
Post No. 12,271
Date uploaded in London – 14 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
பிசாசு ரௌடி கார்!
ச.நாகராஜன்
ஶ்ரீ கிருஷ்ண பிரபன்ன ராமானுஜ்தாஸ் (Sri Krishna Prapanna Ramanujdas) அவர்கள் SCIENCE FAILS TO ANSWER என்ற தலைப்பில் பல அரிய பிரமிக்க வைக்கும் சம்பவங்களை கல்கத்தாவிலிருந்து வெளி வரும் ஆங்கில வார இதழான TRUTH பத்திரிகையில் தந்து வருகிறார்.
தொகுதி 91 – (9-7-23 தேதியிட்ட) இதழ் 8 இல் அவரது கட்டுரையில் ஒரு பகுதி இது:
மோரிஸ் ஓனர் (MORRIS OWNER – June 1941) 1941 ஜூன் இதழில் வெளியாகியுள்ள ஒரு செய்தி அறிக்கை இது:
யூகோஸ்லேவியாவில் ப்ரிக் ரெட் ஃபேன்ஸி (Brick Red Fancy) கார் ஒன்றை ஆர்ச் ட்யூக் ஃபெர்டினான்ட் (ARCHDUKE FERDINAND) வாங்கினார்.
ஆர்ச் ட்யூக் ஃபெர்டினான்டும் ஆர்ச் ட்யூகெஸ் சோபியாவும் (ARCHIDUKE FERDINAND, ARCHDUCHESS SOPHICA) அந்தக் காரில் 29-6-1914 அன்று பயணம் செய்து கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டனர்.
இந்த அரசரும் அரசியும் கொலை செய்யப்பட்ட பின்னர் அந்தக் காரை சரஜீவோவின் (Sarajevo) கவர்னர் வாங்கினார். அந்தக் கார் அவரது கார் ஷெட்டில் இருந்தது. அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். காரில் ரத்தக் கறை இருந்தது.
மூன்றாவதாக அதை ஆறாவது ஆஸ்ட்ரியன் ஆர்மியைச் சேர்ந்த ஜெனரல் போடியுரெக் (General Potiurek) வாங்கினார். அவருக்கு அந்தக் கார் மிகவும் பிடித்திருந்தது. வாலிவா யுத்தத்தில் (Vallevar War) அவர் தோற்கடிக்கப்பட்டார். அவருக்குப் பைத்தியம் பிடித்தது.
அடுத்து அந்தக் காரை ஆஸ்ட்ரியன் படைத் தலைவர் வாங்கினார். ஆனால் அவரது திறமைசாலியான டிரைவர் தன்னையும் சாகடித்துக் கொண்டு இரு பாதசாரிகளையும் சாக அடித்தார்.
யூகோஸ்லேவியாவின் கவர்னர் அதை வாங்கினார். அதை ஓட்டும் பொது அவரது வலது கையை அவர் இழந்தார்.
ஒரு டாக்டர் அந்தக் காரை கவர்னரிடமிருந்து வாங்கினார். கார் தறி கெட்டு ஓட அவர் ஒரு சாலை விபத்தில் இறந்தார்.
அந்த அழகிய சிவப்பு வண்ணக் காரை வாங்கிய ஒரு மனிதர் அதை வேண்டுமென்றே மலை ஒன்றில் செலுத்தினார். ஒரு விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.
கடைசியாக மிஸ்டர் ஹார்ஷ்ஃபோல்ட் (Mr Harshfold) என்பவர் அந்தக் காரை வாங்கினார். அவரது திருமண ஊர்வலத்தின் போது அவர் அந்தக் காரை ஓட்ட, ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டு நான்கு நண்பர்களுடன் அவரும் இறந்தார்.
13 வருடங்கள் கழிந்து 1927ஆம் ஆண்டு அந்தக் கார் சுக்கு நூறாக்கப்பட்டது.
பிசாசு ரௌடி கார் அதன் உரிமையாளர்களைப் படுத்திய பாடு கொஞ்சமா, நஞ்சமா என்ன?
***