சூப்பர் மூன் Super Moon,  ப்ளூ மூன் Blue Moon  என்றால் என்ன?- Part 1 (Post No.12,082)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,082

Date uploaded in London – –  4 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்துக்கள் ஒவ்வொரு பெளர்ணமிக்கும்  ஒரு பெயர் கொடுத்தார்கள் . சித்திரா பெளர்ணமி என்றால் சித்திரை நட்சத்திரமும் முழுநிலவும் ஒன்று சேரும்  நாள் ; வைகாசி விசாகம் என்றால் விசாக  நட்சத்திரமும் முழு நிலவும் ஒன்றுசேரும்  நாள்; இதேபோல மாசி மகம் என்றால் மகம்  நட்சத்திரமும் முழு நிலவும் ஒன்று சேரும்  நாள்; தைப்பூசம் என்றால் பூச நட்சத்திரமும் முழுநிலவும் ஒன்று சேரும்  நாள்; இப்படி இறைவனுடன் ஒவ்வொரு  பெளர்ணமியையும் சம்பந்தப்படுத்தி விழா எடுத்தோம். ஆனால் மேலை நாட்டு பஞ்சாங்கத்தில் சில மூட நம்பிக்கைகளின் பெயரிலோ அல்லது அப்பொழுது நடைபெறும் அறுவடை போன்ற நடவடிக்கைகளின் அடிப்படையிலோ ஒவ்வொரு  பெளர்ணமிக்கும் பெயர் சூட்டினார்கள் ; குறிப்பாக அமெரிக்க பழங்குடி மக்களின் பஞ்சாங்கப்படி இது நடந்தது. 2023 ஆகஸ்ட் 31ம் தேதி SUPER BLUE MOON சூப்பர் ப்ளூ மூன் வருகிறது!

xxxx

கீழ்க்கண்ட பட்டியலைப் பார்த்தால் அது விளங்கும்

ஜனவரி நிலவு – ஓநாய் நிலவு WOLF MOON –

காரணம் ஓநாய்களின் அலறல் சப்தம் கேட்கும் மாதம்

மற்ற பெயர்கள் :

• Canada Goose Moon (Tlingit)

• Center Moon (Assiniboine)

• Cold Moon (Cree)

• Freeze Up Moon (Algonquin)

• Frost Exploding Moon (Cree)

• Great Moon (Cree)

• Greetings Moon (Western Abenaki)

• Hard Moon (Dakota)

• Severe Moon (Dakota)

• Spirit Moon (Ojibwe)

அடைப்புக்குறிக்குள் உள்ளது அமெரிக்க பழங்குடி மக்களின் பெயர்கள் ஆகும்.

Xxxx

பிப்ரவரி மாதம் முழுப்பனி நிலவு FULL SNOW MOON

காரணம் பிப்ரவரி மாதத்தில் பூமியின் வட பகுதியில் கடும் பனி பெய்யும்.

ஆஸ்திரேலியா போன்ற தென் கோளார்த்தப் பகுதிகளில் வெய்யில் அடிக்கும் ; ஆகையால் இந்தப் பெயர் பொருந்தாது. 

ஏனைய பெயர்கள்

• Bald Eagle Moon (Cree)
• Bear Moon (Ojibwe)
• Black Bear Moon (Tlingit)
• Month of the Bony Moon (Cherokee)
• Eagle Moon (Cree)
• Goose Moon (Haida)
• Groundhog Moon (Algonquin)
• Hungry Moon (Cherokee)
• Raccoon Moon (Dakota)

அடைப்புக்குறிக்குள் உள்ளது அமெரிக்க பழங்குடி மக்களின் பெயர்கள் ஆகும்.

Xxxx

மார்ச் மாத முழு நிலவு FULL WORM MOON

புழு நிலவு

இந்தக் காலத்தில் மண்புழுக்கள் வெளியே வரும் அல்லது மரப்பட்டை , பொந்துகளில் வாழும் புழுக்கள் வெளியே வரும் என்பதால் புழுக்கள் நிலவு என்று பெயர் சூட்டினார்கள்.

ஏனைய பெயர்கள் (அடைப்புக்குறிக்குள் உள்ளது அமெரிக்க பழங்குடி மக்களின் பெயர்கள் ஆகும்.)

• Crow Comes Back Moon (Northern Ojibwe)
• Eagle Moon (Cree)
• Goose Moon (Algonquin, Cree)
• Snow Crust Moon (Anishinaabe)
• Sore Eyes Moon (Dakota, Lakota, Assiniboine)
• Sugar Moon (Ojibwe)
• Wind Strong Moon (Pueblo)

Xxxx

ஏப்ரல் மாத பெளர்ணமி FULL PINK MOON

முழு இளம் சிவப்பு நிலவு

இந்த வசந்த காலத்தில் சிறிய இளம் சிவப்பு (Pink Flowers)  மலர்கள் பூக்கின்றன

ஏனைய பெயர்கள் (அடைப்புக்குறிக்குள் உள்ளது அமெரிக்க பழங்குடி மக்களின் பெயர்கள் ஆகும்.)

• Breaking Ice Moon (Algonquin)

• Broken Snowshoe Moon (Anishinaabe)

• Budding Moon of Plants and Shrubs (Tlingit)

• Frog Moon (Cree)

• Moon of the Red Grass Appearing (Oglala)

• Moon When the Ducks Come Back (Lakota)

• Moon When the Geese Lay Eggs (Dakota)

• Moon When the Streams are Again Navigable (Dakota)

• Sucker Moon (Anishinaabe)

• Sugar Maker Moon (Western Abenaki)

Xxxx

மே மாதம் பெளர்ணமி FULL FLOWER MOON

முழு மலர் நிலவு

இந்த மாதத்தில் வசந்த கால மலர்கள் மிக அதிக அளவில் பூத்து மலர் வனங்களாக காட்சி தருவதால் இந்தப் பெயர்

• Budding Moon (Cree)

• Egg Laying Moon (Cree)

• Frog Moon (Cree)

• Leaf Budding Moon (Cree)

• Planting Moon (Dakota, Lakota)

• Moon of Shedding Ponies (Oglala)

Xxx

ஜுன் மாத பெளர்ணமி FULL STRAWBERRY MOON

முழு ஸ்ட்ராபெரி நிலவு

நிலவின் வர்ணத்தை ஒட்டி எழுந்த பெயர் அல்ல. அமெரிக்காவின் சில பகுதிகளில் ஸ்ட்ராபெரி (Strawberry) பழங்கள் ஏராளமாகக் காய்க்கின்றன ; இந்தப் பழங்கள் செக்கச்செவேல் என்று இருக்கும் .

ஏனைய பெயர்கள்

• Berries Ripen Moon (Haida)

• Birth Moon (Tlingit)

• Blooming Moon (Anishinaabe)

• Egg Laying Moon (Cree)

• Hatching Moon (Cree)

• Green Corn Moon (Cherokee)

• Hot Moon

• Hoer Moon (Western Abenaki)

Xxx

To be continued……………………………

Tags- நிலவின் பெயர்கள், பெளர்ணமி , பெயர்கள் காரணம், அமெரிக்க பழங்குடி மக்கள் 

Leave a comment

Leave a comment