QUIZ நெரூர் சதாசிவர் பத்து QUIZ (Post No.12,176)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,176

Date uploaded in London – –  23 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.சதாசிவ ப்ரம்மேந்திர சுவாமிகளுக்கும் கரூர் அருகிலுள்ள நெரூருக்கும் என்ன சம்பந்தம் ?

2. திரு விசை நல்லூரில் சதாசிவருடைய சகமாணவர் யார் ?

3.திரு விசை நல்லூரில், ஒரு கிணற்றிலிருந்து கங்கை நதி பிரவாகம் எடுத்து தெருவெல்லாம் ஓடியபோது ப்ரம்மேந்திராள் பாடிய பாட்டு என்ன?

4.சதாசிவரின் பிரபல முஸ்லீம் சீடர்கள் யார்?.

5.சதாசிவரின் இயற்பெயர், அம்மா, அப்பா பெயர்கள் என்ன?

6.அவருடைய குருவின் பெயர் என்ன?

7.சுவாமிகள் வித்வானாக யாரிடம் வேலை பார்த்தார் ?

8.யாருக்கு மண்ணில் மந்திரம் எழுதிக்கொடுத்தார்?

9.சதாசிவ ப்ரம்மேந்திராள் செய்த நூல்கள் யாவை ?

10.பஜனைகளில் பாடப்படும் அவரது பாடல்களின் முதல் வரிகள் என்ன?

Xxxxx

Answers

1.நெரூரில் சதாசிவ பிரமம்மேந்திராளின்  சமாதி உள்ளது. மானாமதுரை, பாகிஸ்தானிலுள்ள கராச்சியிலும் நர்மதா நதியின் கரையிலுள்ள ஒம்மகாரிலும், காசியிலும் இவர் சமாதி அடைந்ததாகச் சொல்லுவார்கள் .மானாமதுரையிலும் நெரூர் போல சமாதி இருக்கிறது .

2.திருவிசை நல்லூரில் ‘அமாவாசை கிணறு புகழ்’ ஸ்ரீதர ஐயாவாள் இவருடைய கிளாஸ்மேட்Classmate .

3. கிணற்றில் தோன்றிய கங்கையைப் பார்த்து ஆனந்தம் எய்திய சதாசிவர் ,

துங்கதரங்கே கங்கே ஜெய துங்கதரங்கே கங்கே  என்ற பாடலைப் பாடினார்

4.தஞ்சாவூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லீம் சகோதரர்கள் சதாசிவரை வணங்கி , தாங்களும் மகான்கள் ஆனார்கள். அவர்களை இரட்டை மஸ்தான்கள் என்று அழைப்பர் அவர்களுடைய சமாதி தஞ்சாவூரில் இருக்கிறது .

5.மதுரையில் பிறந்த அவருக்கு தாய் தந்தையர் இட்ட பெயர் சிவராமகிருஷ்ணன் . செல்லப்  பெயர் பிச்சுக்குப்பன் ;

தாயார் பெயர் — பார்வதி,  தந்தை பெயர் – சோமநாத யோகி.

6.காஞ்சி காமகோடி பீடம் 57-ஆவது பீடாதிபதி ஸ்ரீ பரம சிவேந்திர சரஸ்வதி சுவாமிகள்

7.மைசூர் மஹாராஜாவிடம் வித்வானாக வேலை பார்த்தார் .

8.புதுக்கோ ட்டை மகாராஜாவுக்கு மண்ணில் மந்திரம் எழுதிக் கொடுக்கவே அதை அவரும், பின்னர் அவரது வாரிசுகளும் பேழையில் வைத்து பூஜித்து வருகின்றனர்.

9.தக்ஷிணாமூர்த்தி தியான ஸ்தோத்திரம், நவமணி மாலா, ஸ்வப்னோ திதம், அத்வைத ரஸ மஞ்சரி, அத்வைத தாராவளி, சிவாநுபூதி, ப்ராகாஷிகா, ஆத்மானு சந்தானம், பிரணவ சஹஸ்ர நாமாவளி ,ஆத்ம வித்யா விலாசம்,மநோ நியமனம் மற்றும் சில நூல்கள் .

10.புகழ்பெற்ற பாடல் முதல்  வரிகள் :

பஜரே கோபாலம்மானஸ…………..

ஸ்மர வாரம் வாரம் சேதஹ…………….

ப்ரூஹி முகுந்தேதி ரஸனே……………..

மானஸ ஸஞ்சரரே ப்ரஹ்மணி………….

க்ரீடதி வனமாலி கோஷ்டே………….

பஜரே யதுநாதம் மானஸ…………..

ப்ரதிவாரம் மானஸ…………..

பிபரே ராம ரஸம்…………………

சிந்தா நாஸ்திகில தேஷாம்…………………..

ஸர்வம் ப்ரஹ்ம மயம் ரே ரே

காயதி வனமாலி மதுரம்………………..

பஜரே  யது நாதம்,  பஜரே ரகு வீரம்

a Muslim cutting off the hand of Naked Swamiji Sadasiva Brahmendral; ltaer he realised that he was a great saint after seeing him  walking like a normal man.

—-subham——

 Tags- சதாசிவ ப்ரம்மேந்திராள், நெரூர், Nerur, Sadasiva Brahmendral

Leave a comment

Leave a comment