ஆரிய திராவிட வாதத்துக்கு எள்ளும் நீரும் கொடுக்கும் செமை அடி (Post.12,136)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,136

Date uploaded in London – –  15 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

 மத்திய ஆசியப் பனிப் பிரதேசத்திலிருந்து ஆரியர்கள் வந்தார்கள்;  இந்து மதம் என்பதெல்லாம் இறக்குமதிச் சரக்கு என்று கூறி வந்த மாக்ஸ் முல்லர் கும்பல் மீது மேலும் ஒரு அடி– செமை அடி — விழுந்துள்ளது. ஏற்கனவே கடந்த 50 ஆண்டு சரஸ்வதி- சிந்து நதி நாகரீக ஆராய்ச்சி, அவர்களின் வாதத்தின் முனையை மழுங்க வைத்து,  வெண்ணெயைக் கூட வெட்ட முடியாமல் செய்ததை நாம் அறிவோம். சிந்து சமவெளி முத்திரைகளில் காணப்படும் மர்மச் சின்னம் ‘சோம ரசம் வடிகட்டும் சல்லடை’/ பில்டர் என்று சொல்லிவிட்டு செத்துப்போன தமிழ் அறிஞர்களையும் நாம் அறிவோம். இதுவரை சிந்து வெளியிலும் இந்தியா எங்கிலும் கண்டுபிடிக்கப்பட்ட எள் பற்றி  யாருமே பேசவே இல்லை. ஏனெனில் இது,  இந்த இறக்குமதி வாதத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டது .

இந்தியாவில் உள்ள அனைவரும் , இறந்த முன்னோர்களுக்கு எள்ளும் நீரும் இறைப்பதை அறியாதார் எவருமிலர். பிராமணர்கள் ஆண்டில் நான்கு  நாட்களுக்கு ஒரு முறை இதைச் செய்வார்கள் (ஆண்டுக்கு 90 முறைக்கு மேல்). பிராமணர் அல்லாத இந்துக்கள் ஆடி, தை அமாவாசைகளிலும் புரட்டாசி மஹாளய அமாவாசை காலத்திலும் எள்ளும் நீரும் கொடுப்பர். இந்த வழக்கம் உலகில் வேறு எங்கும் இல்லை. எள்ளும் பிண்டமும் (Sesame seeds and Rice balls) கொடுப்பது சங்க இலக்கியத்திலும் உள்ளது. தமிழ் நூல்கள் 2000 ஆண்டுப் பழமையானவை . அதற்கு மிகவும் முந்திய 3000, 4000 ஆண்டு பழமையான ஸம்ஸ்க்ருத நூல்களும் இது பற்றி இயம் புகின்றன.

எள் என்பதும் அரிசி என்பதும் வெப்ப மண்டலத் தாவரங்கள் (Tropical Plants). இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாச் சடங்குகளிலும் தண்ணீரைப் பயன்படுத்துவர். பனி பெய் இமயத்திலும்  சரி, வெய்யில் காயும் கன்யாகுமரிலும்  சரி ஒரே வழக்கத்தைக் காண்கிறோம் .ஒரு சமூ கம் , குளிர்ப் பிரதேசத்திலிருந்து குடியேறினால் இப்படிச் செய்ய மாட்டார்கள். ஏனெனில் கல்யாண விஷயங்களிலும் மரணச் சடங்குகளிலும் புதிய வழக்கத்தைப் புகுத்த முடியாது. இன்றும் கூட அவரவர்  சமூக வழக்கப்பட்டியே இவை நடைபெறுவதைக் காண்கிறோம். சங்க இலக்கியத்திலும் நாள், நட்சத்திரம் பார்த்து கல்யாணம் கட்டிய செய்யுள்கள் (Two references to Rohini) உள்ளன. பிண்டம், தர்ப்பை பற்றிய இறுதிச் சடங்குகள் பாண்டியன் மனைவி தீப்பாய்ந்து (Sati)  கணவனுடன் இறந்த செய்திகள் புற நானூறில் உள்ளன .

மாக்ஸ் முல்லர் கும்பல், ஆரிய திராவிட வாதத்தால் ஹிட்லரை உருவாக்கி பலகோடி பேரைக் கொன்றதை அறிவோம்.

மாக்ஸ் முல்லர் நான் ஒரு ஜெர்மானியன். ஆரிய வம்சாவளியில் வந்தவன் என்று ஆரம்பகாலத்தில் தம்பட்டம் அடிக்கவே ஜெர்மானியனான ஹிட்லர் அதைப் பிடித்துக்கொண்டு, நானும் ஆரியன், அவர்கள் மட்டுமே உலகை ஆள முடியும் என்று எழுதி, இந்துக்களின் மங்கள சின்னமான ஸ்வஸ்தி (Swastika) காவை கொடியிலும் தோள் பட்டையிலும் பொறித்துக் கொண்டு அனைவரையும் கொன்று குவித்ததை உலகப் போர் வரலாற்றிலும் ஹிட்லரின் சுயசரிதை புஸ்தகத்திலும் கண்டோம். இந்துக்கள், 

XXXX

எள் (Til or Sesame)  என்பதன் தாவரவியல் பெயர் Sesamumorientale or  indicum சிசேமம் ஓரியன்டேல் அல்லது இன்டிகம் . இது இந்தியத் தாவரம் என்பது மட்டுமல்ல இந்துக்கள் பயன்படுத்துவது போல உலகில் வேறு யாரும் பயன்படுத்துவதும் இல்லை. எள்ளையும் நீரையும் இமயம் முதல் குமரிவரை இந்துக்கள்  மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இது இந்தக்கள் மட்டும்தான் மண்ணின் மைந்தர்கள் (Sons of the soil) ;  ஏனையோர் வந்தேறு குடிகள் என்பதையும் சொல்லாமல் சொல்கின்றன.

இனி எள்ளின் உபயோகங்களைக் காட்டி இந்துக்கள் மட்டுமே இந்நாட்டின் குடிமக்கள் என்பதையும் காட்டுவேன்.

மகர சங்கராந்தி, யுகாதி முதலிய வருஷப் பிறப்புகள், முன்னோருக்கு  கொடுக்கப்படும் படைப்புகள், கணேஷ், கெளரி, லட்சுமி பூஜைகள் நவக்ரஹ ஹோமங்கள் ஆகியவற்றில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ‘எள்’ (Tila seeds) உபயோகப்படுகிறது.

மஹாராஷ்டிரத்திலும் வட நாட்டிலும் மகர சங்கராந்தி தினத்தில் இனிப்பான எள் உருண்டையை எல்லோருக்கும் கொடுத்து ‘இது போல எப்போதும் இனிமையாகப் பேசு’ என்று மராத்தி மொழி பழமொழியைச் சொல்லுவார்கள்.

தமிழர்களுக்கு ‘எள்’ இல்லாமல் வாழ்வே கிடையாது எண்ணெய் என்ற தமிழ்ச் சொல்லே எள் + நெய் என்பதிலிருந்து வந்ததுதான் அதை இன்று நாம் பெட்ரோலியத்துக்குக்கூட பயன்படுத்துகிறோம். அந்த அளவுக்கு ஆழமான தமிழ்ச் சொல் ‘எள்’ . அதுமட்டுமல்ல தோசையானாலும், வடையானாலும் நான் பயன்படுத்துவது ‘நல்ல எண்ணை’ (Gingelly Oil) தான்

வாரத்துக்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது தமிழ்நாட்டில்தான் அதிகம். கேரளம் தவிர மற்ற எல்லாப்பகுதிகளிலும் எள்ளை உடம்பில் தேய்த்துக் குளிக்கும் சடங்குகளைக் காணலாம் .

இமயம் முதல் குமரி வரை அமாவாசைகளிலும் திதி கொடுக்கும் நாட்களிலும் எல்லா ஜாதியினரும் பயன்படுத்துவது எள் ‘

xxxxx.

ஷட் தில ஏகாதசி , பீஷ்மஅஷ்டமி

தில என்றால் சம்ஸ்க்ருதத்தில் எள் . இதிலிருந்து வந்து தான் தைலம். அதிலிருந்து வந்ததுதான் ஆங்கிலச் சொல் ஆயில் OIL . ஆக தமிழ் எண்ணெய்க்கும் (எள் +நெய் ), தைலத்துக்கும் ஆதாரம் இது. அதை நாம் எல்லா ஆயில் oil களுக்கும் பயன்படுத்துவதால் இதுதான் மூலம் என்பதும் உள்ளங் கை நெல்லிக்கனி போல விளங்கும்.

வருடத்தில் குறைந்தது  24 ஏகாதசி தினங்களில் இந்துக்கள் உபவாசம்/ உண்ணாவிரதம் நோன்பு நூற்பார் கள். அதில் ஒன்று ஷட் தில ஏகாதசி என்பதாகும். இதன் தமிழாக்கம் ஆறு எள் பதினோராம் நாள் . ஆண்டில் மாசி மத மாத கிருஷ்ண பட்ச ஏகாதசியை இப்படி அழைப்பர். அன்று எள் ள்ளை ஆறு விதங்களில் பயன்படுத்துவதால் இந்தப்பெயர். எள்ளை தண்ணீரில் போட்டுக் குளித்தல்,  எள்ளை தண்ணீரில் போட்டுக் குடித்தல் , எள்ளை இறந்தோருக்கு படைத்தல், ஆறு எள் மட்டும் சாப்பிடுதல், எள்ளை தானம் செய்தல், எள்ளை அரைத்து உடம்பில் தேய்த்துக்கொள்ளுதல் என்பனவற்றை நம்பிக்கையுள்ளோர் பின்பற்றுகிறார்கள்

தமிழ் நாடு போல ஊருக்கு ஊர் எண்ணெய்ச் செக்கு இல்லாத ஊர்களில் எள்ளை அரைத்து உடம்பில் தடவிக் கொள்கிறார்கள்.

லண்டனில் எல்லா வடக்கத்தியார் கடைகளிலும் கடலை மிட்டாய் கிடைப்பது போல எள் மிட்டாயும் எப்போதும் கிடைக்கும் . இதன் மருத்துவச் சிறப்புகளை ஆயுர்வேத நூல்களிலிருந்து அறியலாம் .

xxxx

பீஷமரின் தியாகத்தை அறியாத இந்துக்கள் இல்லை. தன்னுடைய தந்தையின் காமப் பசியைத் தணிப்பதற்காக தான் வாழ்நாள் முழுதும் பிரம்மச்சாரியாக இருப்பேன் என்று சப்தம் செய்தார் ; ஏனெனில் புது மனைவி என் மகன்தான் அடுத்த வாரிசாக வேண்டும் என்று சொன்னவுடன் நான் கல்யாணமே கட்ட மாட்டேன் ஆகையால் வாரிசுப் பிரச்சனையே வராது என்று சபதம் செய்தவுடன் வானுலக தேவர்களும் மண்ணுலக மக்களும் பீஷ்ம ,பீஷ் ம  (அதி பயங்கரமான அற்புதம் ) என்று குரல் எழுப்பவே அவரது இயற்பெயர் மறைந்து  காரணப் பெயரே நிலைத்துவிட்டது . அவருடைய ஒரிஜினல் பெயர் தேவ வ்ரதன் (देवव्रत);   கங்கை மகன்  Gangaputra (गंगापुत्र), காங்கேயன்  Gangeya (गांगेय). என்ற பெயர்களும் உண்டு . அவர் பிரம்மச்சாரி என்பதால் திதி கொடுக்க ஆள் இல்லை. ஆகையால் பாரத நாட்டு மக்கள் அனைவரும் அவருக்கு ஆண்டுதோறும் திதி/ தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று விதிக்கப்பட்டது. இன்றும் உலகம் முழுதும் வாழும்  இந்துக்கள் அனைவரும் ஜாதி வேறுபாடின்றி இதைச் செய்கின்றனர். அந்த தினத்தின் பெயர் பீஷ்ம அஷ்டமி = பீஷ்மாஷ்டமி भीष्माष्टमीஅது ஆண்டுதோறும் மாசி மாத சுக்ல பட்ச அஷ்டமியில் அனுஷ்டிக்கப்படுகிறது . மிகவும் எளிய முறையில் அன்று எள்ளும் தண்ணீரும் கொடுத்து அவரை நினைவு கூறுகிறோம்.

(மாதங்களைக் கணக்கிடும் முறைகள் பற்றி முன்னரே எழுதியுள்ளேன். இரண்டு முறைகள் உள்ளன ).

ஆக இந்துக்களின் வாழ்வில் எள்ளும் நீரும் இரண்டறக்க கலந்து இருப்பதால், இனி எவனாவது ஆரிய-திராவிட வாதம் பேசினால் அவன் வாயில் அரிசியும் எள்ளும் போடுக .

–சுபம்—

Tags– ஷட் தில ஏகாதசி , பீஷ்ம அஷ்டமி , திதி , எள் , மாக்ஸ் முல்லர் ,கும்பல், ஆரிய திராவிட வாதம்

Leave a comment

Leave a comment