
Post No. 12,235
Date uploaded in London – – 6 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கேள்வி -பதில் பகுதியில் இது 31 ஆவது க்விஸ்
1.பிரபல சித்தர்களைப் பொதுவாக எத்தனை பேர் என்று குறிப்பிடுவார்கள் ?
XXXX
2.சித்தர்கள் அடக்கமான கோவில்களை எப்படி கண்டு பிடிக்கலாம்?
XXXXX
3.மதுரை, பழநி , ராமேஸ்வரம், திருப்பதி, ஸ்ரீரங்கம், சிதம்பரம் கோவில்களில் மக்களை ஈர்க்கக் காரணமான சமாதிகள் யாருடையவை ?
XXXXX
4. சங்கரன் கோவிலில் சித்தியான பாம்பாட்டிச் சித்தர் பாடல்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?
XXXX
5.திருவாரூர், மயிலாடு துறை, வைதீஸ்வரன் கோவிலில் யாருடைய சமாதிகள் இருக்கின்றன?
XXXXX
6.பதஞ்சலியை யார் அம்சம் என்று கோயில்புராணம் கூறுகிறது ?
XXXXX
7.திருவண்ணாமலை , திருப்பரங்குன்றம், கரூரில் சமாதி அடைந்தோர் யாவர்?
XXXX
8. தஞ்சைப் பெரிய கோயிலில் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய முடியாமல் தவித்தபோது எந்த சித்தர் வந்து உதவினார் ?
XXXX
9.சித்தர்களிடத்தில் காணப்படும் எட்டுவகை அபூர்வ சக்திகள் என்ன ?
XXX
10.சித்தர்கள் எதை ஏற்கவில்லை ?
XXXXXXXXXXXXX

விடைகள்
1.பதினெட்டு சித்தர்கள்
XXXX
2அங்கு பக்தர்கள் எண்ணிக்கை 2.பெருமளவில் இருக்கும். அதைக்கொண்டே அங்கு சித்தர் சமாதி இருப்பதை அறிந்துகொள்ளலாம்
XXXXXX
3.மதுரை- சுந்தரானந்தர் , பழநி– போகர், ராமேஸ்வரம் – பதஞ்சலி, திருப்பதி–கொங்கணர் , ஸ்ரீரங்கம் – சட்டமுனி சிதம்பரம் – திருமூலர்
XXXX
4.பாடல்கள் ஆடு பாம்பே என்று முடியும்
XXXXXX
5.திருவாரூர்– கமலா முனி ,
மயிலாடு துறை– குதம்பைச் சித்தர்
வைதீஸ்வரன் கோவில்– தன்வந்திரி
XXXXX
6.ஆதிசேஷனின் அவதாரம் என்று சொல்கிறது
XXXXX
7.திருவண்ணாமலை– இடைக்காடர்,
திருப்பரங்குன்றம்–மச்சமுனி,
கரூர் — கருவூரார்
XXXX
8.கருவூர் சித்தர் உதவினார்
XXXXX
9.அணிமா, மஹிமா, லஹிமா,கரிமா, ப்ராகாம்ய, ஈசித்வா, வசித்வா , காம வசயித்தவா
XXXX
10.ஆகம வழிபாடுகள், சமயச் சடங்குகள் ஆகியவற்றை பொதுவாக ஏற்க மறுத்தனர். திருமூலர் போன்ற சிலர் மட்டும் விதி விலக்கு
XXXX SUBHAM XXXXX
Tags– சித்தர்கள், சமாதிகள், அஷ்டமா சித்திகள் , 18,