
Post No. 12,139
Date uploaded in London – 16 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
அறிஞர்களின் மூட நம்பிக்கைகள்! – 2
ச.நாகராஜன்
தனது ஆய்வுகளின் போது தனது இறுதிக்காலத்தில் தான் கடைத்தெற முடியுமா என்று கவலைப்படுவது ரூஸோவின் பழக்கம்.
தனது ‘Confessions’ -இல் ரூஸோ கூறுவது இது:
“இப்போது இந்தக் கணத்தில் நான் இறந்து விட்டால், நான் கடைத்தேறுவேனா?” (If I died at this moment, should I be saved?) என்றே நான் என்னைக் கேட்டுக் கொள்வேன்”
அவர் எழுதியது :
“ஒரு நாள் நான் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த போது ஒரு மரத்தின் அடிபாகத்தில் இயந்திரகதியில் கற்களை தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தேன். அப்படித் தூக்கிப் போட்டுக் கொண்டிருக்கும் போதே எனக்குள் நானே, “இதோ எனக்கு எதிரில் உள்ள மரத்தை நோக்கி ஒரு கல்லை எறியப் போகிறேன்” என்று சொல்லிக் கொண்டேன். அது குறி தவறாமல் பட்டால் எனக்கு நற்கதி கிடைக்கும். தவறி விட்டாலோ நிச்சயம் எனக்குக் கிடைக்காது.”
நடுங்கிய கைகளுடன் நான் கல்லைத் தூக்கிப் போட அது அருமையாக மரத்தின் அடிப்பாகத்தின் நடுவைச் சென்று தாக்கியது. அன்றிலிருந்து நான் எனது நற்கதி பற்றி சந்தேகப்படுவதே இல்லை.’
மேரி ஆண்டாய்னெட் (Mary Antoinette) தனது வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ள சின்னச் சின்ன சம்பவங்கள் பற்றிக் கூட கவலைப்படுவார்.
வெர்ஸலிஸ் அரண்மனையில் ஒரு கண்ணாடி இருந்தது. அதில் அவர் தனது தலையில்லாத பிம்பத்தைக் கண்டார்.
அந்தக் கண்ணாடியின் விசித்திர அமைப்பினால் அவரது உடல் மட்டும் அதில் தெரிந்தது. தலை தெரியவில்லை. ஏற்கனவே கலங்கிக் கொண்டிருந்த மேரி தனது தலைவிதி ஒரு முடிவுக்கு வந்து விட்டது என்று கலங்கிப் போனார்.
ரூபின்ஸ்டெயின் (Rubinstein) திங்களன்றும் வெள்ளியன்றும் பயணத்திற்குப் புறப்படமாட்டார். மிகவும் பயப்படுவார்.
ஹிட்லருக்கு 7ஆம் நம்பர் மிகவும் பிடிக்கும். அவர் தனது முக்கியமான பெரிய தாக்குதல்களை மாதத்தின் ஏழாம் நாளில் தான் துவங்குவார்.
தனது நாஜி சின்னமான ஸ்வஸ்திகா சின்னத்தை புத்த மத சின்னம் போல அவர் சித்தரித்தார்.
கார்னேலியஸ் வாண்டர்பில்ட் (Cornelius Vanderbilt) தனது படுக்கை கட்டிலின் கால்களை உப்பு நிறைந்த தட்டில் நிற்க வைத்தார். அது தீய ஆவிகளிடமிருந்து தன்னைக் காக்கும் என்பது அவரது நம்பிக்கை.

சாமர்செட் மாம் (Somerset Magham) தனது வீட்டில் கணகணப்பை உருவாக்கும் இடத்தில் கண்திருஷ்டிக்கான ஒரு அடையாளத்தைச் சித்தரித்து வைத்திருந்தார். அது அவரது எல்லா புத்தகங்களிலும் ஸ்டேஷனரி பொருள்களின் மீதும் கூடப் பொறிக்கப்பட்டிருக்கும்.
நெப்போலியனுக்குப் (Nepoleion Bonaparte) பூனைகள் என்றாலே (ailurophobia)
பயம்.
வின்ஸ்டன் சர்ச்சில் நல்ல அதிர்ஷ்டம் பெறுவதற்காக கறுப்புப் பூனைகளை வளர்த்தார்.
அல் ஜாlல்ஸன் (Al Jolson) புதிய நிகழ்ச்சி ஒன்றைத் தொடங்கினால் அதில் பழைய ஆடைகளையே அணிவது வழக்கம்.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மேரி க்வீன் (Mary Queen of Scots) தனது இறுதி காலத்தை சீட்டுக் கட்டு ஜோதிடம் மூலமாகவே அறிந்தார். அவர் கை நிறைய ஸ்பேட் கார்ட் இருந்தது.
லார்ட் நெல்ஸன் தனது கப்பலில் குதிரை லாடத்தைத் தொங்க விட்டிருந்தார்.
ஆங்கில எழுத்தாளரான சாமுவெல் ஜான்ஸன் எப்போதும் ஒரு வீட்டிற்குள் தனது இடது காலை வைத்து நுழையவே மாட்டார். ஏனெனில் அது வீட்டிலிருப்போருக்கு துரதிர்ஷ்டத்தைத் தரும் என்று அவர் கூறுவார்.
அயர்லாந்தின் தேசீயத் தலைவரான சார்லஸ் ஸ்டீவர்ட் பார்னெல் (Charles Steward Parnell, Irish Nationalist Leader) 13 ஷர்த்துகள் அடங்கிய சட்டத்தில் ஒரு போதும் கையெழுத்திட மாட்டார். 14ஆம் ஷரத்தைச் சேர்த்தால் தான் அவர் கையெழுத்திடுவார்.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஹாரி எஸ். ட்ரூமென் (S Truman) ஒய்ட்ஹவுஸில் தனது அலுவலக வாச்யில் ஒரு குதிரை லாடத்தைத் (horse shoe) தொங்க விட்டிருந்தார்.
இறுதியாக, ஷேக்ஸ்பியர் கூறுவதைப் பார்ப்போம் :
“For many men that stumble at the threshold
Are well foretold that danger lurks therein.”
ஆக உலகெங்கும் பலவித நம்பிக்கைகள் உண்டு.
நம்மை மட்டும் குறி வைத்து மேலை நாட்டினர் பகுத்தறிவுவாதம் பேசி மூடநம்பிக்கைக்காரர்கள் என்று சொல்வது பெரும் தவறு அல்லவா?!
***