15 மூலிகை, மருந்துச் சரக்குகளைக்   கண்டுபிடியுங்கள் (Post No.12,083)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,083

Date uploaded in London – –  4 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

12     
     3     
 4     
    6 7  
 8      
    9    10
 11       
 12    13       
      14  15 

குறுக்கே

1.அதிங்கம், மதுகம், அட்டி ஆகிய வேறுபெயர்கள் உண்டு.,இனிப்புச் சுவை அதிகம்.

3.ரியால்கர் அல்லது ரெட் ஆர்ஸெனிக் எனப்படும் விஷச் சரக்கு  

4. போதையூட்டுகிற, வலிநீக்கி மருந்துப்பொருள் ஆகும்.  செடியிலிருந்து பெறப்படுகின்றது. இந்தச் செடியை தமிழில் கசகசாச் செடி என்பர்.

8. (Across)ஒரு வகைமானிலிருந்து கிடைக்கும் வாசனைப் பொருள் ; ஒரு மஞ்சளின்  பெயரில் ஒட்டிகொள்கிறது மருந்துகளில் பயன்படுகிறது

11.வீட்டுவாசலில் வளர்த்தால் கண் திருஷ்டி போகும். சொறி சிரங்குகளுக்கு எதிரி

12.எரி …….., சவுக் ……..அக்கர ………. இனிப்பு………. வகைகள் இங்கே கிடைக்கும் என்று படிக்கிறோம் . இதில் அக்கர ……. என்பது ஒரு மூலிகையின் பெயர்.

13. ஜீரணத்துக்கு உதவும் ‘ரகம்’; பல ரகங்கள் இருந்தாலும் இதை சீ , சீ என்று  ஒதுக்கக் கூடாத ‘ரகம்’.  

14.திரிபலா சூரணத்தில் நெல்லிக்காய் பொடி, கடுக்காய் பொடி ஆகிய இரண்டுடன் சேர்க்கப்படும் மூன்றாவது பொடி 

xxx

கீழே

2.மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ‘கண்ட xxxxx ‘ என்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. கனிகள், முதிராத பூக்கதிர்த் தண்டை உலர்த்தி ‘அரிசித்xxxxx  என்ற பெயருடன் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

5.இதை வைத்து xxxxx  நீர் செய்வார்கள். ஆங்கிலத்தில் xxxxxx வாட்டர் என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும் .வாய்வு, வயிற்று வலி ஆகிய உடல் உபாதைகளுக்கு xxxx  திரவம் அற்புதமாக வேலை செய்யும் .(Go up)  

6.ஜீரணத்துக்கு உதவும் ; சாறு, துவையல், ஊறுகாய் எல்லாம் செய்யலாம்.(go Up)  

7 இதனுடைய நிறத்தை வைத்தே இதன் பெயர் வந்தது அல்லது நிறத்துக்கே இது பெயர் தந்தது . இந்திய உணவில் இது அதிகம் பயன்படுகிறது.’

8.Down `காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் xxxx  மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும், கோலை வீசி குலாவி நடப்பானே’, `- இது சித்தர்கள் வாக்கு. `xxxx உண்டால் மிடுக்காய் வாழலாம்’, `ஈனாத மாட்டுக்கு ஒரு xxxxxx ; இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு xxxx ‘என்ற பழமொழிகளை அறிந்தால் விடை கிடைக்கும்.

9.இதைக் காட்டினால் நல்ல பாம்பும்  பிரக்ஞை அற்றுப்போகுமாம். இது இருக்கும் இடங்களில் பாம்பு வராதாம் 

10.மற்றவர்களை அண்டி /சுரண்டி வாழ்வோரை இந்தத் தாவரத்தின் பெயரைச் சொல்லித் திட்டலாம்..(Go up)  

15.கறுப்பு நிறம் ஆனாலும் சாப்பிடலாம், பச்சை நிறம் ஆனாலும் சாப்பிடலாம்; கேரளத்தில் வீடு தோறும் தோட்டத்தில் கொடியாகப் படரும் ; மிளகாய் என்பதை இந்தியர் அறியாத காலத்தில் இதுதான் காரம்.. (Go up)  

1 அதி 2தும் 
 ப் லைசினோ  ம வி
அ 4பினிஞ்  ரு
 லி   6ம 7 லு
க 8த்தூரிஞ் ல்
டு  வ 9ம்பு  10
க்11கொடிள் ளி கு
கா 12ம்13   சீ  
ய்காக்றின்14   தா15  மி

Answers

1. அதிமதுரம் 2 திப்பிலி 3 மனோசிலை 4 அபினி 5 ஓமம் 6 இஞ்சி

7 மஞ்சள் 8 கத்தூரி 8 கடுக்காய் 9 வசம்பு 10 புல்லுருவி

11கொடிகள்ளி  12 காரம் 13 சீரகம் 14.தான்றிக்காய் 15 மிளகு

–subham—

tags-மூலிகை, மருந்துச் சரக்கு,  கண்டுபிடியுங்கள் 

Leave a comment

Leave a comment