பார்த்துவிட்டோம்= Paarththuvittom= have seen, had seen.
The action is definite, complete.
How do we form these Definite verbs?
You simply add VIDU to the converbial form of the verb
விடு = vidu added to படித்து, வந்து, சாப்பிட்டு, போய் , தூங்கி, பார்த்து
படித்தேன் = படித்துவிட்டேன் = padiththen is I read; if I say Padiththuvitten that means I have read it completely or finished reading.
Depending upon the context, it gives a different shades of meanings
சாப்பிட்டேன்= சாப்பிட்டுவிட்டேன் = sappiiten = I ate= saappittuvitten is I had already eaten or it may even mean I ate everything leaving nothing for you.
வந்தான்= வந்துவிட்டான் = vanthaan = he came= vanthuvittaan= he has come; here he is
வந்தார்= வந்துவிட்டார் = people are waiting for a VIP in a meeting for long. When the leader or VIP is about to come to the stage, they announce our leader has come= He has finally arrived
பார்ப்பார்= பார்த்துவிடுவார் = paarththuviduvaar= he will see you; please hide yourself.
தூங்கிவிட்டேன்= Thuungivitten=I had slept (too long); Sorry, I am late I had slept too long= naan thoongkivitten.
xxx
NEW VERBS
xxx
NEW VERBS
Purappdu= starting a journey, leaving a place, setting out, departing புறப்படு,
Kumbidu= worship (God), salute a person or saying Namaste கும்பிடு
See attachments
Tags- Compound Verbs, Tamil, Definite, Vidu ending
இந்துக்கள் வேத காலம் முதற்கொண்டு எல்லா அறிவியல் துறைகளிலும் கவனம் செலுத்தியுள்ளனர். அவைகளை சம்ஸ்க்ருதத்தில் எழுதியும் வைத்துள்ளதால் நமக்கு குறைந்தது 3000, 4000 ஆண்டு அறிவியல் வளர்ச்சி பற்றி அறிய முடிகிறது.
உலகிலேயே பழமையான நூலான ரிக் வேதத்தில் மூலிகைகளுக்காகவே ஒரு சூக்தம் ஒதுக்கியிருப்பதால் (ஓஷதி சூக்தம் , ரிக் 10-97) எந்த அளவுக்கு அவர்களுக்கு மூலிகையின் பெருமை தெரிந்திருந்தது என்பதை அறிய முடிகிறது .. முதல் மந் திரத்திலேயே 107 மூலிகைகள் பற்றிச் சொல்கிறார் ரிக் வேத கால டாக்டர். ஆயினும் அவரோ உரைகாரர்களோ நமக்கு 107 மூலிகைகளின் பெயர்களை சொல்லவில்லை. ஏனெனில் அக்காலத்தில் எல்லோருக்கும் அவை பற்றித் தெரியும். ஆனால் பிற்கால நூல்களான சுஸ்ருத சம்ஹிதா, சரக சம்ஹிதை பிருஹத் சம்ஹிதா முதலிய புஸ்தகங்கள் நமக்கு நிறைய மூலிகைகளின் பெயர்களை சொல்லி பயன்பாடுகளையும் அறிவிக்கின்றன.
அதர்வண வேத சூக்தங்களில் தாவரங்களை பல வகைகளாகப் பிரித்துப் பேசுவதால் அத்தகைய படிப்புகள் இருந்ததும் தெரிகிறது. பழம் கொடுக்கும் தாவரங்களை பலினி என்றும், பழம் தராத தாவரங்களை அபலா என்றும், பூக்கும் தாவரங்களை புஷ்பினி என்றும் , பூவாத தாவரங்களை அபுஷ்பா என்றும், எப்போதும் பூத்துக் குலுங்கும் தாவரங்களை ப்ரஸூவரி என்றும் அழைத்தனர்
OLDEST BOTANICAL CLASSIFICATION (AV.8-7-26)
அதர்வ வேதத்தில் 8-7-26ல் ஒரே பாடலில் புஷ்பவதி, ப்ரஸூவதி, பலினீ , அபலா என்று வருவதால் உலகில் முதல் முதலில் தாவரங்களை வகைப்படுத்தியது இந்துக்கள்தான் என்பதும் தெளிவாகிறது.
தைத்ரீய சம்ஹிதையில் (யஜுர் வேதம் ) மூல (வேர் )துல (பூங்கிளைகள்), காண்ட (தண்டு), வலச (மரக் கிளை ), சாகா (பெரிய கிளைகள் ) புஷ்ப, பல(பழம் ) பர்ண (இலை) என்ற தனித்தனி சொற்கள் கையாளப் படுகின்றன. ஸதபதப் பிராஹ்மணம் மேலும் பல சொற்களை எடுத்தாளுகிறது. இவ்வளவுக்கும் இவை எதுவும் தாவரவியல் (Botany) நூல் அல்ல. மதம் தொடர்பான நூல்களே .
முதல்முதலில் வ்ருக்ஷ ஆயூர்வேத என்ற சொல்லை 2300 ஆண்டுகளுக்கு முந்தைய கௌடில்யரின் (சாணக்கியரின்) அர்த்த சாஸ்திரத்தில் (2-24-1) காண்கிறோம். மரங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் அற்புத துறை அது. விவசாய டைரக்டருக்கு (Director of Agriculture in Arthasasatra) க்ருஷி தந்த்ர/விவசாயம் , சுல்வ , வ்ருக்ஷ ஆயுர்வேத தெரிந்திருக்கவேண்டும் அல்லது இவைகளை அறிந்த ஒருவரை உதவியாளராக வைத்திருக்கவேண்டும் என்று சாணக்கியர் சொல்கிறார். அந்தந்த பருவத்தில் விதைகளைச் சேகரித்து வைக்கவேண்டும் என்றும் விளம்புகிறார். ஆகவே 2300 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண் துறையும் அதற்கான அதிகாரிகளும் இருந்தது தெரிகிறது . முக்கியமான விஷயம் மரங்களுக்கான ஆயூர் வேதம் என்பதாகும்.
பின்னர் கஸ்யப சம்ஹிதா, வராகமிஹிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதா, விஷ்ணு தர்மோத்தர புராணம் (இரண்டாவது காண்டம்- அத்தியாயம் 300), அக்கினி புராணம் (282 ஆவது அத்தியாயம்) சுர பால எழுதிய வ்ருக்ஷ ஆயூர்வேத நூல்களில் மேல் விவரங்களை அறிகிறோம். தாவரவியல் தொடர்பான அபூர்வ விஷயங்களை இவை, போகிற போக்கில், சொல்கின்றன. ஆயினும் மரங்களுக்கு வரும் நோய்களை விவாதித்து குணப்படுத்துவது எப்படி என்பதை சுர பால எழுதிய வ்ருக்ஷ ஆயூர்வேத புஸ்தகத்தில் மட்டுமே காண முடிகிறது
மரங்களுக்கு ஏற்படும் கெடுதிகளை ஆறுகாரணங்களாகப் பிரிக்கிறது கஸ்யப சம்ஹிதா.
1.கடுங்குளிர்; 2.கடும் வெப்பம் ; 3.கன மழை 4.சூறாவளிப் புயல் ; 5.மரங்களின் வேர்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைதல் ; 6.யானைகள் உராய்தல் .
இன்று நாம் பத்திரிக்கைகளைத் திறந்தால் இவற்றில் முதல் 4 காரணங்களால் பயிர்கள் அழி வதைப் படிக்கிறோம். ஐந்தாவது காரணம் நெருக்கமாகத் தாவரங்கள் வாழ்ந்தால் வரும் கேடுகள் பற்றிப் பேசுகிறது. யானைகள் உராய்தல் பற்றி சங்க இலக்கியப் பாடல்களில் காண்கிறோம். தமிழ்ப் புலவர்களும் சங்க காலத்திலேயே இதைக் கண்டு பாடலில் சேர்த்துள்ளனர்.
தாவரங்களுக்குக் கீழே வேர்கள் பின்னிப் பிணைந்தால் அவைகள் நன்றாகக் காய்க்காது என்று விஷ்ணு தர்மோத்தர புராணம் செப்புகிறது
அப்யாஸ ஜாதா தரவஹ ஸம் ஸ் ப்ருச ன்தஹ பரஸ்பரம்
அவ்யக்த மிஸ்ர மூலத்வாப வந்தி விபலா த்விஜ
தேஷாம் வ்யாதி ஸமுத்பதெள ச்ருணு ராம சிகித்ஸதம்
வராஹ மிஹிரர் எழுதிய ப்ருஹத் சம்ஹிதா ஒரு கலைக்களஞ்சியம். அவர் 54 ஆவது அத்தியாயத்தில் 31 ஸ்லோகங்களில் விருட்ச (வ்ருக்ஷ) ஆயுர்வேதம் பற்றிப் பாடுகிறார். இலைகள் உதிர்தல், , கிளைகள் காய்ந்து போதல், வளர்ச்சி தடைப்படுதல் முதலியவற்றை பருவ நிலை எப்படி உண்டாக்குகிறது என்று வராஹ மிஹிரர் விளக்குகிறார். மரங்களின் இலைகள் பச்சையத்தை இழந்து பாண்டுபத்ரதா (வெண்மை ) ஆவதையும் கதைக்கிறார்.
நோய்கள் பற்றிச் சொல்வதோடு சிகிச்சை பற்றியும் சொல்கிறார்.
மரங்களின் கிளைகள் பாதிக்கப்பட்டால் அவைகளை வெட்டி , அந்த இடத்தில் களிம்பு தடவ வேண்டும் என்றும் பாலையும் தண்ணீரையும் கலந்து தெளிக்க வேண்டும் என்றும் கூறுகிறார் நூலாசிரியர் வராகமிஹிரர். பழங்கள் காய்க்காவிட்டால் ஆட்டுப் புழுக்கை, எள் , பார்லி மாவு, மாட்டு மாமிசம் ஆகியவற்றைக் கலந்து 7 நாட்களுக்கு சிகிச்சை தர வேண்டும் என்பார். இன்று எவ்வளவோ நல்ல உரங்கள் வந்திருக்கலாம். 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இதன் துவக்கத்தை அவர் எழுத்தில் வடித்தது ஆய்வு மனப்பாண்மையைக் காட்டுகிறது
—தொடரும்……………………………
tags– தாவர நோய்கள், அற்புத மூலிகை , வராஹமிஹிரர், வ்ருக்ஷ ஆயூர்வேதம்
புலவர் ஒருவர் முத்தைப் பார்க்கிறார், தாமரையைப் பார்க்கிறார், மணமணக்கும் கஸ்தூரி எங்கிருந்து கிடைக்கிறது என்று பார்க்கிறார். அட, முத்து கிளிஞ்சலில், தாமரையோ சகதியில், மணமணக்கும் கஸ்தூரியோ மானிடம்!
இது என்ன படைப்பு விசித்திரம்! தூ , படைத்தவனின் புத்திசாலித்தனத்தைப் பாரேன் என்று நகையாடுகிறார்.
சிப்பி எங்கே, முத்து எங்கே? சகதி எங்கே, தாமரை எங்கே? மான் எங்கே கஸ்தூரி எங்கே? தூ! பாரேன், படைத்தவனின் புத்திசாலித்தனத்தை! – தூ!!
Where are the oysters and where the pearls? Where is the. Mud and where the lotus? Where is the deer and where the. Musk? Ah, fie upon the (wretched) cleverness of the Creator! (Translation by S.B. Nair)
*
க்வ வஸந்தி ஸ்ரேயோ நித்யம் பூம்ருதாம் வத கோவித |
அஸாவதிஷய: கோபி யுதுக்தமபி நோஹ்ருதே ||
ஓ, புத்திசாலியே கொஞ்சம் சொல்லேன்! ஒரு அரசனின் செழுமை எங்கே உள்ளது? இதற்கான பதில் இந்தச் செய்யுளிலேயே இருக்கின்ற போதும் கூட அதை உணராமல் இருப்பது ஆச்சரியம் தான்! (விடை அசா – அசா என்றால் வாள் என்று பொருள். ஆகவே ஒரு அரசனின் செழுமை அவன் வாளில் அதாவது அவனுக்கு வெற்றி தந்து வலிமையூட்டும் வாளில் தான் உள்ளது)
Tell me O wise man,Where does the properity of a king reside? This is, indeed, wonderful that though the answer is mentioned (in the verse itself), it is not recognized. (Translation by S.B. Nair)
*
க்ரோதோ ஹி சத்ரு: ப்ரதமோ நராணாம்
தேஹஸ்திதோ தேஹவிநாஷானாம்
யதா ஸ்தித: காஷ்டகதோ ஹி வஹ்னி:
ஸ ஏவ வஹ்னிர் தஹதே சரீரம் ||
கோபமே மனிதனின் தலையாய எதிரி. அது உடலை அழிப்பதற்காக உடலிலேயே உள்ளது. எப்படி காய்ந்த விறகில் தீ இருந்து அதன் ஆதாரத்தையே (விறகையே) அழிக்கிறதோ அது போலத் தான்!
Anger is the foremost enemy od men, it remains in the body for the destruction of body itself; just as fire, that remains in dry wood itself, burns its own substratum (wood) (Translation by S.B. Nair)
*
க்ரோதோ வைவஸ்வதோ ராஜா த்ருஷ்ணா வைதரணீ நதி |
வித்யா காம துகா தேனு: சந்தோஷோ நந்தனம் வனம் ||
கோபம் என்பது எமன். ஆசை என்பது வைதரிணி நதி.
வித்யை என்பதை அனைத்தையும் தரும் காமதேனு. சந்தோஷம் அதாவது திருப்தி என்பது நந்தன வனம்.
Anger is King Yama (god of death); greed is Vaitarani (river of hell); correct knowledge is all giving Kamadenu (and) contentment is Nandana – garden (of Indra). Translation by S.B. Nair)
***
***
புத்தக அறிமுகம் – 111
ஆஹா! அப்படியா!!
(விஞ்ஞான கேள்வி பதில்கள்)
பொருளடக்கம்
இந்த நூலில் இருநூறுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு விடைகள் அளிக்கப்பட்டுள்ளன.
*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
This book answers various questions about science and general knowledge! Approximately two hundred questions have been answers in a detailed manner in this book! Don’t miss to read this book to know answers to many of your longing questions like The Secret Smile of Mona Lisa, Gnome Project and acid rain and so on.
வாசகர்களின் அறிவியல், பொது அறிவு சார்ந்த நுணுக்கமான கேள்விகளுக்கு விடை தரும் நூல் இது! சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு விரிவான விடைகள் தரப்பட்டுள்ளன! மோனாலிஸா புன்னகையின் மர்மம், ஜெனோம் ப்ராஜெக்ட், அமில மழை என நீங்கள் வெகு நாட்களாக விடை தேடிக் கொண்டிருந்த பல கேள்விகளுக்கு விடையளிக்கும் இந்நூலைப் படிக்கத் தவறாதீர்கள்!
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ஆஹா! அப்படியா!!’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
We have already seen the Yagas and Yagnas (Also written Yajna) performed by the Sangam Age Tamil Kings. Of the Yagas, Rajasuya Yaga done by the Choza king Peru Nar Killi is very significant one. The other two Tamil Kings Cheara and Pandya came in person and acknowledged the superiority and seniority of the Choza. When the great Tamil poetess Avvaaiyar saw them on the same stage together for the first time in her life she was wonder struck. Tamils are notorious for fighting with each other, killing each other, setting fire to others’ towns. Tamils were the longest fighting ethnic group in the world. They fought among themselves for at least 1500 years non stop. When Sundara pandya did the historic blunder of inviting Muslim invaders into Tamil Nadu, Tamil Kingdoms heard the death knell. Then they had to wait until the great Vijaya Nagara Empire rise and save them. Avvaiyaar praised Tamil Unity and wished them to live ever united .
Those who read the Rajasuya performed by Yudhisthra in Mahabharata would understand the significance of the great Yaga.
In Puram 367 Miss Avvaiyaar gives rare information about Brahmins as well in addition to the above compliments.
They/Brahmins are ONE Principled- always trying to see Brahman/God (Brahmana in Sanskrit)
They have TWO Births= Dwija in Sanskrit; Iru Pirappalar in this poem)
They hold THREE Agnis= The fires were known as Dakshinagniyam (Semi Circular altar), Garhapatyam (Circular altar) and Ahavaneeyam (Square altar). In Vedic yajna all these three types of fire are needed. After erecting the yajna hall, the three fires are installed on its three sides. On the west was placed the Garhapatyam/ domestic fire, on the east the Aahavaniya fire (invokable), and on the south the daksinagni /southside fire.
Brahmins carry fire creating Arani Wood equipment. When one wood churns the other wood fire is created. That is what they called invokable fire. They do it while reciting the relevant Mantras.
Since Ms Avvaiyaar saw with her own eyes she described Brahmins with numbers ONE, TWO, THREE.
The second thing Avvaiyar saw on that day was the Brahmins were given Golden Flowers and Gold Coins as Dakshina (fees for performing). While the king was giving, he has to pour water on it to show that as donation. Avvaiyaar described it as well.
The poem in Tamil is given below.
புற நானூறு 367
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம்
தமவே ஆயினும் தம்மொடு செல்லா;
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங் கை நிறையப்
பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து, 5
பாசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய
நார் அரி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,
இரவலர்க்கு அருங் கலம் அருகாது வீசி,
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்;
வாழச் செய்த நல்வினை அல்லது 10
ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை;
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண் குடைக் கொடித் தேர் வேந்திர்!
யான் அறி அளவையோ இதுவே: வானத்து 15
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப்
பரந்து இயங்கு மா மழை உறையினும்,
உயர்ந்து மேந் தோன்றிப் பொலிக, நும் நாளே!
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், ஒருங்கு இருந்தாரை ஒளவையார் பாடியது.
Xx
AAHUTHI (Offering)
In Many Sangam poems we come across the word AAKUTHI (also aaVuthi). Every Yaga or Yagna is concluded with Puurna ahuthi. Ghee, cooked rice and Gold coins and silk clothes were placed in the Fire/ Agni by reciting the final mantras. Aahuthi is the offering of Ghee and Food and Valuables to God. Agni as a messenger of God carries them to heaven.
Here are some lines with Aavuthi/ Aakuthi:
Puram 15-19;99-1; Pathitru.21-5/7 also21- 13;
Madu – line 494;Paati. Lines 55, 200.
xxx
Havis
Havis is also used to specify the offering, which is usually ghee+ cooked rice. It is tamilized as AVI. ஹவிஸ் = அவி =நெய்யும் சோறும் கலந்த உருண்டை
Puram 377/5; 363-12;
Pari .5-40/41; 6-11; 8-80; 10-84; 16-53
All these poems and later Tirukkural show that Brahmins in Tamil country and the Kings did offer to Gods regularly.
Xxx
Strict Rules
When the Fire ceremonies were performed Brahmins followed strict rules. Nakkirar in Murugu confirms it in lines 95-96
Those who perform Vedic Fire Rituals have to observe vow (vrata, fasting) which is detailed in Pathitru. Verse 74
Tamils believed that by performing Yagas and Yagnas one would go to Heaven (Madurai. Lines 494-495).
We have already seen how the poet Paalai Gauthamanar disappeared with his wife during the tenth Yaga when the Chera King organised ten Yagas according to poet’s wish. It is a great miracle reported in Pathitruppaththu.
Xxx
YUPA= யூபம் Tall Post or Pillar in the Fire Place.
The Rig Vedic Sanskrit word was used verbatim by Tamil poets. I have written 3 articles on YUPA pillar. Please see the links below:
· AMAZING RIG VEDIC YUPA IN SANGAM … – Tamil and Vedas
23 Apr 2018 — The Rig Vedic Sanskrit word YUPA is used in 2000 year old Sangam Tamil literature without any change i.e. same Sanskrit word Yupa is used.
நைட்ரஜனை யாரும் மறக்க முடியாது ; வயாக்ராவுக்கும் நைட்ரஜன்; நோபல் பரிசுக்கும் நைட்ரஜன்; ரத்தம், ஆண்களின் விந்து , பெண்களின் கரு /முட்டையைக் பாதுகாக்கவும் நைட்ரஜன், பெட்PET என்னும் உடல் ஸ்கானிங் விஷயத்திலும் நைட்ரஜன் என்று கடந்த இரண்டு பகுதிகளில் கண்டோம்.
இப்போது ‘அவரை’ முதலிய தானியங்களின் வேர்களில் முடிச்சுகளாக இருந்து பலன் தரும் நைட்ரஜன் பற்றிக் காண்போம்.
காற்று மண்டலத்தில் உள்ள நைட்ரஜனை நிலைப்படுத்த பூமியில் உள்ள பாக்டீரியாக்களும் (CYANO BACTERIA) கடலில் உள்ள (ALGAE) பாசிகளும் உதவுகின்றன.அவரை, மொச்சை, சோயா பீன்ஸ் போன்ற பயறு வகைத் தாவரங்களின் (LEGUMES) வேர்களில் முடிச்சுக்களைப் (NODULES) பார்க்கலாம். சில வகை பாக்டீரியாக்கள் தாவரங்களுடன் கூட்டுறவு வைத்துக் கொள்கின்றன அதாவது கார்போஹைட்ரேட்டைத் தாவரங்களில் இருந்து பெற்றுக்கொண்டு அம்மோனியா வாயுவை வெளியிடுகின்றன. இவற்றால் மண்வளம் பெருகும். நைட்ரஜன் மெதுவாக காற்றுமண்டலத்தில் கலக்கும். இவ்வாறு செய்வதை நைட்ரஜன் சுழற்சி (NITROGEN CYCLE) என்பர். இதே போல அழுகிய தாவரங்கள், இலை மக்கு ஆகியனவும் நைட்ரேட்டைஉண்டாகி பின்னர் அது காற்று மண்டலத்திற்குச் செல்ல உதவுகின்றன.
நைட்ரேட்டுகள்(NITRATES) மனித உடலில் புற்றுநோயை உண்டாக்குவதாக சில காலத்துக்கு அச்சம். நிலவியது. இதனால் குடிநீரில் இந்த அளவுக்குத்தான் நைட்ரேட் இருக்கலாம் என்ற கட்டுப்பாடுகளையும் அரசு விதித்தது. மனிதர்களின் குடலில் உள்ள பாக்டீரியாக்களும் நைட்ரேட் உப்பை உருவாக்குகின்றன. ஆயினும் குடிநீரிலிருந்து உடலில் சேரும் நைட்ரேட் மிகவும் குறைவு. கீரைவகைத் தாவரங்கள், சாலட் SALAD டில் பயன்படும் லெட்டஸ் (LETTUCE) ஆகியவற்றிலும் நைட்ரஜன் உப்புகள் இருக்கின்றன.
எரிமலை கக்கும் நைட்ரஜன்
பூமிக்கு நடுவில் உள்ள கருப் பகுதியில் கொதி நிலையில் குழம்பு போல மூலகங்கள் இருக்கின்றன. இவை வெளியே வந்து வளி மண்டல நைட்ரஜனை உற்பத்தி செய்தது. இப்போதும் எரிமலைகள் வெடித்து தீக்குழம்பு வெளிவரும்போது நைட்ரஜன் வாயுவும் வெளிவருகிறது.இது நைட்ரஜன் உப்புக்களாக மாறி பல வகையில் உதவுகிறது .ஏனெனில் நைட்ரஜன் எதனுடனும் நேரடியாக வினை ஆற்ற முடியாது. இதற்கு மின்னலும், பூமியில் உள்ள கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா உயிரினங்களும் உதவுகின்றன மனிதர்கள் உண்டாக்கும் நைட்ரஜன், வண்டி வாகனங்களின் புகை, விவசாய உரங்கள் ஆகியவற்றிலிருந்து காற்றில் கலக்கின்றன.
உயிர் காக்கும் காற்றுப் பைகள் (LIFE SAVING AIR BAGS IN CARS)
வெளிநாடுகளில் கார் சீட்டுகளில் காற்றுப் பைகளை (AIR BAGS)பொருத்துவது கட்டாயமாக்கப்படுகிறது. ஒரு வண்டி மற்றொரு வண்டி மீது மோதினால் அப்போது ஏற்படும் அதிர்ச்சியில் அனைவரும் முன் புறம் பாய்ந்து நசுங்கிப் போகிறார்கள் ; இதைத் தடுக்க, அதிர்ச்சி ஏற்பட்ட ஒரு சில வினாடிகளில் பலூன் போல் விரிவடையும் பைகள் பொருத்தப்படுகின்றன . சாதாரண நிலையில் அவை காற்று இல்லாமல் இருக்கும். அதில் 200 கிராம் சோடியம் அசைட் SODIUM AZIDE என்னும் உப்பை வைக்கின்றனர். இது நைட்ரஜன், சோடியம் கலந்த ரசாயனப்பொருள்.. பத்து மைல் வேகத்தில் வரும் கார் மோதினாலும் கூட, எலெக்ட்ரானிக் சென்ஸார் காற்றுப்பையை இயக்குவிக்கும். அப்போது 300 டிகிரி C -யில் (SODIUM AZIDE) சோடியம் அசைட் நைட்ரஜன் வாயுவை உண்டாக்கி காற்றுப்பையை(Air Bags) பெரிய பலூன் ஆக்கி நம் உடலை முன் புறம் மோதாமல் தடுக்கும். ஆக உயிர் காக்கும் தோழனாக நம்முடன் காரில் பவனி வருவதும் நைட்ரஜன் தான்..
நைட்ரஜனால் கிடைத்த நோபல் பரிசு
நோபல் பரிசு உண்டாக ஆல்ப்ரெட் நோபல் எப்படி நைட்ரஜன் வெடிமருந்தினால் கிடைத்த பணத்தை ஒதுக்கினார் என்று முன்னர் பார்த்தோம் . ரசாயன நோபல் பரிசு கிடைக்க நைட்ரஜன் உதைவிய செய்தியும் உண்டு; நைட்ரஜனையும் ஹைட்ரஜனையும் குறிப்பிட்ட வெப்பத்தில் குறிப்பிட்ட அழுத்தத்தில் கலந்தால் அம்மோனியா வாயுவை உண்டாக்கலாம் என்பதை ஜெர்மன் ரசாயன நிபுணர் பிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) கண்டுபிடித்தார். பின்னர் இதை, குறைவான வெப்பத்தில், அழுத்தத்தில் உருவாக்கலாம் என்று அவரே அறிவித்தார். இதைக் கண்டு பிடித்ததற்காக அவருக்கு 1918ம் ஆண்டு ரசாயன /வேதி இயல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
எலியைக் கொன்ற நைட்ரஜன்
ஆரம்பகாலத்தில் நைட்ரஜன் வாயு ஒரு தனிப்பட்ட மூலகமே என்று கண்டுபிடிக்க பல காலம் ஆயிற்று.
முதலில் சால் அம்மோனியாக் (Sal ammoniac) என்ற உப்பை நூற்றாண்டுக் கணக்கில் பயன்படுத்தி வந்தனர். அப்போது அதில் நைட்ரஜன் என்னும் வாயு இருப்பதை எவரும் அறியார்.1760 ஆம் ஆண்டில் ஹென்றி காண்வென்டிஷ், ஜோசப் ப்ரீஸ்ட்லி (Henry Cavendish, Joseph Priestly) ஆகியோர் காற்றில் உள்ள ஆக்சிஜனை அகற்றினால் என்ன கிடைக்கும், என்ன மிஞ்சும் என்று தனித் தனியே, ஆராய்ந்தனர். குடுவையில் ஆக்சிஜன் போக மிஞ்சிய காற்றில் மெழுகு வர்த்தியை ஏற்றிவைத்தால் அது அணைந்து போயிற்று. அந்தக் குடுவையில் ஒரு உயிருள்ள எலியைப் போட்டனர். அது செத்து மடிந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதி வியந்துகொண்டனர். அதற்கு முன்னர் கிறிஸ்தவ பாதிரியும் ஆராய்ச்சி ஆர்வலருமான ஸ்டீபன் ஹெல்ஸ் என்பாரும் இப்படிப் பல ஆராய்ச்சி செய்தார் . ஆயினும் இறுதியில் டேனியல் ரூதர்போர்ட் (Daniel Rutherford) என்ற மாணவர்தான் இதை நைட்ரஜன் என்று அறிவித்து எடின்பர்க் நகரில் டாக்டர் பட்டமும் வாங்கினார். அதற்குப் பின்னர் பிரீஸ்ட்லீ இதை எழுத்தில் வடித்தார்.
அமெரிக்க விஞ்ஞான கூடங்களில் புதுவகை நைட்ரஜன் மூலக்கூறுகள் (Atomic Nitrogen and N5+ion) உண்டாக்கப்படுகின்றன . அவை விஞ்ஞானிகளுக்கு மட்டுமே பயன்தரக்கூடிய தகவல்கள். ஒரு காலத்தில் பல புதுமைகளை உண்டாக்க அவை உதவலாம். யாரே அறிவார்!!
Tags- நைட்ரஜன் சுழற்சி ,காற்றுப் பைகள், Air bags, நைட்ரஜன் முடிச்சு,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தன்னேர் இலாத தமிழின் பெருமை!
ச.நாகராஜன்
இறைவனே தந்த தமிழ் மொழியின் பெருமையை முற்றிலுமாக யாராலும் உரைக்க முடியாது.
சங்க காலத்தில் இருந்து தற்காலம் வரை தமிழின் புகழைச் சொல்லி வந்திருக்கின்றனர் ஆன்றோர்.
அவற்றில் மிக முக்கியமான ஐந்து பாடல்களை பெருந்தொகை திரட்டில் பார்க்க முடிகிறது.
பொருளியல் பகுதியில் 2157, 2158, 2159, 2160, 2161 என்ற வரிசையில் இந்தப் பாடல்கள் தரப்பட்டுள்ளன.
பாடல்கள் இதோ:
ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருள்கடியு – மாங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.
இந்தப் பாடலின் பெருமையை முற்றிலுமாக யாராலும் உரைக்க முடியாது. அப்படிப்பட்ட அற்புதமான பாடல் இது.
இருள் கடியும் என்பதற்கு பதிலாக இருள் அகற்றும் என்றும் ஒரு பாடம் உண்டு. (நான் இருள் அகற்றும் என்பதையே பயன்படுத்தி வருகிறேன்._
ஓங்கல் என்றால் உதயகிரி, பொதியமலை என்று கூறலாம்.
இந்தப் பாடல் தண்டியலங்காரத்தில் காணப்படுகிறது,
அடுத்த பாடல்:
பைங்க ணிளம்பகட்டின் மேலானைப் பான்மதிபோற்
றிங்க ணெடுங்குடையின் கீழானை – யங்கிரந்து
நாம் வேண்ட நன்னெஞ்சே நாடுதிபோய் நானிலத்தோர்
தாம்வேண்டுங் கூடற் றமிழ்
பாடபேதம் – ணிளம்பகட்டின் என்பதற்கு பதிலாக ணிளம்பகட்டு,
யங்கிரந்து என்பதற்கு பதிலாக தங்காது
நாம் வேண்ட என்பதற்கு பதிலாக நாம் வேண்டு
பத்துப்பாட்டு நூலில் மதுரைக் காஞ்சியில் இறுதியில் இது தரப்பட்டுள்ளது.
மேலானை, கீழானை ‘இரந்து தமிழ் வேண்டுதி’ என்றது பாண்டிய மன்னனின் தமிழ்த் தலைமையைக் குறிக்க வந்தது. கூடல் தமிழால் வேண்டுதி என்றும் கொள்ளலாம்.
அடுத்து ஒரு அருமையான பாடல்:
சொல்லென்னும் பூம்போது தோற்றிப் பொருளென்னும்
நல்லிருந் தீதாது நாறுதலான் – மல்லிகையின்
வண்டார் கமழ்தாம மன்றே மலையாத
தண்டாரான் கூடற் றமிழ்
இதுவும் பத்துப் பாட்டு நூலில் காணப்படும் ஒரு பாடலாகும்.
தீதாது என்ற சொல்லை தீந்தாது என்று திருத்திக் கொள்ளல் வேண்டும்.
மலையாத தண்டாரான் – “ஏனையோரால் அணியப்படாத ஆரத்தைப் பூண்டவன். இதன் பொருள் : இந்திரனால தரப்பட்ட ஆரத்தை (மாலையை) அணிந்தவன் என்று பொருள். பாண்டியனின் பெருமை இதனால் புகழப் படுகிறது.
அடுத்த பாடல்:
மாவடு வென்ன்னு மலர்புரை கண்ணினாய்
பாவெடுத்துப் பாடும் பயனோக்கி – மேவி
எடுத்த வினத்தினா லின்பஞ்சொற் சேரத்
தொடுத்து மொழிவ தமிழ்
யாப்பருங்கல விருத்தியில் காணப்படும் பாடல் இது.
அடுத்த பாடல்:
செந்தமிழ்ச் செய்யுட் டிறந்தெரிந்து செந்தமிழ்க்கண்
வந்த வடமொழியு மாற்றாதே – சந்தம்
வழுவாமற் கொண்டியற்று மாண்பினார்க் குண்டே
தழுவாமை நிற்குந் தமிழ்
இதுவும் யாப்பருங்கல விருத்தியில் காணப்படும் பாடலாகும்.
அடுத்து சமீப காலத்தில் தோன்றிய கவியோகி சுத்தானந்த பாரதியார் அழகுற தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் ஒன்றைத் தந்துள்ளார்:
இந்தப் பாடலில் குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம் என்னும் அற்புதமான ஐந்து காப்பியங்களை ஆபரணமாகத் தமிழ்த் தாய்க்குச் சொல்லி வாழ்த்து கூறுவதைப் பார்த்து வியக்க முடிகிறது.
குண்டலம் என்பது காதில் அணியும் ஆபரணம். அதுவே குண்டலகேசி.
வளையல் என்பது கைகளில் மகளிர் அணியும் ஆபரணம். அது வளையாபதியாகத் திகழ்கிறது.
மாணிக்கப் பதக்கங்கள் மணி மாலைகளுடன் மார்பில் அணியப்படும் ஒரு ஆபரணம். அதுவே சீவக சிந்தாமணியாக அமைகிறது.
மேகலை மகளிரால் இடுப்பில் அணியப்படும் ஒரு ஆபரணம். அதுவே மணிமேகலையாகத் திகழ்கிறது.
காலில் அணிவது சிலம்பு. அதுவே அன்னையின் பாதங்களில் சிலப்பதிகாரம் என்ற காப்பியமாக ஒலி செய்து விளங்குகிறது.
அற்புதமான கவினுறு கற்பனையைக் கைக் கொண்டு தமிழ் அன்னையை வாழ்த்துகிறார் கவியோகி.
இந்தப் பாடல்களை அனைத்து மாணவ மாணவியரும் கற்றுத் தெளிய இவற்றைப் பாட புத்தகங்களில் சேர்க்க வேண்டும்.
தமிழின் பெருமையை இளம் உள்ளங்களில் பதிய வைக்க வேண்டும்.
செய்வோமா?
***
TAGS- தமிழின் பெருமை, யாப்பருங்கல விருத்தி
புத்தக அறிமுகம் – 110
ஏன்? எப்படி? அறிவியல் புதுமைகள்
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. வானத்தை வசமாக்கும் புதிய பயணங்கள்!
2. பூமியின் வெப்பம் அதிகமாகிறது!
3. கவா… கவா!
4. விண்வெளிக் குப்பை!
5. விலங்குகளின்மீது வியப்பூட்டும் அறிவியல் சோதனைகள்!
6. உலகை மாற்றிய தாவரங்கள்!
7. புதிய கிரகம் கண்டுபிடிப்பு!
8. நீலத் திமிங்கிலங்களின் தகவல் பரிமாற்றமுறை!
9. தேவை புத்துணர்ச்சி தரும் தூக்கம்!
10. சிகரெட்டும் அபாயகரமான போதைப் பொருளே!
11. வால் நட்சத்திரத்தில் இறங்கத் திட்டம்!
12. சாட்லைட் கண்டுபிடித்த பழைய நகரம்!
13. வயர்லெஸ் பல்ப் எரிய விட்ரிசிடி!
14. அருகி வரும் அரிய விலங்கு வகைகள்!
15. என்றுமே இளமையாக இருப்பது பற்றிய அறிவியல் ஆய்வு!
16. நவீன ரொபாட்!
17. நீடித்த மகிழ்ச்சிக்கு அறிவியல் காட்டும் வழி!
18. மீன்வளம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?
19. சும்மா இருக்குமா மூளை?
20. முகபாவமே அனைத்தும் சொல்லும்
21. நீர் நிறைந்த புதிய பூமி கண்டுபிடிப்பு!
22. மாறப் போகும் தொழிலகங்கள்!
23. புதிய தொழில் முறை!
*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
This is a collection of 23 science articles written by the famous author
S. Nagarajan. Besides being amazing in the essence, every article is really precise not more than two pages. Thus makes the book not only suitable for elders but also serves as a good gift for the children. Simply the names of the articles are astounding such as Transporting anywhere in the world within two hours, Laser broomstick for the galaxial garbage, the communication of Blue Whales and the replacement of Electricity by Vitricity and so on.
பிரபல எழுத்தாளர் ச.நாகராஜன் எழுதியிருக்கும் 23 அறிவியல் செய்திக் கட்டுரைகளின் தொகுப்பு. கட்டுரைகள் ஒவ்வொன்றும் சுவையாகவும் புதுமையான தகவல்களைக் கொண்டதாகவும் இருப்பது மட்டுமல்லாமல் எளிமையாகவும் ஓரிரு பக்கங்களிலேயே அடங்குபவையாகவும் இருக்கின்றன. இதனால் பெரியவர்கள், தாங்கள் படிப்பதோடு நில்லாமல் குழந்தைகளுக்கும் இந்நூலைப் பரிசளிக்கலாம். இரண்டு மணி நேரத்திற்குள் உலகின் எந்த மூலைக்கும் சென்று விடக் கூடிய அளவுக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பம், விண்வெளிக் குப்பைகளுக்கான லேசர் விளக்குமாறு, நீலத் திமிங்கலங்களின் தகவல் பரிமாற்ற முறை, எலக்ட்ரிசிடிக்கு மாற்றாக வரவிருக்கும் விட்ரிசிடி என நூலில் இடம் பெற்றிருக்கும் சில அத்தியாயங்களின் பெயர்களே வியப்பூட்டுகின்றன.
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ஏன்? எப்படி? அறிவியல் புதுமைகள்’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
Tamils use many verbs often which end with the sound or suffix PADU and they are all conjugated in the same way. It is classified as Fourth Class verb in the Seven Verb classification of Tamil Language.
கவலைப்படு = Kavalai= worry (noun)
Kavalaip padu (verb)= worrying
வெட்கப்படு = Vetkam = shyness, shame (noun)
Vetkap padu (verb) = feel ashamed, feeling shy
சந்தோஷப்படு = Santhosham= Happiness (noun)
It is a Sanskrit word, commonly used by the Tamils
Once you one conjugation of the above you can use a lot other similar verbs in the same way. We have already seen Saappidu (eat). These PADU verbs are in the same class. Look at the charts below:
Download them and print them in larger font or save them on Desktop and enlarge them
Also look at Studytamil.wordpress.com for my old lessons posted ten years ago.
இதாலியில் அதிசய கண்டுபிடிப்பு– வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்
அதிசயங்களுக்குக் குறைவே இல்லை; விஞ்ஞானிகள் மட்டும்தான் வாரம்தோறும் அதிசயக் கண்டுபிடிப்புகளை சொல்லுவார்கள் என்று நாம் நினைக்கலாம். வரலாற்று அறிஞர்களும் வாரம்தோறும் புதிய செய்திகளை அளித்த வண்ணம் இருக்கின்றனர். மேலை நாடுகளில் இதற்காக பல மாதப்பத்திரிக்கைகள் விற்பனை ஆகின்றன. அதில் யார் எங்கே என்ன புதையலைக் கண்டுபிடித்தார்கள், எந்த வரலாற்று ஆவணத்தை, கலைப் பொருளை என்ன விலைக்கு ஏல நிறுவனங்கள் விற்றன என்ற புதிய செய்திகள் நூற்றுக் கணக்கில் வெளியாகின்றன. ஆனால் 8-11-2022 அன்று எல்லா முக்கிய நாளேடுகளும் வெளியிட்ட செய்தி இத்தாலியின் வரலாற்றையே மாற்றி எழுதும் அளவுக்கு முக்கியமானவை என்று பத்திரிக்கைகள் கொட்டை எழுத்தில் செய்திகளை வெளியிட்டன.. அப்படி என்ன அதிசயம் ?
முதலில் எட்ருஸ்கன் நாகரீகத்துக்கும் , இந்துக்களுக்கும் உள்ள தொடர்பை அறிந்தால் இதன் முக்கியத்துவம் இன்னும் அதிகம் ஆகும்
இந்துக்களைப் போல அவர்களும் ‘சுவஸ்திகா’ சின்னத்தை அதிக அளவு பயன்படுத்தினர்.
அவர்களும் பறவை சகுனத்தில் நம்பிக்கை கொண்டிருந்தனர் ;
அவர்கள் பாபிலோனியர் போல கல்லீரல் ஜோதிடம், ஆரூடத்தில் நம்பிக்கை உடையவர்கள் ;
இந்துக்களைப் போலவே தாயத்துக்கள் , காணிக்கைகள் செய்தனர்; குழந்தையின் ஆரோக்கியத்துக்காக குழந்தை உருவம் செய்து காணிக்கையாகக் கொடுத்தல் முதலியன குறிப்பிட்டத் தக்கவை.
28 Jul 2012 — Etruria is the modern day Tuscany and part of Umbrian Italy. They ruled Rome from 616-509 BC. Roman civilization was greatly influenced by …
இதாலி நாட்டில் இருந்த எட்ருஸ்கன் நாகரீகம் இந்துக்கள் போலவே பறவைகள் சகுனத்தில் ..
எனக்கு இந்த ஆராய்ச்சியில் மிகவும் ஈடுபாடு இருப்பதால் இத்தாலிக்கு இரு முறை சென்றபோது ரோம் நகரின் ஒதுக்குப் புறத்திலுள்ள எட்ருஸ்கன் மியூசியத்துக்குச் (ETRUSCAN MUSEUMIN ROME) சென்று வரலாற்று கலைப் பொருட்கள் சின்னங்களை நேரில் கண்டேன்.
இதாலியில் ஒரு ஊற்றுக்கு அடியில் 24 சிலைகளைக் கண்டுபிடித்துள்ளனர். அவைகளில் எட்ரூஸ்கன் மற்றும் லத்தீன் மொழியில் பெயர்களும் வேறு சில குறிப்புகளும் காணப்படுகின்றன . இவைகளை கிறிஸ்தவர்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்னாள் கற்களைப் போட்டு அடைத்துவைத்தனர். அதற்கு முன்னர் அகஸ்டஸ் ஸீஸர் முதலிய புகழ்பெற்ற மன்னர்கள் அங்கே வந்து பழைய தெய்வங்களை வழிபட்டனர் . பழைய தெய்வங்களை வழிபடக்கூடாதென்பதற்காக பெரிய கற்களைப் போட்டு அந்த இடங்களை கிறிஸ்தவ வெறியர்கள் மூடிவைத்தனர். இப்பொழுது பெரிய கற்களை அகற்றியபோது 24 உலோக விக்ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது இயற்கையான வெந்நீர் ஊற்று. மக்கள் அங்கே வந்து குளித்துவிட்டு கிறிஸ்துவுக்கு முந்தைய ரோமானிய தெய்வங்களை வழிபட்டனர். அப்படிச் செய்கையில் நல்ல அதிர்ஷ்டம் அடிப்பதற்காக காசுகளை ஊற்றில் எறிவார்கள். குழந்தைகளுக்காக வேண்டிக்கொண்டு உருவங்களையும் தண்ணீரில் எறிவார்கள் ; அப்படிப்பட்ட 5000 நாணயங்களும் கலைப்பொருட்களும் 2019 முதல் கிடைத்துவந்தன. இப்பொழுது கிறிஸ்தவர்கள் அடைத்துவைத்த கற்களை அகற்றியபோது பெரிய அதிசயம் காத்திருந்தது 24 உலோக விக்ரகங்கள் கிடைத்தன. அவற்றில் ஐந்து, ஆள் உயரம் உடையவை. எட்ருஸ்கன்கள் வழிபட்ட தெய்வங்கள் அவை.
டஸ்கனி பிரதேசத்தில் சியெனா பகுதியில் சான் காசியானோ என்ற சிறிய ஊர் உள்ளது அங்குள்ள இயற்கையான வெந்நீர் ஊற்று 2500 ஆண்டுகளாக பயன்படுகிறது அதிலுள்ள உப்புகள் , உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்பதால் அகஸ்டஸ் சீசர் என்ற புகழ்பெற்ற மன்னர் முதல் பாமரர் வரை அங்கே வந்து குளித்தனர்.(a thermal bath in San Casciano, a small town in the province of Siena, Tuscany.). கிறிஸ்தவ மதம் பரவியவுடன் பழைய தெய்வங்கள் இருந்த பகுதிகளை கிறிஸ்தவ வெறியர்கள் அடைத்துவிட்டு புதிய ஊற்றுப் பகுதியை உண்டாக்கினர் ; காலப்போக்கில் அது சகதி நிறைந்த பகுதியாகி கேட்பாறற்றுக் கிடந்தது. 2019 முதல் அங்குள்ள பல்கலைக் கழகப் பேராசிரியர் தலைமையில் ஆராய்ச்சி துவங்கியது . நவம்பர் எட்டாம் தேதி (2022) முக்கிய அறிவிப்பு வெளியிட்டு என்ன என்ன கிடைத்தன, அதன் முக்கியத்துவம் என்ன என்பதை தொல்பொருட் துறையினர் அறிவித்தனர்.
பல காலத்துக்கு கிறிஸ்தவர்களும் எட்ருஸ்கன்க்ளும் இங்கே கூட்டாக வந்து வழிபட்டது தெரிகிறது ஆனால் வெளியே அவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் குடுமி பிடிச்சண்டைகள் நடந்தன. பிறமத வழிபாட் டை அழிக்க முடியாததால் பெரும் கற்களால் அப்பகுதியை கிறிஸ்தவர்கள் மூடினர்.
இப்போது கண்டெடுக்கப்பட்ட சிலைகள் விவரம் வருமாறு:-
இவை 2300 ஆண்டுகளுக்கு முன்னர் படைக்கப்பட்டவை .
Hindu Swastika in Etruscan
ரோமானியர்களும் கிரேக்கர்களும் ஆரோக்கிய தேவதையாக வழிபட்ட தேவியின் பெயர் ஹைஜியா ; அவள் கையில் ஒரு பாம்பு சுற்றியிருக்கும். அவனுடைய சிலை அருகில் படுத்திருக்கும் இளைஞனுடன் கிடைத்திருக்கிறது sleeping ephebe lying next to Hygeia, the goddess of health, with a snake wrapped around her arm.
அப்பாலோ (APOLLO) சிலை மற்றும் குழந்தைகள் விக்ரகங்கள், மன்னர்கள் என்று கருதப்படும் விக்ரகங்களும் கிடைத்துள்ளன. 1972-ம் ஆண்டில் தாடியுடன் கூடிய இரண்டு கிரேக்க உருவங்கள் கிடைத்தன. அதற்குப்பின்னர் கிடைத்த பொக்கிஷம் இவை என்று இதாலிய மியூசிய டைரக்டர் மாஸிமோ ஓசன்னா கூறினார்.
தொல் பொருட் துறை அறிஞரும் அங்குள்ள பல்கலைக்கழகப் பேராசிரியுமான ஜாகோபோ தபோல்லி இந்த ஆராய்ச்சிகளை 4 ஆண்டுகளாக நடத்திவருகிறார்.. எட்ரூஸ்கன்கள் கி.மு 900 முதல் டஸ்கனி அம்ப்ரியா பகுதியில் வாழ்ந்தனர். முதல் நூற்றாண்டில் ரோமானிய பேரரசு ஸ்தாபிக்கப்படும் வரையில் அவர்கள் கொடிகட்டிப் பறந்தனர். பின்னர் அது கிறிஸ்தவ மதத்தில் கரைந்துபோய்விட்டது.
காணிக்கையாக செலுத்தப்பட்ட ரோமானிய தெய்வங்களின் சிலைகளும் இளையோர் முதியோர் உருவங்களும் பெயர்களுடன் காணப்படுகின்றன. அவை லத்தீன் மற்றும் எட்ருஸ்கன் பெயர்களாக இருப்பதால் இரு பிரிவினரும் முதல் 500 ஆண்டுகளுக்கு கூட்டாக வழிபாடுசெய்ததும் தெரிகிறது.
–SUBHAM—
Tags- எட்ருஸ்கன் , இதாலி , புதிய விக்ரககங்கள், சிலைகள், வெந்நீர் ஊற்று
1500 YEARS AGO, CHRISTIANS TRIED TO COVER UP ANCIENT PAGAN GODS OF ETRUSCANS. BUT NOW THE PAGAN GODS ARE DISCOVERED AGAIN. ITALIAN HISTORY WILL BE REWRITEN.
A discovery that will rewrite history’: 24 exceptionally well preserved bronzes unearthed by archaeologists in Tuscany
The artefacts, found at ancient Roman baths, are among the most “significant bronzes ever produced in the history of the ancient Mediterranean”
Italian archaeologists announced today (8-11-2022) the discovery of 24 ancient Roman bronze statues in a thermal bath in San Casciano, a small town in the province of Siena, Tuscany.
The artefacts, dating from between the second century BC and the first century AD, are among the most “significant bronzes ever produced in the history of the ancient Mediterranean,” said Massimo Osanna, the director-general of Italy’s museums, which is part of the Ministry of Goods and Cultural Activities
Collection of bronzes dating back 2,300 years sheds light on transition between Etruscans and Romans
Among the well-preserved statues were five almost a metre in height.
Tue 8 Nov 2022
The 24 partly submerged statues, which date back 2,300 years and have been hailed as the most significant find of their kind in 50 years, include a sleeping ephebe lying next to Hygeia, the goddess of health, with a snake wrapped around her arm.
Archaeologists came across the statues during excavations at the ancient spa in San Casciano dei Bagni, near Siena. The modern-day spa, which contains 42 hot springs, is close to the ancient site and is one of Italy’s most popular spa destinations.
The ancient Etruscan spa was developed by the Romans and visited by emperors including Augustus.
( Photograph: Jacopo Tabolli/Universita per Stranieri di Siena/EPA)
Close to the ephebe (an adolescent male, typically 17-18 years old) and Hygeia was a statue of Apollo and a host of others representing matrons, children and emperors.
Believed to have been built by the Etruscans in the third century BC, the baths, which include fountains and altars, were made more opulent during the Roman period, with emperors including Augustus frequenting the springs for their health and therapeutic benefits.
Alongside the 24 bronze statues, five of which are almost a metre tall, archaeologists found thousands of coins as well as Etruscan and Latin inscriptions. Visitors are said to have thrown coins into the baths as a gesture for good luck for their health.
Massimo Osanna, the director general of museums at the Italian culture ministry, said the relics were the most significant discovery of their kind since two full-size Greek bronzes of naked bearded warriors were found off the Calabrian coast near Riace in 1972. “It is certainly one of the most significant discoveries of bronzes in the history of the ancient Mediterranean,” Osanna told the Italian news agency Ansa.
The ancient spa was active until the fifth century, when the pools were sealed with heavy stone pillars, which the archaeologists removed.
The excavation project at San Casciano dei Bagni has been led by the archaeologist Jacopo Tabolli since 2019. In August, several artefacts, including fertility statues that were thought to have been used as dedications to the gods, were found at the site. Tabolli, a professor at the University for Foreigners of Siena, described the latest discovery as “absolutely unique”.
The Etruscan civilisation thrived in Italy, mostly in the central regions of Tuscany and Umbria, for 500 years before the arrival of the Roman Republic. The Etruscans had a strong influence on Roman cultural and artistic traditions.
Initial analysis of the 24 statues, believed to have been made by local craftsmen between the second and first centuries BC, as well as countless votive offerings discovered at the site, indicates that the relics perhaps originally belonged to elite Etruscan and Roman families, landowners, local lords and Roman emperors.
The discovery of the well-preserved statues has been hailed as the most significant of its kind in 50 years.
Tabolli told Ansa that the hot springs, rich in minerals including calcium and magnesium, remained active until the fifth century, before being closed down, but not destroyed, during Christian times. The pools were sealed with heavy stone pillars while the divine statues were left in the sacred water.
The treasure trove was found after archaeologists removed the covering. “It is the greatest store of statues from ancient Italy and is the only one whose context we can wholly reconstruct,” said Tabolli.
The recently appointed Italian culture minister, Gennaro Sangiuliano, said the “exceptional discovery” confirms once again that “Italy is a country full of huge and unique treasures”.
The relics represent an important testament to the transition between the Etruscan and Roman periods, with the baths being considered a haven of peace.
“Even in historical epochs in which the most awful conflicts were raging outside, inside these pools and on these altars the two worlds, the Etruscan and Roman ones, appear to have coexisted without problems,” said Tabolli.
Excavations at the site will resume next spring, while the winter period will be used to restore and conduct further studies on the relics.
The artefacts will be housed in a 16th-century building recently bought by the culture ministry in the town of San Casciano. The site of the ancient baths will also be developed into an archaeological park.
“All of this will be enhanced and harmonised, and could represent a further opportunity for the spiritual growth of our culture, and also of the cultural industry of our country,” said Sangiuliano.
Xxxx
Intricate and rich in detail, the bronzes include votive statues of pagan gods as well as depictions of young men, elderly matrons and emperors. Some are preserved fully intact while others are dismembered. Archaeologists speculate that the works, five of which are around a metre tall, were cast by local craftsmen. A number are so well preserved that they still carry inscriptions of the names of eminent local Etruscans, a pre-Roman people that lived in the region.
Excavations began in 2019 in a Roman-Etruscan sanctuary close to the springs that fuelled the Bagno Grande, or Great Bath, of San Casciano. The statues served a religious purpose peculiar to the bathhouse, and many of them—alongside a smattering of religious objects, cast in silver and gold—represent figures connected to healing.
Archaeologists speculate that the sanctuary was later sealed with heavy stone columns by Christians in the fifth century. This protected the statues from the mud and boiling streams ejected by the bathhouse, which dates to the third century BC.
Votive offerings and around 5,000 gold, silver and bronze coins were also found during three years of excavations at the site, which has drawn visitors to its natural thermal waters for more than two millennia.
Jacopo Tabolli, the Etruscan specialist who led the project, called it an “unparallelled” discovery that promised to shed new light on the period when the bronzes were created, from around the 2nd century BC to the first century AD.
It was during this time that the ancient civilisation of the Etruscans, conquered by Rome, was gradually absorbed into the Roman Empire.
picture shows Hindu Swastika (this is from old file)
28 Jul 2012 — Etruria is the modern day Tuscany and part of Umbrian Italy. They ruled Rome from 616-509 BC. Roman civilization was greatly influenced by …
முந்தைய கட்டுரையில் (9-11-22) மருத்துவத்தில், குறிப்பாக வயாக்ரா VIAGRA என்னும் வீரிய மாத்திரையில் நைட்ரஜன் (NITROGEN) உப்புகள் எப்படி பயன்படுகின்ற்ன என்று கண்டோம்.
இதோ போர்க்கள, பொருளாதார பயன்கள்:
நோபல் பரிசின் கதை NOBEL PRIZE
பொட்டாசியம் நைட்ரேட் (Potassium Nitrate) என்னும் நைட்ரஜன் உப்புதான் முதல் முதலில் வெடி மருந்துகளில் பயன்பட்டது. அந்தக் காலத்தில் இதை டாய்லெட்- கழிப்பறைகளிலிருந்து சுரண்டி எடுத்தார்கள் கழிவுப்பொருட்களில் உள்ள நைட்ரஜன் அங்குள்ள பாக்டீரியாவின் தாக்குதலால் பொட்டாசியம் நைட்ரேட் படிகங்களை லெட்ரின், சாக்கடைச் சுவர்களில் படியச் செய்யும். அத்தோடு கரி மற்றும் கந்தகத்தைக் கலந்தால் வெடி மருந்து (Gun Powder) கிடைக்கும் .
இதற்குப் பின்னர் 1846-ம் ஆண்டில் நைட்ரோ கிளிசரின் என்ற அதிக சக்தியுள்ள வெடிப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டது. நைட்ரிக் அமிலம் அல்லது கந்தக அமிலத்துடன் கிளிசரின் (GLYCOL க்ளைகால்) என்ற பொருளைக் கலந்தால் நைட்ரோகிளிசரின் கிடைக்கும். இது சுரங்கம் தோண்டும் தொழிலிலும் கல் உடைக்கும் மலைப் பாறைகளிலும் பயன்பட்டது. ஆயினும் இது எப்போது வெடிக்கும் என்பது தெரியாததால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டன. சுவீடிஷ் விஞ்ஞானியான ஆல்ப்ரெட் நோபல் (1833-1896) ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்தார். நைட்ரோ கிளிசரினை களிமண் கட்டியில் உறியவைத்துவிட்டால் நாம் வேண்டும் போது அதை வெடிக்கச் செய்யலாம்; இதற்கு மற்றோர் வெடித்திரி இருந்தால் போதும்; அதைக்கொளுத்தும்போது அது வெடிக்கும்; பாறைகளை , பாதுகாப்போடு தகர்க்கலாம் என்று அறிவித்தார். இந்தக் கண்டுபிடிப்பு அவருக்கு ஏராளமான செலவத்தை ஈட்டித் தந்தது. இதுதான் டைனமைட் (Nitro-glycerine and Dynamite). தனக்குக் கிடைத்த செல்வத்தில் ஒருபகுதியை ஒதுக்கி 1901-ம் ஆண்டில் நோபல் சமாதானப் பரிசை நிறுவினார்.
இதற்குப் பின்னர் 1863-ம் ஆண்டில் TNT என்னும் மேலும் சக்திவாய்ந்த வெடிப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் நைட்ரஜன் கொடுத்த ரசாயனப் பொருளே. இது ட்ரை நைட்ரோ டாலுயீன் (TRI NITRO TOLUENE) என்பதன் சுருக்கம். பின்னர் அம்மோனியம் நைட்ரேட்டையும் கூட வெடிமருந்தாக்கலாம் என்று அறிந்தனர். இவை அனைத்தும் போர்க்களத்திலும் பயன்பட்டன. ஆனால் தற்காலத்தில் இவை எல்லாம் பழங்கதைகள் ஆகிவிட்டன. இப் போது RDX மற்றும் HMX என்ற மிகவும் சக்திவாய்ந்த வெடி மருந்துகள் வந்துவிட்டன. இவைகளையே ராணுவம் பயன்படுத்துகிறது.
இது எல்லாவற்றிலும் என்ன நடக்கிறது என்றால், அந்த ரசாயனப்பொருளில் இருக்கும் நைட்ரஜன் மீண்டும் வாயுவாக மாற ஆசைப்பட்டு விரிவடைகிறது. அப்போது பிரம்மாண்ட வெப்பமும் வீச்சும் ஏற்படுகிறது .
மிகப்பெரிய விபத்துகள்
கனடாவில் நோவா ஸ்காட்டியா பகுதியில் (HALIFAX) ஹாலிபாக்ஸ் என்னும் நகரம் உள்ளது. 1917ம் ஆண்டில் 2750 டன் வெடிப்பொருளுடன் வந்த கப்பல் மற்றொரு கப்பலின் மீது மோதியதில் அந்த நகரின் பெரும்பகுதி வெடித்துச் சிதறியது. அதில் 1600 பேர் கொல்ல ப்பட்டனர் ; 9000 பேர் காயம் அடைந்தனர்
அமெரிக்காவில் டெக்சாஸில்(TEXAS) அம்மோனியம் நைட்ரேட் ஏற்றி வந்த கப்பலில் மிகப்பெரிய தீ விபத்து நடந்தது . அங்கு சேமித்து வைக்கப்பட்ட 5000 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததில் 552 பேர் இறந்தனர் 3000 பேர் காயம் அடைந்தனர். . கப்பலுக்கு ஒரு மைல் வட்டாரத்தில் இருந்த அத்தனை கட்டிடங்களும் தூள் தூளாயின. மக்கட் தொகையைக் குறைப்பதில் நைட்ரஜன் ஆற்றும் கைங்கர்யம் கொஞ்சந ஞ்சமல்ல!!
Xxx
ரசாயன/ வேதியியல் குறிப்புகள்
குறியீடு – N
அணு எண் – 7
உருகு நிலை – மைனஸ் 210 டிகிரி C
கொதி நிலை – மைனஸ் 196 டிகிரி C
இயற்கையில் உள்ள ஐசடோப்புகள் – நைட்ரஜன் 14, நைட்ரஜன் 15
பொதுவாக இது மணம் , நிறம் அற்றது;
வாயு ரூபத்தில் காற்றில் இருக்கிறது.
நம் சுவாசிக்கும் காற்றில் 78 சதவிகிதம் நைட்ரஜன் இருக்கிறது . இதற்கு அதிகமானால் மூச்சுத்திணறல் ஏற்படும். ஆயினும் உயிரினங்கள் நைட்ரஜன் இல்லாமல் வாழமுடியாது ஏனெனில் மரபணுவில் DNA யில் இது இருக்கிறது உடலில் சுரக்கும் நொதி என்னும் என்சைம் களிலும் அமினோ அமிலங்களிலும் , ரத்தத்திலுள்ள சிவப்பு அணுவான ஹீமோகுளோபினிலும் ஒரு நரம்பிலிருந்து மற்றோர் நரம்புக்கு செய்தி அனுப்பும் நரம்பு நுனியிலும் நைட்ரஜன் ரசாயனம் இருக்கிறது.
Xxx
பொருளாதார உபயோகங்கள்
பூமியின் காற்று மண்டலத்தில் 3 மில்லியன் பில்லியன் டன் நைட்ரஜன் இருப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனர். காற்றிலுள்ள நைட்ரஜன் வாயுவில் 45 மில்லியன் டன் வாயுவை தொழிசாலைகள் உபயோகிக்கின்றன . அதாவது ரசாயனப் பொருட்களாக மாற்றிப் பயன்படுத்துகின்றன. நைட்ரஜன் வாயுவை திரவ நிலைக்கு குளிரச் செய்து திசுக்கள், ரத்தம், விந்து/ கரு ஆகியவற்றை பாதுகாக்கின்றனர் . வாயுவை எண்ணெய்க் கிணறுகளில் செலுத்தி மேலும் எண்ணை எடுக்கின்றனர்.
வெடி மருந்து முதல் அம்மோனியா வாயு வரை, நூற்றுக்கணக்கான நைட்ரஜன் ரசாயனப் பொருட்கள் பயன்படுகின்றன. நைட்ரிக் அமிலம்தான் , அமில வகைகளில் அதிக சக்தி உடையது. இதுவும் அம்மோனியா வாயுவும் உருவாக்கும் பொருட்கள், பிளாஸ்டிக், நைலான் முதலிய துணி வகைகள், பாலிதீன், புகைப்படத் தொழில் ரசாயனங்கள் , ராக்கெட் எரிபொருள், சாயத் தொழில் ஆகியவற்றில் பெரும் அளவு பயன்படுத்தப்படுகிறது.
எரிமலை கக்கும் நைட்ரஜன் , மின்னல் உண்டாக்கும் நைட்ரஜன் ,அவரை முதலிய பயறு வகை தானியங்களில் காணப்படும் நைட்ரஜன் சுழற்சி, ஆகியவற்றை அடுத்த பகுதியில் காண்போம்