லண்டனில் புதிய ஆங்கில நூல் வெளியீட்டு விழா- 1 (Post No.12,122)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,122

Date uploaded in London – –  12 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

லண்டனில் ஈஸ்ட் ஹாம் (London Murugan Temple, Eastham, London) பகுதியில் பிரபல முருகன் கோவில் உள்ளது அங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (11-6-2023) பிற்பகலில் கோவில்கள் பற்றிய ஆங்கில நூல் வெளியிடப்பட்டது. .நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய அறங்காவலர் திரு சம்பத் குமார் முதலில்  பேச்சாளர் சுவாமிநாதனை அறிமுகப்படுத்தி வைத்தார். திரு சுவாமிநாதன் 16 ஆண்டுக்காலம் தினமணி பத்திரிகையில் சீனியர் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பி பி சி தமிழோசை ஒளிபரப்பாளராக 5 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்தில் 20 ஆண்டுகள் தமிழ் கற்பித்தார். ஒய்வு பெற்ற பின்னர் 102 தமிழ், ஆங்கில நூல்களை எழுதி சாதனை செய்துள்ளார் என்றார்  இந்த அறிமுகத்துக்குப் பின்னர் கூட்டத்தில்   லண்டன் சுவாமிநாதன் ஆற்றிய உரை கீழே தரப்பட்டுள்ளது. 

அன்புடையீர்

அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்; நமஸ்காரங்கள் . என்னை இங்கு பேச அழைத்தமைக்காக கோவில் நிர்வாகிகளுக்கும், குறிப்பாக தொலைபேசியில் அழைப்பு விடுத்த கணேஷ் சிவம் அவர்களுக்கும் முதற்கண் நன்றி தெரிவிக்கிறேன்.

இன்று வெளியிடப்படும் டாக்டர் சிவலோகநாதன் எழுதிய GODS, TEMPLES AND MYTHS என்ற புஸ்தகம் பற்றிய AMAZING STAISTICS இதோ :-

A 4 SIZE ; HARD BOUND BOOK ; ஆறு பகுதிகள் ; இருபதுக்கும் அதிகமான MAPS ; 500 முதல் 700 படங்கள்! .பார்த்தவுடன் படிக்கத் தோன்றும் கவர்ச்சியான அட்டைப்படம் ;350 பக்கங்களுக்கு மேல் INDEX உடன் உள்ளது. இதை மனத் தளவில் மொழிபெயர்த்தேன் . ஆண்டவர்கள்ஆலயங்கள், அற்புதக்கதைகள் என்று. பின்னர் யோசித்தேன்; கேதார்நாத் முதல் கதிர்காமம் வரை என்று முடிவு செய்தேன் ; ஏனெனில் அது இந்த நூலில் உள்ள ஆலயங்கள் எவ்வளவு பரந்த பூகோள பரப்பை GEOGRAPHICAL AREA வை கவர் செய்கிறது என்பதைக் காட்டுகிறது . நான் மாணவனாக இருந்த காலத்தில் தொ.மு. பாஸ்கரத் தொன்டைமான் எழுதிய வேங்கடம் முதல் குமரிவரை என்ற நூல்தான் மிகவும் பிரபலம். பின்னர் பரணீதரன் போன்றோர் எழுதிய பல தமிழ் நூல்கள் வெளியாகின. ஆனால் ஆங்கிலத்தில் கோவில்கள் பற்றிய நூல்கள் குறைவு. அவ்வகையில் இப்பொழுது டாக்டர் சிவலோகநாதன் எழுதிய இந்த நூல் சிறப்பு வாய்ந்தது. இதன் விலை 25 பவுன் என்று அறிந்தேன். ஆனால் 250 அல்லது 2500 ப வு ன் நன்கொடையும் கொடுக்கலாம். அததனையும் லண்டன் முருகன் கோவிலுக்கே செல்கிறது .

இப்பொழுது இந்த நூலின் இன்னொரு சிறப்பினையும் சொல்கிறேன்.  பல ஆங்கில நூல்கள் இருந்தாலும் இந்த நூலுக்கு ஒரு சிறப்பு உண்டு. அதற்கு முன்னர் ஓரிரண்டு செய்திகளை சொல்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவில் தலைவர் சம்பத் குமாருடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு கேள்வி கேட்டார் .

சுவாமிநாதன், இவ்வளவு பெரிய கட்டிடங்களை கஷ்டப்பட்டு எழுப்பிவிட்டோமே; நமக்குப்  பிறகு என்ன ஆகும்? என்று கவலையுடன் கேட்டார். நான் சொன்னேன்; அருமையான கேள்வி; நல்ல சிந்தனை உங்கள் மனத்தில் உதித்து இருக்கிறது. நாம் அ டுத்த தலைமுறைக்கு இதன் அருமை பெருமைகளைச்  சொல்ல வேண்டும்; பயிற்சி வகுப்பு நட த்தி  இந்து மதம் பற்றிக் கற்பிக்க வேண்டும் என்றேன்.

LONDON SWAMINATHAN SPEAKING

இந்த நூல் அத்தைகைய பயிற்சிக்கு பெரும் அளவு உதவும். இதில் 178 கதைகள் உள்ளன. ஆங்கிலத்தில் உள்ளதால் அவைகளை நமது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் எளிதில் படிக்க முடியும்.

இன்னும் இரண்டு பத்திரிக்கைச் செய்திகளையும் பார்ப்போம் .

கடந்த சில நாட்களில் வந்த செய்திகள். ஒரு வட இந்தியக் கோவிலில் ஒரு பெண் அரை நிர்வாண உடையில் சென்றது வீடியோ மூலம் வைரலாக பரவியது. தமிழ்நாட்டில் ஒரு கோவில் விழாவில் ஆபாச நடனம் நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. உடனே CHAR DHAM ‘சார் தாம்’ என்னும் கோவில்களின் நிர்வாகிகள், இனிமேல் ஆண்களும் பெண்களும் என்ன உடை அணிந்தால் கோவிலுக்குள் வரலாம் எனற  கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர். அதே போல தமிழ் நாட்டு போலீசாரும் கோவிலுக்குள் என்ன கூட்டம் நடத்தலாம் என்ற கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது இவற்றுக்கெல்லாம் காரணம், இந்து மதம், ஆலயம் பற்றிய அறியாமையே; இந்த சூழ்நிலையில் இது போன்ற ஆங்கில நூல்கள் பேருதவி செய்யும் .

பல ஆங்கில நூல்கள் இருந்தாலும், இதை ஏன் வாங்க வேண்டும் என்று சொல்கிறேன். இதில் 178 கதைகளை சுருக்கமாக நல்ல ஆங்கிலத்தில் கொடுத்துள்ளார். நாம் தேவாரப் புத்தகங்களைப் பார்த்தால் அவர்கள் செய்த 50, 60 அற்புதங்கள் பற்றிய கதைகள்  மட்டுமே கிடைக்கும்; பெரிய புராணத்தைப் படித்தால் 63 நாயன்மார் கதைகள்  மட்டுமே கிடைக்கும். இந்த நூலைப் படித்தா லோ அவைகளுடன் அபிராமி பட்டர் முதல் உமாபதி சிவாச் சாரியார் வரையான எல்லா கதைகளும்  கிடைக்கும்.. உமாபதி சிவாச்சாரியார் எப்படி மறைஞான சம்பந்தரிடம் சென்றார் என்ற கதையையும் அறியலாம்; அப்பூதி அடிகள், அபிராமிபட்டர் முதல் அத்தனை அடியார்கள் கதை பற்றியும் அறியலாம். பல தல புராணக்கதைகளும் உள்ளன.

நாங்களும் பிரிட்டிஷ்  லைப்ரரியில் உள்ள தல புராணங்களை டிஜிடைஸ் DIGITIZE செய்ய விரும்பினம் னோம் அங்கு பல பழைய தல புராணங்கள் உள்ளன. ஆனால் 900க்கும் மேலாக தல புராணங்கள் தமிழ் நாட்டில்  இருப்பதால் அது சாத்தியமாகவில்லை ; இதுவரை தல புராணத் தொகுப்பு என்று எந்த நூலும் வரவில்லை.. அதற்கெல்லாம் வித்தாக , ஒரு துவக்கமாக இந்த நூல் அமைந்துள்ளது.

உங்களுக்கு இந்தப் புஸ்தகத்தைப் படிக்க ஒரு சுருக்கமான வழியினைச்  சொல்கிறேன். முதலில் பொருளடக்கத்தைப் படியுங்கள்  69 கோவில்களின் பெயர்கள் கிடைக்கும் ; பின்னர் இண்டெக்ஸ் (பொருட் பெயர் குறிப்பு அகராதி) பக்கம் போங்கள்; அபிராமி பட்டர் முதல் உமாபதி சிவாசாரியார் வரையான பெயர்கள் கிடைக்கும். பின்னர் 20-க்கும் மேலான மேப் MAPS புகளைப் பாருங்கள் . பின்னர் சுமார் 700 படங்களின் கீழ் உள்ள தலைப்புகளை மட்டும் பாருங்கள். இந்த ஆசிரியர் டாக்டர் சிவலோக நாதன் எவ்வளவு காலம் இதற்குச் செலவிட்டிருப்பார் என்பது விளங்கும். பின்னர் நீங்கள் நூலைப்படித்த்தால் இதன் ஆழமும் பெருமையும் விளங்கும்

இன்னும் ஒரு விஷயம் ………………………………….

தொடரும் ……………………………………..

Tags-  நூல் வெளியீட்டு விழா , லண்டன் , டாக்டர் சிலலோக நாதன் , கோவில்

Leave a comment

1 Comment

  1. santhanam nagarajan's avatar

    santhanam nagarajan

     /  June 12, 2023

    நல்ல முயற்சி! பாராட்டுக்கள்!!

Leave a comment