QUIZ தொல்காப்பியப் பத்து QUIZ (Post No.12,212)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,212

Date uploaded in London – –  1 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.தொல்காப்பியரின் இயற்பெயர் என்ன ?

xxxxxx

2.தொல்காப்பிய நூலுக்கு சர்ட்டிபிகேட் கொடுத்த பிராமணன் யார் ?

xxxx

3.தொல்காப்பியர் காலத்தில் தமிழ் எங்கு பேசப்பட்டது?

xxxxxx

4.தொல்காப்பியத்தில் எத்தனை பிரிவுகள், எத்தனை சூத்திரங்கள் உள்ளன ?

xxxx

5. தமிழ் மொழியில் வேறு எங்கும் பயன்படுத்தப்படாத  , சொல்லப்போனால் உலகில் எந்த மொழியிலும் இல்லாத, ஒரு சொல்லை பொறாமை என்ற பொருளில் தொல்காப்பியர் கையாளுகிறார் . அது என்ன சொல் ?

Xxxxxx

6.காதல் கல்யாணம், கடத்தல் கல்யாணம் முதலியவற்றை ஆதரிக்கும் எட்டு வகை திருமணங்களை தொல்காப்பியர் எங்கிருந்து எடுத்தார் ?

xxxxx

7.உயிரினங்களை எத்தனை வகையாக தொல்காப்பியர் பிரிக்கிறார் ?

xxxxx

8.பலர் தடுத்தும் கேளாது பாண்டியன் மனைவி , கணவனின் சிதைத்தீயில் பாய்ந்து உடன்கட்டை ஏறியது புறநானூற்றில் உள்ளது. கணவனுடன் உடன்கட்டை ஏறும் சதி’ வழக்கம் பற்றி தொல்காப்பியர் எங்கே குறிப்பிடுகிறார் ?

xxxxx

9.ஜாதிகள் பற்றி எங்கே பாடுகிறார் ? மந்திரம் சூத்திரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களை தொல்காப்பியர் எங்கு பயன்படுத்துகிறார்

xxxxxx

10.காதல் கிறுக்கு பிடித்துவிட்டால் பெண்கள் என்ன செய்வார்கள் என்று தொல்காப்பியர் புகல்வார் ? பிராமணர்கள் வெளிநாடு செல்லக்கூடாது என்று மனு தடை போடுகிறார்..பெண்கள் வெளிநாடுகளுக்குப் போகக்கூடாது என்று தொல்காப்பியர் எங்கே தடை போடுகிறார் ?

xxxxxx

விடைகள்

1.தொல்காப்பியரைப் பற்றி நமக்கு தகவல் தந்தவர் இரண்டேபேர்தான். ஒருவர் அவருடைய கிளாஸ்மேட் Classmate  பனம்  பாரானார். இன்னொருவர் உரை எழுதிய மதுரை நகர பரத்வாஜ கோத்ர பிராமணன் நச்சினார்க்கினியர். அவருடைய கூற்றுப்படி தொல்காப்பியரின் பெயர் த்ருண தூமாக்கினி. ‘உச்சிமேற் புலவர்கொள் நச்சி’.தான் அதிக உரை எழுதியவர். அவர் உரை இல்லாவிடில் சங்க இலக்கியம் எவருக்கும் புரியாது .

Xxxxxx

2.நிலம் தரு பாண்டியன் சபையில் இருந்த அதங்கோட்டு ஆச்சார்யார். அவர் சதுர்வேதி. அதாவது நான்கு வேதங்களையும் கற்றவர் என்று தொல்காப்பியரின் கிளாஸ்மேட் பனம்பாரனார் சொல்கிறார் .

Xxxxxx

3.திருப்பதி முதல் கன்யாகுமரி வரை என்று பனம்பாரனார் பகர்வார். வடவேங்கடம் முதல் தென் குமரி ஆயிடை  தமிழ் கூறு நல்லுலகம் என்பது அவர் வாக்கு. சிலர் கன்னியாகுமரிக்கு அப்பாற் தமிழ்நாடு பரவி இருந்தது என்பர்.

xxxxxx

4.எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என்ற மூன்று பிரிவுகள் இருக்கின்றன. மொத்தமுள்ள சூத்திரங்கள் 1610.

Xxxxxx

5.நிம்பிரி

Xxxxxx

6மனு ஸ்ம்ருதி யிலுள்ள எட்டுவகை திருமணங்களை தொல்காப்பியரும் அப்படியே ஏற்றார் .

மறையோர் தே எத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ் த்துணை யோர் இயல்பே -1035

இந்த சூத்திரத்தில் அவர் தேசம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையும் தர்மார்த்த காம என்ற சம்ஸ்க்ருத தொடரின் மொழிபெயர்ப்பையும் பயன்படுத்துகிறார் – ‘இன்பமும் பொருளும் அறமும் ‘

Xxxxxx

7.ஆறு வகையாகப் பிரிக்கிறார். .இது சமண சமயக் கருத்து என்று பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை கூறுவார் .

ஆனால் சமணர் நூல்களில் 5 பிரிவுகள்தான் உள்ளன. ஆறாவது அறிவு பற்றி இல்லை .

Xxxxxx

8.நல்லோள் கணவனொடு நனியழ ல் புகீ இச்

சொல்லிடை இட்ட பாலை நிலையும் — சூத்திரம் 1025

xxxxx

9.அறுவகைப் பட்ட பார்ப்பன பக்கமும்

ஐவகை மரபின் அரசர் பக்கமும் — சூத்திரம் 1021

பிராமணர்களை ‘ஷட் கர்ம நிரதகாஹா’ என்று ஸம்ஸ்க்ருத நூல்கள் புகழும் . இதை திருவள்ளுவரும் சங்கப் புலவர்களும்  அறுதொழில் அந்தணர் என்று புகழ்வர் ; ஓதல் ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல் ஏற்றல் என்பன 6 தொழில்கள்

பொருளதிகாரத்தில் 1425, 1434 (மந்திரம் சூத்திரம்)

xxxxx

சூத்திரம் 1026

1.குறையாத விருப்பம்

2.இடைவிடாது நினைத்தல்

3.இளைத்தல்

4. செய்யவேண்டியதைக் கூறல்

5.வெட்கத்தைக் கைவிடல்

6.காண்பன அனைத்தும் தம்மைப் போல் தோன்றுதல்

.7.செய்யவேண்டிய வேலைகளை மறந்துவிடுதல்

8.தெளிவின்மை /புத்தி பேதலித்தல்

9.சாதல் நினைவு; கிடைக்காவிட்டால் உயிர்வாழ மாட்டேன் .

இவைகளை பக்தனின் இயல்பாக நாரத பக்தி சூத்திரமும், அப்பர் தேவாரப் பாடலும் சொல்வது ஒப்புநோக்கத்தக்கது.

xxxx

முந்நீர் வழக்கம் மகடூ உ வோடு இல்லை – 980

—-பொருளதிகாரம், அகத்திணையியல், தொல்காப்பியம்

கடல் வழிப்பயணம் செல்லும்போது பெண்டிரை அழைத்துச் செல்வதில்லை– 980

—-SUBHAM—-

Tags– தொல்காப்பியர், தொல்காப்பியம் , கேள்வி-பதில், Quiz

Leave a comment

Leave a comment