
Post No. 12,062
Date uploaded in London – – 30 May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
ஜூன் 2023 நற்சிந்தனை காலண்டர்
பண்டிகை நாட்கள் – ஜூன் 2 வைகாசி விசாகம்; 21- சர்வதேச யோகா தினம்; 29- பக்ரீத்
அமாவாசை – 17; பெளர்ணமி – 3; ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் – 13, 29
சுப முஹூர்த்த நாட்கள் – 5,8,9,28
Xxx
சென்ற மே மாத காலண்டரில் 31 காந்திஜி பொன்மொழிகளைக் கண்டோம்.இதோ மேலும் 30 பொன்மொழிகள் .
ஜூன் 1 வியாழக்கிழமை
125 ஆண்டுகள் வாழ ஆசை
125 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன் என்று நான் பேசியது வெற்றுப் பேச்சல்ல; சிந்தித்த பின்னரே சொன்னேன். ஈஸா வாசியோபநிஷத்தின் மூன்றாவது மந்திரத்தில் 100 ஆண்டுகள் வாழ மனிதன் ஆசைப்பட்ட வேண்டும் என்று வருகிறது. ஒரு வியாக்கியானத்தில் 100 என்பது உண்மையையில் 125 ஆண்டு என்றுள்ளது.
.xxx
ஜூன் 2 வெள்ளி க்கிழமை
யக்ஞம் என்றால் என்ன ?
எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் மற்றவர் நலனை உத்தேசித்து செய்யும் எல்லாப்பணிகளும் யக்ஞம் எனப்படும்.அது இக, பர நலன் ஆக இருக்கலாம். சொல், செயல், சிந்தனையில் செய்யும் எல்லா வேலைகளும் இதில் அடக்கம்; அது மட்டுமல்ல; மனிதர் நலன் மட்டுமன்று; எல்லா உயிரினங்களையும் பற்றியது இது.
Xxx
இதனால்தான் பகவத் கீதையும் சொல்கிறது : யக்ஞம் செய்யாமல் சாப்பிடுபவன் திருட்டு உணவைச் சாப்பிடுவதாகும் என்று.
xxx
ஜூன் 4 ஞாயிற்று க்கிழமை
இன்று நாம் பார்ப்பது உண்மையான இந்து மதமல்ல .இது கேலிக்கூத்து ஆகும். அதனாலேதான் நான் வக்காலத்து வாங்க வேண்டி வருகிறது ; இல்லாவிடில் அதுவே தன்னை விளம்பரப்படுத்தும். .
Xxxx
ஜூன் 5 திங்கட் கிழமை
நம்முடைய அற்புதமான கண்டுபிடிப்புகள்
பொருட்கள் விஷயத்தில் மேலை நாடுகள் அற்புதமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தது போல இந்து மதம் அதைவிட அற்புதமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து இருக்கிறது. இது சமயம், ஆன்மா சம்பந்தப்பட்ட கண்டுபிடிப்பு. ஆனால் அதை நாம் கண்டுகொள்ளவில்லை மேலை நாட்டு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் நம் கண்களைக் கூசச் செய்துவிட்டது
Xxx
ஜூன் 6 செவ்வாய்க் கிழமை
இன்னொரு விஷயத்தைச் சொல்ல நான் மறந்துவிட்டேன்.40 ஆண்டுகளுக்கு முன்னரே மாக்ஸ்முல்லர் (MAX MULLER) சொன்னது என்னவென்றால் மறு பிறப்பு என்பது உண்மைதான் என்ற ஞானோதயம் ஐரோப்பாவில் உதயமாகிவிட்டது என்பதாகும்; நல்லதுதான் ; இது முழுக்க முழுக்க இந்துக்களின் கொள்கை .
Xxx
ஜூன் 7 புதன் கிழமை
ஆங்கிலேயர் சொன்ன தவறான கருத்து
நாம் இதற்கு முன்னர் ஒரே தேசமாக இருந்தது இல்லை என்று ஆங்கிலேயர்கள் நமக்குக் கற்பித்துவிட்டு, நாம் அப்படி ஒரே தேசமாக இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகும் என்றும் சொல்கிறார்கள் .இதற்கு ஆதாரமே இல்லை; வெள்ளைக்காரர்கள் இங்கு வருவதற்கு முன்னரே நாம் ஒரே தேசமாக இருந்தோம் .
xxx
ஜூன் 8 வியாழக் கிழமை
சர் ஜகதிஷ் சந்திர போஸின் (SIR J C BOSE) அற்புதமான ஆராய்ச்சியால் ஜடப்பொருட்களிலும் உயிர் இருக்கிறது என்பதை அறிகிறோம் .
XXX
ஜூன் 9 வெள்ளிக் கிழமை
எனக்குக் கோவிலா ?
ஒரு பத்திரிகை செய்தியைப் பார்த்தேன். எனக்கு ஒரு கோவில் கட்டி இருக்கிறார்கள் என்றும் அதில் நான் வழிபடப்படுகிறேன் என்றும் செய்தி கூறுகிறது இது அப்பட்டமான தனி நபர் ஆராதனை; யார் கோவிலை கட்டினார்களோ அவர்கள், பணத்தை வீணடித்து இருக்கிறார்கள் ; அங்கு வரும் கிராம மக்களை தவறான பாதையில் செலுத்துகிறார்கள்;
நான் என்னுடைய வாழ் நாள் முழுதும் எதைப் போதித்தேனோ அதை கேலிச் சித்திரம் வரைந்து கிண்டல் செய்வது போல இருக்கிறது
XXX

ஜூன் 10 சனிக் கிழமை
புனிதமான பூணூல்
நான் பூநூலைக் கழற்றிவிட்டேன் ஆயினும் பூணூல் அணியும் உபநயனம் சடங்கில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது பூணூலை அணிவது புதிய பிறவி எடுப்பது போலாகும் ; அதை அணிவதற்கு முன்னர் ஒரு பிறவி; அது உடல் ரீதியிலான பிறப்பு.. பூணூலை அணிந்தவுடன் எடுக்கும் பிறப்பு ஆன்மீகப் பிறப்பு ஆகும்
XXXX
ஜூன் 11 ஞாயிற்றுக் கிழமை
உண்ணாவிரத நோன்பு
இது ஒரு புனிதமான விரதம் ;உண்மையான உண்ணா நோன்பு உடலையும், உள்ளத்தையும் அதில் உறையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்துகிறது
XxxX
ஜூன் 12 திங்கட் கிழமை
பிரார்த்தனை
உள்ளத்திலிருந்து எழும் பிரார்த்தனை பல அற்புதங்களைச் செய்ய வல்லது . அது மேலும் ,மேலும் தூய்மையை நாடும் ஆன்ம எழுச்சியாகும்.; அப்படி கிடைக்கும் தூய்மையை உன்னத பணிக்குப் பயன்ப டுத்துவது பிரார்த்தனை ஆகும்.
Xxx
ஜூன் 13 செவ்வாய்க் கிழமை
சம்ஸ்க்ருதம் படியுங்கள்
சம்ஸ்க்ருத மொழியின் மகத்தான சக்தி பற்றி விவேகானந்தர் சொன்னதை நானும் நம்புகிறேன். சம்ஸ்க்ருதம் கற்பது கஷ்டமானது என்ற தேவையற்ற பயம் நம்மிடையே இருக்கிறது.முயற்சியுள்ள ஒருவனுக்கு எந்த ஒரு மொழியைக் கற்பதற்குள்ள கஷ்டத்தை விட சம்ஸ்க்ருதம் கற்பதில் கஷ்டம் எதுவும் இல்லை.
Xxx
ஜூன் 14 புதன் கிழமை
காயத்ரீ மந்திரம்
காயத்ரீ மந்திரத்தைப் பலமுறை ஜபித்து நோயைக் குணப்படுத்துவதானது பிரார்த்தனைக்கு நாம் கொடுத்துள்ள விளக்கத்துக்கு நல்ல உதாரணமாகும்; ஒரு தேசத்துக்கு ஆபத்து ஏற்படுகையில் அல்லது நாட்டுக்குக் கஷ்டம் ஏற்படுகையில் காயத்ரீ மந்திரத்தை சிரத்தையுடன், மனத்தை ஒருமித்து, சரியான முறையில் ஜபித்தால் ஆபத்துகளைத் தவிர்க்க முடியும்
Xxx
ஜூன் 15 வியாழக் கிழமை
உண்ணாவிரதம் – நோன்பு (FASTING)
இந்துமத நூல்களில் நோன்பு, விரதம் பற்றி ஏராளமான விஷயங்கள் காணப்படுகின்றன பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் இன்றும்கூட எதற்கெடுத்தாலும் நோன்பு, விரதம் அனுஷ்டிப்பதை நாம் காண்கிறோம். தீங்கு எதுவும் செய்யாத சடங்கு இது.
Xxxx
ஜூன் 16 வெள்ளிக் கிழமை
கிறிஸ்தர்களுக்கு விளங்குவதே இல்லை
கிறிஸ்தவ மத ப்ராட்டஸ்டன்ட் PROTESTANT பிரிவினருடன்தான் எனக்கு பெரிய பிரச்சனை; எனக்கு அப்படிப்பட்ட நண்பர்கள் ஜாஸ்தி; அதுமட்டுமல்ல, அவர்கள் நட்பை மிகவும் மதித்துப் போற்றுபவன் நான்.ஆனால் ஒரு உண்மையை இன்று பட்டவர்த்தனமாக ஒப்புக்கொள்கிறேன். அவர்களை அறிந்த காலத்திலிருந்தே , அவர்களுக்கு நோன்பு, உண்ணாவிரதம் என்பதெல்லாம் பிடிக்கவில்லை என்பதை அறிந்தேன் ; இது ஏன் என்று எனக்கு விளங்கவேயில்லை .
Xxx

ஜூன் 17 சனிக் கிழமை
கடவுளின் குரல் VOICE OF GOD எனக்குக் கேட்கும் என்பது புதிய தகவல் ஒன்றும் இல்லை; ஆனால் துரதிருஷ்டவசமாக அதற்கு ஆதாரம் காட்ட என்னால் முடிவதில்லை.ஆனால் கிடைக்கும் பலன்கள் மூலம் அதை அறிய முடிகிறது .
Xxx
ஜூன் 18 ஞாயிற்றுக் கிழமை
நான் திண்டாடித் திக்குமுக்கு தெரியாமல் தவித்த காலத்திலும் கடவுள் என்னை ஒருபோதும் கைவிடவில்லை . எனக்கு அவர் சுதந்திரமே தந்ததில்லை நான் நினைத்தற்கும் எதிராக என்னை சரியாக வழி நடத்திச் சென்றார் . அவரை எவ்வளவுக்குச் சரண் அடிக்கிறோமோ அவ்வளவுக்கு ஆனந்தம் கிடைக்கும் .
XXXX
ஜூன் 19 திங்கட் கிழமை
வைஷ்ணவ ஜனதோ பாடல்
சக மனிதர்களுக்கு எவன் சேவை செய்கிறானோ அவன் இருதயத்தில்தான் கடவுளும் இடம் பிடிப்பார். அடுத்தவன் படும் கஷ்டத்தைத் கண்டு எவன் கண்ணீர் சிந்துகிறானோ அவன்தான் உண்மை வைஷ்ணவன் என்று கடவுளைக் கண்ட, அறிந்த நரசிம்ம மேத்தாவும் பாடினார் .
XXXX
ஜூன் 20 செவ்வாய்க் கிழமை
நோன்பு நாளில் சூதாட்டம்
ஜன்மாஷ்டமி தினத்தில் நோன்பு இருப்பதாக கருதிக்கொண்டு சூதாட்டம் ஆடுகிறார்கள் இந்த வகை உண்ணாவிரதத்தில் பலன் இல்லை ; அதற்கு நேர்மாறாக மேலும் தாழ்ந்துதான் போவான் .
XXX
ஜூன் 21 புதன் கிழமை
ராம நாமத்தை முஸ்லீம்கள் எதிர்க்கக்கூடாது
என்னுடைய பிரார்த்தனைக் கூட்டங்களில் நான் சொல்லும் ராமநாம ராமன் வரலாற்று புருஷனல்ல.அயோத்தி மன்னன் தசரதனின் மகனும் அல்ல. அவன் சனாதன புருஷன். அவனுக்கு சமமான இரண்டாமவன் எவனுமிலன் ; அத்தகைய ராமனையே நான் வணங்குகிறேன் ; அவன் உதவியையே நாடுகிறேன்; எல்லோருக்கும் உரியவன். முஸ்லீம்கள் அல்லது வேறு எவரும் அவன் பெயரை ஏற்க மறுக்கக் கூடாது. கடவுளை ராமநாமம் என்று கடவுளையே கட்டுப்படுத்த தேவை இல்லை அவர்கள் வேண்டுமானால் தனக்குள்ளே அல்லா என்று சொல்லிக்கொள்ளலாம் .
Xxx
ஜூன் 22 வியாழக் கிழமை
இந்து தர்மம் என்பது ரத்தினங்கள் நிறைந்த கங்கு கரை காணாத மஹா சமுத்திரம் ; எவ்வளவு ஆழமாக செல்கிறோமோ அவ்வளவு ரத்தினங்களைக் காணலாம்.
XXX

ஜூன் 23 வெள்ளிக் கிழமை
ராம- ராவண யுத்தம்
ராவணனை ராம பிரான் வெற்றி கொண்ட நாளில் தசரா கொண்டாடுகிறோம். இந்த வெற்றி வன்முறை மூலம் கிடைத்த வெற்றியன்று ஆயுதமில்லாமல், கவசமில்லாமல், பலம் வாய்ந்த , தேரில் விரைந்து செல்லும் ராவணனை நீங்கள் எப்படிச் ஜெயிக்கப் போகிறீர்கள் என்று ராம பிரானை விபீஷணர் கேட்டார். ராமர் சொன்னார்- நம்பிக்கையும் மனத்தூய்மையும் இந்த யுத்தத்தில் வெற்றி பெறும் .
Xxx
ஜூன் 24 சனிக் கிழமை
ராமரின் வில் என்பது புலனடக்கம் அவனது வெற்றி தீமையையழித்து நன்மை வெற்றி பெற்றதாகும்.
Xxx
ஜூன் 25 ஞாயிற்றுக் கிழமை
வெறி நாய்களைக் கொல்லுங்கள்
நாம் தவறிழைக்கும், பூரணத்துவம் பெறாத மனிதர்கள்.; வெறி நாய்களைக் கொல்லுவதைத்த தவிர நமக்கு வேறு வழியில்லை; மனிதர்களைக் கொல்லும் மனிதனைக் கொல்ல வேண்டிய தவிர்க்க முடியாத கடமை கூட சில நேரங்களில் நமக்கு வந்துவிடுகிறது .
Xxx
ஜூன் 26 திங்கட் கிழமை
தெரு நாய்கள்
தெரு நாய்களை ஒன்றுமே செய்யக்கூடாது என்ற நிலை நீடித்தால், விரை வில் அவைகளைக் கொன்று தீர்க்கும் அல்லது காயடிக்கும் வேலை, நம் முன்னால் வந்துவிடும். மூன்றாவது வழி உண்டு; நாய்கள் காப்பகம் அமைப்பதாகும் .
Xxx
ஜூன் 27 செவ்வாய்க் கிழமை
பிச்சைக்காரர்கள் வேண்டாம்
வீட்டு வாசலில் நிற்கும் பிச்சைக்காரனுக்கு ஒரு கவளம் சோறு போட்டுவிட்டு புண்ணியம் சம்பாத்தித்துவிட்டதாக எண்ணுகிறோம். இதன் மூலம் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கையைத்தான் நாம் அதிகரிக்கிறோம் ; பிச்சை என்னும் இழிதொழிலை ஊக்குவிக்கிறோம்; சோம்பேறித்தனத்தையும் சாத்திரத்துக்கு ஒவ்வாததையும் அதிகரிக்கிறோம்
Xxx
ஜூன் 28 புதன் கிழமை
அதற்காக எல்லோரையும் பட்டினி போட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. வயதானவர்களுக்கும் கண் பார்வை தெரியாத வர்களுக்கும் நாம் ஆதரவு தரவேண்டும் எல்லோரும் இப்பணியைச் செய்ய முடியாது அரசாங்கமோ, தலைவர்களோ இதைச் செய்யலாம். அ த்தகையோருக்கு தர்மசிந்தனையாளர்கள் நிதியுதவி செய்யலாம் .
XXXX
ஜூன் 29 வியாழக் கிழமை
நமக்குள் மஹா பாரதப் போர்
வரலாறு என்ற போர்வையில் சித்தரிக்கப்பட்ட மஹாபாரதம் பற்றி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார் ; இது பல லட்சம் மக்களின் இதயத்தில் தினமும் நடக்கும் போராட்டமே.; பழைய பழக்க வழக்கங்களை உதறிவிட்டு , உள்ளத்தில் உறையும் தீமைகளை ஒழித்துவிட்டு, நன்மையை அதற்குரிய இடத்தில் அமர்த்தும் நோக்கம் மனிதனுடையதாகும்.
Xxx

ஜூன் 30 வெள்ளிக் கிழமை
வருணிக்க முடியாத ஒரு மஹா சக்தி எங்கும் வியாபித்துள்ளது. நான் அதை உணர்கிறேன்; ஆனால் கண்களால் கண்டேன் இல்லை ; காணமுடியாத அந்த சக்தி அதுவே உணரச் செய்கிறது. ஆனால் ஆதாரத்தைக் காட்டமாட்டேன் என்கிறது ; இதை ஐம்புலன்களால் அறிய முடியாது.; இது அதற்கெல்லாம் அப்பாற்பட்டது .
Source book- HINDU DHARMA, M K GANDHI, NAVAJIVAN PUBLISHING HOUSE, AHMEDABAD, 1950, RUPEES FOUR. தமிழாக்கம் – லண்டன் சுவாமிநாதன்
–சுபம் —
TAGS- காந்தி, பொன்மொழிகள், ஜூன் 2023, காலண்டர், பிச்சைக்காரர்கள், தெரு நாய்கள், ராம நாமம் , பிரார்த்தனை, உண்ணாவிரதம், நோன்பு, கிறிஸ்தவர்கள் , இந்துமதம், பூணூல், வைஷ்ணவன்