லண்டனில் கோவில் பற்றி ஆங்கில நூல் வெளியீட்டு விழா- பகுதி 2 (Post No.12,127)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,127

Date uploaded in London – –  13 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியானது 

லண்டன் சுவாமிநாதன் தொடரந்து பேசுகையில் கூறியதாவது 

புத்தகத்தை எழுதிய டாக்டர் சிவ லோக நாதன், நான்கு  வயதிலேயே தன்னை இந்து சமயக் கதைகளுக்கு அறிமுகப்படுத்திய அப்பாச்சி (பாட்டி) பற்றிக் கூறுகிறார்.  நமது தாய் தந்தையர் நம்மை சிறு வயதிலேயே கோவிலுக்கு அழைத்துச் சென்றதால்தான் நமக்கும் ஆழமான பக்தி வந்தது;  இன்று அதையே நாம் நமது குழந்தைகள், பேரப்பிள்ளைகள் விஷயத்தில் கடைப்பிடிப்பதில்லை. நாம் வாழும் கால, தேச, சூழ்நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை. என்னுடைய பேரக்குழந்தைகளுக்கு நான் தமிழில் கதையைச் சொல்லும்போது கூட பாதியில் நிறுத்தி, ‘’தாத்தா ஆங்கிலத்தில் சொல்லுங்கள்’ என்று சொல்கிறார்கள். இந்த சூழ்நிலையில் இப்படிப்பட்ட ஆங்கில நூல்கள் மிகவும் தேவை. 178 கதைகளை டாக்டர் சிவலோக நாதன் சுருக்கமாக ஆங்கிலத்தில் ஆங்காங்கே கொடுத்திருப்பது இந்த நூலின் சிறப்பு.

மேலும் ஒவ்வொரு கோவில் பற்றிய கட்டுரையின் இறுதியிலும் எபிலாக் EPILOGUE என்ற பெயரில் முத்தாய்ப்பு வைக்கிறார். அதிலும் சில அரிய தகவல்கள் கிடைக்கின்றன.

கோவிலில் தற்காலிக நூலகங்கள்

எனக்கு ரொம்பநாளாக ஒரு ஆசை. லண்டன் கோவில்களில் மதிய நேரத்தில், தற்காலிக  நூலகங்கள் அமைய வேண்டும் என்பதே அந்த ஆசை. கோவில் சந்நிதி அடைத்த நேரத்தில்  அந்த மண்டபத்தில் சமய நூல்களை லைப்ரரி  போல படிக்க வைக்க வேண்டும். ஆண்களுக்காக ஒதுக்கப்படும் நாளில் ஆண் தொண்டர்களே அதை நிர்வகிக்க வேண்டும். பெண்களை அனுமதிக்கும் நாளில் பெண் தொண்டர்களே அந்த நூலகத்தை நிர்வகிக்கலாம். இவ்வாறு கோவில் மண்டபத்தில் தற்காலிக நூலக வசதி செய்தால் டாக்டர் சிவலோகநாதன் எழுதிய புஸ்தகம் போன்ற சமயம் தொடர்பான நூல்களை மக்கள் படிக்க வசதி செய்யலாம் .

இதன் விலை 25 பவுன்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவிலுக்கு நன் கொடையாக 250ம் கொடுக்கலாம்; 2500ம் கொடுக்கலாம். அவ்வளவு விஷயங்கள் இதில் உள்ளன.

இந்த  இந்த நிகழ்ச்சிக்கு கோவில் அறங்காவலர் சீனி. சம்பத்குமார் தலைமை தாங்கினார். அறங்காவலர் குழுத் தலைவர் ராமதாஸ் அறிமுக உரை ஆற்றினார். பிள்ளையார் பட்டி தலைமை குருக்களும், உலக இந்து ஆன்மீக கலாசார கேந்திர நிறுவனருமான திரு பிச்சை குருக்கள், லணடன் முருகன் கோவில் தலைமை அர்ச்சகர் திரு. நாகநாத சிவம் ஆகியோர் ஆசியுரை வழங்கினார்கள். ஏனைய அறங் காவலர்களான திரு தட்சிணாமூர்த்தி, திரு.அன்பானந்தர் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்தனர். நூல் வெளியீட்டு விழா என்றால் 20, 25 பேர்தான் வருவார்கள். இங்கோ சபை நிறைந்த  கூட்டத்தைப் பார்க்கிறேன் என்று திரு.நாக நாத சிவாச்சார்யார் குறிப்பிட்டார்.. கோவில்  அறங்காவலரான திருமதி லெட்சுமி ராஜகோபால் மற்றும் பலர், திரு பிச்சை சிவாம்சசார்யாரிடமிருந்து நூலைப் பெற்றார்கள். அற ங் காவலர் குழுவின் செயலாளர் திருமதி பத்மா சேகர் நன்றி நவின்றார்.

கூட்டம் முடிந்தவுடன் ஆசிரியர் டாக்டர் சிவலோகநாதனிடமிருந்து கையெழுத்திட்ட நூலைப் பெறுவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்றனர் . இறுதியில் சுவையான  பிரசாதங்களும் வழங்கப்பட்டன . குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்தைத் துவக்கி, குறிப்பிட்ட நேரத்துக்குள் கூட்டத்தை முடித்தது இதை ஏற்பாடு செய்தோரின் திறமைக்கு சான்றாக அமைந்தது.

.— SUBHAM —–

TAGS- லண்டன் சுவாமிநாதன், கோவில் அறங்காவலர், நூல் வெளியீட்டு விழா

Leave a comment

Leave a comment