வால்மீகி – கம்பர் – துளசிதாசர் இராமாயணம் – பாலகாண்டம்–ஒரு பார்வை (Post.12,178)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,178

Date uploaded in London –  24 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

ஆர். சேஷாத்ரிநாதன் அவர்கள் எழுதிய 

இராமாயணம் – பாலகாண்டம்

ஒரு பார்வை 

வால்மீகி – கம்பர் – துளசிதாசர்

பொருளடக்கம்

முன்னுரை

அணிந்துரை

அத்தியாயங்கள்

1. விஸ்வாமித்திரர் வருகை

2. தாடகை வதம்

3. அகலிகை சாப விமோசனம்

4. சீதா கல்யாணம்

பிற்சேர்க்கை

1. பால காண்டம் வால்மீகி ராமாயணம் ஸர்க்கங்கள்

2. பால காண்டம் கம்ப ராமாயணம் படலங்கள்

3. பால காண்டம் துளஸி ராமாயணம் முதல் சோபானம் ஸ்லோக எண்ணிக்கை

4. உதவிய ராமாயண நூல்களின் பட்டியல்

*

பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIA வெளியிட்டுள்ள புத்தகமிது.

 திரு R.சேஷாத்ரிநாதன் அவர்கள் எழுதியுள்ள இராமாயண ஆய்வு நூல் இது.

இதற்கு அவர் வழங்கியுள்ள முன்னுரையில் கூறுவது இது:

வால்மீகி, கம்பர், துளஸிதாஸர் போன்ற மகான்களின் இராமாயணத்திலிருந்து முக்கியக் கருத்துக்களைத் தொகுத்து எழுதப்பட்ட நூல் இது.

இது தவிர பல சான்றோர்கள், உரையாசிரியர்களின் உரைகள், நூல்கள் மற்றும் காணொளிக் காட்சிகளின் முக்கியப் பகுதிகள் ஆகிய அனைத்தையும் தொகுத்து இந்த நூலில் தந்துள்ளேன்.

இராமாயணத்தில் பாலகாண்டத்தில் முக்கிய நிகழ்வுகளையும் அதில் உள்ள இரகசியங்களையும் தொகுத்து எனது முதல் படைப்பாக ‘இராமாயணம் – பால காண்டம் ஒரு பார்வை’ என்ற இந்த நூலை அளிக்கிறேன்.

*

நூலுக்கு திரு ச.நாகராஜன் பொருத்தமான ஒரு அணிந்துரையை வழங்கியுள்ளார். அதில் அவர் குறிப்பிடுவதில் ஒரு பகுதி:

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால்

என்பது கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாக்கு.

ராம என்ற இரண்டு எழுத்தை உச்சரித்தால் எப்போதும் நன்மைகளையும் செல்வத்தையும் கொடுத்தருள்வான்; தீய செயலும் அதன் பயனான தீவினையும் அழிந்து கெடும். பிறப்பு இறப்புக்கள் இனி நேராமல் தீர்ந்து விடும் என்ற வார்த்தைகள் வாழ்க்கையில் ஒரு பிடிப்பையும் உயர் நோக்கத்தையும் தந்து விடுகிறது.

மனித வாழ்க்கையில் ஒருவருக்கு இதை விட வேறென்ன வேண்டும்?

 ‘கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ’ என்று நம்மாழ்வார் கூறி அருளிய ஒரு கருத்தே போதும் நாம் எதைக் கற்க வேண்டும் என்பதை அறிய!

ஆனால் இந்த வேக யுகத்தில் எளிமையாக ராமாயணத்தைத் தருபவரை நமது மனம் நாடுகிறது.

இந்தச் சமயத்தில் தான் திரு ஆர். சேஷாத்ரிநாதன் அவர்களின் கட்டுரைகள் நமக்கு ஒரு வரபிரசாதமாக அமைந்து நம்மை மகிழ வைக்கிறது.

வால்மீகி ராமாயணத்தோடு கம்ப ராமாயணம் துளஸி ராமாயணம் ஆகியவற்றை நன்கு படித்து அதில் முக்கியமான பாடல்களை அழகு தமிழில் அனைவருக்கும் புரியும் படி அவர் தந்திருக்கும் பாங்கே பாங்கு.

அவர் இராமாயண, மஹாபாரத இதிஹாஸங்கள் மற்றும் புராணங்கள் பால் மிகுந்த பக்தி கொண்டவர். பாரம்பரியம் மிக்க சிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் இசைக் குடும்பம் என்பது இன்னொரு பெரிய சுவையான செய்தி.

தனது இந்தப் பின்புலத்தைக் கொண்டு அவர் இராமாயணத்தைக் கரும்புப் பாகாகத் தந்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.

மூவரின் ராமாயணத்தை ஒப்பிட்டு உயர் கருத்துக்களை நல்குவதோடு மட்டுமின்றி அருணாசலக் கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனை, இராமாயண வெண்பா, வீரபத்திர ராமாயணக் கும்மி, நலுங்கு மெட்டு ராமாயணம், ராமாயண அம்மானை உள்ளிட்ட பல இராமாயண இசை, நாடக நூல்களையும் நன்கு பயின்றுள்ள அவர் இராமாயணம் பற்றி ஆழ்ந்து படித்துள்ள சிறந்த வேத விற்பன்னர்களின் கருத்துக்களையும் ஆங்காங்கே தமது கட்டுரைகளில் தந்துள்ளார்.

அவரது இராமாயணம் பற்றிய படைப்புகளில் முதல் நூலாக இராமாயணம் – பால காண்டம் – ஒரு பார்வை என்ற இந்த நூல் மலர்கிறது.

அவரது பார்வை என்ன பார்வை என்று பார்க்க நூலின் உள்ளே நுழைந்தோமானால் அந்தப் பார்வையின் பல்முக பரிமாணங்களைக் கண்டு பிரமிக்கிறோம்! பால காண்டத்தின் முக்கிய நிகழ்வுகளான விஸ்வாமித்திரரின் வருகை, தாடகை வதம், அகலிகை சாப விமோசனம், சீதா கல்யாணம் ஆகியவற்றில் உள்ள இரகசியங்களையும் மர்மங்களையும் சுவைபட விளக்குகிறார்.

ஒவ்வொன்றும் ஒரு ஆய்வுக் கட்டுரையாக அமைந்திருப்பதோடு, தனது பார்வைக்கான சான்றுகளாக பேரறிஞர்களை மேற்கோள் காட்டுகிறார்.

அறிஞர்கள் சுப்ரமணிய முதலியார், கி.வா.ஜ. ரா.பி.சேதுப்பிள்ளை, ஜவஹர்லால், வாலி, கணபதி உள்ளிட்டோரின் விளக்கவுரைகளைத் தக்க இடங்களில் படிக்கிறோம்; மணிவாசகர், அருணகிரிநாதரின் கருத்துக்களையும் ராமாயணத் தொடர்புடன் படித்து மகிழ்கிறோம்.

மொத்தத்தில் வால்மீகி, கம்பர், துளஸி ஆகியோரின் காவியங்களை ஒன்றாகக் கரைத்து ஏற்பட்ட அதிசயமான ராமாயண அமிர்தத்தைப் பருகுகிறோம். இந்த நல் வாய்ப்பைத் தந்துள்ள அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

காலத்திற்கேற்ற அருமையான ஆன்மீக சேவையைப் புரிந்தமைக்காக திரு சேஷாத்ரிநாதன் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள் உரித்தாகுக.

***

இந்த நூல் பற்றிய விவரங்களை www.pustaka.co.in இணைய தளத்தில் காணலாம். நூல் பற்றிய விவரங்களை 99803 87852 என்ற மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டும் பெறலாம்.

Leave a comment

1 Comment

  1. rithvikseshadri's avatar

    நான் தொகுத்த புத்தகம் பற்றிய செய்தி வெளியிட்டமைக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

Leave a comment