சூத்திரர்கள் வேதம் படிக்கக்கூடாது என்பது சரியே — காந்திஜி (Post No.12,132)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,132

Date uploaded in London – –  14 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

அஹிம்சை என்பது என்ன? போர்க்கள நூலான பகவத் கீதை அஹிம்சை நூலாகுமா? என்று ஒரு அன்பர் கேட்டதற்கு காந்திஜி அவரது பத்திரிகையான யங்  இந்தியா’-வில் நீண்ட பதில் கொடுத்துள்ளார் . அதில் மனைவியரையும்  சூத்திரர்களையும்  அடிப்பது பற்றி உலகப் புகழ்பெற்ற கோஸ் வாமி துளசிதாஸ் செய்த கவிதைக்கும் விளக்கம் கொடுக்கிறார். தான் மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தியது பற்றியும் சொல்கிறார் ; சொற்களை மட்டும் ஆராயாமல், அதன் பின்னுள்ள அர்த்தத்தைப் புரிந்துகொள்வது அவசியம் என்றும் வலியுறுத்துகிறார் ; இதோ காந்திஜியின் பதில் :-

“இந்தக் கேள்வி என்றும் நீடித்து நிற்கும் கேள்விதான் . பகவத் கீதையைப் படித்த ஒவ்வொருவரும் தானே பதில் கண்டுபிடிக்க வேண்டிய கேள்வி ; என்னுடைய பதிலை நான் சொன்னாலும், ஒருவரின் அறிவை  விட இருதயத்தில் எழும் உணர்வுகளே ஒருவரை வழி நடத்துகிறது என்பதை நான் அறிவேன்;  உள்ளம் ஏற்கும் ஒரு விஷயத்துக்குப் பின்னர், புத்தியே காரணம் கற்பிக்கும்; வாதங்கள் வரத்தான் செய்யும். மனிதன் என்பவன் தான் செய்வதற்கும், தான்  நம்புவதற்கும் ஆதரவாக காரணங்களைக் கண்டுபிடிக்கிறான்.

XXXX

1889-ம் ஆண்டில்தான் எனக்கு கீதை நூல் கிடைத்தது. அப்பொழுது எனக்கு கிட்டத்தட்ட இருபது வயது. அப்போது அஹிம்சை என்பதை நான் அறியேன் . குஜராத் கவிஞர் சாமல்பட்டாவின் கவிதை வரிகள் என் மனதில் ஆழமாக வேரூன்றியது . ஒரு எதிரியைக்கூட அன்பினால் வெல்ல முடியும் என்பது அது. ஆனால் காலத்தால் அழியாத அஹிம்சை எனும் கொள்கை  அதிலிருந்து வரவில்லை. ஏனெனில் அது பிராணிகள் பற்றி சொல்லவில்லை ; அதற்கு முன்பு நான் மாமிசம் சாப்பிட்டும் வந்தேன். பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்களைக் கொல்வது மனிதனின் கடமை என்றும் நம்பினேன் . இப்பொழுது நான் நம்புவது விஷப்பிடராணிகளையும் கூட அஹிம்சாவாதி கொல்லத் தேவை இல்லை என்பதே . மேலும் அந்தக்காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்க்க நான் என் உடலைத் தயார்  செய்துவந்தேன் . புகழ் பெற்ற குஜராத்தி கவிஞரின் வரிகளை முனுமுனுத்தேன் :

வெள்ளைக்காரன் ஆட்சி செய்வத்தில் என்ன அதிசயம் …………

என்ற வேடிக்கைப் பாடல் அது.

ஆங்கிலேயரை எதிர்க்க உடல் வலிமை அவசியம் என்பதால் முதல்படியாக மாமிசம் சாப்பிட்டேன் ; இங்கிலாந்த்துக்குப் போவதற்கு முன்னிருந்த நிலைமை இது. பின்னர் மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தினேன். என் அம்மாவுக்கு நான் செய்துகொடுத்த சத்தியத்தை வாழ்நாள் முழுதும் பின்பற்ற எண்ணி இப்படிச் செய்தேன் . சத்தியத்தின் மீது எனக்கிருந்த அபார நம்பிக்கை என்னைப்  பல  தவறுகளிலிருந்து காப்பாற்றியது.

இங்கிலாந்தில் வசித்த போது இரண்டு ஆங்கிலேய  நண்பர்களின் சகவாசத்தால் கீதை எனும் நூலை படிக்க நேரிட்டது. படிக்க நேரிட்டது என்று நான் ஏன் சொல்கிறேன் என்றால், நானாக விரும்பி அதைப் படிக்காமல் அவர்களுக்காகப் படித்தேன். அதைப் படிக்கச் சொன்னபோது என் அறியாமையை எண்ணி நான் வெட்க்கப்பட்டேன். என்னுடைய மத நூல் பற்றி எனக்கு தெரியவில்லை என்பது வேதனையாக இருந்தது. ஏனெனில் அதைப்புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு சம்ஸ்க்ருத அறிவு கிடையாது. என்னுடைய நண்பர்களுக்கும் ஸம்ஸ்க்ருதம் தெரியாது. என் மானத்தைக் காப்பாபற்றிக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் உதித்தது . அவர்கள் எட்வின்  ஆர்னால்ட்  அற்புதமாக மொழிபெயர்த்த பகவத் கீதை பிரதியை என் முன்னே வைத்தனர். அதை அப்படியே கரைத்துக் குடித்துவிட்டேன்; என்னை அது முழுதும் ஆட்கொண்டுவிட்டது . இரண்டாவது அத்தியாயத்தின் கடைசி 19 ஸ்லோகங்கள் என்னுடைய இருதயம் என்னும் பலகையில் சாச்வதமாகப் பொறிக்கப்பட்டுவிட்டது . என்னைப் பொருத்த வரையில் அது ஞானத்தின் சாரம். அவை போதிக்கும் விஷயம் காலத்தால்  அழிக்கப்படமுடியாத சத்தியங்கள்;  காரண காரியங்களை ஆராய்ந்து சொன்னாலும் அது முதிர்ச்சிபெற்ற அனுபவ அறிவு ஆகும்.

அதற்குப்பின்னர் கீதையின் பல மொழிபெயர்ப்புகளையும் ,  பாஷ்யங்களையும் (விளக்க உரை) படித்துவிட்டேன் . என் மனதுக்குள் பல கேள்விகளை எழுப்பி, அந்தத் தடைகளுக்கு எல்லாம் விடையும் கண்டேன் ; ஆயினும் முதல் தடவை நான் அதைப் படித்தபோது ஏற்படுத்திய  பிரமிப்பை அழிக்கவே முடியாது.அந்த ஸ்லோகங்கள்தான் என்னுடைய கீதா பாஷ்யத்தின் ஆணிவேர். அந்த 19 ஸ்லோகங்களுக்கு முரணாக ஏதேனும் ஸ்லோகக்ங்கள் வந்தால் அவைகளை ஒதுக்கித்தள்ளுங்கள் என்று கூட சொல்வேன். ஆனால் அடக்கம் மிக்க ஒரு மாணவன் எதையும் ஒதுக்கமாட்டான் அவன் சொல்வான் – ஓஹோ இந்த முரண்பாடுகளை புரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்கு ஞானம் இன்னும் ஏற்படவில்லை.; இன்னும் முதிர்ச்சி ஏற்பட்டவுடன் எனக்கு இது விளங்கும்- என்று. இப்படித்தான் பணிவான ஒருவன் தன்னையும் பிறரையும் அணுகுவான்.

சூத்திரன் ‘அஹம் பிராம்மாஸ்மி’ சொன்னால் !!!!!!

சாஸ்திரங்களை விளங்கிக்கொள்ள அதை பயபக்தியுடன் பயிலவேண்டும் அப்போதுதான் சரியான அர்த்தம் புரியும். சூத்திரர்கள் இவைகளைப் படிக்கக்கூடாது  என்று தடை வித்தித்தில் பொருள் இல்லாமல் இல்லை சூத்திரன் என்றால் ஆன்மிகம் அறியாத  அப்பாவி என்று பொருள். அவன்  சாஸ்திரங்களை , அறியாத விஷயங்களை விளக்க முடியாது அல்ஜீப்ரா கணித சமன்பாடுகளை எல்லோருமா செய்ய இயலும் ? இவற்றுக்கெல்லாம் அடிப்படை அறிவு அத்தியாவசியம் ஆகிறது . பாவமே உருவமாக வந்த ஒருவன் வாயில் அஹம் பிராம்மாஸ்மி ( நானே கடவுள்) என்ற மஹா வாக்கியம் என்ன படாத பாடு படும் !!! அதை அவன் எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்ய முடியும் ? அப்படிப்பட்டவன் கைகளில் அது எப்படியெல்லாம் கசங்கிப் போகும்!!!

Xxx

ஆகையால் சாத்திரங்களை வியாக்கியானம் செய்ப்பவனுக்கு ஆன்மீக கட்டுப்பாடு தேவை . அவன் யம – நியம விதிகளைப் பின்பற்ற வேண்டும் . அது ஒழுக்க நடைமுறைகளின் சாசுவதமான வழிகாட்டி. மேலோட்டமாக எதையும் பின்பற்றுவது பயனற்ற செயல். இதற்காகத்தான் சாஸ்திரங்களை க் கற்பிக்க  குரு அவசியம் என்று சொன்னது . தற்காலத்தில் குரு என்பவர் கிடைப்பது அரிது என்பதால் பக்தி இருந்தால் போதும் என்று தற்கால புஸ்தகங்கள் மூலம் சாது சன்யாசிகள் சொன்னார்கள். பக்தி இல்லாதவர்கள்கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் சாஸ்திரங்களை வியாக்கியானம் செய்ய அருகதை அற்றவர்கள் .

xxx

சத்தியத்தை அறிவதற்கு மாமிச உணவைக் கைவிட வேண்டும்

Xxx

மனைவியையும் சூத்திரனையும் அடியுங்கள் — துளசிதாஸ்

சொற்களை ஆராயாமல் அதன் பின்னுள்ள தாத்பர்யத்தை (கருத்தை) ஆராயவேண்டும் என்பது மற்றும் ஒரு விதி ஆகும். புனிதமும், தூய்மையும் , இரக்கமும் உடைய பரிபூரண நூல் துளசிதாஸ் எழுதிய ராமாயணம் ஆகும். சூத்திரர்கள்மனைவிமார்கள் , முட்டாள்கள் , டமாரங்கள் ஆகியன அடிப்பதற்குரியவை என்ற பொருள்படும் ஒரு கவிதை அதில் வருகிறது . இந்த ஸ்லோகத்தைக் காட்டி ஒருவன் தன் மனைவியை அடித்தால் அவனுக்கு விமோசனமே இல்லை. ராமபிரான் அவருடைய மனைவியை அடித்ததும் இல்லை. அவளுக்குத் துன்பமும் கொடுத்ததில்லை . துளசிதாஸ், அவரது காலத்தில் நிலவிய ஒரு பழமொழியை தனது ராமாயணத்தில் நுழைத்துவிட்டார்; அவ்வளவுதான் . இந்த ஸ்லோகத்தைக் காட்டி கொடூர புத்தியள்ளவர்கள் தன்னுடைய மனை வியை அடிப்பார்கள் என்று அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார் . ஒரு வேளை , அவரது காலத்தில் நிலவிய ஒரு வழக்கத்தின்படி துள சிதாஸ் , அவருடைய மனைவியை அடித்திருந்தால் ….. அதுவும் தவறுதான் கணவன்மார்கள் மனைவிகளை அடிப்பது நியாயமே என்பதை அறிவிக்க துளசிதாஸ் ராமாயணம் எழுதவில்லை .மனிதர்களில் பூரணத்துவம் எய்திய ராமபிரானை வருணிக்கவும் உதாரண மனைவியாக விளங்கிய சீதையைப் போற்றவும் சகோதரத்துவத்தின் சின்னமாக விளங்கிய பரதனைக் காட்டவுமே அவர் ராமாயணத்தைப் படைத்தார் . அதில் ஏதேனும் தவறான பழக்க வழக்கங்கள் மேற்கோள் காட்டப்பட்டிருந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும் . துளஸி தாஸ்  பூகோள புஸ்தகமும் எழுதவில்லை. ராமாயணத்தில் ஏதேனும் தவறான பூகோள விஷயம் வந்தால் அதையும் அறவே நீக்க வேண்டும்” .

Xxx

இதற்குப்பின்னர் கீதையின் ஸ்லோகங்களை விளக்கி நீண்ட கட்டுரை எழுதியுள்ளார் காந்திஜி

ஆதாரம் Young India, 12-11-1925.

—-subahm —–

Tags- காந்திஜி, சூத்திரர் , வேதம், துளசிதாஸ், மனைவியை அடித்தல், மாமிச உணவு, shudras

Leave a comment

Leave a comment