
Post No. 12,140
Date uploaded in London – – 16 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

தீனபந்து சி எப் ஆண்ட்ரூஸ் C F Andrews , எப்படியாவது காந்திஜி Gandhiji வாய் மூலம் மத மாற்றம் (Conversion) சரியே என்று சொல்ல வைக்கவேண்டும் என்று தந்திரம் செய்தார். ஆனால் மஹாத்மா காந்தியோ கிறிஸ்தவ மத மாற்றம் உலக சமாதானத்துக்கு (Danger to World Peace) பேராபத்து என்று சொல்லி (அ) தீன பந்துவின் வாயை மூடினார். இதோ காந்தியின் ஹரிஜன் பத்திரிகை 28-3-1936 பத்திரிகையில் வெளியான உரையாடல்:-
C F Andrews: ஒரு மனிதன் நன்றாகச் சிந்தித்து, பிரார்த்தனை எல்லாம் செய்துவிட்டு, நான் கிறிஸ்தவனாக மதம் மாறினால்தான் எனக்கு விமோசனம் கிடைக்கும் என்று உங்களிடம் சொன்னால் , காந்திஜி, நீங்கள் என்ன செய்வீர்கள் ?
Gandhiji : நான் சொல்வேன் – ஒரு கிறிஸ்தவனிடம் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவன், உதாரணமாக இந்து ஒருவன் வந்து, இப்படிச் சொன்னால், நீ நல்ல இந்துவாக மாறு. மற்ற மதத்தை நாடாதே – என்பேன்.
C F Andrews: இது பற்றி உங்களுடன் நீண்ட விவாதம் செய்ய முடியாது; என்னுடைய மனப்பாங்கு உங்களுக்குத் தெரியும். கிறிஸ்து மட்டுமே பரலோக சாம்ராஜ்யத்தைக் காட்ட முடியும் என்ற வாதத்தை நான் என்றோ நிராகரித்துவிட்டேன் உதாரணத்துக்காக கேட்கிறேன். ஆக்ஸ்போர்ட் குரூப் இயக்கத்தினர் , உங்கள் மகனின் வாழ்க்கையை மாற்றி, உங்கள் மகனையே கிறிஸ்தவனாக்கினால் நீங்கள் என்ன சொல்வீர்கள் ?
(காந்திஜியின் மகன் பக்கா அயோக்கியன் ; குடிகாரன்; அவனை முஸ்லிம்கள் மதம் மாற்றினர் ; காந்திஜி மனைவி புலம்பல் கடி தங்கள் எழுதியும் அவன் திருந்தாதால் கஸ்தூரிபாய் காந்தி சிறையில் இருக்கும்போதே இறந்து போனார் ; இது பற்றி அந்தக் காலத்தில் தினமும் பத்திரிக்கையில் திடுக்கிடும் செய்திகள் வெளிவரும். அதை அறிந்தவர்களுக்கு ஆண்ட்ரூஸின் கேள்வி புரியும்; நொந்து போன காந்திஜியை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல குத்துகிறார் ஆண்ட்ரூஸ்)
மதம் மாறிய பிராமணன் கதை
Gandhiji : நான் சொல்வேன் ;ஆக்ஸ்போர்ட் கிறிஸ்தவ மதமாற்ற இயக்கத்தினர் எத்தனை பேரின் வாழ்வை வேண்டுமானாலும் சீரமைக்கட்டும். ஆனால் அவர்களின் மதத்தை மாற்றத் தேவை இல்லை ; அவரவர் மதத்தில் உள்ள நல்ல போதனைகளைச் சுட்டிக்காட்டி அதை பின்பற்றுங்கள் என்று அவர்கள் சொல்லட்டுமே.
என்னிடம் ஒரு பிராமணப் பையன் வந்தான் . நீங்கள் (C F Andrews) எழுதிய புஸ்தகத்தைப் படித்ததால் அவன் கிறிஸ்தவனாக மாறியதாக என்னிடம் சொன்னான் . அப்படியானால் உங்கள் அப்பா, அம்மா தாத்தா பாட்டி மதம் எல்லாம் தப்பா? என்று நான் கேட்டேன். இல்லை இல்லை என்றான் அந்தப் பிராமண இளைஞன் . நான் சொன்னேன்; பைபிளையும் கிறிஸ்து வையும் ஏற்பதில் உனக்கு சிரமம் இருந்ததா? ஆண்ட்ரூஸ் அவருடைய புஸ்தகத்தில் எங்கும் பைபிளை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவனாக மதம் மாறுங்கள் என்று இந்தியர்களுக்குச் சொல்லவில்லையே . நீ அவருடைய புஸ்தகத்தை தவறாகப் புரிந்து கொண்டு இருக்கிறாய் .என்றேன்
ஒருவேளை நீங்களும் காலம் சென்ற முகமது அலி போல நினைக்கிறீர்களா? அவர் ஒரு கெட்ட முஸ்லிம்கூட நல்ல இந்துவை விட மேலானவன் என்றார்’
C F Andrews: நான் முகமது அலி சொன்னதை ஏற்கவே மாட்டேன் ஆயினும் ஒருவன் உண்மையாகவே மதம் மாற விரும்பினால் அதற்குத் தடை போடக்கூடாது என்பதே என் கருத்து
Gandhiji :ஆனால் அவனுக்கு சிந்திப்பதற்கு ஒரு வாய்ப்பே நீங்கள் கொடுக்கவில்லை என்பது உங்களுக்குத் புரியவில்லையே!! நீங்கள் அவனை ‘ஏண்டா மதம் மாறுகிறாய்?’ என்று குறுக்கு விசாரணை கூடச் செய்யவில்லையே . உதாரணத்துக்குச் சொல்கிறேன். ஒருவன் பாகவத புராணத்தைப் படித்துவிட்டு அதனால் நான் இந்துவாக மாற விரும்புகிறேன் என்று என்னிடம் வந்து சொன்னால் ; வேண்டாமப்பா, பாகவத புராணம் சொல்லும் நல்ல விஷயம் எல்லாம் பைபிளிலும் உள்ளது ; அதைக் காண்பதற்கு நீ முயற்சியே செய்யவில்லை . அதை படித்து நல்ல கிறிஸ்தவனாக இரு என்றுதான் சொல்வேன்.

C F Andrews: எனக்குத் தெரியாது ; ஒருவன் நான் நல்ல கிறிஸ்தவனாக மாற விரும்புகிறேன் என்று என்னிடம் சொன்னால் , நீ மாறாப்பா என்றுதான் நான் சொல்வேன்.; ஆயினும் உங்களுக்குத் தெரியும்; ஒருவன் என்னிடம் வந்து கிறிஸ்தவனாக மாற விரும்புகிறேன் என்று சொன்னபோது என் பெயரைச் சொல்லி மதம் மாறாதே என்று நான் சொன்னேன்.ஆயினும் மனிதனுக்கு உறுதியான ஒரு மதம் வேண்டும் அல்லவா?
(ஆண்ட்ரூஸ் சுற்றி வளைத்து கிறிஸ்துவே ஒரே வழி என்று சொல்லவைக்க தொடர்ந்து முயற்சி செய்யவே, காந்திஜி போட்டார் ஒரு போடு; அந்த ஆள் வாய் மூடி மவுனமானார் )
Gandhiji :ஒரு மனிதனுக்கு பைபிள் மீது நம்பிக்கை இருந்தால் அவன் சொல்லட்டுமே. அதற்காக அவன் தாய் மதத்தை விட வேண்டுமா? இப்படி மதம் மாறுவது உலகில் அமைதியே இல்லாமல் செய்துவிடும் . சமயம் என்பது அவரவர் சொந்த நம்பிக்கை; நாம் நமது கொள்கைப்படி வாழ்ந்ந்து காட்டி நல்லனவற்றைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் இது கடவுளை அடைய மனிதன் செய்யும் முயற்சிக்கு வலுவூட்டும் .
இப்படிச் சொல்லிவிட்டு காந்திஜி தொடர்ந்து பேசினார் :- நீங்கள் ஒருவரை ஒருவர் சகித்துக்கொள்ள வேண்டும் என்பதையோ அல்லது எல்லா மதங்களும் சமமே என்பதை ஒப்புக்கொள்ளுகிறீர்களோ இல்லையோ . என்னுடைய கருத்து என்னவென்றால் உலகிலுள்ள மதங்கள் அனைத்தும் அடிப்படையில் ஒன்றே ; நம்முடைய மதத்தில் நமக்கு என்ன மரியாதை உண்டோ, அது மற்ற மதத்தின்மீதும் இருக்கவேண்டும். இன்னும் விளக்கமாகச் சொல்லுவேன் ;ஒருவரை ஒருவர் சகித்துக்கொள்ளுதல் அல்ல ; சகிப்புத்தன்மை அல்ல; ஒருவரை ஒருவர் மதிக்கவேண்டும் என்பதே என் கொள்கை. Harijan 28-3-1936
ஹரிஜன் பத்திரிகை 28-3-1936

என் கருத்து
காந்திஜி ஆஸ்ரமத்தில் வசித்துக்கொண்டே உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைத்த ஆண்ட்ரூஸுக்கு சரியான பதிலடி கொடுத்தார் காந்திஜி; சிறு வயது முதலே பகவத் கீதையையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும் ராம நாமத்தையும் ஜபித்து வந்ததால் எவ்வளவோ கிறிஸ்தவர்கள் அவரை மதம் மாற்ற முயற்சித்தும் அவர் மதம் மாறவில்லை. ஆனால் அப்படி மதம் மாறியிருந்தால் அவரை இந்திய மக்கள் குப்பைத்தொட்டியில் வீசி எறிவார்கள் என்பதும் அவருக்குத் தெரியும்.
–SUBHAM—
TAGS- காந்தி , மதம் மாற்றம், எச்சரிக்கை, உலக சமாதானம், சி எப் ஆண்ட்ரூஸ்