வேண்டும் அளவில் உதவும் பெருமாள்’ (Post.11,429)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,429

Date uploaded in London – –   10 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அருணகிரிநாதர் போற்றும் ‘ வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாள்! 

ச.நாகராஜன் 

அருணகிரிநாதர் முருகனிடம் மிக உயரிய கிடைத்தற்கரிய பொருளை விரும்பி வேண்டுவது நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்.

1) திருவருணை திருத்தலம்

ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே

  ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே

கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே

  குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே

மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே

  வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே

ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்

   ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே!

                  (பாடல் எண் 1328)

அடியார்களால் பெரிதும் விரும்பிப் பாடப்படும் புகழ் பெற்ற திருப்புகழ் பாடலான இதன் பொருள் :

ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களை செய்தது ஒரு முகம். சிவபெருமானுக்கு ஞன உபதேசம் செய்தது ஒரு முகம். உன் திருப்புகழைப் பாடி ஓதும் அடியார்களின் இருவினைகளையும் தீர்ப்பது ஒரு முகம். கிரௌஞ்ச மலையை உருவும்படியாக உனது வேலை ஏவியதும் பின்பு அமைதி காத்ததும் ஒரு முகம். உனக்கு எதிரியாக இருந்த அசுரர்களை வதைத்து அழித்ததும் உன் முகம். வள்ளியைத் திருமணம் செய்து கொள்ள விழைந்து ஆசையுடன் வந்தது உன் முகம்.

இப்படி ஆறுமுகமாக நீ காட்சி அளிப்பதன் பொருளை எனக்கு அருளிச் செய்ய வேண்டும்.  தொன்மையாக இருக்கும் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே!

ஆறுமுகத்தின் பொருளை விளக்க வேண்டும் என்று இப்படி வேண்டுகிறார் அருணகிரிநாதர்.

இந்தப் பாடலின் உள்ளார்ந்த தெய்வீக அர்த்தம் பரந்து விரிந்த ஒன்று.

2) அடுத்து திருமாந்துறை திருத்தலத்தில் அவர் கூறுவது இது:

வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச

   வேண்டிய பதங்கள் – புரிவோனே

          (பாடல் எண் 899 – ஆங்குடல் வளைந்து எனத் தொடங்கும் பாடல்)

பாடலின் பொருள் : வேண்டிக் கொள்ளும் அடியார்கள் கொண்டுள்ள பதவி மேம்பட்டு விளங்க அவர்கள் விரும்பிய திருவடிகளைத் தந்து அருள் புரிபவனே!

3) அடுத்து கழுகுமலை திருத்தலத்தில் அவர் அருளுவது இது:

வேண்டு மடியர் புலவர் வேண்ட அரிய பொருளை

   வேண்டு மளவி லுதவும்  – பெருமாளே

(பாடல் எண் 634  – கோங்கமுகை மெலிய எனத் தொடங்கும் பாடல்)

பொருள் : வேண்டி நிற்கும் அடியார்களும் புலவர்களும் உன்னை வேண்ட, வேண்டுதற்கு அருமையான பொருளை அவர்களுக்கு வேண்டிய அளவுக்குத் தந்து உதவும் பெருமாளே.

வேண்டுவதை வேண்டும் அடியார்களுக்கு வேண்டும் அளவு தரும் பெருமாளை, ஆறுமுகம் ஆன பொருள் நீ அருள வேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுவது எவ்வளவு ஆழ்ந்த பொருள் படைத்த ஒன்று!

அருணகிரிநாதர் வழி செல்வோம்; அவர் அருளிய திருப்புகழை ஓதுவோம். வேண்டுவதை வேண்டுமளவு தரும் வேலனின் அருளைப் பெறுவோம்!

***

புத்தக அறிமுகம் – 109 

நவகிரகங்கள்

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1.    நவக்கிரகங்கள் 

2.    நவக்கிரக பட்டியல்  

3.    நவக்கிரக கோவில்கள்    

4.    நவக்கிரகங்களுக்கு உரிய ரத்தினக் கற்கள் 

5.    நவக்கிரக மண்டலம் 

6.    நவக்கிரகங்களுக்கு உரிய எண்கள்   

7.    நவக்கிரக யந்திரங்கள்

8.    நவக்கிரக ஸ்தோத்ரம்

9.    நவக்கிரக அஷ்டோத்தர சத நாமாவளி

10.   சூரிய அஷ்டோத்தர சத நாமாவளி   

11.   சந்திர அஷ்டோத்தர சத நாமாவளி   

12.   செவ்வாய் அஷ்டோத்தர சத நாமாவளி    

13.   புதன் அஷ்டோத்தர சத நாமாவளி   

14.   குரு அஷ்டோத்தர சத நாமாவளி

15.   சுக்ர அஷ்டோத்தர சத நாமாவளி    

16.   சனி அஷ்டோத்தர சத நாமாவளி

17.   ராகு அஷ்டோத்தர சத நாமாவளி    

18.   கேது அஷ்டோத்தர சத நாமாவளி   

19.   ஆதித்ய ஹ்ருதயம்

20.   சூர்ய நமஸ்காரம்   

21.   கோளறு திருப்பதிகம்

22.   திருநள்ளாற்றுத் தேவாரம்

23.   தசரதர் இயற்றிய ஸ்தோத்ரம்

24.   நவ கிரக ஸ்தோத்ர கிருதிகள்  

25.   ராமாயண பாராயணமும் கிரக தோஷ நிவர்த்தியும்

26.   நவக்ரஹங்களுக்கு உரிய காலஹோரை விவரம்

27.   கிரகங்கள் – அறிவியல் உண்மைகள்  

*

நூலில் இடம் பெறும் முன்னுரை இது:

 நம்மை ஆளுகின்ற நாயகர்கள் நவ கிரகங்கள்! 

வினைப்பயனை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற இயற்கை நியதி ஒரு பக்கம் இருக்க அவற்றில் கடும் விளைவுகளை ஏற்படுத்துவற்றில் மாற்றக் கூடியதை மாற்றவும், தீய பலன்களின் கடுமையைக் குறைக்கவும், நல்ல பலன்களின் சக்தியை அதிகரிக்கவும் நவ கிரக வழிபாடு உற்ற துணையாக அமையும்.

இப்படி ஒரு நூலை வெளியிட வேண்டும் என்றவுடன் ஆக்கமும் ஊக்கமும் தந்த என் சகோதரர் திரு வி.எஸ். மீனாட்சிசுந்தர் அவர்களுக்கு இந்த நூலை சமர்ப்பிக்கிறேன்.

நூலை உருவாக்க ஆக்கமும் ஊக்கமும் தந்த என் அன்னை, சகோதரர்கள், என் மனைவி மற்றும் மகன்களுக்கு எனது நன்றி.

நவகிரகங்களை உரிய முறையில் வழிபடுவதன் மூலம் ஆசி பெற்று மென்மேலும் உயரவிருக்கும் வாசகர்களுக்கு இந்த நூலை சமர்ப்பிக்கிறேன்.

சென்னை                                        ச.நாகராஜன்

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

This book is an encyclopedia of nine planets. This book consists of 27 chapte encompassing the description of the temples, gems and numbers of the nine planets.gSome of them are the yanthras, sthothras, ashtothras, ADHITYA HRUDAYAM, KOLARU THIRUPPADHIKAM, Dasaratha’s SANEESWARA STHOTHRAM.Also the chanting of Ramayana and the method of chanting for the parihara of the planetary positions are included. Besides this all the scientific truths behind the planets are also well explained. This book can help us to get over the evil effects of the planetary positions by chanting of the shlokas.

 நவக்கிரகங்கள் பற்றிய கலைக்களஞ்சியம்! நவக்கிரகக் கோவில்கள், அவற்றிற்குரிய ரத்தினக் கற்கள், எண்கள், யந்திரங்கள், ஸ்தோத்திரங்கள், அஷ்டோத்திரங்கள், ஆதித்ய ஹிருதயம், கோளறு திருப்பதிகம், தசரதர் இயற்றிய சனீஸ்வர ஸ்தோத்திரம், கிரக தோஷ நிவர்த்திக்குச் செய்ய வேண்டிய ராமாயண பாராயண முறை ஆகியவற்றை மட்டுமின்றி நவக்கிரகங்கள் குறித்த அறிவியல் உண்மைகளையும் தரும் நூல்.

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ நவ கிரகங்கள் ’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

Tamil Hindu Encyclopaedia – 22 (தமிழ் மன்னர் செய்த யாகங்கள் Yagas by Tamil Kings)- Post 11,428

Prince Charles (now king) doing Yaga in Rishikesh

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,428

Date uploaded in London – 9 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

 Amazing information about the Yagas and  Yagnas  performed by ancient Tamil Kings is available from the Sangam Tamil Literature, coins, inscriptions and Kalidasa’s Raghuvamsa.

Kalidasa of the first century BCE is the first poet in India to connect Pandya Kings with Agastya and the Yagas. We know that Kalidasa was well versed with history from South India to Persians in Iran. We also know that Kalidasa was the first poet to describe the geography of a vast area in Asia. His depiction and description were confirmed by the Yupa Stamba coins, Asvamedha coins of Pandyas and the Mula varman’s Sanskrit inscription in the deepest forests of Borneo in Indonesia.

Following the oldest Pandya king Mudu Kudumi Peru Vazuthi , Mula varman (muula) also installed a Yupa pillar in the virgin forests of Indonesia in Fourth Century CE. He also did the 16 Dhanas mentioned in Hindu scriptures. No wonder Hindu Yagas spread up to Indonesia in 4th century CE itself. Varman suffix is found even Mahabharata and later Pallavas

The Pandya King Mudu Kudumi had the epithet “Pal Yaaga Saalai”, meaning King who performed simultaneously Many Yagas. One of the Sangam poets wonder how come he was able to erect so many Yupa pillars throughout Pandya country. Two more poets also praised him for the Yagas. Coins with his name Peru Vazuthi has Yupa post and Horse which confirmed he did Asvamedha Yaga. This is confirmed by the greatest poet of India Kalidasa of first century BCE (please see Penguin Book by Chandra Rajan and great Sanskrit scholars to confirm his First century date).

During Indumati Swayamvara all the kings of Akhanda Bharat/ Greater India were introduced to Princess Miss Indumati by her girl friend.  Coming to Pandya King she said,

विन्ध्यस्य संस्तम्भयिता महाद्रेर्निःशेषपीतोज्झितसिन्धुराजः|
प्रीत्याश्वमेधावभृथार्द्रमूर्तेः सौस्नातिको यस्य भवत्यगस्त्यः॥ ६-६१

vindhyasya saṁstambhayitā mahādrerniḥśeṣapītojjhitasindhurājaḥ |

prītyāśvamedhāvabhṛthārdramūrteḥ sausnātiko yasya bhavatyagastyaḥ || 6-61

6-61. vindhyasya mahA adreH= of Mt. vindhya, great, mountain; sa.mstambhayitA= one who stalled [its upward growth]; niHsheSha= completely; pIta= drunk; ujjhita= spoted; sindhu rAjaH= rivers, lord of – ocean – one who drank ocean and spouted it out; agastyaH= sage agastya; ashva medha= hose, ritual; avabhR^itha= a sacrted bathg on completing that ritual; Ardra mUrteH= wet, with body – when his body is still wet after the sacred bath; yasya= in whom; prItyA= friendlily, not by pity; sausnAtikaH= sukhena snAtaH iti pR^icChantaH – or – sushobhanam snAtam susnAtam pR^icChati; pR^icChatau susnAtAdibhyaH – those about whom enquiries are made if they have had a bath in due form after Vedic ritual

“Sage who stopped the upward growth of the great Vindhya mountain, who quaffed off and spouted out entire ocean, that sage Agastya will be the catechiser of this king when this Pandya king’s body is still wet after the concluding sacred bath of Ashvamedha ritual enquiring, ‘…have you performed the ceremony of ablution after Vedic-ritual ashvamedha properly….’ [6-61]

Greatest proof for Agastyaa- Pandyaa friendship and the clearest proof for Mudukudumi Peru Vazuthi’s Asvamedha yaaga comes from Kalidasa’ss Raghu vamsa. Sangam poets never praised any other Pandya in 3 or 4 places all mentioning his Yagas or Yupa posts.

Agastya belittling Vindyas= First man to cross Vindhyas through road route via the hills. Others used coastal routes to South India

Agastya drinking ocean= First man to cross Bay of Bengal/ Indian ocean with a huge Pandya army to establish Hindu Empire in 7 South East Asian countries which survived for 1500 years till Muslim invaders destroyed it.

One Pandya king has the epithet “who died in ocea”n and he was the one who sang about Indra’s Amrita in Tamil. And the oldest Sanskrit inscription found in Vietnam is from a Pandya King called Sri Maaran. No other king in India has Maaran suffix. Mula varman also confirmed it from Indonesia.

xxx

Now let us look at the details in Sangam Poems:

Purananuru verse 224 : Yaga by Karikal Choza

Poet Karungkuzal Aathanaar sings this after the death of Karikalan, the Greatest of the Choza kings. He says his wives were deprived of auspicious jewellery 9hinduwomen wont wear jewellery after husband’s death). Poet also mentioned among other the things the Yaga performed by Karikaalan.

The Yaga altar was inside the circular brick area. There was also an eagle shaped altar with a tall Yupa post.

The remarkable thing in the poem is Eagle Shaped Fire Altar and  Tall Yupa post.

Those who watched Californian Sanskrit scholar Johan Frederik “Frits” Staal (3 November 1930 – 19 February 2012) organising 12 day Agnicayana ritual in Panjal village of Kerala would know how this eagle shape altar was constructed.

Purananuru – Part 224

அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம்;

துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி,

இரு பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்;

அறம் அறக் கண்ட நெறி மாண் அவையத்து,

முறை நற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த5

தூ இயல் கொள்கைத் துகள் அறு மகளிரொடு,

பருதி உருவின் பல் படைப் புரிசை,

எருவை நுகர்ச்சியூப நெடுந் தூண்,

வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்;

அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்:           10

இறந்தோன் தானே; அளித்து இவ் உலகம்!

அருவி மாறி, அஞ்சு வரக் கருகி,

பெரு வறங் கூர்ந்த வேனில் காலை,

பசித்த ஆயத்துப் பயன் நிரை தருமார்,

பூ வாள் கோவலர் பூவுடன் உதிரக்                15

கொய்து கட்டு அழித்த வேங்கையின்,

மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே.

  சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.

Translated by George L. III Hart

He won his victories in war, never sparing strong fortresses!
Together with his friends, he threw down whole pots of liquor!
He offered his shelter to the large families of bards!


Surrounded by his faultless women extolled for their purity,
for their immaculate nature, he performed the Vedic sacrifices
in the court of Righteousness where justice is well practiced
after those conversant with proper custom stand up and show
their knowledge, within the circling many-layered wall where
the towering post of sacrifice rises next to the kite/eagle to be fed!


He who had all that knowledge, how wise a man he was
who has died now and how this world is to be pitied!
Like venkai trees that cowherds strip of their branches,
cutting them with sharp swords to feed their precious
herds who are hungry in the fearful drought of summer
when the waterfalls dry up and as the branches of flowers fall,
the vigor of the trees is shattered,
so the sweet and tender women shed their ornaments!

Xxx

In Puram. Verse 15 , we come across Rig Vedic Sanskrit word Yupa and Tamilizad word of Sanskrit Havis (aavuthi in Tamil) ; it is cooked rice offered into fire with ghee

Ancient poet Nettimaiyaar sings in praise of Pandya king Mudu Kudumi Peru Vazuthi

நற்பனுவல் நால்வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்கப் பன்மாண்
 வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன்களம் பலகொல்?

— புறநானூறு 15

Xxx

Raajasuuya Yagna of Choza Perunarkilli

Poet Paandarankannanaar praises the Choza king Perunarkilli . He compared the king to valorous Lord Muruga (Skanda /Kartikeya)

To be continued…………………

 tags- யாகம், ராஜசூயம், அஸ்வமேத, முதுகுடுமி, பெருவழுதி, காளிதாசன், பெருநற்கிள்ளி, ஆவுதி, ஹவிஸ் 

மருத்துவத்தில் (வயாக்ரா மர்மம்) நைட்ரஜன்! (Post No.11,427)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,427

Date uploaded in London – 9 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

பிரபஞ்சத்திலுள்ள 118 மூலகங்களில் மிகவும் முக்கியமான மூலகம்/தனிமம் நைட்ரஜன் (NITROGEN) .முதலில் சில சுவையான விஷயங்களைக் காண்போம் . ஐரோப்பிய மொழிகளில் இதற்கு வெவ்வேறு பெயர்கள்!

கிரேக்க மொழியிலிருந்து நைட்ரஜன் என்ற சொல் தோன்றியது. நைட்ர்+ ஜென் (NITRE+GENES) , அதாவது நைட்ர் என்னும் உப்பை உண்டாக்கும் பொருள்.பொட்டாசியம் நைட்ரேட் என்ற உப்பை அதிகம் பயன்படுத்திய காலத்தில் அதை  நைட்ர் (Nitre ) என்றும் சால்ட் பீட்டர் (saltpetre )என்றும் அழைத்ததால் இப்படி ஒரு பெயர்.

ஆனால் பிரெஞ்சுக் காரர்களும் ஜெர்மானியர்களும் இதை வேறு சொற்கள் கொண்டு அழைப்பர். ஜெர்மானியர்கள் இதை ஸ்டிக் ஸ்டோப் (STICKSTOFF) என்பர் ; இதன் பொருள் மூச்சைத் திணறடிக்கும் பொருள் . பிரெஞ்சுக்காரர்கள் இதை  அஸோட் (AZOTE) என்று குறிப்பிட்டனர். அதன் பொருள்- உயிரற்ற பொருள். நைட்ரஜன் கலந்த வாயுவான அம்மோனியா (AMMONIA) இப்படி மூச்சுத் திணறடிக்கும் (PUNGENT) பொருள் ஆகும் . அம்மோன் என்னும் எகிப்திய கடவுளின் பெயர் சூட்டப்பட்டிருந்தது  . காரணம் என்னவெனில் அந்தக் காலத்தில் எகிப்து நாட்டில் அம்மோன் (AMMON) கோவிலுக்கு அருகில் அம்மோனியம் க்ளோரைட் (AMMONIUM CHLORIDE) தோண்டி எடுக்கப்பட்டது . இவை அனைத்தும் நைட்ரஜன் தொடர்புள்ளவை நைட்ரஜனும் ஹைட்ரஜனும் கலந்தது அம்மோனியா வாயு.

இரத்தத்தை உறையச் செய்து பாதுகாக்க, திரவ நிலையிலுள்ள நைட்ரஜனைப் (LIQUID NITROGEN)  பயன்படுத்துகிறார்கள் . இதே போல ஆண்களின் விந்து , பெண்களின் கரு/ முட்டை ஆகியவற்றைப் பாதுகாக்கவும் திரவ நைட்ரஜன் பயன்படுகிறது . உடலில் தேவையில்லாத திசுக்களை அகற்ற அந்த இடத்தை மிக, மிகத் தாழ்வான வெப்ப, அதாவது மிகவும் குளிர் நிலைக்குக் கொண்டுவந்தால் அவை இறந்துவிடும். அதற்கும் இதை உபயோகிப்பர். அதை க்ரியோ ஜெனிக் சர்ஜரி (CRYOGENIC SURGERY) என்பர்.

வயாக்ரா மர்மம்

நமது மூளையில் நைட்ரிக் ஆக்சைட் சிந்தேஸ் (NITRIC OXIDE SYNTHASE) என்ற என்ஸைம் (ENZYME நொதி) அதிகளவில் உள்ளது. இதுதான் சதைகளைத் தளர்த்த உதவுகிறது. ஆண்களின் வீரிய சக்தியை அதிகரிக்க வயாக்ரா (VIAGRA ) பயன்படுகிறது. அதுவும் நைட்ரிக் ஆக்சைட் நொதிப் பொருளை உண்டாக்கும் .சுவீடனில் உள்ள லண்ட்  யுனிவர்சிட்டி ஆஸ்பித்திரி டாக்டர் ஆண்டர்சன்(LUND UNIVERSITY HOSPITAL) நைட்ரிக் ஆக்ஸைடின் அற்புத குணத்தை 1991-ல் நிரூபித்துக் காட்டினார். இது ஆண்களின் வீரியத்தை எப்படி உசுப்பி விடுகிறது என்பதைக் காட்டினார். அதற்கு முன்னர் 1987ல் சால்வடார் மொன்கடா இந்த நைட்ரிக் ஆக்சைட் (NITRIC OXIDE) நம் உடலில் முக்கியப் பொருளாக (Messenger) இருந்து சதைகளை தளர்த்த (relaxing muscles) உதவுகிறது என்பதை முதல் முதலில் அறிவித்தார். இன்று இந்தக் கண்டுபிடிப்பு பல்வேறு வகைகளில் உதவுகிறது.

இது நீண்ட நேரம் செயல்படாது ; ஆனால் சவ்வுகள் வழியாக வேகமாகப் பரவும்.

நேரடியாக நைட்ரிக் ஆக்ஸைடை உடலில் பயன்படுத்த இயலாது. ஆகையால் இதை மெதுவாகத் தோற்றுவிக்கும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவர்.1867ம் ஆண்டிலேயே இதை அறிந்து ‘அமைல் நைட்ரைட்’ (Amyl Nitrite Vapour )ஆவியைப் பயன்படுத்தி ரத்த அழுத்தத்தைக் குறைத்தனர் .அஞ்ஜைனா (Angina ) என்னும் மார்புவலி நோயைக் குணப்படுத்த இந்த ஆவியைப் பயன்படுத்தினர். முதலாம் உலக யுத்த காலத்தில் நைட்ரோ கிளிசரின் என்ற வெடிமருந்து அதிகம் பயன்படுத்தப்பட்டது.. அந்த வெடிமருத்துத் தொழிலாளாளிகளின் இரத்த அழுத்தம் வழக்கத்துக்கு மாறாக இருப்பதை டாக்டர்கள் அறிந்தனர். அப்போதுதான் அவர்களுக்கு இதை இரத்த அழுத்தத்தைக் குறைக்க நோயாளிகளுக்கும் பயன்படுத்தலாம் என்பது தெரிந்தது. அதன் விளைவாக இரத்தக் குழாய்களை விரிவாக்கும் வாஸோ டைலேட்டர் (Vasodilator) மருந்துகள் உருவாகின.

நைட்ரிக் ஆக்சைட்  உயிர் காக்கும் பொருள் மட்டும் அல்ல; உயிர் போக்கும் பொருளும் ஆகும். ஒரு நோயாளி உயிருக்குப் போராடும்போது , அந்தக் கிருமிகளை எதிர்த்துப் போராட அதிக அளவில் நைட்ரிக் ஆக்சைட்  சுரந்துவிடும். அப்போது இரத்த அழுத்தம் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவுக்குத் தாழ்ந்துவிடும். ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் திடீரென இறப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.அந்த நேரத்தில் டாக்டர்கள் வந்து நைட்ரிக் ஆக்சைட் சிந்தேஸ் என்ற என்சைம் சுரப்பதைத் தடுக்க (inhibitors )மருந்துகளைக் கொடுப்பார்கள்.

PET Scanning  (Positron Emission Tomography)

இயற்கையில் நைட்ரஜன் 14, நைட்ரஜன்- 15 என்ற இரண்டு ஐசடோப்புகள் (தனிமத்தின் பிற அவதாரங்கள்) கிடைக்கின்றன. அவைகளுக்குக் கதிரியக்கம் இல்லை ; ஆயினும் நாம் உண்டாக்கும் நைட்ரஜன்-13 ஐசடோப்புக்கு கதிரியக்கம் உண்டு அதன் அரை  வாழ்வு (Hale life) பத்தே நிமிடங்கள் தான். அதை மனித உடலில் செலுத்தும்போது அது அழியத்தொடங்கும்; அப்போது பாஸிட்ரான்களை (Positrons ) வெளியிடும் ; அவற்றை எலெக்ட்ரான்கள் தாக்கி அழிக்கும். அப்போது வெளியாகும் கதிரியக்கம் எக்ஸ் ரே கிரணங்களைப்  போன்றவை ; அதைப்  படம்பிடிக்கும்போது முப்பரிமாண படங்கள் நமக்கு கிடைக்கின்றன. இதனால் நோயாளியின் உடல் பகுதியின் பாதிப்பினை நன்றாக அறியலாம். இதை பாசிட்ரான் எமிஸ்ஸன் டோமோகிராபி   (Positron Emission Tomography) அல்லது PET Scanning/ பெட் ஸ்கானிங் என்று சொல்லுவார்கள்.

அடுத்த கட்டுரையில் போர்க்கள நைட்ரஜன் , பொருளாதார நைட்ரஜன் பயன்களைக் காண்போம்

To be continued……………………………………tags-வயாக்ரா ,மர்மம், PET Scanning/, பெட் ஸ்கானிங்,   நைட்ரஜன்

அருணகிரிநாதருக்குஎன்ன‘வேணும்’? – 2 (Post No.11,426)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,426

Date uploaded in London – –   9 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எது வேண்டும்கட்டுரை எண் 6136 வெளியான தேதி

1-3-2019 – இந்தக் கட்டுரையில் வள்ளலார் உள்ளிட்ட பெரியோர் வேண்டும் என்று வேண்டுகின்ற பட்டியலைக் காணலாம். தொடர்ந்து இதோ … அருணகிரிநாதர்…..

அருணகிரிநாதருக்கு என்ன ‘வேணும்’? – 2

ச. நாகராஜன்

அடியார்களுக்கு என்ன வேண்டும் என்பதைக் கேட்பதில் அருணகிரிநாதருக்கு ஈடு இணை இல்லை.

அவர்களுக்கு வேண்டுவதைத் தனக்கு வேண்டும் என்று தன்னை முன்னிலைப் படுத்திக் கேட்கிறார்.

தனக்கு என்னென்ன வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியலையே அவர் முருகனிடம் தருகிறார்; தனது பக்தர்களுக்கு முருகன் அவர்கள் கேட்டதையும், கேட்காமல் விட்ட அரிய பல செல்வத்தையும் அளிப்பான் என்பது அவருக்குத் தெரியும்.

அவர் ‘வேணும்’ என்று மென்மையாக கேட்பதை இங்கு பார்ப்போம்.

6) சிதம்பரம்

அழிந்துற்ற மடமானை யறிந்தற்ற மதுபேணி

  அசைந்துற்ற மதுமாலை – தரவேணும்

பாடல் எண் 488 –    சுரும்புற்ற எனத் தொடங்கும் பாடல்

பொருள் : (மனம்) அழிந்துள்ள இளமானாகிய இப்பெண்ணின் விரக வேதனையை அறிந்து சமயம் பார்த்து விரும்பி உன் மார்பில் அசைந்தாடும் தேன் நிறைந்த மலர் மாலையைத் தந்தருள வேண்டும்.

குறிப்பு: இந்தப் பாடல் அகத்துறையில் நா’யக நாயகி’ பாவத்தில் அமைந்துள்ள ஒரு பாடல். இதில் விரக வேதனையை அதிகமாக்கும் குயில், வாடைக்காற்று, மன்மதன், மலர் அம்புகள், மாதர் வசைச் சொல், மலர் மஞ்சம், மாடுகளின் மணி முதலியவை குறிப்பிடப்பட்டுள்ளன.


7) கோடைநகர்

பூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்து

 பூமிதனில் வேணு மென்று – பொருள்தேடிப்

போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன்

  பூவடிகள் சேர அன்பு தருவாயே

பாடல் எண் 703 –    ஆதிமுதனாளிலென்றன் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : பூமியில் எல்லா இடங்களிலும் அலைந்து, பெண்களுடன் மருவிக் கலந்து பூமியில் அவசியத்தினால் பொருள்களைத் தேடி, சுக போகங்கள் ஈடுபட்டுத் திரிந்து, பாழான நரகத்தை நான் அடையாமல் உனது மலர்ப்பாதங்களை அடைய அன்பைத் தந்தருள்வாயாக!

8) திருவம்பர்

கழி கோல(ம்) மண்டி நின்றாடி யின்ப வகை

   வேணுமென்றுகண் சோர ஐம்புலனொ – டுங்குபோதில்

பாடல் எண் 805 –    சோதி மந்திரம் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : மிக்க அலங்காரங்கள் நிறையும்படி நின்று அனுபவித்து இன்ப வகையே வேண்டும் என்று இருந்தும், கண் பார்வை தளர்ந்து ஐந்து புலன்களும் ஒடுங்குகின்ற சமயத்தில் …..

9) மதுரை

தெளியு ஞான மோதிக் கரைந்து

  சிவபு ராண நூலிற் பயின்று

     செறியு மாறு தாளைப் பரிந்து – தரவேணும்

பாடல் எண் 962 –    முகமெலா நெய் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : தெளிவைத் தரும் ஞான நூல்களை ஓதி ஒலித்தும் சிவபுராண நூல்களில் பயிறும், மனம் நெருங்கிப் பொருந்துமாறு உன் திருவடிகளை அன்பு கூர்ந்து தந்தருள வேண்டும்.

10) பொதுப் பாடல்

  மாய

மறலி யூர்ப்புகு மரண யாத்திரை

 வாரா வானாள் போநாம் நீமீ – ளெனவேணும்

பாடல் எண் 1061 –    முதலியாக்கையுமிளமை எனத் தொடங்கும் பாடல்

பொருள் : மாயமாக வந்த யமனுடைய பட்டணத்துக்குப் புகும் சாவு என்னும் பயணம் உனக்கு வாராது, வானுலகை ஆள நாம் போவோம், நீ என்னுடன் வா, என்று கூறி என்னை அழைத்துச் செல்ல நீ வர வேண்டும்.

11) பொதுப் பாடல்

வேலைய டைக்கஅ ரிக்கு லத்தொடு

  வேணுமெ னச்சொலு மக்க ணத்தினில்

 வேகமொ டப்பும லைக்கு லத்தைந -ளன் கைமேலே

பாடல் எண் 1147 –   ஓலைதரித்த குழை எனத் தொடங்கும் பாடல்

பொருள் : கடலினை அணையிட்டு குரங்குக் கூட்டத்துடன் அடைக்க வேண்டும் என்று சொல்லி அதைக் கேட்ட அந்த நொடியிலேயே, மிக விரைவாக அந்தக் கடல் நீரில் மலைக் குவியல்களை நளன் என்னும் வானரத் தச்சன்….

12) பொதுப் பாடல்

            அலங்கார நன்றி – தென மூழ்கி

  அகன்றா சையும்போய் விழும்பா ழுடம்பால்

    அலந்தேனை யஞ்ச லெனவேணும்

பாடல் எண் 1265 –  பெருங்காரியம் போல் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : பிணத்திற்கு அலங்காரம் நன்றாய் அமைந்தது என்றும் சிலர் கூறி, பிணம் எரிந்ததும் நீரில் மூழ்கி, இருந்த ஆசையையும் பாசத்தையும் மறந்து செல்ல, விழுந்து பாழாகும் இந்த உடம்பைக் காரணமாக வைத்து மனம் கலங்கி எங்கு அலைந்து திரிந்த என்னை அஞ்சாதே என்று கூறி நீ வர வேண்டும்.

***

அருணகிரிநாதர் வேணும்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்திய அனைத்துத் திருப்புகழ் பாடல்களையும் பார்த்து விட்டோம்.

சில பாடல்களில் வேணும் என்ற சொல் அவர் வேண்டுனவற்றைக் குறிப்பிடாது பாடலில் உள்ள பொருளுக்குத் தக அமைந்ததையும் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இதில் காணலாம்.

இந்தத் தொடர் நிறைவடைந்தது!

புத்தக அறிமுகம் – 108

திறன் கூட்டும் தியானம்

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1.    விதியை வெல்லலாம்    

2.    கடவுளைக் காணலாம்    

3.    அறிவியல் வியக்கும் அதிர்ஷ்ட சக்கரம்!   

4.    ஏற்றம் தரும் எண்ண சக்தி

5.    எண் 108க்கு முக்கியத்துவம் ஏன்?    

6.    திறன் கூட்டும் தியானம்  

7.    ஒரு கை ஓசை

8.    ஜென் காட்டும் புது வாழ்வு

9.    மந்திர மொழி தமிழ்!

10.   நாம ஜபம் நல்கும் நன்மைகள்  

11.   ராம நாம மகிமை   

12.   சொல்லின் செல்வன் அனுமன் 

13.   மடிதடவாத சோறும், சுறு நாறாத பூவும்   

14.   முழுதும் அழகிய குமரன்! 

15.   தெய்வீகக் காதல்    

16.   நவரத்னங்கள் போக்கும் நவகிரக தீமைகள் 

17.   வேத கணிதம் 

18.   விஞ்ஞானிகள் வியக்கும் பண்டைய பாரத விமான இயல்! 

19.   உடலுடன் மறைந்த ஞானிகள்  

20.   விஞ்ஞானிகள் வியக்கும் அதீத புலனாற்றல்!    

21.   வித்தக சித்தர் கணம்!

22.   சூரிய ஒளியில் உயிர் வாழும் யோகி!

23.   உலகில் பெரும் ஆத்திகர் சந்தித்த நாத்திகர்

24.   ரமண மகரிஷி வாழ்விலே…    

25.   கருவிலே உருவும், திருவும்!   

26.   ‘தர்ம’ சங்கடம் 

27.   கண்ணனை விஞ்சிய கதாபாத்திரங்கள்

*

நூலிற்கு கோகுலம் கதிர் ஆசிரியர் டாக்டர் கமலி ஶ்ரீபால் அவர்கள் வழங்கிய அணிந்துரை இது:

நல்ல கல்வி எது என்பதனை நம்முடைய முன்னோர்கள் விளக்கி இருக்கின்றனர். ஒரு பொருளின் தன்மையை அறிய அந்தப் பொருள் நம் மீது ஏற்படுத்தும் விளைவுகளை உணர்ந்து அனுபவித்துச் சொல்லி விடலாம். அது போல நல்ல கல்வி என்ன விளைவுகளை உண்டாக்கும் என்பதைப் பார்த்தால் நமக்கு நல்ல கல்வி எது என்பது புலப்படும்.

நல்ல கல்வியின் விளைவுகள் யாவை?

1. உடல் வலிமை பெற்றுப் பொலிவாக விளங்க நல்ல கல்வி கற்றுத் தர வேண்டும்.

2. நல்ல கருத்துக்கள் என்ற வெள்ளத்தை நல்ல கல்வி நம் உள்ளத்தில் நிரப்ப வேண்டும்.

3. உணர்ச்சிகளால் உந்துபடாமல், அலைக்கழிக்கப்படாமல் அந்த உணர்ச்சிகளையே ஆன்ம தியானத்தால் செழுமைப்படுத்த நல்ல கல்வியை கற்றுத் தர வேண்டும்.

4. ஒவ்வொரு உயிரினுள்ளும் இறைவனுடைய ஒரு பொறி இருக்கிறது. இந்தப் பொறி பெரிதாக வியாபித்து மனிதனைச் சிறந்தவனாக்க நல்ல கல்வி வழி முறைகளைச் சொல்லித் தர வேண்டும்.

மேற்கூறிய கருத்துக்களில் இருந்து நமக்குத் தெளிவாக தெரிபவை இரண்டு நிலைகள் :

1. ஒரு மனிதனுக்குத் தன் முனைப்பு, தன்னுடைய உழைப்பு முக்கியம்.

2. தன் முனைப்பும், தன்னுடைய உழைப்பும் எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்று சொல்லித் தர ஒரு நல்ல சற்குரு வேண்டும்.

இந்த இரண்டு நிலைகளையும் ‘திறன் கூட்டும் தியானம்’ என்று ஆசிரியர் ச.நாகராஜன் அவர்கள் எழுதியிருக்கும் நூல் உள்ளங்கை நெல்லிக்கனி போல எடுத்து விளக்குகிறது.

எப்படி விளக்க முடியும்?

இந்நாட்டில் தோன்றிய தொன்மையான நூல்கள், இந்த நாட்டில் தோன்றி வாழ்ந்த இதிகாச புருஷர்களின் வாழ்க்கைச் சரித்திரங்கள், முன்னோர்கள் நம்பிய நம்பிக்கைகள், பழங்காலத்தில் இருந்த பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள், இந்தியாவிற்குத் தன்னிடம் இருக்கும் தங்கம் தெரியவில்லையே என்று இன்றைய மேல் நாட்டு விஞ்ஞானிகள் படும் வேதனை, மனமும், மனதில் தோன்றும் எண்ணங்களும் மகத்தான சக்தி படைத்தவை என்பதை விளக்கும் நிகழ்ச்சிகள், திறன் கூட்டும் தியானத்தால் ஆன்ம பலம் அதிகரிக்கும் போது சாதிக்க முடியாதது என்பது இல்லை என்பதைக் காட்டும் சம்பவங்கள் – என இவை அனைத்தையும் எளிய இனிய தமிழில் எழுதி இருக்கும் அன்பர் திரு ச.நாகராஜனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த நூலை அழகாக வெளியிட்டவர்களுக்குப் பாராட்டு. இந்த அரிய நூல் வெளிவர உழைத்த நல் உள்ளங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

இந்தப் பிறப்பில் நாம் பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த பிறப்பில் நாம் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். ஆரம்பப் பள்ளிக்குச் செல்வதைப் போல கீழே விழுந்து விடக் கூடாது. அப்படி விழாமல் இருக்க ஆன்மாவில் படிந்து இருக்கும் அழுக்குகள், பாவங்கள் நீக்கப்பட வேண்டும். அதை எப்படிச் செய்வது என்பது 27 கட்டுரைகளில் இந்திய மெய்ஞ்ஞானப் பாரம்பரியம், இன்றைய மேலை நாட்டு விஞ்ஞான நியதிகள் இரண்டையும் இணைத்து ஆசிரியர் சுவையாக விளக்குகிறார். படிக்கத் தொடங்கினால் படித்து முடிக்க வேண்டும் என்று ஆர்வத்தைத் தூண்டும் நூல். ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நூல்.

இறைவன் அருளால் திரு ச. நாகராஜன் அவர்களின் இலக்கியப் பணி மேன்மேலும் வளர மனதாரப் பிரார்த்திக்கிறேன்.

கமலி ஶ்ரீபால்

*

நூலில் இடம் பெறும் முன்னுரை இது:

“தினமும் காலையில் அற்புதமான பிரபஞ்சமளாவிய தத்துவத்தைக் கொண்ட பகவத் கீதையில் என் அறிவைக் குளிப்பாட்டுகிறேன்” என்று ஹென்றி டேவிட் தோரோ குறிப்பிடுகிறார். காஞ்சி பரமாச்சார்யரை காளஹஸ்தியில் சந்தித்த  கிரீஸ் தேசத்து ராணி ஃப்ரெடெரிகா இந்து தத்துவத்தில் அதிக ஈடுபாடு உடையவர். இயற்பியலில் தான் செய்த மிகவும் முன்னேறிய ஆராய்ச்சிகள் தன்னை ஆன்மீகத் தேடுதலில் ஈடுபடுத்தியதாகவும் அது தன்னை முடிவில் ஆதி சங்கரரின் அத்வைதக் கொள்கையை ஏற்க வைத்ததாகவும் தான் எழுதிய நூலில் குறிப்பிடுகிறார்.

ரஷிய விஞ்ஞானிகள் ஶ்ரீ சக்கர மகிமையை உணர்ந்து வியக்கின்றனர்! அமெரிக்க விஞ்ஞானிகள் தியானத்தின் ஆற்றலை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து அதிசயிக்கின்றனர்.

உலகப் பேரறிஞர் ஆர்னால்ட் டாய்ன்பி சகிப்புத் தன்மையுள்ள ஹிந்து மதத்தை வாயாரப் புகழ்ந்து அனைவரும் திரும்ப வேண்டிய ஒரே தத்துவம் இதுவே என்று குறிப்பிடுகிறார்.

மாக்ஸ்முல்லர் சிறப்பான எதைப் பற்றிக் கேட்டாலும் தன் விரல்கள் இந்தியாவையே சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது என்கிறார்! பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஒரு வேளை அழிந்தாலும் பகவத் கீதை அழியாது என்று வியந்து கூவுகிறார் வாரன் ஹேஸ்டிங்க்ஸ்.

இப்படி நூற்றுக் கணக்கான வெளிநாட்டுச் சிந்தனையாளர்களும், தத்துவ ஞானிகளும், விஞ்ஞானிகளும், அறிஞர்களும் போற்றிப் புகழும் தத்துவங்கள், கொள்கைகள், நூல்கள், இதிஹாஸங்கள் பாரதத்தில் பொக்கிஷம் போல நிறைந்துள்ளன.

அறிவியல் பூர்வமாக இவற்றை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இந்த தத்துவங்களின் ரகசியங்களை எடுத்துரைக்கின்றனர். அதன் சொந்தக்காரக் குழந்தைகளான நாம் பிரமிக்கிறோம்!

நம் தத்துவங்களை நாம் போற்றி ஆராதித்து அறிவியல் வழியிலும் ஆன்மீக ரீதியிலும் இந்த ரகசியங்களை ஆராய்ந்து உணர்ந்து நம் சந்ததியினருக்கு இவற்றை அப்படியே நாம் தர முனைய வேண்டும்; இது நம் கடமை! இந்த வகையில் ஒரு சிறிய முயற்சியே எனது கட்டுரைகள்.

அவ்வப்பொழுது இவற்றை வெளியிட்ட கோகுலம் கதிர், மஞ்சரி, கலைமகள், தின பூமி, ஞான ஆலயம், சினேகிதி, மங்கையர் மலர், இணைய தள இதழான நிலாச்சாரல் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு என் மனமுவந்த நன்றி உரித்தாகுக.

இந்த நூலுக்கு நல்லதொரு அணிந்துரை நல்கிய டாக்டர் கமலி ஶ்ரீபால் அவர்களுக்கு என் மனமுவந்த நன்றி.

கட்டுரைகளை எழுத பல வகைகளிலும் உதவி செய்யும் என் மனைவி மற்றும் மகன்களுக்கு எனது நன்றி.

பாரதத்தின் ஞானிகள், யோகிகள், முனிவர்கள் அனைவருக்கும் இந்த நூலை அர்ப்பணிக்கிறேன். நன்றி.

 ச.நாகராஜன்

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

Foreign thinkers, scholars, philosophers, scientists have always appreciated the philosophies, doctrines, books, and epics which are immortal treasures of ancient India.. The scientists have taken up the task of digging into the hidden secrets and succeeded in disclosing some of the astonishing facts. The book consist of 27 chapters wherein Dr KAMALI SRIPAL explores the realized souls from generations mingled with the modern day western doctrines in a blissfully interesting manner.

வெளிநாட்டுச் சிந்தனையாளர்களும், தத்துவ ஞானிகளும், விஞ்ஞானிகளும், அறிஞர்களும் போற்றும் தத்துவங்கள், நூல்கள், இதிஹாஸங்கள் பாரதத்தில் பொக்கிஷம் போல நிறைந்துள்ளன. விஞ்ஞானிகள் இவற்றை ஆராய்ந்து இவற்றிலுள்ள ரகசியங்களை அறிவியல்பூர்வமாக வெளிக்கொணரும்போது பிரமிப்பாக இருக்கிறது! அப்படி ஏராளமான ரகசியங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. இதற்கு அணிந்துரை வழங்கியுள்ள டாக்டர்.கமலி ஸ்ரீபால் அவர்கள், “இந்திய மெய்ஞானப் பாரம்பரியம், இன்றைய மேலை நாட்டு நியதிகள் இரண்டையும் இணைத்து ஆசிரியர் சுவையாக விளக்குகிறார்” என்று பாராட்டுகிறார்!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ திறன் கூட்டும் தியானம் ’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

நெல்லிக்காய், இலந்தைப் பழ மகிமை: மருத்துவப் பொன்மொழிகள் (Post.11,425)

 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,425

Date uploaded in London – 8 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

நம்முடைய முன்னோர்கள் அனுபவத்தில் கண்ட உண்மைகளை பொன்மொழிகளாக , பாடல்களாக எழுதிவைத்துள்ளனர்.அவைகளைப் படிப்பதும், பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அளிப்பதும் நம் கடமை. அதைவிடப் பெரியது , அவைகளைக் கூடிய மட்டிலும் பின்பற்றுவதாகும்  ; நோய்கள் வந்தவுடன் வருந்துவதை விட வருமுன் காப்பது மேலன்றோ!

வெறும் வயிற்றில் நெல்லிக்காயும் , சாப்பாட்டிற்குப் பிறகு இலந்தைப்  பழமும் , எப்பொழுதும் விளாம்பழமும் புசித்தால் உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகும். வாழைப்பழம் ஒருபோதும் பத்திய உணவு ஆகாது. நோய் நீங்கி உடல் தேற உதவாது

இதைச் சொல்லும் ஸம்ஸ்ருத சுபாஷிதம்/ பொன்மொழி :

அபுக்த்வா ஆமலகம் பத்யம் புக்த்வா து பதரீ பலம்

கபித்தம் ஸர்வதா பத்யம் கதலீ ந கதாசன

ஆமலகம் – நெல்லி, பதரீ – இலந்தை , கதலீ – வாழைப்பழம், கபித்தம்-விளாம்பழம்.

(என் கருத்து- பொதுவான விஷயங்களையே சுபாஷிதங்கள் சொல்லுகின்றன. ஆனால் உலகில் 2000 வகை அலர்ஜிக்கள் ( உணவு ஒவ்வாத தன்மை ) உள்ளன. யாருக்கு எது பொருந்தும் என்பதை அனுபவத்தாலோ, டாக்டர் மூலமோ அறிதல் நன்மை பயக்கும். இந்த குறிப்பிட்ட ஸ்லோகம் பத்யம் பற்றிப் பேசுகிறது ; நோயே இல்லாதவர்களுக்கு வாழைப்பழமும் நல்லதே )

XXX

தாயில்லாத குழந்தையின் வாழ்க்கையும், கணவன் இல்லாதவளின் யெளவனமும் (பருவச் செழிப்பு, இளமை அழகு), பொறுமை இல்லாத தவமும், புளியம் பழத்தின் புளிப்புச் சுவை இல்லாத உணவும் வீணானதாகும், பயனற்றதேயாகும் .

மாத்ரு ஹீன சிசு ஜீவனம் வ்ருதா , காந்தஹீன நவ யெளவனம் ததா

சாந்தி ஹீன மபி தபோ வ்ருதா, தீந்த்ரீணி  ரஸ  விஹீன போஜனம் 

(எனது கருத்து – சிலருக்குப் புளிப்புச் சுவை தேவை; சிலருக்கு உவர்ப்புச் சுவை தேவை. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பது தமிழ்ப் பழமொழி.ஆனால் நாம் தினமும் சாப்பிடும் ரசம், மோர் அல்லது தயிரில் கூட அளவோடு புளிப்புச் சுவை தேவைப்படுகிறது. இந்த சுவையை புளி அல்லது எலுமிச்சம் பழம் மூலம் நாம் பெறலாம்.

எனக்கு லண்டனில் ஒரு இலங்கைத்  தமிழர் மிகவும் நெருங்கிய நண்பர். ஒரு நாள் உணவு பற்றிப் பேச்சு வந்தது. அப்போது அவர் இடைமறித்து ஒரு விஷயத்தைச் சொன்னார். சுவாமிநாதன் ஸார் , புளியே வாங்காதீர்கள்; எனக்கு ஆர்த்ரைடீஸ் Arthritis  இருந்தது; புளியை நிறுத்தி, எலுமிச்சை சாறு பயன்படுத்தியதிலிருந்து அது அறவே குணமாகிவிட்டது என்றார் ; உடனே சம்பாஷணையில்/ கலந்துரையாடலில்  கலந்து கொண்ட வேறு ஒரு நண்பர் இடை மறித்து , “நீங்கள் ஒன்று! போங்க ஸார் ; எங்க தாத்தா சாப்பிட உட்காரும் போது கைப்பிடி உப்பை  இலையில் வைத்துக்கொண்டுதான் சாப்பிட்டார். அவர் கடைசிவரை நோய் எதுவும் இல்லாமல்தான் இறந்தார்”  என்றார் . பின்னர் எங்கள் உரையாடல் வேறு விஷயங்களுக்குத் திரும்பியது. அப்படியானால் முடிவுதான் என்ன? ஒவ்வொருவரின் உடலும் சிறு வயதில் பின்பற்றிய  பழக்க வழக்கங்களால் அதற்கு ஈடு கொடுக்கும்படி மாறிக்கொள்ளுகிறது ஆயினும் எதற்கும் ஒரு அளவு உண்டு. ஆகையால் எல்லாவற்றிலும் மிதமான அளவைப் பின்பற்றுவது நோயற்ற வாழ்வினை நல்கும் )

xxx

நோயாளிகளுக்கும் , சிறுவர்க்கும், கிழவர்க்கும் , எப்பொழுதும் நல்லொழுக்க ஆசாரத்தில் இருப்பவருக்கும் விரத நியமங்கள் வேண்டியதில்லை.இதுவே பழமையான சாஸ்திர அறநெறியாம்

ஆதுரே நியமோ நாஸ்தி பாலே வ்ருத்தே ததைவ ச

ஸதாசார  ரதே சைவ ஹ்யேஷ தர்மஸ் ஸனாதநஹ

(எனது கருத்து – ஏகாதசி விரதம், ரம்ஜான் விரதம் போன்றன மேற் கூறிவர்ளுக்குக் கிடையாது .நான் லண்டனில் நியூஹாம் யுனிவர்சிட்டி ஆஸ்பத்திரியில் 13 ஆண்டுகளுக்கு பகுதி நேர ஹெல்த் அட்வகேட்டாகப் (Health Advocate in Newham University Hospital in East London) பணியாற்றினேன் . நான் தமிழர்களுக்கு மொழிபெயர்ப்பு உதவி செய்வேன். என்னுடன்

வேலை பார்த்த உருது, வங்காளி மொழி ஊழியர்கள் முஸ்லீம்களுக்கு மொழிபெயர்ப்பு உதவி செய்தனர். ரம்ஜான் காலத்தில் சர்க்கரை  நோயுள்ள – டயாபடீஸ் — ஆண்களும் பெண்களும் விரதம் இருக்கத் தேவை இல்லை என்று அவர்கள் சொல்லியும் பல முஸ்லீம்கள் தயங்கினர். பின்னர் ஆஸ்பத்திரி இமாமே (Imam) துண்டுப் பிரசுரங்களை அவரவர் மொழியில் வெளியிட்டும் தனி பயிற்சி வகுப்புகள் நடத்தியும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார் . சர்க்கரை நோயுள்ளவர்கள் மாத்திரை எடுப்பதோ இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளுவதோ சாப்பிடுவதோ எல்லாவற்றையும் உரிய நேரத்தில் செய்யவேண்டும். அப்படிச் செய்யாவிடில் வாழ்நாள் முழுதும் டயாலிசிஸ் எந்திரத்துடன் நம்மைக் கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள். பின்னர் என்ன? அந்த மிஷினுடன் கணவன் மனைவி போல வாழலாம். நோயாளிகளுக்கு சமயம் (Religion) தொடர்பான விதிகளில் தளர்வு உண்டு என்பதை எல்லா மதத்தினரும் ஏற்கின்றனர். இதையும் மீறி சிலர் செயல்பட்டால் அவர்களை இறைவனே காப்பாற்றவேண்டும்; டாக்டர்கள் அல்ல.)

Xxxx

மன நலம் காக்க ; கவலையைத் தவிர்க்க !

சிதையில் உள்ள பிணத்தைக் காட்டிலும் , சிந்தையானது / மனக் கவலையானது பெரியது /கொடியது எப்படியெனில் சிதைத் தீ பிராணன் போன பின்னர் வெறும் உடலையே எரிக்கிறது சிந்தையோ பிராணனுடன் கூடிய சரீரத்தையே  தஹிக்கிறது / கொளுத்துகிறது இதனால் மனவருத்தம் (சிந்தை ) கூடாது என்பது அறியத்தக்கது

சிதா சிந்தா அநயோர்  மத்யே சிந்தா நாம கரீயஸி

சிதா தஹதி  நிர்ஜீவம்  சிந்தா ப்ராணாயுதம் வபுஹு

(எனது கருத்து – இது முற்றிலும் உண்மை; மனக் கவலையால் நோய்களின் தீவிரம் அதிகரிக்கும். அதைத் தவிர்க்க, கோவில், குளங்களுக்குச் செல்லுவது மூலமோ கலைகளின் பக்கம் மனத்தைச் செலுத்துவதன் மூலமோ மாற்றலாம். மன நலம் குன்றிய பல இலங்கைத் தமிழருக்கு நான் மொழி பெயர்ப்பு உதவி செய்தேன் ; அதில் ஒருவருக்கு படம் வரைவதிலும் வண்ணம் தீட்டுவதிலும் அபார திறமை இருந்தது. அவரை ஆர்ட் தெரபி  ART THERAPY பிரிவுக்கு அனுப்பினர் . அங்குள்ள மன நல மருத்துவர், வாரம் தோறும் அவருடன் ஒருமணி நேரம் செலவழித்தார்; நோயாளி வந்தவுடன் முதல் பதினைந்து நிமிடம் வழக்கமான கேள்விகள்; பின்னர் படம் வரைதல் ; அந்த 3 மணி நேரம்  அவருடைய எண்ணம் கவலை இல்லாமல் இருக்கும்; (தெரபி வகுப்புக்குப்  போக ஒரு மணி ; வீட்டிற்குப் போக ஒரு மணி; டாக்டருடன் ஒரு மணி)  சில காலத்துக்குப் பின்னர் அவருக்கு பிரிட்டனில் தங்க விசா கிடைத்தது. உடனே அவர் மன நோயும் அகன்றது )

Xxx

போகாத இடந்தனிலே போக வேண்டாம் !

கிராமத்திற்காவது, வீட்டுக்காவது திரும்பிச் செல்லுகையில் தவறான பாதையில் செல்லக் கூடாது ; இரவு நேரத்தில் மரத்தின் கீழே செல்லக் கூடாது ; இவைகளைத் தொலைவிலேயே தவிர்க்க வேண்டும்

அத் வாரேண ச நாத்மீயம் கிராமம் வா வேச்சம வா விசேத்

ராத்ரெள ச விருக்ஷ மூலானி தூரதஹ பரிவர்ஜயேத்

(எனது கருத்து : இப்பொழுது பள்ளிக்கூட படிப்பிலேயே இதைச் சொல்லிக் கொடுத்து விடுகிறார்கள் . பகல் நேரத்தில் மரம் செடி கொடிகள் கரியமில வாயு எனப்படும் கார்பன் டை ஆக்சைடை(Carbon di Oxide) எடுத்துக்கொண்டு நல்ல ஆக்சிஜனை (Oxygen) நமக்கு அளிக்கிறது. இரவு நேரத்தில் இது நடைபெறாது. மேலும் பூச்சிகளும் மிருகங்களும் இரவு நேரத்தில் அதிகம் செயல்படும் போகாத இடந்தனிலே போக வேண்டாம்- என்று சிறுவயதிலேயே உலக நீதிப்பாடலில் கற்றுக்கொண்டுள்ளோம்; ஆகவே தெரிந்த பாதையில் செல்லுவது நலம் பயக்கும் ; அண்மையில் இந்தியாவுக்குச் சென்றபோது அபிராமி அன்னையை தரிச்சிக்கவும் உறவினரின் சஷ்டி அப்தப் பூர்த்தியில் கலந்து கொள்ளவும் திருக்கடையூர் சென்றிருந்தோம் ; மறு நாள் காலையில் வைதீஸ்வரன் கோவில் செல்ல திட்டம். இரவு நேரத்தில் எங்கள் டாக்சி ட்ரைவர் வேறு ஒரு டிரைவருடன் பேச்சு கொடுத்ததில் அவர் ஒரு சுருக்கு வழியைச் (Shorter Route) சொல்லிக்கொடுத்தார். அந்தச் சுருக்கப்பாதை ,  (under Road repair) சாலை செப்பனிடும்  பெரும் பாதை. ஒவ்வொரு பர்லாங் சென்ற பின்னரும்  கற்கள் நிறைந்த – தார் போடாத — அரைகுறை ரோடு . அதில் கார் செல்லும்போது பஞ்சர் (Puncture) ஆகாமல் இருக்க வேண்டும் என்று உலகத்தில் உள்ள எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டோம். ஒரு மணி நேரம் தாமதமாகச் சென்றபோதும் இறைவன் தரிசனம் கிட்டியது; டிரைவரும் வழக்கமாகச் செல்லும் தெரிந்தவழியில் செல்லாதது தவறு என்று சொல்லி எங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் . தெரிந்த வழியே சிறந்தது!)

Xxxx

உடலூனம் உள்ளவரை இகழாதீர்

உடலுறுப்புக் குறை உள்ளவனையும் (அங்கஹீன), உடலுறுப்பை அதிகமாகக் கொண்டவனையும், அதிக குட்டை, அதிக உயர, நீள அவயமுள்ளவனையும் படிப்பில்லாதவனையும், வயதில் மூத்தோரையும்  , அழகு, செல்வம், ஜாதி இவைகளால் குறைந்தவர்களையும் நிந்திக்கக்கூடாது

ஹீநாங்கான் அதிகரித்தாங்கான் வித்யாஹீனான் வயோதிகான்

ரூபா திரவிய விஹீனான் ச ஜாதிஹீனான் ச நாக்ஷி சிபேத்   

(எனது கருத்து – வீட்டிலுள்ள முதிய வயதுள்ளவர்களை கிழடு , கிழவி என்று திட்டுவதையும் உறுப்பு குறைந்தவர்களை குருடன், நொண்டி, முடவன் செவிடன் என்று திட்டுவதையும் காண்கிறோம். மேலை நாடுகளில் இப்போது புதிய அகராதியை  உருவாக்கியுள்ளனர் பொது இடங்களிலும் பத்திரிக்கைகளிலும் புதிய சொற்களைத்தான் பயன்படுத்தலாம். கருப்பர்களை நீக்ரோ/ Negro என்றோ கருப்பன் (Black)  என்றோ சொல்லக் கூடாது. இதை நம்மவர்கள் அந்தக் காலத்திலேயே எழுதியாவது வைத்தார்கள் !!!)

Black people are referred to as ‘Afro- Caribbean person ‘

xxx

பிரிட்டிஷ் அரசாங்க அறிவிப்பு:–

Words to use and avoid

Avoid passive, victim words. Use language that respects disabled people as active individuals with control over their own lives.

AvoidUse
(the) handicapped, (the) disableddisabled (people)
afflicted by, suffers from, victim ofhas [name of condition or impairment]
confined to a wheelchair, wheelchair-boundwheelchair user
mentally handicapped, mentally defective, retarded, subnormalwith a learning disability (singular) with learning disabilities (plural)
cripple, invaliddisabled person
spasticperson with cerebral palsy
able-bodiednon-disabled
mental patient, insane, madperson with a mental health condition
deaf and dumb; deaf mutedeaf, user of British Sign Language (BSL), person with a hearing impairment
the blindpeople with visual impairments; blind people; blind and partially sighted people
an epileptic, diabetic, depressive, and so onperson with epilepsy, diabetes, depression or someone who has epilepsy, diabetes, depression
dwarf; midgetsomeone with restricted growth or short stature
fits, spells, attacksseizures

—subham—tags- நெல்லிக்காய், இலந்தைப் பழ,  மகிமை:, மருத்துவப் பொன்மொழிகள்

கைகண்ட மருந்து/ மந்திரம் ! (Post No.11,424)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,424

Date uploaded in London – 8 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ஒரு கைகண்ட மருந்து பற்றி என் அனுபவத்தைச் சொல்லுகிறேன். 1962-ம் ஆண்டில் இந்தியா மீது சீனா  படை எடுத்தது . 1965ம் ஆண்டில் பாகிஸ்தான் நம்மைத் தாக்கியது. 1971ம் ஆண்டில் பங்களாதேஷ் (வங்க தேச) யுத்தம் நடந்தது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் நான் மதுரைக் கல்லூரியில் பி.எஸ்ஸி (B.Sc. in Madura College, Madurai) படித்தேன். யுத்த கால சூழ்நிலை இருந்ததால் கல்லூரியில் என் சி சி (NCC= National Cadet Corps)  பயிற்சி கட்டாயமாக்கப்பட்டது. அப்போது நமக்குத் தேவையான சீருடை, பூட்ஸ் , சாக்ஸ் (Socks)  எல்லாம் கடனாகத் தருவார்கள். ஒவ்வொரு வாரமும் பயிற்சி முடிந்தவுடன் பூரி உருளைக்கிழங்கும் டீயும் இலவசமாகத் தருவார்கள். காலையில் அது முடிந்தவுடன் வீட்டிற்கு ஓடிப் போய் குளித்துவிட்டு முறையான வகுப்புகளுக்குத் திரும்பிவரவேண்டும். வேண்டா வெறுப்பாகச் செய்தோம் . அப்போது அவர்கள் கொடுத்த பழைய சாக்ஸ் அல்லது  பூட்ஸ் மூலம் எனக்கு காலில் எக்சிமா Eczema (சொறி சிரங்கு) பரவியது. பல ஆண்டுகளுக்கு பெட்னோவேட் என் Betnovate N — என்ற மருந்தைப் பயன்படுத்திவந்தேன். அரிப்பு ஏற்படுவது (due to allergy) அலர்ஜியால்; ஆனால் நாம் சொறிந்து சொறிந்து  ஏற்படும் புண்களில் பாக்டீரியா புகுந்து ரணத்தை அதிகரிக்கிறது.

ஒருநாள் இதுபற்றி எங்களுக்கு எல்லாம் மந்திர உபதேசம் செய்த ஆயக்குடி (தென்காசி) சுவாமிஜி கிருஷ்ணாவிடம் முறையிட்டேன் .

அவர், அவருக்கே உரித்தான ஸ்டைலில் தியானம் செய்துவிட்டு வாளாவி ருந்தார் ; சரி இது கருமவினை போலும் என்று அமைதி காத்தேன். இதெல்லாம் மதுரையில் நடந்தது

ஆனால் எங்கள் குடும்ப புரோகிதர் கோபால கிருஷ்ண சாஸ்திரிகளை அழைத்து இந்தப் பையனுக்கு வெற்றிலையில் அல்லது வாழை இலையில் பசு வெண்ணெயை வைத்து தன்வந்திரி மந்திரத்தை 11 முறை மந்திரித்துக் கொடு என்றார் .எத்தனை நாட்கள், வாரங்கள் என்பது எனக்கு இப்போது நினைவு இல்லை. அப்போது அவர் மந்திரம் சொல்லக் சொல்ல நான் முணங்குவேன் . அவ்வளவுதான். பசு மாட்டு வெண்ணெயை சுண்டைக்காயளவு சாப்பிடுவதில் என்ன   கஷ்டம் ?

எக்சிமா(Eczema) நோய் அறவே போகவில்லை ஆனால் காலோடு நின்றது பரவவும் இல்லை. பிறகு தினமணி பத்திரிக்கையில் சீனியர் உதவி ஆசிரியராகப் பணியாற்றியபோது பிரிட்டனில் பிபிஸி தமிழோசையில் ப்ரொட்யூசராக (Producer in BBC World Service, London)  பணியாற்ற அழைப்பு வந்தது . ஒரு பக்கம் சந்தோஷம் ; மற்றோர் பாக்கம் பயம். லண்டனுக்குப் போனால் குளிர் நாடாயிற்றே  ; எப்போதும் சாக்ஸ் / காலுறை , பூட்ஸ் போடவேண்டுமே ; எக்சிமா பெரிதாக அல்லவா ஆகிவிடும் என்று கருதி ஆறு மாத காலத்துக்கு வேண்டிய களிம்பை (Betnovate Cream)  வாங்கிவைத்துக்கொண்டு லண்டன் வந்தேன். என்ன அதிசயம் . இன்றுவரை அந்த நோய் என்னை எட்டிப்பார்க்கவில்லை. லண்டன் வந்தவுடன் அடியோடு ஒழிந்தது

கொஞ்சம்  (மனது அளவில்) ஆராய்ச்சி செய்துபார்த்தேன். சிலவகை பாக்டீரியாக்கள் சில பருவ நிலையில்தான் வளரும்; அதிகரிக்கும். என்னுடைய எக்சிமா-வுக்கு குளிர் என்றால் பயம்போலும்!! (பாக்டீரியாக்கள் இந்தநோயை உருவாக்குவதில்லை அலர்ஜியினால் அரிப்பு ஏற்பட்டு சொரிந்து உண்டாகும் புண்களில் பாக்டீரியாக்கள் குடி புகும்)

xxx

(From Wikipedia நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருள்கள்]

சாதரணமான சருமப் பாதுகாப்பு தடையானது பாதிக்கப்படும் போது (வறண்டு போதல், வெடிப்பு விடுதல்), அதனால் பேக்டீரியா உள் நுழைவது எளிதாகிவிடுகிறது. நோயாளி சொறிவதன் காரணமாக நோய்த்தாக்கம் ஏற்படுவதோடல்லாமல் அது பல இடங்களுக்கும் பரவவும் செய்கிறது. இதற்கு மேலும் ஏற்படும் தோல் நோய்த்தாக்கத்தினால் தோலில் எரிச்சல் ஏற்பட்டு தோல் பலவீனமடையக்கூடும். இதற்கு சரியான நுண்ணுயிர் எதிர்ப்புப்பொருள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

xxxx

யாராவது எனக்கு  சாமி படங்கள் கொடுத்தால் தூக்கி எறிய மாட்டேன் . அவை சின்னதாக இருந்தால் புத்தகத்தில் டேக் (Tag) ஆகப் பயன்படுத்துவேன் (படித்த பக்கத்தை அறிய  வைக்கும் காகிதம் அல்லது நூல் போன்றது) . அப்படி வைத்த ஒரு படத்தை அண்மையில்  பார்த்தபோது  தூக்கிவாறிப்போட்டது . எனக்கு கல்லூரி நாட்களில் கோபால கிருஷ்ண சாஸ்திரிகள் பசு மாட்டு வெண்ணையை மந்திரித்துக் கொடுத்த தன்வந்திரி மந்திரம் அது . இப்போது தினமும் படித்து வருகிறேன் . நீங்களும் படிக்கலாம்.

xxxx

ஐந்தே வரிகள்தான்

தன்வந்திரி மந்திரம்

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய!

தன்வந்தரயே!அம்ருத கலச ஹஸ்தாய !

ஸர்வ ஆமய விநாசநாய

த்ரைலோக்ய நாதாய

ஸ்ரீ மகாவிஷ்ணவே நமஹ

மிகவும் எளிதான மந்திரம் ; தன்வந்திரி என்பவர் மருத்துவ நூலின் தந்தை (Father of Medicine) ஆயுர்வேதத்தை உலகிற்கு நல்கியவர். மகா விஷ்ணுவின் ஒரு அவதாரம். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும்  கடைந்தபொழு து கைகளில் அமிர்த கலசத்தோடு பாற்கடலில் இருந்து எழுந்து வந்தவர்.

ஆகையால் இந்த மந்திரம் அவரை வாசுதேவன் என்று அழைத்து மஹாவிஷ்ணு என்று முடிகிறது

ஹஸ்தம் என்றால் கை ; கையில் அமிர்த கலசத்தோடு இருப்பவர் என்று தியானிக்கிறோம். த்ரை லோக்ய நாதாய – மூன்று உலகங்களுக்கும் தலைவன்

முக்கியமான வரி ஸர்வ = எல்லா , ஆமய = நோய்களும் , விநாசாய = அழிப்பவனுக்கு

மஹா விஷ்ணவே நமஹ = மஹா விஷ்ணு ரூபத்தில் உள்ளவருக்கு நமஸ்காரம்  !

அவரை எங்கே காணலாம் ?

எங்கள் குடும்பத்திற்கு  அவர்  மிகவும் நெருங்கியவர். மாயவரம் பக்கத்திலுள்ள வைத்தீஸ்வரன் எங்கள் குல தெய்வம். நாங்கள் எப்போது இந்தியாவுக்குப் போனாலும் அந்தக் கோவிலில் 5 அர்ச்சனைகள் செய்வோம். அவர்களில் ஒருவர் தன்வந்திரி. இந்த சந்நிதி , பிரகாரத்தில் உள்ளது . மீதி 4 அர்ச்சனைகள் – ஸ்ரீ வைத்யநாத சுவாமி, பாலாம்பிகா , அங்காரகன் (செவ்வாய் சந்நிதி); செல்வ முத்து குமார சுவாமி(முருகன்) .

நீங்களும் உங்கள் ஊர்க்  கோவிலில் உள்ள தன்வந்திரியை பூஜித்து வழிபடுங்கள் ; எப்போதும் ஆரோக்கியம் நீடிக்கும் !

என்னுடைய  எக்சிமா (ECZEMA  )நோய் போனதற்கு அந்த தன்வந்திரி மந்திரமே காரணம் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை!

Xxx subham xxxx

Additional Information

HOW BETNOVATE-N CREAM WORKS?

Betnovate-N Cream is a combination of two medicines: Betamethasone and Neomycin. Betamethasone is a steroid which blocks the production of certain chemical messengers (prostaglandins) that make the skin red, swollen and itchy. Neomycin is an antibiotic. It stops bacterial growth on the skin by preventing the synthesis of essential proteins required by bacteria to carry out vital functions (Always consult your family doctor before using any medicine.)

*****

tags- எக்சிமா ,ECZEMA , தன்வந்திரி மந்திரம், கைகண்ட மருந்து, 

அருணகிரிநாதருக்கு என்ன வேணும்’? – 1 (Post.11,423)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,423

Date uploaded in London – –   8 November 2022                  

  November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அருணகிரிநாதருக்கு என்ன வேணும்’? – 1 

ச. நாகராஜன்

 அடியார்களுக்கு என்ன வேண்டும் என்பதைக் கேட்பதில் அருணகிரிநாதருக்கு ஈடு இணை இல்லை.

அவர்களுக்கு வேண்டுவதைத் தனக்கு வேண்டும் என்று தன்னை முன்னிலைப் படுத்திக் கேட்கிறார்.

தனக்கு என்னென்ன வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியலையே அவர் முருகனிடம் தருகிறார்; தனது பக்தர்களுக்கு முருகன் அவர்கள் கேட்டதையும், கேட்காமல் விட்ட அரிய பல செல்வத்தையும் அளிப்பான் என்பது அவருக்குத் தெரியும். 

அவர் ‘வேணும்’ என்று மென்மையாக கேட்பதை இங்கு பார்ப்போம். 

1) கதிர்காமம்

உடுக்கத் துகில் வேணு நீள்பசி

  யவிக்கக் கனபானம் வேணுநல்

    ஒளிக்குப் புனலாடை வேணுமெய்  – யுறுநோயை

ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்

  இருக்கச் சிறுநாரி வேணுமொர்

    படுக்கத் தனிவீடு வேணுமிவ்  – வகையாவுங்


கிடைத்துக் க்ருஹவாசி யாகிய

  மயக்கக் கடலாடி நீடிய

    கிளைக்குப் பரிபால னாயுயி  – ரவமேபோம்

க்ருபைச்சித் தமுஞான போதமு

  மழைத்துத் தரவேணு மூழ்பவ

   கிரிக்குட் சுழல்வேனை யாளுவ  – தொருநாளே

பாடல் எண் 638 – உடுக்கத் துகில் வேணும் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : உடுப்பதற்கு உடைகள் வேண்டும்.

பெரும் பசியைத் தணிக்க உயரந்த சுவைநீர் வேண்டும்.

தேகம் நல்ல ஒளி வீசும் பொருட்டு நீரும் பட்டாடையும் வேண்டும். உடல் நோயை ஒழிக்க பரிகாரம் ( நல்ல மருந்துகள்) வேண்டும்.

வீட்டுக்குள் இருக்க இளமையான மனைவி வேண்டும்.

படுத்துக் கொள்ள ஒரு தனி வீடு வேண்டும்.

இத்தனை நலன்கள் யாவும் எனக்குக் கிடைக்கப் பெற்று, குடும்பஸ்தன் என்றவனாக ஆகி அந்த வாழ்வு என்ற மயக்கக் கடலில் மூழ்கி, பெரிய சுற்றத்தார் கூட்டத்தைக் காப்பாற்றுபவனாகி, முடிவில் என்னுயிர் வீணாகக் கழிந்து விடும்.

கருணை உள்ளத்தையும் சிவஞான போதத்தையும் நீ என்னைக் கூப்பிட்டு வைத்துத் தந்தருள வேண்டும்.

இந்தப் பாடலில் ஏழு “வேணும்’ களைப் பார்க்கிறோம்.

அனைத்தும் முக்கியமானவை. ஒரு இல்லறத்தானுக்குத் தேவையானவை. இருக்க இடம், உடுக்க உடை, புசிக்க உணவு, நோய்க்கான மருந்து, இளம் மனைவி என்று இந்தப் பட்டியல் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களைச் சுட்டிக் காட்டி விடுகிறது.


2) திருச்செந்தூர் 

               துயர்மேவி

மங்கை யழுது விழவே யமபடர்கள்  

  நின்று சருவ மலமே யொழுகவுயிர்

    மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை – வரவேணும்
 
பாடல் எண் 68 –  தொந்தி சரிய எனத் தொடங்கும் பாடல்

பொருள் : மிக்க துயரம் அடைந்து மனைவி அழுது விழவும், யமதூதர்கள் வந்து நின்று உயிரைக் கவரப் போராடவும், மலம் கட்டுப்பாடு இன்றி ஒழுகவும், உயிர் மங்கும் போது அந்தக் கடைசி நேரத்தில் முருகா, நீ விரைவில் மயிலின் மேல் வர வேண்டும்.

3) பழநி 

செவிடு குருடு வடிவு குறைவு

 சிறிது மிடியு – மணுகாதே 

அமரர் வடிவு மதிக குலமு

 மறிவு நிறையும்  – வரவே நின்

அருள தருளி யெனையு மனதொ

  டடிமை கொளவும் – வரவேண்டும்


பாடல் எண் 168 –  திமிர உததி  எனத் தொடங்கும் பாடல்

பொருள் : செவிடு, குருடு, அங்கஹீனம், சிறிதேனும் வறுமை என்பவை ஏதும் இல்லாது, தேவ லக்ஷணமும், உயர் குடிப்பிறப்பும், அறிவு நிறையும் வரவே, அறிவும், நீதி ஒழுக்கமும் எனக்கு வருமாறு உனது திருவருளைத் தந்தருளி என்னையும் நீ மனம் வைத்து உன் அடிமையாக ஆட்கொள்ள நீ வரவேண்டும்.


4) சுவாமிமலை  

மிகுத்த கனமதுறு நீள் சவுக்ய

 சகலசெல்வ யோகமிக்க – பெருவாழ்வு

தகைமைசிவ ஞானமுத்தி பரகதியு நீகொடுத்து

  தவிபுரிய வேணு நெய்த்த – வடிவேலா

பாடல் எண் 216-  சரண கமலாலயத்தை  எனத் தொடங்கும் பாடல்

பொருள் : மிக்க பெருமையைத் தரும் நீடித்த சுகம், எல்லாவித செல்வம், அதிர்ஷ்டம், நிறைந்த பெருவாழ்வு, நன்மதிப்பு, சிவஞானம், முக்தியாம் மேலான கதி இவை யாவும் நீ கொடுத்து உதவி புரிய வேண்டுகின்றேன். பளபளப்பும் கூர்மையும் உடைய வேலனே!

5) காஞ்சீபுரம்

எத்தனையி நெஞ்சில் எத்தனமு யங்கி

  இத்தனையி லஞ்ச லெனவேணும்

பாடல் எண் 344 –  நச்சரவமென்று  எனத் தொடங்கும் பாடல்

பொருள் : எத்தனையோ எண்ணங்களை மனதில் கொண்டு, முயற்சிகளை மேற்கொண்டு செய்பவளாகிய என்னை, இந்த அளவிலேயே அஞ்சல் (அஞ்சாதே) என்று கூறி அருள வேண்டும்.

 குறிப்பு : இது அகத்துறையில் தன்னை நாயகியாகப் பாவித்து அருணகிரிநாதர் பாடிய திருப்புகழாகும்.

*** 

குறிப்பு நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இதில் காணலாம்.

 புத்தக அறிமுகம் – 107

அறிவியல் வியக்கும் ஆன்மீகம்                                           

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1.    அறிவியல் வியக்கும் ஆன்மீகம்

2.    இந்திர விழா   

3.    ஆதிரை உக்கிரம்    

4.    கந்தனை வளர்த்த கார்த்திகை!  

5.    சுவாதி வான மாணிக்கம் 

6.    வானில் ஆடும் ராதை    

7.    நிலவின் மனைவி ரோஹினி   

8.    பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன்! திருவோணம்

9.    தமிழ் முனிவன் அகத்தியன் (கானோபஸ்) 

10.   வானில் ஒரு மகாபாரதம்! அவிட்டம் 

11.   அர்ஜூனன் கண்ட விசுவரூப தரிசனம் பூரம், உத்தரம் 

12.   வெளிச்சத்துக்கு வரும் வேத ஜோதிடம்   

13.   எண்ணங்கள் அழிவதில்லை!    

14.   மந்திரங்களின் மகத்துவம்!

15.   சிறப்பு ஆய்வில் ஸ்ரீ சக்கரம் மந்திரம் – யந்திரம் – தந்திரம்  

16.   எல்லாமே எண்கள்தான்!  

17.   இயற்கையின் வடிவமைப்பு இரகசியங்கள் 

18.   கண்ணும் கருத்தும் பார்வைக்கு தனி மொழி உண்டு! 

19.   வண்ணங்களின் பான்மை – வன்மை! 

20.   ஒவ்வொருவரைச் சுற்றியும் ஒளிவட்டம்   

21.   மறுபிறவி மாயம்   

22.   இசை – ஒலி – ஓசை

*

நூலிற்கு இந்து முன்னணி ஸ்தாபகர் திரு இராம கோபாலன் வழங்கிய வாழ்த்துரை இது:

திரு ச.நாகராஜன் அவர்கள் எழுதியுள்ள அறிவியல் வியக்கும் ஆன்மீகம்’ என்ற புத்தகம் ஆழ்ந்த ஆய்வுக்குப் பிறகு எழுதப்பட்டுள்ளது.

திரு ச.நாகராஜனின் குடும்பம் நாள்தோறும் கணபதி ஹோமம் நடத்தி ஆன்மீக சக்தி படைத்த குடும்பமாகும். நமது நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சிந்தனையாளர்களின் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளைத் தேடிப் பிடித்து வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது.

பாரத நாட்டின் தனிச் சிறப்பான ஆன்மீகம் பற்றி நமது நாட்டினர்க்கே தெரிவதில்லை. இதன் காரணமாக தேசியத் தன்மான உணர்வு கிட்டத் தட்ட இல்லையென்றே கூறி விடலாம்.

திரு ச.நாகராஜன் அவர்களின் இந்த அரிய தொண்டுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது போன்ற நல்ல புத்தகங்களை அவர் அடிக்கடி வெளியிட்டு பாரத நாட்டுக்குச் சிறப்புச் சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

                                              இப்படிக்கு

                                          இராம.கோபாலன்

                                    (இந்து முன்னணித் தலைவர்)

*

நூலில் இடம் பெறும் முன்னுரை இது:

காலம் காலமாக வானத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் எல்லா இனத்தவரையும் எல்லா மதத்தினரையும் கவர்ந்துள்ளன.

பாரத தேசத்தில் புராதன மகரிஷிகள் ‘வானத்து ஒளியை ஆராய்வோம்’ என்று முழங்கினர்.

ரிஷிகளின் இந்தக் கூற்றை அறிந்தோ அறியாமலோ ராயல் அஸ்ட்ரானமிகல் சொஸைடியும் ‘எதெல்லாம் பிரகாசிக்கிறதோ அதெல்லாம் உற்றுக் கவனிக்கப்பட வேண்டியதே (Quic Quid Nitit Notandum) என்ற தொடரைத் தன் லட்சிய வாசகமாக (Motto) வைத்திருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது!

தேவர்களின் உறைவிடம் என்று வானத்தை நமது மகரிஷிகள் வர்ணித்துள்ளனர். மிகக் கடுமையாகத் தவம் புரிந்தோரே வானத்தில் நட்சத்திரமாக ஒளி விட்டுப் பிரகாசிக்கின்றனர் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை. துருவ நட்சத்திரம் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

ரிக் வேதத்தில் வானவியல் பிரமிக்கத்தக்க விதத்தில் நுணுக்கமாகக் கூறப்பட்டிருப்பதை அறிஞர்கள் அறிவர்.

இதை சமீபத்தில் அறிஞர் சுபாஷ் கக் நிரூபித்துள்ளார்.

1900ம் ஆண்டிலிருந்தே பாலகங்காதர திலகர், காளிநத் முகர்ஜி, ஜி.வி.ராகவராவ் போன்று பல அறிஞர்கள் ஹிந்து புராணங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் உள்ள தொடர்பை ஆராய ஆரம்பித்தனர்.

ஆனால் நவீன அறிவியல் இந்தப் புராணக் கூற்றுக்களை அப்படியே ஒத்திருக்கிறது என்பதை நான் வியப்போடு பார்க்க ஆரம்பித்தேன். சர் ஜேம்ஸ் ஜீன்ஸ், வில்லியம் ஹெர்ஷல் போன்ற வானவியல் விஞ்ஞானிகளின் நூல்களை ஆர்வத்துடன் படிக்கவே இந்தக் கருத்து உறுதிப்பட்டது.

புராணத்தில் கூறப்படும் ஒவ்வொரு வரியும் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நூறு சதவிகிதம் நவீன விஞ்ஞானிகளின் ஆய்வு அறிக்கைகளுடனும், கூற்றுக்களுடனும் ஒத்திருப்பது பிரமிப்பைத் தருகிறது! தொடர்ந்து இது பற்றிய ஆய்வுகளையும், நூல்களையும், செய்தித் தாள்களில் அவ்வப்பொழுது வெளியான செய்திகளையும் சேகரிக்க ஆரம்பித்தேன். விளைவு – இந்த நூல்!

இதை எனது பெருமதிப்பிற்குரிய நண்பரும், டைரக்டரும், சிறந்த நடிகரும், பாக்யா வார இதழ் ஆசிரியரும், அறிஞரும், எழுத்தாளருமான திரு கே. பாக்யராஜ் அவர்கள் பாக்யா இதழில் தொடராக வெளியிட்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

விஞ்ஞானம் மெய்ஞானம் தொடரில் நிறைய கட்டுரைகள் மஞ்சரி மாத இதழில் வெளி வந்தன. இவற்றைப் பாராட்டி அவ்வப்பொழுது ஆக்கமும் ஊக்கமும் தந்து வெளியிட்ட மஞ்சரி ஆசிரியர் திரு எஸ். லட்சுமணன் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

இந்த நூலை என் அன்னை திருமதி. ராஜலக்ஷ்மி சந்தானம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

இந்த நூலுக்கு பாராட்டுரை தந்து கௌரவித்த ஹிந்து முன்னணி அமைப்பாளர் திரு இராம. கோபாலன் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றி.

நூலை நல்ல முறையில் வெளியிடும் நிலா பப்ளிஷர்ஸுக்கு எனது நன்றி. எப்போதும் போலத் தங்கள் ஆதரவைத் தந்து உதவிய என் சகோதரர்களுக்கும் என் மனைவி மற்றும் மகன்களுக்கும் என் நன்றி.

வாசகர்கள் இதை ஒரு ஆரம்பமாகவே எண்ணி நட்சத்திரங்களை ஆராய ஆரம்பித்தால் இந்த நூலில் உள்ளது போல நூறு மடங்கு அற்புத விஷயங்களை அறிய முடியும். அது அவர்களின் வாழ்க்கையை எல்லாவிதத்திலும் மேம்படுத்த வழி வகுக்கும் என்பது திண்ணம்.

நூலினால் உத்வேகம் பெற்ற வாசகர்கள் தங்கள் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். 

சென்னை                                       ச.நாகராஜன்

மின்னஞ்சல் :snagarajans@gmail.com

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

When scientific research attempted to reason the various philosophies outlined in Hinduism and spirituality, the investigation led to several surprises. The greatness of several items glorified by Hinduism were proved scientifically, thereby explaining the meaning behind several of our classical rituals, and the teachings of our gurus and scholars. This book focuses on many such methods of Hinduism, and discusses the scientific rationale behind them. Are you believer of science, but not a believer in spiritualism? Read this book and think again!

இந்துத் தத்துவம் விளக்கும் ஆன்மிக ரகசியங்களை அறிவியல் ஆராயத் தலைப்பட்டபோது அதன் முடிவுகள் பிரமிப்பூட்டின! மந்திரங்களின் மகிமை, ஒலியின் மகிமை என்று ஒவ்வொன்றாக ஆராய்ந்து அவற்றை அறிவியல் ஆமோதித்தபோது பழம்பெரும் தத்துவங்களின் உண்மையும் அவற்றைக் கண்ட ஞானிகளின் பெருமையும் உலகிற்குத் தெரிய வந்தன. அப்பேர்ப்பட்ட அரும்பெரும் இந்துத் தத்துவங்களையும் அவை பற்றிய அறிவியல் முடிவுகளையும் ஒருசேர இந்நூலில் விளக்குகிறார் ஆசிரியர். ஆன்மிகத்தை நம்புபவர்களை விட நம்பாதவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அறிவியல் வியக்கும் ஆன்மீகம் ’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

Learn Tamil Verbs : Lesson 21 :Reflexive Compound Verb கொள் (Post No.11,422)

எடு= TAKE எடுத்துக்கொள் = KEEP IT FOR ONESELF 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,422

Date uploaded in London – 7 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Reflexive verb Kol கொள் is used to say what you do it for yourself. If one does something to oneself and then reflexive verb Kol is used as a suffix to the converbial form of a verb.

In short, Converbial form of a verb+ KOL+ PGN

Aadi , Paadi are the converbial of the verbs Aaadu=Dance; Paadu= sing.

The converbial forms are Aadi, Paadi respectively.

You add Kol according to PGN

First person past tense

Naan aadik konden = நான் ஆடிக் கொண்டேன்

Xxx

If it is Vaa= come, the converbial for is Vandhu

Third Person Feminine Future will be

Aval Vandhu Kolvaal ( she would come herself)= அவள் வந்து கொள்வாள்

Xxx

If it is Go= Po, the converbial form of Go is Poy

I myself go (First Person Masculine, Singular , Present Tense) Naan Poyk Kolkiren; normally we would make it emphatic by adding EE to pronoun Naan(I)

It will be Naane Poyk Kolkiren= I myself go நான் போய்க் கொள்கிறேன் ; emphatic நானே போய்க் கொள்கிறேன்

xxx

கொள்

கொள்கிறேன் கொள்வேன் ,கொண்டேன்

நானே = I myself

அவள்= she, அவன் = he

ஆடிக் கொள்கிறேன், பாடிக் கொள்கிறேன்

வந்து (converbial of Vaa= Come)

போய்க் (converbial of Po= Go)

சாப்பிட்டு  (converbial of Saappidu= Eat )

சாப்பிட்டுக் கொள்வேன் =I  myself  will eat

xxx

குழந்தையே சாப்பிட்டுக் கொள்ளும் Child will eat by itsef;

Strangely South Indian Tamils don’t give respect to a baby girl or baby boy and use the verb that is used for lower life.

Sri Lankan Tamils give too much respect with R ending verbs

Even for a child they say அவரே சாப்பிட்டுக்கொள்வார்

Xxx

NEW VERBS

COME BY MYSELF, YOURSELF, HERSELF, HIMSELF , ITSELF

GO BY YOURSELF ……. ETC

EZUTHI  COVERBIAL OF WRITE/ EZUTHU

KATRU = CONVERBIAL OF KAL/LEARN; VAANGI= BUY; HAVING BOUGHT

Refer previous tabular columns as well

 Visit my blogs studytamil.wordpress.com.

TAGS- REFLEXIVE VERBS, KOL, 

Tamil Hindu Encyclopaedia – 21 (Yaga, Yagnas, Gotras யாக, யக்ஞங்கள், கோத்ரங்கள்) – Post 11,421

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,421

Date uploaded in London – 7 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

யாக, யக்ஞங்கள்

The wonder about 2000 year old Tamil Sangam literature is there is lot of information about Rajasuya Yagam (raaja suuya yaagam) Aswamedha Yaagam and many other Yagas. Puranamuru verse 166 gives very interesting information about 21 types of Yagas (FIRE CEREMONY) and 14 Types of Cows and other essentials for a fire ritual. There are other verses about Rajasuyam, Asvamedham, Yupa Pillars, Eagle shaped Altar of Karikal Choza, Deer hide dress of Yaga Performers, Dharma Patnis, Indra’s Amrita etc.

The significance increases because of the Sanskrit words Yupa (yuupa) Pillars, and references to Gotra names Kaundinya , Kausika, Vatula, Kavya, Gautama and Bharadwaja

Nachchinarkiniyar, the most famous commentator of Sangam literature was a Brahmin from Madurai belonging to Bhaaradwaaja Gotra. He was the one who wrote highest number of commentaries like Adi Shankara. He proudly declared that ‘Madurai resident Bhaaradwja Gotra Nachinakiniar wrote this’ at the end of each commentary. Without his commentary, no one would have understood Sangam Tamil poems.

Pura nanuru (naanuuru) verse 166 is about Paarppaan Kaundinya Gotra Vishnu Dasan of Choza Country Puunchaatruur sung by Avur Mulankizar (aavuur muulan kizaar)

It gives very valuable information about Hindu Yagas that were performed 2000 years ago in Tamil country. Dr R Ngaswami, great Historian and Archaeologist gives a lot of details about Gotras. U ve Swaminatha Iyer (U. VE. SA ), the doyen of Tamil literature , gives the list of 21 types of Yagas done by Vishnu Dasan of Purannanuu.

Vishnu Dasan is translated and Tamilized as Vinnan thaayaan. Paarppaan is the word used for Brahmin in this verse.

Dwija இரு பிறப்பாளர் is also used by Tamil Sangam Poets in addition to Anthanar and Paarppaan இரு பிறப்பாளர்பார்ப்பான், அந்தணர்Dwija mean one who has Two Births. Though it meant Brahmana, Kshatriya and Vaisya, mostly it meant Brahmins. One birth happens when the boy comes out of womb of his mother and another birth happens when he is baptised with Puunuul, the sacred thread (Yajnopaveetam).

ANTHANAR can be applied only to Brahmins because they are the one who are attributed with Six Duties. Seers/Sanyasins/Ascetics are not allowed to do fire rituals. Sangam literature clearly says ‘Six Duties Anthanar’ அறுதொழில் அந்தணர்.

Dwija இரு பிறப்பாளர்-  Murugu – line 182; Puram verse 367-12

Xxx

Puram 166

Purananuru – Part 166

Translated by George L. III Hart

You who are descended from men renowned
for their superb learning, men who
performed to perfection all twenty-one
kinds of sacrifice, who confirmed
the truth, never thinking it false,
who understood lies that resembled truth,
thus defeating those who would contend
with the one ancient work of six sections
and four divisions, focused on Righteousness,
never swerving from the well-chosen words
of the Primal Being with his long, matted hair!
You glow in your black antelope skin
from dry forest land, needed for the ritual,
worn over the thread around your shoulder!
Your beloved wives, worthy of your high
station, flawlessly faithful, free of harshness,
renowned for their virtue, donning the sacred ornaments,
their foreheads small, their hips and thighs large and wide,
of few words and rich abundant hair, request their ritual responsibilities!
Whether in settled land or jungle, omitting
none of the fourteen sites, you pour out
more ghee than there is water, sacrifice
more times than there are numbers, spread
your fame wider than the earth, and at
the great moment when a difficult sacrifice is completed,
may we always see you in your high and perfect state, offering hospitality!
Once I have eaten, devoured the food and mounted
a chariot, I will celebrate my luck and then go off
to our city with its cool bathing places ever renewed
by the fresh waters of the Kaviri River spread
with flowers when above the tall gold-bearing mountain
in the west, the thunder roars! May you be
as firmly established over the earth

as Himalaya where the bamboo grows and rising mountains block the clouds!

நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை

முது முதல்வன் வாய் போகாது,

ஒன்று புரிந்த ஈர் இரண்டின்,

ஆறு உணர்ந்த ஒரு முது நூல்

இகல் கண்டோர் மிகல் சாய்மார்,            5

மெய் அன்ன பொய் உணர்ந்து,

பொய் ஓராது மெய் கொளீஇ,

மூ ஏழ் துறையும் முட்டு இன்று போகிய

உரைசால் சிறப்பின் உரவோர் மருக!

வினைக்கு வேண்டி நீ பூண்ட  10

புலப் புல்வாய்க் கலைப் பச்சை

சுவல் பூண் ஞாண்மிசைப் பொலிய;

மறம் கடிந்த அருங் கற்பின்,

அறம் புகழ்ந்த வலை சூடி,

சிறு நுதல்பேர் அகல் அல்குல்,            15

சில சொல்லின்பல கூந்தல்நின்

நிலைக்கு ஒத்த நின் துணைத் துணைவியர்

தமக்கு அமைந்த தொழில் கேட்ப;

காடு என்றா நாடு என்று ஆங்கு

ஈர் ஏழின் இடம் முட்டாது,             20

நீர் நாண நெய் வழங்கியும்,

எண் நாணப் பல வேட்டும்,

மண் நாணப் புகழ் பரப்பியும்,

அருங் கடிப் பெருங் காலை,

விருந்துற்ற நின் திருந்து ஏந்து நிலை,             25

என்றும்காண்கதில் அம்மயாமே! குடாஅது

பொன் படு நெடு வரைப் புயலேறு சிலைப்பின்,

பூ விரி புது நீர்க் காவிரி புரக்கும்

தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண்,

உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்;                 30

செல்வல் அத்தையானேசெல்லாது,

மழை அண்ணாப்ப நீடிய நெடு வரைக்

கழை வளர் இமயம் போல,

நிலீஇயர் அத்தைநீ நிலம்மிசையானே?

திணை வாகை;

துறை பார்ப்பன வாகை.

சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

Following are the details we get from this Purananuru poem:

1.Paarppaan Vishnu dasan performed so many Yaagaas and as result of his innumerable Yagnaas that water was shamed (out performed or belittled) because of the Ghee he used in the Yagas, Number was shamed by the count of Yagas he performed, earth was shamed because of his far  spreading fame (if one reads the Bhumi Sukta of Atharvana Veda, one would get the full meaning of this word).

2.Vedas are Fuor in number and they are studied with Six ancillary subjects.

3. Vedas are recited by Shiva for ever. The word used here was MUTHU MAKAN ( I would interpret it as Brahma)

4.Vishnu Dasan knew what is Truth and what is Untruth and he stick to truth. Here the interpretation by few scholars says that untrue things were Buddhism and Jainism. But I would interpret is as Anti Ritual Hindu Sects. One of the six sects (Meemaasakas) said Vedic Rituals are more important than anything else. One other sect said they are not that important. Atheism (Charruvakam—chaaruvaakam—) , part of Hinduism, said that Vedas themselves are no important. Chaaruvaaka means pleasant  words- sweet words.

5.Vishnu Dasan was well versed in all the 21 types of Yagas. Manu smrti mentioned them separately. But U VE SA. Gives us the list of 21 Yagas.

SOMA YAGNAS – 7

HAVIR YAGNAS – 7

PAAGA YAJNAS – 7

XXX

SOMA YAGNAS – 7

Agnishtomam

Adhi Agnishtomam

Ukthyam

Shodasi

Vajapeyam

Athiraathram

Apthoryaamam

HAVIR YAGNAS – 7

Agnihotram

Agniyaatheyam

Darsapuurnamaasam

Chaaturmaasyam

Niruutapasubandham

Aagraayanam

Sauthraamani

PAAGA YAGNAS – 7

Ashtakaa

Aapaarvanam

Sraadhdha

Sraavani

Aagrakaayani

Chaitri

Aasvayuji

6.Women in Yagas

The verse also shows us that two women are needed for a man to do fire rituals. The man wore a uniform made of deer hide. Women wore the uniform known as Saalakam

7. Two X Seven Cows

The ghee (clarified butter ) for the Yaga, Yagnas are collected from Seven Wild Cows in the forest and Seven Domestic Cows.

(My comments: Hindus were great wild life lovers. They protected and respected even wild cows and wild bulls)

8.This poem is included in the genre called  ‘Paarppana Vaakai’ which meant Brahmin Victory. It means that a Brahmin is considered Victorious only when he performed all types of Yagas (Havan ceremonies)

Xxx

GOTRAS

Dr R Nagaswami, great historian and archaeologist, was the only Tamil who was well versed in Tamil, Sanskrit and English. World famous universities invited him to deliver lectures on various subjects. As an author of scores of books and thousands of articles, he published one book in Tamil titled YAAVARUM KELIR (year 1973). It has an article describing the Tamil Brahmins as found in Sangam Tamil literature and later inscriptions. No one has listed the Gotras like him.  Later K C Lakshminarayanan has written a voluminous book in Tamil as well detailing the Vedic thoughts in Tamil literature.

xxxx

Gotras in Sangam Tamil literature:

Kaundinya ,Vaatula , Kausika ,Atreya , Kaavya ,Kaasyapa , Gargya, Gautama, (Agastya)

By Pallava times (400 CE to 800 CE) we come across 32 Gotras in Tamil Nadu and Andhra from their copper plates, according to Dr R Nagaswami.

Sangam poets proudly declared their Gotras and Gotras are prefixed with their names.

In the next part we will look at the Yagas and Yagnas done by Tamil Kings.

To be continued………………………….

Also read my old article

No Brahmins, No Tamil!! – Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/01/14 › no-brahmins…

14 Jan 2012 — No BrahminsNo Tamil!! … Tamil is one of the oldest, richest and sweetest languages in the world. A great many people, irrespective of their …

No Brahmins, No Tamil!!

https://www.tamilbrahmins.com › threads › no-brahmin…

15 Nov 2011 — List of Brahmin poets and their contribution in Cankam literature: Agasthyar, who received Tamil language from Shiva himself. Tolkappiyar ( …

25 posts · Dear Sir, Greetings! You are a renowned scholar-but MOST of us ARE not. We are jus

Tags- புறநானூறு 166, Purananuru 166, Types of Yagas, Tamil Brahmins, Women in Yagna, Dwija, Gotras, Sangam Literature

நீடித்த ஆரோக்கிய வாழ்விற்கு ஆயுர் வேதம் தரும் அன்புரை! (Post.11,420)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,420

Date uploaded in London – –   7 November 2022                  

  November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹெல்த்கேர் அக்டோபர் 2022 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

நீடித்த ஆரோக்கிய வாழ்விற்கு ஆயுர் வேதம் தரும் அன்புரை!

ச.நாகராஜன்

நம் முன்னோர்கள் நீடித்த வாழ்வை ஒருவன் எப்பாடுபட்டேனும் அடைதல் வேண்டும் என்று வலியுறுத்தியதோடு அப்படிப்பட்ட நீடித்த வாழ்க்கை ஆரோக்கியத்துடன் இருத்தல் வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பஸ்யேம சரத சதம்; ஜீவேம சரத சதம் – ஒளிரும் சூரியனை நூறு ஆண்டுகள் பார்ப்போம்; நூறு ஆண்டுகள் வாழ்வோம் என இப்படி அன்றாடம் நூறு ஆண்டு வாழ்வதை உறுதிப் படுத்திக் கொள்ளச் சொல்கிறது வேதம்.

நோய் நொடியில்லா வாழ்வு வாழ்வதற்கான அன்புரைகளை முன்னோர்கள் பல அற நூல்களிலும், வாழ்க்கை முறை நூல்களிலும் பழமொழிகள் வாயிலாம் கூறினர்.

அவற்றில் சில:

தினமும் சூரியோதயத்திற்கு முன்பாக எழுதல் வேண்டும்.

பற்களை நன்கு சுத்தம் செய்வதோடு நாக்கையும் சுத்தம் செய்தல் அவசியம்.

கண்களையும் நீரினால் நன்கு கழுவுதல் வேண்டும்.

வெந்நீரில் குளித்தல் நலம்.  மசாஜ் செய்து கொள்வது நல்லது.

வெந்நீர் அருந்துதல் ஜீரணத்திற்கு உதவும். சாப்பிடும் போது நீரை அருந்துதல் கூடாது.

வேகமாக உணவை உட்கொள்வது வாயு பிரச்சினையை உருவாக்கும்.

நிதானமான சுவைத்துச் சாப்பிடுதல் அவசியம். அமைதியாக யாருடனும் பேசாமல் உணவில் மட்டுமே கவனம் செலுத்தல் வேண்டும்.

வயிறு முட்ட முட்டச் சாப்பிடாமல் ஒரு சிறிது காலியாக இருக்கும் படி உணவின் அளவை நிர்ணயித்துக் கொள்ளல் வேண்டும்.

வாத, பித்த, சிலேஷம் என மூவகைப் பட்ட உடல் வாகுவில் நாம் எந்த வகை என்பதை அறிந்து அதற்குத் தக உணவுத் திட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வாதவற்றை அறவே நீக்க வேண்டும்.

உணவு மிகவும் குளிர்ந்து போனதாகவும் இருக்கக் கூடாது; மிக மிக சூடானதாகவும் இருக்கக் கூடாது. அன்றாடம் அவ்வப்பொழுது சமைத்த உணவே உடலுக்கு ஏற்றது.

நினைத்த போது சாப்பிடுதல் என்பது அறவே கூடாது. காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு இவற்றிற்கான நேரத்தின் படியே உணவை உட்கொள்ளல் வேண்டும்.

இரவு உறங்கப் போகும் முன்னர் குறைந்த பட்சம் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே உணவை முடித்துக் கொள்ள வேண்டும்.

சாப்பிட்டவுடன் நூறு அடி நடக்க வேண்டும். இரவு உணவிற்குப் பின்னர் இப்படி நடப்பது ‘சத பதம்’ எனப்படும்.

 உடல் பயிற்சி, யோகாசனம், மூச்சுப் பயிற்சி – இவற்றை தக்க ஆசான் மூலம் கற்று கடைப்பிடிக்க வேண்டும்.

குளிர் பானங்களை அருந்துதல் கூடாது. தற்காலத்தில் வரும் பாக்கேஜ் உணவு, நொறுக்குத் தீனி இவற்றை விலக்க வேண்டும்.

மதுவை அறவே நீக்க வேண்டும்.

சிகரட், போதைப் பொருள்கள் ஆயுளைக் குறைக்கும்.

சைவ உணவே சாலச் சிறந்தது. பச்சை கறிகாய்களை நன்கு உரிய முறையில் வேக வைத்துச் சாப்பிட வேண்டும்.

இரவு உறக்கம் இன்றியமையாதது.

உணவில் பசு நெய் சேர்த்தல் வேண்டும்.

உடலுக்குத் தக பால், தயிர் இவற்றைச் சேர்க்க வேண்டும்.

பழ வகைகளை அவ்வப்பொழுது எடுத்து உண்ண வேண்டும்.

சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றின் அளவு சரியாக இருத்தல் வேண்டும்.

(வேகமாக வாகனங்களை ஓட்டுதல் உட்பட்ட) உடலுக்கு ஒவ்வாத சாகஸ வேலைகளைச் செய்தல் கூடாது.

பெரியோர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுதலும், இறை வழிபாடும், அவ்வப்பொழுது கோவில் தரிசனமும், தல, தீர்த்த யாத்திரையும் முக்கியம்.

ஆன்மீக உரைகளை வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் கேட்க வேண்டும். ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களைப் படிப்பதோடு வீட்டில் உள்ள இளம் குழந்தைகளுக்கும் அதைச் சொல்ல வேண்டும்.

(தொலைக்காட்சி பார்த்தலை மிகுந்த கட்டுப்பாடுடன் ஒரு அளவுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.)

இசை கேட்டல் நல்லது.

அன்றாட வாழ்க்கையில் நகைச்சுவை முக்கியம். அனைத்தையும்  மிக சீரியஸாக எடுத்தல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே நகைச்சுவை நூல்களைப் படித்தல் அவசியம்.

தன்னை மூன்றாவது நபராக வைத்து தியானம் செய்வது அனைத்துப் பிரச்சினைகளும் தீர்வதற்கான ஒரு அருமையான வழி. இப்படிச் செய்யும் போது பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் தாமாக வரும்.

ஊரிலுள்ள வைத்தியரை நன்கு மதிப்பதோடு அவரின் வாழ்க்கை நலத்தை மனதில் கொண்டு அவரை ஆதரிக்க வேண்டும். அவர் கூறும் பரிந்துரைகளை அப்படியே மேற்கொண்டு நடக்க வேண்டும்.

வாஸ்து அமைப்பிலான வசிப்பிடம் அவசியம் தேவை.

நீர், காற்று, இடம் ஆகியவற்றின் சுத்தத்தை மனதில் கொண்டு வாழ்தல் வேண்டும்.

உயிர் வாழ் இனங்களுடன் அன்புடன் நடந்து கொண்டால் இயற்கை நம்மை நன்கு வாழ வைக்கும். சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டை மனதில் கொண்டு நடப்பதால் சுற்றுப்புறமும் மேம்படும்; சமுதாயத்தில் கொரானா போன்றவையும் பரவாது.

இப்படி சொந்த நலம், குடும்ப நலம். சமுதாய நலம் என அனைத்து நலங்களையும் கூறும் ஆயுர் வேத நூல்களைப் படிப்போம்.

ஆயுர் வேத வழி நடப்போம்; அருமையாக வாழ்வோம்!

***

புத்தக அறிமுகம் – 106

அறிவியல் துளிகள் (பாகம்6)                                              

பொருளடக்கம் 

நூலில் உள்ள அத்தியாயங்கள் 

 1. வித்தியாசமான விஞ்ஞானி ஜங் – 1

 2. வித்தியாசமான விஞ்ஞானி ஜங் – 2

 3. வித்தியாசமான விஞ்ஞானி ஜங் – 3

 4. வித்தியாசமான விஞ்ஞானி ஜங் – 4

 5. வித்தியாசமான விஞ்ஞானி ஜங் – 5

 6. இனி வரப்போகும் அதிசய மாற்றங்கள் – 1

 7. இனி வரப்போகும் அதிசய மாற்றங்கள் – 2

 8. ஸ்டீபன் ஹாகிங்கின் ‘எனது சுருக்கமான சரித்திரம்’

 9. வெற்றி பெற ஐ.க்யூ மட்டும் போதாது!

10. க்ரிட் டெஸ்ட்!

11. நூறாவது குரங்கு!

12. அதிசய ஆராய்ச்சியாளர் லியால் வாட்ஸன்! – 1

13. அதிசய ஆராய்ச்சியாளர் லியால் வாட்ஸன்! – 2

14. கம்ப்யூட்டர் கவிதை எழுதுமா?

15. எழுத ஆசையா? இதோ டிப்ஸ்!

16. பிரபஞ்சத்தில் பயணம் செய்யும் ஒரு காதலியின் இதயத்துடிப்பு!

17. கம்ப்யூட்டர் விளையாட்டுக்களை விளையாடலாமா?

18. காலம் பர்றிய வித்தியாசமான ஆராய்ச்சிகளும்

    கண்டுபிடிப்புகளும் – 1

19. காலம் பர்றிய வித்தியாசமான ஆராய்ச்சிகளும்

    கண்டுபிடிப்புகளும் – 2

20. காலம் பர்றிய வித்தியாசமான ஆராய்ச்சிகளும்

    கண்டுபிடிப்புகளும் – 3

21. காலம் பர்றிய வித்தியாசமான ஆராய்ச்சிகளும்

   கண்டுபிடிப்புகளும் – 4

22. உங்களை அறியாமலேயே நீங்கள் போருக்கு உதவுகிறீர்களா?

23. அதிசய மூலகம் டான்ட்டாலம்!

24. லெனினின் மூளை பற்றிய ஆராய்ச்சி

25. பேரழகி கிளியோபாட்ரா ஒரு விஞ்ஞானியா?

26. விசித்திர சோதனைகள்! 

·          

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

 After astonishing the readers with his five serials on “Science Facts” here comes the sixth of the series by Nagarajan. . Stephen Hawking’s “My short History”,”To win IQ alone is not enough”, “Hundredth Monkey”, “Diverse Research and Findings of Time” – If you are bewildered with these kind of chapter headers, needless to mention what is contained within this sixth article.

 ‘அறிவியல் துளிகள்’ எனும் தலைப்பில் ஏற்கெனவே ஐந்து பாகங்கள் எழுதி வாசகர்களை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் சென்ற ச.நாகராஜனின் மற்றுமொரு பாகம் இது. பல்வேறு கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. ஸ்டீபன் ஹாகிங்கின் ‘எனது சுருக்கமான சரித்திரம்’, வெற்றி பெற ஐ.க்யூ மட்டும் போதாது, நூறாவது குரங்கு, காலம் பற்றிய வித்தியாசமான ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் – இப்படி, அத்தியாயங்களின் தலைப்புகளே வியப்பூட்டுகின்றன என்றால் உள்ளடக்கத்தை தனியே சொல்ல வேண்டியதில்லை.

 *

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அறிவியல் துளிகள் -பாகம் 6’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*