கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – 5 (Post No.12,263)


UGRA NARASIMHA SWAI TEMPLE

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,263

Date uploaded in London – –  12 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பகுதி 5

SANGAMESWARA TEMPLE

28.கோரவனஹள்ளி  மகாலெட்சுமி கோவில் GORAVANAHALLI MAHALAKSHMI TEMPLE

1900ம் ஆண்டில் எழுந்த புதிய கோவில் எனினும் மஹாலெட்சுமியை தரிசிக்க செவ்வாய்  வெள்ளிக்கிழமைகளில் நல்ல கூட்டம் வருகிறது. 1900ம் ஆண்டில்  அப்பையா என்பவர் கண்ட்டெடுத்த சிலை இது. அவர் வீட்டிலேயே வைத்து வழிபட்டார். 1925க்குப்பின்னர் வேறு ஒருவர் வந்து கோபுரத்துடன் பெரிய கோவிலை எழுப்பினார். இந்தக் கோவில் துமக்கூருக்கு அருகில் கோரவனஹள்ளி  கிராமத்தில் இருக்கிறது.

XXXX

29.ரேவண சித்தேஸ்வர சுவாமி கோவில் SRI REVANNA SIDDHESWARA TEMPLE

பெங்களூர் நகரிலிருந்து சுமார் 33 மைல்  தொலைவில் ராம நகரம் அருகில் குன்றின் மீது அமைந்த சிவன் கோவில் இது.. SRS ஹில்ஸ் (SRS Hills) SRS Hills அல்லது SRS Betta பேட்டா  என்னும் இடத்தில் 3 கோவில்கள் உள்ளன குன்றின் உயரம் 3066 அடி. குன்றின் உச்சியில் ரேவண சித்தேஸ்வர சுவாமி கோவில்., குன்றின் நடுப்பகுதியில்  பீமேஸ்வரி கோவில், அடிவாரத்தில் ரேணுகாம்பா கோவில் ஆகியவற்றைத் தரிசிக்கலாம்

ரேவண்ண சித்தர் என்பவர் புகழ்பெற்ற வீர சைவத் துறவி ஆவார் .

XXXXX

30. மாகதி ஸ்ரீ ரெங்கநாத சுவாமி கோவில் , சோமேஸ்வரர் கோவில்  Magadi Someshwara Temple , Magadi RanganathaSwamy Temple

மாகதி சோழர் காலம் முதல் புகழ்பெற்று விளங்குகிறது. பெங்களூரை நிறுவிய விஜய நகர சாம்ராஜ்ய சிற்றரசர் கெம்பகவுடா  பிறந்த இடம் இது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் எழுப்பிய சோமேஸ்வரர் சிவன் கோவிலும் திருமல ரெங்கநாத சுவாமி விஷ்ணு கோவிலும் இ ப்போது  தொல்பொருட் துறை பராமரிப்பில் உள்ளன இரண்டிலும் தினசரி வழிபாடு உண்டு ஸ்ரீ ரெங்கநாத சுவாமி கோவிலில்  திருப்பதி பாணியில் நின்ற திருக்கோலத்தில் வெங்கடாசலபதி காட்சி தருகிறார்.

சோமேஸ்வரர் கோவிலில் சிவன் உருவமும் , கலை வேலைப்பாடுகள் மிகுந்த சிற்பங்களும், தூண்களும் இருக்கின்றன.

XXXXXX

31.மேக தாது சங்கமேஸ்வர கோவில் MEKA DATU (GOAT’S LEAP )

ஆடு தாண்டும் அளவே இடைவெளியுள்ள குன்று  இருக்கும் மேகதாட்டு சர்ச்சைக்குரிய காவிரி அணை அமையும் இடம் ஆகும் . இங்கு காவிரியும் அர்காவதி நதியும் சங்கமம் ஆகும் இடத்தில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது. பெங்களூரிலிருந்து சுமார் 100 கி.மீ . தொலைவு

தத்தாத்ரேயரை  வழிபடுவோர் இதை முக்கிய தலமாக கருதுவதால் தத்த பீடம் அண்மைக்காலத்தில் திருப்பணி செய்தது

XXXX

32.கோவில்கள் நிறைந்த மட்டூர்

பெங்களூரு நகரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மட்டூர் , வடைக்கும் கடவுளுக்கும் தேங்காய்க்கும் பிரபலமான ஊர்.  மாண்ட்யா அருகிலுள்ள இந்த ஊரிலிருந்து தினமும்  300 லாரிகளில் தேங்காய் செல்கிறது. இந்த ஊர் வடையும் ருசி மிக்கது .

சிம்சா நதிக்கரையில் அமைந்த ஊர்

மட்டூர் வட்டாரத்தில் சுமார் 20 கோவில்கள் இருந்தாலும் ஆயிரம் ஆண்டு பழமை  உடைய (TEMPLE No.32) உக்ர நரசிம்ம சுவாமி கோவில், சமணர் கோவில்கள் குறிப்பிடத் தக்கவை. இந்த ஊரின் பெயர் நரசிம்ம சதுர்வேதி மங்கலம் என்றும் மருதூர் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. நான் மறைகளில் வல்ல வேத பண்டிதர்களுக்கு தானமாக அளிக்கப்பட்ட ஊர்.. தென் இந்தியாவில் மங்கலம் என்று முடியும் ஊர்கள் அனைத்தும் பிராமணர்களுக்கு மன்னர்கள் தானம் அளித்த ஊர்கள் ஆகும்.

உக்ர நரசிம்ம சுவாமி கோவில், ஹொய்சாளர் காலம் முதல் வணங்கப்படுகிறது. 7 அடி உரமுள்ள அழகான கருங்கல் நரசிம்மரை இங்கே தரிசிக்கலாம். நரசிம்ம மூர்த்தி எட்டு கைகள், மூன்று கைகளுடன் தோற்றம் அளிக்கிறார்

XXXX

(TEMPLE No.33) வரதராஜ (அல்லால நாதன் என்ற பெயரும் உண்டு) சுவாமி கோவில் அங்குள்ள 12 அடி உயரமுள்ள அல்லாலனாதனால் பிரபலமடைந்தது. அதிக வேலைப்பாடுமிக்க சிலை ;கன்னடத்தில் இதன் காரணமாக ஒரு பழ மொழியும் இருக்கிறது ‘Ella Devara Munde Nodu Allalanathana hinde nodu’ – ‘All other idols are to be seen from the front but Allalanatha is to be seen from the back’.

எல்லா தேவரே முந்தே  நோடு அல்லால நாதன ஹிந்தே நோடு= எல்லா கடவுளரையும் முன் புறமாக தரிசிக்கலாம்; அல்லால நாதனையோ பின்பக்கமாக தரிசிக்கவேண்டும் . இது விஷ்ணுவர்தன மன்னர் கட்டிய கோவில் .

விஷ்ணு வர்தனர் , ஸ்ரீ ராமானுஜ பக்தர். அவருடைய தாயாருக்கு கண் பார்வை போனபோது, அவர் கனவில் காஞ்சீபுரம் சென்று வரதராஜரை தரிசிக்கும்படி ஸ்ரீ ராமானுஜர் சொன்னதாகவும் தாயாரின் முதிய வயது காரணமாக அவர் காஞ்சீபுரம் வரை செல்லமுடியாதென்பதால் விஷ்ணுர்த்தனர் காஞ்சீபுரம் சென்று சிற்பிகளை அழைத்து வந்து மூர்த்தியை உருவாக்கியதாகவும்  தல புராணம் கூறும் . இங்கு தமிழ்க் கல்வெட்டுகள் உண்டு

XXXXX

மட்டூர் வட்டாரத்திலுள்ள கோவில்கள் ; அந்தந்த ஊரிலிருந்து எத்தனை கி.மீ. தூரம் என்பதும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது

shatakoti sreerama mandira; and satyanarayana devaalaya.

Old SBM Road; Jyothi Nagar; Nelamangala; Karnataka 562123; I

சதகோடி ஸ்ரீ ராமர் கோவில்

1.2 KM distance

 XXXX

Sri Madduramma Temple

SH17; Madduru; Karnataka 571428;

ஸ்ரீ மத்தூரம்மா கோவில்

1.3 KM distance

XXXXX

Maruthi – Mahadeshwara Temple

மாருதி மஹாதீஸ்வர கோவில்

Mandya; Karnataka 571428; India

1.4 KM distance

XXX

Rama Mandira Temple

In Park; 1st cross; Leelavathi Extention 1st Cross Rd; Madduru; Karnataka 571428;

ராமாமந்திர கோவில்

1.4 KM distance

XXXX

Sri Pattabiramar Temple

Madduru; Karnataka 571428;

ஸ்ரீ பட்டாபிராம கோவில்

1.4 KM distance

XXXX

Sri Varadaraja Swamy Temple/Nethra Narayanan

ஸ்ரீ வரதராஜ சுவரை கோவில்

NH275; Madduru; Karnataka 571428;

1.5 KM distance Details

XXXX

Hanuman Temple

Mallayandodi; Karnataka 571428;

ஹனுமான் கோவில்

1.5 KM distance

XXXX

shri rama samudaya bhavana

Kowdle; Madduru; Karnataka 571428;

1.5 KM distance Details

ஸ்ரீ ராம சமுதாய பவன்

ಶ್ರೀ ಹೊಳೆ ಆಂಜನೇಯ ಸ್ವಾಮಿ ದೇವಸ್ಥಾನ

Madduru; Karnataka 571428;

XXXX

Sri Ugra Narasimha Swamy Temple

Banglore-Mysore Highway; Fort Maddur; Mandya; Karnataka 571428;

1.5 KM distance

ஸ்ரீ உக்ர நரசிம்ம கோவில்

XXXXX

Sri Raghavendra Swamy Temple

Madduru; Karnataka 571428;

ஸ்ரீ ரெங்கநாத சுவாமி கோவில்

1.5 KM distance Details

XXXX

Sri Chamundeswari Temple

Madduru; Karnataka 571428;

ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோவில்

1.7 KM distance Details

XXXX

Siddapaji Temple

Vaidyanathapura; Karnataka 571428;

சித்த பாஜி கோவில்

1.8 KM distance Details

XXXX

shree vishweshwara swamy temple

Madduru; Karnataka 571428;

ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில்

1.8 KM distance Details

XXXX

Om Sri Mutthumaari Amman Temple

Chaamanahalli; Tamil Colony; Karnataka; I

1.9 KM distance Details

ஸ்ரீ முத்து மாரி அம்மன் கோவில்

XXXX

Sri Muneshwara – Sri Shaneshwara Temple

ஸ்ரீ முனீஸ்வர- சனீஸ்வர கோவில்

Nagarakere Rd; 8th cross; channegwoda badavane; Madduru;

1.9 KM distance

XXXX

Sri Anjaneya temple

Madduru; Karnataka 571428;

ஸ்ரீ ஆஞ்சனேய கோவில்

1.9 KM distance Details

XXX

Holley Anjaneya Swami Sanidhi

ஹாலி ஆஞ்சனேய சுவாமி சந்நிதி

Koli circle; Madduru; Karnataka;

2.0 KM distance

XXX

மட்டூரிலிருந்து 3 கி.மீ .தூரத்திலுள்ள சிவபுரம், சுதந்திரப் போராட்டம் காரணமாக பிரபலம் அடைந்தது. பிரிட்டிஷாரின் தடை உத்தரவை மீறி 1938 ஏப்ரல் 12-ம் தேதி ஆயிரக்கணக்கான சுதந்திரத் தொண்டர்கள் கொடி ஏற்றிய ஊர் ; அங்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது .

XXXX

SRS HILLS

34. வைத்யானாதீஸ்வர சுவாமி கோவில் Vaidyanatheswara Temple

சிம்சா நதிக்கரையில் அமைந்த இந்தக் கோவில் சிவன் கோவில் ஆகும். கோவில் சிறியதுதான் . நவரங்க, சபா, முக்த மண்டபங்களைத் தாண்டி கர்ப்பக்கிரகத்தை அடைந்தால் ஏழுதலை பாம்பின் கீழ் அமர்ந்த சிவ லிங்கத்தை தரிசிக்கலாம்.Vaidyanatheshwara Temple,Vaidyanathapura,Mandya District,K arnataka,Pincode – 571 433.

ஹொய்சாள மன்னர் காலத்திலிருந்து பல வம்ச மன்னர்கள் வழிபட்டதால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வரலாறு உடையது. நவரங்க மண்டபத்தில் இருக்கும் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை.

TO BE CONTINUED……TAGS – கர்நாடக மாநிலம் , 108 புகழ் பெற்ற, கோவில்கள், , பகுதி 5

Leave a comment

Leave a comment