
Post No. 12,174
Date uploaded in London – – 23 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

Image of Blind Poet Homer of Greece
வார்த்தைகளுக்கு / சொற்களுக்கு மஹத்தான சக்தி உண்டு என்பதை இந்துக்கள் நிரூபித்தது போல வேறு எந்த கலாசாரமும் செய்யவில்லை. இந்து மத நூல்களில் உள்ள கதைகள் அனைத்தும் சாபங்கள் அல்லது வரங்களின் அடிப்படையில் அமைந்தவையே. சாபமோ வரமோ கொடுத்துவிட்டால் அதை இறைவனும் கூட விலக்கிக் கொள்ளமுடியாது. பாதிக்கப்பட்டவர் கெஞ்சினால் அல்லது மன்னிப்புக் கேட்டால் கொஞ்சம் மாற்றி அமைத்து ஓரளவு உதவி செய்வார்கள் ; கைகேயிக்கு, தசரதன் கொடுத்த வரத்தால் ராமாயணம் உருவானது. பஸ்மாசுரனுக்கு சிவ பெருமான் கொடுத்த வரத்தால் சிவனே ஓடிப்போக நேரிட்டது. இவையெல்லாம் சத்தியத்தின் மாபெரும் சக்தியை உணர்த்த வந்த கதைகள். ஒரு சொல்லைச் சொன்னால் அது சத்தியம். அது நடந்தே தீரும்.
அதே போல மதுரையைச் சேர்ந்த ஏழை பிராமணன் தருமிக்கு சிவபெருமான் எழுதிக்கொடுத்த பாட்டை நக்கீரன் எதிர்க்க, சிவ பெருமானே பாடலுக்கு விளக்கம் கொடுத்து தருமியைக் காப்பாற்றி, நக்கீரனைத் தண்டித்ததையும் நாம் அறிவோம்
தமிழ் சங்கத்துக்கு சிவபெருமான் வ ந் து சென்றதை அப்பரும் தேவாரத்தில் பாடியதால் மதுரைச் சம்பவம் 1400 ஆண்டுகளுக்கும் முன்னரே நடந்ததும் தெரிகிறது.
ஸம்ஸ்க்ருத , தமிழ்ப் புலவர்கள் அறம் பாடி எதிரிகளை மாய்த்ததையும் , பின்னர் அவர்கள் மன்னிப்புக் கேட்கவே அவர்களை உயிர்ப்பித்ததையும் அறிவோம். அப்பரும் சுந்தரரும் உயிரிழந்த ஆண்களையும் பெண்களையும் உயிர்ப்பித்த சம்பவங்களையும் நாம் படித்துள்ளோம். பனை மரங்களின் பால்/sex – மாறியது, அடைக்கப்பட்ட கோவில் கதவுகளைத் திறந்து மூடுவது ஆகியன அனைத்தும் பாடல்களினால் நடந்ததையும் நாம் அறிவோம்.
பாணபட்டருக்கு சிவபெருமான் எழுதிக்கொடுத்த ரெக்கமண்டேஷன் லெ ட்டரைப் recommendation letter பார்த்த சேர மன்னன் அந்தக் கடிதம் கொண்டு வந்தவருக்கு எவ்வளவு பரிசு கொடுத்தார் என்பதை நாம் அறிவோம்..
xxxxxxxxxxxxxxxxxxxxxxx
இதோ கிரேக்க நாட்டில் நடந்த சம்பவம்

வடக்கு கிரேக்க நாட்டை மாசிடோனியா Macedonia என்பர். இதை ஆண்ட ஆன்டிகோனஸ் Antigonos என்ற மன்னன் எகிப்தியருக்கு எதிரான ஒரு கடற் போரில் வெற்றி பெற்றார். இதே நேரத்தில் எகிப்தையும் கிரேக்க வம்சாவளி டாலமி பிலடெல்போஸ் (Ptolemy Philadelphos) ஆண்டுவந்தார் டாலமிக்கு பயம் வந்துவிட்டது. கடற்போரில் வென்றவன், மற்ற மன்னர்களுடன் சேர்ந்து தன நாட்டையே கபளீகரம் செய்துவிடுவானோ என்று அஞ்சினான். இருவரும் கிரேக்கக வம்சாவளி என்பதால் ஹோமர் எழுதிய இலியட், ஆடிஸி (Homer’s Iliad and Odyssey ) ஆகிய இரண்டு கிரேக்க இதிஹாசங்களையும் நன்கு அறிந்தவர்கள் ஆவர்.
டாலமி தன்னுடைய தூதர் சாஸ்ரதோசை மாசிடோனியாவுக்கு அனுப்பினார். ஆன்டிகோனசிடம் பேசி எப்படியாவது சமாதான உடன்படிக்கை செய்யவேண்டும். அதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பொருள் தருவதற்கு தயார் என்று சொல்லுங்கள் என்று சொல்லி தூதரை அனுப்பினார்..
தூதர் ஸோஸ்ரதோஸ் Sostratos பேசிய பேச்சு முதலில் எடுபடவில்லை ; ஆன்டிகோனஸ் மசிந்து கொடுக்கவில்லை.இந்துக்கள், பிரச்சினைளைகளைத் தீர்க்க இராமாயண, மஹா பாரதத்தைப் புரட்டுவது போலவே தூதரும் ஹோமர் எழுதிய இலியட் காவிய வரிகளை நினைவு கூர்ந்தார். அதில் சூஸ் Zeus எனும் தெய்வம் அனுப்பிய தூதர் பொஸை டான் (Poseidon) என்ற கடல் தெய்வத்துக்குச் சொன்ன வரிகள் (Iliad 15-1-201) நினைவுக்கு வரவே அதைச் சுட்டிக்காட்டி பேசினார். அதைக் கேட்டவுடன், முன்பு மசியாத மன்னர் சிரித்துக்கொண்டே ‘சரி ,சரி சமாதானம்’ செய்து கொள்ள தயார் என்றார். உயர்ந்த மனதுள்ளவர்கள் விட்டுக்கொடுக்கத் தயங்க மார்ட்டார்கள் என்பது அந்த பொன்மொழி ஆகும். அது மட்டுமல்ல; அதில் இன்னொரு பொருளும் தொனித்தது. இன்று நீ கடற்போரில் வென்றதால் மார்தட்டிக்கொள்ளாதே. நீ கடற்படைக்கு பெரியவன் என்றால் நாங்கள் தரைப்படைக்கு பெயர் எடுத்தவர்கள் என்ற பொருளும் தொனித்தது .
தூதரின் திறமையான சொற் பிரயோகமும், சமயோசிதமாக கிரேக்க காவியத்தை மேற்கோள் காட்டியதும் ஆண்டிகோனாசைக் கவர்ந்தது
கிரேக்க இதிஹாசத்தின் மீதும் ,அதிலுள்ள கதைகளின் மீதும் அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கையம் புலமையும் இருந்தது .
——-சுபம் —–
Tags- Zeus’ , Poseidon ,Antigonos ,Ptolemy , Sostratos
ஹோமர், கிரேக்க, இதிகாசம், இலியட், ஆடிஸி