
Post No. 12,262
Date uploaded in London – – 12 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

1.கொல்கத்தா KOLKATA என்று இப்போது அழைக்கப்படும் கல்கத்தா எப்போது வரை இந்தியாவின் தலைநகராக இருந்தது?
XXXX
2.கொல்கத்தா ஆலமரம் புகழ் பெறக்காரணம் என்ன?
XXXXXX
3.கொல்கத்தா என்ற பெயர் எப்படி வந்தது?
Xxxxx
4.இந்தியாவிலேயே மிகப்பெரிய நூலகம் எங்கே இருக்கிறது?
xxxxx
5.ஹூக்ளி நதிக்கரையின் மீதுள்ள ஹெளரா பாலம் Howrah Bridge ஏன் சிறப்பு வாய்ந்தது?
xxxx
6.கல்கத்தாவின் மற்றோர் சின்னமான Fort William வில்லியம் போர்ட் என்னும் கோட்டையின் முக்கியத்துவம் என்ன ?
Xxxxx
7.விக்டோரியா மெமோரியல் என்னும் கட்டிடம் ஏன் புகழ்பெற்றது?
Xxxx
8.கல்கதத்தாவில் பிர்லா பெயரைச் சொன்னால் இரண்டு கட்டிடங்கள் நினைவுக்கு வரும்.. அவை யாவை?
Xxxx
9.பேலூர் மடம் எங்கே இருக்கிறது?
xxxx
10.கல்கத்தாவுக்கு பெயர் தந்த காளி கோவில்கள் எவை ?
xxxxxx

KALI TEMPLE, KALI GHAT

VICTORIA MEMORIAL, KOLKATA
விடைகள்
1.மேற்கு வங்க மாநிலத்தின் தலை நகராக இப்போது இருக்கும் கொல்கத்தா, 1911 ஆம் ஆண்டுவரை பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக இருந்தது .
XXXX
2.இந்த ஊர் தாவரவியல் பூங்காவிலுள்ள ஆலமரம்தான் உலகிலேயே பெ ரிய ஆலமரம். . அதன் பரப்பளவு 4.67 ஏக்கர். குறைந்தது 250 ஆண்டு பழமையானது இந்த தாவரவியல் பூங்காவுக்கு ஜெகதீஷ் சந்திரபோஸ் என்னும் விஞ்ஞா னியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு புயல் வரும்போதும் பல விழுதுகளை இழந்தாலும் 3772 விழுதுகளை இப்போது காணலாம் .
XXXX
3.இங்குள்ள காளி கோவில் பிரசித்தமானது; காளி கட் அல்லது காளி க்ஷேத்ர என்பதை வெள்ளைக்காரர்கள் கல்கத்தா என்று உச்சரித்தனர்.
xxxxx
4.கொல்கத்தாவின் அலிப்பூர் பேட்டையில் உள்ள நேஷனல் லைப்ரரி — இந்திய தேசீய நூலகம்–தான்— National Library of India– இந்தியாவிலேயே மிகப்பெரிய நூலகம். இதில் 25 லட்சம் புஸ்தகங்களும் ஆவணங்களும் இருக்கின்றன.
Xxxxxxx
5.இது தொங்கும் பாலம் என்னும் வகையைச் balanced cantilever bridge சேர்ந்தது. கல்கத்தா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் சின்னம் போல் திகழ்கிறது ; பாரிஸ் என்றால் ஐபல் டவர், லண்டன் என்றால் பிக் பென் கடிகாரம்; கல்கத்தா என்றால் ஹெளரா பாலம் .
xxxxx
6.பிரிட்டிஷாரின் 300 ஆண்டுக்கு கால ஆட்சிக்கு முதல் படியாக அமைந்தது போர் வில்லியம். 1696ல் அவங்க சீப் அனுமதியுடன் கட்டிய கட்டிடம் இப்போது இந்திய ராணுவத்தின் கிழக்கத்திய கமாண்டின் தலைமையகம் ஆகும்..
xxxxxx
7.மத்திய கல்கத்தாவிலுள்ள 64 ஏக்கர் பரப்பை வியாபிக்கும் விக்டோரியா மெமோரியல்தான், உலகிலேயே ஒரு ராஜா அல்லது ராணிக்குக் கட்டப்பட்ட மிகப்பெரிய கட்டிடம் ஆகும். இது பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது. இப்போது பண்பாட்டுத் துறை அலுவலகம் இருக்கிறது.
xxxxx
8.பிர்லா பிளானட்டோரியம் என்னும் வான ஆராய்ச் சிக்கூடம் ; பிர்லா மந்திர் என்னும் கோவில்.
xxxxx
9.சுவாமி விவேகானந்தர் துவங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் , ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் தலைமையகம் பேலூர் மடம் ; ஹூக்ளி நதியின் மேற்குக்கரையில் ஹெளரா பேட்டையில் அமைந்த இந்த மடம் , உலகெங்கிலும் பரவிய கிளைகள் மூலம் சேவை செய்து வருகிறது .
Xxxx
10.ஸ்ரீ ராமகிருஷ்ணபரம ஹம்சர் வழிபட்ட, அர்ச்சகராக இருந்த, தட்சிணேஸ் வர் காளி கோவிலும் , ஆதி கங்கா என்று அழைக்கப்படும் காளி காட் துறையில் உள்ள காளி கோவிலும் தரிசிக்க வேண்டிய முக்கிய இடங்கள் ஆகும் ஹூக்ளி நதி கங்கையின் உப நதி. அந்தக் காலத்தில் ஊட்டிய வழித்தடத்தில் அமைந்த காளி கேட் கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
—Subham —-
Tags- கல்கத்தா, கொல்கத்தா, காளி , பெயர் , ஹூக்ளி , ஹெளரா , தேசீய நூலகம் , ஆலமரம்