Post No. 12,040
Date uploaded in London – – 24 May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
மலேசியாவில் கண்ணாடியிலான இ நதுக் கோவில் இருப்பது பற்றி முன்னர் கட்டுரை எழுதினேன். இப்பொழுது மஹாராஷ்டிராவிலுள்ள கண்ணாடிக் கோவிலை தரிசிப்போம் .
பகுதி 19 Part 19
மஹாராஷ்டிரத்தில் நான்கு சக்திக் கேந்திரங்கள் இருந்த போதிலும் அவற்றை ஏன் சாடே தீன் (மூன்றரை) சக்தி தலங்கள் என்று அழைக்கிறார்கள் என்று முன்னரே கண்டோம். அவை கோலாப்பூர் மகாலெட்சுமி, துல்ஜாபூர் பவானி , வாணி சப்த ஸ்ருங்கி (ஏழுமலை) தேவி, மாஹூர் ரேணுகா தேவி கோவில்கள் என்பதையும் அறிவீர்கள். இது தவிர தற்காலத்தில் புகழ்பெற்ற மும்பை மஹாலெட்சுமியையும் தரிசித்தோம்.
89. ரேணுகா தேவி கண்ணாடிக்கோவில்
விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் பரசுராமன் அவதாரம் ஒன்று. அவருடைய தாயார் ரேணுகா தேவி. அவருக்கு நாடு முழுதும் பல கோவில்கள் உண்டு, சனி பகவானுக்கு கோவில் அமைந்த சனிஷிங்னாபூர் அருகில் அமைந்தது இந்தக் கோவில். சோணை என்னும் கிராமத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இதன் தூண்களும் சுவர்களும் கண்ணாடி வேலைப்பாடுகளுடன் அமைந்ததால் ஒளி பிரகாசிக்கிறது. ராஜஸ்தானிலிருந்து வந்த விசேஷ சிற்பிகள் இந்தக் கோவிலைக் கட்டினர் .
சோணை என்பது ஸ்வர்ணம்/ தங்கம் என்பதன் மருவு.. மச்சேந்திரநாத்ஜி ஒரு தங்கக்கட்டியை இந்தக் கிராமத்தில் போட்டதால் சோணை/சொர்ணம் என்ற பெயர் வந்ததாம் .
90.கொதிக்கும் ஊற்று நிறைந்த அதிசய வஜ்ரேஸ்வரி கோவில்
இமயமலையில் பனிக்கட்டிகளுக்கு இடையே கொதிக்கும் தண்ணீர் உள்ள ஊற்றுகளை இமய மலை பற்றிய அதிசயங்கள் கட்டுரையில் தந்தேன். அதே போல இந்த மாநிலத்திலும் எரிமலைப் பாறைகள் நிறைந்த இடத்தில் வஜ்ரேச்வரி கோவில் இருக்கிறது ஊரின் பெயரும் வஜ்ரேஸ்வரிதான் . மும்பை நகரிலிருந்து 75 கிலோமீட்டர்; குறுகிய பூக்கடைத் தெருக்கள் வழியே சென்றால் கோவிலை அடையலாம் . மந்தாகினி மலையில் எரிமலைப் பாறைகளுக்கு இடையே கோவில் இருக்கிறது . 1739-ம் ஆண்டு சிமாஜி அப்பாஜி என்பவர் போர்ச்சுக்கீசியரை த் தாக்கி விரட்டினார். அவர் வழிபட்டுச் சென்று வெற்றிவாகை சூடக் காரணமானவள் இந்த தேவிதான் என்று அறிவிக்கும் பலகையும் எல்லோரையும் வரவேற்கும்.
மலையில் கடினமான பாதையில் ஏறி தேவியை தரிசிக்க வேண்டும். இன்னும் சற்று ஏறிச்சென்றால் பல மைல்கள் பரவியுள்ள பூமியைக் கண்டு களிக்கலாம். கோவிலிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் அக்லொலி என்னும் இடத்தில்தான் 7 வெந்நீர் ஊற்றுகள் இருக்கின்றன.. இதில் குளித்தால் நோய்கள் நீங்கும். மிதமான சூடு; அதற்கும் பின்னால் தான்ஸா நதி ஓடுகிறது . சித்திரை மாதத்தில் பெரிய விழா நடக்கும்..
91.கணேசபுரி கோவில்
வஜ்ரேஸ்வரி கோவிலில் இருந்து 2 கி.மீ தொலைவில் கணேஷ் புரி என்னும் ஊரில் பல கோவில்களைத் தரிசிக்கலாம். 1961ம் ஆண்டில் இங்கு நித்யானந்தா என்பவர் சமாதி அடைந்தார். அவருடைய சமாதியையும் பார்க்கலாம். கோவில் சலவைக் கற்கள் மற்றும் கருங் கற்கள் வைத்துக் கட்டப்பட்டுள்ளது . கோவிலுக்கு அருகில் மூன்று வெந்நீர் ஊற்றுகள் இருக்கின்றன.
மழை யிலில்லாத நாட்களில் செல்லக்கூடிய அக்கினி குண்ட வெந்நீர் ஊற்றில் சோறு சமைக்கலாம் . விரார் என்னுமிடத்திலிருந்து 34 கிமீ. தான்.கொதிக்கும் சூடுள்ள வெந்நீர் ஊற்றுக்களில் அரிசிக் கலயத்தை வைத்தால் சோறு ஆகிவிடும். இலவச சமையல் !!
92. சத்புதா மனுதேவி கோவில் ; இருப்பிடம் அட் ஹாவ்ன் ; இது ஜல்காவ்ன் மக்களுக்குக் குல தெய்வம்
93. பார்வதி மலை கோவில், புனே. 108 படிகள் ஏறிச்சென்றால் குன்றில் அமைந்த குமரியைக் கண்டு வணங்கலாம்
94. மாதா மந்திர் , கொறடி , நாகபுரி ஜகதாம்பா அம்மனின் பழைய கோவில்
95. சீதளாதேவி கோவில், மாஹிம் , மும்பை
96. ஏகவீரா தேவி கோவில், லோனாவாலா
ரேணுகா தேவியின் மறு அவதாரம் எனக் கருதப்படுகிறாள் ஏகவீரா தேவி.
கார்லா குகைகள் அருகில் உள்ள கோவில். இந்த தேவி பாண்டவர்களுக்கு ஒரு சோதனை வைத்தாளாம் . ஒரே நாளைக்குள் கோவில் கட்ட முடியுமா என்று. அவர்கள் அப்படி ஒரே நாளில் கோவில் கட்டிக் காட்டியதால் அஞ்ஞாத வாச காலத்தில் உங்கள் எவரையும் துரியோனாதி துஷ்டர்கள் காணாதபடி உங்களுக்கு சக்தி அளிக்கிறேன் என்றாள் ஏகவீரா தேவி.
97.அம்பாதேவி கோவில், அமராவதி
நாகபுரியிலிருந்து 155 கி.மீ. அமராவதி நகரின் நடுவில் அமைந்தது. விதர்பா பிரதேசத்தின் புகழ்பெற்ற கோவில். ருக்மிணி, ஒரு அம்பாதேவி கோவிலுக்கு பிராத்தனை செய்யவந்த போதுதான் , கிருஷ்ணன் அவளைக் கடத்திக் காதல் கல்யாணம் கட்டினான் என்பது குறிப்பிடத்தக்கது .
98. தக்காரி
கமலா பைரி என்பவளுக்கான கோவில் இது.
இந்தக் குகைக் கோவிலில் மஹா சிவராத்திரியைத் தொடர்ந்து 3 நாட்களுக்கு விழா நடைபெறும் .பல்லக்கில் தேவி பவனி வருவாள் ; குகையின் ஒரு பகுதியை அடைக்கும்படி கோவில் கட்டப்பட்டுள்ளது . குகைக்குச் செல்ல கால் மைல் உயரே செல்ல வேண்டும்.
99.ரூப நாராயணன் கோவில்
இந்த விஷ்ணு கோவில்; இருக்கும் ஊரின் பெயர் திவேக்கர்.
மும்பை நகரிலிருந்து 165 கி.மீ தொலைவில் ரூப நாராயணன் கோவில் இருக்கிறது. பழைய கோவில் சிதிலம் அடைந்த இடத்தில் மஹாராஷ்டிரா சுற்றுலா வளர்ச்சி நிறுவனம் கட்டிய புதிய கோவில் இது. இதற்கு முன்னர் இருந்த கோவிலை போர்ச்சுகீசியர்கள் சிதைத்து ,சிலையை கடலில் தூக்கி எறியச் சென்றனர் . அப்போது அவர்களுடைய கப்பல் விபத்துக்குள்ளாகி பிற்காலத்தில் சிலை மட்டும் கரை ஓதுங்கியது இபோதைய கோவில் சிவப்பு நிறக் கற்களால் கட்டப்பட்டிருக்கிறது . இந்த இடம் அருமையான கடற்கரைக்கு பெயர் பெற்ற இடம். ஐஞ்சீரா தீவுக்கும் செல்லலாம். 20 கிலோமீட்டர் தொலைவில் ஹரிஹரேஸ்வர் கோயில் மற்றும் கடற்கரையும் இருக்கிறது
xxxxxxx
மஹாராஷ்டிரத்தின் புகழ்மிகு நரசிம்மர் கோவில்கள்
விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்மருக்கும் இம்மாநிலத்தில் பல கோவில்கள் உள்ளன . அவை பின்வருமாறு :
1.ஜ்வாலா நரசிம்மர் கோவில் ,கோலே நரசிம்மபூர் , சாங்லி மாவட்டம்
2.உக்ர நரசிம்மர் கோவில், ஹோலி, நான்டெட்
3.லட்சுமி நரசிம்மர் கோவில், புனே
4.லட்சுமி நரசிம்மர் கோவில், ரஞ்சனி , புனே மாவட்டம்
5.நரசிம்மர் கோவில், தாவதே , புனே மாவட்டம்
6. நீர நரசிம்மர் கோவில், புனே மாவட்டம்
7. நிட்டூர் தாலுகா நரசிம்மர் கோவில், சந்த் கட் , இது பாண்ட வர்களால் கட்டப்பட்டதாக ஐதீகம்
8.போகாமி நரசிம்மர் கோவில், பர்பணி மாவட்டம்
9.சங்கவடே நரசிம்மர் கோவில், கோலாப்பூர் மாவட்டம்
10.லட்சுமி நரசிம்மர் கோவில், தோம் , சாதாரா மாவட்டம்
xxxxxx
100. ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் (श्री लक्ष्मी नृसिंह देवस्थान)
புனே மாவட்டத்தில் பீமா நதியும் நீரா நதியும் சங்கமம் ஆகும் இடத்தில் இந்தக் கோவில் அமைந்து இருக்கிறது . பல புகழ்பெற்ற குடும்பங்களுக்கு இந்த நரசிம்மர் குல தெய்வம்; அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் தேவேந்திர பட்நாவிஸ் குடும்பம் . அவர் முன்னாளைய முதலமைச்சர் தற்போது துணை முதலமைச்சர் . 1527ல் கட்டப்பட்ட இக்கோவில் மீண்டும் திருப்பணி செய்யப்பட்டு 1787ல் முழு வடிவம் பெற்றது
தொடரும் …….
tags – கண்ணாடி கோவில், 108 மஹாராஷ்டிர, புனித தலங்கள், part19 ,லட்சுமி நரசிம்மர், ரேணுகா தேவி, ரூப நாராயணன்