
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,862
Date uploaded in London – 2 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஓட்டுப் போட டிப்ஸ் தரும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி!
ச.நாகராஜன்
ஶ்ரீ பி.கே.பாசு என்பவர் இந்திய அரசாங்கத்தில் செக்ரட்டரி பதவி வகித்து ஓய்வு பெற்றவர்.
அவர் தனது அனுபவத்தைப் பற்றி ஒரு கடிதத்தை நண்பர்களுக்கும் நாட்டில் வாழும் சகாக்களுக்கும் எழுதியுள்ளார்.
அது இது தான்:
நண்பர்களே, சக தேசவாசிகளே
ஒரு ஐஏஎஸ் ஆபிஸராக பணியாற்றிய நான் எல்லா கட்சிகளிடமிருந்து சம அளவில் தூரத்திலேயே இருந்து வந்திருக்கிறேன்.
எனது முதலும் முற்றிலுமான விஸ்வாசம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் எனது மனச்சாட்சிக்கும் தான்.
எனது பணிக்காலத்தில் ஏராளமான அரசியல் கட்சிகளையும் அரசியல் தலைவர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.
எனக்கு பணி செய்ய ஒதுக்கப்பட்ட மாநிலம் பீஹார். அங்கு கர்பூரி தாகூர், ஜகந்நாத் மிஸ்ரா, சந்திரசேகர் சிங், பிந்தேஸ்வரி டுபே, பகவத் ஜா ஆஜாத், சச்சிதானந்த சிங், லல்லு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் ஆகியோரை முதல் மந்திரிகளாகப் பார்த்திருக்கிறேன்.
மத்திய அரசிலோ என்றால், கல்பநாத் ராய், என் கே பி சால்வே, வேணுகோபாலாசாரி, ஒய் கே ஆலக், அருண் சௌரி, பி. சிதம்பரம் ஷரத் பவார் ஆகியோரை எனது மந்திரிகளாகப் பார்த்திருக்கிறேன்.
இது தவிர, ப்ரணாப் முகர்ஜி, ஜஸ்வந்த் சிங், அருண் ஜெய்ட்லி ஆகியோரையும் மந்திரிகளாகப் பார்க்க வேண்டியிருந்தது,
ஆனால் இந்த யாரும் என்னை நினைவு வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.
தேவே கௌடா, ஆர் கே குஜ்ரால், நரசிம்ம ராவ், அடல் பிஹாரி வாஜ்பாயி, மன் மோஹன் சிங் ஆகியோரையும் பிரதம மந்திரிகளாக நெருக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன்.
நான் அக்ரிகல்சுரல் செக்ரடரியாக பணியாற்றிய பின்னர் 2012 மே மாதம் பணி ஓய்வு பெற்றேன்.
மேலே கூறியவற்றால் ஓரளவு போதிய அனுபவம் பெற்றவன் தான் நான் என்பதை அறிந்து கொள்ளலாம்.
சமீபத்தில் பதவிக்கு வந்த பிரதம மந்திரியின் பணி பற்றி நான் கவனித்து வருகிறேன். உண்மையைச் சொல்லப் போனால், சென்ட்ரல் அட்மினிஸ்ட்ரேடிவ் டிரிப்யூனலில் ஒரு அங்கத்தினராக இருந்து ஓய்வு பெற்றவன் நான்.
நமது பிரதம மந்திரியைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டதற்கான காரணம் இந்த மனிதரிடம் சுபாஷ் சந்திர போஸ், லோகமான்ய பால கங்காதர திலகர், சர்தார் வல்லப் பாய் படேல் போன்றவர்களிடம் இருக்கும், இதர தலைவர்களிடம் இல்லாத ஒரு தேசீய வெறி இருப்பதைப் பார்க்கிறேன்.
நான் பிரதம மந்திரி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அவரைப் பார்க்க விண்ணப்பித்தேன். 2017 மே மாதம் CATஇலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இதைச் செய்தேன்.
ஓய்வு பெற்ற பின் எந்த வித பணியையும் நான் அடைவதற்காக அவரைப் பார்க்க விரும்பவில்லை என்பதைத் தெளிவு படுத்தினேன்.
குறிப்பிட்ட தேதியான 22 ஆம் தேதி ஜூலை 2017இல் அவரைச் சந்தித்தேன்.
அவர் தனது இருக்கையிலிருந்து எழுந்து வந்து என்னை வரவேற்றார்.
இரு கைகளாலும் என்னை இந்திய முறைப்படி வரவேற்றார்.
15 முதல் 20 நிமிடங்கள் வரை அவருடன் இருக்க முடிந்தது. நான் தான் அதில் பெரும்பாலும் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கவனமாக எனது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவ்வப்பொழுது குறிப்பாக தேவையான கேள்விகளைக் கேட்டார்.
நான் எழுந்த போது அவரும் எழுந்து இரு கரங்களாலும்
எனது கரங்களைக் குலுக்கினார்.
அவருடன் இருந்த நேரம் முழுவதும் மிகுந்த மரியாதையுடன் என்னை நடத்தினார்.
இப்படிப்பட்ட ஒரு மரியாதையை ஒருபோதும் வெறேங்கும் நான் கண்டதில்லை. இப்படி ஒரு சாமானியனுடன் இந்திய பிரதம மந்திரி பேசிக்கொண்டிருக்கிறார் என்ற உணர்வே எனக்கு இல்லை.
ஆக நண்பர்களே, எல்லோரையும் எனது நெடிய பணிக் காலத்தில் நான் பார்த்து விட்டேன்.
இவர் ஒரு sui generis!
(ஆம் ஒப்பற்ற ஒரு தனிப்பெரும் மனிதர்!!)
உலகில் இந்தியாவிற்கு கர்வமான தனி ஒரு இடத்தைத் தர இங்கு இருக்கிறார்.
அவரது முதலும் முடிவுமான முன்னுரிமை நாடு தான்!
அவரது நெருங்கிய உறவினர்கள் எப்படி இப்போது வாழ்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்.
நீண்டகாலம் கிடப்பில் போடப்பட்ட விஷயங்களுக்கு அவர் எப்படி தைரியமாக முடிவை எடுத்துள்ளார் என்பதைப் பாருங்கள் :
ஜி எஸ் டி, வங்கி திவால் சட்டம், ஸ்வச்ச பாரத் திட்டம், ஆயுஷ்மான் திட்டம், விவசாயிகளின் இன்ஷூரன்ஸ் திட்டம் டி பி டி, கோடிக்கணக்கான ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம், கிராமப்புற மின் இணைப்பு, நாட்டின் ஒவ்வொரு மூலைக்குமான சாலை இணைப்பு, அரக்கத்தனமான பாகிஸ்தானை மண்டியிடச் செய்தது, பயங்கரமான ட்ராகனை முடக்கியது, கட்டமைப்பில் உயர ஏறும் கோலாகலம், நமது பாதுகாப்பை வலுப்படுத்துவது, உலகில் இந்தியாவின் சித்திரத்தை உயர்த்துவது.
இந்தப் பட்டியல் முடிவற்ற ஒன்று.