
Srirangapatna Temple
Post No. 12,272
Date uploaded in London – – 14 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
PART SIX
மாண்ட்யா வட்டாரக் கோவில்கள்
KariGhatta Temple. கரி கட்டா கோவில் .
Lakshminarayana Temple.லெட்சுமிநாராயணர் கோவில் .
Brahmeswara Temple. பிரம்மேஸ்வரர் .கோவில் .
Saumya Keshava Temple. ஸெளம்ய கேசவ.கோவில் .
Sri Nambinarayana Temple. நம்பி நாராயணன் கோவில் .
Panchalingeshwara Temple.பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் .
Basaralu Temple. மல்லிகார்ஜுனர் கோவில் .
Pralaya Varahanatha Temple.பிரளய வராஹநாதர் கோவில் .
35.Sri Lakshmi Janardhana Temple, Mandya ஸ்ரீ லக்ஷ்மி ஜனார்த்தன சுவாமி கோவில்
மைசூரு நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் மாண்டவ்யா தலத்தில் இக்கோவில் அமைந்துள்ளது மாண்டவ்யர் என்ற மகரிஷியின் பெயரில் உருவான ஊர் இது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இப்பகுதியை ஆண்ட இந்திரவர்மன் என்ற கங்க வம்ச அரசர் குழந்தை வரம் வேண்டி கட்டிய கோவில். அவருக்குப் பிறந்த சோமேஸ்வரன் என்பவன் ஸகலேஸ்வர் கோவிலைக் கட்டினான். கங்க வம்ச சின்னமான யானையைக் கோவிலில் காணலாம். ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தரும் ஜநார்த்தனரை , மக்கள் / குமந்தைகள் வேண்டி பிரார்த்தனை செய்வது வழக்கம். இவ்வாறு குழந்தை பெற்ற ஒரு இத்தாலிய நாட்டுக்காரர் , இந்தக் கோவிலுக்கு ஒரு ஆலய மணியை காணிக்கையாகக் கொடுத்துள்ளார்.
XXXX
36.Karighatta Srinivasa Temple கரிகட்டா ஸ்ரீனிவாசர் கோவில்

மைசூரிலி ருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் ஸ்ரீரங்க பட்டணம் அருகில் குன்றின் மீது அமைந்த கோவில் இது .
கரி கட்டா என்றால் கரிய மலை.கரி கிரி வாசன் அல்லது பைராகி வெங்கட ரமணர் என்றும் பெருமாளுக்கு பெயர். பூவால் அலங்கரிக்கப்படும்போது அவர் பைராகி/ நாடோடி பக்தர் போலத் தோன்றுகிறார். மலையின் உயரம் 2697 அடி. படிகளின் எண்ணிக்கை 450. குன்றின் உச்சியிலிருந்து புகழ்பெற்ற கோவில்களையும் தரிசிக்கலாம். இந்தக் கோவிலில் பெருமாளின் உயரம் ஆறு அடி. அவருக்கு இடது புறம் யோக ஸ்ரீ னிவாசரும் வலது புறம் போக ஸ்ரீ னிவாசரும் காட்சி தருவார்கள். கருட ஸ்தம்பமும், பத்மாவதித் தாயார் சந்நிதிகளும் உள .இங்கே காணப்படும் விஷ்ணு பாதம் (காலடிச் சுவடு), தர்ப்பைப்புல், பெரிய கல்யாண மண்டபம் ஆகியன பற்றியும் வரலாறுகள் இருக்கின்றன.
XXXXX
Lakshmi Narashimhaswami Temple, Srirangapatna ஸ்ரீரெங்கப்பட்டண லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்
இந்தியாவில் 800 நரசிம்மர் கோவில்கள் இருக்கின்றன என்பது ஒருவர் கணக்கு. இங்குள்ள நரசிம்மர் 800 ஆண்டு வரலாறு உடையவர்.. இது பெரிய கோவில். ஆனால் அதிகமான பேருக்குத் தெரியாது .
XXXXX
37. ஸ்ரீரெங்கப்பட்டண ரங்கநாத சுவாமி கோவில் Ranganathaswamy Temple, ,Srirangapatna
மைசூரிலிருந்து 15 கி மீ தூரம். மிகவும் புகழ்பெற்ற பஞ்ச ரங்க, ஆதிரங்க க்ஷேத்ரம் .
காவிரி நதியின் கரையில் ஐந்து புகழ்பெற்ற ரங்கநாதர் ஆலயங்கள் உள . அந்த பஞ்ச ரங்க ஸ்தலங்களில் இதுவே முதலில் இருப்பதால் ஆதி ரங்க என்று வைஷ்ணவர்கள் அழைப்பர். அடுத்த நான்கு தலங்களும் தமிழ்நாட்டில் காவிரிக் கரையில் அமைந்துள்ளன.
ஆதிரங்கம் – ஸ்ரீரங்கப்பட்டணம் (கர்நாடக மாநிலம்)
மத்தியரங்கம் – ஸ்ரீரங்கம் (தமிழ்நாடு)
அப்பாலரங்கம் – திருப்பேர்நகர் என்ற கோவிலடி (தமிழ்நாடு)
சதுர்த்தரங்கம் – சாரங்கபாணி கோவில், கும்பகோணம் (தமிழ்நாடு)
பஞ்சரங்கம் – பரிமள ரங்கநாதர் கோவில் திருஇந்தளூர், மாயவரம் (தமிழ்நாடு)
நீண்ட நெடும் பாம்பான ஏழுதலை நாகத்தில் ரங்கநாதர் எனும் விஷ்ணு படுத்திருக்க, லெட்சுமி அருகில் அமர்ந்து இருக்கிறார் . பெரிய சிலை .
கோவிலில் இடம்பெறும் ஏனைய சந்நிதிகள் : ரெங்கநாயகி, ராமர், நரசிம்மர், சுதர்சனர் பஞ்ச முக ஆஞ்சனேயர் , கோபால கிருஷ்ணர்
கிபி (பொது ஆண்டு) 894 முதல் வரலாறு இருப்பினும் அதற்கு முன்னரே கோவில் இருந்திருக்க வேண்டும் ஒவ்வொரு வம்ச மன்னர்களும் கட்டிடங்களை எழுப்பி கோவிலைப் பெரிதாக்கினார்கள் .
நுழை வாயிலில் இருக்கும் 4 பெரிய தூண்களில் விஷ் ணுவின் 24 வடி வங்கள் அலங்கரிக்கினறன.
ஹொய்சாள பாணி கலை அம்சங்களை அவை பிரதிபலிக்கின்றன .
பிரகாரத்தில் புராணக்கதைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன ரங்கநாத சுவாமியின் ரத சிற்பம் அற்புதமாக இருக்கிறது . காவிரி நதியானது அதன் போக்கில் மூன்று தீவுப் பகுதிகளை உண்டாக்கியது. சிவா சமுத்திரம், ஸ்ரீரங் கப்பட்டணம் , திருச்சி/ ஸ்ரீரங்கம் .மூன்று இடங்களில் உள்ள கோவில்களையும் பார்ப்பதில் கர்நாடக வைஷ்ணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் .
XXXXX
38.Brahmeswara Temple. பிரம்மேஸ்வரர் .கோவில்
மாண்ட்யா மாவட்டம் கிக்கேரியில் அமைந்த ஹொய்சளர் கோவில் இது .
900 ஆண்டு பழமை உடைய இந்தக் கோவில் தொல்பொருட் துறையினரின் பாதுகாப்பில் உள்ளது . மிகவும் சிதிலமடைந்த இந்த இடத்தில் ஒரு மியூசியமும் இருக்கிறது . எவரும் அங்கு வருவதில்லை என்று அதிகாரிகள் குறைப்பட்டுக்கொள்கின்றனர் . கோவிலுக்குள் நடன மாதர்களின் சிற்பங்களை பல ‘போஸ்’களில் காணலாம். வெளியே சுவர்களில் வெவ் வேறு கட்டிட பாணிகளைக் காணலாம்.
சிவன் சந்நிதியுடன் தேவி சந்நிதியும் இருக்கிறது பிரமேஸ்வரரை நோக்கி வலது புறம் விஷ்ணு , இடது புறம் சிவன் சந்நிதிகள் இருப்பதால் இதை திரிகூட ஹொய்சாள கோவில் என்பர் விமானத்தின் அகலம் 22 அடி.
நிறைய சிற்ப ரத்தினங்கள் நிறைந்த இந்தக்கோவிலில் பொட்டு வைத்துக்கொள்ளும் அலங்காரி , வேலைப்பாடு அமைந்த தூண்கள், லட்சுமி நரசிம்மர், கணேசர், மகிஷாசுர மர்தனி, உமா மஹேஸ்வரர் , கால பைரவர், சென்னை கேசவர் முதலியன கண்டு ரசிக்கத்தக்கவை.
பிரம்மா, விஷ்ணு , சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் கலைமகள் அலைமகள் , மலைமகள் ஆகியோருடன் ஒன்றாகக் காட்சி தருவதும் குறிப்பிடத்தக்கது..

Basaralu Temple. மல்லிகார்ஜுனர் கோவில்
தொடரும் …………………tags- கர்நாடக மாநில, 108 , புகழ்பெற்ற கோவில்கள் – 6 ,