
Post No. 12,183
Date uploaded in London – 25 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
இந்தத் தொடரின் இறுதி அத்தியாயம் இது.ஹெல்த்கேர் ஜூலை 2023 இதழில் வெளியாகியுள்ளது.
தொடரைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி.
How Food Powers Your Body
உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது? – 8
ஆங்கில மூலம் : ஜேம்ஸ் சாமர்ஸ் (James Somers)
தமிழில் : ச.நாகராஜன்
9.20 கோடி மைல்களிலிருந்து வரும் சூரிய ஆற்றல் சேண்ட்விச்சாக மாற அதில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டேன்!
கடலுக்கும் புவியின் மேலுறைக்கும் உள்ள இடைமுகப்பில் கடலில் உள்ள உப்பு நீரானது பூமியுடன் எதிர்வினை ஆற்றும் செயலானது செர்பெண்டினைசேஷன் (Serpentinization) என்று கூறப்படுகிறது. இந்த செர்பெண்டினைசேஷன், ஆற்றல் அதிகம் மிக்க இரசாயனங்களை உற்பத்தி செய்கிறது. ஆட்டோட்ராப்களின் மூதாதையர்களை சக்தி ஊட்டி இயங்கச் செய்த தொடக்க கால ஆற்றல் அவையே என்று லேன் (Lane) ஊகிக்கிறார். நமது வளர்சிதைமாற்றங்களில், க்ரெப்ஸ் சுழற்சி ஒரே திசை நோக்கிச் செல்கிறது – உணவு மூலக்கூறுகள் உள்ளே செல்கின்றன, உடனே ஆற்றல் வெளி வருகிறது. ஆனால் உண்மையில் இந்த சுழற்சி இரு பக்கங்களிலும் சுழலக் கூடும், ஒரு சுழலுகின்ற மேடை போல! ஆழ்கடலில் உள்ள புழைகளைச் (vents) சுற்றி உள்ள பாக்டீரியாக்கள் நேர்மாறாக எதிர்ப்பக்கம் ஓடி, புழைகளில் உள்ள ஆற்றலை எடுத்துக் கொண்டு அவற்றுடன் ஒத்து இருக்கின்ற பாகங்களில் உள்ள தங்கள் பொருளை இணைக்கப் பயன்படுத்துகிறது. அவை எரியாத மெழுகுவர்த்திகள் போல!
மென்படலங்கள் இந்த எதிர்வினைகளைச் சுற்றும்போது தான், ஆர் என் ஏ -இன் தேவை பின்னால் தான் எழுகிறது. ஆதியில் உள்ள முதல் உயிரணுக்கள் புழைகளிலிருந்து மிதந்து செல்லும்போது, அவை தங்களது ஆற்றல் ஆதாரத்தின் தொடர்பை இழந்து விடுகின்றன; சரியான ஆர் என் ஏ -க்களை ஏந்திச் செல்பவை மட்டுமே தாங்கள் இருப்பதற்கான அவசியக் கருவிகளைக் கொண்டிருக்கும்.
ஆர் என் ஏ -க்களின் வேலை முன்னர் புழைகளை நம்பி இருந்தவற்றிற்கு கிரியாஊக்கமாக எதிர்வினைகளைச் செய்ய உதவுவது தான். அடுத்த பல நூறு கோடி ஆண்டுகளில், இந்த ஆதிமூல உயிரிகளின் வழித்தோன்றல்கள் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜனை ஒரு கழிவுப் பொருளாகக் கக்கி உமிழ ஆரம்பிக்கும். அப்போது தான் நாம் அறிகின்ற க்ரெப்ஸ் சுழற்சி நடப்பு இருப்பிற்கு வருவதாக ஆகும்; ஆட்டோட்ராப்புகளின் வளர்சிதைமாற்றத்தைத் எதிராகத் திருப்புவதால், அந்த ஆக்ஸிஜன் முழுவதையும் ஒரு உயிரி தனது நன்மைக்காக எடுத்துக் கொள்ளும். தனது உடலை ஒரு கொதிகலம் போல ஆக்கும். இந்த எதிராகத் திருப்பப்படும் மாற்றம் தான் காம்பிரியா வெடிப்பை (Cambrian Explosion) ஏற்படுத்தி உருவாக்கி, சுமார் 5000 லட்சம் வருடங்களுக்கும் முன்னர் வெவ்வெறு வகையான கடும் சிக்கலை உடைய வாழ்க்கையைக் கொண்ட மாபெரும் இனப்பெருக்கத்தை உருவாக்கியது.
எந்தப் புத்தகமாகத்தான் இருக்கட்டுமே அதில் ஒரு விஷயம் உண்டு. அதுவும் விசேஷமாக அந்த நூலை எழுதியவர் அது சரியான கவனத்தைப் பெறவில்லை என்று உணர்ந்தால், அவர் ‘Theory of Everything’ – ‘தியரி ஆஃப் எவ்ரிதிங்’ என்று ஆவதற்கான அபாயத்திற்கு உட்படுவார். ‘டிரான்ஸ்ஃபார்மர்’ என்ற புத்தகத்திலிருந்து நான் பெற்ற அபிப்ராயம் இது தான் – க்ரெப்ஸ் சுழற்சி வாழ்க்கைக்கான மற்றும் அதன் மூலத்திற்கான திறவுகோல் மட்டுமல்ல, ஆனால் அதுவே மூப்படைதல், கான்ஸர் மற்றும் இறப்பிற்கான திறவுகோலும் கூட என்பதை அறிந்தேன். இன்னும் அதிகமாக, அது அந்த அனைத்திற்கும் ஒரு பகுதியாக இருப்பதும் கூட என்றே சொல்லலாம்.
ஆழ்ந்து மூழுகுதல் பற்றி இன்னும் சில விஷயங்கள் சொல்ல உண்டு.
சமீபத்தில், வார இறுதி நாட்களை ஒரு சிறிய வாடகை வீட்டில் கழித்தேன். அந்த இடம் நியூயார்க் நகருக்கு வடக்கே சில மணி நேரப் பயண தூரத்தில் அமைந்திருந்தது. அந்த நாட்கள் முழுவதும் என் மனதில் வளர்சிதைமாற்றமே ஓடிக் கொண்டிருந்தது. ஒரு நாள் காலையில் எனது நண்பர்களில் ஒருவரும் நானும் காலை உணவுக்காக வெளியிடத்தில் இருந்த ஒரு உணவு விடுதிக்குச் சென்றோம். காரில் பெட்ரோல் கொஞ்சம் தான் இருந்தது; எனக்கும் எரிபொருள் -எனது மனநிலை – அதே நிலையில் தான் இருந்தது. உணவு விடுதியில் பரிமாறுபவருக்காகக் காத்திருந்த சமயத்தில், நான் அமைதியாக சற்று சலிப்புடனும் கசப்புடனும் அமர்ந்திருதேன். சூரிய ஒளி என் முதுகின் மீது பளீரென்று வீசிக் கொண்டிருந்தது – அதாவது எலக்ட்ரான்கள் தப்பான வடிவில் என் மீது வீசிக் கொண்டிருந்தது. எனக்கு வைக்கப்பட்ட, கிண்டி சமைக்கப்பட்ட முட்டைகளில் சில துண்டுகளை வாயில் போட்டுக் கொண்ட பின்னர் தான் குளுகோஸ் வெள்ளத்தை நான் உணர்ந்தேன்; எனது இயல்பான நிலைக்கு வந்தேன். எனது உயிரணுக்களின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை என்னால் சித்தரித்துக் கொள்ள முடிந்தது. அந்த மனச்சித்திரம் ஒரு பதினெட்டாவது நூற்றாண்டு தத்துவஞானியை கவர்ந்திழுத்திருக்கும். நூறுகோடிக்கணக்கிலான மிகச் சிறிய நீர்சக்கரங்களில் சுழன்று என்னை நானே மின்னேற்றிக் கொள்ளும் ஒரு கடிகாரநேரப்படியுள்ள மனிதன் நான்.
பின்னால், வீட்டிற்கு வந்த பிறகு, நாங்கள் வண்டி ஓடும் ட்ரைவ் வே பாதையில் பேஸ்கட் பால் விளையாடினோம். பந்தை பேஸ்கட்டில் தூக்கிப் போடும் ஒரு ஜம்ப் ஷாட்டிற்கு எவ்வளவு ATP தேவைப்படும்? பேஸ்கட்டை நோக்கி ஓடி மிக்க பாதுகாப்புடன் பந்தைத் தூக்கிப் போடும்போது, நான் எனது உடலை வானில் தூக்கிப் போடுவதைப் பற்றி எண்ணியபோது, புரோடான்களினால் உருவாக்கப்பட்ட வோல்ட்கள் – ஒரே சமயத்தில் மேல் உதட்டுப் பிளவில் பத்து லட்சம் மின்னிறக்கங்கள் என்று இப்படி எண்ணிப் பார்த்தேன்
ஒவ்வொரு நகர்வும் மின்னல் தாக்குதல் போல கட்டுப்பாடுடன் மிகுந்த அழகுடன் இருந்தது.
விளையாட்டிற்குப் பின்னர் மதிய நேரத்தில் நாங்கள் ஜன்னலுக்கு வெளியில் இருந்த சிறு பறவைகளை வேடிக்கை ஆர்த்தோம். அவற்றின் இதயத்துடிப்புகள் வேகமாக அடித்துக் கொண்டிருந்தன. நான் அவற்றின் உலகில் உள்ள வேகத்தை கற்பனை செய்து பார்த்தேன். அதே போல உங்களது வளர்சிதைமாற்றமும் அதே வேகத்தைக் கொண்டிருந்தால் ஒரு வேளை காலம் மெதுவாகச் செல்லுமோ? அதனால் தானோ உங்கள் கையில் இருக்கும் பூச்சியைப் பிடிப்பது உங்களுக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது?
அன்று இரவு சாக்லட் சேன்ட்விச்சுகளைச் (s’mores) செய்யத் தீர்மானித்தோம். நானும் எனது நண்பர் ஒருவரும் அடுப்பைப் பற்ற வைத்தோம். அருகிலிருந்த விறகுக்குவியலிலிருந்து எலக்ட்ரான்களை ஒன்று குவித்தோம். அவற்றைச் சற்று தளர்த்தினோம். புடேன் வாயுவை வரவிட்டோம். ஒரு தீ ஸ்பார்க் வந்தது. பின்னர் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்தோம். 920 லட்சம் மைல்களுக்கு அப்பாலிருந்து பிணைவிலிருந்து (Fusion) வரும் ஆற்றலானது இப்போது சதுப்புநிலத் துத்தியாக (marshmallow) வடிவம் எடுத்திருப்பதை கற்பனை செய்து பார்க்கவே விசித்திரமாக இருந்தது. சந்தோஷமாக ஒரு சாக்லட் சேண்ட்விச்சை என் வாயில் போட்டுக் கொண்டேன்!
*** ̀ இந்தத் தொடர் நிறைவுறுகிறது.
முடிவுரை
அருமையான இந்தத் தொடர் உணவு எப்படி நமது உடலுக்குச் சக்தியை அளிக்கிறது என்பது பற்றி நாம் அறியாத பிரமிக்க வைக்கும் பல உண்மைகளைத் தருகிறது.
ஒரு தடவைக்கும் மேலாக இதைப் படித்து, படித்ததை சிந்தித்து ஜீரணித்தால் மட்டுமே நாம் எப்படிப்பட்ட படைப்பில் வாழ்கிறோம் என்று எண்ணி வியக்க முடியும்!
நமது உடலானது எப்படிப்பட்ட தெய்வீக வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தோமானால் அதை எப்படி தக்க முறையில் பேணிக் காக்க வேண்டும் என்பதை நன்கு உணர்வோம்.
உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்.
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்(று)
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே
-திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 725
***