எல்லா இந்து மத நூல்களும் தீக்கிரையானாலும் இந்த ஒரு மந்திரம் போதும் : காந்தி (Post. 12,073)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,073

Date uploaded in London – –  2 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

கேரளத்தில் உள்ள கொல்லம் நகரிலும் , திருவாங்கூரிலும் 1937ம் ஆண்டு ஜனவரி 16, 17 தேதிகளில் மஹாத்மா காந்தி சொற்பொழிவாற்றினார் ; இதன் சுருக்கம் ஹரிஜன் பத்திரிகையில் 30-1-1937 ல் வெளியானது (தமிழாக்கம் – லண்டன் சுவாமிநாதன்)

இந்துமதம் என்ன என்பது பற்றி சற்று நேரம் சிந்திப்போம் .வரலாற்றுச் சான்றுள்ள ஏராளமான சாது, சன்யாசிகளுக்கு இது எப்படி ஊற்றுணர்ச்சி கொடுத்தது? எப்படி நிறைய தத்துவ வித்தகர்களை உருவாக்கியது ? நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பக்கதர்களை எது ஊக்குவிக்கிறது? தீண்டாமையை எதிர்த்துப் போராடிவரும் என்னை பலர் இந்துமதம் என்ன தீர்வு அளிக்கிறது என்று கேட்கிறார்கள் . காயத்ரீ மந்திரம் , நம் பிரச்சனைகளுக்கு தீர்வு என்று பலர் சொல்கிறார்கள் . அவர்கள் சொல்வதில் பொருள் உள்ளது . நானும் காயத்ரீ மந்திரத்தை ஆயிரக்கணக்கான முறை சொல்லியிருப்பேன். அதன் பொருளும் தெரியும். ஆயினும் எனது   ஆசை அபிலாஷைகளை அது தீர்த்து வைக்கவில்லை.கடந்த பல ஆண்டுகளாக நான் பகவத் கீதையை தலைக்குமேல் வைத்துக் கொண்டாடிவருவதையும் நீங்கள் அறிவீர்கள்.; என்னுடைய எல்லாப்  பிரச்சனைகளுக்கும் பதில் தருவது கீதை; அது ஒரு காமதேனு ; அது என்னுடைய வழிகாட்டி; அது என் ஓம் சூம் மந்திரக்காளி போன்ற மாஜிக் மந்திரம் ; நூற்றுக்கணக்கான கஷ்டங்களைத் தீர்த்து  வைத்தது என்றெல்லாம் நான் பேசிவருவதையும் நீங்கள் அறிவீர்கள். அந்த பகவத் கீதை எனக்கு ஆறுதல் அளிக்காத ஒரு சம்பவம் கூடக் கிடையாது . ஆனால் அந்த முழு புஸ்தகத்தையும் உங்கள் முன்னர் சமர்ப்பிப்பது முடியாது. அந்தக் காமதேனு நீங்கள் கேட்டதையெல்லாம் கொடுக்கும் பாலை அதன் மடுவில் வைத்திருந்தாலும் அதைக்  கறக்க நீங்கள் பகவத் கீதையை ஆழ்ந்த பக்தியுடன் படிக்க வேண்டும் .

xxxx

ईशावास्यं इदम् सर्वं यत्किञ्च जगत्यां जगत् ।
तेन त्यक्तेन भुञ्जीथा मा गृधः कस्यस्विद्धनम् ॥ १ ॥

ஆனால் நான் ஒரு மந்திரத்தைத் தேர்தெடுத்துள்ளேன். இந்து மதத்தின் மொத்த சாரத்தையும் கொண்டுள்ள அந்த மந்திரத்தை இப்போது சொல்லப் போகிறேன் . உங்களில் பலருக்கும் ஈசோபநிஷத் தெரிந்திருக்கும் ; உபநிஷத்தையும் அதன் மீதுள்ள பாஷ்யங்களையும் பல்லாண்டுகளுக்கு முன்னரே படித்தேன். ஏரவாடா  சிறையில் என்னை அடைத்த போது அதை மனப்படமும் செய்தேன் .அப்போது புரிபடாத விஷயம் கடந்த சில மாதங்களாக என்னைக் கவர்ந்து வருகிறது . திடீரென்று எல்லா உபநிஷத்துக்களும் ஏனைய நூல்கள் அனைத்தும் தீக்கிரையானாலும்  ஈசோபநிஷத்தின் முதல் மந்திரம் மட்டும் இந்துக்களின் நினைவில் நிற்குமானால், இந்துமதம் காலா காலத்துக்கும் அழியாது நிற்கும்..

அந்த மந்திரத்தை நான்,  நான்கு பகுதிகளாகப் பிரித்துச் சொல்லுவேன்.முதல் பகுதி

ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம் யத்கிம் ச ஜகத்யாம்  ஜகத் ; அதை நான் இப்படி மொழிபெயர்ப்பேன் : இந்தப் பிரபஞ்சம்  முழுதும் இறைவனால் வியாபிக்கப்பட்டுள்ளது . அதற்குப்பின் இரண்டாவது மூன்றாவது பகுதிகள் வருகின்றன; அதை ஒன்றாகப் பார்த்தால்

த்யேன த்யத்தேன  புஞ்சீதாஹா ; அவைகளை நான் மொழிபெயர்க்கிறேன் : துறந்து விடுங்கள்; மகிழ்ச்சியாக அனுபவியுங்கள் ; இன்னொரு விதமாகவும் இதை மொழிபெயர்க்கிறார்கள்; இறைவன் கொடுத்ததை வைத்து இன்பமாக வாழ்வாயாக என்று.. இதற்கடுத்தாற்போல்தான் இறுதிப் பகுதி, மிக முக்கியமான பகுதி வருகிறது :

மா க்ருதஹ  கஸ்யத்வித்தனம்

அதன் பொருள் – எவன் செல்வத்தையும் உடமைகளையும் அபகரிக்காதே

மற்ற எல்லா மந்திரங்களும் இந்த முதல் மந்திரத்தின் வியாக்கியானமாகவோ முழு விளக்கமாகவோ வருகிறது .இந்த மந்திரத்தை கீதையின் பின்னனியில் பார்த்தாலோ அல்லது கீதையை இந்த மந்திரத்தின் பின்னனியில் பார்த்தாலோ கீதையே இதன் பாஷ்யம்தான் (விளக்க உரை) என்றும் காண்கிறேன்.. இது சோஷலிசவாதிகள்கம்யூனிஸவாதிகள், தத்துவ வாதிகள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோர் எல்லோர் விருப்பங்களுக்கும் இசைவானது .

இந்துமதத்தைச் சாராதவர்களுக்கும் கூட இது இசை வானதே என்று துணிந்து சொல்லுவேன்.  இந்த மந்திரத்துக்கு எதிரானதாக இந்து மதத்தில் எதைக் கண்டாலும்  அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை; ஏனெனில் இது உண்மையான  கொள்கை .

தெருவில் செல்லக்கூடிய சாதாரண மனிதனுக்கும் கூட வேறு என்ன தெரிய வேண்டும்? இறைவதான் உலகம் முழுதும் இருக்கிறான்; அந்த ஒரு கடவுள்தான் இந்த உலகத்தைப் படைத்தான், வழிநடத்துகிறான் என்பதைத்தவிர . மந்திரத்தின் மற்ற மூன்று பகுதிகளும் முதல் மந்திரத்தைச் சார்ந்தே உள்ளன.

கடவுள்தான் உலகைப் படைத்தான்; அவன் எங்கும் நிறைந்தவன் என்பதை நீங்கள் நம்பினால் அவன் கொடுப்பதையே நாம் ஏற்கவேண்டும் . அவன்தான் ஏனையோரையும் படைத்தான் என்று நம்புவோமானால் அவர்களது செல்வத்தை நாம் எப்படி அபகரிக்க முடியும்? நீங்களும் அவனுடைய குழந்தைகளில் ஒருவர் என்றால், எல்லாவற்றையும் துறந்து அவனது காலடியில் சமர்ப்பிக்க வேண்டும்தானே.. இப்படித் துறப்பது நமது இரண்டாவது பிறப்பாகும் இதை அறியாமையினால் செய்யவில்லை; அறிந்தே செய்வதால் அது மறு பிறப்பாகும் அவன் நம்மைப் படைத்ததால்   அ வன் கொடுப்பதைக் கொண்டு மகிழ  வேண்டும் ; நாம் துறந்துவிட்டதால் அவன் கொடுக்கும் பரிசு அவை என்பதை அறிய வேண்டும்.

.இது மட்டுமா ? மந்திரம் அற்புதமாக முடிகிறது ; பிறர் பொருளை பறிக்காதே. இதை பின்பற்றினால் உலகத்தின் நல்ல குடிமகன்களாக வாழலாம். எல்லா இடங்களிலும் சாந்தி நிலவும் .

கொல்லத்தில் உரையாற்றிய மறுநாள் திருவாங்கூர் ஹரிபாத்தில் சொற்பொழிவாற்றுகையில் மஹாத்மா காந்தி மீண்டும் இம்மந்திரத்தை விளக்கி எல்லோருக்கும் இதைக் கற்பியுங்கள்; எல்லோர் மனதிலும் இது எப்போதும் இருக்கட்டும் என்கிறார்.. பின்னர் கோட்டயத்தில் கிறிஸ்தவர்கள் கூட்டத்தில் மஹாத்மா காந்தி சொற்பொழிவாற்றியபோதும் இதே மந்திரத்தை அவர்களுக்கும் சொன்னார் .

உலகம் இறைவனால் படைக்கப்பட்டது ; அவன் எங்கும் நிறைத்துள்ளான். எல்லாவற்றையும் அவன் காலடியில் சமர்ப்பித்துவிட்டு அவன் கொடுப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்வாயாக; பிறர்  பொருளை  நயவாதே/ பறிக்காதே

ईशावास्यं इदम् सर्वं यत्किञ्च जगत्यां जगत् ।
तेन त्यक्तेन भुञ्जीथा मा गृधः कस्यस्विद्धनम् ॥ १ ॥

ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம் யத் கிம் ச ஜகத்யாம்  ஜகத்

த்யேன  த்யக்த்தேன  புஞ்சீதா மா  க்ருதஹ கஸ்யத் வித்தனம்

— ஈசோபநிஷத்.

—–subham ——

Tags- ஈசோபநிஷத், ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம், மஹாத்மா காந்தி

Leave a comment

Leave a comment