QUIZ ஆழ்வார் பத்து QUIZ (Post No.12,180)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,180

Date uploaded in London – –  24 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேள்வி-பதில் QUIZ

1.பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவர்தான் பெண்; அவர் யார், பாடிய பாடல் நூல்கள் எவை?

2.பொய் ,பூதம் ,பேய் — பெயர்களில் உள்ள ஆழ்வார்கள் யார்?

3.பாரதியாருக்கு மிகவும் பிடித்த ஆழ்வார் யார்? அவரது பாடல்களை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து கட்டுரைகள் எழுதினாரே!

4.அரசமரம் என்றால் புத்தர் நினைவுக்கு வருவார். ஆலமரம் என்றால் தட்சிணா மூர்த்தி நினைவுக்கு வருவார். புளிய மரம் என்றால் எந்த ஆழ்வார் நினைவுக்கு வருவார்?

5.தங்கத்தினாலான புத்த விக்ரகத்தைத் திருடி , உருக்கி பெருமாளுக்குச் சேவை செய்த ஆழ்வார் யார் ?

6.அந்தாதி பாடிய ஆழ்வார்கள் பெயரைச் சொல்ல முடியுமா?

7.அயோத்தி நகரில் தோன்றிய மர்ம ஒளியைப் பின்தொடர்ந்து வந்து திருக் குருகூரில் ஒரு பெரியவரைச் சந்தித்தித்த ஆழ்வார் யார் ?

8.சேர நாட்டில் அரசர் குலத்தில் பிறந்த ஆழ்வாரின் பெயர் என்ன ?

9.பட்டர்பிரான், விஷ்ணு சித்தர் என்ற பெயர் தாங்கிய ஆழ்வார் யார் ?

10.இந்திரலோகம் ஆளும் பதவியும் வேண்டாம் என்று பாடிய ஆழ்வாரின் பெயர் என்ன ?

xxxxxxxxxxx

விடைகள்

1.ஆண்டாள் ; அவர் பாடியவை — திருப்பாவை, நாச்சியார் திருமொழி

2.முதல் மூவர் எனப்படும் பொய்கை ஆழ்வார், பேய் ஆழ்வார்  , பூதத்தாழ்வார் .

3.நம்மாழ்வார்

4.மாறன் சடகோபன் என்னும் நம்மாழ்வார்

5.திருமங்கை ஆழ்வார்

6. பொய்கை ஆழ்வார் , பூதத்தாழ்வார் பேய் ஆழ்வார் ஆகிய மூவரும் பாடிய அந்தாதிகளை முறையே  முதல், இரண்டாம், மூன்றாம் அந்தாதி என்பர். திருமழிசை ஆழ்வார் பாடியதை நான்முகன் திருவந்தாதி என்று நாலாயிர திவ்வியப் பிரபந்தம் கூறும். நம்மாழ்வார் பாடியது பெரிய திருவந்தாதி ஆகும் . பன்னிரு ஆழ்வார்களுக்கு வெளியே, இராமாநுச நூற்றந்தாதியை திருவரங்கத்தமுதனார் யாத்துள்ளார்.

7.மதுர கவி ஆழ்வார்;  வட நாட்டில் அயோத்தியில் வானத்தில் தென்பட்ட மர்ம ஒளியைப் பின்தொடர்ந்து வந்து தென் தமிழ் நாட்டிலுள்ள திருக் குருகூரில் புளிய மரத்துக்கு அடியில் தவம் செய்த நம்மாழ்வாரைக் கண்டார்.

8.குலசேகர ஆழ்வார்

9.பெரியாழ்வார்

10.தொண்டரடிப்பொடி ஆழ்வார்

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகர் உளானே!

—–subham—–

Tags- ஆழ்வார், க்விஸ், கேள்வி-பதில்

Leave a comment

Leave a comment