QUIZ டில்லிப் பத்து QUIZ (Post No.12,189)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,189

Date uploaded in London – –  26 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.ஜந்தர் மந்தர் என்பது என்ன ?

2.டில்லியின் பழைய பெயர் என்ன ?

3.டில்லி மீண்டும் எப்போது தலைநகர் ஆகியது ?

4.பிரதம   மந்திரியின் முகவரி என்ன ?

5.உலகிலேயே ஒரு நாட்டின் தலைவருக்குள்ள பெரிய வீடு எது ?

6.சந்திர குப்தனின் சம்ஸ்க்ருதக்  கல்வெட்டு உள்ள உலக அதிசயம் எது ?

7.செங்கோட்டையில் ஆண்டுதோறும் என்ன நடைபெறும் ?

8.கடும் குளிரில் கம்பளிப் போர்வையுடன் ஜனவரி 26-ம் தேதி லட்சக் கணக்கானோர் டில்லி சாலைகளில் சந்திப்பது ஏன்?

9.ஆக்ராவிலுள்ள தாஜ் மஹால் வடிவம் போலுள்ள டில்லிக் கட்டிடம் எது?

10.டில்லியிலுள்ள அக்ஷர்தாம், ராஜ்கட், சாந்தினி செளக்,லோட்டஸ் டெம்பிள் ஆகிய இ டங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வது ஏன் ?

XXXXX

விடைகள்

1.ஹிந்து அரசார்கள் கட்டிய வானாராய்ச்சி நிலையயம் . டில்லி, ஜெய்ப்பூர் , உஜ்ஜைனி , மதுரா, காசி ஆகிய இடங்களில் ஜந்தர் மந்தர் உள்ளது

2.இந்திரப்பிரஸ்தம் ;பாண்டவர்களின் தலைநகர்

3.1911-ம் ஆண்டு டிசம்பரில் பிரிட்டிஷ்காரர்கள் டில்லியை மீண்டும் தலைநகர் ஆக்கினர். அதுவரை கல்கத்தா , பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக இருந்தது .

4.பிரதமந்திரியின் முகவரி  7. லோக கல்யாண் மார்க், டில்லி

xxxxxxx 

5.ராஷ்ட்ரபதி பவன். உலகில் வேறு எந்த நாட்டுத் தலைவருக்கும் இவ்வளவு பெரிய வீடு இல்லை . இந்திய ஜனாதிபதி அதிர்ஷ்டசாலி

XXXX

6.டில்லியில் குதுப்மினார் கோபுரத்துக்கு எதிரேயுள்ள 2000 ஆண்டுப் பழமையான இரும்புக் கம்பம் துருப்பிடிக்கவில்லை. இந்துக்களின் ரசாயன  அறிவுக்கு சான்று பகரும் இதில் இரண்டாவது சந்திர குப்தனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு இருக்கிறது .

XXXX

7. செங்கோட்டையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பிரதமந்திரி கொடிஏற்றுவார். பின்னர் சொற்பொழிவு ஆற்றுவார்

XXXX

8.ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி காலையில் குடியரசுதின அணிவகுப்பு நடைபெறும்; உலகின் முக்கியப்பிரமுகர்கள் விருந்தினராக அழைக்கப்படுவார்கள் ; அவர்களுக்கு ராஷ்டிராபதி விருந்து கொடுப்பார்  குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார வண்டிகள் பவனி வரும். முப்படைகளும் அதி நவீன ஆயு தங்களுடன் .அணிவகுத்துச் செல்லுவார்கள்

XXXX

9.ஹூமாயூன் கல்லறை தாஜ்மஹாலின் முன்னோடி. அதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டது .

XXX

அக்ஷர்தாமில் அண்மைக்காலத்தில் கட்டிய பிரம்மாண்டமான குஜராத்தி சுவாமிநாராயன் கோவிலும், ராஜ் காட்டில் காந்தி சமாதியும், சாந்தினி செளக்கில் மொத்த வியாபார மார்க்கெட்டும் ,

லோட்டஸ் டெம்பிள் என்ற பெயரில் தாமரை வடிவிலுள்ள கட்டிடத்தில் பஹாய் முஸ்லீம்களின் வழிபாட்டுத் தலமு ம் உள்ளன   டில்லிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இவைகளைக்  காணச் செல்கின்றனர் .

–SUBHAM—Tags- டில்லி, ஜந்தர் மந்தர் , குதுப்மினார், இரும்புத் தூண், பிரதமர் வீட்டு முகவரி 

Leave a comment

Leave a comment