QUIZ கிருஷ்ணன்-அசுரர் மோதல் பத்து QUIZ (Post No.12,125)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,125

Date uploaded in London – –  12 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கிருஷ்ணரைக் கொல்வதற்குப் பல அசுரர்கள்,  பல வடிவில் வந்ததாகப் பாகவத புராணம் கூறும். உங்கள் பாகவத அறிவைச் சோதிக்க இதோ பத்து அசுரக் கேள்விகள் .

1. கிருஷ்ணன், குழந்தையாக இருந்தபோது தாய்ப்பால் கொடுக்கும் வடிவில் வந்த அரக்கி யார் ?

2. வண்டி வடிவில் உருண்டு வந்து கிருஷ்ணனைக் கொல்ல முயன்ற அசுரன் யார் ?

3.த்ருண வார்தா என்ற அரக்கன் எந்த வடிவில் வந்தான் ?

4.கன்று வடிவில் வந்த அசுரனின் பெயர் என்ன ?

5.பீமன் கொன்ற அசுரன் பெயரும் கண்ணன் கொன்ற சூரன் பெயரும் ஒன்றே; அது என்ன?

6. மலைப்பாம்பு வடிவில் வந்த அசுரனின் பெயர் என்ன?

7. கிருஷ்ணனைக் கொல்லவந்த கழுதை அசுரனை பலராமன் கொன்றான். அவன் பெயர் என்ன ?

8.கேசி அசுரன் எந்த வடிவில் வந்தான் ?

9. கிருஷ்ணன் என்னும் எட்டாவது குழந்தை தன்னைக் கொல்ல ப்போகிறது என்பதை அசரீரி மூலம் கேட்டு , பல அசுரர்களை ஏவிய  மன்னன் யார் ?

10.குவலயாபீடம் என்பது என்ன?

Xxxx

Answers

1.பூதனா

2.சகடாசுரன் ; சகடம் என்றால் வண்டி

3.புயல் வடிவில் வந்தான் ; கிருஷ்ணன் அவனைத் தூக்கிச் சென்று பாறையில் மோதச் செய்து கொன்றான் .

4.வத்ஸாசுரன் ; வத்ச என்றால் கன்று .

5.பகாசுரன் என்ற பெயருள்ள அசுரர்கள் பாகவதம், மஹாபாரதம் இரண்டிலும் வந்தாலும் அவர்கள் வெவ்வேறு அசுரர் கள்தான்.

பக என்றால் கொக்கு அல்லது அதுபோல வடிவுள்ள பயங்கர அசுரன்.

6.அகாசுரன்

7. தேனுகாசுரன் . தேனுக என்றால் கழுதை ; டாங்கி (Dhenuka= Donkey) என்ற ஆங்கிலச் சொல் இதிலிருந்து வந்ததே .

8.குதிரை வடிவில்

9.கம்சன்

10.மதுரா நகரில் நுழைந்தபோது கண்ணனைக் கொல்ல வந்த யானையின் பெயர் குவலயாபீடம் ; அதையும் கிருஷ்ணன் கொன்றான்.

–subham —- 

Tags– கிருஷ்ணன் , கம்சன், அசுரர்கள், குதிரை, யானை, கழுதை , கன்று

Leave a comment

Leave a comment