை மனு தயாரிக்க ஆரம்பித்தார். “நான் சீக்கிரமே இதை முடித்து விட்டு காலை நடைப் பயிற்சியில் கலந்து கொள்கிறேன். இது இரவில் தேவைப்படும் போது இல்லாமல் போய் விடும்” என்றார் அவர். காந்திஜி உடனே, “இரவுக்குள் என்ன நடக்கப் போகிறது என்பது யாருக்குத் தெரியும்? நான் உயிரோடு இருப்பேனோ இல்லையோ! நான் இரவு உயிரோடிருந்தால் அப்போது சுலபமாக இன்னும் கொஞ்சம் தயார் செய்து விடலாம்!” என்றார்.

காலை 7 மணி. ரஜன் நேரு என்ற பெண்மணி அமெரிக்கா செல்லவிருந்தார். அவருடன் பேசினார் காந்திஜி.

காலை 8 மணி. வழக்கம் போல மசாஜுக்கு ரெடியானார். பியாரிலாலிடம் காங்கிரஸ் புதிய சட்டத்தைப் பார்த்து ஏதேனும் சேர்க்கத் தேவை என்றால் அதைச் சேர்க்கச் சொன்னார்.

பிறகு குளியல். மனு காந்திஜியின் எடையை எடுத்தார். 109 ½ பவுண்டுகள். உண்ணாவிரதம் இருந்தால் அவர் இழந்த எடை இப்போது சீராகிக் கொண்டிருந்தது.

மணி 9.30 காலை உணவு. பின்னர் வங்காள மொழி பயிற்சி. அதில், “பைரபின் வீடு நைஹாதியில் இருக்கிறது. ஷைலா அவரது மூத்த மகள். இன்று ஷைலாவிற்கு கைலாஷுடன் கல்யாணம்” என்று எழுதினார்.

12 அவுன்ஸ் ஆட்டுப் பால். சற்று சமைக்கப்பட்ட கறிகாய். ஆரஞ்சு, 4 தக்காளி, காரட் ஜூஸ். இஞ்சி ரஸம். எலுமிச்சை. உணவு முடிந்தது.

பியாரிலால் காங்கிரஸ் சட்டத்தை அவரிடம் காண்பிக்க அவர் அதில் சில திருத்தங்களைச் செய்யலானார்.

மதியத்தில் சிறிய தூக்கம். சில முஸ்லீம் முல்லாக்கள் டில்லியிலிருந்து அவரைப் பார்க்க வந்தனர். வார்தாவுக்கு அவர் செல்லலாம் என்று அவர்கள் கூறவே, காந்திஜி, “கொஞ்ச நாள் தான் அங்கு இருக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு “கடவுள் வேறு மாதிரியாக நினைத்தாலோ அல்லது வேறு ஏதேனும் நிகழ்ந்தாலோ அன்றி” என்பதைச் சேர்த்துக் கூறினார்.

பின்னர் பிஷனைப் பார்த்து முக்கிய கடிதங்களைக் கொண்டு வரச் சொன்னார். “இன்றே நான் பதில் எழுத வேண்டும். நாளை இருப்பேனோ, மாட்டேனோ” என்று கூறினார்.

அவரது உதவியாளர் மஹாதேவ் தேசாயின் வாழ்க்கைச் சரிதம் எழுதப்பட வேண்டி இருந்தது. ஆனால் நிதி பற்றி சிக்கல். அதில் தனது ஏமாற்றத்தைக் காட்டினார் அவர். அதை யார் எழுதலாம் என்பதைப் பற்றிப் பேசினார்.

ஜவஹர்லால் நேருவிற்கும் சர்தார் வல்லப பாய் படேலுக்கும் இடையே சற்று மனக் கசப்பு ஏற்பட்டிருந்தது. ஆகவே அதை மதியம் படேலுடனும் ப்ரேயர் கூட்டம் முடிந்தவுடன் நேருவுடனும் பேச அவர் திட்டமிட்டிருந்தார்.

சிந்தி குழு ஒன்று அவரைச் சந்தித்தது.

மணி 2.15  இரு பஞ்சாபிகள் அவரைச் சந்திதனர். இரு சிந்திகள், சிலோனிலிருந்து ஒரு பிரதிநிதி. சிலோனிலிருந்து வந்தவரது மகள் காந்திஜியிடம் ஆடோகிராப் கேட்க அவர் கையெழுத்திட்டார். அது தான் அவர் இட்ட கடைசி கையெழுத்து!

3 மணி. ஒரு பேராசிரியர் அவரைச் சந்தித்தார். அவரது உபதேசம் புத்தருடையது போலவே இருக்கிரது என்றார்.

3.15. பிரான்ஸை சேர்ந்த போட்டோகிராபரான ஹென்றி கார்டியர் ப்ரெஸன் தனது போட்டோ ஆல்பத்தை காந்திஜியிடம் அளித்தார்.

4 மணிக்கு சர்தார் படேலுடனான சந்திப்பு. அவர் மனிபென் மற்றும் தனது மகளுடன் வந்தார்.

4.30.காந்திஜி தனது கடைசி உணவை எடுத்துக் கொண்டார்.

சில பார்வையாளர்கள் அவரைப் பார்க்க விருப்பப்பட்டனர். படேலின் முன்னிலையில் காந்திஜி, “ப்ரேயர் முடிந்தவுடன் நான் பார்க்கிறேன். அதுவும் நான் உயிரோடு இருந்தால்” என்றார்.

தனது சர்க்காவைக் கேட்டார். அதை ஆசையோடு (கடைசிமுறையாக) பார்த்தார்.

மணி 5. தனது சப்பலை மாட்டிக் கொண்டார். “நான் 10 நிமிடம் லேட்” என்றவர் மனுவை வலது பக்கமும் ஆபாவை இடது பக்கமும் அணைத்துக் கொண்டு குறுகலான குறுக்கு வழியில் நடக்கலானார்.

200 கஜ தூரம் நடக்க வேண்டும் – ப்ரேயர் மேடைக்கு.

20 போலீஸ்காரர்கள் சாதாரண உடையில் காவல் காக்க இருந்தனர்.

கூட்டம் கூடி இருந்தது.

கோட்ஸே எதிரில் வந்தான். அவன் தனது திட்டத்தை திடீரென்று (நேருக்கு நேராகச் சுடுவது என்று) மாற்றிக் கொண்டான் போலும். மஹாத்மா வழக்கம் போல இரு கரம் கூப்பி கும்பிட்டவாறே செல்ல எதிரில் வந்த அவன் இரு கரமும் குவித்துக் கும்பிட்டான். நமஸ்தே காந்திஜி என்றான். காந்திஜியும் கரத்தைக் குவித்தார்.

மனு அவன் எங்கே காந்திஜியின் காலில் விழுந்து கும்பிடப்பார்க்கிறானோ என்று நினத்தவர், “பையா! (சகோதரர் என்று அர்த்தம்) பாபுஜி ஏற்கனவே கொஞ்சம் லேட். ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்” என்றார்.

மனுவை ஒரு புறமாகத் தள்ளிய கோட்ஸே மறைத்து வைத்திருந்த தனது இத்தாலிய பிஸ்டலை எடுத்தான். சுட்டான்.

5.17.

காந்திஜி மார்பில் குண்டுகளை ஏந்தினார். ஹே ராம், ஹே ராம் என்றார்.

ஒரு வினாடி நின்றவர் அப்படியே விழுந்தார்.

கூட்டம் ஸ்தம்பித்தது.

ஒரே குழப்பம். மஹாத்மா சில விநாடிகளில் அமரர் ஆனார்.

மருத்துவர்கள் வந்து அவரது நாடியைப் பார்த்தனர்.

அவர் அமரர் ஆனதை உறுதிப் படுத்தினர்.

தேசமே சோகக் குரலில் அழுதது!

அவரது மெசேஸ் என்ன?

MY LIFE IS MY MESSAGE என்றார் அவர்.

அவரது வாழ்க்கையை – சத்திய சோதனையை – ஆழ்ந்து படிப்போம், கவனிப்போம், உணர்வோம்.

அப்போது தான் அவரது செய்தி என்ன என்பதை உணர முடியும்!

இந்த வையத்து நாட்டில் எல்லாம் விடுதலை தவறிக் கெட்டு, பாழ்பட்டு நின்ற பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த மகான் காந்திஜி!

வாழ்க நீ எம்மான்! நீவீர் காட்டிய வழி நடப்போம்.

உன்னத பாரதத்தைப் படைப்போம்!

உங்களுக்கு எமது சிரம் தாழ்ந்த உளமார்ந்த அஞ்சலி!

***

புத்தக அறிமுகம் – 74

BREAKTHROUGH TO SUCCESS

                                    நூலில் உள்ள அத்தியாயங்கள்

                                          CONTENTS 
 
I SELF IMPROVEMENT 
1. Thoughts Determine Your Success 
2.Think Positively to Get Whatever You Want 
3.Power of Positive Thought Energy 
4.Auto Suggestion for Achievement 
5.Every Little Helps! 
6.Formula Thirteen for Success 
7.Success in your Pocket 
8. Success Techniques 
9.The One Word That Makes The Difference Between Success And Failure! 
10.In Praise of ‘If’ 
11.Power of Words-Use it to Make You or Mar You 
12. Serendipity And How Could You Make It Work For You                        13.Power of Pyramid – Use it For Your Success Part 1 
14.Power of Pyramid – Use it For Your Success – Part 2 
 
 
II Spiritual Growth 

15. The Mind Body Connection                                                                                             16. Fate and Free will 
17.Power Bead That Beats Failure and Gives Wealth, Health, Success.      18.Meditation: The Power that Lifts                                                                              19.The Benefits of Meditation                                                                                         20.Power of Prayer 
21.God Has Never Broken Any Promise Ever Spoken! 
22.Greatest Secret Of Life 
23.How to Make Your Aura Bright and Divine? 
24.Hypnosis Works! 
25.Intuitive power of Maharishi Aurobindo 
26.Intuition Through Yoga 
27.Yoga for Mind Development 
28.The Secret of Karma Yoga 
29.The Story of the Mind                                                                                                     30.Zen Way For Perfect Peace and Harmony 
 
III CREATIVITY AND INTELLIGENCE 
31. Can IQ be Increased? 
32.Dreams and Creativity 
33.How to Unlock Your Creativity? 
34.What is Memory and How You Can Increase Your Memory Power – Part I 
35.What is Memory and How You Can Increase Your Memory Power – Part II

36. The wonderful and complicated organ called Brain
 
!V. Success tools 
37. Power of Mantras 
38.Power of Gayatri Mantra to Achieve All Round Success 
39.The Power of Gayatri Mantra – Part II – Power of Each Syllable 
40.The Power of Sound                                                                                                        41.Power of Music 
42.Thousand names of God – The secrets of  Vishnu Sahasranama Part I 
43.Thousand names of God – The secrets of  Vishnu Sahasranama Part II 
44.Get Feng Shui – Vastu Combined Benefits! 

 
V Book Reviews 
45.Puranic Encyclopaedia by Vettam Mani 
46.Gayatri Rahasya By His Holiness Shri Prabhu Ashrit Swamiji 
47.Hinduism and Modernity by David Smith 
48.Master Your Memory by Tony Buzan; Book Review 
49.Thinking for Results 
 
vi.REFERENCE BOOKS

*

இந்த நூலுக்குத் தக்கதொரு முன்னுரையை பாரிஸ் வாழ் அறிஞரான பேராசிரியர் பெஞ்ஜமின் லீ பா அவர்கள் தந்து கௌரவித்துள்ளார்.

அதைக் கீழே காணலாம் :

FOREWORD  

You believe in positive thinking? Then this e-book will enhance your beliefs. You are a skeptic? This will convince you and convert you to positive thinking. Sure, positive thinking and optimism go hand  in hand ; deeds without (positive) thoughts are seeds without life – they do not grow to bear fruits. If we think that ‘positive thinking’ is a product of the 20th century (thanks to Dale Carnegie, James Allen and or Norman Vincent Peale…), then Mr.S.Nagarajan, the author of  ‘BREAKTHROUGH TO SUCCESS’ has aptly proved that it is an Indian product that existed  ever since thousands and thousands of years.   Saint Thiruvalluvar, the greatest Tamil poet and philosopher has allotted a chapter (Cf;fKilik) for the ‘positive thinking’. For example, in Thirukural N° 596 – Chapter 60: ‘Enthusiasm’) Saint Thiruvalluvar says, 

உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்று அது    தள்ளினும்

தள்ளாமை நீர்த்து

 (‘Let thoughts be always great and grand

Though they fail, their virtues stand’ – Translation: Yogi Suddhanantha Barathiar).

So, Mr.S.Nagarajan in the first chapter of his book ‘SELF IMPROVEMENT’, insists upon the importance of ‘positive thinking’ quoting Swami Vivekananda, James Allen and Buddha. The latter declared ‘We are what we think with our thoughts we make the world’. It is exactly the same kind of thinking that made René DESCARTES, the  famous French mathematician and father of modern philosophy,  declare ‘Cogito, ergo sum’. ( ‘Je pense, donc je suis’  French ; ‘ I think, therefore I am’ – English).

Having shown the importance of ‘positive thinking’ the ‘Breakthrough to Success’ proceeds to other related topics such as ‘Think Positively to Get Whatever You Want’, ‘Power of Positive Thought Energy’ and so on. All the fourteen chapters in this first chapter deal with ideas that help improve oneself. Here and there, the author gives great maxims in a single sentence with few and simple words. Just to quote a few:

‘…the mind can both create and cure disease’,

‘Noble thought will bring happiness’,

‘Every great journey starts with a small step’

(This can be compared to Shakespeare’s – Julius Ceasar Act I Sc III

‘Those that …make a mighty fire

begin it with weak straws’ )

Progressively Mr.S.Nagarajan develops the ways of achieving success and in chapter No. 9, he gives the one word that makes the difference between success and failure. And that word is nothing but the title – name of the 60th Chapter in Thirukural! Yes, that word is ‘enthusiasm’. That chapter ends with a quote from Emerson: “Nothing great was ever achieved without enthusiasm’. He closes the Part No. 10 with the following words: ‘Every fall is to rise again with some gain’ which reminds the famous quote from Confucius : ‘Our greatest glory is not in never fallingbut in rising every time we fall‘. In the 11th chapter, the author shows that…’correct words at the right moment’ will bring success! Here what Jonathan Swift said of a true style ‘Proper words in proper places make the true definition of style’ is true and applicable to success also!

The next chapter deals with spiritual growth. The author praises the virtues of ‘rudraksha’. Though many may not agree with him but all will concord with his point of view that meditation helps improve the health both mental and physical.  

The third chapter is allotted to creativity and intelligence. Here the 32nd chapter ‘Dreams and Creativity’ is interesting and instructive. To the incidents cited by the author can be added the discovery of the structure of benzene. The German scientist Friedrich August von Stradonitz, Kekulé,in 1866 tried hard but in vain to figure out the benzene structure. One night he dreamt of ‘Ouroboros’ – the serpents which bite their own tails – and solved the problem by proposing ‘hexogonal structure’. However, the scientific world had to wait Linus Pauling, the double laureate of the Nobel Prize, whose orbital hybrides theory explained in full and justified once for all, the hexagonal structure. In the light of this and other incidents cited, one has to agree with the author when he says that ‘Each and every one of us …is creative. We have to unlock the creativity hidden within ourselves’. To attain this we have to obtain self realization. This is achieved by meditation, yoga…The 34th chapter is dedicated to memory and the techniques to improve it.

The fourth chapter speaks about Success Tools – Mantras, Feng Shui and Vastu. Feng Shui and Vastu are exactly like astrology, numerology, palmistry…certain people have faith in them; others, discard them as spurious sciences or irrational. More over the informations the author gives are not at all convincing. The author exalts prayer and explains in detail its mystical power quoting from the Book of aphorisms by Narada Munivar, a well known but fictive character from the Puranas. Then he quotes Alexis Carrel, a real character, the famous French doctor and Nobel laureate: ‘Prayer generates miracles’ (The excat French version is  ‘La prière est la forme d’énergie la plus puissante que l’on puisse susciter’ i.e Prayer is the most powerful form of energy one can generate). Thus Mr. Nagarajan unites the two extremes by concluding that ‘Narada explains the ultime benefits of prayer. Dr Alexis Carrel explains the power of prayer’. Just to add more value he could have quoted the poem of Lord Alfred Tennyson: “More things are wrought by prayer than this world dreams of ‘  So, no doubt prayer is the most important one to develop one’s self improvement. But alas, the author gives neither the definition of prayer nor the mode of praying! He then passes on to other less important articles such as Aura, Hypnosis… which may or may not help improve one’s self-improvement.. However, no one can deny his ascertainment that “Yoga increases the creative capacity of man in all spheres and domains of life, gives him the possibility of direct penetration into the mysteries of nature, discloses to him the secret of eternity and the enigmas of existence.” Sure, prayer and yoga will certainly boost the morale and help the self improvement.

Another chapter talks about chanting the ‘mantras’ which are to be initiated properly by a genuine Guru. Who is genuine guru? How to find him? Such questions arise but nowhere in the book the answers peep! The author then goes on to explain the power of Gayatri mantra which’ is proclaimed in the Gita as a Universal Prayer, irrespective of a person’s caste, creed or sex. It is a prayer meant to protect every individual and when uttered with immense devotion and concentration will protect the person. However proper pronunciation is a must and the person is expected to be a strict vegetarian’ (http://en.wikipedia.org/wiki/Gayatri_Mantra). How many will be eligible to fulfill these conditions? How many recite this enchanting mantra twice a day during the ‘sandhya vandhanam’? Such questions arise regarding another mantra ‘Vishnu Sahasranama’ : this being a vaishnava mantra, no saivte will recite it. How then one could expect the faithfuls of other religions to recite these mantras?

In short, the book seems to be a cocktail of many individual articles previously published in ezines of the internet. The author certainly armed with patience collected quite a number of quotations & citations and skillfully used them to support his points of view.  In many places Mr. Nagarajan gives the gist of the articles in a sentence with simple words and that is his plus point.  On the other hand, as the proverb says ‘too many cooks spoil the broth’, so do his innumerous lists (Formula thirteen, Frank Bettger’s list, 5o virtues/skills, 5o or more catch words … and so on!). And this is his weak point. The author, perhaps a bibliophil merits applauses because he has imbibed in so many books.  Bravo!

by

(Paris)                                                                             Professor Benjamin LE BEAU

*

இந்த நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-

Success has innumerable definitions. It is a basic human instinct to desire success. But what does success mean? People have divergent views on success, some see success as an index of material growth and others as inner peace, Strength and values. But success is a balanced blend of both. They are not mutually exclusive. The e book by Mr S. Nagarajan, on Breakthrough to success combines both the spiritual wisdom of great eastern seers like Vivekananda and the thoughts on material advancement by westerners like M. R. Kopmayer. Articles in this book are beautifully arranged in 4 chapters – Self improvement, Spiritual growth, Creativity and Iintelligence and Success tools – are a harmonious package deal for leading a successful life, both materially and spiritually. It is a ready reckoner reference book for everyone who craves to move up on the success ladder.

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். BREAKTHROUGH TO SUCCESS நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சங்கத் தமிழ் இலக்கியத்தில் புராணக் காட்சிகள் -4 (Last Part)- Post No.11,313

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,313

Date uploaded in London – 1 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பகுதி 4

ஒரே பாடலில் 4 கடவுள்கள்

சங்க இலக்கியத்தில் உள்ள 18 மேல் கணக்கு நூல்களில் புறநானூறுதான் பழமையான பகுதி. அதில் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் பாடிய ஒரே பாடலில் (புறம் 56) நான்கு கடவுளரும், அவர்தம் வாகனங்களும் , அவர்தம் கொடிகளும் வருவதால் சங்கத் தமிழர்கள் இந்து சமய புராணங்களை முற்றும் கற்று உணர்ந்தவர்கள் என்பது தெரிகிறது. மேலும் இவற்றை மன்னர்களுக்கு உவமையாகப் பயன்படுத்துவதால் பொது மக்களுக்கும் இந்தக் கதைகள் நன்கு தெரியும் என்பதைக் காட்டுகிறது. சம்ஸ்க்ருத நூல்களிலும் கல்வெட்டுகளிலும் ஒருவரை வாழ்த்திடும்போது சூரிய சந்திரர் உள்ள வரை என்று வாழ்த்துவது மரபு. அதையும் இப்பாடலில் காண்கிறோம்.

சிவன்பலராமன்கிருஷ்ணன்முருகன் என்ற வரிசையில் நக்கீரனார் பாடுகிறார். பலராமனின் கொடி  பனை மரக்கொடி என்றும் கிருஷ்ணனின் கொடி கருடக்  கொடி என்றும் , முருகனின் வாகனம் /கொடி மயில் என்றும், சிவனின் வாகனம்  ரிஷப/ காளை என்றும் பாடுகிறார்.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் தென் கோடியிலுள்ள மதுரையில் ஆண்ட பாண்டிய மன்னன் இளவந்திகை பள்ளித் துஞ்சிய நன் மாறனை போற்றுகையில் இந்தச் செய்திகள் அனைத்தும் நமக்குக் கிடைத்துள்ளன. ஆக நக்கீரனார்க்கு சிவ புராணம்கந்த புராணம், பாகவத புராணம் ஆகியன எல்லாம் மனப்படமாகத் தெரியும் என்பதையும் நாம் அறிய முடிகிறது

இதுமட்டுமல்லாமல் வேத காலக் கடவுளான யமனையும் ஒப்பிடுகிறார்.

,

வாகனங்கள் , கொடிகள் இவை எல்லாம் அக்காலத்தில் கோவில்களில் படங்களாகாவோ சிலைகளாகவோ இருந்திருக்க வேண்டும். ஏனெனில் ஏறத்தாழ இதே காலத்தில் உருவான சிலப்பதிகாரத்தில் இத்தனை கடவுளரையும் குறிப்பிட்டு கோவில்களையும் குறிப்பிடுகிறார் இளங்கோ  அடிகள்.

சிசுபாலவதம்

கிருஷ்ணனைக் குறிப்பிடுகையில் ‘இகழுநர் அடுநன்’ என்ற அடை  மொழியைப் போடுகிறார் நக்கீரர்.

இதன் பொருள் – கேலி, கிண்டல், பகடி செய்வோரை தீர்த்துக் கட்டுபவன் என்பதாகும்; கிருஷ்ணனால் தீர்த்துக் கட்டப்பட்டவர்களில் கம்சன், சிசுபாலன், ஜயத்ரதன் துரியோதனன் முக்கியமானவர்கள்; இவர்களிலும் கிருஷ்ணனால் கொல்லப்பட்டவர்கள் கம்சன், சிசுபாலன் ஆவர் .

சிசுபாலன் எப்போது பார்த்தாலும் கண்ணனை ஏசியும் பேசியும் வந்தான். 99 முறை உனக்கு மன்னிப்பு வழங்குவேன். நூறாவது முறை நீ கேலி செய்யும்போது இருக்க மாட்டாய் என்கிறார். அப்படியே பூமெராங் வடிவத்தில் செயல்படும் சுதர்சன சக்கரத்தை ஏவினார் அவன் தலை துண்டாயிற்று. இதை மாக என்னும் கவி சிசுபாலவதம் என்ற நூலாக சம்ஸ்க்ருதத்தில் பாடி வைத்தார். அதையும் நக்கீரர் படித்திருப்பார் போலும். ஆகையால்தான்  இகழுநர் அடுநன்’ என்ற சொற்றொடரைக்  கையாளுகிறார்.

இப்போது பாடலைப் படியுங்கள் ; நன்றாகப் புரியும்

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,

மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;

கடல் வளர் புரி வளை புரையும் மேனி,

அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;

5

மண்ணுறு திரு மணி புரையும் மேனி,

விண் உயர் புள் கொடிவிறல் வெய்யோனும்,

மணி மயில் உயரிய மாறா வென்றி,

பிணிமுக ஊர்திஒண் செய்யோனும் என

ஞாலம் காக்கும் கால முன்பின்,

10

தோலா நல் இசை, நால்வருள்ளும்,

கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்;

வலி ஒத்தீயே, வாலியோனை;

புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;

முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்;

15

ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும்

அரியவும் உளவோ, நினக்கே? அதனால்,

இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா,

யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்

பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும்

20

ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து,

ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற!

அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும்

வெங் கதிர்ச் செல்வன் போலவும்குட திசைத்

தண் கதிர் மதியம் போலவும்,

25

நின்று நிலைஇயர், உலகமோடு உடனே!

திணை அது; துறை பூவை நிலை.

—மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், புறநானூறு 56

சிவனுக்கு திருநீலகண்டன் என்ற பெயரும் உண்டு. சங்க காலத்திலேயே இது பிரபலமாகிவிட்டது. பிற்கால நாயன்மார் பட்டியலிலும் இதைப் படிக்கிறோம். அவ்வையார் இன்னும் தெளிவாக நீல மணிமிடற்றோன் (புறம் 91) என்றே சிவனைப் போற்றுகிறார்.

முப்புரம் எரிசெய்த சிவனை (திரிபுராந்தகன்) முன்னொரு கட்டுரையில் குறிப்பிட்டேன்.

இன்று தசாவதார சிலைகளிலும் பொம்மைகளிலும் பலராமனின் கலப்பையை பார்க்கிறோம் ; அதையும் நக்கீரர் நாஞ்சில் என்கிறார். சிவனுடைய ஆயுதமான மழுவை கணிச்சி என்கிறார். ஆக , அந்தக் காலத்தில் எல்லார் வீட்டுச் சுவர்களிலும் இந்த ஓவியங்கள் இருந்திருக்க வேவேண்டும்; கோவில்களில் விக்கிரகங்களும் இருந்திருக்கலாம்.

ஒரே பாட்டில் நக்கீரர் நமக்கு ஏராளமான புராணச் செய்திகளைக் கொட்டித் தீர்த்துவிட்டார்.. தமிழ்ச் சங்கத்தை தலைவராக இருந்து  நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சிவனுக்கே சவால் விட்டவர் இவ்வளவையும் அறிந்ததில் வியப்பில்லை.

XXXX

கலர்களும் கடவுள்களும்

எப்போதெல்லாம் பல நிறங்களைக் காண்கிறார்களோ அப்போதெல்லாம்  கடவுள் நிறங்கள்தான் தமிழர்களுக்குத் தோன்றும். அவ்வளவு பக்திமான்கள் தமிழர்கள்.

முல்லைக்கலி பாடிய நல்லுருத்திரன் மஞ்சுவிரட்டு என்னும் ஜல்லிக் கட்டு நிகழ்ச்சியைக்  காணப்போகிறார். அங்கு யாதவ குலப்  பெண்கள் வளர்த்த காளைகளை அவிழ்த்துவிடவும் அவைகளை அடக்க ஆயர்குடி இளைஞர்கள் பாய்ந்து வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டு பாகவத புராணத்திலும் உளது; கிருஷ்ணன் ஏழு காளைகளை அடக்கிய செய்தி அது. இப்போது கலித்தொகையில் வரும் கலர்களை/ வண் ணங்களைப்  பார்ப்போம் :

இந்தப் பாட்டில் பாண்டிய நாட்டைக் கடல் கொண்ட செய்தியும், யாதவ குலம் மிகப் பழமையான குலம் என்பதையும் நல்லுருத்திரன் சுட்டிக்காட்டுகிறார்

மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்மெலிவு இன்றி மேல் சென்று, மேவார் நாடு இடம்படப்,
புலியொடு வில் நீக்கிப், புகழ் பொறித்த கிளர் கெண்டை,
வலியினான் வணக்கிய, வாடாச் சீர் தென்னவன்
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய
நல் இனத்து ஆயர், ஒருங்கு தொக்கு, எல்லாரும்-
வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைக் கொடிப்
பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்,
பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமித்
திரு மறு மார்பன் போல் திறல் சான்ற காரியும்,
மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்
முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்,
மா கடல் கலக்குற மா கொன்ற மடங்காப் போர்
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும், ஆங்கு அப்
பொரு வரும் பண்பினவ்வையும், பிறவும்
உருவப் பல் கொண்மூக் குழீஇயவை போலப்,
புரிபு புரிபு புகுத்தனர், தொழூஉ.
அவ் வழி, முள் எயிற்று ஏஎர் இவளை பெறும், இது ஓர்
வெள் ஏற்று எருத்து அடங்குவான்.

—–கலித்தொகை 104

சுருக்கமான பொருள்

பாண்டிய நாட்டைக் கடல் கொண்டது. ஆகையால் அவன் சேர சோழ நாடுகளை வென்று அவர்களுடைய கொடிகளை அகற்றினான். பழமையான யாதவர் இனம் காளை பிடிக்கும் ஏறு தழுவும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர் ;அங்கே வந்த மாடுகளின் நிறங்கள் :

பனைக்கொடி பலராமன் போல வெள்ளை மாடு ;

திருமாலைப் போல கருப்பு நிறம் உடைய மாடு ;

முக்கண்ணன் / த்ரயம்பகன் போல செக்கப் செவேல் காளை ;

சூரனை வென்ற முருகன் போல இளம் சிவப்பு நிற எருது .

இதில் இன்னும் குறிப்பிடத்தக்க விஷயங்கள் : திரு மறு மார்பன் = ஸ்ரீவத்சன் ;பிறைநுதல் = நெற்றிக் கண் கொண்ட சிவன் ;தாழ் சடை = விரி சடை சிவன்; இதை நடராஜர் திரு மேனிகளில் காணலாம் ; முக்கண்ணான் – திரயம்பகன் ; வேல் வல்லான் = வேலாயுதன் முருகன்

தமிழர்களுக்கு எங்கும் எப்போதும் சிவன், விஷ்ணு, கந்தன் நினைப்புதான் !

வாழ்க தமிழர்[ வளர்க பக்தி!

.—subham—

Tags- சிவன்பலராமன்கிருஷ்ணன்முருகன், மஞ்சுவிரட்டு ,ஜல்லிக் கட்டு, ஏறு தழுவும், முல்லைக்கலி , நல்லுருத்திரன்