
Post No. 12,184
Date uploaded in London – – 25 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
QUIZ அண்ணாமலை பத்து QUIZ
1.திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற ஆஸ்ரமங்கள் எவை?
2.சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் திருவண்ணாமலையை புகழ் ஏணியின் உச்சிக்கு ஏற்றிய புலவர் யார் ?
3.அண்ணாமலை சிவன் கோவில் எந்த வகையில் முக்கியத்துவம் / சிறப்பு வாய்ந்தது ?
4.அண்ணா மலையான் கோவிலில் எந்த மன்னனின் பெயரில் பெரிய கோபுரம் உள்ளது?
5.கிரி வலம் என்னும் மலைப் பிரதட்சிணம் எப்போது நடக்கும்?
6.திரு அண்ணாமலை கோவிலின் மிகப்பெரிய திருவிழா எது?
7.கோவிலில் உள்ள கிளிக் கோபுரத்தின் பெருமை என்ன?
8.ஒவ்வொரு ஊரிலும் இறைவனை வழங்க பக்தர்கள் கோஷமிட்டுச் செல்லுவார்கள். திருவண்ணாமலையில் என்ன கோஷத்தைக் கேட்கலாம் ?
9.திருவண்ணாமலையில் கோவிலில் குடிகொண்டுள்ள இறைவன், இறைவியின் பெயர்கள் என்ன ?
10.அடடா அடடா அண்ணாமலை, அண்ணாந்து பார்த்தால் ஒண்ணுமே இல்லை – என்ற பழ மொழியின் பொருள் என்ன ?

xxxxxxxxxxxxxxxxxxxxxx
answers
1.ரமண மஹரிஷியின் ரமணாஸ்ரமம், சேஷாத்ரி சுவாமிகளின் சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம், யோகி ராம் சுரத் குமாரின் ஆஸ்ரமம்
2.திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர்
3.சிவ பெருமானின் பஞ்சபூத அம்ஸங்களில் ஒன்றான அக்நி ஸ்தலம் இது. சிவன், தீ-யின் உருவாக விளங்குகிறார்
4.ஹொய்சாள மன்னன் வீரவல்லாளன் (1291-1343)
5. ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் லட்சக் கணக்காணோர் கிரி வலம் செய்வார்கள்
6.கார்த்திகை தீபத் திருவிழா
7.கிளி கோபுரம் மேலிருந்து கிளி உருவில் அருணகிரிநாதர் முருகன் புகழ் பாடினார் .
8.அண்ணாமலைக்கு அரோஹரா என்று மக்கள் முழக்கம் இடுவர்; ஹர =சிவன் ; ஹரோ ஹரா = சிவ சிவா ;அண்ணாமலையில் உறையும் சிவா, சிவா என்பதாகும்
xxx
9.அண்ணா மலையான் , உண்ணாமுலை அம்மன், அருணாசல ஈஸ்வரன், அபித குஜாம்பாள்
இதோ ஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.
பொழிப்புரை :
உண்ணாமுலை என்னும் திருப்பெயருடைய உமையம்மையாரோடு உடனாக எழுந்தருளியவரும், தம் இடப்பாகம் முழுவதும் பெண்ணாகியவருமாகிய சிவபிரானது மலை, அடித்து வரும் அழகிய மணிகள் சுடர்விட மண்ணை நோக்கி வருவனவாகிய அருவிகள் பொருள் புரியாத மழலை ஒலியோடு கூடிய முழவு போல ஒலிக்கும் திருவண்ணாமலை யாகும். அதனைத் தொழுவார் வினைகள் தவறாது கெடும்.
Xxx
10. பிரம்மனும் விஷ்ணுவும் சிவ பெருமானின் அடி முடி தேடிய வரலாறு மிகவும் பிரசித்தமானது. நூற் றுக்கணக்கான தேவார ப்பாடல்களில் வரும் கதை இது.
ஜோதி வடிவான இறைவனைக் காண அண்ணாமலை கோபுரத்தின் உச்சிக்கு மேல் தேடிப்பார்த்தத்தாலும் அவனைக் காண இயலாது. ஆனால் பக்தர்களின் உள்ளத்திலேயே காணலாம். அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே என்று அடியார்கள் பாடிப்பரவினார்கள். இந்த தத்துவத்தை விளக்க வந்த மொழிதான்- அடடா அடடா அண்ணாமலை, அண்ணாந்து பார்த்தால் ஒண்ணுமே இல்லை.
–subham—
Tags- அடடா அடடா, அண்ணாமலை, உண்ணாமுலை, அரோஹரா, ஹொய்சாள மன்னன், வீரவல்லாளன்