
Post No. 12,266
Date uploaded in London – 13 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்! – 7
ச.நாகராஜன்
இரண்டு நிமிட தாமதம்!

க்ரீஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்டோனிஸ் மாவ்ரொபுலுஸ்
(Antonis Mavropulus of Greece) எதியோப்பியன் ஏர்லைன்ஸ் ET302 விமானத்தைப் பிடிக்க எதியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் அவசரம் அவசரமாக ஓடினார். அவர் இண்டர்நேஷனல் சாலிட் வேஸ்ட் அசோஸியேஷனின் (International Sold Waste Association) தலைவர். நைரோபியில் ஒரு முக்கியமான கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. இரண்டே இரண்டு நிமிடம் தாமதமாக அவர் விமான நிலையத்திற்கு வந்தார். விமானம் புறப்பட்டிருந்தது.
மிகுந்த ஏமாற்றம் அடைந்த அவருக்கு சற்று நேரம் கழித்து ஒரு பெரிய அற்புதமான பிரமிக்கும் வைக்கும் செய்தி கிடைத்தது.
அவர் ஏறிப் போக வேண்டியிருந்த விமானம் ET302 புறப்பட்ட ஆறு நிமிட நேரத்திலேயே கிழே விழுந்து நொறுங்கியிருந்தது.
இரண்டு நிமிட தாமதம் அவர் உயிரைக் காப்பாற்றி விட்டது.
காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்!
குடிதண்ணீர்க் குழாய்!
2019 பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி. சிபிஆர் எஃப் (CPRF) ஜவான்கள் ஒரு ராணுவ வண்டியில் காஷீமிரில் அனந்தநாக் பிரிவில் புல்வாமா பகுதியில் சென்று கொண்டிருந்தனர். 30 ராணுவ வண்டிகள் மெதுவாகச் சென்று கொண்டிருந்தன. ஒவ்வொரு வண்டியிலும் 45 ஜவான்கள் இருந்தனர்.
மித்நாபூரைச் சேர்ந்த பப்லு தாஸ் தனது குழுவினருடன் ஒரு வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். திடீரென்று வண்டியிலிருந்து அவர் கீழே குதித்தார் – சாலை ஓரம் இருந்த ஒரு குழாயிலிருந்து குடிதண்ணீரைப் பிடிப்பதற்காக.
அதே சமயம் ஜவான்களை ஏற்றி வந்து கொண்டிருந்த இன்னொரு வண்டி அவர் குழாய் இருந்த இடத்திற்கு வர, பப்லு அந்த வண்டிக்குள் ஏறிக் கொண்டார்.
திடீரென்று பப்லு முதலில் சென்று கொண்டிருந்த வாகனத்தில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. அதில் பயணம் செய்து வந்த 45 ஜவான்களும் கொல்லப்பட்டனர்.
பப்லு அதிர்ஷ்டவசமாக குடிதண்ணீர்க் குழாயால் உயிர் பிழைத்தார்!
காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்!
நன்றி : கல்கத்தாவிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழ் –
TRUTH Vol 91 Issue 8 dated 9th June 2023
—subham—