மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள் – Part 3 (Post No.11,933)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,933

Date uploaded in London – –  24 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Part 3

10.பீமசங்கரம் சிவன் கோவில்

12 ஜோதிர் லிங்க தலங்களில் மூன்று,  மஹாராஷ்டிர மாநிலத்தில் இருப்பதோடு எங்கு நோக்கினும் சிவன் கோவில்களைக் காணலாம். பீமா நதிக்கரையில் அமைந்த பீம சங்கரம், 12 ஜோதிர் லிங்க தலங்களில் ஒன்றாகும்  இது புனேயில் இருந்து 110 கிமீ தொலைவிலும், நாசிக்கிலிருந்து 120 கிமீ தொலைவிலும் உள்ளது

பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் மற்றும் அயோத்தி மன்னன் பீமன் ஆகியோருடனும் தொடர்புடைய கோவில் இது.

அழகான மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளுக்கு இடையே அமைந்த கோவில் இது. இயற்கையும் இறைவனும் மனிதனின் மனச்  சாந்தியை மேம்படுத்தும். இதை அறிந்த இந்துக்கள் காடு மலையிலும் கிராமத் தொலைவிலும் கோவில்களை அமைத்துள்ளனர் . இதனால் யாத்திரை செல்லும் காலம்  முழுதும் ஆண்டவன் சிந்தனை ஒன்றே நிலைத்து நிற்கும்.

இந்தக் கோவிலில் வேறு எங்கும் இல்லாத சில சிறப்புகள் உண்டு.

பூமிக்கு அடியில்- தரை மட்டத்துக்கு கீழே லிங்கம் இருப்பது ;

அந்த லிங்கம் கூம்பு வடிவத்தில்,இருப்பது ;

எல்லா பக்தர்களும் அருகில் சென்று தாமே லிங்கத்தை வழிபட முடிவது;

கர்ப்பக்  கிரகத்துக்கு முன்னர் நந்திக்குப் பதில் ஆமை  இருப்பது;

பழைய சிவன் கோவிலானாலும் ராமர் லட்சுமணர் மூர்த்தங்கள் இருப்பது

சிறப்பு அம்சங்கள் .

பக்கதர்கள் காடு , மலை வழியே நடந்து சென்று வழிபடுவது முக்கிய யாத்திரை அம்சம்.

போர்ச்சுகீசியரை வென்று மராட்டியர் எடுத்து வந்த பெரிய மணியும் இந்தக் கோவிலை அலங்கரிக்கிறது.

மஹா சிவராத்திரி இங்கு மிகப்பெரிய பண்டிகை

xxx

11. புதர் காட் பைரவர் கோவில்

கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பைரவர் கோவில் பழமையான பைரவர் கோவில்.. மாசி மாத கிருஷ்ண பட்ச பிரதமை முதல் தசமி வரை பெரிய விழா நடைபெறுகிறது. இங்கு மேலும் சில கோவில்கள் இருக்கின்றன. இங்குள்ள கோட்டை காரணமாக சமீப காலத்தில் மலை  ஏறுவோரின் சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது. சிவாஜி மஹாராஜ் இந்தக் கோட்டை யைக் கைப்பற்றி அதை மேலும் வலுப்படுத்தினார்

12.சாந்துர் கண்டோபா கோவில்

கண்டோபா என்பவர் சிவனின் ஒரு அம்சமாக கருதப்படும் கிராமப்புற தெய்வம். மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஏராளமானோருக்கு குல தெய்வம். தமிழ் நாட்டின் முனியாண்டி, ஐயனார் போல ஒரு கடவுள். கத்தி ஏந்திய கோலத்தில் காட்சி தருவார். சாந்தூர் கண்டோபா கோவிலில் பெளஸ (தை ) மாத பெளர்ணமியில் பெரிய விழா நடைபெறுகிறது .

xxxx

13.சாப்பால் ராம் மந்திர்

இது வீர சிவாஜியின் குருவான சமர்த்த ராமதாஸ் சுவாமிகளின் கோவில். இங்கு சித்திரை சுக்லபட்ச நவமியான ராம நவமி அன்று பெரிய திரு விழா நடக்கிறது. சாதாராவிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் சாப்பால்  கிராமம் , மாண்ட்  நதிக்கரையில் அமைந்துள்ளது . சுமார் 400 ஆண்டுப் பழமையான இக் கோவில் சலவைக் கற்கலால் ஆனது. இதன் மற்றும் ஒரு சிறப்பு, சூரிய விக்ரகம் இருப்பதாகும். இதை ராமதாஸ் சுவாமிகள் அங்கபூர் குளத்திலிருந்து மீட்டு வந்து இங்கே நிறுவினார்.

xxxx

14.சதுர் சிருங்க (சதர்சிங் ) தேவி கோவில்

நாசிக் அருகிலுள்ள சப்த ஸ்ருங்கி தேவி கோவில் மிகவும் பிரசித்தமானது. இந்தக் கோவிலுக்கு ஆண்டுதோறும் சென்றுவந்த ஒரு வணிகர்,  முதிய வயதில் புனே நகரிலிருந்து செல்ல முடியாமல் தவித்தார். அப்போது தேவியே அவர் முன் (கனவில்) தோன்றி புனே அருகிலுள்ள நான்கு சிகரத்தில் (சதுர் சிருங்க) தான் உள்ளதாக தெரிவித்தார். அவரும் அங்கு சென்று பார்த்தபோது ஸ்வயம்பூ (தாமாகத் தோன்றும்) தேவி உருவம் அங்கே கிடைத்தது. அங்கு கோவில் எழுப்பிய பின்னர் நவராத்திரி காலத்தில் ஒன்பது நாட்களும் பெரிய விழா ஏற்பாடாகியது . பத்தாவது நாளான விஜய தசமியில் பெரிய வெள்ளி ரதம் உலா வரும். அதை ஒட்டி அந்த ஊரே கடை, கன்னிகள், கேளிக்கை, ராட்டினம் முதலியவற்றுடன் விழாக்கோலம் பூணும்.

xxx

15.செளல் தத்த மந்திர்

கடற்கரையை ஒட்டிய மலை முகட்டில் அமைந்த இந்த தாத்தாத்ரேயர் கோவில் இயற்கை வனப்பு சூழ அமைந்துள்ளது. சுமார் 1000 படிகளுக்கு மேல் ஏறி பிரம்மா , விஷ்ணு, சிவனின் அவதாரமான தத்தாத்ரேயர் உருவத்தைக் காணலாம்.அவருடைய பாதுகைகளையும்  காணலாம் மார்கழி மாத பெளர்ணமி தினத்தன்று பெரிய விழா நடைபெறுகிறது. ரெவ் தண்டா என்னும் ஊரிலிருந்து செல்லுவது எளிது. சற்று தொலைவில் அலிபாக் என்னும் பெரிய ஊர் உள்ளது சிவாஜி மஹராஜ் காலத்திலிருந்து புகழ்பெற்ற இடம் இது. இங்கிருந்து தொலைதூர இடங்களைக் காணமுடியும் . அண்மைக்காலத்தில் பிரம்மேந்திரா என்பவர் கோவிலைக் கட்டினார் . ஆனால் புனிதத் தலம் மிகப்பழமையானது.

–subham—

Tags- தத்தாத்ரேயர், கண்டோபா , மந்திர் , செளல் , சதுர்ச்ருங்க , பீம சங்கர, ஜோதிர்லிங்க 

கிழமைகளுக்கு பெயர் சூட்டியது யார் ? (Post no.11,932)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,932

Date uploaded in London – –  24 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ஞாயிறு , திங்கள், செவ்வாய், புதன் , வியாழன், வெள்ளி , சனி என்ற ஏழு கிழமைகளும்  சின்னக் குழந்தைகளுக்கும் தெரியும்.

யார் இதைக் கண்டுபிடித்தார்கள் ?

இந்துக்களே இதைக் கண்டு பிடித்தார்கள்;

தமிழில் மட்டுமே அதற்கான பழைய ஆதாரங்கள் உள்ளன.

லண்டலிலிருந்து வெளியான மேகம் பத்திரிக்கையில் 1990ம் ஆண்டுகளில் நான் எழுதிவந்த கட்டுரைத் தொடர் –தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்.. அதில் ஒரு கட்டுரை-

நாள், கிழமையைக் கண்டுபிடித்தது யார் ? தமிழனா? எகிப்தியனா ? என்பதாகும் .

இந்தக் கட்டுரைத்தொடர் அடங்கிய புஸ்தகம் 2009ல் நாகப்பா பதிப்பகம் மூலமும் இபோது புஸ்தக .கோ .இன் வழியாகவும் வெளியிடப்பட்டுள்ளது .

இப்போது மேலும் பல புதிய செய்திகள் கிடைத்திருப்பதால் இந்தத் தலைப்பை மேலும் அலச ஆசை.

பள்ளிகளிலும், என்சைக்ளோபீடியா என்னும் கலைக்களஞ்சியங்களிலும் தவறான தகவல் தரப்படுகிறது

நாள் கிழமைகளைக் கண்டுபிடித்தது எகிப்தியானா ? இல்லை

பாபிலோனியர்களா ? இல்லை

கிரேக்கர்களா? இல்லை

ரோமானியர்களா ? இல்லை

ஆங்கிலோ சாக்ஸன் இனத்தினரா ? இல்லை

இந்துக்களா ? ஆமாம், ஆமாம், ஆமாம்

இந்துக்களே! எதை எடுத்தாலும் நாங்கள்தான் முதலில் கண்டுபிடித்தோம் என்று பெருமை பேசுகிறீர்களே ! ஒரு பல்கலைக்கழகக்  கூட்டத்தில் வந்து பேசினால், மாணவர்களே உங்கள் முகத்திரையைக் கிழித்து விடுவார்களே என்று எதிர்க்குரல் எழுப்புவோருக்கு இதோ பதில்கள்:

பொதுவாக எழுதப்படும் விஷயம் : எகிப்தியர்கள்தான் வாரத்துக்கு ஏழு நாள் என்பதை முதல் முதலில் குறிப்பிடுகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக பாபிலோனியர்களின் எழுத்துக்களில் இது உள்ளது. பின்னர் கிரேக்கர்கள் மூலம் இது இந்தியாவுக்கு வந்தது  என்பது புஸ்தங்களில் காணப்படும்  தவறான தகவல்.

இதை மறுத்து நன் எழுதிய 1990ம் ஆண்டுக் கட்டுரையில் எழுதிய இரண்டு விஷயங்கள் :

ஞாயிறு , திங்கள் , செவ்வாய், புதன் வியாழன்

வெள்ளி சனி பாம்பும் இரண்டும் உடனே

— கோளறு திருப்பதிகம், தேவாரம்

இதைப்  பாடிய திருஞான சம்பந்தர் வாழ்ந்தது மஹேந்திர பல்லவன் காலத்தில்- நின்ற சீர் நெடுமாறன் என்னும் பாண்டியன் காலத்தில்; அதாவது கிபி (பொது ஆண்டு) 600.

ஆனால் கிரேக்க , ரோமானிய, பாபிலோனிய, எகிப்திய நாகரீகக் குறிப்புகள் சம்பந்தரைவிடக் காலத்தால் முந்தியவை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஆயினும் ரிக்வேதத்திலேயே ஆண்டுக்கு 360+ 5 நாட்கள் போன்ற குறிப்புகள் காணக்கிடக்கின்றன ; வாரத்துக்கு 7 நாள் என்ற குறிப்பு இல்லை .

வியாழனையும் அதை அடுத்து வெள்ளியையும் இணைத்துப்பேசுவது இந்துமதத்தில் தேவ குரு , அசுரர் குரு என்ற கச்ச தேவயானிக் கதைகளிலும், திருப்பாவையிலும் காணப்படுகிறது .

xxxx

புதிய ஆதாரங்கள்

இப்போது நான் சொல்லும் புதிய ஆதாரங்களைக் கேளுங்கள்

ஞாயிறு என்னும் கிழமையில் வாரத்தினைத்  துவக்கியதும் அவைகளுக்கு கிரகத்தின் பெயர்களை வைத்ததும் இந்துக்களே.

அது எப்படி ?

திருஞான சம்பந்தர் சொன்ன அதே வரிசையை நாம் இன்று பயன்படுத்துகிறோம்.

அதற்கு முன்னர் எழுந்த தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தில் ஆடி மாத வெள்ளிக்கிழமை என்ற குறிப்பு வருகிறது. அதன் காலம் கி பி 132 என்பது கடல் சூழ் இலங்ககைக் கயவாகு வேந்தனும் என்ற குறிப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது ரோமானியர் காலம்.

கிரேக்க நாட்டிலிருந்து இறக்குமதியான சரக்கை, இளங்கோவோ சம்ப ந்த்ரோ  உடனே பாட்டில் பயன்படுத்தினர் என்பது நகைப்பை ஏற்படுத்தும். ஏனெனில் மக்களுக்குப் புரியாத, தெரியாத விஷயங்களை அவர்கள் பேசமாட்டார்கள்.

மேலும் ஆர்ய தேவ என்ற புத்தமத அறிஞர் எழுதிய நூல்களிலும் கிழமைகள் வருகின்றன .

xxxxx

கிழமைகளின் பெயர்கள்

இதையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு ஞாயிறு முதல் சனி வரையுள்ள பெயர்களைக் காண்போம்.

இந்துக்கள் மட்டுமே இன்றுவரை கிழமைகளுக்கு கிரகங்களின் பெயர்களை பயன்படுத்துகின்றனர். ஏனெனில் ஆங்கிலத்திலுள்ள ஏழு பெயர்களில் நான்கு கிரகங்கள் இல்லை. ட்யூஸ் டே Tuesday , வெட்னஸ் டே Wednesday, Thursday தர்ஸ் டே, Friday ப்ரை டே என்ற நான்கு கிழமைகளில் உள்ள டிர் , வோதன் , தோர் , பிறைக் என்ப நார்டிக் இன மக்களின் கடவுளர் ; கிரகங்கள் இல்லை. இவைகளை கிழமைகளின் பெயர்களில் நுழைத்தது ஆங்கிலோ சாக்ஸன் Anglo- Saxon  இனத்தினர். இதை ரோமானிய (லத்தீன் மொழி) இலக்கியங்களில் காண்பது இரண்டாம் நூற்றாண்டில்தான்! ஆனால் நம் சிலப்பதிகாரத்திலும், ஒரு கல்வெட்டிலும் அதற்கு முன்னரே கிழமைகள் வந்துவிடுகின்றன .

மேலும் அவர்கள், கிரேக்க நாட்டிலிருந்து இதை பெற்றதாகவும், அ வர்களுக்கு  பாபிலோனியர்கள் சொன்னதாகவும் அரை வேக்காட்டுப் பேர்வழிகள் ஆங்கிலத்தில் பிதற்றி வைத்துள்ளார். அதுவும் தவறு.

கிரேக்கர்களின் முதல் நாள் சனிக்கிழமை. அடுத்துவருவது வியாழன் , பின்னர் புதன் , சூரியன் …..

ஆக அவர்கள் கிரகங்களின் பெயர்களை இட்டாலும் வரிசை பிறண்டுள்ளதைக் காண்கிறோம் . அது மட்டுமல்ல மேலை உலகம் முழுதும் இன்று வரை இந்தக் குழப்பம் நீடிக்கிறது.

நங்கள் எல்லோரும் லண்டலில் பேசிக்கொள்ளும்போது வீக் எண்டில் Week end சந்திப்போம் என்போம் . அது என்ன வீக் எண்ட்?

வீக் எண்ட் WEEK END  (வார இறுதி நாட்கள் ) என்றால் சனி ஞாயிறு ! ஆனால் மேலை நாட்டுக் காலண்டர்களில் சண்டே முதல் துவங்குவர் அல்லது பழைய கால கிரேக்க நாட்டில் சனிக்கிழமை முதல் நாள்.

நாம் ஒருவர்தான் ஞாயிறு துவங்கி சனியில் முடிக்கிறோம். நாம் ஒருவர்தான் வானில் உலவும் கிரகங்கள் பெயர்களை வைத்து இருக்கிறோம். ஆங்கிலப் பெயர்களில் நான்கு, கிரகங்கள் இல்லை .

(முன்னர் எழுதிய மற்றும் ஒரு விஷயத்தையும் நினைவு படுத்துகிறேன். கிரகங்கள் என்றால் பிளாணட்ஸ் Planets என்று அகராதிகள் கூறும். அப்படியானால்  நாம் சொல்லும் சூரியனும் சந்திரனும் கிரகங்கள் இல்லையே, ராகுவும் கேதுவும் கிரகங்கள் இல்லையே என்று சிலர் கேள்வி எழுப்பலாம் ; கிரஹ என்றால் ஈர்ப்பு விசை= பிடிமானம்- கவ் வுதல் ; ஐசக் நியூயூட்டனுக்கும் முன்னரே நாம் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்ததால் வானில் உலவும் சூரியன் சந்திரன் முதலிய அனைத்துக்கும் நவ கிரஹங்கள் என்று பெயர் சூட்டினோம்; இதனால் தான் GRIP. GRAB கிரிப் , கிராப் , கிராவிடி Gravity என்ற ஆங்கிலச் சொற்களும் பாணிக்கிரஹணம் சந்திர, சூர்ய கிரஹணம் என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொற்களும் புழக்கத்தில் உள்ளன ) 

மீண்டும் கிழமைகளுக்கு வருவோம் .

ரோமானிய (லத்தீன்) கால காலத்திலிருந்து   வந்தது பிரெஞ்சு மொழி. அங்கு இன்றும் கூட ஆறு கிரகங்களின் பெயர்களைச் சொல்லிவிட்டு ஞாயிற்றுக் கிழமைக்கு திமான்ஸ்  Dimanche என்பர். அது சூரியன் தினம் இல்லையாம். கடவுள் தினமாம். அதாவது அவர் ஓய்வெடுக்கிறார் . நாமும் ஓய்வெடுத்து ‘சர்ச்’ Church சுக்குப் போவோம். 

சொல்லப்போனால் மேலை உலகம் முழுதும் ஒரே குழப்பம். ஆயினும் இவர்கள் கிரேக்க, ரோமானிய ஆங்கிலோ சக்ஸன்  உருவாக்கிய கிழமைகளை இன்று நாம் பயன்படுத்துகிறோம் என்று பெருமை பேசுவார்கள்.

கடைசியாக ஒரு கேள்வி எழும் / இவ்வளவு சொல்கிறீர்களே; ஒரு தேவா ரக் குறிப்பு, சிலப்பதிகாரக் குறிப்பு, கல்வெட்டுக் குறிப்பு, ஆர்யவேதக் குறிப்பு தவி வேறு எங்கும் கிழமைகள் ஏன் குறிப்பிடப்படவில்லை ?

அதற்கும் இதோ பதில் 

கடிகாரங்களும் மணிக்கூண்டுகளும் இல்லாத கிராமவாசிகள் சந்திரனை வைத்தே நேரம் அறிவர். நாளையும் அறிவர். ஒரு மாதத்தை அமாவாசை முதல் 14 நாட்கள் பெளர்ணமி முதல் 14 நாட்கள் என்று பிரித்து எளிதில் நாளையும் (திதி), நேரத்தையும் அறிந்தனர். இதனால்தான் இன்றும் இந்துக்களின் பெரும்பாலான பண்டிகைகள் திதிக்கணக்கில் பெயரிடப்பட்டுள்ளன . ராம நவமி, ஜன்மாஷ்டமி , நாக பஞ்சமி , நரக சதுர்த்தசி (தீபாவளி), ஏகாதசி உபவாசம் என்று. 

இந்துக்களின் 12 பெளர்ணமி நாட்களிலும் நாடு முழுதும் திருவிழாக்கள் நடக்கும். காலண்டர் இல்லாமல் இவைகளை மக்கள் அறிவர். ஆகையால் நமக்கு நாள், கிழமை தெரிந்தும், திதிகளையே வழக்கத்தில் பின்பற்றினோம்.

முடிவுரை : 7 நாட்களுக்கு கிரகங்களின் பெயர்களை சூட்டியது இந்துக்களேஅதைப் பின்பற்றுவதும் இந்துக்களே . மற்ற எல்லாப் பண்பாடுகளிலும் இது முழு அளவில் இல்லை. அப்படி இருந்தாலும் நமக்குப் பின்வந்தவர்களாக இருப்பார்கள் .

நமக்கு அருமையான  ஆதாரம் நல்கிய இளங்கோ அடிகளுக்கும் , சம்பந்தருக்கும் நாம் என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.

–SUBHAM—

TAGS -கிழமை, பெயர்கள், கோளறு திருப்பதிகம், சிலப்பதிகாரம், ஆடி வெள்ளி, ஞாயிறு திங்கள் , வாரத்துக்கு 7 நாட்கள்

நாஜிக்களின் சித்திரவதையால் பிறந்த புதிய மின்னல் வேகக் கணிதம்!பகுதி 6(Post No.11931)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,931

Date uploaded in London –   24 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள் – ரத்தத் துளிகள்

புதிய நெடுந்தொடர்.     

அத்தியாயம் 5

நாஜிக்களின் சித்திரவதையால் பிறந்த புதிய மின்னல் வேகக் கணிதம்!

ச.நாகராஜன்

பகுதி 6 

டிராக்டன்பெர்க் லெய்ப்ஜிக் நகருக்கு அனுப்பப்பட்டார். அந்த நகரோ அப்போது பெரும் வெடிகுண்டு தாக்குதலுக்கு இலக்காகி இருந்தது. நகர் முழுவதும் ஒரே குழப்பம். குடிக்க நீர் இல்லை. உண்ண உணவில்லை. படுக்க இடமில்லை. ஆகவே கைதிகள் அனைவரும் நின்று கொண்டே இருந்தனர். இறந்தவர்களைப் புதைக்கக் குழி வெட்ட வேண்டுமே, குழி வெட்டக் கூட சக்தி கைதிகளிடம் இல்லை. அவர்களைப் புதைக்குமாறு கூற வார்டர்களுக்குத் தென்பு இல்லை.

இந்த நிலையில் தான் டிராக்டன்பெர்க் ஒரு நாள் நள்ளிரவில் இரட்டை  வயர் வேலி ஒன்றின் அடியில் ஊர்ந்தவாறே சிறை முகாமிலிருந்து வெளியேறித் தப்பினார். அவருக்காகவே அவரது மனைவி ஆலிஸ் காத்திருந்தார். அவருடன் இணைந்து கொண்டார்.  பாஸ்போர்ட், அடையாளப் பேப்பர் எதுவுமில்லாமல் இருந்ததால் அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவரும் இல்லை!

இந்த ஒரு காரணத்தை வைத்தே அவர் எங்கும் யாராலும் கைது செய்யப்படலாம். அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.  ட்ரியெஸ்ட் என்ற இடத்தில் இருந்த முகாமுக்கு அவர் அனுப்பப்பட்டார்.  அங்கே கல் உடைக்கும் வேலை அவருக்குத் தரப்பட்டது.  ஆனால் அந்த இடத்தில் சிறை அதிகாரிகள் முரட்டுத்தனமாக இல்லாமல்  மென்மையாக இருந்தனர். சீதோஷ்ணமும் சகிக்கக் கூடியதாகவே இருந்தது.

சிறை அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து ஆலிஸ் தன் கணவருக்குச் செய்திகளை அனுப்பலானார். தப்புவதற்கு ஒரு திட்டமும் வகுக்கப்பட்டது.  1945ஆம் ஆண்டில்  கண்காணிப்பு கோபுரங்களையும் மீறி ஒரு நாள் நள்ளிரவில் அவர் முள் கம்பியினால் அமைக்கப்பட்ட வேலியின் மீது ஏறி அடுத்த பக்கம் குதித்தார்.ஆனால் காவலாளிகள் அவர் தப்புவதை அறிந்து துப்பாக்கியால் சுட்டனர்.  ஆனால் டிராக்டன்பெர்க் ஊர்ந்தவாறே நீண்ட புல்வெளியைக் கடந்து தன் மனைவியைக் குறித்த இடத்தில் சந்தித்தார். இருவரும் ஸ்விட்ஸர்லாந்து வந்து சேர்ந்தனர்.

அங்கு அகதிகளுக்கான முகாமில் இருவரும் தஞ்சம் அடைந்தனார். ஒல்லியான உடல். நரைத்த தலை. மனம் மட்டும் தளராத நிலை.  நீல நிறக் கண்களில் இனி யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்ற தெளிவுடன் அவர் புது வாழ்க்கையைத் துவங்கினார்.

கணக்கை வெறுத்து வந்த குழந்தைகளிடம் அவர் தன் புதுமுறைக் கணிதத்தைக் கற்பிக்க ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்! அந்தக் குழந்தைகள்  கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு மின்னல் வேகத்தில் கணிதத்தைச் செய்து முதலிடத்தைப் பெற ஆரம்பித்தன. செய்தி வெகு வேகமாகப் பரவியது. அவரது முறையில் மக்கள் அதிக ஆர்வம் காண்பிக்க ஆரம்பிக்கவே 1950ஆம் ஆண்டு ஒரு புது கல்வி நிறுவனத்தையே அவர் ஜூரிச் நகரில் தொடங்கினார்.

‘டிராக்டன்பெர்க் முறை’ என்றால் என்ன? இந்த முறையில் பெருக்குவதற்கு வாய்பாடுகள் கிடையாது.  எண்ணுவதற்கும் மட்டும் தெரிந்தால் போதும்.  சில முக்கிய திறவுகோல் விதிகளை (KEYS) மட்டும் மனப்பாடல் செய்தால் போதும். மின்னல் வேகத்தில் துல்லியமாகக் கணக்குகளைப் போட்டு முடித்து விடலாம்.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் எண்கணிதம் தான் உலகிலேயே மிகவும் மோசமாகக் குழந்தைகளுக்குச் சொல்லித் தரப்படுகிறது என்பது தெரிய வருகிறது.

இந்தக் குறையை புதிய முறை கணிதம் நீக்கி விடுகிறது.

டிராக்டன்பெர்க் முறையில் உள்ள எளிய குறுக்கு வழிகளை கடைப்பிடித்து ஜூரிச் நகரில் மருத்துவம் மற்றும் கட்டிடக்  கலை மாணவர்கள் மிக சுலபமாக கணிதத்தில் அதிக மார்க்குகளை எடுத்தனர்.  அந்த நகரில் டிராக்டன்பெர்க் பள்ளியை ‘மேதைகளின் பள்ளி’ என்று பொது ஜனங்கள் குறிப்பிடுவது வழக்கமானது.

கால்குலேட்டர்களுடன் இருப்பவர் ஒரு பக்கம், டிராக்டன்பெர்க் முறையில் கற்றவர்கள் மறு பக்கம் என்று இருக்கும் போது, கால்குலேட்டரைத் தொடுவதற்கு முன்பேயே  பளீரென பதில் மின்னல் வேகத்தில் குழந்தைகளிடமிருந்து பறக்கும்!

ஒரு உதாரணத்திற்கு மின்னல் வேகக் கணித முறையில் இரண்டு கணக்குகளைப் போட்டுப் பார்க்கலாம்.

48ஐ 5 ஆல் பெருக்க வேண்டுமா? 48இல் பாது எவ்வளவு? 24. அதைப் பத்தால் பெருக்கினால் வருவது 240.  இது தான் விடை.

5இல் முடியும் இரு எண்களைப் பெருக்க வேண்டுமா? 25ஐ 25ஆல் பெருக்க வேண்டும். இப்படி இரு எண்களிலும் 5 முடிந்தால் விடையின் கடைசிப் பகுதி 25.  பின்னர் முதல் இலக்கமான 2ஐ அதற்கு அடுத்த எண்ணான மூன்றால் பெருக்கி வரும் விடையான 6ஐ முதலில் போட்டுக் கொள்ள வேண்டும். அதாவது விடை 625.

35ஐ 35ஆல் பெருக்கினால் வரும் விடை 1225!

45ஐ 45ஆல் பெருக்கினால் வரும் விடை 2025!

இந்த மின்னல் வேகக் கணித முறை பற்றிய விதிமுறைகளின் ஆரம்பப் பாடத்தை http://www.mediafire.com/download/vw95bohd354wz65/Trachternberg+Speed+Mathematics+-+Gr8AmbitionZ/pdf

மற்றும்

https://archive.org/details/TheTrachtenbergSpeedSystemOfBasicMathematics_201803

உள்ளிட்ட பல இணைய தளங்கலில் காணலாம்.

டிராக்டன்பெர்க் கணிதம் என்று டைப் அடித்தாலும் போதும் விவரங்களைப் பெறலாம்.

டிராக்டன்பர்க் வாழ்க்கைச் சரித்திரமும் புத்தகமாக வந்துள்ளது. மிகச் சுவையான புத்தகம்!

கொடுமையான இரண்டாம் உலகப் போர் ஒரு நன்மையையும் தந்துள்ளது என்றால் அது அதிசயம் தானே!

       ***                தொடரும்

108 Famous Hindu Shrines in Maharashtra-2 (Post No.11,930)

Picture of Bhuleshwar Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,930

Date uploaded in London – –  23 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 2

5.Ambarnath Shiva Temple

It is a very old temple of Ambaresvar Mahadeva with an inscription dated Saka year 982 (CE.1060) it is on the banks of Wadvan river. Big festival is held during Maha Sivaratri. It is at fifty kilometres from Mumbai. The strange thing about the temple is the Garba griha (sanctum sanctorum) is in the underground, 20  steps down from the surface and the roof is incomplete. Ambara in Sanskrit means sky. May be they have left it incomplete deliberately, so that the Linga is facing the sky. Ambaram is like ambalam in Tamil, which also means Open space (no roof). Chidambaram, most famous Siva temple in Tamil Nadu is also called Ambalam and its Sanskrit equivalent is Chid+ Ambaram (Sitramabalam in Tamil).

Amberanath Temple picture

6.Awas (Avaasa) Snake Temple

Now it is known as Nogoba temple. Snake festival was held at this noted snake shrine, with dancing, on Kartika Sukla Chaturdasi. The devotes hold canes tipped with Naga / snake images. (Probably after the ban on snakes in Hindu festivals by High court, this is dropped). But the Yatra/festival continues.

Nagobachi Yatra

Shri Nageshwar Devasthan yatra is held  on Kartik Chaturdashi Vaikunth Chaturdashi which as per Hindu calendar  is Fourteenth Day of Holy month of Kartik (November) . It marks the start of Yatra season of Alibaug Taluka. It is the first Yatra of Alibag Taluka. It is popular amongst farming  community of Alibaug .Devotees come to Awas village for Darshan of Nagoba and other revered saints in Temple. Metal Bells and miniature idol Nag Devata (Snake god) is offered  to Temple.

Devotees take Vibhuti or Holy ash to apply on forehead as a mark of honour and gratitude to Shri Nageshwar. Stalls selling local sweets and snacks are setup during fair. Devotees come in Bullock carts to visit Shri Nageshwar at Awas. They take back Dudhi halwa and other sweets as Prasad.  

Known for legends to its origins and its hanging clusters of countless bells, Nagoba Mandir is a significant religious centre, near the Saswane Beach.

7.Bahe Sri Rama Linga Temple

Both Saivites and Vaishnavism worship here. The story is that Rama came here during his wanderings and worshipped the Linga. Since then his name is associated with the place Festivals are help on Pausha new moon day and on Chaitra Sukla Navami (Rama Navami)

Antoba Naik Bhide built the chief temple of Ramlinga about 2 centuries ago on a 2 ft high plinth. A 30 ft high, mortared brick pinnacle caps the entire 20 sq ft temple chamber.

8.Bhuleshwar Siva Temple

It is at a distance of 45 kilometres from Pune and ten kilometres from Yavat. This temple is very ancient, and it has a history for at least 1200 years. Since beautiful carved sculptures are in the temple it has been declared a protected monument. The folk lore about this temple is that at least one or two sweets disappear mysteriously when offered to the Lord. Milind Gunaji, actor/ travel writer, has also written about his experience in the temple in his book MYSTICAL MAGICAL MAHARSHTRA. It is a hill top temple built by Krishna Deva Yara. Pancha Pandavas was also associated with the building of this temple.

Strange this about this temple is that Ganesh is carved in his feminine form and the devotees call her Ganeshwari or Lambodari.

9. Banpuri Siva Temple.

This is a Siva temple

Banpuri  near Patan in the Vang Valley, ten miles south-south-east of Patan, is a village on Dhebevadi Salve road. To the south of the village on the hill side is a temple of Naikba, a form of Shiva. The linga has a silver mask which is carried in procession on the two fair days, the fifth of Chaitra (March-April) and the tenth of Ashvin (September-October). The legend is that a cultivator named Abasaheb Yeshvantarav Janugade devotedly worshipped God Shiv on this spot until he grew old and infirm. God Shiv ordered him to go home and promised to follow him if he did not look back. The old man obeyed till on his way hearing a terrible noise he looked back and saw an enormous boulder fall from the hill and smashed to pieces. That night he had a dream that the boulder was Shiva who should be worshipped on the spot and styled Naikba.

In Banpuri, Maharashtra, the Naikba Yatra is performed. During the month of Chaitra (April), the Shigaon Naikba Yatra is held. Shakti, the Mother Goddess, is honoured at the Naikba Temple. Maharashtra is where Naikba Devi, a manifestation of Goddess Shakti, is most revered.

Rituals related to Goddess Durga are performed during the Yatra.

To be continued……………………….

Tags- Hindu shrines, Maharashtra, Banpuri, Bhuleshwar, Nagoba, Naikba

Who named the Days of the week? (Post No.11,929)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,929

Date uploaded in London – –  23 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Egyptians ? Wrong

Babylonians ? Wrong

Greeks ? Wrong

Romans ? Wrong

Ango-saxons ? Wrong

Half baked people mentioned all the above people as the one who invented seven days of the week. Today we use Sunday as the first day of the week or last day of the week. The expression weekend shows that Saturday and Sunday are the weekends.

No other community except Hindus named seven heavenly bodies for the days, particularly in the present order. Since many ‘so called scholars’ did not know Tamil literature they kept on bluffing.

Tuesday belongs to Tyr, a Norse god.

Wednesday honours Odin or Wodan.

Thursday is Thor’s day, and is called Torsdag in the Norse languages

Friday salutes Frigg, the Norse goddess.

No encyclopaedia can give you the exact dates for these corruptions. It is clear they are not planet names.

Oldest reference for seven -day week may be in Egyptian and Babylonian. But none used seven heavenly bodies for the week. First evidence comes from Thevaram, anthology of Tamil Hymns.

First of all the word Graha means, a body with gravity. Grahanam means catching, holding, gripping. It is in the Sanskrit words Surya Grahana, Chandra Grahana (where the shadow catches or grips sun or moon. Paani Grahana for wedding is gripping the hands. English words Grip, Grab, Gravity – all derived from ‘Grah’ that which attracts. Graha is not planet; that is wrong translation.

Let us start with the Egyptians.

Scholars have evidence only from second century  BCE in Egypt. I am talking about the names of the days. They say Egyptians got it from Greece.

Now let us go to Greece?


Did they start the week from Sunday? No.

The evidence shows that Saturday was their first day. The order of the planets in Greek literature is Saturn Jupiter, Mars, Sun, Venus, Mercury, Moon. They even named the hours of the day in the same order. Saturn was the Lord of the first hour, Jupiter was the Lord of the second hour and so on. Egypt followed it. Saturn was the Lord of first, eighth, fifteenth and twenty second hour of the day.

Then how come we have Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday and Saturday today and illogically call Saturday and Sunday as week- end. People may say because we have no work on those days in schools or office. That is not right. Because Tuesday, Wednesday, Thursday and Friday are not planet names. How did they enter the English calendar? They are the names of Gods in different cultures.

Scholars say the Romans introduced it in second century CE. But note that four of the days are not planet names. Tir, Woden, Thor, Frigg are the gods for those days. Again no logic in naming after those Gods resulting in Tiv day= tuesday, Woden day= Wednesday, Thor day = Thursday and Frigg day= Friday.

But Hindus are the one who have Sunday to Saturday in the present order in hymns in Tamil and Sanskrit. Tiru Jnana Sambanda, , a great boy saint of Tamil Nadu, who died at the age of 16 sung in a hymn, the days in the same order. He added also Rahu and Ketu at the end as Two Snakes. Hindu legends say the shadows make eclipse and it looks like snakes devouring Sun or Moon, (The hymn is called Kolaru Tirup pathikam in Thevaaram). But he was a contemporary of Mahendra Pallavan of 600 CE.

We have earlier evidence in inscriptions and Friday (Vellik Kizamai= Venus Day) mentioned in Silappadikaram, Tamil Epic of second century CE.

Unless Hindus are familiar with these days neither Ilango nor Sambandar would have used them. And Tamils would not have used imported/borrowed stuff.

Moreover Aryadeva, who cannot be dated later than the third century CE , knew all these planetary names. If the date of Silappadikaram is correct, then Tamil reference (of Friday)  is the oldest reference.All the seven days in present order in Thevaaram.

Now let us look at the logic behind it.

Hindus placed Sun because it was the brightest object in the sky. Moon follows it in brightness. Then they placed Mars, Mercury, Jupiter, Venus and Saturn.

The conclusion is that Hindus named the days of the week in the present order and the world accepted it after seeing the reason behind it. We did not borrow it from Greeks because they followed Saturday , Jupiter day, Mars day, Sunday etc. We did not borrow it from Romans because they named four days after Norse Gods . Even in old French Sunday is Dimanche not SUN day but Day of God! Other days are after planets in Hindu order. Utter confusion in the West!

One big question may come up. Why then Hindus refereed it only a few times in the past 2000 years. The reason is in the absence of written materials, mechanical clocks, MOON was the best natural clock. So they divided month into two halves and started from New moon and Full moon. Even today Hindu calendars follow mostly, lunar calendar for all the festivals (raama Navami, krishna Ashtami, naraka Chaturdasi/Diwali, nag Panchami etc). So we used TITHI more than DAY of the planet. All the major Hindu festivals are on the Full moon (Poornima) days.

—subham–

 Tags- Days of the week, Names of Days, Hindu invention, Sambandar, Thevaram, Silappadikaram

மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள் – 2 (Post No.11,928)

PICTURE OF AMBERNATH TEMPLE (WIKIPEDIA)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,928

Date uploaded in London – –  23 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

நேற்று வெளியான முதல் பகுதியின் தொடர்ச்சி

Part 2

5.அம்பர்நாத் சிவன் கோவில்

இது மஹா தேவனுக்குரிய மிகப்  பழைய கோவில். சக ஆண்டு 982 (பொது ஆண்டு 1060) கல்வெட்டும் இதற்கு சான்று தருகிறது. மஹா சிவராத்திரியின் போது மிகப்பெரிய திருவிழா நடைபெறும்.

இது மும்பை நகரிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அருகில் ரயில் நிலையம் உண்டு.இந்தக் கோவிலில் ஒரு அதிசயம் என்னெவென்றால் கர்ப்பக்கிரகம் பூமிக்கடியில் இருக்கிறது ;20 அடிகள் இறங்கிச் செல்ல வேண்டும். இது வல்துணி (வத்வன் ) நதியின் கரையில் அமைந்திருக்கிறது. சுவாமியின் பெயர் அம்பரநாதர். அதற்கேற்ற மாதிரி சிகரத்துக்கு மேல் வானம் தெரியும். சித்தராஜா என்ற மன்னனும் அவன் மகன் மும்முனியும் இந்தக் கோவிலைக் கட்டினார்கள் . இந்த கோவிலில் உள்ள மூர்த்திக்கு அம்பரநாதர் என்றே பெயர்.

****

கொஞ்சம் மொழி ஆராய்ச்சி செய்வோம்

அம்பலம் என்றால் வெட்டவெளி. அதாவது வானம் பார்த்த இடம். சம்ஸ்க்ருதத்தில் அம்பரம் என்றால் வானம்/ ஆகாயம் . சிதம்பரம்= சிற்றம்பலம்  ஒன்றே. அதாவது அம்பலம்= அம்பரம்

அம்பலம் என்றால் மரத்துக்கு அடியில், வெட்ட வெளியில் கூடும் ஊரின் சபை. இதனால்தான் ஒரு விஷயம் வெட்டவெளிச்சத்துக்கு வந்துவிட்டால் விஷயம் அம்பலமாகிவிட்டது என்கிறோம்.

தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒரே மூலத்திலிருந்து வந்தன என்ற என் ஆராய்ச்சியை இது உறுதி செய்கிறது.

Xxxx

6.அவாச பாம்புக்கோவில்

இமயம் முதல் குமரி வரை நாகர் கோவில்கள் இருக்கின்றன. இந்துக்கள் பாம்புகளின் தேவையை நன்கு உணர்ந்தவர்கள் . பாம்புகளைக் கொன்றால் எலிகள் பெருகும். தானியத்தை அழி க்கும். இன்றும்கூட எலிகள் அழிக்கும் தானியம்தான் அதிகம் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆகையால் பாம்புகளைக் கொல்லக்கூடாது ; அப்படிக் கொன்றால் நாக தோஷத்தால் அந்தக் குடும்பத்தில் யாருக்காவது குழந்தை பிறக்காது என்ற பேச்சும் உண்டு. இதனால் மஹாராஷ்டிரர்கள் நாக பஞ்சமி விழாவை மிகப்பெரிய விழாவாக கொண்டாடுவர். கேரளத்திலும் வீட்டிலேயே பாம்புகளுக்கு ஒரு கோவில் இருக்கும்.. கார்த்திகை மாத  சுக்ல பட்ச சதுர்தசி  தினத்தில் ஆடல் பாடலுடன் பெரிய பாம்பு விழா நடக்கும் கோவில் இது எல்லோரும் கம்புகளின் நுனியில் பாம்பு உருவங்களை வைத்துக்கொண்டு ஆடுவர்.

இப்போது இந்த இடம் அலிபாக் என்ற பெயரில் இருக்கிறது. அங்குள்ள கோவிலை நாகோபா கோவில் என்று அழைக்கின்றனர்.

Xxxx

7.பாஹி சிவன் கோவில்

இது சாதாரா மாவட்டத்தில் பாடன் அருகில் உள்ளது. இது இராமலிங்க கோவில் என்று அழைக்கப்படுகிறது. விஷ்ணு பக்தர்களும் சிவ பக்தர்களும் வழிபடும் இந்தக் கோவிலில் சிவ லிங்கமும் ராமர் உருவங்களும் இருக்கின்றன. ராமர் வனவாச காலத்தில் இங்கு வந்ததாக ஐதீகம் . சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டது பெளஸ மாத அமாவாசையிலும் சித்திரை சுக்ல நவமியில் (ராம நவமி) விழாக்கள் நடைபெறும் .

8. பூலேஸ்வர் சிவன் கோவில்

புனே நகரிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இந்த அதிசயக் கோவில் கட்டப்பட்டுள்ளது . யாவத்  என்னும் இடத்திலிருந்து பத்து கிலோமீட்டர்தான்  ஆதிகாலத்தில் பஞ்ச பாண்டவர் இதைக் கட்டியதாகவும் சொல்லுவர். சிவனுக்கு அளிக்கப்படும் இனிப்புகள் மாயமாய் மறையும் கோவில் இது

மலைமேல் அமைந்துள்ள இந்தக்கோவில் 1200 ஆண்டுகளுக்கும் மேலான பழமை உடைத்து. நிறைய சிற்பங்களைக் கண்டு களிக்கலாம் . இங்குள்ள சிவலிங்கத்துக்குப் படைக்கப்படும் இனிப்புகளில் (பேடா) ஒன்றோ, இரண்டோ மறைந்துவிடுமாம். நடிகரும் பயணக் கட்டுரை எழுத்தாளருமான மிலிந்த் குணாஜி MYSTICAL MAGICAL MAHARSHTRA மிஸ்டிகல் மாஜிகல் மஹாராஷ்டிரா (அதிசயமும் அற்புதமும் நிறைந்த மஹாராஷ்டிரா ) என்ற நூலில் தனது அதிசய அனுபவத்தை எழுதியுள்ளார்.

கிருஷ்ண தேவராயர் கட்டிய இந்தக்கோவிலின் இன்னுமொரு சிறப்பு, விநாயகர் பெண் உருவத்தில் அமைந்திருப்பதாகும் கணேஸ்வரி, லம்போதரி என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

தெளலத் மங்கள் கிரி என்ற கோட்டையும் இங்கே இருக்கிறது. அருகில் பல கோவில்களும் பறவைகள் சரணாலயமும் இருக்கிறது. இங்குள்ள அபூர்வ சிற்பங்களால் இதை அரசாங்கம் பாதுகாக்கப்பட்ட சின்னம் என்று அறிவித்துள்ளது .

 WOMAN GANESH  FIGURE

9. பன்புரி நாயக்பா சிவன் கோவில்

பாடன் நகரிலிருந்து பத்துமைல் தொலைவிலுள்ள வன புரி நாயகபா

சிவன் கோவிலில் வெள்ளியிலான முக கவசம் உண்டு. அதை இரண்டு விழாக்களின்போது ஊர்வலமாக எடுத்துச் செல்லுவார்கள் சித்திரை மத பஞ்சமியிலும் ஆஸ்வீன மாத தசமியில் இதைச் செய்கின்றனர் . நாயகி பா என்பது சக்தியின் மற்றும் ஒரு வடிவம்; சிவனின் மனைவி.

ஒரு விவசாயி சிவனை வணங்கும் பக்தர். அவர் ஒரு நாள் வந்து கொண்டிருக்கையில் மலையிலிருந்து ஒரு பெரிய பாறை உருண்டு வந்து கீழே விழுந்து சிதறியது. அன்றைய தினம் கனவில் அவர்தான் சிவன் என்று கண்டார். பின்னர் அங்கே கோவில் கட்டினார்.

SNAKE TEMPLE, NAGOBA

–to be continuedபாம்பு, கோவில், பூலேஸ்வர், அம்பரேஸ்வர், இனிப்பு மறையும் 

நாஜிக்களின் சித்திரவதையால் பிறந்த புதிய மின்னல் வேகக் கணிதம்-4 (Post No.11,927)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,927

Date uploaded in London –   23 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள் – ரத்தத் துளிகள்

புதிய நெடுந்தொடர்.      

அத்தியாயம் 4 

நாஜிக்களின் சித்திரவதையால் பிறந்த புதிய மின்னல் வேகக் கணிதம்!

ச.நாகராஜன்

பகுதி 5  

உயர் குடும்பப் பெண்ணான ஆலிசுக்கும் டிராக்டன்பெர்க்கிற்கும் பரஸ்பரம் ஈர்ப்பு ஏற்பட அவர்கள் மணம் புரிந்தனர்.

தொடர்ந்து ரஷியாவைப் பற்றிய பல புத்தகங்களை எழுதியதால் டிராக்டன்பெர்க் ரஷியா பற்றி அனைத்தும் அறிந்த அறிஞர் என்ற புகழைப் பெற்றார்.

அயல் நாட்டு மொழிகளை எளிமையாகக் கற்பதற்கு அவர் ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்தார். இதனால் அயல் மொழிகளை அவர் சொல்லித் தரவே அனைவரும் அவரிடம் வர ஆரம்பித்தனர். அவர் சொல்லித் தந்த அந்த முறை இன்றளவும் ஜெர்மனியில் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்தச் சமயத்தில் தான் ஹிட்லரின் எழுச்சி வேகமாக இருந்தது. அதனால் நொந்து போன அவர் ஹிட்லரை எதிர்த்து தைரியமாகப் பேச ஆரம்பித்தார்.

ஆனால் 1934ஆம் ஆண்டு ஹிட்லர் டிராக்டன்பெர்க் மீது குறி  வைக்கவே அவர் தன் மனைவியோடு வியன்னாவிற்குத் தப்பி ஓடினார்.

அங்கு ஒரு அறிவியல் இதழை ஆரம்பித்தார்.

சமாதானத்தைப் பற்றி டிராக்டன்பெர்க் உபதேசித்து வருகையில் ஹிட்லரோ ஆஸ்திரியா மீது மின்னல் தாக்குதல் தொடுத்து அதைக் கபளீகரம் செய்தான். டிராக்டன்பெர்க்கைச் சிறிதும் பிடிக்காத ஹிட்லர் அவரைப் பிடித்துச் சிறையில் தள்ளினான. ஆனால் டிராக்டன்பெர்க்கோ தனது மனைவி சீமாட்டி ஆலிஸின் உதவியால் சிறையிலிருந்து தப்பி யூகோஸ்லேவியாவிற்கு ஓடினார். ஹிட்லரின் கெஸ்டபோ அவரைத் துரத்திப் பிடித்தது.

ஒரு நாள் நள்ளிரவில் அவர் வீட்டிற்குள் நுழைந்த கெஸ்டபோ அவரைக் கைது செய்து மிருகங்களைத் ஏற்றிச் செல்லும் வண்டியில் தூக்கிப்போட்டு ஒரு சித்திரவதை முகாமிற்கு அனுப்பியது.

கடினமான விதிமுறைகள் அவருக்கு விதிக்கப்பட்டன. அதை அவர் மீறும் போது இன்னும் அதிக சித்திரவதை செய்தனர்.

சித்திரவதை தாங்காமல் பலரும் இறக்கவே சிறையில் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.

இந்த சித்திரவதையால் தன் புத்தி பேதலிக்காமல் இருக்க வேண்டுமென்று நினைத்த டிராக்டன்பெர்க் தனக்கு மிகவும் பிடித்த கணித உலகில் மனதைச் செலுத்த ஆரம்பித்தார்.

அதனால் விளைந்தது ஒரு அற்புதம். அது தான்  டிராக்டன்பெர்க் சிஸ்டம் ஆஃப் மேத்ஸ். டிராக்டன்பெர்க் கணித முறை.

சித்திரவதை முகாமில் அடைக்கப்பட்டிருந்த டிராக்டன்பெர்க்கிடம் பேனா, பென்சில், தாள் எதுவும் இல்லை. பிரம்மாண்டமான எண்களை மனத்திரையால் பார்த்தவாறே, அவற்றைக் கூட்டும் விதத்தை அவர் கண்டுபிடித்தார். இந்த முறையில் பிழையே இல்லை. கூட்டுத் தொகை சரியாக இருந்தது.

ஆண்டுகள் செல்லச் செல்ல கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அனைத்திற்கும் மிக மிக எளிய வழிகளைக் கண்டு பிடித்தார். பேப்பரே அவரிடம் இல்லாத காரணத்தினால் எப்போதேனும் கிடைக்கும் சிறிய துண்டு காகிதத்தில் அவற்றை எப்படிச் செய்வது என்பதை மட்டும் எழுதி வைத்துக் கொண்டார்.

இதனால் இன்றும் கூட டிராக்டன்பெர்க் கணித வழி முறையைக் கடைப்பிடிப்பவர்கள் விடைகளை மட்டும் பேப்பரில் எழுதும் பழக்கம் நீடித்திருக்கிறது.

1944ஆம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகை வந்தது. ஏழு ஆண்டுகள் கழிந்த நிலையில் டிராக்டன்பெர்க்கிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு வெகு சீக்கிரமே அது நிறைவேற்றப்படும் என்பதும் தெரிய வந்தது. தனது புதுவழிமுறைகளை முற்றிலுமாகக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற அடங்காத ஆர்வத்தினால் கடுமையாக உழைத்து  அதைக் கண்டுபிடித்ததோடு அதை சக கைதி ஒருவருக்கும் சொல்லித் தந்தார் அவர். 

ஒருவேளை தான் இறந்து விட்டாலும் தான் கண்டுபிடித்த கணித முறை உலகெங்கும்  பரவி இருக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இதைச் செய்தார்.

அவரது அழகிய மனைவி ஆலிஸ் அவர் இருந்த சித்திரவதை முகாம் அருகிலேயே வசித்து வந்தார். டிராக்டன்பெர்க் கொடூரமான முறையில் சாக இருப்பதை அறிந்த அவர்  தன்னிடம் இருந்த அனைத்து நகைகளையும் கழட்டி அவற்றை விற்றார். கையில் இருந்த பணத்தையும் அத்துடன் சேர்த்து கணிசமாகச் சேர்ந்த தொகையை சிறை மேற்பார்வையாளர்களிடம் லஞ்சமாக அளித்தார். மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்பாக டிராக்டன்பெர்க்கை வேறொரு முகாமுக்கு மாற்ற அவர் ஏற்பாடு செய்தார்.

டிராக்டன்பெர்க்கை லெய்ப்ஜிக் என்ற நகருக்கு மாற்ற ஏற்பாடுகள் நடந்தன,

̀                          *****             தொடரும்

108 Famous Hindu Shrines in Maharashtra- Part 1(Post No.11,926)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,926

Date uploaded in London – –  22 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Maharshtra, the western state of India, is full of Hindu shrines. Like Tamil Nadu, many places are associated with famous saints of that state.  Great saints Nivrutti Dnyaneshwar, Sopana , Muktabhai Eknath ,Tukaram,Namdev, Gora Kumbhar, Samarth Ramdas, Chokhamela, Sant Janabai, Sant Sakhubai and many others have walked the length and breadth of the land singing the glory of Vittal of Pandharpur, sanctified hundreds of places. There are famous temples like Jyotirlinga shrines, Ashta Vinayaka temples and Mahalaskhmi Temples. Of late Shirdi of Sai Baba has also become a crowd puller. There are more than 108 towns with one or two temples in each place.

Let us have the darshan of at least 108 temples in alphabetical order. Most of the temples have become important due to three factors: 1.They are at the junction of holy rivers, 2.They are at the top of hills with natural beauty and 3. They are associated with great saints both ancient and modern.

1.Adivra (aadiware)  Maha Kali Temple

A well known temple dedicated to Maha Kali is at Adiware

Mahakali Temple is situated at Adiware in Rajapur Taluka of Maharashtra. It is one of the most popular and revered temple in Adiware. The temple is a home for three goddesses viz. Goddess Maha lakshmi, Goddess Mahakali and Goddess Maha saraswati. A well is seen in the temple complex which has a different arrangement to draw the water out of it. A bark of a tree has tied on a horizontal bamboo bar which acts as a pulley. At the other end of this, another vertical bamboo with a vessel is seen which is long enough to reach the water level.

An image of Garuda faces the sanctum. Garuda mandap has square pillars and foliated arches of wood which is a typical characteristic of Maratha temples Another stone mandap, on a raised platform, has an idol of Lord Ganesh, which faces the sanctum. The main sanctum has three shrines facing west. The center houses an idol of Goddess Mahalakshmi which is flanked by the idols of Goddess Mahakali and Mahasaraswati. The black stone idol of Mahalakshmi is 3 ft tall The Shri Yantra is carved on one of the walls of the temple. The sanctum is designed in such a manner that once in a year, the setting rays of the sun falls on the face of Goddess Mahalakshmi for three days. Above the main sanctum is a shrine which houses Shiva ling and a Nandi. Recently many other shrines are added. Also located in the courtyard is the temple tank Manikarnika Kund.

Xxxx

2.Agasi Bhavanishankara Temple

This town is at the mouth of Vaitarna and Surya rivers. A fair is held on Kartika Krishna Ekadasi at Bhavani Shankara temple here. Bathing at this spot is belived to cure skin diseases.

A Mandap is also there. Sixteen wooden pillars support the sabha mandap of this temple and only a few are decorated with carvings. Shankraji Keshav Phadke built this temple in Saka 1613 (1691 AD) and the successor of Baji Rao I renovated this temple at a later date. A relation of the Chief of Miraj, built a holy bathing reservoir in 1691, where he was cured by the water.

There is a famous Jain temple also nearby.

xxxx

3.Akhalkop Dattatreya Temple

A temple of Dattatreya, at this place is constructed with models of his foot prints. It is considered the birth place of the saint. There is also a mask which is carried in procession in a palanquin at festivals. Fairs are held on Margashirsha full moon and on Asvina Krishna Dwadasi and a very special one on Magha Krishna Panchami.

Bombay Gazetteer adds the following:

Akhalkop is a small town of 2910 people four miles north-east of Ashta and eleven miles west of Tasgaon. The town lies on the right bank of the Krishna at a point where the river takes a bend from west to south.

Akhalkop has two small temples of Dattatraya and Mhasoba both in high local repute and the scenes of large fairs. The Dattatraya temple (6′ 6″ x 4′ 9′ X 9′) is built on rising ground in a grove of trees chiefly neem and consists of a small cut-stone shrine facing east and containing the footprints of Dattatraya. The shrine was first’ built by the Deshpandyas of Akhalkop and rebuilt about 1860 by Krishnarav Trimbak Bapat then mamlatdar of Valva. A flight of steps (12’x6′) built from alms obtained by devotees leads up to the entrance gate.

On three occasions the mask of the god is carried in a palanquin with the honours of the umbrella, peacock fans, maces, and flywhisks as symbols of sovereignty.

The other temple is of Mhasoba a spirit believed to be an attendant on Ganpati, The temple is a domed stone shrine ten feet long by eight feet broad and including the dome about twelve feet high. According to the Krishna-mahatmya the temple is said to have originally belonged to Ganpati and this seems probable as separate temples of Mhasoba are very rare. Round the shrine are stones representing the attendants of Ganpati and inside a stone for Mhasoba.

Xxx

4.Alandi Dnyneswar (Jnaneswar) Temple

This is the site of tomb and temple of Dnyyanesvar, Marathi poet and saint. A large fair is held onKartika Krishna Ekadasi and pilgrimages are made on every Krishnapaksha Ekadasi in the year . A tree called Ajaana vrksha in the temple court is said to have sprung from his staff, and he meditated under this tree.

Bombay Gazetteer adds more information:

Alandi, on the Poona-Nasik road on the left bank of the Indrayani about twelve miles south of Khed, is a small municipal town.

Alandi is noted as containing the tomb and temple of the great Brahman saint Dnyaneshvar (1271-1300) where a large yearly fair attended by about 50,000 pilgrims is held in November-December.

The mandap here is large and arched and built of stone. It is painted on the inside with scenes and figures from Hindu mythology, and on the outside has the same scenes and figures sculptured in relief.

A part of Dnyanoba’s temple-tomb is said to have been built by the great Vani saint Tukaram who was a great admirer of Dnyanoba. Over Dnyanoba’s tomb is his image three feet high with a silver face and crown and dressed in red clothes. Behind the image are figures of Vithoba and Rakhmai.

Alandi has six other temples of Bahiroba, Malappa, Maruti, Pundlik, Ram, and Vishnu. Pundlik’s temple is in the river bed. Another object of worship is a masonry wall which is said to have served Dnyaneshvar as a horse.

To be continued…………………….

 Tags- Maharashtra, Shrines, Alandi, Akhalkop, Agahasi, Adiware, Mahakali, Temple

மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள் – 1 (Post No.11,925)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,925

Date uploaded in London – –  22 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

தமிழ்நாட்டில் 63 நாயன்மர்களும் , 12 ஆழ்வார்களும், அருணகிரி நாதரும், மாணிக்கவாசகரும் பாடிப் பரவிய 400 தலங்கள் , புனிதக் கோவில்கள் நாள்தோறும்  பல்லாயிரக் கணக்கான மக்களைக் கவர்ந்து இழுக்கிறது. இது போல ஆந்திரத்தில் அன்னமாசார்யா , கர்நாடகத்தில் புரந்தரதாஸர் பாடிப் போற்றிய பல தலங்கள் உள . நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள மஹாராஷ்டிர மாநிலம் எந்த விதத்திலும் பக்தி விஷயத்தில் பின்தங்கவில்லை . ஏகநாத், துக்காராம் , நாமதேவ் , சமர்த்த ராமதாஸ், நிவ்ருத்தி, ஞானதேவ் , சோபான , முக்தாபாய் போன்ற மஹான்கள் நடந்த இடமெல்லாம், சென்ற கோவில் எல்லாம், புனிதம் பெற்று, இன்றும் லட்சக்கணக்கானோரை ஈர்த்து வருகின்றன . சில ஜோதிர்லிங்க தலங்களோடு , பண்டரீபுரம், ஷீரடி , மும்பை கோவில்கள் நாளுக்கு நாள் பிரசித்தம் அடைந்து வருகின்றன

கோவில்கள் மூன்று விதங்களில் புனிதம் பெறுகின்றன . முதலாவது மலை முகடுகளில் இருக்கும். இரண்டாவது ஏதேனும் 2 அல்லது 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக்கும். மூன்றாவது சாது, சந்யாசிகள் , மகான்கள் பிறந்த அல்லது வசித்த அல்லது இறந்த இடத்தில் இருக்கும்

இனி ஒவ்வொரு கோவிலாக தரிசிப்போம்; வாருங்கள்

1. ஆடிவரே மஹாகாளி கோவில்

எங்கே உள்ளது  ?

ஆடிவரே (Aadiware) மஹாகாளி கோவில் ரத்னகிரியிலிருந்து 39 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அருகிலுள்ள ரயில் நிலையம் ராஜபுர் (28 கிலோமீட்டர் தூரம்)

வெள்ளிக்கிழமை, பெளர்ணமி தினங்கள் ஆஸ்வீன மாத நவராத்ரி ஆகிய காலங்களில் வீதி உலாவும் , சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும்.

ஆடிவரே கோவில் ராஜ்பூர் தாலுகாவில் இருக்கிறது .மஹா காளியுடன் லெட்சுமி, ஸரஸ்வதி சிலைகளும் இருக்கின்றன இங்கு பழங்கால முறையில் இயக்கப்படும் கிணறு உள்ளது. மூங்கில் கம்பு இணைப்புகள் உள்ள கிணறு இது.

மகாலெட்சுமி நடுவிலும் இரு புறங்களில் காளி , ஸரஸ்வதி உருவங்களும் உள்ளன. அவைகளை நோக்கி கருட மண்டபம், கணேஷ் மண்டபங்கள் இருக்கின்றன.லட்சுமியின் பின்னால் ஸ்ரீ சக்கரம் வரையப்பட்டுள்ளது

லெட்சுமி சிலை 3 அடி உயரமானது ; கருங்கல்லில் ஆனது; ஆண்டுதோறும் மூன்று நாட்களுக்கு லக்ஷ்மியின் முகத்தில் சூரிய ஒளி விழும்படி கோவில் கட்டப்பட்டுள்ளது .சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலில் பின்னர் பல சந்நிதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்காலத்தில் காளி கோவில் என்ற பெயரே நிலவியது. இப்போது லெட்சுமிக்கு மேலே உள்ள கோவிலில் சிவலிங்கம், நந்தி உள்ளன. பிற சந்நிதிகளில் நவக்கிரகம், வெங்கடேசன், காத்தியாயனி , விட்டல் -ரகுமாயி மஹிஷாஸுரமர்தனி, துஜா பவானி, விஷ்ணு ஆகிய உருவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

XXXX

2.அகாசி பவானி சங்கரர் கோவில்

வைதரண  நதி, சூர்யா நதி முகத்துவாரத்தில் அகாசி (Aghaasi)இருக்கிறது. இங்குள்ள பவனி சங்கரர் கோவிலில் கார்த்திகை கிருஷ்ண பட்ச ஏகாதசியில் விழா நடக்கும். இங்குள்ள குளத்தில் குளித்தால் தோல் நோய்கள் நீங்கி விடும் என்ற நம்பிக்கை உள்ளது. 400 ஆண்டுகளுக்கும் மேலான பழமை உடைய கோவில் இது. 16 மரத்தூண்கள் தாங்கி நிற்கும் சபா மண்டபம் உள்ளது . அருகில் புகழ்பெற்ற சமண மத தீர்த்தங்கரர் கோவிலும் இருக்கிறது 

XXX

3.அகால் கோப் தத்தாத்ரேயர் கோவில்

இது ஒரு சிறிய ஊர் . தஸ்காவ்ன் என்னும் ஊரிலிருந்து 11 மைல் தொலைவிலும் அஷ்ட என்னும் இடத்திருந்து 4 மைல் தொலைவிலும் கிருஷ்ணா நதிக்கரையில் அகால் கோப் (Akhaalkop) அமைந்துள்ளது. இங்கு  தத்தாத்ரேயர் பாதச் சுவடுகள் இருக்கின்றன. மார்கழி மாத பெளர்ணமி , ஆஸ்வீன கிருஷ்ண பட்ச துவாதசி , மாசி மாத கிருஷ்ண பட்ச பஞ்சமியில் பெரிய திருவிழாக்கள் நடக்கின்றன . அச்சமயத்தில் முகம் உள்ள உருவத்தை பல்லக்கில் கொண்டுசெல்லுவார்கள். சாமரம், மயில் தோகை விசிறி , குடை ஆகிய மரியாதைகளுடன் ஊர்வலம் செல்லும்.

XXX

4.ஆலந்தி நகரில் ஞானேஸ்வரர் சமாதி, கோவில்

ஞானேஸ்வர் 700 ஆண்டுகளுக்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் வாழ்ந்தார். திருஞான சம்பந்தரைப் போலவே இளம் வயதிலேயே பல அற்புதங்களை செய்தார். அவரைப் போலவே இளம் வயதிலேயே முக்தியும் அடைந்தார். அவர் முக்தி அடைந்த ஆலந்தி(Aalndi) என்னும் ஊர் புனே நகருக்கு அருகில் உள்ளது.

ஆலந்தியில் உள்ள ஞானேஸ்வர் சமாதி அதற்கு முன்னரே அங்கிருந்த சித்தேஸ்வரர் கோவிலில் இருக்கிறது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த சமாதி மீதும் கோவில் எழுப்பப்பட்டது.

இந்த ஆலந்தியில் ஒரு அபூர்வ மரம் இருக்கிறது. அதை அஜான விருட்சம் என்று அழைப்பர். ஞானேஸ்வரருக்கு ஞானம் தந்த மரம் இது.

மரத்தின் தாவரவியல் பெயர் Ehretia laevis (Boraginaceae or borage family.) இதைத் தமிழில் குரு விச்சை மரம் என்று அழைப்பர். கடந்த சில நூற்றாண்டுகளாக ஆலந்தியில் ஒரு விழா கொண்டாடப்படுகிறது. அங்குள்ள ஞானேஸ்வரரின் பாதுகைகளை பண்டரீபுரம் பாண்டுரங்கன் கோவிலுக்குப் பல்லக்கில் கொண்டு செல்லுவார்கள். இது 21 நாட்களுக்கு நடைபெறும்..

to be continued…………………………

 tags- மகாராஷ்டிரம் , புனித தலங்கள் , ஆலந்தி , அகாசி , அகால் கோப் , ஆடிவரே , மகாகாளி , தத்தாத்ரேயர்

நாஜிக்களின் சித்திரவதையால் பிறந்த புதிய மின்னல் வேகக் கணிதம்! (Post.11,924)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,924

Date uploaded in London –   22 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள் – ரத்தத் துளிகள்

புதிய நெடுந்தொடர்.     

அத்தியாயம் 3

நாஜிக்களின் சித்திரவதையால் பிறந்த புதிய மின்னல் வேகக் கணிதம்!

ச.நாகராஜன்

பகுதி 4 

 “கணிதம் கலைகளின் அரசன்; விஞ்ஞானத்தின் ராணி!”

–    பிரபலமான பொன்மொழி

இரண்டாம் உலக போரில் ஹிட்லரால் கொடுமைப்படுத்தப்பட்டவர்களுள் முக்கியமாகவும் முதலாவதாகவும் அமைந்தவர்கள் யூதர்கள். இதற்காக மற்றவர்களை அவன் சும்மா விட்டு விடவில்லை.

தன்னை ஆதரிக்காத, தன்னை மதிக்காத, தனக்குக் கீழ்ப்படியாத யாராக இருந்தாலும் சரி அவர்கள் கதி அதோ கதி தான்.

நோபல் பரிசு பெற்ற மா மேதைகளும், கணித விற்பன்னர்களும், பொறியியில் வல்லுநர்களும், ஓவியர்களும், எழுத்தாளர்களும் இன்ன பிற துறையில் இருந்த ஏராளமானோர் அவனது கொள்கை பிடிக்காத காரணத்தினால் துணிந்து எதிர்த்தனர்.

ஐயகோ! அவர்களின் கதி பரிதாபகரமானது.

இந்த பரிதாபகரமான நிலையில் தான் சில நல்ல விஷயங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலை நாட்டுப் பள்ளிக் கூடத்தில் ஆச்சரியகரமான சம்பவம் ஒன்று நடந்தது.

அது ஒரு கணித வகுப்பு. கணித ஆசிரியர் ஒருவர் ஒன்பதே வயதான ஒரு சிறுவனிடம் மூன்று  அடி நீளத்திற்குப் பல எண்களை எழுதி, ‘இதன் கூட்டுத் தொகை’ என்ன என்று விளையாட்டாகக் கேட்டார்.

ஆனால் அந்தச் சிறுவனோ தயங்காமல் அந்த எண்களை ஒரு முறை பார்த்து விட்டு உடனே அதன் கூட்டுத் தொகையைக் கூறினான். ஆசிரியர் அசந்து போனார். இன்னொரு சிறுமியைப் பார்த்து “735352314’ என்ற எண்ணை 11ஆல் பெருக்கினால் வரும் தொகை என்ன? என்று கேட்டார்.

அந்தச் சிறுமியோ சற்றும் பதட்டப்படாமல் அவர் கூறி முடித்த அடுத்த கணமே “8088875454” என்ற சரியான விடையைக் கூறினாள். ஒரே விநாடியில் விடை~

குட்டிப்பையன் ஒருவனை அவர், “ 5132437201 என்ற எண்ணை 452736502785 என்ற எண்ணால் பெருக்கி வரும் விடையைச் சொல்ல உனக்கு எவ்வளவு நேரம் ஆகும்?” என்று கேட்டார்.

அவனோ அடுத்த விநாடியே”23236416669144374104785” என்ற சரியான விடையைக் கூறி அனைவரையும் அசத்தினான்.

எப்படி இது? மந்திரமா, மாயமா?

ஒன்றுமில்லை.

 “டிராக்டன்பெர்க் சிஸ்டம் ஆஃப் மேத்ஸ்” என்ற புதிய கணித முறைப்படி கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய கணக்குகளை மின்னல் வேகத்தில் போட்டு சில விநாடிகளிலேயே பதிலை கூறி விடலாம்.

அதைத் தான் இந்தக் குட்டிப் பையன்களும் பெண்களும் செய்து காண்பித்தனர்.

இந்த மின்னல் வேகக் கணித முறையைக் கண்டுபிடித்தவர் ஜாக்கோ டிராக்டன்பெர்க் (Jakow Trachtenberg) என்னும் கணித மேதை.

1888ஆம் ஆண்டு ரஷிய நாட்டில் ஒடிஸா என்ற இடத்தில் பிறந்தவர் ஜாக்கோ டிராக்டன்பெர்க். ஹிட்லரின் சித்திரவதை முகாமில் அரசியல் கைதியாகச் சொல்லொணா சித்திரவதையை அனுபவிக்கும் போது இந்தக் கணித முறையை அவர் கண்டு பிடித்தார்.

இளம் வயதிலேயே அபார மேதையாக விளங்கினார் அவர். செயிண்ட் பீடர்ஸ்பர்க்கில்  இருபதாம் வயதிலேயே எஞ்சினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற்று துறைமுகத்தில் தலைமைப் பொறியாளரானார்.

அது ஜார் மன்னனின் அரசாட்சிக் காலம். 1000 பெருக்கு அதிகாரியாக விளங்கி  அபாரமான ஆற்றலுடன் திறம்பட ஷிப் யார்டை அவர் நிர்வகித்தார்.

 சண்டை என்றாலே அவருக்குப் பிடிக்காது.  முதல் உலகப் போரின் போது காயம் பட்ட படை வீரர்களுக்கு சிகிச்சையை அளித்து அவர் ஜார் மன்னனின் விசேஷ பாராட்டைப் பெற்றார்.

1918இல் எழுந்த ரஷிய புரட்சியால் அரச குடும்பத்தினர் அனைவரும் கொலை செய்யப்பட்டனர். பிரமாதமாக கடற்படையை அமைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த டிராக்டன்பெர்க்கின் கனவு சிதைந்தது.

புரட்சியாளர்கள் ரஷியா முழுவதும் பரவி மன்னராட்சியை எதிர்த்த போது அவரோ சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும் என்று உபதேசம் செய்தார். இது  யாருக்கும் பிடிக்கவில்லை.

இதனால் அவரது உயிருக்கே ஆபத்து வரப் போகிறது என்ற நிலையை அறிந்த அவர் விவசாயி போல வேஷம் போட்டு பகல் நேரங்களில் ஒளிந்திருந்து இரவு நேரங்களில் மட்டும் யாரும் அறியாமல் நடந்து ஜெர்மனிக்குத் தப்பி ஓடினார்.

 அழகிய விசாலமான வீதிகளும், அற்புதமான இதமான குளிர்ந்த காற்றும் அவருக்கு தனது சொந்த ஊரான பீட்டர்ஸ்பர்க்கை நினைவு படுத்தின.

 ஒரு சிறிய அறையில் தனது புதிய வாழ்க்கையை ஆரம்பித்தார். அங்கு புத்திசாலிகளான இளைஞர்களை அழைத்து அவர்களுடன் நட்பாகப் பழகி அவர்களுக்குத் தலைவராக ஆனார்.  ஒரு பத்திரிகையையும் ஆரம்பித்து ஜெர்மனி சமாதானத்தை வளர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திக் கட்டுரைகள் எழுதலானார்.

இந்த நிலையில் உயர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை அவர் சந்தித்தார்.

அவள் பெயர் ஆலிஸ்.

****

                           தொடரும்