நீங்கள் படித்திராத 3 புஸ்தகங்கள்

POSTED ON 31-3-2023

 நீங்கள் படித்திராத 3 புஸ்தகங்கள்

Book 63

63.தினமணி பத்திரிக்கை கதையும் என் கதையும்

பொருளடக்கம்

1.என் அப்பாவிடம் கற்றது!

2.சத்ய சாய் பாபாவின் அழைப்பு

3.என் அம்மாவிடம் கற்றது!

4.கோயங்கா சாம்ராஜ்ய ரகசியங்கள்!

5.தினமணி ரகசியம்: திருடனுக்கு தேள் கொட்டிய கதை!

6.தினமணியில் ‘’லவ் லெட்டெர்’’ நோட்டுப் புத்தகம்

7. தினமணியும் முரசொலியும்!

8.அரையர் சேவை- ஒரு சுவையான சம்பவம்

9.உடையாளூர் அடித்த ஜோக் &

சொல்லக்கூடாத 5 விஷயங்கள்!

10.மார்கழித் திங்கள், மடி நிறையப் பொங்கல்!

11.பாரதீய ஜனதா இல.கணேசன் ‘ஜோக்’குகள்

12.திரைப்பட டைரக்டர் அம்ஷன்குமாருடன் சந்திப்பு

13.மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி

14.யாரிடமும் கற்கலாம்; எப்போதும் கற்கலாம்!!

15. புனிதர் அண்ணாஜி

16. காந்தி வந்தாராம் , பூந்தி தந்தாராம், சாந்தி தின்னாளாம்…

17. லண்டனில் தமிழ் வளர்ந்த கதை!

18. லண்டனில் நாடி ஜோதிடம்

19. விநாயக கவசத்தின் அபூர்வ சக்தி!

20. நான் ஏன் வடலூருக்குச் சென்றேன்?

21.லண்டனில் திருவள்ளுவர் சிலை  நிறுவிய வரலாறு

22.இந்தியத் தமிழும் இலங்கைத் தமிழும்

23.நான் கண்ட சொர்க்கம்: BBC  உணவு விடுதியில் வெஜிட்டேரியன் உணவு

24.புது வீட்டுக்குக் குடி போகக் கூடாத மாதங்கள்:

25. வெஜிட்டேரியன் லண்டன் சாமிநாதன் பட்ட பாடு

26.நானும் பி.பி.சி. தமிழோசையும்: பிக்மாலியன் நாடகம்

27.ஜனவரி 2023 வரை லண்டன் சுவாமிநாதன் எழுதிய 94 நூல்கள்

28.பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை!

**********************************

Cover Picture: Sri V Santanam and Sri A N Sivaraman. Inside Picture: Tiru Valluvar Statue at SOAS, University of London

Book 62

62. தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள் (book title)

பொருளடக்கம்

1.            தமிழ் இலக்கியத்தில் சில அதிசயச் செய்திகள்    

2.            கரிகால் சோழனுக்கு பிரிட்டிஷ் நீதிபதிகளுடன்

தொடர்பு உண்டா?                                          

3.            தமிழன் கண்ட காலை உணவு               

4.            `ஸ்டிரா’வைக் கண்டு பிடித்தது யார்?                              

5.            பருவக் காற்றைக் கண்டு பிடித்தது

தமிழனா? கிரேக்கனா?                                                       

6..           வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன் யார் ?

7.            சங்கப் புலவர் கபிலர் ஒரு தாவர இயல் நிபுணர்!      

8.            வேளிர் குலத்தின் ஆயிரம் ஆண்டுப் பழமை –

கபிலர் தரும் அதிசய தகவல்           

9.            தமிழர்கள் கண்டு பிடித்த ஆமை அதிசயம்           

10.          இந்தியர்களின்,  தமிழர்களின் அற்புத

கணித அறிவு 18, 108, 1008, 10008         

11.          பெண்களின் உடை தமிழனின் கண்டுபிடிப்பு!  

12.          பொற்கைப் பாண்டியனின் செயற்கைக் கை

13.          பழந்தமிழர்களின் வினோத தண்டனைகள்    

14.          மூன்று குரங்கு பொம்மை தோன்றியது எங்கே?                   

15.          தலை முடியைக் கருப்பாக வைத்திருப்பது எப்படி?         

16.          விலங்குகள் பற்றிய அதிசயச் செய்திகள்

17.          இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இத்தாலி-தமிழக உறவு                 

18.          நாள், கிழமையைக் கண்டு பிடித்தது யார்?

தமிழனா, எகிப்தியனா?                                   

19.          தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு           

20.          நெல்லிக்கனியின் மகிமை               

21.          நல்லாட்சி நடந்தால் மானும் புலியும்

ஒன்றை ஒன்று தாக்காது!                   

22.          வள்ளுவர் சொன்ன பேய்க் கதை            

23.          வள்ளுவர் கூறும் அதிசய செய்திகள் உண்மையா?         

24.          வள்ளுவர், சாக்ரடீஸ், சிவபெருமான் –

இவர்கள் மத்தியில் என்ன தொடர்பு?                              

25.          புரூஃப் ரீடர் – முருகப் பெருமான்!            

26.          சிவ பெருமானின் ரெகமண்டேஷன் லெட்டர்!  

27.          தமிழர்களின் சோதிட நம்பிக்கை             

28.          பழந்தமிழ் நாட்டில் ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள்

29.          தங்கம், ரத்தினம், தந்தம் – தமிழர்களின் செல்வ வளம்!

30.          தமிழ் ஒரு கடல்     

31.          திருமூலரும் தீர்க்க ரேகையும்!              

32.          பஞ்சை எரிக்கும் லென்ஸ் பற்றித் திருமூலர்  

33.          சம்பந்தரும் ஆண்டாளும் மாயமாக மறைந்தது எப்படி?                                                              

34.          கண்ணகி மதுரையை எரித்தது எப்படி?         

35.          அலாவுதீன் அற்புத விளக்கும் ஞானசம்பந்தரும்!

36.          நாகரத்னம் உண்மையா?              

37.          தமிழ்த் தாத்தா உ.வே.சா.   

38.          இந்தியா ஒரு அதிசய நாடு!      

39. மறைந்த அதிசயங்களைக் கண்டு பிடிக்க

கடவுள் அனுப்பிய தூதர்கள்!

40.          நாம் காணும் கனவுகள் பலிக்குமா – ஒரு டாக்டரின் ஆராய்ச்சி  

41. அறிவியல் உலக அதிசயங்கள் 

BOOK 61

61.சம்ஸ்க்ருதப்  பொன்மொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்

பொருளடக்கம்

1.விவேகாநந்தரின் 30 அற்புதப் பொன் மொழிகள்!

2.முக்கிய சித்தர் பாடல்கள் 31 

3.வளமான வாழ்வு பற்றிய 30 பழமொழிகள்

4.ஜலே தைலம்கலே குஹ்யம்பாத்ரே தானம்!

5.மாடு மேய்க்காமல் கெட்டதுபயிர் பார்க்காமல் கெட்டது!

6.மர்தனம் குணவர்தனம்: குணங்கள் பற்றிய சம்ஸ்கிருத பழமொழிகள்

7.பணம் பற்றிய தமிழ்ப் பொன் மொழிகள்

8.மனம் பற்றிய 31 நல்ல மேற்கோள்கள்

9.மன்மத லீலை பற்றிய 31 பொன்மொழிகள்

10.வேள்விதுறவி பற்றிய 30 பழமொழிகள்

11.வெள்ளதால் போகாது வெந்தணலால் வேகாது-கல்வி

12.விடாமுயற்சி ,உற்சாகம்உழைப்பு பற்றிய 31 பொன்மொழிகள்

13.மௌனம்மானம்கர்வம் பற்றிய சம்ஸ்கிருததமிழ் பழமொழிகள்

14.முப்பது வெற்றி வேற்கை பொன்மொழிகள்

15.முக்கிய சிலப்பதிகாரப் பாடல்கள்-31

16.மாணிக்கவாசகரின் 28 பொன்மொழிகள்

17.நீதி வெண்பா பொன்மொழிகள்

18. நீதி வெண்பா தொடர்ச்சி….

19..மேலும் 30 நீதி வெண்பா பொன்மொழிகள்

20.ரிக் வேத பொன்மொழிகள்–3 வது மண்டலம்

21.நாலடியார் பொன் மொழிகள்

22.சுந்தர காண்டப் பொன்மொழிகள் 31

23.பொய்கை ஆழ்வார் பொன்மொழிகள் 31

24.கம்பன் பொன்மொழிகள்

25. கம்ப ராமாயண யுத்த காண்டப் பொன்மொழிகள்

’26.கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’

27.புறநானூற்றுப்  பாடல்மேற்கோள்கள்

28.திருமூலர் அருளிய திருமந்திரம் 31 முக்கியப் பாடல்கள்

29.வீடு வரை உறவுகடைசி வரை யாரோ?

30.யார் நல்ல ஆசிரியர்?

31.ராமன் இருக்கும் இடத்தில் பயமும் இல்லை,

தோல்வியும் இல்லை-வால்மீகி

32. ஒட்டகங்களுக்கு கல்யாணமாம்! கழுதைகள் கச்சேரியாம்!!

33.இலக்கியம்கலைகள் பற்றிய சம்ஸ்கிருத பொன்மொழிகள்

34.இலக்கியம் பற்றி 31 அற்புதப் பொன் மொழிகள்

35.இசையில் எண்-10, குளியல் முறைகள் பத்து வகை

36.ஆசை பற்றி 30 பழமொழிகள்

37.சாயம்காலத்தில் செய்யக்கூடாத ஐந்து செயல்கள்

38.‘நல்லோர்கள் எங்கே பிறந்தாலுமென்?’ – நீதி வெண்பாவும் மனு நூலும்

39.அரசன் என்பவன் தந்தை: தமிழ்சம்ஸ்கிருதப் புலவர்கள் பொன்மொழி

40.கறுப்புப் பணம்வெள்ளைப் பணம்கறைபடிந்த பணம்!

41.ஞயம்பட உரைவெட்டெனப் பேசேல்பழிப்பன பகரேல்பிழைபடச் சொல்லேல்

42.தீப்போல தகிக்கும் ஐந்து விஷயங்கள்

43.டாக்டருக்கும் யமனுக்கும் வேறுபாடு என்ன?

44.வீட்டில் மனைவியும்,  வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன்

45.நூறு வயதானவர்களின் மகிமை!

46.தலையில் இருந்தால் முடிகீழே விழுந்தால் மயிர்- வள்ளுவர் குறள்

47.சூத்திரன் யார்பிராமணன் யார்ஜாதி வேறுவர்ணம் வேறு- part 1

48.சூத்திரன் யார்பிராமணன் யார்ஜாதி வேறுவர்ணம் வேறு- Part 2

49.அமிர்தமும் விஷமும்: மஹாபாரதம் தரும் அற்புத ஸ்லோகம்

50.உலக நீதி ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

51.நாய் வாலை நிமிர்த்த முடியாது!

52.சூரியனுக்கு மகன் சனி!  விளக்கிற்கு மகன் கருப்பு மை!!

53.திரவுபதியை கிருஷ்ணன் காப்பாற்றியது ஏன்?

COVER PICURE- Sri Ramana Maharishi.

xxxxxxxx

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph. D அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

‘டூ’வும்  ‘சேத்தி’யும் தமிழ்ச் சொற்களா ? காயா? பழமா?(Post No.11,858)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,858

Date uploaded in London – –  31 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மதுரையில் வடக்குமாசி வீதி யாதாவா ஸ்கூலில்  (யாதவர் ஆரம்பப்பள்ளி) 65 ஆண்டுகளுக்கு முன்னர் படித்தபோது நண்பன் சுடலைமுத்துவுடன் அடிக்கடி  ‘டூ’ விடுவேன். பின்னர் ‘சேத்தி’ விடுவேன்

ஏன் இன்று சுடலைமுத்து வரவில்லை? என்று அம்மா கேட்பாள்; அவனுடன் ‘டூ’ என்பேன் .

எனக்குத் தெரியாமல் அம்மா, அந்தப்பக்கம் பார்த்துச் சிரித்து இருப்பார் என்பது இப்போது தெரிகிறது.

நீங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா ? எத்தனை மாணவ மாணவிகளுடன்  டூ  போட்டுவிட்டு மறு நாளே சேர்ந்திருப்பீர்கள் ?

இப்படிச் செய்ததால்தான் 65 ஆண்டுக்குப் பின்னரும் சுடலைமுத்துவை எனக்கு ஞாபகம் இருக்கிறது.

இப்போது எதற்கு இந்த சுய புராணம் என்று வியாக்காதீர்கள். சேத்தி என்பது தமிழ்ச் சொல் என்பது விளங்குகிறது. ‘டூ’  தமிழ்ச்  சொல்லா என்பதே இன்றைய ஆராய்ச்சி.

டூ என்றால் என்ன?

ஆள்காட்டி விரல் அல்லது சுட்டு விரலையும் நடுவிரலையம் சேர்த்து வில் போல வளைத்து நம் தற்காலிக எதிரியிடம், அதாவது பிடிக்காமற் போய்விட்ட நண்பனிடம் உன் கூட சேரமாட்டேன் போ! என்று சொல்வதாகும்.

கணவன்- மனைவி ஊடல் போல மறுநாளே நட்பு மலர்ந்தவுடன் சேத்தி என்று நடு விரல்  இரண்டையும் மடித்துக்கொண்டு  (மற்ற இரண்டு விரல்களும் நேராக நிற்க) காட்டுவேன் .

சில இடங்களில் காயா பழமா? என்பதை டூ , சேத்தி என்பதற்குப் பயன்படுத்துகின்றனர் .

இதில் சேத்தி , அதாவது இருவரும் சேர்ந்துவிடுவோம், அல்லது நான் உன்னை மீண்டும் சேர்த்துக்கொள்ளுவேன் என்பது தமிழ்ச் சொல் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

டூ என்பது பற்றி ஊகிப்போம்.!

ஆள்காட்டி விரல் அல்லது சுட்டு விரல் என்பது எதிரே உள்ள ஆளைக்குறிக்கிறது .  நடு விரல் நம்மைக்குறிக்கிறது போலும் ! இரண்டையும் சேர்த்துப் பிரித்துவிடும் போது இனி நாம் நண்பர்கள் இல்லை என்று சொல்லி விடுகிறோம்.

இப்படி யூகிப்பதுசரியா?

மறு நாள் , அதே நண்பனைச் சேர்த்துக்கொள்ளும்போது ஆள்காட்டி (சுட்டு) விரலையும் சுண்டு விரலையும் அவனை நோக்கிக் காட்டுவது ஏன் ?

இதற்கு அறிவுபூர்வ விளக்கமே கிடைக்காது போலும்.

ஆயினும் இரண்டு விரல்கள் இருவரைக் குறிப்பது விளங்குகிறது .

பேச்சு வழக்கு இந்தியில் (TU IN HINDI) தூ என்றால் நீ. ஆனால் நாம் தமிழில் உண்டாக்கும் சப்தமோ ஆங்கில மொழி DO டூ (செய் என்ற வினைச் சொல்). ஆகையால் அதிலும் எந்தத் தொடர்பும் இல்லை

எவ்வளவு ஆராய்ச்சி செய்த்தாலும் விடை கிடைக்காத சொற்கள் எல்லா மொழிகளிலும் உண்டு. ஆங்கிலத்தில் நாய் என்பதை DOG டாக் என்று சொல்லுகிறோம். இதற்கு மூலமே இன்று வரை தெரியவில்லை.

தொல்காப்பியர் , பொறாமை என்பதற்கு நிம்பிரி என்ற தமிழ்ச் (?????) சொல்லைப் பயன்படுத்துகிறார். இது உலகில் வேறு எங்கும் காணப்படவில்லை! சம்ஸ்க்ருத வேர்ச் சொல்லும் அல்ல!.

DOG/டாக், நிம்பிரி, டூ பற்றி நீங்களும் ஆராயுங்கள்; விடை கிடைத்தால் பகிருங்கள் .

வாழ்க தமிழ் – வளர்க ஆராய்ச்சி

—subham—

TAGS- டூ ,சேத்தி ,காயா, பழமா, Do, Tu

பரிக்கல் நரசிம்மர் கோவிலில் தரிசனம் (Post No.11,857)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,855

Date uploaded in London – –  31MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் அருகில் உள்ள பரிக்கல் கிராமத்தில் புகழ்பெற்ற  ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோயில்  இருக்கிறது . 22-2-2023 அன்று கும்பகோண வட்டார கோவில்கள் தரிசனத்தை முடித்துக்கொண்டு சென்னைக்குத் திரும்புகையில் பரிக்கல்லுக்குச் சென்றோம். ஆனால் சிறிது ஏமாற்றம். நாலு ஆண்டுகளாக நடைபெறும் திருப்பணி வேலைகள் ஆமை வேகத்தில் அல்லது நத்தை வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆகையால் மூலவரை தரிசிக்கமுடியாதபடி பக்கத்துக் கொட்டகையிலுள்ள உற்சவரைத் தரிசித்தோம் , கடந்த நான்கு  வருடங்களாக அருள்மிகு நரசிங்கப்பெருமாள் பாலாலயம் செய்து கோவில் திருப்பணி நடைபெற்று வருகிறது.

நான்கு வருடங்களாக மூலவர் சன்னதி மூடப்பட்டது உள்ளது பற்றி இந்துக்கள் குரல்கொடுத்து வருகின்றனர். பழைய அரசு போய், புதிய அரசும் வந்துவிட்டது. திருப்பணிக்குத் தடை ‘மனமா, பணமா’ என்று தெரியவில்லை.

XXX

நரசிம்மர் மஹிமை

இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுப் பழமை உடையது. மத்வ பீடத்தைச் சேர்ந்த வியாசராஜ சுவாமிகள் 738 இடங்களில் ஆஞ்சனேயர் கோவில்  அமைக்க எண்ணி இந்தக் கிராமத்தையும் தேர்ந்தெடுத்தார் . ஆனால் பல தடைகள் ஏற்பட்டன. பின்னர், வசந்த ராஜா என்பவர் கோவில் கட்ட முற்பட்டபோதும் தடைகள் ஏற்பட்டதாம். அதற்குப்பின்னர் கனகவல்லி சமேத லட்சுமி நரசிம்ம மூர்த்தி ஸ்தாபிக்கப்பட்டது. தாயாரை அணைத்தவண்ம்  பெருமாள் இருப்பதால், நரசிம்மனின் உக்கிரம் தணிந்து , அருள் சுரக்கும் கோவில் இது .

இங்கு வருவோருக்குப் பதவி உயர்வு கிடைக்கும், திருமணத் தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் மன நோயால் பாதிக்கப்பட்டோரின் நோயும் நீங்கும்.

திரை போட்டிருந்ததால், நாங்கள் வரிசையில் நின்று காத்திருந்தோம். மன நோயால் பாதிக்கப்பட்ட ஒரு TEEN AGE BOY டீன்  ஏஜ் பையனை அவனது தந்தை அழைத்து வந்திருந்தார். அவன் ஆடிக்கொண்டும் சப்தம் போட்டுக்கொண்டும் இருந்தான். கோவிலுக்குப் பலரும் எண்ணெயும் கொண்டுவந்து கொடுத்தார்கள்.

இங்கு மூலவருடன் ஆஞ்சனேயரும் உள்ளார். நாங்கள் மூலவரைப் பார்க்க முடியவில்லை. கொட்டகைக்கு வெளியே கல்லும் மண்ணும் நிறைந்து இருந்ததால் யாரும் செல்ல முடியவில்லை.

விரைவில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடக்க வேண்டும் என்பதே நம் பிரார்த்தனை.

XXX

கிராம மக்கள் திரித்த ஊர்ப்பெயர் !

PRAHLADA, DEMON’S SON = PARAKALA= PARIKKAL

இரு முறை கோவில் கட்டுவதில் தடை  ஏற்பட்டதற்கு பரகால என்ற அசுரனே காரணம்  என்றும் அதனால் அவன் வேண்டிக்கொள்ள, ஊர்ப்பெயரை பெருமாள் பரகால என்றிருக்க அனுமத்தித்ததாகவும்  தவறாக கதை கட்டப்பட்டிருக்கிறது. உண்மையில் நரசிம்மர் அழித்தது ஹிரண்ய கசிபு என்ற அசுரனை. அவர் அப்படிச் செய்ததற்கு காரணம். நாராயணன் பெயரை சொல்லிக்கொண்டிருந்த பிரஹ்லாதனைக் காப்பாற்றுவதற்காக என்பது எல்லோரும் அறிந்த கதை .

பிரஹலாதன் பெயர் மருவி பரகால  என்றும் பரிக்கல் என்றும் மருவியது என்பதே பொருத்தம்!!

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று நரசிம்மரை  நமக்குக் காட்டிய பிரஹலாதன் பெயரை கிராம மக்கள் தெளிவாக எழுதி ஒட்டவேண்டும் . பரகால அரக்கன் அல்ல; பக்தன்; அதாவது பிரகலாதன்!

–SUBHAM—

TAGS- பிரகலாதன், கனகவல்லி, லட்சுமி நரசிம்ம, பரிக்கல், பெருமாள், கோவில், மூர்த்தி

செகுலரிஸத்தின் பேரால் தர்ம ஹிம்ஸை செய்யப்படும் ஹிந்து மதம்!(11,856)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,856

Date uploaded in London –   31 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

செகுலரிஸத்தின் பேரால் தர்ம ஹிம்ஸை செய்யப்படும் ஹிந்து மதம்! 

ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்து எழுவார்களா? – 2 

ச. நாகராஜன் 

முகமது நபியைத் தெரியாமல் தவறாகச் சித்தரித்து விட்டு ஒரு சின்ன செய்தியோ அல்லது ஏதாவது படமோ வந்தால் போதும், ஊரெல்லாம் கலாட்டா, ரத்த ஆறு ஓடும்.

இதை அரசு கவனிக்கவே கவனிக்காது; கண்டிக்காது.

ஆனால் அதே சமயம் ஹிந்துக் கடவுளை ஆபாசமாகச் சித்தரித்து லயோலா காலேஜ் உள்ளிட்ட இடங்களில் கண்காட்சி நடைபெறலாம்.

அதைக் கண்டித்து ஓவென்று கத்திய பின்னரே அரசு காதில் அப்படிப்பட்ட கண்காட்சி பற்றிய செய்தி சென்று சேரும்.

சரஸ்வதியை ஆபாசமாகச் சித்தரித்து ஓவியம் வந்தால் அது ஓவியரின் கருத்துச் சுதந்திரமாம்.

ஆனால் ஹிந்து பத்திரிகையில் நபிகள் நாயகம் பற்றிய செய்தி தெரியாமல் வந்த போது கூட கல்லெறி, கலாட்டா, நிர்வாகம் மன்னிப்புக் கேட்க, அரசு ஓடி வர … அப்படி ஒரு ஆர்ப்பாட்டம்.

ஏன் என்று கேளுங்கள்,

செகுலரிஸம் என்று பதில் வரும்.

ஒரு முஸ்லீம் கும்பல் ஹாஜ் க்வாஜியில் ஒரு கோவிலை இடித்துத் தள்ளியது. ஆனால் உடனே அங்கு இஸ்லாமிய நண்பர்கள் அங்குள்ளோருக்கு எப்படி உணவை வழங்குகிறார்கள் என அவசரம் அவசரமாக ஒரு போடோ ஷூட் எடுத்தப்பட்டு விநியோகிக்கப்பட்டது.

அங்குள்ள சிலை மீது சிறு நீர் கழித்து விட்டு உடைத்து விட்டு ஒரு ‘நல்ல’ வீடியோவும் வெளியிடப்பட்டது.

ஹிந்து வாலிபன் ஒருவன் ஆசை வயப்பட்டு ஒரு இஸ்லாமியப் பெண்ணை மணம் செய்து கொண்டால் அவன் நிச்சயமாக மதம் மாறி இஸ்லாமியராக ஆக வேண்டும்.

ஒரு ஹிந்துப் பெண்ணை இஸ்லாமியர் ஒருவர் மணம் புரிந்து கொண்டால் அந்தப் பெண்மணி மதம் மாற வேண்டும். இல்லையேல் சித்திரவதை தான்.

ராஹுல் ரஜ்புட் கேஸ் (Rahul Rajput Case) தான் முதல் கேஸ் என்றில்லை.

இதனால் ஒவ்வொரு இஸ்லாமியரும் தவறானவர் என்று அர்த்தமில்லை.

கள்ளம்கபடற்ற, அனைவருக்கும் மதிப்பு தரும் நாட்டை நேசிக்கும், மற்றவரையும் சமமாகக் கருதும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்த நாட்டில் அன்றும் இன்றும் இருக்கிறார்கள்; இருப்பார்கள்.

ஆனால் கள நிலவரத்தை எடுத்துக் கொண்டால் எண்ணிக்கையில் குறைந்த சில நபர்கள் மத ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் சீரழிக்கப் பார்க்கிறார்கள் என்பது தான் உண்மையாக இருக்கிறது.

கண் மூடிய குருடர்களாக ஹிந்துக்கள் இருக்கக் கூடாது; அதே சமயம் அற்புதமான நல்லிணக்கத்தை மனதில் கொண்டிருக்கும் இஸ்லாமியர்களும் ஹிந்துக்களுக்கு எதிரான செயல்கள் இழைக்கப்படும் போது கண்ணை மூடிக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது.

அஹிம்ஸா பரமோ தர்ம: என்பது பாதி ஸ்லோகம் தரும் உண்மை தான்; அதற்கடுத்த பாதி தான் முக்கியம்.

தர்ம ஹிம்ஸா ததைவ ச|

தர்மத்திற்கு தீங்கு பயப்பதும் பிரம்மாண்டமான ஹிம்சை ஆகும்.

அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்து இணைய வேண்டும்;

நல்ல இஸ்லாமியர்களும் ஒன்று கூடி இணைந்து பரஸ்பர நல்லிணக்கம், மதிப்பு, ஒழுக்கம் ஆகியவற்றை உலகம் போற்றும் விதத்தில் உயர ஏற்ற வேண்டும்.

நன்றி & ஆதாரம் : ட்ரூத் வார இதழ் கட்டுரை – The Burden of ‘Secularism’.

Truth Weekly Kolkata Volume 88 Isssue 32 date 26-2-2021

***

Have you read these two books?

Have you read these two books?

Author – London swaminathan

Woman is an Adjective, Man is a Noun (book title)

Contents

1.Mother’s Love: Gandhari’s First Night

2.One Mother is greater than 1000 Fathers!

3.Woman is an Adjective; Man is a Noun!

4.Only Religion where Woman is worshiped!

5.Are Women always demanding?

6.GANDHARI and KUNTI DIED IN FOREST FIRE with

 VIDURA AND DHRITARASHTRA

7.GREATEST MUSLIM QUEEN OF INDIA

8.Hindu and Muslim Wedding

9.Hindu Baby Names and Astrology!

10.How Hindu Women Tackle Those Who Make Advances!

11.Mahabharata about Women!

12.Kalidasa’s Women and Tamil Women

13.FLOWERS IN TAMIL CULTURE

14.Custom of Garlanding and Flower Giving in

Tamil and Sanskrit Literature

15.Lotus Flower in the Vedas, Kalidasa and Sangam Tamil Literature

16.Sirisam and Anicham flowers in Tamil and Sanskrit literature

17.Pati – Vati – Mati—in Indus Valley Script

18.QUEEN DIDDA OF KASHMIR – A WOMAN OF

 INTRIGUES AND EFFICIENCY

19.MORE SCIENTIFIC PROOF FOR SHAMUDRIKA LAKSHAN!

20.STORY OF WOMAN PHILOSOPHER CHUDALA

21.Scientific proof for Samudrika Lakshana

22.MORE ABOUT STUDY OF BODY FEATURES

23.Eaten but Fasting! Had Sex but Celibate Story!

24.Wife’s three Tests to her Husband! Story from Yoga Vasishta

25.Women who could Compose Verses in Eight Languages in 24 Minutes!

26.Murder of a Beautiful Mathematician

27.Women in state affairs are like Monkeys in Glass Shops

28.EMPEROR ASHOKA AND A PROSTITUTE!

29.Finance Minister’s Wife’s Gown – Uncovered Deficit!

30.Manu Smrti on Low Caste Women

xxxx

History is a Mystery in India (book title)

Contents

1.India -the RICHEST country in the world!

2.Largest Gold Coin

3.Sanskrit in Bible – Part 1

4.Sanskrit in the Bible- Part 2

5.‘I am Alpha and Omega’ – Krishna and Christ

6.Jesus name in Bhagavad Gita! Tamil Fish symbol in Britain!!

7.Divine Dinners by Moses, Jesus, Hindu Saints & Draupadi !

8.El or Ilu in the Bible and Ila in the Vedas

9..Hindu Science: Four Types of Speech (‘Vak’)

10. The Sugarcane Mystery: Indus valley and the Ikshvaku Dynasty

11.Why d o British Judges Follow a Tamil King?

12.Story of a Bridegroom who changed his mind suddenly!

13.Wrestling in Ancient India

14.Shiva’s Help in Wrestling and Fencing!

15.Navaratri in Japan and Greece

16.Three hundred and Thirty Million Gods !

17..Seventy Popes Murdered or Died in Mysterious Circumstances !

18..Hindu Gods and other Ancient Gods

19.Tamil Kaaman Pandikai and Festivals in Rome and Greece!

20.Holi, Ulli, Purulli: 3 Interesting Festivals in India and Sumer

21.Hindus Invented Coins: Evidence in Rig Veda and Panini- Part 1

22.Hindus Invented Coins: Evidence in Rig Veda and Panini- Part 2

23.Tamil Wonder – Coin Counting Tray

24.New Evidence to establish Kalidasa’s Age

25.My Trip to Santorini Islands in Greece

26.Hindu Thoughts in Australian Aborigines’ Folklore!

27.Did Arrian, Megasthanes and Pliny tell us a lie?

28.Horses and Rhinos originated in India

29.Sanskrit in Mahmud of Ghazni Coins!

30.History Flash: Hindus must learn from Today’s Roman Coin Story

31.Riddles in the Vedas

32. Riddle Poem in the Rig Veda (8-29)

33.Greek Sphinx Riddle in the Rig Veda

34.Oldest Riddle in the World!

35.Ten Greatest Literary Wonders

36.Numbers in the Rig Veda

37.‘Dirgayutva’ in Vedas; Greek Scholar on ‘Long Life’ of Hindu Seers!

38.Indus Valley to Egypt: Lapis lazuli Export!

39.Poet Bharati and Mahatma Gandhi condemned Purdah

40.Marriage  – Two  Opposing  Tamil  Views

41.No Purdah in Indus Valley and  in  the Vedas

42.Greatest Tamil Poet of Modern Era-Subrahmanya Bharati

43.Indus Valley – Brahmin Connection!

44.Mac Donald and O’Shaughnessy in Indus Valley Civilization!!

****************

Book Cover Picture: — Indra Sabha in Ellora Caves

HOW TO ORDER THESE BOOKS

***** 

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

More Ramana Maharishi Quotes: April 2023 ‘Good Thoughts’ Calendar(Post No.11,855)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,855

Date uploaded in London – –  30 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Last month we saw 31 Divine sayings of Sri Ramana; April 2023 calendar covers more quotations from Sri Ramana Maharishi Talks and writings:

April   2023 Good Thoughts Calendar

Festival Days- April  4- Mahavir Jayanti, 5- Panguni Utsava, 7-Good Friday, 9- Easter Sunday, 14-Tamil New Year’s Day, 22-Ramzan, 23- Akshaya Trtyai, 25- Adi Shankara Jayanti

Full Moon Day -5; New Moon Day – 19; Ekadasi Fasting Days – 1,16

Auspicious Days- 10,23, 26, 27

xxx

April 1 Saturday

Give up regarding yourself as this despicable body and realise your Real Nature which is one of Eternal Bliss.

xxx

April 2 Sunday

Seeking to thyself while still anxious about the welfare of the body, s like attempting to cross a stream with the aid of a crocodile for a raft.

xxxx

April 3 Monday

The Puranas speak of Arunachala Hill as being hollow with cities and streets inside it. I have also seen such things in vision.

xxx

April 4 Tuesday

The books speak of the heart as a cavity. But penetration into it proves it to be  an expansion of light. Similarly Arunachala Hill is one of light. The caves etc are covered up with that light

xxx

April 5 Wednesday

The Brihadaranyaka Upanishad says AHAM is the first name of God. The first letter in Sanskrit is A and the last letter Ha and Aha thus includes everything from the beginning to the end.

xxx

April 6 Thursday

Swami Ramtirtha advertised, Wanted Reformers- but reformers who will reform themselves first.

xxx

April 7 Friday

No two persons in the world can be alike or can act alike. External differences are bound to persist, however hard we may try to eliminate them. The only solution is for each man to realise his True Nature.

xxx

April 8  Saturday

All the people after writing long treatises on the indestructability of their bodies, after giving medical and yogic recipes to perfect the body and keep it alive for ever, pass away one day.

xxx

April 9 Sunday

 The Yogi may be definitely aiming at rousing the Kundalini (the Serpent Power) and sending it up the Sushumna (Yogic nerve). The Jnani may not have this as His object, but both achieve the same result, that of sending he life forceup the Sushumna and severing the chit jada granthi( the knot binding the sentinent and the inert).

xxx

April 10 Monday

Kundalini is another name for Self or Atma or Sakti. We talk of it as being inside the body because we conceive ourselves as limited to the body. But it is in reality inside and outside being no other than the Self or Sakti.

xxx

April 11 Tuesday

He whose mind is not attached to any desires, does no action in reality, though his body may act. He is like one who hears a story with his mind elsewhere.

xxx

April 12 Wednesday

The man whose mind is full of desires is really acting though his body may be actionless. A man may be sleeping here with his body inert and yet he may be climbing and falling from them in dream at the same time.

xxxx

April 13 Thursday

The non action of the sage is really unceasing activity. His stillness is like the apparent stillness of a very fast rotating top. Its speed cannot be followed by the eye and so it appears to be still. This must be explained , as people generally mistake the stillness of the sage for inertness.

xxxx

April 14 Friday

The Jnani does not think He is the body. He does not even see the body. He sees only the Self in the body. If the body is not there, but only the Self, the question of its disappearing in any form does not arise.

xxx

April 15 Saturday

The statement that the Jnani retains Prarabdha while free from Sanchita and Agamya karmas is only a formal answer to the questions of the ignorant. Of several wivws none escapes widowhood when the husband dies; even so when the doer goes, all three Karmas vanish

xxx

April 16 Sunday

Everything is predetermined. But a man is always free not to identify himself with the body, and not to be affected by the pains or pleasures consequent on the body’s activities.

xxx

April 17 Monday

Giving up activities means giving up attachment to activities or the fruits thereof giving up the notion I am the doer. The activities the body is destined to  to perform will have to be gone through. There is no question of giving up such activities, whether one likes it or not.

xxx

April 18 Tuesday

Ishta Devata (Deity of one’s choice)and Guru are aids, very powerful aids on this path. But for an aid to be effective requires your effort also.Your effort is sine quo non. It is you who should see the sun. Can spectacles and sun see for you?

xxxx

April 19 Wednesday

Seeing God in any form and speaking to Him is as real as your own entity. In other words when you identify yourself with the body in the waking state, you see gross objects, in dream subtle objects, dreamless sleep nothing. The objects seen bear a relation  to the state of the seer.

xxx

April 20 Thursday

By long practice, the figure of God as meditated upon appears in dream, and may later appear even in the waking state.

xxxx

April 21 Friday

There was a saint by the name Namdev. He could see, talk and play with Vithoba, the God of Pandharpur. God had to teach himthat was not enough, and one must press on further and realise the Self, where seer and seen are one.

xxx

April 22 Saturday

Thee thought I am the body is ignorance. That the body is not apart from the Self is knowledge.

xxx

April 23 Sunday

The moral behind the story of Ashtavakra and Janaka is simply this: The disciple himself surrenders to the Master. That means there is no vestige of individuality retained by the disciple. If the surrender is complete, all sense of individuality is lost and there is no cause for misery. The Eternal Self is only happiness and that is revealed.

xxx

April 24 Monday

The more we control thought, activity and food, the more we will be able to control sleep.. but moderation ought to be the rule for the Sadhak (aspirant)

xxx

April 25 Tuesday

As explained in the Gita, sleep is the first obstacle  for all Sadhakas

xxx

April 26 Wednesday

The second obstacle is asid to be Vikshepa, or the sense of the world which divert one’s attention .

xxx

April 27 Thursday

The third is aid to be Kashaya or thoughts about previous experiences with sense objects

xxx

April 28 Friday

The fourth Ananda (bliss) is also called an obstacle, because in that state a feeling of separation from the source of Ananda, making the enjoyer say, I am enjoying Ananda is persistent. Even this has to be surmounted.

xxx

April 29 Saturday

And the final stage of Samadhana or Samadhi has to be reached, where one becomes Ananda or one with the Reality and the duality of enjoyer and  enjoyment ceases in the ocean of Satchidananda or the Self.

Sat Chit Ananda= existence- Consciousness- Bliss

xxx

April 30 Sunday

Our real nature is Mukti. But we imagine that we are bound and are naking strenuous attempts to become free., while we are all the time free. That will be only understood that we reach that state. We will be surprised that we were frantically tying  to attain something which we have always been and are.

-source book : Gems from Bhagavan, selected by A Devaraja Mudaliyar, Sri Ramanshramam, Tiruvamnnamalai.

A good book with more stories, anecdotes and imageries. One must buy it to understand Ramana better.

—subham—-tags- Ramana Maharishi, April 2023 Calendar, Golden sayings, Guru,  Samadhi, Sleep, Dhyana, Obstacles

மேலும் 30 ரமண மகரிஷி பொன்மொழிகள்– ஏப்ரல் 2023 நற்சிந்தனை காலண்டர் (Post No.11,854)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,854

Date uploaded in London – –  30 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பண்டிகை நாட்கள்- ஏப்ரல்  4- மஹாவீர் ஜயந்தி , 5- பங்குனி உத்திரம்  , 7-புனித வெள்ளி  9- ஈஸ்டர் , 14-தமிழ் புத்தாண்டு  தினம் , 22-ரம்ஜான் , 23- அக்ஷய திருதியை , 25- ஆதி சங்கர ஜயந்தி

பெளர்ணமி  -5; அமாவாசை – 19; ஏகாதசி உண்ணாவிரத நாட்கள்  – 1,16

சுப முகூர்த்த தினங்கள் – ஏப்ரல் 10,23, 26, 27

சென்ற மாத காலண்டரில் 31 ரமணர் பொன்மொழிகளைக் கண்டோம்; இதோ ரமண மஹரிஷியின் மேலும் 30 தெய்வீக அருள்மொழிகள்:

Xxx

ரமணரின் அருள் வாக்குகள்

ஏப்ரல் 1 சனிக் கிழமை

மனத்தை உள்நோக்கிச் செலுத்துவது என்பது பயிற்சியினாலும் வைராக்கியத்தினாலும் கிட்டும் . அது படிப்படியாக வெற்றி தரும்.

xxx

ஏப்ரல் 2 ஞாயிற்றுக் கிழமை

என்னால் மனத்தை ஒருமுகப்படுத்த முடியவில்லை என்ற எண்ணமே ஒரு தடைதான்.அந்த எண்ணம் ஏன் எழவேண்டும்?

Xxx

 ஏப்ரல் 3 திங்கட் கிழமை

தன்னை உணர தெய்வீக அருள் கட்டாயம் தேவை. உண்மையான பக்தனுக்கு அல்லது யோகிக்கு மட்டுமே அருள் கிட்டும் . விடுதலைப் பாதையில் கடுமையாக உழைப்பவர்க்கே அது தரப்படுகிறது .

xxx

ஏப்ரல் 4 செவ்வாய்க் கிழமை

அருள் எப்போதும் உண்டு; ஆனால் பயிற்சியும் அவசியம். முயற்சி செய்து ஆன்மாவில் நிலைத்தல் என்பது , அடங்காது திரியும் காளைமாட்டைப் புல்லைக்காட்டித் தறியில் கட்டிவைப்பது போன்றது.

xxx

ஏப்ரல் 5 புதன் கிழமை

நாம் முயற்சி செய்யவும் வேண்டும்.குருவின் உதவியும் நமக்குக் கட்டாயம் தேவை

xxx

ஏப்ரல் 6 வியாழக் கிழமை

சிலர் வந்தவுடனேயே ஞானியாக நினைக்கின்றனர்.. அதற்கான முயற்சியை அவர்கள் ஒதுக்கிவிடுகின்றனர்.

xxx

ஏப்ரல் 7 வெள்ளிக் கிழமை

மோக்ஷத்திற்குக் குறுக்கு வழி  உண்டா என்ன? அது என்ன கடையில் விலைக்கு வாங்கக் கூடிய பொருளா ?

xxx

ஏப்ரல் 8 சனிக் கிழமை

தியானிக்கும்போது தூக்கம் வருகிறது என்கிறீர்கள்.தூங்க ஆரம்பித்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.ஆனால் விழித்து இருக்கும்போது எல்லா எண்ணங்களிலிருந்தும் விலகியிருக்க முயற்சி செய்யுங்கள் .

xxx

ஏப்ரல் 9 ஞாயிற்றுக் கிழமை

தூங்குவதற்கு முன்னர் உள்ளநிலை தூங்கி விழித்த பின்னர் தொடரும். தூங்கத் தொடங்கும்போது எங்கே விட்டீர்களோ  அங்கு தொடர்வீர்கள்.

xxx

ஏப்ரல் 10 திங்கட் கிழமை

செயல்படும் எண்ணங்கள் இருக்கும் வரை தூக்கமும் உண்டு ; எண்ணமும் தூக்கமும் ஒரே பொருளின் இரு பக்கங்கள்.

xxx

ஏப்ரல் 11 செவ்வாய்க் கிழமை

நாம் அதிகமாகவும் தூங்கக்கூடாது ; தூங்காமலும் இருக்கக்கூடாது . மிதமாகத் தூங்க வேண்டும் . எண்ணங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.சத்துவ குணத்தை வளர்க்கும் உணவினை அளவாக உண்ண  வேண்டும்.  அதிகமான உடல் செய்கைகளில்   ஈடுபடக்கூடாது .

xxx

ஏப்ரல் 12 புதன் கிழமை

தூக்கம்தான் முதல் தடை; இரண்டாவது நம் கவனத்தை ஈர்க்கும் உலகப் பொருட்கள்; மூன்றாவது, பழைய அனுபவங்களை பற்றிய எண்ணங்கள். நாலாவது தடை, ஆனந்தம். அந்த நிலையிலும் நான் அனுபவிக்கிறேன் என்ற எண்ணம் இருக்கும் . இறுதியில் சமாதி நிலைய அடையும்போது உண்மையான ஆனந்தத்தில் மூழ்கி விடுவோம்.

Xxx

ஏப்ரல் 13 வியாழக் கிழமை

சாதுக்களின்  சத் சங்கம் கிடைத்து விட்டால் பின்னர் சமயச் சடங்குகள் எதற்கு? குளிர்ந்த தென்றல் வீசும்போது கை  விசிறியால் என்ன பயன்?

Xxx

 ஏப்ரல் 14 வெள்ளிக் கிழமை

குளிர்ந்த சந்திரன் வெப்பத்தைப் போக்கும். கற்பக மரம் வறுமையை நீக்கும். கங்கை நதி பாவங்களைப் போக்கும். ஆனால் ஒப்புயர்வற்ற சாதுக்கள் தரிசனத்தாலேயே இவை எல்லாம் நடக்கும்.

xxx

ஏப்ரல் 15 சனிக் கிழமை

மிதக்கும் பொருள் மூழ்க வேண்டுமானால் அதன் மீது கனமான எடையை  வைக்க வேண்டும் . அது போல சாதுக்கள் சங்கம் மனத்தை இதயத்தில் ஆழ்த்திவிடும்.

xxx

ஏப்ரல் 16 ஞாயிற்றுக் கிழமை

சத் சங்கத்தால் உலகத் தொடர்புகள் நீங்கும். அதனால் மனத்திலிருந்து வாசனைகள் அழியும்.. அவை செயலற்றுப் போகும்.ஆகவே சீவன் முக்தி உண்டாகிறது .

xxx

ஏப்ரல் 17 திங்கட் கிழமை

மூர்த்திகளும் தீர்த்தங்களும் மகாத்மாக்களோடு ஒப்புமை ஆக மாட்டா . ஆ, என்ன ஆச்சரியம்! மூர்த்திகளும் தீர்த்தங்களும் பல நாட்களுக்குப் பின்னரே மனத்  தூய்மையை அளிக்கின்றன.ஆனால் சாதுக்களைத் தரிசித்த உடனேயே மனது தூய்மை  அடையும் .

Xxxx

ஏப்ரல் 18 செவ்வாய்க் கிழமை

குருநாதரின் சந்நிதியில் வாசனைகள் வலுவிழக்கின்றன. மனம் நிச்சலமாகிறது. சமாதி வாய்க்கிறது. ஆகவே குருவின் சந்நிதியில் சீடன், உண்மை அறிவும் சரியான அனுபவமும் பெறுகிறான். அதில் அசையாது நிற்க மேலும் முயற்சி தேவை.

xxx

ஏப்ரல் 19 புதன் கிழமை

தம்மை உணர்ந்த ஞானிகளோடு தொடர்பு கொள்ளுவதால் ஒருவர் படிப்படியாக அறியாமையை இழக்கிறார். இறுதியில் அறியாமை முற்றும் நீங்குகிறது. பின் நித்திய ஆத்மா வெளிப்படுகிறது.

xxx

ஏப்ரல் 20 வியாழக் கிழமை

நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு .அவரிடத்து, சாந்தி, மன்னிக்கும் மனப்பாங்கு, பொறுமை போன்ற நல்ல குணங்கள் அமைந்திருக்க வேண்டும் .

xxx

ஏப்ரல் 21 வெள்ளிக் கிழமை

கனவில் சிங்கத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே யானை விழித்துக்கொள்ளும். . அது போல குருவின் அருட்பார்வை மூலம், சீடன் அறியாமை என்னும் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்கிறான் .

xxx

ஏப்ரல் 22 சனிக் கிழமை

அருளின் உயர்ந்த வடிவம் மெளனம் .அதுவே மிக உயர்ந்த ஆன்மீக உபதேசம் . மற்ற எல்லா உபதேசங்களும்  மெளனத்திலிருந்தே பெறப்படுகின்றன .

xxx

ஏப்ரல் 23 ஞாயிற்றுக் கிழமை

மெளன விரதம் என்பது ஒரு விரதமே. அது தியானத்திற்கு ஓரளவு உதவும். ஆனால் வாயை மட்டும் மூடிக்கொண்டு  மனம் அலைபாய்வதில் என்ன பலன்?

xxx

ஏப்ரல் 24 திங்கட் கிழமை

எந்த நிலையில் நான் என்ற எண்ணம் சிறிதுகூட எழவில்லையோ அது  மெளனம் என்கின்றனர் முனிவர்கள்.

xxx

ஏப்ரல் 25 செவ்வாய்க் கிழமை

மெளனமே சிறந்ததும் மிக வலிமை வாய்ந்ததுமான தீக்ஷை . தக்ஷிணாமூர்த்தி அனுஷ்டித்ததுவும் அதுவே .ஸ்பர்ச தீக்ஷை, சக்ஷு தீக்ஷைஆகியவை அதைவிடத் தரம் குறைந்தவையே .மெளன தீக்ஷை, எல்லோர் இதயங்களையும் மாற்றிவிடும் .

xxx

ஏப்ரல் 26 புதன் கிழமை

எண்ணமில்லாது இருக்கும்போது உலகப் பொதுமொழியாம் மெளனத்தால் நாம்  ஒருவர் மற்றொருவரைப் புரிந்து கொள்கிறோம்.பல ஆண்டுகள்  வாத்தைகளால் புரியவைக்க முடியாததை மெளனத்தின் மூலம் உடனே புரியவைக்கலாம் . இதற்கு தக்ஷிணாமூர்த்தி சிறந்த எடுத்துக்காட்டு .

xxx

ஏப்ரல் 27 வியாழக் கிழமை

மெளனமே மிக உயர்ந்ததும் மிகப் பயன் தருவதுமான மொழி.

xxx

ஏப்ரல் 28 வெள்ளிக் கிழமை

நான் செய்கிறேன் என்ற எண்ணம் இருக்கும்வரை செயலின் பயனை,  அது நல்லதோ கெட்டதோ, அனுபவித்தே ஆக வேண்டும்.

சுதந்திரமும் விதியும் யாருக்கு என்று கண்டுபிடி. அவை அப்போது வெல்லப்படும்.

xxx

ஏப்ரல் 29 சனிக் கிழமை

குரு கட்டாயமாகத் தேவை. புத்தியாலும் பொறி புலன்களாலும் ஆன கட்டிலிருந்து மனிதனை விடுவிக்க குருவால் மட்டுமே முடியும் என்று உபநிஷதங்கள் உரைக்கின்றன.

xxx

ஏப்ரல் 30 ஞாயிற்றுக் கிழமை

குரு,  ஆத்ம சாட்சாத்காரத்தைக் கொண்டு வருவதில்லை. மாறாக அதற்கான தடைகளை அகற்றுகிறார்.

— subham —

Tags – தூக்கம், தடைகள் , தியானம், ரமணர், பொன்மொழிகள், ஏப்ரல் 2023, காலண்டர், மெளனம், குரு , சத்சங்கம் ,ஞானி,

செகுலரிஸத்தின் பேரால் தர்ம ஹிம்ஸை செய்யப்படும் ஹிந்து மதம்!(11,853)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,853

Date uploaded in London –   30 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

செகுலரிஸத்தின் பேரால் தர்ம ஹிம்ஸை செய்யப்படும் ஹிந்து மதம்! 

ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்து எழுவார்களா? – 1 

ச. நாகராஜன் 

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி. 

செகுலரிஸத்திற்கு பலிக் கடா ஆனவன் ஹிந்து! 

செகுலரிஸம் என்றால் மதச் சார்பின்மை.

 1947ஆம் ஆண்டிலிருந்து செகுலரிஸம் என்றால் ஹிந்துக்கள் மற்ற மதத்தினருக்கு அசாத்திய சலுகைகள், முன்னுரிமைகள் கொடுக்க்ப்பட வேண்டும், இதர மதங்களைப் போற்றோ போற்று என்று புகழந்து தள்ளிக் கொண்டிருப்பதோடு இருந்தால் போதாது, தங்கள் மதக் கடவுள்களை, சம்பிரதாயங்களை இழிவு படுத்தும் போது தட்டிக் கேட்கக் கூடாது, இது தான் செகுலரிஸம் என்று சொல்லப்பட்டு வருகிறது; நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகிறது.

கோவில் நிலத்தை லயோலா கல்லூரி ஆக்கிரமித்து லீஸ் முடிந்த பின்னும் தரவில்லை.

கேட்காதே. கல்வி சொல்லித் தருகிறார்கள் ஐயா! கல்விக் கூடம் அது.

ஐயையோ, பிள்ளையார் கோவிலை இடிக்கிறார்கள் ஐயா?

“இடித்தால் என்னா, ரோடை அகலப் படுத்தப் போகிறார்கள், ஊருக்குத் தானே நன்மை! 

ஐயையோ, மதுரை டவுன்ஹால்ரோடில் பெருமாள் கோவில் தெப்பக்குளத்தை ஆக்கிரமித்து சுற்றிலும் கடைகள் போட்டு விட்டார்கள் ஐயா! 

“அதனால் என்ன? ஏழை வியாபாரிகள் வாழ வேண்டாமா என்ன?

எத்தனை குடும்பங்கள் பிழைக்கின்றன? அவை உங்களை வாழ்த்துமே.

 “ அரசாங்க நிலம்த்தில் ஊருக்கு நடுவில் சர்ச் கட்டி விட்டார்கள்  ஐயா!”

“அதனால் என்ன? அவர்கள் வழிபாடு நடத்த வேண்டாமா? சகிப்புத்தன்மையே உங்களுக்குக் கிடையாதா? அரசாங்க நிலம் தானே, உடனே ஒரு பக்கத்தில் மனு ஒன்றைக் கொடுத்து விடுவோம். அதிலேயே அதில் கட்டுவதற்கான அல்லது கட்டியதை நியாயப்படுத்தியதற்கான ஆணையை வாங்கி விடுவோம்.”

  ஆயிரக் கணக்கில் அடுக்கடுக்காக, ஆதாரங்களுடன் பாரத நாடு முழுவதும் செக்குலரிஸத்தின் பேரால் ஹிந்துக்களுக்கு நடக்கும் கொடுமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். 

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் தவறாக எதைச் செய்தாலும் அதைச் சொல்வது கூட செக்குலரிஸத்திற்கு எதிரானது என்பது எப்போது போகும்?

ஏன் இந்த தேசத்தை ஹிந்து ராஷ்டிரம் என்று அறிவிக்கக் கூடாது?

 ஒரு ஹிந்துவுக்கு ஏசுவும் தெய்வம் தான்; அல்லாவும் தெய்வம் தான்; புத்தரும் தெய்வம் தான், சிவனும் விஷ்ணுவும் விநாயகரும், முருகனும், துர்க்கையும் தெய்வம் தான்.

ஆனால் கிறிஸ்தவர்களுக்கோ ஏசு ஒருவரே ரக்ஷிப்பவர். அவரை ஏற்காவிட்டால் ஏற்காதவர்கள் பாவிகள்.

முஸ்லிம்களுக்கோ அல்லாவை ஏற்காதவர்கள், காபிர்கள். 

ஆக அனைவரையும் மதித்து போற்றி  உயர ஏற்றி வைப்பவர்கள் ஹிந்துக்களே!

ஆனால் அவர்களுக்கு மத வழிபாட்டில் சுதந்திரம் இல்லை; கோவிலுக்கும் அதன் சொத்துக்கும் பாதுகாப்பு இல்லை.

கோவிலின் பிரகாரத்தில் பிரம்மாண்டமான கார்; கோவில் சொத்தில் அதிகாரிக்கு கார். அது நிற்கும் இடம் கோவில் பிரகாரம்.

கோவில் அர்ச்சகருக்கு நினைக்கவே நெஞ்சம் பதறும் வகையில் குறைந்த சம்பளம்!

யூடியூபில் ஆதாரத்துடன் காண்பிக்கப்படும் இது போன்ற காட்சிகளை நூற்றுக் கணக்கில் பார்க்கிறோம்.

ஆனால் ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து இதைத் தட்டிக் கேட்பதில்லை.

தட்டிக் கேட்கும் ஹிந்து முன்னணி போன்ற இயக்கங்களுக்கு உரிய விதத்தில் ஆதரவும் தருவதில்லை. 

ஒரு பெரிய வாதம் முன் வைக்கப் படுகிறது.

என்ன அது?

அஹிம்ஸா பரமோ தர்ம: என்ற உலகப் பிரசித்தி பெற்ற ஸ்லோக வரி எடுத்துக் காட்டப் படுகிறது.

ஆனால் செகுலரிஸத்திற்கு என்ன கதியோ அந்த கதி தான் இந்த ஸ்லோகத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது. 

பாவிகள், பாதி ஸ்லோகத்தைத் தான் மேற்கோளாகக் காட்டி ஹிந்துக்களின் வாயை அடைத்து விடுகிறார்கள்.

 அஹிம்ஸா பரமோ தர்ம: என்பதற்கு அடுத்தாற் போல வருவதை யாருமே சொல்வதில்லை.

அது என்ன?

“அஹிம்ஸா பரமோ தர்ம: தர்ம ஹிம்ஸா ததைவ ச” 

அஹிம்சையே உயரிய தர்மம்; தர்மத்தைச் செய்யும் போது அதைச் செய்ய விடாது ஹிம்சை செய்வதும் தவறு. 

செகுலரிஸத்தின் அர்த்தத்தையும் நடைமுறையில் மாற்றி விட்டார்கள்; ஸ்லோகத்தையும் பாதியில் வெட்டி நொண்டி ஆக்கி விட்டார்கள்.

ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து எழுவார்களா?

To be continued………………

****

Save Beautiful Sculptures from ‘Stupid Hindus’ (Post No.11,852)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,852

Date uploaded in London – –  29 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

I have posted over 100 paintings out of 220 paintings on the walls of Ramaswami temple at Kumbakonam. There are hundreds of beautiful sculptures on pillars throughout the temple. Thy need full protection.

There is a bad habit among Hindus. They act like goat herds. If someone puts some garland around a statue another person comes and lights a lamp. Third person applies butter or oil on it. The sculpture is completely spoiled.

When there are numerous gods and goddesses in many shrines in the same temple, I don’t know why some do this to many statues.

When I was standing in the Qs in temples like Tiruvannamalai, Kanchipuram and other places, one stupid person suddenly jumps up to touch the gold plated gods in the gate. Then all the people following ‘that goat’ and did the same thing.

We already know the story where a hat/cap vendor lost all his hats or caps because all the monkeys saw him wearing the cap. Each one took one cap. Then when he threw his cap all the monkeys did the same. He collected his caps and cycled away.

We know another story where a Guru tied the cat to the pole before every morning Puja. He did it because it was jumping on his lap. After his death his disciples thought that it was an important ritual part of Puja. They all bought one cat each and tied it in their Puja rooms.

I myself have seen how the Durga shrine in Madurai Meenakshi temple was soiled and spoiled. Somebody said that if a lemon lamp is lighted in Her shrine, girls will get married quickly. Though we can appreciate their faith in God, we should not encourage damaging statues and shrines . I have been visiting the temple for many decades. It started very late and not an old custom.

When we give them 100s of opportunities in the same temple to do rituals in the proper shrines they find short cuts.

When I went to Sri Mushnam temple, 10 to 15 school girls surrounded a small shrine and did some funny things, placing the notebooks, pens, text books on the head , feet, shoulder of the Goddess. When we approached them, they stopped it. After we lef,t they started it again.  In course of time the statue may be disfigured.

When I went to Uttarakosamangai Shiva temple to see the famous Nataraja, renovation work was going on. The priest took us around to show he important places. In a dark corridor, a teenage girl was taking a selfie with a particular goddess. Probably she thought it was a short cut for success in exam or love affair etc.

Swami Kripananda Varaiar, Swamil Chitbhavananda and other famous speakers have shown the right path to youngsters. We need more such good speakers.

Temples must display boards not to spoil any statue with oil or flowers etc.

Let us encourage faith in God but should not encourage stupid, unknown, NEW superstitious customs or rituals.

Look at the beautiful sculptures from Kumbakonam Ramaswami Temple. I took these pictures on 19th February 2023.

–subham—

Tags–Kumbakonam, Sculptures, Ramaswami Temple, Stupid rituals, customs

ரமணாஸ்ரமம், சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம் விஜயம் (Post no.11,851)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,851

Date uploaded in London – –  29 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

திருவண்ணாமலைக்கு எத்தனையோ முறை போய்விட்டேன். ஆனால் 2022 இந்திய விஜயத்தின்போது நான் உள்ளே நுழையும் போது சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமக் கதவைப் பூட்டிவிட்டார்கள். எல்லோரும் தட்டு  நிறைய தயிர் சாதம் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். என்னையும் என் மனைவியையும் பிரசாதம் வாங்கிக் கொள்ளுங்கள், முடியப்போகிறது என்று சொன்னார்கள். நாங்கள் சென்றதோ அருட் பிரசாதத்துக்கு; பொருட் ப்ரசாதத்துக்கு அன்று. ஆகையால் உள்ளே சென்று கம்புக்கிராதி வழியாக பூட்டிய சந்நிதியைப் பார்த்தோம். திருப்தி இல்லை.

ஆகையால் 2023 பிப்ரவரி இந்திய விஜயத்தின்போது , ஒரே நோக்கத்தோடு, சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரம தரிசனம் என்னும் ஒரே நோக்கத்தோடு ,காரை எடுத்துக்கொண்டு சென்னையிலிருந்து பறந்தோம். என்னுடன் வர வேண்டியவர்களால் வர முடியவில்லை. ஆக நானும் டிரைவரும் மட்டும்தான்.

திருவண்ணாமலையில் இரண்டே மணி நேரத்துக்குள் என்ன செய்ய முடியும் என்று திட்ட மிட்டோம். மாலை 3 மணிக்குப்பின்னர் அண்ணாமலை குன்றினை காரிலிருந்து தரிசித்தோம். ரமணாஸ்ரமம் இரண்டு மணிக்கே திறக்கும் என்பதால் முதலில் ராமணருடைய ஆசிரமத்துக்குள் நுழைந்தேன்.

இந்த முறை இந்தியப்பயணத்தில் வினோத அனுபவங்கள்; நான் சென்ற 30 கோவில்களில் ஆகம ரீதியிலான பக்தி மார்க்கம் . அதாவது தேங்காய், பூ, பழம் , தட்டு, நெய் தீப ஆராதனை  (Ritual worship)முதலியன.

கோவிந்தபுரம் முதலிய இட ங்களிலோ ஆட்ட பாட்டங்களுடன் (Dance and Music) சேர்ந்த பஜனை வழி பக்தி. இது முன்னர் சொன்னதிலிருந்து வேறுபட்டது.

ரமண ஆச்ரமத்திலோ வித்தியாசமான ஞான மார்க்கம். அவரது சமாதிக்கு முன்னர் தியான மண்டபத்தில் (Meditation) உட்கார்ந்துகொண்டு “நான் யார் ? Who am I ? என்று சிந்திக்க வேண்டும். மெளனமான தியானத்தின் மூலமே ஆனந்தம் பெறலாம். மனத்தை உட்புறமாகத் திருப்பி உன்னையே நீ எண்ணிப்பார் ; நாம் எல்லோரும் பிறந்ததே ஆனந்தத்துடன்தான். அதைத் தேடத் தேவையே இல்லை . மூடி மறைத்ததுள்ள திரைகளை அகற்றினால் போதும்” என்ற உபதேசம்.

நானும் தியான மண்டபத்தில் அமர்ந்து சுமார் 50 பேருடன் அரை மணி நேரம் தியானம், துதிப்பாடல் மனனம் ஆகியவற்றைச் செய்துமுடித்தேன்.

எனக்குப் பின்பக்கத்தில், தியான மண்டபத்தில், ஒரு நாய் மிகவும் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தது. யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. நான் மட்டும் அவ்வப்போது திரும்பிப் பார்த்துக்கொண்டே தியானம் செய்தேன் . வழக்கமான விஷ்ணு சஹஸ்ர நாமம் முதலியவற்றைப் படித்தேன்

முதல் தடவையாக ரமண ஆஸ்ரமம் முழுவதையும் சுற்றிப்பார்த்தேன் காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் மலையும் கடலும் எங்கள் கூட்டம் என்ற பாரதி வாக்கினை அங்கே செயலில் கண்டேன் . ரமணர் நேசித்த பல பிராணிகளின் சமாதிகள்  பின்புறத்தில் மண்டபங்களுடன் அமைக்கப்பட்டிருந்தன . காகத்தின்(Crow ) சமாதியையும் பல பிராணிகளின்

சமாதிகளையும் கண்டேன் . அங்கு ரமண பக்தர்களின் சமாதிகளும் இருக்கின்றன .

ரமணர் தொடர்பாக என் தந்தை வாங்கிச் சேகரித்த பொக்கிஷம் அனைத்தும் என் சகோதரர்களிடம் இந்தியாவில்  இருந்ததால், லண்டனுக்கு எடுத்துவர, ஒரு தமிழ், ஒரு ஆங்கிலப் பொன்மொழி புத்தகங்களையும் அங்குள்ள புத்தகக கடையில் வாங்கினேன். அருமையான புத்தகங்கள். (அதிலுள்ள தமிழ் ஆங்கிலப் பொன்  மொழிகளை போன மாத, இந்த மாத காலண்டர் பகுதியில் என் பிளாக் BLOG குகளில் காணலாம் ).

மணி 4 ஆகிவிட்டது. சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம் GATE கேட் திறந்தவுடன் முதல் ஆளாக உள்ளே நுழைந்தேன். என்னுடன் 3, 4 பேர் மட்டுமே இருந்தனர் . அவருடைய சமாதி அமைந்த கோவில் இது. பல முறை அவரது கோவிலை வலம் வந்தேன் அலுவலத்துக்குச் சென்று காணிக்கை செலுத்தி ரசீதும் பிரசாதமும் பெற்றுக்கொண்டேன் . பரம திருப்தி

சேஷாத்ரி சுவாமிகளின் வாழ்க்கை முழுதுமே அற்புதச் செயல்கள் நிறைந்தது; இதே பிளாக்கில் தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய கட்டுரைகள் இருப்பதால் ரமணர், சேஷாத்ரி சுவாமிகள் வரலாற்று அற்புதங்களைத் திருப்பி எழுதத் தேவை இல்லை..

அங்கு உமாதேவியார் , கண்ணாடி சுவாமிகள் என்று பல பக்தர்கள், சித்தர்களின் சமாதிகளும் இருக்கின்றன .

அவரை நம்பி வேண்டிக்கொண்டபோது எனக்கும் அவை நிறைவேறியதால் அபரிமித நம்பிக்கை. அவருடைய வரலாற்றை முறையாக விவரிக்கும் சேஷாத்ரி சுவாமிகள் சரிதத்தை எனது அண்ணன் சீனிவாசன் எப்போதும் படித்து எங்களுக்குச் சொல்லுவான். ஏய் , உன் பைபிள் எங்கே? என்று கிண்டல் செய்வோம். அந்த ஒரிஜினல் புஸ்தகம் இப்போது கிடைப்பதில்லை.. ஆக 60 ஆண்டுக்கால பக்தர்கள் நாங்கள். ரமண மகரிஷி புஸ்தகங்களையும் எனது தந்தை தினமணி சந்தானம் வாங்கிக் குவித்து வைத்திருந்தார்.

60, 65 ஆண்டுகளுக்கு முன்னர், மதுரையிலுள்ள சொக்கப்ப நாயக்கன் தெரு ரமணர் வீட்டில் உட்கார்ந்து தியானம் செய்தபோதும் அவருடைய உபதேசங்களை இப்போதுதான் படிக்கிறேன்.

இன்னும் விட்டுப்போன ஒரே ஆஸ்ரமம் யோகி ராம் சுரத் குமார் ஆஸ்ரம ம்தான் .

பின்னர் நேராக திருவண்ணாமலைக் கோவிலில் நுழைந்தேன். பல முறை தரிசித்த கோவில் என்பதால் நேராக சுவாமி, அம்மன் சந்நிதிகளைத் தரிசித்துவிட்டு சென்னை திரும்பினேன்.

பிரம்மாண்டமான கோவில். எனக்கு அக்கு வேறு ஆணி வேறாகத் தெரியும். எப்படி எனில் ……………

லண்டன் அருகிலுள்ள ஒரு ஊரில் வசிக்கும் ஈஸ்வரி கமல பாஸ்கரன் என்ற இந்துப் பெயருடைய ஒரு ஆங்கிலப் பெண்மணி திருவண்ணாமலை கோவில் பற்றி எழுதிய ஆங்கிலப் புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்துக் கொஞ்சம் புண்ணியம் சம்பாதித்து இருந்தேன். அதில் எழுதிய விவரங்கள் எல்லாம் வேகமாக மனத்திரையில் ஓடின.

சென்ற முறை கிரிவலம் பற்றி எழுதி புகைப்படங்களையும் இங்கே போட்டிருக்கிறேன்.

அண்ணாமலைக்கு அரோஹரா என்று சொல்லிவிட்டுக் காரில் ஏறி ‘சிட்’ டாகப்பறந்தேன் சென்னைக்கு.

–சுபம்—

Tags- திருவண்ணாமலை, கோவில், ரமண, ஆஸ்ரமம் , சேஷாத்ரி சுவாமிகள்