
Post No. 12,069
Date uploaded in London – – 1 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே நகரிலிருந்து 34 கிலோமீட்டர் தொலைவில் உருளி காஞ்சன் (Uruli Kanchan) கிராமம் இருக்கிறது. இங்கு நாடு முழுதும் புகழ்பெற்ற இயற்கை வைத்திய ஆஸ்ரமம் (Naturopathy Centre) இருக்கிறது . இதற்கு நிசர்க் உபசார ஆஸ்ரமம்( நிசர்கோபசார ஆஸ்ரமம்) என்று பெயர். இதை மஹாத்மா காந்தி 1946-ம் ஆண்டில் நிறுவினார். காந்திஜிக்கு இயற்கை மருத்துவம் மிகவும் பிடிக்கும். அவரும் தன் வாழ்நாளில் அதைப் பின்பற்றினார் . காந்திஜியின் சீடரான மணிபாய் தேசாய் இதை திறம்பட நடத்தி வந்தார். அவர் 1993-ல் காலமானார். கோவிட் வைரஸ் என்னும் சீன வைரஸ் நாடு முழுதும் பரவிய போது கஷ்ட திசைக்குள்ளான இந்த நிலையம் 75 ஆண்டுகளாகத் தன்னுடைய சேவையை அளித்து வருகிறது.
மணிபாய் தேசாய் 1960ம் ஆண்டுகளில் இதே இடத்தில் சிறந்த வகை பசு, காளை மாடுகளை உருவாக்கும் மற்றோர் அமைப்பையும் (BAIF- Bharatiya Agro Industries Foundation) ) இந்த கிராமத்தில் நிறுவினார்.
சின்ன கிராமம் ஆனாலும், இதற்கு இந்த ஆஸ்ரமம் துவங்கும் முன்னரே பலவகையில் பெயர் கிடைத்தது. வெள்ளைக்காரர்கள் ஆரம்ப காலத்தில் போட்ட ரயில் பாதை இந்த வழியாகச் சென்றது மட்டுமல்ல. ஜெஜூரி என்னும் ஊரிலுள்ள புகழ்பெற்ற கண்டோபா கோவிலுக்குப் போவதற்கு மக்கள் இறங்கிய ரயில் நிலையம் இது. மேலும் துகாராம் என்னும் மஹானின் பல்லக்கு ஆண்டுதோறும் பண்டரீபுரத்துக்கு இவ்வழியாகச் சென்றது.
இந்த கிராமத்தில் மஹாத்மா காந்தி 1946 மார்ச் மாதத்தில் 7 நாட்கள் தங்கினார் .அவருடைய இளம் சீடராக இருந்தவர் மணிபாய் . அவர் இந்த கிராமத்தை பலவகைகளில் முன்னேற்றி ஒரு உதாரண கிராமமாக மாற்றினார் . மலை அடிவாரத்திலுள்ள இந்த கிராமத்துக்கு அருகிலேயே நதியும் ஓடுவதால் கரிசல் பூமியில் நல்ல விளைச்சலும் உண்டு.
ஞாயிற்றுக் கிழமைகளில் திறந்த வெளியில் சந்தையும் கூடும்.
இந்த இயற்கைச் சூழ்நிலையில் இயற்கை வைத்திய நிலையம்/ ஆஸ்ரமம் 1946-ல் துவக்கப்பட்டது .
இயற்கை மருத்துவம் என்றால் என்ன ?
மனிதனை இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ வைத்தால் நோய்கள் வருவதைத் தடுக்கலாம்; அத்தோடு நோய்கள் வந்தாலும் அதை இயற்கை மூலமாகவே குணப்படுத்தலாம் என்பது இயற்கை மருத்துவம் ஆகும் .
இங்கே வரும் நோயாளிகளுக்கு தண்ணீர் வைத்தியம், மண் வைத்தியம் , சுவாசப் பயிற்சிகள், நடைப் பயணம், சூரிய ஒளி வைத்தியம், பட்டினி சிகிச்சை என்று பலவகைகளில் சிகிச்சை தந்து நோயாளிகளின் மன , உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறார்கள் . இங்கே வரும் நோயாளிகளில் 97 சதவிகிதத்தினர் குணமடைவதாக ஆஸ்ரம புள்ளி விவரம் கூறுகிறது. இங்கே வந்து ஆஸ்ரமத்தில் தங்கியும் சிகிச்சை பெறலாம் . வெளி நோயாளிகளாகவும் (out Patient) சிகிச்சை பெறலாம் .
ஆஸ்ரமத்தில் தங்குவோரின் ஒரு நாள் எப்படி இருக்கும் என்பதை ஆஸ்ரம தகவல் குறிப்பே தெரிவிக்கிறது:-
காலை 5.00AM துயில் எழுதல்
5.15-6.00AM பொதுவான யோகப்பயிற்சி (யோக சாதன ஹாலில்)
6.00- 6.45 AM நோய்க்குத் தகுந்த விசேஷப் பயிற்சி (பிரேரண மந்திர் )
6.15-7.00AM சக்தி தரும் யோகப்பயிற்சி (யோக சாதன ஹாலில்)
7.15-7.30AM மூலிகை தேநீர்
7.30-10.30AM மஸாஜ் (Massage) மற்றும் நீர் வைத்தியம்
8.00-9.00AM பழரசம்
10.30-12.00PM இயற்கை உணவு (Lunch மதிய உணவு)
மத்தியானம்
12-2.15PM மதிய ஓய்வு
2.15-2.45PM நோய்க்குத் தகுந்த சிகிச்சை
3.00-3.15 PM மூலிகை தேநீர் (Herbal Tea)
3.00-5.00PM நீர் வைத்தியம் (Hydrotherapy treatments)
4.00-4.30PM பழரசம்
4.30-5.30PM ஆரோக்கியம் தொடர்பான சொற்பொழிவுகள்
மாலை /இரவு
5.30-6.30PM இயற்கை உணவு (Dinner மாலை உணவு)
6.30-7.15PM ஓய்வு, பொழுதுபோக்கு நேரம்
7.15-7.45PM பிரார்த்தனை (Yogasadhana Hall)
7.45-8.30PM தியானம் (Yogasadhana Hall)
8.30-9.30PM பொழுதுபோக்கு, கேளிக்கை நிகழ்ச்சிகள்
9.30PM விளக்கணைப்பு ; உறங்கும் நேரம் Bed Time

Xxx
சிகிச்சை வகைகள்
Mud Therapy மண் சிகிச்சை
உடல் முழுதும், சுத்தம் செய்த மண்ணைப்பூசி அளிக்கும் சிகிச்சை. பூமிக்கு ஆறு அடிக்குக் கீழேயுள்ள மண்ணை எடுத்து பல வகைகளில் சுத்தப் படுத்தி பின்னர் பயன்படுத்துவர்; அதிலுள்ள இயற்கையான தாதுப் பொருட்கள் (Minerals and Salts) சொறி , சிரங்கு முதலிய தோல் நோய்களை (psoriasis, eczema, dermatitis etc. ) குணப்படுத்த மிகவும் உதவுகிறது.
xxx
Hydrotherapy தண்ணீர் வைத்தியம்
வெவ்வேறு உஷ்ண நிலையில் உள்ள நீரைப் பயன்படுத்தி மருத்துவம் செய்வார்கள். நீருக்கள் அமர அல்லது படுக்க வைத்தோ . இடுப்பளவு தண்ணீரில் நிற்க வைத்தோ , இனிமா கொடுத்தோ , நீராவி குளியல் மூலமோ சிகிச்சை தருவர் சில நேரங்களில் நீர் ஒத்தனம் கொடுக்கப்படும்.
குற்றால அருவியில் குளித்தால் எப்படி இருக்குமோ அப்படி கனத்த வேகத்தில் உடலில் தண்ணீரைப் பாய்ச்சி அளிக்கும் சிகிச்சையும் உண்டு .
(Immersion Bath, Under water Massage, Hip Bath, Jacuzzi Hip Bath, Spinal Spray, Vichy Shower, Circular Jet, Douche, Enema, Steam Bath, Arm and Foot Bath, Packs and compress)
Xxx
Yoga Therapy யோகாசன சிகிச்சை
மனதும் உடலும் ஒருமித்து செய்யப்படும் ஆசனங்கள் யோகாசன சிகிச்சையில் வழங்கப்படுகிறது ; ஆசனங்கள் செய்வதால் மனம் தானாகவே அதில் ஒருமிக்கிறது ; இதனால் மனதும் உடலும் சம நிலையில் , அமைதியான நிலையில் இருக்கும். தியானம் மட்டும் செய்கையில் மனம் அலை பாயும். ஆனால் ஆசனத்துடன் தியானம் செய்கையில் மனம் ஒருமுகப்படும்.
இந்த கேந்திரத்தில் வயது, நோயின் தன்மைக்கு ஏற்ப நான்கு வகைப் பிரிவுகள் பின்பற்றப்படுகின்றன.
Xxxx
Physiotherapy உடற்பயிற்சி சிகிச்சை
நரம்புத் பிடிப்புகள், தசைப்பிடிப்புகள் , கீல்வாதம், மூட்டு வலி, உடலின் சில உறுப்புகளை அசைக்க முடியாமல், திருப்ப முடியாமல் ஏற்படும் இறுக்கம் (musculoskeletal and neurological disorders.) ஆகியவற்றைக் குணப்படுத்த சிலவகை உடற்பயிற்சிகள் உண்டு. அவைகளை, நோயாளிகளின் நிலையைப் பரிசோத்தித்த பின்னர் தகுந்த முறையில் கொடுப்பார்கள். இன்னும் சிலருக்கு கருவிகள் மூலம் வெப்ப சிகிச்சை (Heat Therapy, Heat Pads, Hot Water Bottles) அளிப்பர்.
Xxxx
Acupuncture ஊசி முனை வைத்தியம்
நோயாளியின் உடல் வாகுக்கு ஏற்றமுறையில் சில இடங்களில் ஊசியைக்குத்தி அங்கே செல்லும் நரம்புகளில் இருக்கும் சக்தியைத் தூண்டி விடுவார்கள் . உடலில் பல சக்தி வாய்க்கால்கள் இருக்கின்றன. அவை அடைபட்டு ஓடாமல் இருக்கையில், ஊசியைக் குத்தி அடைப்பை நீக்கி மீண்டும் சக்தியை ஊட்டச் செய்வது ஊசி முனை சிகிச்சை ஆகும்
ஆஸ்த்மா, ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை, ஆர்த்தரைடீஸ் முதலிய நோய்களுக்கு இது கை கண்ட மருத்துவம் ஆகும்.
Xxx

மஹாராஷ்ரம் வரை பயணம் செய்து சிகிச்சை பெறத் தயாராக இருப்பவர்கள், மேல் விவரம் அறிய, தொடர்பு முகவரி :-
Contact Info
NISARGOPCHAR ASHRAM, Uruli Kanchan – 412202, District – Pune, Maharashtra (India)
+91 20 2692 6298
+91 20 2692 6230
+91 96 0709 5588
enquiry@nisargopcharashram.org
அறை வாடகை, சிகிச்சைக்கான கட்டணங்களை வெப்சைட் மூலம் அறியலாம்..
–Subham —-
Tags- காந்திஜி , இயற்கை மருத்துவம் , நிலையம் , உருளி காஞ்சன் , நிசர்கோபசார ஆஸ்ரமம்