
Post No. 12,108
Date uploaded in London – – 9 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
மதுரை தொடர்பான கீழ்க்கண்ட பத்து கேள்விகளுக்கும் பதில் சொன்னால், உங்களுக்கு மதுரைக்காரன் என்ற பட்டத்தை பெயருக்கு முன் போட்டுக்கொள்ளும் தகுதி கிடைக்கும் .
1.மதுரை நகரில் ஒரு ராணியின் பெயரில் உள்ள சத்திரம் எது?
2.ஒரு ராஜாவின் பெயரில் உள்ள அரண்மனை எது?
3.தைப்பூசத்தன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பம் நடைபெறும் இடம் எது?
4.சித்திரைத் திருவிழாவில் சமபந்தப்பட்ட கோவில்கள் எவை?
5.மதுரை இருந்தையூரில் இருக்கும் கோவிலின் பெயர் என்ன?
6.மதுரை வைகை நதி உருவாக யார் காரணம் ?
7.சிவபிரான் செய்த 64 லீலைகளைக்க கூறும் தமிழ்ப் புராணத்தின் பெயர் என்ன?
8.மதுரை அருகில் டவுன் பஸ்ஸில் போகக்கூடிய இரண்டு அறுபடை வீடுகள் உள்ளன. அவற்றின் பெயர்கள் என்ன?
9.வேறு எங்கும் கிடைக்காத சேலைகள் மதுரையில் கிடைக்கும். அதன் பெயர் என்ன?
10.மதுரை சுந்தரேஸ்வரரின் தமிழ்ப் பெயர் என்ன?

விடைகள் :
1.ராணி மங்கம்மாள் சத்திரம் 2.திருமலை நாயக்கர் அரண்மனை (மஹால்),
3.மதுரை மாரியம்மன் கோவில் எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா தைப்பூசம் அன்று நடக்கும். அது திருமலை நாயக்கரின் ஜென்ம நட்சத்திரம் 4.மதுரை பெருமாள் கோவில், திருப்பரங்குன்றம் கோவில், மீனாட்சி கோவில் மூர்த்திகள் திருக்கல் யாணத்தின் பொழு து வீதி உலா வரும். இந்தப் பெருமாளும், அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாளும் சந்திக்கும் எதிர்சேவை விழாவும் நடப்பதால் நங்கு கோவில்களின் மூர்த்திகளை தரிசிக்கலாம்.
5.கூடல் அழகர் பெருமாள்கோவில்; இப்பொழுது பஸ் நிலையம் அருகில் உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த இடத்தின் பெயர் இருந்தையூர்
6.குண்டோதரனுக்காக சிவபெருமான் உருவாக்கியதாக ஸ்தல புராணம் கூறும்
7.திருவிளையாடல் புராணம் ;நான்கு திருவிளையாடற் புராணங்கள் உள்ளன. இவற்றுள் புலியூர் நம்பி என்பவரும் பரஞ்சோதி முனிவர் என்பவரும் ஆக்கியவையே குறிப்பிடத்தக்கவை.
8.திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை (அழகர் மலையில் உள்ளது)
9.சின்னாளப்பட்டி சுங்குடி சேலை
10.சொக்கன், சொக்கநாதன்
–subaham–
tags- சின்னாளப்பட்டி சுங்குடி சேலை, மதுரை , QUIZ, மதுரைப் பத்து