
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,188
Date uploaded in London – 26 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
சுபாஷித செல்வம்
இளமையும் கவிதையும்!
ச.நாகராஜன்
இளமையும், கவிதையும்!
நெருங்கி வரும் நெருக்கம் இருக்கிறது – நட்பு போல
மிக நல்ல அலங்காரமும் இருக்கிறது
கவர்ந்திழுக்கும் நடையும் உண்டு
நண்பரே, யாரைப் பற்றி இங்கு நாம் பேசுகிறோம்?
இள்மையைப் பற்றிப் பேசுகிறோமோ?
இல்லை, இல்லை நண்பரே, நாம் பேசுவது இங்கு கவிதையைப் பற்றி!
நெருங்கி வரும் நெருக்கம் – நல்ல அக்ஷரங்கள்!
நல்ல அலங்காரம் – Figures of Speech- பல்வேறு அணிகள்
கவர்ந்திழுக்கும் நடை – நல்ல சந்தம், நடை
இவை அனைத்தும் கவிதைக்கு உண்டு அல்லவா!
அதைப் பற்றித் தான் சொல்கிறோம்!
சுபாஷிதம் இதோ:
அக்ஷரமைத்ரீபாஜ: சாலங்காரஸ்ய சாருவ்ருத்தஸ்ய |
கிம் ப்ரபோ சகி யூநோ ந ஹி ந ஹி சகி பத்யபந்தஸ்யா ||
*
இரண்டு எழுத்துக்கள்!
அக்ஷரத்வயமம்யஸ்தம் நாஸ்தி நாஸ்தீதி யத் புரா |
ததிதம் தேஹி தேஹிதி விபரீதமுபஸ்திதம் ||
என்னிடம் ஒன்றும் இல்லை (நாஸ்தி), என்னிடம் ஒன்றும் இல்லை (நாஸ்தி), என்ற இரு வார்த்தைகளை விட்டு விட்டால் பின்னர் அதற்கு எதிராக இருக்கும் கொடுக்க வேண்டியது தானே, கொடுக்க வேண்டியது தானே (தேஹி, தேஹி) என்ற வார்த்தைகள் அருகே இருக்கும்.
(இரண்டு வார்த்தைகள் என்பது இரண்டு எழுத்துக்களையே இங்கு குறிக்கிறது)
*
அரசன் அழியக் காரணங்கள்!
அக்ஷேஷு ம்ருகயாயாம் ச ஸ்தீரிஷு பானே வ்ருதாடனே |
நித்ராயாம் ச நிபந்தேன க்ஷிப்ரம் நஷ்யதி பூபதி ||
சூதாடுதல், வேட்டையாடுதல், பெண்கள் மோகம், குடித்தல், வாழ்க்கை இன்பங்களை அனுபவித்தல், தூக்கம் – ஆகிய இவற்றில் ஈடுபட்டிருக்கும் ஒரு அரசன் நாசமடைவான் – சாணக்யரது கூற்று இது.
*

ஓ, கிளியே, உனது இனிய குரலின் பரிசு உனக்கு சிறை ஆயிற்றே!
மற்ற எல்லா பறவைகளும் சுதந்திரமாக இருக்கும் போது, ஓ, கிளியே, உனது இனிய குரலுக்குப் பரிசாக நீ கூண்டில் சிறை வைக்கப்பட்டிருக்கிறாயே!
அகிலேஷு விஹங்கேஷு ஹந்த ஸ்வச்சந்தசாரிஷு |
ஷுக்ர பஞ்ஜரபந்தஸ்தே மதுரானாம் கிராம் பலம் ||
*
அளவு பெரிதல்ல; பயனே பெரிது!
அகாதேனாபி கிம் தேன தோயேன லவணாம்புதே: |
ஜனுமாத்ரம் வரம் வாரி த்ருஷ்ணாச்சேதகரம் ந்ருணாம் ||
சமுத்திரத்தில் ஏராளமான நீர் இருக்கிறது. ஆனால் அவ்வளவும் உப்பு நீர்.
தாகத்துடன் இருக்கும் ஒருவனுக்கு அவ்வளவு நீர் இருந்தும் பயன் என்ன?
ஒன்றுமில்லை.
ஆனால் அதே சமயம் கேணி ஒன்றில் முழங்கால் அளவு நீர் தான் இருக்கிறது. அளவு குறைந்து இருக்கிறது என்றாலும் கூட தாகத்தைத் தணிக்கும் (இனிய) நீராக அது இருக்கிறதே!
***